"நிலாத் தூறல்"-----8 |
![]() ![]() |
"நிலாத் தூறல்"-----8 |
Jul 28 2005, 02:44 PM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,086 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
"நிலாத் தூறல்"-----8 ![]() மேலே இணைக்கப்பட்டுள்ள படத்தைப் பார்க்கும் போது உங்கள் எண்ணத்தில் என்ன தோன்றுகின்றதோ அதைக் கற்பனை வானில் பறந்து கவிவரிக்குள் அடக்குங்கள். கவிதை சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ இருக்கலாம். எத்தனை தடவை வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் கவிதைகளை இங்கே எழுதலாம். அதற்கு வரையறை இங்கே கிடையவே கிடையாது. எங்கே உங்கள் கைவரிசையையும் இங்கே காட்டி விடுங்களேன். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jul 28 2005, 02:49 PM
Post
#2
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,086 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
வறுமையின் ரேகைகள்! ---------------------------- நட்ட நடு நிசி வேளை வெட்ட வெளிதனில் கொட்டும் மழைதனில் எட்டி நடந்து செல்கிறேன்! அங்கே... பட்டிணி கிடந்து பரிதவித்து துடித்து... ஒட்டிய மேவாய் ஒடுங்கிய கன்னங்கள் கட்டியம் கூறும் காலத்தின் ரேகையோடு எட்டிடும் தூரத்தில் தோன்றியதோர் உருவம்! எட்டி அடி வைத்து உற்று நோக்கினேன் தட்டுத் தடுமாறி ஊன்றிய தடியுடன்... ஒட்டிய உதடுகள் மெல்லத் திறந்து - கண்ணீரோடு கொட்டிவிட்ட சோகங்கள் கோடி கோடி! -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jul 28 2005, 08:36 PM
Post
#3
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 11,282 Joined: 25-February 04 Member No.: 61 |
தேகமும் தான்!
பெரிய மனிதர்களின் நலம் விசாரிப்புகள் அதை இதை செய்கின்றோம் என்று வாக்குரிதிகள் பல எங்கள் வாக்குகளால் வானுயர்ந்தவர்கள் அனேகர் உயர்ந்தவர்கள் திரும்பி பார்த்தது எத்தனை முறை எம்மை? தேர்தல்கள் வைத்ததில் காலியானது அரச வைப்பகம் மாத்திரமில்லை அப்பாவிகள் எங்கள் தேகமும் தான்! -------------------- பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம். ![]() |
|
|
|
Jul 28 2005, 08:42 PM
Post
#4
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 890 Joined: 2-June 05 Member No.: 252 |
ஆதித்ததாஸன்
28-07-2005 ------------ அறம்பாடு தாயே! -------------------------------- கட்டம் இட்டு சிலர் எழுதிய கவிதைகளை, பலர் பட்டம் பாராட்டு பதவிகள் பெறுவதற்காய், கெட்டித்தனமாய், கட்டம் கட்டமாய் கொள்ளையடித்து, அவர்மனதில், வட்டம் போட்டு வெள்ளையடித்து, புவியதனில், நட்ட நடுவெளியில் புத்தகம் போட்டதுபோல், இணையங்களில் விடுவதுபோல், உன் கட்டழகைசு; சுரண்டி, நட்ட நடுவீதியிலே, திட்டமிட்டு கொள்ளையடித்தவர் ஓர்காலம், நட்ட நடுவீதியில், நார்நாராய் கிழிபடும் காலம், எட்டமல்ல! கிட்டக் கிட்டக் கட்டம் கட்டமாய்க், காலம் கொண்டுவரும் அவர் உருக்கழிவுகளை! திட்டம் தீட்டுபவர் தீட்டும்வரை பார்த்தீருந்து, அவர் கொட்டமடக்கிடுவான்! கட்டம் கழட்டிடுவான்! மட்டமாய், மொட்டையடித்துக் கரும்புள்ளி அடித்திடுவான்! இறைவன், பட்டம் பதவிகள் பார்த்திருக்கப் பறித்திடுவான்! உன் ஒட்டிய வயிறு, உலர்ந்த உதடுகளைத், திட்டம் போட்டுத் திருடியவர் அவரும், சட்டென அழிவார்! பட்டென மறைவார்! நட்ட நடுநிசிக்கதை, வெட்டவெளிக்கு வந்து, அவர்க்கு வேட்டுவைத்திடும்! சட்டம் மறைத்தாலும், சதிகள் சதிராடினாலும், உன் அறப்பாட்டு அவர்க்கு, வட்டம் போட்டு, அவர்வடிவங்களை சிதைக்கவைக்கும்! உன் அறப்பாட்டு, நட்ட நடுநிசியில் அவர்கதையின் புதைக்குழியே! நீ பாடு! நீ அறம்பாடு! நன்றி சுபம்! ------- அன்புடன் ஆதித்ததாஸன் ------------------------- -------------------- அன்புடன்
ஆதித்ததாஸன் |
|
|
|
Jul 28 2005, 08:45 PM
Post
#5
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 11,282 Joined: 25-February 04 Member No.: 61 |
நன்றி ஆதித்ததாஸன்.
-------------------- பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம். ![]() |
|
|
|
Jul 29 2005, 12:15 AM
Post
#6
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 647 Joined: 19-December 03 Member No.: 14 |
சிந்தித்துக் கூறுங்கள் !
