IPB

Welcome Guest ( Log In | Register )

<% ANNOUNCEMENT %>
2 Pages V   1 2 >  
Reply to this topicStart new topic
"நிலாத்தூறல்"-----6
சத்தியா
post Jul 26 2005, 10:13 PM
Post #1


Senior
**********

Group: Moderators
Posts: 25,084
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53




"நிலாத் தூறல்"-----6



மேலே இணைக்கப்பட்டுள்ள படத்தைப் பார்க்கும் போது உங்கள் எண்ணத்தில் என்ன தோன்றுகின்றதோ அதைக் கற்பனை வானில் பறந்து கவிவரிக்குள் அடக்குங்கள். கவிதை சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ இருக்கலாம். எத்தனை தடவை வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் கவிதைகளை இங்கே எழுதலாம். அதற்கு வரையறை இங்கே கிடையவே கிடையாது. எங்கே உங்கள் கைவரிசையையும் இங்கே காட்டி விடுங்களேன்.


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
velavan
post Jul 26 2005, 11:02 PM
Post #2


Senior Member
**********

Group: Disabled Members
Posts: 718
Joined: 18-December 03
Member No.: 8



நான் தேடிப் பார்க்கிறேன்
நாம் குந்தியிருந்து
மணல்வீடு கட்டிய
முதிரைக் கல்லடியை..!

நான் கூர்ந்து பார்க்கிறேன்
நானும் நீயும் இளமாலைப்பொழுதில்
இடைதேய நடந்தவேளையில்
பதிந்த சுவடுகளா அவையென..!

நான் அழுது பார்க்கிறேன்
'சுனாமி'க்காரன் மனமிரங்கி உன்னை
எனக்காக மட்டும்.. ஓம்.. எனக்காக மட்டும்
மீளத் தருவானா என..!!

அழிவுகளைத் தாங்கி
மரங்கூட நம்பிக்கையாய் பூக்கும்போது
எந்தன் எண்ணங்களும்
நிறைவேறாதா, என்ன?! tongue.gif
Go to the top of the page
 
+Quote Post
லொரேனா
post Jul 27 2005, 02:05 AM
Post #3


Senior
**********

Group: Members
Posts: 799
Joined: 14-June 05
Member No.: 260




அமைதியாகி விட்டாயா.......


அந்தி மாலைப் பொழுதில்
அமைதியாக உறங்கும் கடலே
உன்னைக் கேட்கிறேன்

எங்கே எம் நாடு
எங்கே எம் சொந்தங்கள்
எங்கே எம் சொத்துக்கள்

தழைய தழைய
தாலி தொங்கிய
என் தங்கை எங்கே?

அன்பு மொழி பேசிய
என் தாய் எங்கே?

கள்ளப் பார்வை பார்த்து
காதல் மொழி பேசிய என்
காரிகை எங்கே?

எல்லாம்
ஆழி அலை கொண்டு
அழித்து
அமைதியாகி விட்டாயா?

ஆண்டவனே அழியா பதிலை
நீயா அழிக்கப் போகிறாய்?


This post has been edited by shan: Jul 28 2005, 11:05 AM


--------------------

அன்புடன் லொரேனா.
Go to the top of the page
 
+Quote Post
சிந்து
post Jul 27 2005, 07:49 AM
Post #4


Senior
**********

Group: Disabled Members
Posts: 4,887
Joined: 3-March 05
From: Norway
Member No.: 229



கடல் வேகத்தை
மாற்றியமைத்தேன் அன்று

கடலிலே அடித்துச்
செல்கின்ற வேரற்ற
மரமானேன் இன்று

நீரோட்டம் வேகமாய்
என் மனம் வேகமாய்
போகுது உனைத் தேடி

நுரையாய் நீரினிலே
கலைந்து போகு முன்
வந்து விடு!
tongue.gif


--------------------


¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤நேசமுடன் சிந்து¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
Go to the top of the page
 
+Quote Post
bavan
post Jul 27 2005, 09:46 AM
Post #5


நிர்வாகம்
**********

Group: Support
Posts: 4,369
Joined: 18-December 03
From: Scotland
Member No.: 7



வாழ்த்துக்கள் வேலவன் அண்ணா,லொரேனா,சிந்து, கவிதைகள் நன்றாக அமைந்திருக்கிறது, தொடரட்டும் உங்கள் பணிகள்.


--------------------
நிலா ஒன்லைன் - எங்கும் எப்போதும் உங்களோடு..!
அன்புடன் : பவன்.
Go to the top of the page
 
+Quote Post
லொரேனா
post Jul 27 2005, 10:00 AM
Post #6


Senior
**********

Group: Members
Posts: 799
Joined: 14-June 05
Member No.: 260




அந்தி மாலைப் பொழுது.........


