"நிலாத் தூறல் ----- 23" |
![]() ![]() |
"நிலாத் தூறல் ----- 23" |
Jan 13 2006, 05:34 PM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
![]() "நிலாத் தூறல் ----- 23" --------------------------- "நிலாத் தூறல் - 23" இல் மீண்டும் இணைந்துள்ளோம். இங்கே நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். மேலே இணைக்கப்பட்டுள்ள படத்தைப் பார்க்கும் போது உங்கள் எண்ணத்தில் என்ன தோன்றுகின்றதோ அதைக் கற்பனை வானில் பறந்து கவிவரிக்குள் அடக்கி விடுங்கள். கவிதை சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ இருக்கலாம். எத்தனை தடவை வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் கவிதைகளை இங்கே எழுதலாம். அதற்கு வரையறை இங்கே கிடையவே கிடையாது. எங்கே உங்கள் கைவரிசையையும் இங்கே காட்டி விடுங்களேன் பார்க்கலாம். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jan 13 2006, 05:46 PM
Post
#2
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
வாங்கி வந்த வரமோ? கையில் ஒற்றை ரோஜா கண்களில் ஒருவித ஏக்கம் வார்த்தைகள் ஏதும் வராது வாயடைத்து ஒட்டிப் போய் கிடக்கும் உதடுகள்! ஏதேதோ சொல்ல நினைத்தும் சொல்ல முடியாது தவித்துப் போய் நிற்கும் உன்னைப் போல்தான் நானும்... அன்று தொட்டு இன்று வரை ஒரு தடவை அல்ல ஓராயிரம் தடவை வார்த்தைகளைத் தொலைத்து விட்டு வாயடைத்து நின்றேன்! என் தலை தடவி தவிப்புகள் தீர்க்க தாய் மடி கிடைக்கவில்லை! என் சின்ன இதயத்துக்குள் சின்னச் சின்ன ஏக்கங்கள் யாவும் முளை விடாமலேயே முடங்கியே போயின! ம்...! இப்போதும் கூட என் தலை சாய்க்க ஒரு தாய் மடி தேடி தவிக்கும் என் உள்ளம்! ஓ...! இது நான் வாங்கி வந்த வரமோ...? -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jan 13 2006, 06:36 PM
Post
#3
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 4,887 Joined: 3-March 05 From: Norway Member No.: 229 |
QUOTE (சத்த @ Jan 13 2006, 05:46 PM) என் தலை தடவி தவிப்புகள் தீர்க்க தாய் மடி கிடைக்கவில்லை. என் சின்ன இதயத்துக்குள் சின்னச் சின்ன ஏக்கங்கள் யாவும் முளை விடாமலேயே முடங்கியே போயின. ம்.... இப்போதும் கூட என் தலை சாய்க்க ஒரு தாய் மடி தேடி தவிக்கும் என் உள்ளம். ம்................. எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பது இல்லை கவிதையில் ஒரு ஏக்கம் தெரிகிறது ம்.............. தாய் மடி எதுக்கும் ஈடாகாது வாழ்த்துக்கள் சத்தியா உங்கள் நிலாத்தூறல் தொடரட்டும். -------------------- ![]() いいいいいいいいいநேசமுடன் சிந்துいいいいいいいいい |
|
|
|
Jan 13 2006, 06:50 PM
Post
#4
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 11,282 Joined: 25-February 04 Member No.: 61 |
கவிதைக்கு வாழ்த்துக்கள் சத்தியா.
This post has been edited by றெனிநிமல்: Jan 13 2006, 06:51 PM -------------------- பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம். ![]() |
|
|
|
Jan 13 2006, 07:09 PM
Post
#5
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 4,702 Joined: 3-August 05 From: நெடுந் தீவு ( delft) Member No.: 300 |
வாழ்த்துக்கள் சத்தியா நல்ல கவிதை
-------------------- அன்புடன் நண்பன் சிவா.
![]() ![]() ![]() |
|
|
|
Jan 13 2006, 09:57 PM
Post
#6
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 4,103 Joined: 29-December 03 From: Norway Member No.: 24 |
அருமையாக ஏக்கத்தை உங்கள் கவிதையில் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் சத்தியா. என்ன செய்வது?
-------------------- <span style='font-size:8pt;line-height:100%'>
அன்புதான் உலக மகா சக்தி............. என்றும் அன்புடன்..கலை</span> ![]() |
|
|
|
Jan 14 2006, 08:51 AM
Post
#7
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Members Posts: 799 Joined: 14-June 05 Member No.: 260 |
இப்படியும் ஆசை.....