பார் பார் உலகம் பார் என பார் படைத்தவன் பார்வை தந்தான் பார்க்கிறேன் .. எட்டும் தூரம் வரை பார்க்கிறேன் எங்குமே யாருமில்லை... எட்டாத தூரமெல்லாம் நடந்து சென்றேன் எங்குமே நீதியில்லை தசையுருகி வழிந்து திசைமருவிக் கிழிந்து இசைந்தியங்கக்கூட விசையில்லாத உடலோடும் உயிரோடும்.. ஒரு கணம் நான் சிலையானேன்... உலகமும் சிலையானது மறு கணம் நான் விழித்துப்பார்க்கிறேன் உலகமோ இன்னும் உறங்கிக்கொண்டிருக்கிறது..! என் விழிகளில்... சிலையான மனிதர்கள் தெரிகிறார்களா.. பாருங்கள்.. சிலுவையிலறைந்த மனங்கள் தெரிகின்றனவா... பாருங்கள்... சிறு கணம் நான் சிரிக்க வேண்டும்.... வழியுண்டா... சிந்தித்துக் கூறுங்கள்...!! * கவிக்கடலில் முக்குளிக்கும் கவிஞர்களுக்கெலாம் வாழ்த்துக்கள் பல !!! ஷ்..பட்சி வந்திடுச்சு..பட்சி வந்திடுச்சு..ஷ் -------------------- உலகெங்கும் தேடுகிறேன்..மனிதமதைக் காணலையே..,
வானமே எல்லை..........! |
|
|
|
Jul 29 2005, 09:12 AM
Post
#7
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Members Posts: 799 Joined: 14-June 05 Member No.: 260 |
என்ன கேட்பது
நம் நாட்டில் வேதனை நிறைந்த முகங்களைத் தவிர வேறென்ன தான் மலிந்து கிடக்கின்றன வயிறு கழுவ வழியேதும் இல்லாமல் வாடுகின்ற ஏழைகளும்.. தன் வயிற்று சொந்தம் போன ..இடம் தெரியாத தாய்மாரும் கணவனைத் தொலைத்த விதவைகளுமே அதனால் இப்பெண் முகத்தை...நோக்கி என்ன கேட்பது..... This post has been edited by லொரேனா: Jul 30 2005, 06:16 PM -------------------- ![]() அன்புடன் லொரேனா. |
|
|
|
Jul 29 2005, 09:16 AM
Post
#8
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Members Posts: 799 Joined: 14-June 05 Member No.: 260 |
QUOTE PATCHI Posted on Jul 29 2005, 12:15 AM சிலையான மனிதர்கள் தெரிகிறார்களா.. பாருங்கள்.. சிலுவையிலறைந்த மனங்கள் தெரிகின்றனவா... பாருங்கள்... சிறு கணம் நான் சிரிக்க வேண்டும்.... வழியுண்டா... சிந்தித்துக் கூறுங்கள்...!! சிறந்த கவிதைகள் என் வாழ்த்துக்கள். This post has been edited by லொரேனா: Jul 30 2005, 06:19 PM -------------------- ![]() அன்புடன் லொரேனா. |
|
|
|
Jul 29 2005, 09:34 AM
Post
#9
|
|
![]() நிர்வாகம் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Support Posts: 4,369 Joined: 18-December 03 From: Scotland Member No.: 7 |
வாழ்த்துக்கள் சத்தியா,ஆதித்ததாஸன்,றெனி,பட்சி,லொரேனா, கவிதைகள் நன்றாக அமைந்திருக்கின்றன, தொடரட்டும் உங்கள் பணிகள்.
-------------------- |
|
|
|
Jul 29 2005, 11:00 AM
Post
#10
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,086 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
வாழ்த்துக்கள் றெனி, ஆதித்ததாஸன், பட்சி, லொரேனா. -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jul 29 2005, 06:16 PM
Post
#11
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 11,282 Joined: 25-February 04 Member No.: 61 |
வாழ்த்துக்கள் பட்சி, லொரேனா
-------------------- பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம். ![]() |
|
|
|
Jul 29 2005, 10:55 PM
Post
#12
|
|
|
Senior Member ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 718 Joined: 18-December 03 Member No.: 8 |
இளசுகள் தொலைந்த ஏக்கங்களுடன்
இப்படியாக எத்தனை முகங்கள்.. ஒழுங்கைக்கு இரண்டு இளசுகளை காண்பதே அரிதான விந்தையை காண நேர்ந்தபோது கனமான வேதனைதான்! வீட்டுக்கு வீடு எழுபதை அண்டிய முதிசுகள் அவரே அவர்க்குத் துணையாய்.. உற்றமாய் பந்தமாய் பக்கமாய்.. போரிலும் வெளிநாட்டிலுமாக இளசுகளைக் கொடுத்த ஏக்கத்துடன்.. வயதுபோயும்.. ஓய்வில்லா உழைச்சலுடன் வாழ்வதற்காக அவர்கள்!! |
|
|
|
Aug 4 2005, 11:33 AM
Post
#13
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 4,103 Joined: 29-December 03 From: Norway Member No.: 24 |
வித்தியாசமான கவிதைகளை கொடுத்திருக்கும் அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.
-------------------- <span style='font-size:8pt;line-height:100%'>
அன்புதான் உலக மகா சக்தி............. என்றும் அன்புடன்..கலை</span> ![]() |
|
|
|
Sep 13 2005, 09:26 AM
Post
#14
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,781 Joined: 10-March 04 Member No.: 72 |
தூறலில் நனைந்த அனைவருக்கும் வாழ்த்துகள்.
-------------------- ![]() ................உன் கவலை மறந்து பட்டாம் பூச்சியாக பற!................... |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 03:46 PM |