IPB

Welcome Guest ( Log In | Register )

<% ANNOUNCEMENT %>
 
Reply to this topicStart new topic
அம்மா.
sivanes
post Jun 3 2007, 11:21 AM
Post #1


Senior
**********

Group: Senior Members
Posts: 951
Joined: 17-December 03
Member No.: 3



பாலுக்கு அழும் குழந்தை
பசி என்று சொல்வதில்லை.
தாய் உணர்ந்து கொள்கையிலே
பசி மறந்து மகிழ்கிறது.

தன் பசியும் கண்டிடாமல்..
காத்திரமாய் தான் இருந்து
கண் விழித்து பார்த்திடுவார்
பாலகனை வளர்ப்பதற்கு.

பிஞ்சு விரல் தொடுகையிலே
பேருவகை கொண்டிடுவார்.
அம்மா என்றழைக்க..
அகம் மகிழ்ந்து போய்விடுவார்.

பிள்ளைப் பருவமதில்..
பிறர் தூற்ற விடமாட்டார்.
பெருமை சேர்க்கும் பிள்ளையென
பெருமிதமும் கொண்டிடுவார்.

பள்ளிப் பருவத்தில்..
ஆசானாய் அவரிருந்து..
கல்விச் செல்வத்தை
கனிவோடு புகட்டிடுவார்.

வாலிபப் பருவமதில்
வரம்பு மீற விடமாட்டார்.
தண்டிக்க நினைத்தாலும்_ தந்தை
தடுத்திடவே நினைத்திடுவார்.

அன்புப் பால் ஊட்டி..
அணைத்து வளர்த்திடுவார்.
ஆளாக்கி வைப்பதற்கும்
அரும்பாடு பட்டிடுவார்.

தாய்க்குத் தலைமகனாய்
தான் பெற்ற பிள்ளையினை..
ஊர் போற்றும் உத்தமனாய்
உருவாக்கத் துடித்திடுவார்.

ஆழமான அன்பும்
அரவணைக்கும் குணமும்
ஆண்டவன் எமக்களித்த
அருங்கொடைதான் அம்மா.


…சிவனேஸ்…
http://sivanes.wordpress.com/


--------------------
வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும்
நினைவுகள் .....
என்றும் சுகமானவை..


..நட்புடன் சிவனேஸ்..


சிந்தனைப்பூக்கள்.

Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Jun 3 2007, 12:49 PM
Post #2


Senior
**********

Group: Moderators
Posts: 25,089
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



QUOTE (sivanes @ Jun 3 2007, 11:21 AM)

ஆழமான அன்பும்
அரவணைக்கும் குணமும்
ஆண்டவன் எமக்களித்த
அருங்கொடைதான் அம்மா.


ம்ம்... உண்மை உண்மை!
ஆண்டவனை நம் கண்ணால் காணமுடியாது என்பதால்தான்...
அன்னையை அருங்கொடையாய் தந்தானாம் இறைவன்!

அன்னை பற்றி அழகாக கவிவடித்திருக்கின்றீர்கள். thumbs_up.gif

வாழ்த்துக்கள் சிவனேஸ்.
smile.gif


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
சின்னா
post Jun 3 2007, 01:51 PM
Post #3


Senior
**********

Group: Senior Members
Posts: 2,927
Joined: 1-February 07
Member No.: 848



அன்னையின் கவிதையை படிக்கயில் கண்கள் கலங்குகின்றன.....
தொடரட்டும் உங்களுடைய அன்பு கவிதைகள்...

வாழ்த்துக்கள் சிவனேஸ்.....


--------------------
உன்னால் எல்லாம் முடியும். துளித்துளியாய்க் கொட்டித்தானே குடம் நிரம்புகிறது...

அன்புடன் சின்னா.....
Go to the top of the page
 
+Quote Post
Thanimathy
post Jun 3 2007, 02:04 PM
Post #4


Senior
**********

Group: Senior Members
Posts: 19,965
Joined: 3-December 05
From: Vancouver.( CANADA)
Member No.: 396



QUOTE (sivanes @ Jun 3 2007, 11:21 AM)
பிஞ்சு  விரல்    தொடுகையிலே
பேருவகை  கொண்டிடுவார்.
அம்மா    என்றழைக்க..
அகம்  மகிழ்ந்து    போய்விடுவார்.

