sathiya
Posted 01 July 2008 - 11:10 PM

ஏன் ஏன் ஏன்...? ஓராயிரம் ஆசைகளை
உன் உள்ளத்தினுள்
புதைத்து வைத்து...
உன் மௌனத்தின் பூட்டை மட்டும்
ஏன் இன்று வரை
திறக்காமல் வைத்திருந்தாய்...?
கோடான கோடிக் கேள்விகள்
என் உள்ளத்துள்
கரைபுரண்டோடி நிற்க...
உனது கையினை
இறுகப் பற்றி
நெற்றியில் ஒருசிறு
முத்தம் இட்டு
என் நேசத்தை
உனக்குணர்த்தி விட்டு...
என் பரிசுத்தமான அன்பை
கண்ணீர்த் துளிகள் கொண்டு
உன் பாதங்களில்
காணிக்கையாக்கியவாறு...
கனக்கும் வார்த்தைகளைக் கசக்கி
கவியாய்த் தொடுத்து விட்டு
என் கண்ணீரைத்
துடைத்துக் கொள்கின்றேன்.
Keerthisara
Posted 02 July 2008 - 04:38 AM
ம்..ம்.., நாம் நேசிப்பவர்களினதும், எம்மை நேசிப்பவர்களினதும் நேசம் நெஞ்சமெல்லாம் நிறைந்திட வெளிப்படையாக நாம் பறிமாறிக்கொள்ளும் அன்பினால் மட்டும் தான் முடியும்!
வாழ்த்துக்கள் அக்கா!
தனிமதி
Posted 02 July 2008 - 08:36 AM
ஏன் ஏன் ஏன்...?
அதுதான் நானும் யோசிக்கிறேன்...
இன்னும் இரண்டு கேள்விகள் அதிகமாகக் கேளுங்கோ சத்தியா..
யதார்த்தமான கவிதைக்கு வாழ்த்துக்கள் சத்தியா....
மகுடதீபன்
Posted 02 July 2008 - 11:01 AM
பிரிவுத் துயர் ஆறுதல்
அடைய
நானும் இரு சொட்டு நீர் உகுக்கிறேன் . . .!
சொல்ல வேண்டியதைச்
சொல்லாமல் இருந்தாலும் கஷ்டம் !
சொல்லாமல் இருக்க வேண்டியதைச்
சொன்னாலும் கஷ்டம் !
சின்னா
Posted 02 July 2008 - 04:43 PM
பெண்: பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பூத்திருச்சு வெக்கத்த விட்டுபேசி பேசி ராசியானதே மாமன் பேரைச் சொல்லிச் சொல்லி ஆளானதே... ரொம்ப நாளானதே...
ஆண்: மாலையிட காத்து அல்லி இருக்கு... தாலி செய்ய நேத்துச் சொல்லி இருக்கு...
பெண்: இது சாயங்காலமாம் மடி சாயுங்காலமாம்...
ஆண்: முல்லைப் பூச்சூடு மெல்ல பாய் போடு
பெண்: அட வாடைக் காத்து சூடு ஏத்துது
பெண்: ஆத்துக்குள்ள நேத்து உன்னை நெனச்சேன்... வெக்க நெறம் போக மஞ்ச குளிச்சேன்...
ஆண்: கொஞ்சம் மறைஞ்சு பாக்கவா இல்ல முதுகு தேய்க்கவா
பெண்: அது கூடாது இது தாங்காது.... ஆண்: சின்ன காம்புதானே பூவத் தாங்குது (பொத்தி வச்ச)
சோகங்கள் சுகமாகட்டும் இந்த பாடலைபோல........
அழகான ஏக்கம்.....
வாழ்த்துக்கள் சத்தியா....
sathiya
Posted 06 July 2008 - 03:34 PM
கவியோடு இணைந்து
கருத்துச் சொன்ன சொந்தங்களிற்கு
என் மனமார்ந்த நன்றிகள்.