IPB

Welcome Guest ( Log In | Register )

<% ANNOUNCEMENT %>
 
Reply to this topicStart new topic
அந்தக் கணப் பொழுதுக்காய்...!
சத்தியா
post Feb 26 2005, 03:29 PM
Post #1


Senior
**********

Group: Moderators
Posts: 25,084
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53





அந்தக் கணப் பொழுதுக்காய்...!
-------------------------------------


வீட்டின் கூரையில்
ஏறி நின்று
சேவல் கூவி
பொழுது விடிந்தது எனச் சொல்லி
எழும்பிய காலம் தொலைத்து...

குருவிகளின்
சுப்ரபாதங்கள் கேட்டு
பொழுது விடிந்தது எனச் சொல்லி
எழும்பிய காலம் தொலைத்து...

கிழக்கு வெளுக்கு முன்னே
கடிகாரத்தின் அலாரம்
இதய ஓசையை அதிரவைக்க
துடித்து எழுந்து
இயந்திரத்தோடு இயந்திரமாகி
இயந்திர மனிதானாய்
இன்று நீ.

நீர்க் குமிழி போன்று
நிலைக்க முடியாத
இந்த வாழ்க்கையில்
அடுத்த நிமிடம் என்பது கூட
உத்தரவாதம் இல்லாத நிலையில்...

மின்னலாய் மறையும்
நாட்களுடன் சேர்ந்து
வருடங்களும் தொலைந்து விட
இளமையும் கூட
தொலைந்து போவதை
நீயும் உணர மறுக்கின்றாய்.

எளிமையான உள்ளத்தோடும்
கள்ளம் கபடமற்ற
பாசப் பிணைப்போடும்
ஆனந்திக்கத் துடிக்கும்
இந்த வாழ்வுக்கு
ஆயுள் குறைகிறது.

கண்ணோடு இமை
சங்கமித்த காலம் முதல்
தினமும் கனவோடு
உன் உருவம் சங்கமித்து
தடம் புரள்கிறது.

எப்போது நீயும்
விழிக்கப் போகின்றாய்...?

வானவில்லின்
வர்ணங்கள் பூசிய
உன் வண்ண முகம்
வாடிவிடாமல்
பாதுகாத்துக் கொண்டு...

அன்னை, தந்தை
உடன் பிறப்புக்களின்
அத்தனை அன்பையும்
மொத்தமாய்
உன்னிடம் எதிர்பார்த்த படி
இப்போதும் நான்!

என்னோடு சேர்ந்து சிரிப்பதற்கும்
என்னோடு சேர்ந்து அழுவதற்கும்
உன்னை விட்டால்
எனக்கென யாருள்ளார்
இந்த உலகில்...?

என் இதயத்தோடு
இதயம் வைத்து
நீ பேசும் போது
உன் நெஞ்சுக்குள்
முகம் புதைக்கும்
அந்தக் கணப் பொழுதுக்காய்...

நீ அன்பாய் எனை அணைத்து
என் தலைகோதிவிடும் போது
என் வேதனைகளை எல்லாம்
தூக்கி எறிந்து விட்டு
உனக்குள் நான் தொலையும்
அந்தக் கணப் பொழுதுக்காய்...

என் ஆயுளையே
உனக்காய் அர்ப்பணித்து
இன்றும்
உனக்காய் என் காத்திருப்பு!


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
றெனிநிமல்
post Feb 26 2005, 04:56 PM
Post #2


Senior
**********

Group: Disabled Members
Posts: 11,282
Joined: 25-February 04
Member No.: 61



நன்றி சத்தியா.

வாழ்த்துக்கள்.
smile.gif


--------------------
பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம்.
Go to the top of the page
 
+Quote Post
jay_jay
post Feb 26 2005, 07:02 PM
Post #3


Senior
**********

Group: Disabled Members
Posts: 1,461
Joined: 28-July 04
Member No.: 141



QUOTE
கிழக்கு வெழுக்கு முன்னே
கடிகாரத்தின் அலாரம்
இதய ஓசையை அதிரவைக்க
துடித்து எழுந்து
இயந்திரத்தோடு இயந்திரமாகி
இயந்திர மனிதானாய்
இன்று நீ.


எதார்த்தமான வரிகள்.

அழகிய கவிதை. சிறப்பாக உள்ளது.
வாழ்த்துக்கள் சத்தியா.