என் தொட்டில் கனவுகளை நிறைவேற்றிய .தாயாக... நீ..... வேண்டும்... என் இதய மஞ்சத்தில்... பூவாக பூக்க...தாயே உன்... அன்பு வேண்டும்........ உன் முலைப்பால் ... உறவு முடிவு.. மட்டும் தொடர.... உன்.. நிழல் வேண்டும்... என் சோலை உனக்காக... தினம் தினம்... பூக்க வேண்டும்... என் சோகத்தின்... உச்சியில்..... ஆறுதலாய் தலை..சாய்க்க உன்...... மடிவேண்டும்... என்.... மரணத்தின் கடைசி வேளையிலும்.... உன்னைப் பார்க்க ஒரு நொடி வேண்டும்.. உன்னோடு உலகம்...... சுற்ற வண்ணச்.... சிறகு......வேண்டும்.... இத்தனையும் இழந்து தவிக்கும்....... எனக்கு.... தாயாக....... யார் வருவார்...? . ... This post has been edited by லொரேனா: Jan 14 2006, 10:38 AM -------------------- ![]() அன்புடன் லொரேனா. |
|
|
|
Jan 14 2006, 10:17 AM
Post
#8
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (லொரே @ Jan 14 2006, 08:51 AM) என் சோகத்தின்... உச்சியில்..... ஆறுதலாய் தலை..சாய்க்க உன்...... மடிவேண்டும்... என்.... மரணத்தின் கடைசி வேளையிலும்.... உன்னைப் பார்க்க ஒரு நொடி வேண்டும்.. இத்தனையும் இழந்து தவிக்கும்....... தவிக்கும் எனக்கு.... தாயாக....... யார் வருவார்...? ஓ!...... இங்கும் தாய்மையின் தவிப்பு தானா? சோதனைகள் வாட்டும் போதும் சோர்ந்து நான் விழும் போதும் சோகங்கள் தீர்த்து வைக்கும் சொற்கமான உன் மடி வேண்டும் தாயே! உங்கள் நல்ல கவிதைக்கு வாழ்த்துக்கள் லொரேனா. -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jan 14 2006, 10:42 AM
Post
#9
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 11,282 Joined: 25-February 04 Member No.: 61 |
வாழ்த்துக்கள் லொரேனா.
-------------------- பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம். ![]() |
|
|
|
Jan 14 2006, 01:07 PM
Post
#10
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 4,103 Joined: 29-December 03 From: Norway Member No.: 24 |
வாழ்த்துக்கள் லொரேனா.
-------------------- <span style='font-size:8pt;line-height:100%'>
அன்புதான் உலக மகா சக்தி............. என்றும் அன்புடன்..கலை</span> ![]() |
|
|
|
Jan 14 2006, 10:08 PM
Post
#11
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 4,702 Joined: 3-August 05 From: நெடுந் தீவு ( delft) Member No.: 300 |
வாழ்த்துக்கள் லொரேனா.
-------------------- அன்புடன் நண்பன் சிவா.
![]() ![]() ![]() |
|
|
|
Jan 15 2006, 07:15 AM
Post
#12
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 19,965 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
இல்லை எனக்கும் தான் அன்னை
உங்கள் கவலை எனக்குமுண்டு நல்ல திறமான கவிதை சத்தியா சந்தோசமாக வாழ்வோம் சத்தியா வாழ்த்துக்கள் சத்தியா. This post has been edited by Thanimathy: Jan 15 2006, 07:20 AM -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Jan 15 2006, 07:24 AM
Post
#13
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 19,965 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
QUOTE (லொரே @ Jan 14 2006, 08:51 AM) என் சோகத்தின்... உச்சியில்..... ஆறுதலாய் தலை..சாய்க்க உன்...... மடிவேண்டும்... என்.... மரணத்தின் கடைசி வேளையிலும்.... உன்னைப் பார்க்க ஒரு நொடி வேண்டும்.. உன்னோடு உலகம்...... சுற்ற வண்ணச்.... சிறகு......வேண்டும்.... இத்தனையும் இழந்து தவிக்கும்....... எனக்கு.... தாயாக....... யார் வருவார்...? . ... [/color] லொரேனா இப்ப தான் உங்கள் கவிதை வாசித்தேன். நீங்களும் நல்ல கவிதைகள் தருபவர். வாழ்த்துக்கள் லொரேனா. -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Jan 15 2006, 04:16 PM
Post
#14
|
|
|
விவேகமானவர் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Members Posts: 99 Joined: 15-January 06 Member No.: 422 |
நல்ல கவிதைகள்
|
|
|
|
Jan 18 2006, 04:01 PM
Post
#15
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
