IPB

Welcome Guest ( Log In | Register )

<% ANNOUNCEMENT %>
2 Pages V   1 2 >  
Reply to this topicStart new topic
குறளில் பிறந்த கதை - 1
சத்தியா
post Nov 13 2004, 06:34 PM
Post #1


Senior
**********

Group: Moderators
Posts: 25,075
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53




குறளில் பிறந்த கதை - 1
........................................


நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
(குறள் - 789)


(மனம் மாறுபடாமல், முடிந்த போதெல்லாம் நண்பனுக்கு உதவி நிற்கும்
தன்மையே, நட்பிற்கு வீற்றிருக்கும் சிறந்த இருக்கையாகும் என்கிறார் வள்ளுவர்)



நல்ல நண்பர்களே உலகத்தின் மிகப் பெரிய செல்வம் என்று சொல்கிறார்கள்.
நட்பு என்பது வெறுமனே உயிர் கொடுக்கும் உணர்ச்சியல்ல. நட்பு என்பது மிகமிக ஆழமான அர்த்தம் கொண்ட சொற்பதம். நட்பு என்பது தூய்மையான அன்பினால் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, இன்பத்திலும், துன்பத்திலும் பகிர்ந்து கொண்டு செயல்படுவதே நல்ல நட்பாகும். தன் நண்பனின் இன்பத்தில் பங்கு கொண்டு, துன்பத்தில் தூர ஓடுவது நல்ல நட்பிற்கு நல்லதல்ல.

ஒரு தூய்மையான நட்பானது, எப்போதும் ஒரு தாயின் அரவணைப்பைப் போல் ஓர் இனிமையான சுகத்தைக் கொடுப்பதாகும். எவ்வேளையிலும் மனம் மாறுபடாமல் முடிந்த போதெல்லாம் நண்பனுக்கு உதவி நிற்கும் தன்மையே நல்ல நட்பிற்கு வீற்றிருக்கும் சிறந்த இருக்கையாகும்.

கடல் மீது பயணம் செய்யும் வள்ளத்திற்கு துடுப்பதுவும் கைத்துணையாய்
இருந்து... கரை சேர உதவுவது போல்... ஒரு நல்ல நண்பனானவன் வாழ்கை
என்னும் பயணத்தில் துடுப்பைப் போல் உற்ற நண்பனாக இருந்து உதவுவதே
நட்பின் சிறப்பாகும். இக் கருத்தினையே வள்ளுவரும் இந்தக் குறளில் மிக
அழகாகக் கூறியுள்ளார்.

உண்மையான நட்பு கோடானகோடி மக்களில் ஒருவருக்குத்தான் வாய்க்கிறது
என்கிறார்கள். அது உண்மையாக இருக்கலாம். ஆனால் அந்த உண்மையான... தூய்மை நிறைந்த நட்பை நானும் அனுபவித்து இருக்கின்றேன்.

ஆமாம். அந்தப் பள்ளிப் பருவத்தில் என் வகுப்பில் வந்து சேர்ந்தாள் சியாமா. என்ன அதிசயம்? உருவத்தில் அப்படியே என்னைப் போலவே காணப்பட்டாள். பார்ப்பவர்கள் எல்லோரும் எம் இருவரையும் பார்த்து இரட்டையர்களா நீங்கள்?... என்று கேட்கும் அளவிற்கு அப்படி ஓர் ஒற்றுமை உருவத்தில் எம் இருவருக்குள்ளும் இருந்தது.

அவளின் அன்பான வார்த்தைகள், அமைதியான சுபாவம் இவை எல்லாம் எனக்கு நிறையவே பிடித்திருந்தது. அதனால் நானும் சியாமாவும் இணை பிரியாத நண்பிகள் ஆனோம். வாழ்க்கையில் எவ்வளவுதான் வசதி வாய்ப்புக்கள் இருந்த போதும், சிறு வயதிலேயே அன்னையை இழந்த எனக்கு மனதில் இனம் புரியாத ஒரு சோகம் எப்போதும் ஒட்டிக் கொண்டே இருந்தது.

