மகுடதீபன்
Posted 23 October 2008 - 02:45 PM
டீடீடீ
தீர்ந்து போச்சு ஏலக்காய்,
இன்று சாதா டீ தான் !
கொதிக்கிறது ஆனால் . . .
ஆற்றித் தரவா ?- என்கிறாய் !
வேண்டாம் வேண்டாம்
ஊதித் தா . . .!- என்கிறேன்
ஏலக்காய் டீ பருகும் ஆவலில் . . .
kalaimarthandam
Posted 23 October 2008 - 05:47 PM
அவளின் ஊதுதலில் வரும் காற்றும்
ஏலக்காய் மணம் சுமந்து வருகின்றதா?...
அருமை மிக அருமை நண்ப...
யாரங்கே?...
பெண்களை ஆண்கள் கொத்தடிமைகளாய்
கொடுமைப்படுத்துவதாய் கொக்கரிப்போர்
பார்த்து செல்லுங்கள்...
எங்கள் கவி
பெண்ணின் சுவாசம் தொட்ட
காற்றுக்கேத் தரும் பெருமையை...
ஃஃஃ
ரதிதேவி
Posted 24 October 2008 - 06:01 AM
தலைவியின் ஊர் ஏதோ!
அநேகமாக ஏர்க்காடு என்று நினைக்கிறேன்!
அதான் ஏலக்காய் மனம் வீசுகிறது!
ரசித்து படித்தேன்!
வாழ்த்துக்கள் மகுடதீபன் சார்!
sathiya
Posted 24 October 2008 - 01:28 PM
ஓஓ...
இப்படி எல்லாம்
சமாச்சாரம் இருக்கா...?
ம்... தெரியாமல் போச்சே.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.