பிள்ளைப்    பருவமதில்..
பிறர்  தூற்ற  விடமாட்டார்.
பெருமை  சேர்க்கும்  பிள்ளையென
பெருமிதமும்    கொண்டிடுவார்.

பள்ளிப்  பருவத்தில்..
ஆசானாய்  அவரிருந்து..
கல்விச்  செல்வத்தை
கனிவோடு  புகட்டிடுவார்.

வாலிபப்    பருவமதில்
வரம்பு    மீற  விடமாட்டார்.
தண்டிக்க  நினைத்தாலும்_  தந்தை
தடுத்திடவே    நினைத்திடுவார்.

அன்புப்  பால்    ஊட்டி..
அணைத்து    வளர்த்திடுவார்.
ஆளாக்கி    வைப்பதற்கும்
அரும்பாடு    பட்டிடுவார்.

பகல் இரவு கண்விழித்து..
தன் பசி மறந்து பிள்ளை பசி தீர்க்கும்..
ஆருயிர் தெய்வம் அம்மா அம்மா.

நோய் வந்தாலும் பாயில் படித்திடாள்..
சேய் வளர்ப்பில் கண்விழித்து காட்டிடுவாள்.
அம்மா அம்மா.


பாராட்டுக்களும் நன்றியும் சிவனேஸ் . அம்மாவைப்பற்றி அழகான கவிதை. smile.gif

வாழ்த்துக்கள் சிவனேஸ் thumbs_up.gif


--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"

Go to the top of the page
 
+Quote Post
Suganthe
post Jun 3 2007, 04:04 PM
Post #5


Senior
**********

Group: Senior Members
Posts: 4,937
Joined: 5-September 05
From: Markham (Toronto )canada
Member No.: 329



வாழ்த்துக்கள் சிவனேஸ்


--------------------
உன்னையே நீ உணர்
Go to the top of the page
 
+Quote Post
aathithathashan
post Jun 4 2007, 08:27 AM
Post #6


Senior
**********

Group: Senior Members
Posts: 890
Joined: 2-June 05
Member No.: 252



QUOTE (sivanes @ Jun 3 2007, 11:21 AM)
தன் பசியும் கண்டிடாமல்..
காத்திரமாய் தான் இருந்து
கண் விழித்து பார்த்திடுவார்
பாலகனை வளர்ப்பதற்கு.

பிஞ்சு விரல் தொடுகையிலே
பேருவகை கொண்டிடுவார்.
அம்மா என்றழைக்க..
அகம் மகிழ்ந்து போய்விடுவார்.

அன்புப் பால் ஊட்டி..
அணைத்து வளர்த்திடுவார்.
ஆளாக்கி வைப்பதற்கும்
அரும்பாடு பட்டிடுவார்.

ஆழமான அன்பும்
அரவணைக்கும் குணமும்
ஆண்டவன் எமக்களித்த
அருங்கொடைதான் அம்மா.[/color]


ஆதித்ததாஸன்
4-6-2007

புலம் பெயர் வாழ்வினில் அரிது!
பணம் பொருள் தேடலில் தொலைவு!
வலம் வரும் உலகியல் தெரிவு!
கணம் கணம் அறிவியல் புதிது!

தொலைத்துவிட்ட புலங்களில்
நிலைத்துவிட்ட அவலம் இது!
தொலைத்துவிடும் மனங்களில் தாய்மை
நிலைத்துவிட இறைஞ்சுவோம்!

வாழ்த்துக்கள் சிவனேஸ்வரா! thumbs_up.gif thumbs_up.gif thumbs_up.gif
காதல் சோகத்தை விட்டு தாய்மைப்
பாசத்தை அருமையாக வடித்திருக்கிறீர்கள்!
தொடரட்டும் இனிமைக்கவிதைகள்!

அன்புடன்
ஆதித்ததாஸன்


--------------------
அன்புடன்
ஆதித்ததாஸன்
Go to the top of the page
 
+Quote Post
சிந்துகவி
post Aug 6 2007, 09:25 PM
Post #7


Senior
**********

Group: Senior Members
Posts: 5,102
Joined: 11-April 05
Member No.: 242



வாழ்த்துக்கள் சிவனேஸ்.


--------------------
"உலகில், நீ பிறந்த காரணத்தை தெரிந்து கொள்"

அன்புடன்..சிந்துகவி.
Go to the top of the page
 
+Quote Post

Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



RSS Lo-Fi Version Time is now: 9th February 2010 - 04:28 PM