IPB

Welcome Guest ( Log In | Register )

<% ANNOUNCEMENT %>
 
Reply to this topicStart new topic
காதலர் தினம்!
சத்தியா
post Feb 18 2004, 06:05 PM
Post #1


Senior
**********

Group: Moderators
Posts: 25,080
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53





காதலர் தினம்!
........................


இனம் மதம் மொழி கடந்து
இதயங்கள் இரண்டு
இரண்டறக் கலப்பு.

இதயத்தின் துடிப்பு
லப் டப் மறந்து
இரவு பகலாய்
உனது பெயரை
உரக்கச் சொல்லும்

உதிர்க்கும் பேச்சும்
வெளிவரும் மூச்சும்
உன்னைச் சுற்றியே
சிறகு விரிக்கும்.

காதல் என்றும் சுகமானது
கனவுகளும் நினைவுகளும்
புது விதமானது.

புதியதோர் உலகம்
புதுமையாய்த் தெரிய
இரவுகள் எல்லாம்
உறக்கங்கள் தொலையும்.

ஆகாய வெளியில்
கால்கள் நடக்க
பயணச் சீட்டின்றி
பயணங்கள் தொடரும்.

வாழ்வனில் இனிமை
காதலில் பிறக்கும்.
பரிசுத்தமான காதல்
புனிதமாய் ஒளிரும்.

சுமைகளைத் தாங்கும்
சுமைதாங்கி போலே
உண்மைக் காதல்
உயிராய்த் துடிக்கும்.

சோகத்தில் மனது
துவழும் போது
உள்ளத்தை மெதுவாய்
இதமாய்த் தழுவி
உண்மைக் காதல்
உயிர்ப்பைக் கொடுக்கும்.

கொழுகொம்பு தேடும்
உண்மை அன்பு
கொடியெனப் படர்ந்து
மலர்வது காதல்!

வாழ்க்கை என்பதை
எத்தனை தடவை
வாழப் போகின்றோம்?
வாழ்வு என்பது
ஒருமுறை தானே!

வாழ்க்கை தன்னில்
பிடிப்பைத் தந்து
ரசிப்பாய் வாழ
காதல் வேண்டும்.

காதல் இல்லா
வாழ்வு அதுவும்
வறண்ட பூமியாய்
காய்ந்து பிளந்து
வாழ்க்கை வெறுத்து
இடறியே வீழும்.

ஈருயிர் இணைந்து
பிறப்பொன்று கொண்ட
அழிவிலா வாழ்வுடன்
புதிதான உதயம்!

இது தோன்றுவதும் அதிசயம்
தோன்றாமல் இருப்பதுவும் அதிசயம்.

பிறந்த தினம் மறந்து
பிரிந்த மனம் தவித்து
கண்ணீர் காணாத நாளொன்று
கண்டதில்லை நான்.

வருடத்தில் இந்நாளாவது
வாழ்ந்திட வேண்டும் இணைந்து
அதற்காக என்னிடம் கேட்டால்
தினம் ஒன்று இங்கு
போதாது என்பேன்.

திக்கெட்டும் போற்றட்டும்
காதலின் புகழை!

திகட்டாத இன்பத்தின்
தித்திக்கும் சுகங்களை
முடிவின்றி மீட்டிட…


என்னிடம் கேட்டால்
தினம் ஒன்று இங்கு
போதாது என்பேன்.

இரண்டு மனங்களின்
இன்ப இணைப்புக்கு
தினமும் தோன்றட்டும்
காதலர் தினமாய்!


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
பிரியமானவள்
post Feb 19 2004, 06:30 AM
Post #2


Senior
**********

Group: Senior Members
Posts: 2,267
Joined: 17-December 03
Member No.: 4



வாழ்த்துக்கள்


--------------------
அன்பை நேசித்து இன்பமாக வாழ்

அன்போடு
பிரியமானவள்
Go to the top of the page
 
+Quote Post
bavan
post Feb 19 2004, 09:03 AM
Post #3


நிர்வாகம்
**********

Group: Support
Posts: 4,369
Joined: 18-December 03
From: Scotland
Member No.: 7



காதல் அநுபவத்தினை இனிக்க இனிக்கத் தந்திருக்கிறீர்கள், உங்கள் எண்ணமும் தவிப்பிற்கு அவசியமானது.

மிகவும் திறமையாக கவிதை எழுதுகிறீர்கள்,தொடரட்டும் உங்கள் பணி.


--------------------
நிலா ஒன்லைன் - எங்கும் எப்போதும் உங்களோடு..!
அன்புடன் : பவன்.
Go to the top of the page
 
+Quote Post
asuran
post Feb 19 2004, 08:51 PM
Post #4


Senior
**********

Group: Disabled Members
Posts: 470
Joined: 18-December 03
Member No.: 6



அடடே நல்ல திறமையான கவிதைகள் தருகிறார் நம்ம சத்தியா.வாழ்த்துக்கள் நிறைய எழுதுங்கள்.
Go to the top of the page
 
+Quote Post
ப்ரியமான தோழி
post Feb 20 2004, 11:34 AM
Post #5


Senior
**********

Group: Senior Members
Posts: 1,375
Joined: 17-December 03
From: ஐரோப்பா
Member No.: 2



நன்றாக இருக்கு!! வாழ்த்துக்கள் சத்தியா!! ;)


--------------------
:::நிலவு தூங்கினாலும் நிலாFM தூங்காது:::
Go to the top of the page
 
+Quote Post
கலை
post Feb 20 2004, 01:08 PM
Post #6


Senior
**********

Group: Disabled Members
Posts: 4,103
Joined: 29-December 03
From: Norway
Member No.: 24



காதலை அழகழகாய் சொல்ல நன்கு தெரிந்து வைத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.


--------------------
<span style='font-size:8pt;line-height:100%'>
அன்புதான் உலக மகா சக்தி.............
என்றும் அன்புடன்..கலை
</span>

Go to the top of the page
 
+Quote Post
Aruna
post Sep 21 2005, 06:01 AM
Post #7


Senior
**********

Group: Advancing Members
Posts: 210
Joined: 8-June 05
From: Canada
Member No.: 257



QUOTE (சத்த @ Feb 18 2004, 06:05 PM)
சோகத்தில் மனது
துவழும் போது
உள்ளத்தை மெதுவாய்
இதமாய்த் தழுவி
இந்தக் காதல்
உயிர்ப்பைக் கொடுக்கும்.

வாழ்த்துக்கள்
தொடர்ந்து எழுதுங்கள்!
Go to the top of the page
 
+Quote Post

Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



RSS Lo-Fi Version Time is now: 9th February 2010 - 01:39 PM