அந்தி மாலைப் பொழுதில்
அத்தானை தேடி வந்தேன்
அங்கும் இங்கும் பார்த்தேன்

பூத்த மரத்தடியில்
புளுவானான்
பூவை ஒருத்தியுடன்.........


This post has been edited by shan: Jul 28 2005, 11:07 AM


--------------------

அன்புடன் லொரேனா.
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Jul 27 2005, 03:07 PM
Post #7


Senior
**********

Group: Moderators
Posts: 25,084
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53




வாழ்த்துக்கள் வேலவன், லொரேனா, சிந்து.


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Jul 27 2005, 03:08 PM
Post #8


Senior
**********

Group: Moderators
Posts: 25,084
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53




தேடிப் பார்க்கின்றேன்!
--------------------------


இந்த மரக்கிளையில்
வந்து இளைப்பாறிச் செல்லும்
ஆயிரம் பறவைகள் போல்...

உன் மனதிலும்
ஆயிரம் பறவைகள்
இளைப்பாறிச் செல்வதை
அறியாதவளாய்...

ஓர் பாவப்பட்ட ஜென்மமாய்
நீ விரித்த
வலையில் விழுந்தேன்!

ஓ...!
பாழாய்ப் போன மனதிலிருந்து
பாவி உன் நினைவுகளை
அழிக்கவும் முடியாமல்.....
மறக்கவும் முடியாமல்.....

உன்னோடு சேர்ந்து
விரலோடு விரல் கோர்த்து
கால் பதித்த
தடையங்களை எல்லாம்
இப்போதும்
தேடிப் பார்க்கின்றேன்!


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Jul 27 2005, 03:18 PM
Post #9


Senior
**********

Group: Moderators
Posts: 25,084
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53




கன்னியின் காத்திருப்பு!
---------------------------


காத்திருப்பில்
ஒரு சுகம்தான்!

அதுவும்
காதலுக்காய் காத்திருப்பிலும்...

காத்திருப்பில்
பின் வரும் ஊடலிலும்
ஒரு சுகம்தான்!

ம்...!
காத்திருக்கிறாள் இவள்
காதலன் வருகைக்காய்
கன்னி இவள்
கால் கடுக்க
காத்திருக்கிறாள்!

காதலன் அவன் வருவானா
கன்னி அவள்
ஆவல் தீர்க்க...?


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
றெனிநிமல்
post Jul 27 2005, 04:43 PM
Post #10


Senior
**********

Group: Disabled Members
Posts: 11,282
Joined: 25-February 04
Member No.: 61



அனைவருக்கு வாழ்த்துக்கள்.

நன்றாக எழுதியிருக்கின்றீர்கள் சத்தியா,வேலவன்,லொரேனா,சிந்து


--------------------
பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம்.
Go to the top of the page
 
+Quote Post
றெனிநிமல்
post Jul 27 2005, 04:45 PM
Post #11


Senior
**********

Group: Disabled Members
Posts: 11,282
Joined: 25-February 04
Member No.: 61



நினைவின் எச்சங்கள்.

கடல் மட்டத்தினை கொண்டு
மலையை அளக்க முடியும்

எதனை கொண்டு அவள்
மனதை நானறிவேன்

வந்தாள் சேர்த்தாள்
பிரிந்து சென்றாள்

பாதசுவடு மாத்திரமே
நினைவின் எச்சங்கள்.


--------------------
பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம்.
Go to the top of the page
 
+Quote Post
ராஜி
post Jul 27 2005, 06:30 PM
Post #12


Senior
**********

Group: Disabled Members
Posts: 1,526
Joined: 13-November 04
Member No.: 190



வாழ்வோம் வா!

கடல் கரையில் நாம் நடந்து
வந்த சுவடுகள் கூட
அழியவில்லை இன்னும்

ஆனால்......... நீயோ....

என்னை விட்டு
போய் விட்டாய் சுவடுகள்
இல்லாத இடத்துக்கு

அது உன் மனதால்
என்றால் நாம் நடந்து
வந்த கடல்கரையை
வந்து பார்

நம் சுவடுகள் இருக்கிறது
அதை பார்த்தாவது உன் மனதை
மாற்றிக் கொண்டு வா
என்றும் என்னோடு வாழ்வதற்கு


--------------------

நேற்றையதை மறப்போம், இன்றையதில் இனிதே வாழ்வோம்.
Go to the top of the page
 
+Quote Post
ராஜி
post Jul 27 2005, 06:31 PM
Post #13


Senior
**********

Group: Disabled Members
Posts: 1,526
Joined: 13-November 04
Member No.: 190



வாழ்த்துக்கள் வேலவன், லொரேனா, சிந்து.றெனி


--------------------

நேற்றையதை மறப்போம், இன்றையதில் இனிதே வாழ்வோம்.
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Jul 27 2005, 09:11 PM
Post #14


Senior
**********

Group: Moderators
Posts: 25,084
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53




வாழ்த்துக்கள் றெனி, ராஜி.


