புரியாத காதல். (View original topic)



sivanes

Posted 19 August 2007 - 05:04 PM

மனதைத் தளரவிட்டேன்.
மங்கை உன்னை
கண்ட பின்பு.

நினைவுகளை சோரவிட்டேன்.
நிலவே உன்னை
நேசித்த பின்பு.

கற்பனையை வளர்தெடுத்தேன்.
கன்னி உன்னை
கரம் பிடிப்பதற்கு.

உன்மனமும் மாறவில்லை.
ஏனென்றும் தெரியவில்லை.
எழுதிடவும் ஒன்றுமில்லை.

இதுதான் காதலென்றால்
உன்மனமும் கல்லா...?
எனக்கொன்றும் புரியவில்லை.

காதலைச் சொன்னதுவும்
நீதானே முதலில்
காயப்படுவது நானா...?

மாறுவாய் நீயென்று
மனமேனோ சொன்னதனால்
மாதங்கள் போயிற்று.

நாட்களும் தினமென்னை
நையாண்டி செய்கிறது.
காதல்வெறும் பொய்யென்று.

காதல் வடுக்களினால்
காயப்பட்ட மனம்
கண்ணீர் வடிக்கிறது.

காலம் பதில்சொல்லுமென்று
காத்திருந்து காத்திருந்து
இப்போ... ....

உறக்கத்தை தொலைத்துவிட்டேன்.
உன்னிடம் நான்
மோகம் கொண்டதனால்..

பசியையும் தொலைத்துவிட்டேன்.
பாவை உன்னை
மனம் தேடுவதால்.

பாவம் என்று
நீ நினைத்தால்
நம்காதல் வாழும்.

இனியவளே நீ சொல்லு
ஏனிந்த மௌனம்.
சம்மதம் ஆகுமா...?


...சிவனேஸ்...

இனியவள்

Posted 19 August 2007 - 07:07 PM

புரியாத காதலை,
கவிதையில் புரியவைக்கும் நண்பறே..................



உங்கள் கவிதை வரிகள் மிகவும் நன்றாக இருக்கின்றது!!!! smile.gif thumbs_up.gif

sathiya

Posted 19 August 2007 - 08:19 PM


காதலை வளர்த்து விட்டு
கலங்கி நீயும் தவிக்கலாமோ
காலங்கள் கனியும் மட்டும்
காத்திருப்பாய் காதலோடு!

ஓஓ... காதல் ரொம்பத்தான் பாடாய்ப் படுத்துதோ? tongue_smile.gif

ம்ம்... வாழ்த்துக்கள் சிவனேஸ்... ஏக்கம் சுமந்த கவிதை அழகுதான்! smile.gif

sivanes

Posted 19 August 2007 - 08:28 PM

நன்றி இனியவள்.. சத்தியா

siva

Posted 19 August 2007 - 08:46 PM

நன்றாக உள்ளது உங்கள் கவிதை
வாழ்த்துக்கள் சிவனேஸ்!
thumbs_up.gif

Suganthe

Posted 19 August 2007 - 11:24 PM

வாழ்த்துக்கள் சிவனேஸ்

தனிமதி

Posted 20 August 2007 - 05:11 PM

வாழ்த்துக்கள் சிவனேஸ்... thumbs_up.gif

QUOTE
காலம் பதில்சொல்லுமென்று
காத்திருந்து காத்திருந்து
இப்போ... ....

உறக்கத்தை தொலைத்துவிட்டேன்.
உன்னிடம் நான்
மோகம் கொண்டதனால்..

பசியையும் தொலைத்துவிட்டேன்.
பாவை உன்னை
மனம் தேடுவதால்.


காதல் நெஞ்சில் பூத்திருந்தால்
அவள் பார்வை பட்டாலும்
நினைப்பு நெஞ்சில் இருந்தாலும்
நெருங்காதே பசியோ, தாகமோ..

பதில் வரும் வரை காத்திரு
அன்பாக காதலை வளர்த்து
பாசத்தை சேர்திரு.


QUOTE
பாவம் என்று
நீ நினைத்தால்
நம்காதல் வாழும்.


பரிதாபப் பட்டு வரும்
காதல்..???? 72_72.gif emot-fail.gif


புதுயுகப் பிரியன்

Posted 20 August 2007 - 05:28 PM

QUOTE
காலம் பதில்சொல்லுமென்று
காத்திருந்து காத்திருந்து
இப்போ... ....

உறக்கத்தை தொலைத்துவிட்டேன்.
உன்னிடம் நான்
மோகம் கொண்டதனால்..

பசியையும் தொலைத்துவிட்டேன்.
பாவை உன்னை
மனம் தேடுவதால்.

பாவம் என்று
நீ நினைத்தால்
நம்காதல் வாழும்.


வாழ்த்துக்கள் சிவனேஸ்
காதல் படுத்தும் பாடு கவிதையில் புரிகிறது