sathiya
Posted 14 February 2009 - 11:44 AM
உன்னதக் காதல்!பருவங்கள் பாராது
உருவங்கள் காணாது
உண்மையாய் மலர்ந்தது
உன்னதக் காதல்!
நம் மனப்பாறை இடுக்குகளில்
தேன் கூடு கட்டி
மௌனமாய்ப் பிறந்தது
உனக்கும் எனக்குமான
உயிர்ப்புள்ள காதல்!
காற்றின் இடுக்கில்
கசிந்து வழிந்து
குழைந்து குழைந்து
பிறந்த குழந்தை
இந்தக் காதல்!
நம் நான்கு விழிகள் சேர்ந்து
அன்று எழுதிய முதல் கவிதை
காதல்!
ம்...
நான் மெய் மறந்து
பொய் சொல்லவில்லை
இன்றும் உன்னை நேசிப்பதாய்!
meera
Posted 14 February 2009 - 07:42 PM
உன்னதக் காதல்!பருவங்கள் பாராது
உருவங்கள் காணாது
உண்மையாய் மலர்ந்தது
உன்னதக் காதல்!
நம் மனப்பாறை இடுக்குகளில்
தேன் கூடு கட்டி
மௌனமாய்ப் பிறந்தது
உனக்கும் எனக்குமான
உயிர்ப்புள்ள காதல்!
காற்றின் இடுக்கில்
கசிந்து வழிந்து
குழைந்து குழைந்து
பிறந்த குழந்தை
இந்தக் காதல்!
நம் நான்கு விழிகள் சேர்ந்து
அன்று எழுதிய முதல் கவிதை
காதல்!
ம்...
நான் மெய் மறந்து
பொய் சொல்லவில்லை
இன்றும் உன்னை நேசிப்பதாய்! சத்தியா...அழகன கவிதை..
சத்தியமா நேற்று உங்கள் கவிபடிச்சு கவலையா இருந்தது...
உங்களின் ஒரு சந்தோஷச கவி படிக்கனும் என்று ஆசைப்பட்டேன்.
இறைவனுக்கு நன்றி முதல் உங்களுக்கும் நன்றி,ஏனோ தெரியல உங்கள் கவிகளில் உள்ள சோகம் தான்..
காதலை அநுபவித்து எழுதும் அழகே அழகு...
உங்கள் இனிய இந்த கவிதைக்கு என் வாழ்த்துக்கள்.
Raamkumar
Posted 15 February 2009 - 05:43 AM
மனதில் பதியும் வார்த்தைகள்.......ஒரு ரசிகனாக என் நன்றிகள்.......
ரதிதேவி
Posted 16 February 2009 - 04:28 PM
சிறிது காலமாய் கவிதை எழுதாமல் இருந்தாலும் லேட்டஸ்டா வந்து நச்சென்று எழுதிவிட்டீர்கள்!
படமும் சூப்பர்!
அதைவிட உன்னதக் காதல் கவிதையும் சூப்பர்!
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சத்தியா!
sathiya
Posted 06 April 2009 - 02:49 PM
கவியோடு இணைந்து
கருத்துச் சொன்ன சொந்தங்களிற்கு
என் மனமார்ந்த நன்றிகள்.