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
லொரேனா
post Jul 27 2005, 09:45 PM
Post #15


Senior
**********

Group: Members
Posts: 799
Joined: 14-June 05
Member No.: 260



மறைந்து கிடக்கும் அறிவை வெளிக்கொண்டு
வருவதற்கு இது நல்லமுயச்சி
வாழ்த்துக்கள் சத்தியா....

கவிதை எழுதியவர்களுக்கும், பாராட்டுக்கள்


--------------------

அன்புடன் லொரேனா.
Go to the top of the page
 
+Quote Post
aathithathashan
post Jul 27 2005, 10:49 PM
Post #16


Senior
**********

Group: Senior Members
Posts: 890
Joined: 2-June 05
Member No.: 252



ஆதித்ததாஸன்
27-07-2005
----------------
"துவண்டிடாதே நிலவே!"
------------------------------------
நிலாத்தூறல் இணைந்துவர உலாவரும் நிலாமகளே!
உலாவோடு உலாவாக, உன்மனதோடு உலாவரும், இதய
நிலா அவன் நினைவுகள், உலாவரும் வேளையிது!
கலாராசன் அவன் கவிதை நீ! கவிதையின் கவிதை நீ!

கலாரசிகன் அவன் இரசிகைநீ! கலைத்திடாதே அவன் கனவுகளை!
கலாச்சாரம் மறந்து காரிகைநீ அவசரத்தில், கனவுகளைக் கலைத்து,
கலாரசனை கெட்டு, கவலைகளில் அமிழ்ந்து காலமதைக் கரைத்து,
நிலாமகள் அவள் நாண, ஆத்திரத்தில், அவசரத்தில், புத்திபேதலித்து,

உலாவரும் உல்லாசம் நிலைத்திடும் என்றெண்ணி, மன
உலாப்போகும் மாந்தர்போல், மாய்த்திடாதே உன் வாழ்வை!
நிலாமகன் குளிர்சேர்த்து, நிலாமகள் உனை இணைத்து,
உலாவரும், நாள் தொலைதூரமில்லை! துவண்டிடாதே நிலவே!
நன்றி
சுபம்!


--------------------
அன்புடன்
ஆதித்ததாஸன்
Go to the top of the page
 
+Quote Post
லொரேனா
post Jul 28 2005, 05:54 AM
Post #17


Senior
**********

Group: Members
Posts: 799
Joined: 14-June 05
Member No.: 260




நீ பதித்த பாதச்சுவடுகள்.......



ஆற்றங் கரையோரம்
நீ பதித்த பாதச் சுவடு
என் நெஞ்சில்
நினைவுச் சுவடுகளாக

பாண்டி விளையாடும் போது
நீ திருடித் தந்த காய்கள்
நினைவுச் சின்னங்களாக

ஆனால் நீயோ
கடந்தகால நினைவுகளை
கானல் நீராக்கி விட்டு
என்னைக் கடக்கிறாய்
மணக் கோலத்துடன்........


This post has been edited by shan: Jul 28 2005, 11:09 AM


--------------------

அன்புடன் லொரேனா.
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Jul 28 2005, 08:44 AM
Post #18


Senior
**********

Group: Moderators
Posts: 25,084
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53




வாழ்த்துக்கள் ஆதித்ததாஸன், லொரேனா.


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
bavan
post Jul 28 2005, 11:05 AM
Post #19


நிர்வாகம்
**********

Group: Support
Posts: 4,369
Joined: 18-December 03
From: Scotland
Member No.: 7



வாழ்த்துக்கள் ஆதித்ததாஸன், லொரேனா, நல்ல கவிதைகள், தொடரட்டும் உங்கள் பணி.


--------------------
நிலா ஒன்லைன் - எங்கும் எப்போதும் உங்களோடு..!
அன்புடன் : பவன்.
Go to the top of the page
 
+Quote Post
றெனிநிமல்
post Jul 28 2005, 04:18 PM
Post #20


Senior
**********

Group: Disabled Members
Posts: 11,282
Joined: 25-February 04
Member No.: 61



வாழ்த்துக்கள் ஆதித்ததாஸன், லொரேனா. smile.gif


--------------------
பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம்.
Go to the top of the page
 
+Quote Post

2 Pages V   1 2 >
Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



RSS Lo-Fi Version Time is now: 9th February 2010 - 02:39 PM