கவிதை ஒன்று நானெழுத
தலைப்பு ஒன்று அனுப்பிவைத்தாய்.
உனக்குள் வந்து போவதெல்லாம்
எனக்குள் வருமா கவிதைகளாய்...?
வாடாமல் மனது இருந்திருந்தால்
பூவாக மலர்ந்திருக்கும் புதுக்கவிதை..!
பார்த்து நீயும் ரசித்திருப்பாய்.
அசத்தலாயும் அது இருந்திருக்கும்.
தேய்ந்து மனம் தேய்பிறையாக
ஒடிந்து உள்ளம் இருக்கையிலே
ஒரு கவிதை எழுது என்று
சொல்லலாமோ சொல் கண்ணே.
சொன்னதனால் இதை கிறுக்குகிறேன்.
சுவை இருந்தால் பருகிக்கொள்.
இல்லை என்றால் தூக்கியெறி
அதுவும் சுகமாகும் எனக்குள்ளே
பட்டுடுத்த மேனி என்பேன்..
பால் நிலவு தோற்றமென்பேன்
பூக்கள்கூட உனை கண்டால்
பொறாமை கொள்ளும் என்றிடுவேன்.
மென்மைச் சிரிப்பழகும்..
மேன்மைப் பேச்சழகும்..
பெற்றதனால் நீ எனக்கு
அழகிய தமிழும் ஆனாய்.
உன் கன்னக் குழிகழுக்குள்
கவிதைகளாய் பூத்திருக்க
கவிதை ஒன்று வேண்டுமென்று
கட்டளை ஏன் பிறப்பித்தாய்...
காரணமோ தெரியவில்லை இதை
யாரிடமும் கேட்கவில்லை.....
நவரசமாய் எனக்குள் நீ
நர்த்தனங்கள் தினம் செய்வதனால்.
முகமறியா புது மலரே
முன்பு என்னை கண்டாயா...?
முழு நிலவாய் எனக்குள்ளே
முகம் புதைத்து சிணுங்குவதேன்...
நினைவுகளில் வருவதனால்
நெருங்கிக் கொஞ்சம் கதைப்பதற்கு
நீண்ட நாள் யோசித்தேன்.
நிலவே உன்னை பார்ப்பதற்கு.
அழகு தமிழ் வார்த்தைகளை
அடுக்கடுக்காய் நான் கோர்த்து
வாய் உதிரும் புன்னகையால்
வான் உயர பாராட்ட
வானுயர நீ பறந்து
விண்மீனை நீயும் தொட்டு
நிலாவுக்கும் சொந்தம் என்று
என் நெஞ்சமதை குழப்பிவிட்டாய்
போதும் இது போதும்
புன்னகையால் எனை வாட்டியது
காணும் இனி காணும்
கனவுகளில் காதல் கொண்டதுவும்..
கீழ் வானம் சிவந்திருக்க
மேல் வானில் வந்திருந்து
வானத்து கன்னி நீ
விடியலுக்காய் காத்திருந்து
விடை பெற்று சென்றாயோ..
வான்மதியே என் வணக்கத்திற்குரியவளே...!
நினைவில் தவம்...! (View original topic)
sivanes
Posted 15 November 2007 - 01:09 PM
தனிமதி
Posted 15 November 2007 - 04:17 PM
வாழ்த்துக்கள் சிவனேஸ்...
சோகங்களை விட்டுத்தள்ளுங்க...
யாரிடம் இல்ல சோகங்கள் சொல்லுங்க..
வாழ்க்கையில் இது எல்லாம் சகஜமுங்க.....
ரொம்ப நாளைக்கப்புறம் உங்க கவிதை ரொம்ப அசத்தலுங்க...
QUOTE
வாடாமல் மனது இருந்திருந்தால்
பூவாக மலர்ந்திருக்கும் புதுக்கவிதை..!
பார்த்து நீயும் ரசித்திருப்பாய்.
அசத்தலாயும் அது இருந்திருக்கும்.
தேய்ந்து மனம் தேய்பிறையாக
ஒடிந்து உள்ளம் இருக்கையிலே
ஒரு கவிதை எழுது என்று
சொல்லலாமோ சொல் கண்ணே.
சொன்னதனால் இதை கிறுக்குகிறேன்.
சுவை இருந்தால் பருகிக்கொள்.
இல்லை என்றால் தூக்கியெறி
அதுவும் சுகமாகும் எனக்குள்ளே
பூவாக மலர்ந்திருக்கும் புதுக்கவிதை..!
பார்த்து நீயும் ரசித்திருப்பாய்.
அசத்தலாயும் அது இருந்திருக்கும்.
தேய்ந்து மனம் தேய்பிறையாக
ஒடிந்து உள்ளம் இருக்கையிலே
ஒரு கவிதை எழுது என்று
சொல்லலாமோ சொல் கண்ணே.
சொன்னதனால் இதை கிறுக்குகிறேன்.
சுவை இருந்தால் பருகிக்கொள்.
இல்லை என்றால் தூக்கியெறி
அதுவும் சுகமாகும் எனக்குள்ளே
சோகங்களை விட்டுத்தள்ளுங்க...
யாரிடம் இல்ல சோகங்கள் சொல்லுங்க..
வாழ்க்கையில் இது எல்லாம் சகஜமுங்க.....
ரொம்ப நாளைக்கப்புறம் உங்க கவிதை ரொம்ப அசத்தலுங்க...
sathiya
Posted 15 November 2007 - 10:05 PM
வான் மதியும்
உன் வணக்கத்திற்குரியவளும்
தேன் தமிழும்
தெவிட்டாத கவியும்...
ம்ம்... நன்று நன்று...
chandrathi
Posted 16 November 2007 - 01:19 AM
நிலவு பற்றிய காதல் கவிதை நன்று. வாழ்த்துக்கள் சிவனேஷ்!!
Suganthe
Posted 16 November 2007 - 02:11 AM
QUOTE
முகமறியா புது மலரே
முன்பு என்னை கண்டாயா...?
முழு நிலவாய் எனக்குள்ளே
முகம் புதைத்து சிணுங்குவதேன்...
முன்பு என்னை கண்டாயா...?
முழு நிலவாய் எனக்குள்ளே
முகம் புதைத்து சிணுங்குவதேன்...
வாழ்த்துக்கள் சிவனேஸ்