சில வேளைகளில் என் மனம் மிகவும் சோர்ந்து விடுவதும் உண்டு. அந்த வேளைகளில் எல்லாம் நீளும் அவளின் பாசக் கரங்கள் ஓர் தாயின் அரவணைப்பைப் போல் எனக்கு எப்போதும் இருக்கும்.

அவளின் அந்தத் தூய்மையான நட்பின் பின்னால் என் தனிமைகள் யாவும் விரட்டப்பட்டு விட்டன. எந்த ஒரு உறவுக் குள்ளும் ஓர் சுயநலம் இருக்கும் என்பார்கள். ஆனால் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அவளிடம் அதை நான் கண்டதே இல்லை. என் இன்பத்திலும்... துன்பத்திலும்... சுக துக்கங்களிலும் அவளின் பங்களிப்பு எப்போதும் அதிகமாக இருக்கும்.

ஒரு சிறு தலையிடி என்று சொன்னாலே துடித்துப் போகும் அவளின் உள்ளம் கண்டு நான் மலைத்து நின்ற பொழுதுகளும் உண்டு. என் வாழ்வின் முன்னேற்றத்திற்கு என் தந்தை தன் வாழ்வைத் தியாகம் செய்து... ஓர் ஏணிப் படியாக எப்படி இருந்தாரோ... அதே போல் சியாமாவும் என் வாழ்விற்கு ஓர் ஏணிப் படிதான்.

பாடசாலையில் வரும் ஒவ்வொரு பரீட்சைகளின் போதும் அவள் என் மனதிற்கு தரும் உற்சாகமானது எனக்கு அவ்வப்போது பெரும் வெற்றிகளை ஈட்டித் தந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

அப்படி ஒரு நட்பை... நானும் மீண்டும் இன்று வரை தேடுகிறேன். இது வரை கிடைக்கவே இல்லை. நாட்டின் போர் சூழ்நிலையால் நானும் புலம் பெயர்ந்த போது தொலைத்த பலவற்றுள் என் அன்புத் தோழி சியாமாவும் அடங்குவாள். இப்போதும் அவளின் அந்த பாசமான நட்பினை நினைத்துப் பார்க்கின்றேன். என் கண்கள் ஈரமாகின்றன. ஆனால் அவளின் நினைவுகள் இப்போதும் என் மனதில் ஈரமான நினைவுகளாய் சாமரம் வீசுகின்றன.

ஆம்!... மனதிலே சலிப்புத் தட்டும் போது எண்ணங்கள் யாவும் ஒடிந்து விடுகின்றன. அதைத் தூக்கி நிறுத்த எவன் ஒருவன் விசுவாசமுள்ள ஒரு நண்பனைப் பெற்று விடுகின்றானோ, அவன் தன் வாழ்க்கையில் பெரும் வெற்றியைப் பெறுவான் என்பது உண்மையே. அப்படி ஒரு நட்பினை நானும் பெற்றிருந்தேன்.


ஆக்கம் - சத்தியா


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
bavan
post Nov 15 2004, 12:29 PM
Post #2


நிர்வாகம்
**********

Group: Support
Posts: 4,369
Joined: 18-December 03
From: Scotland
Member No.: 7



வாழ்த்துக்கள் சத்தியா, அருமையாக எழுதியிருக்கிறீர்கள், தொடரட்டும் உங்கள் பணி.


--------------------
நிலா ஒன்லைன் - எங்கும் எப்போதும் உங்களோடு..!
அன்புடன் : பவன்.
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Nov 15 2004, 02:26 PM
Post #3


Senior
**********

Group: Moderators
Posts: 25,075
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



QUOTE (bavan @ Nov 15 2004, 12:29 PM)
வாழ்த்துக்கள் சத்தியா, அருமையாக எழுதியிருக்கிறீர்கள், தொடரட்டும் உங்கள் பணி.


நன்றி பவன்.


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
பிரியமானவள்
post Nov 15 2004, 03:22 PM
Post #4


Senior
**********

Group: Senior Members
Posts: 2,267
Joined: 17-December 03
Member No.: 4



வாழ்த்துக்கள் சத்தியா


--------------------
அன்பை நேசித்து இன்பமாக வாழ்

அன்போடு
பிரியமானவள்
Go to the top of the page
 
+Quote Post
roy
post Nov 15 2004, 04:12 PM
Post #5


Senior
**********

Group: Disabled Members
Posts: 1,979
Joined: 19-February 04
Member No.: 57



பாராட்டுக்கள் சத்தியா.