சிவா!.... இன்று பதியப்பட்ட அனைத்துப் பதிவுகளுமே காணாமல் போய் உள்ளன. இதில் நீங்கள் இணைத்திருந்த புதுயுகப் பிரியனின் கவிதையையும் காணவில்லை. ஆகவே அதை மறுபடியும் இணைத்து விடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றேன். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jan 19 2006, 12:03 AM
Post
#16
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 4,702 Joined: 3-August 05 From: நெடுந் தீவு ( delft) Member No.: 300 |
![]() கண்ணில் தெரியுதம்மா ஏக்கம் - உன் கனவில் ஏதோ பெரும் தாக்கம் - இப்போ மண்ணில் உனக்கு இல்லை தூக்கம் - உன் மனதில் எப்போ பூ பூக்கும் மகளே நீ அறியா பருவம் மனதில் அமைதி இல்லா உருவம் கண்ணீர் சிந்திய கண்ணின் புருவம் - இபோ காய்ந்தே இருக்கிறதே முகம் முழுதும் கேசம் கலைந்ததொரு தோற்றமோ - இது தேசம் உனக்குத் தந்த மாற்றமோ - நீ பேசும் மொழி எமக்கு கேட்குமோ - உன் பிரிவுத் துயரை மனம் தாங்குமோ கையில் சுமந்த பூச்செண்டும் - உன் களுத்தில் தொங்கும் நினைவுத் துண்டும் -ஏதோ பேசத்துடிக்கும் உந்தன் சொண்டும் - பெரும் சோகம் உரைக்கிறதே மீண்டும் யார் யார் உனைப்பிரிந்து சென்றாரோ - உனை நடு றோட்டில் கடல் அன்னை கை விட்டாளோ சோர்வாய் இருக்கின்றாய் குழந்தாய் நீ உந்தன் செவ்வாயில் புன்னகை தான் மலராதோ முற்றி பருக்காத நெற்றிப் பரப்பின் மேல் பற்றை போல் சுற்றி இருக்கின்றதே கேசம் அதை பற்றிப் பிடித்து ஒரு கற்றை போல் கட்டுதற்கு வற்றிப் போனதோ உறவின் பாசம் பேசும் மழலை மொழி கொஞ்சம் - கூறு யார் தான் உனக்கு இப்போ தஞ்சம் சோகம் சுமந்ததுந்தன் நெஞ்சம் - இதை காணின் கடல் அலையும் அஞ்சும் மாண்டோர் வருவதில்லை மீண்டும் வேண்டாம் இனியும் இந்த சோகம் - கண்ணே வரட்டும் உனக்குள் புது வேகம் அதுவே நாம் கூறும் உபதேசம் மெல்லத் துடிக்கிறதே உதடு - ஏதோ சொல்லத் துடிக்கிறது எமக்கு கள்ளம் கபடம் இல்லா மனது - உனக்குள் சோகக்கதைகள் நூறூ இருக்கு உன் காதில் இனிய மொழி கேட்கட்டும் - இதை எங்கள் கவிதை உனக்குருவாக்கட்டும் ஊரில் உன் சோகம் தீரட்டும் - இதற்காய் பாரில் பல உதவி சேரட்டும் என்றென்றும் நன்றியுடன் புதுயுகப் பிரியன். This post has been edited by siva: Jan 22 2006, 04:38 PM -------------------- அன்புடன் நண்பன் சிவா.
![]() ![]() ![]() |
|
|
|
Jan 19 2006, 03:54 AM
Post
#17
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 19,965 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
QUOTE (சத்த @ Jan 18 2006, 04:01 PM) சிவா!.... இன்று பதியப்பட்ட அனைத்துப் பதிவுகளுமே காணாமல் போய் உள்ளன. இதில் நீங்கள் இணைத்திருந்த புதுயுகப் பிரியனின் கவிதையையும் காணவில்லை. ஆகவே அதை மறுபடியும் இணைத்து விடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றேன். அந்த கவிதைக்கு நானும், பாராட்டு தெரிவித்து எழுதியிருந்தேன். எப்படி....? இதுநாள் வரை இல்லாத புது குழப்பம்...........? மீண்டும் அதனை இணைத்துவிடுங்கள் சிவா. -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Jan 19 2006, 11:55 AM
Post
#18
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (siva @ Jan 19 2006, 12:03 AM) ![]() சிவா!.... கவிதையை இணைத்து விடுங்கள் என்றால் மீண்டும் படத்தை மாத்திரம் இணைத்து விட்டிருக்கிறீங்களே!... எங்கே கவிதை? -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jan 19 2006, 04:42 PM
Post
#19
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 4,887 Joined: 3-March 05 From: Norway Member No.: 229 |
-------------------- ![]() いいいいいいいいいநேசமுடன் சிந்துいいいいいいいいい |
|
|
|
Jan 19 2006, 04:53 PM
Post
#20
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 11,282 Joined: 25-February 04 Member No.: 61 |
QUOTE சிவா!.... கவிதையை இணைத்து விடுங்கள் என்றால் மீண்டும் படத்தை மாத்திரம் இணைத்து விட்டிருக்கிறீங்களே!... எங்கே கவிதை? பாவம் சிவா. -------------------- பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம். ![]() |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 04:29 PM |