வரம் ஒன்று தருவாயா...? |
![]() ![]() |
வரம் ஒன்று தருவாயா...? |
Feb 29 2004, 03:31 PM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,080 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
![]() வரம் ஒன்று தருவாயா...? ******************** உயிரான உறவொன்றின் இனிதான உணர்வுகளை உன்னவளாய் இருப்பதனால் உள்ளத்தால் அறிகின்றேன்! கனவுகளின் அலைமோதல் கவிதைகளின் பிரசவங்களாய் தினம் தோறும் ஒரு புதுத்தேடல்! காலங்கள் கடந்து கவலைகள் மறந்து காதலில் இணைவதில் இப்படியும் ஓர் சுகமா...? அறிய வைத்தாய் உன் அன்பால் என் அன்பை! உள்ளத்து நினைவுகளை உரிமையாய் நீ கொடுத்து என்னை நான் மறந்து உன்னில் எனை தேடவைத்தாய்! பயணங்கள் பிடிக்கிறது! பகலெல்லாம் பிடிக்கிறது! இரவும் இனிக்கிறது! அதிகாலை அவசரத்திலும் அசைவதில்லை நீ அலட்சியமாய்! பசி என்பதை எங்கோ கேட்ட ஞாபகம்! தூக்கத்தைத் தொலைப்பது இவ்வளவு சுலபமா...? தூக்கத்தைத் தூக்கி வளர்த்த நான் அதைத் துக்கமின்றி விட்டெறிந்தேன் உன் நினைவால்! பேச்சில் கொஞ்சல்! மூச்சில் ஏக்கம்! இல்லாத கோபத்தை பொல்லாத அன்பினால் சீண்டிப் பார்க்கும் இன்பம்! உனக்கு மட்டுமல்ல அது எனக்கும்தான்! என்றோ கூறி விட்டேன் உன்னவள் நானென்று! நீ இன்றும் கேட்கிறாய் என்னவளா...? நீ என்று! எனக்கும் தெரியும் உனக்கும் தெரியும் உனக்கு என்னையும் எனக்கு உன்னையும் ஏன் பிடிக்கிறது என்று! உன்னைக் கேட்டால் தெரியாது என்பாய்! ஆனாலும் பிடிக்கிறது எம்மை எமக்குப் பிடிப்பது! அன்பினால் எனை ஆளும் உன்னிடம் வரம் என்று நான் கேட்டால் மறுப்பாயா...? உன் அன்பில் எந்நாளும் வாழும் வரம் வேண்டும்! தருவாயா...? -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Feb 29 2004, 04:39 PM
Post
#2
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 291 Joined: 18-December 03 Member No.: 11 |
QUOTE (sathiya @ Feb 29 2004, 03:31 PM) அன்பினால் எனை ஆளும் உன்னிடம் வரம் என்று நான் கேட்டால் மறுப்பாயா? உன் அன்பில் எந்நாளும் வாழும் வரம் வேண்டும். தருவாயா...? இனிமையான நினைவுகள்,பாராட்டுக்கள்.அன்பின் தவிப்பில் அருமையான கவிதை. |
|
|
|
Feb 29 2004, 05:33 PM
Post
#3
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 951 Joined: 17-December 03 Member No.: 3 |
நினைவுகள் நிசமாகி......... வரங்கள் வந்து சேரட்டும்
-------------------- வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும் நினைவுகள் ..... என்றும் சுகமானவை.. ..நட்புடன் சிவனேஸ்.. சிந்தனைப்பூக்கள். |
|
|
|
Feb 29 2004, 07:42 PM
Post
#4
|
|
![]() நிர்வாகம் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Support Posts: 4,369 Joined: 18-December 03 From: Scotland Member No.: 7 |
சத்தியா,
உங்கள் கவிதைத்திறமை மேலும் வளர வாழ்த்துக்கள்,தொடரட்டும் உங்கள் பணி. -------------------- |
|
|
|
Feb 29 2004, 07:53 PM
Post
#5
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Members Posts: 377 Joined: 12-January 04 Member No.: 39 |
தூக்கத்தைத் தூக்கி வளர்த்த நான்
அதைத் துக்கமின்றி விட்டெறிந்தேன் உன் நினைவால். வாழ்த்துக்கள்! -------------------- "அனுபவஞானம் பிரம்மம்"
"pirakgnanam birammam" |
|
|
|
Mar 1 2004, 08:57 PM
Post
#6
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 4,103 Joined: 29-December 03 From: Norway Member No.: 24 |
QUOTE உன் அன்பில் எந்நாளும் வாழும் வரம் வேண்டும். தருவாயா.................??????? QUOTE என்றோ கூறி விட்டேன் உன்னவள் நானென்று. நீ இன்றும் கேட்கிறாய் என்னவளா? நீ என்று. வாழ்த்துக்கள் சத்யா. -------------------- <span style='font-size:8pt;line-height:100%'>
அன்புதான் உலக மகா சக்தி............. என்றும் அன்புடன்..கலை</span> ![]() |
|
|
|
Mar 2 2004, 08:38 AM
Post
#7
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 724 Joined: 18-December 03 Member No.: 9 |
கவிதை நண்றாக இருக்கிறமது. வாழ்த்துக்கள்.
|
|
|
|
Jul 31 2004, 02:32 PM
Post
#8
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 11,282 Joined: 25-February 04 Member No.: 61 |
நன்றி சத்தியா.
QUOTE எனக்கும் தெரியும் உனக்கும் தெரியும் உனக்கு என்னையும் எனக்கு உன்னையும் ஏன் பிடிக்கிறது என்று. சில பேர் அதைக் கேட்டால் சொல்கின்றார்கள் இல்லையே என்ன செய்யலாம் சொல்லுங்கள் நீங்களே ஒரு வழி? -------------------- பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம். ![]() |
|
|
|
Aug 1 2004, 04:03 PM
Post
#9
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,080 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (rennynimal @ Jul 31 2004, 02:32 PM) சில பேர் அதைக் கேட்டால் சொல்கின்றார்கள் இல்லையே என்ன செய்யலாம் சொல்லுங்கள் நீங்களே ஒரு வழி? ஆள் யாரெனக் காட்டுங்கள். உண்டா? இல்லையா? என ஒரு கை பார்த்து விடுகின்றேன். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Aug 2 2004, 07:27 PM
Post
#10
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 380 Joined: 21-December 03 Member No.: 18 |
QUOTE உன் அன்பில் எந்நாளும் வாழும் வரம் வேண்டும். தருவாயா.................??????? வாழ்த்துக்கள் சத்தியா. QUOTE ஆள் யாரெனக் காட்டுங்கள். உண்டா? இல்லையா? என ஒரு கை பார்த்து விடுகின்றேன். என்றும் அன்புடன்.... தாமரை. |
|
|
|
Aug 9 2004, 04:50 PM
Post
#11
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,781 Joined: 10-March 04 Member No.: 72 |
நன்றி வாழ்த்துக்கள் சத்தியா.
-------------------- ![]() ................உன் கவலை மறந்து பட்டாம் பூச்சியாக பற!................... |
|
|
|
Sep 21 2005, 05:29 PM
Post
#12
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Advancing Members Posts: 210 Joined: 8-June 05 From: Canada Member No.: 257 |
வாழ்த்துக்கள்
தொடர்ந்து எழுதுங்கள்! |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 01:39 PM |