IPB

Welcome Guest ( Log In | Register )

<% ANNOUNCEMENT %>
 
Reply to this topicStart new topic
பட்டுச் சேலை கட்டி!
சத்தியா
post Mar 25 2005, 12:09 PM
Post #1


Senior
**********

Group: Moderators
Posts: 25,086
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53





பட்டுச் சேலை கட்டி!
-------------------------


என் அம்மா
கட்டிக்கொள் என்று தந்த
பட்டுச் சேலை
என் அருகிலிருந்தும்...

காரிருள் சூழ்ந்து
என் மனமும்
மரத்துப் போனதால்
நானோ
விட்டத்தைப் பார்த்த படி
கட்டிலில் கிடக்கின்றேன்!

எத்தனை தடவை
பட்டுச் சேலை கட்டிய என்னை
ஒரு பார்வைக்கு வைக்கப்பட்ட
பொம்மையைப் பார்ப்பது போல்
பார்வையிட்டுச் சென்றார்கள்...?

எத்தனை தடவை
பெண் வெள்ளை இல்லை
என்று சொல்லக் கேட்டு
என் மனமும்
பாறையாய்ப் போனது...?

சமைக்கத் தெரியுமா...?
சங்கீதம் தெரியுமா...?
என்று கேட்டு
திக்குவாயா என்று
சோதனையும் செய்தார்கள்.

என் மனதினையும்
என் உணர்வுகளையும்
புரிந்து கொள்ளும் இதயங்கள்
ஒரு போதும் வரவில்லை.

நாளை நீ வருவதாய்
என் அம்மா சொன்னார்.

நீயாவது என் வெள்ளை மனதை
புரிந்து கொள்ள மாட்டாயா
என்று புண்பட்ட நெஞ்சம்
கேட்டுத் தவிக்க...

இதயத்தின் ஒரு மூலையில்
சின்னதாய் ஓர் ஆசை எழ
எண்ணத் தூரிகை கொண்டு
உன் முகத்தை
வரைந்து பார்க்கின்றேன்!

நீயாவது என்னை
ஏற்றுக் கொள்வாய் என்று
எம்பி எம்பிக் குதிக்கும்
இதயத்துடன்
பட்டுச் சேலை கட்டி
உன் வருகைக்காய் காத்திருந்தேன்
நீயும் கூட
வாராமலேயே போய் விட்டாயே...!


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
கலை
post Mar 25 2005, 12:19 PM
Post #2


Senior
**********

Group: Disabled Members
Posts: 4,103
Joined: 29-December 03
From: Norway
Member No.: 24



QUOTE (சத்த @ Mar 25 2005, 02:09 PM)
நீயாவது என் வெள்ளை மனதை
புரிந்து கொள்ள மாட்டாயா
என்று புண்பட்ட நெஞ்சம்
கேட்டுத் தவிக்க......

புண்பட்டுப் போகும் நெஞ்சங்களுக்காய் ஒரு அருமையான கவிதை வடித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் சத்யா.


--------------------
<span style='font-size:8pt;line-height:100%'>
அன்புதான் உலக மகா சக்தி.............
என்றும் அன்புடன்..கலை
</span>

Go to the top of the page
 
+Quote Post
velavan
post Mar 25 2005, 01:55 PM
Post #3


Senior Member
**********

Group: Disabled Members
Posts: 718
Joined: 18-December 03
Member No.: 8



QUOTE
நீயாவது என் வெள்ளை மனதை
புரிந்து கொள்ள மாட்டாயா
என்று புண்பட்ட நெஞ்சம்
கேட்டுத் தவிக்க......

இதயத்தின் ஓர் மூலையில்
சின்னதாய் ஓர் ஆசை எழ
எண்ணத் தூரிகை கொண்டு
உன் முகத்தை வரைந்து பார்க்கின்றேன்.