--------------------
தமிழன் இல்லாத நாடில்லை - தமிழனுக்கென்று ஓரு நாடில்லை
Go to the top of the page
 
+Quote Post
பிரியமானவள்
post Feb 26 2005, 07:03 PM
Post #4


Senior
**********

Group: Senior Members
Posts: 2,267
Joined: 17-December 03
Member No.: 4



வாழ்த்துக்கள்.


--------------------
அன்பை நேசித்து இன்பமாக வாழ்

அன்போடு
பிரியமானவள்
Go to the top of the page
 
+Quote Post
PATCHI
post Feb 27 2005, 12:21 AM
Post #5


Senior
**********

Group: Senior Members
Posts: 647
Joined: 19-December 03
Member No.: 14



நிழல்தேடும் உணர்வுகளை வாழ்த்தி....

ஷ்..பட்சி வந்திடுச்சு..பட்சி வந்திடுச்சு..ஷ்..


--------------------
உலகெங்கும் தேடுகிறேன்..மனிதமதைக் காணலையே..,
வானமே எல்லை..........!
Go to the top of the page
 
+Quote Post
velavan
post Feb 27 2005, 01:48 AM
Post #6


Senior Member
**********

Group: Disabled Members
Posts: 718
Joined: 18-December 03
Member No.: 8



ம்.. சத்தியாவின் இன்னொரு வெற்றிக்கொடி... வாழ்த்துக்கள்!
Go to the top of the page
 
+Quote Post
bavan
post Feb 28 2005, 10:42 AM
Post #7


நிர்வாகம்
**********

Group: Support
Posts: 4,369
Joined: 18-December 03
From: Scotland
Member No.: 7



வாழ்த்துக்கள் சத்தியா, தொடரட்டும் உங்கள் பணி.


--------------------
நிலா ஒன்லைன் - எங்கும் எப்போதும் உங்களோடு..!
அன்புடன் : பவன்.
Go to the top of the page
 
+Quote Post
roy
post Feb 28 2005, 05:42 PM
Post #8


Senior
**********

Group: Disabled Members
Posts: 1,979
Joined: 19-February 04
Member No.: 57



பாராட்டுக்கள் சத்தியா 41.gif 41.gif 41.gif


--------------------
something is better than nothing
Go to the top of the page
 
+Quote Post
ப்ரியமான தோழி
post Mar 3 2005, 12:41 PM
Post #9


Senior
**********

Group: Senior Members
Posts: 1,375
Joined: 17-December 03
From: ஐரோப்பா
Member No.: 2



அழகான கவிதை!!
வாழ்த்துக்கள் சத்தியா!! smile.gif


--------------------
:::நிலவு தூங்கினாலும் நிலாFM தூங்காது:::
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Mar 9 2005, 12:10 PM
Post #10


Senior
**********

Group: Moderators
Posts: 25,084
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
சிந்து
post Mar 10 2005, 11:43 AM
Post #11


Senior
**********

Group: Disabled Members
Posts: 4,887
Joined: 3-March 05
From: Norway
Member No.: 229



வாழ்த்துக்கள் சத்தியா.


--------------------


いいいいいいいいいநேசமுடன் சிந்துいいいいいいいいい
Go to the top of the page
 
+Quote Post
Shanmugathasan
post Mar 15 2005, 08:33 PM
Post #12


Senior
**********

Group: Disabled Members
Posts: 130
Joined: 12-March 05
Member No.: 232



QUOTE (சத்த @ Feb 26 2005, 03:29 PM)



மின்னலாய் மறையும்
நாட்களுடன் சேர்ந்து
வருடங்களும் தொலைந்து விட
இளமையும் கூட
தொலைந்து போவதை
நீயும் உணர மறுக்கின்றாய்.


தொலைந்து போகின்ற இளமையை
விலை கொடுத்தாலும் வாங்க
முடியாதென்பதையும்
மனித மனங்களினால்
ஏற்றுக்கொள்ளப்பயப்படுகின்ற
உண்மை என்பதையும்
அழகாய்ச் சொன்னீர்கள்
வாழ்த்துக்கள் சத்தியா


--------------------
உங்களுக்காக
எஸ். சண்முகதாஸன்
Go to the top of the page
 
+Quote Post

Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



RSS Lo-Fi Version Time is now: 9th February 2010 - 02:42 PM