--------------------
something is better than nothing
Go to the top of the page
 
+Quote Post
கலை
post Nov 15 2004, 05:16 PM
Post #6


Senior
**********

Group: Disabled Members
Posts: 4,103
Joined: 29-December 03
From: Norway
Member No.: 24



நல்லதொரு ஆக்கம். வாழ்த்துக்கள் சத்யா.


--------------------
<span style='font-size:8pt;line-height:100%'>
அன்புதான் உலக மகா சக்தி.............
என்றும் அன்புடன்..கலை
</span>

Go to the top of the page
 
+Quote Post
றெனிநிமல்
post Nov 15 2004, 05:25 PM
Post #7


Senior
**********

Group: Disabled Members
Posts: 11,282
Joined: 25-February 04
Member No.: 61



வாழ்த்துக்கள் சத்தியா.

சொன்னது போலே, உங்கள் குரல் உயர்த்தி குறல் எழுதிவிட்டீர்கள்.
smile.gif


--------------------
பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம்.
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Nov 15 2004, 05:28 PM
Post #8


Senior
**********

Group: Moderators
Posts: 25,075
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



QUOTE (றெனி @ Nov 15 2004, 05:25 PM)
வாழ்த்துக்கள் சத்தியா.

சொன்னது போலே, உங்கள் குரல் உயர்த்தி குறல் எழுதிவிட்டீர்கள்.
smile.gif


smile.gif smile.gif smile.gif smile.gif smile.gif


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
thanuja
post Nov 17 2004, 09:59 AM
Post #9


Senior
**********

Group: Disabled Members
Posts: 1,457
Joined: 14-July 04
Member No.: 137



வாழ்த்துக்கள் சத்தியா


--------------------
அன்பு வைப்பவரின் அன்பை நேசி ; துன்பம் வரும் போதும் இன்பமாய் தெரியும்
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Nov 19 2004, 06:08 PM
Post #10


Senior
**********

Group: Moderators
Posts: 25,075
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



ஊக்கம் தந்த பவன், பிரியமானவள், றோய், கலை, றெனி, தனுஜா
உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


smile.gif smile.gif smile.gif smile.gif smile.gif


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
bavan
post Nov 23 2004, 11:12 AM
Post #11


நிர்வாகம்
**********

Group: Support
Posts: 4,369
Joined: 18-December 03
From: Scotland
Member No.: 7



QUOTE (சத்த @ Nov 19 2004, 06:08 PM)
ஊக்கம் தந்த பவன், பிரியமானவள், றோய், கலை, றெனி, தனுஜா
உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


smile.gif smile.gif smile.gif smile.gif smile.gif

குறளில் பிறந்த கதை எப்போது தொடரும் ?


--------------------
நிலா ஒன்லைன் - எங்கும் எப்போதும் உங்களோடு..!
அன்புடன் : பவன்.
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Nov 23 2004, 11:20 AM
Post #12


Senior
**********

Group: Moderators
Posts: 25,075
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



QUOTE (bavan @ Nov 23 2004, 11:12 AM)
குறளில் பிறந்த கதை எப்போது தொடரும் ?


விரைவில் தொடரும் பவன்.

biggrin.gif biggrin.gif biggrin.gif biggrin.gif biggrin.gif


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
றெனிநிமல்
post Nov 23 2004, 06:22 PM
Post #13


Senior
**********

Group: Disabled Members
Posts: 11,282
Joined: 25-February 04
Member No.: 61



smile.gif smile.gif smile.gif smile.gif smile.gif


--------------------
பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம்.
Go to the top of the page
 
+Quote Post
ரூபா
post Nov 28 2004, 11:13 AM
Post #14


Senior
**********

Group: Disabled Members
Posts: 1,781
Joined: 10-March 04
Member No.: 72



வாழ்த்திக்கள் சத்தியா.