ஒரு கன்னிப் பெண்ணின் மனதில் ஏற்படும் இயல்பான ஏக்கத்தைப் பிரதிபலிக்கும் வரிகள்.. வாழ்த்துக்கள்!
Go to the top of the page
 
+Quote Post
றெனிநிமல்
post Mar 25 2005, 02:11 PM
Post #4


Senior
**********

Group: Disabled Members
Posts: 11,282
Joined: 25-February 04
Member No.: 61



நன்றி சத்தியா.
QUOTE
நீயாவது என்னை
ஏற்றுக் கொள்வாய் என்று
எம்பி எம்பிக் குதிக்கும்
இதயத்துடன்
பட்டுச் சேலை கட்டி
உன் வருகைக்காய் காத்திருந்தேன்
நீயும் கூட
வாராமலேயே போய் விட்டாயே.....?


முதிர்கன்னியின் இரவுநேர பெருமூச்சு.
ஆனாலும் காலமும் சற்று மாறித்தான் விட்டது. ஆம்...தனது துணையை தானே தேடிக்கொள்ள, புதுமைப் பெண்கள் தயாராகி விட்டார்கள்!


--------------------
பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம்.
Go to the top of the page
 
+Quote Post
Shanmugathasan
post Mar 25 2005, 03:35 PM
Post #5


Senior
**********

Group: Disabled Members
Posts: 130
Joined: 12-March 05
Member No.: 232



QUOTE (சத்த @ Mar 25 2005, 12:09 PM)

இதயத்தின் ஓர் மூலையில்
சின்னதாய் ஓர் ஆசை எழ
எண்ணத் தூரிகை கொண்டு
உன் முகத்தை வரைந்து பார்க்கின்றேன்.

பட்டுச் சேலை கட்டி
பரிதவிப்போடு காத்திருக்கும்
பாவை அவள் நெஞ்சைப்
பக்குவமாய்ப் படம் பிடித்துப்
பப்ளிக்காய் காட்டிவிட்ட
சத்தியாவின் கமராவின்
சாகசத்திற்கு வாழ்த்துக்கள்!!!


--------------------
உங்களுக்காக
எஸ். சண்முகதாஸன்
Go to the top of the page
 
+Quote Post
பிரியமானவள்
post Mar 25 2005, 03:39 PM
Post #6


Senior
**********

Group: Senior Members
Posts: 2,267
Joined: 17-December 03
Member No.: 4



QUOTE
நீயாவது என் வெள்ளை மனதை
புரிந்து கொள்ள மாட்டாயா
என்று புண்பட்ட நெஞ்சம்
கேட்டுத் தவிக்க......

இதயத்தின் ஓர் மூலையில்
சின்னதாய் ஓர் ஆசை எழ
எண்ணத் தூரிகை கொண்டு
உன் முகத்தை வரைந்து பார்க்கின்றேன்



வாழ்த்துக்கள் சத்தியா..


--------------------
அன்பை நேசித்து இன்பமாக வாழ்

அன்போடு
பிரியமானவள்
Go to the top of the page
 
+Quote Post
thanuja
post Mar 25 2005, 07:41 PM
Post #7


Senior
**********

Group: Disabled Members
Posts: 1,457
Joined: 14-July 04
Member No.: 137



வாழ்த்துக்கள் சத்தியா நன்றி.


--------------------
அன்பு வைப்பவரின் அன்பை நேசி ; துன்பம் வரும் போதும் இன்பமாய் தெரியும்
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Mar 26 2005, 11:56 PM
Post #8


Senior
**********

Group: Moderators
Posts: 25,086
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53




அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
ரூபா
post Sep 13 2005, 11:16 AM
Post #9


Senior
**********

Group: Disabled Members
Posts: 1,781
Joined: 10-March 04
Member No.: 72



நன்றி சத்தியா.


--------------------

................உன் கவலை மறந்து பட்டாம் பூச்சியாக பற!...................
Go to the top of the page
 
+Quote Post

Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



RSS Lo-Fi Version Time is now: 9th February 2010 - 03:46 PM