--------------------

................உன் கவலை மறந்து பட்டாம் பூச்சியாக பற!...................
Go to the top of the page
 
+Quote Post
bavan
post Dec 6 2004, 12:39 PM
Post #15


நிர்வாகம்
**********

Group: Support
Posts: 4,369
Joined: 18-December 03
From: Scotland
Member No.: 7



QUOTE (சத்த @ Nov 23 2004, 11:20 AM)
QUOTE (bavan @ Nov 23 2004, 11:12 AM)
குறளில் பிறந்த கதை எப்போது தொடரும் ?


விரைவில் தொடரும் பவன்.

biggrin.gif biggrin.gif biggrin.gif biggrin.gif biggrin.gif

biggrin.gif biggrin.gif


--------------------
நிலா ஒன்லைன் - எங்கும் எப்போதும் உங்களோடு..!
அன்புடன் : பவன்.
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Dec 6 2004, 12:52 PM
Post #16


Senior
**********

Group: Moderators
Posts: 25,075
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



ohmy.gif ohmy.gif ohmy.gif ohmy.gif ohmy.gif


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
bavan
post Dec 6 2004, 01:05 PM
Post #17


நிர்வாகம்
**********

Group: Support
Posts: 4,369
Joined: 18-December 03
From: Scotland
Member No.: 7



QUOTE (சத்த @ Dec 6 2004, 12:52 PM)
ohmy.gif  ohmy.gif  ohmy.gif  ohmy.gif  ohmy.gif


biggrin.gif biggrin.gif
படங்களுடன் விளக்கத்தையும் எழுதுங்கள்.


--------------------
நிலா ஒன்லைன் - எங்கும் எப்போதும் உங்களோடு..!
அன்புடன் : பவன்.
Go to the top of the page
 
+Quote Post
றெனிநிமல்
post Dec 6 2004, 09:54 PM
Post #18


Senior
**********

Group: Disabled Members
Posts: 11,282
Joined: 25-February 04
Member No.: 61



QUOTE
  படங்களுடன் விளக்கத்தையும் எழுதுங்கள்.


ஆமாம், நல்ல படம் பார்த்து ரொம்ப நாளாச்சிது! smile.gif


--------------------
பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம்.
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Dec 6 2004, 09:57 PM
Post #19


Senior
**********

Group: Moderators
Posts: 25,075
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



QUOTE (றெனி @ Dec 6 2004, 09:54 PM)
QUOTE
  படங்களுடன் விளக்கத்தையும் எழுதுங்கள்.


ஆமாம், நல்ல படம் பார்த்து ரொம்ப நாளாச்சிது! smile.gif


laugh.gif laugh.gif laugh.gif laugh.gif laugh.gif


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Dec 6 2004, 10:07 PM
Post #20


Senior
**********

Group: Moderators
Posts: 25,075
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



QUOTE (bavan @ Dec 6 2004, 01:05 PM)
QUOTE (சத்த @ Dec 6 2004, 12:52 PM)
ohmy.gif   ohmy.gif  ohmy.gif  ohmy.gif  ohmy.gif


biggrin.gif biggrin.gif
படங்களுடன் விளக்கத்தையும் எழுதுங்கள்.


வணக்கம் பவன்.

எல்லா இடத்திலும் போடும் படங்களுக்கு விளக்கங்கள் சொல்ல முடியாமல்
உள்ளது. வார்த்தைகள் எல்லாம் தொண்டை வரை வந்து சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாது தவித்து நிற்கும் போது படங்களைப் போட்டு விட்டு ஆள் மாற வேண்டியதுதான்.

sad.gif sad.gif sad.gif sad.gif sad.gif

ஆனாலும் இந்த இடத்தில் நான் போட்ட படத்துக்கு விளக்கம் சொல்கிறேன்.
குறளில் பிறந்த கதைக்கு நல்ல அம்சமா ஓர் கருவைத் தேடிக் கொண்டு
இருக்கின்றேன். அப்படி எண்டால் தானே பட் என்று நெஞ்சில் பதியும்?
அதற்கிடையில் அந்தரப் பட்டால் இப்படித்தான் நான் நிற்க வேண்டும்.

ohmy.gif ohmy.gif ohmy.gif ohmy.gif ohmy.gif


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post

2 Pages V   1 2 >
Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



RSS Lo-Fi Version Time is now: 9th February 2010 - 06:56 AM