அடுத்த ஜென்மம் என்று ஒன்றிருந்தால்...? |
![]() ![]() |
அடுத்த ஜென்மம் என்று ஒன்றிருந்தால்...? |
Feb 21 2004, 06:34 PM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,086 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
அடுத்த ஜென்மம் என்று ஒன்றிருந்தால்...?
---------------------------------------------------- வாங்கிய பொருட்கள் யாவும் சரியாக வாங்கினேனா?… என மீண்டும் சரிபார்த்துக் கொண்ட சிவா… பொருட்கள் எல்லாவற்றையும் காரில் ஏற்றி விட்டு காரை எடுத்துக் கொண்டு வீடு நோக்கி விரைந்தான். நாளைய பொழுது… ம்… விடிந்தால் முதலாளியின் மகள் ராதாவின் நிச்சயதார்த்தம். அந்த வீடே குதூகலத்தில் மூழ்கிக் கிடந்தது. முதலாளியின் இரண்டு ஆண் பிள்ளைகளும் தங்கை ராதாவின் நிச்சயதார்த்தத்துக்காக வெளியூரிலிருந்து வந்திருந்தார்கள். பெண் பிள்ளை இல்லையென்று பல வருடங்கள் தவமாய்த் தவமிருந்து… அதன் பின் பிறந்தவளே ராதா. ம்… அந்த வீட்டு குலவிளக்கான… அழகும், அறிவுமுடைய ராதாவின் நிச்சயதார்த்தம் என்றால் சும்மாவா என்ன…? ம்… ஒரே கொண்டாட்டம்தான். அவர்கள் வீட்டில் மட்டுமா கொண்டாட்டம்? இல்லை இல்லை. அந்த ஊருக்கே கொண்டாட்டம்தான். முதலாளி ராமுவின் பெயர் சொன்னாலே அந்த ஊரில் அவ்வளவு மரியாதை. எல்லோருக்கும் இல்லை என்று சொல்லாது உதவி செய்யும் குணமும், தாராள மனமும் படைத்தவர் ராதாவின் அப்பா ராமு. அதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லோரும் கூட அளவிலா ஆனந்தத்தில் மூழ்கிக் கிடந்தார்கள். சிவா… முதலாளி ராமுவின் வீட்டில் நான்கு வருடங்களாக கார் டிறைவராக வேலை செய்கிறான். தந்தையை இழந்த இவன் தாயின் அரவணைப்பில் மட்டும் வளர்ந்தவன். நாளாந்தம் கூலி வேலை செய்து கிடைக்கும் அந்தப் பணத்தில்தான் அன்றாடம் தன் மகனின் வயிற்றையும், தன் வயிற்றையும் கழுவி வந்தாள் அவனின் தாய். வறுமை துரத்தி விரட்ட… அவனின் தாய் நோய்வாய்ப்படவும்… படிப்பில் திறமையிருந்தும் படிப்பைத் தொடர முடியாமல் வேலை தேடி அலைந்த போது முதலாளி ராமுவின் இரக்க குணத்தால் அவர் வீட்டில் கார் டிறைவர் ஆனான். வேலைக்குச் சேர்ந்து இரண்டு வருடங்களில் அவனின் தாயும் இறந்து விட… யாருமற்று தவித்த அவனுக்கு ஆறுதல் கூறி… தன் பிள்ளை போல்… சிவாவின் மேலும் அன்பு காட்டி அடைக்கலம் கொடுத்தவர்தான் முதலாளி ராமு. சிவா… மனம் குழம்பிய நிலையில் வேகமாக காரை ஓட்டினான். அவன் மனம் அமைதியின்றி அழுது புலம்பிக் கொண்டிருந்தது. “இன்று காலை ராதா கேட்ட வாக்கிற்கு முடிவு எடுத்தே ஆக வேண்டும். என்ன முடிவை எடுப்பது?”… என்று தெரியாமல் அவனின் மனம் போராட்டத்தில் தவித்தது. “சிவா… நான் உங்கள மூண்டு வருசமா காதலிக்கிறன். உங்க பின்னால குட்டி போட்ட நாய் போலச் சுத்திச் சுத்தி வந்து… நான் எத்தின தரம் என் வெக்கத்தை எல்லாம் விட்டு என் காதலைச் சொன்ன போதெல்லாம்… நீங்க பதிலே சொல்லாம என்னை பேசிப் போட்டு போவீங்கள். இண்டைக்கு கடைசியா கேக்கிறன்… நாளைக்கு எனக்கு நிச்சயதார்த்தம். உங்களையே நினைச்சு… உங்கள மட்டுமே என் நெஞ்சில சுமந்து… இதனை வருசமா என் நெஞ்சில வளர்த்த காதலை என்னால தூக்கி எறிந்து போட்டு… உங்கள மறந்து இன்னொருவருடன் எப்பிடி வாழ முடியும் சிவா?”…. “சிவா!… என்னைக் காதலிக்கிறன் எண்டு ஒரு வார்த்தை சொல்ல மாட்டீங்களா?… எங்கட காதலை வீட்டில சொல்லி… அவர்கள் ஏற்றுக் கொண்டால் வாழுவம். இல்லாட்டி சாவிலாவது ஒன்று சேருவம்”… இதற்காவது பதில் சொல்லுங்க சிவா… என்று விம்மலுடன் தன் வேதனையைக் கொட்டித் தீர்த்தாள் ராதா. “ராதா!… உனக்கும் எனக்கும் என்ன பொருத்தம் இருக்கு? உன்ர அழகென்ன? உன்ர வசதி என்ன? இதற்கு எப்படி பெரியவங்கள் சம்மதம் சொல்வார்கள்?… கொஞ்சமாவது யோசிச்சியா?… ஆரம்பத்தில இருந்து அடிச்சடிச்சு எத்தனை தரம் சொல்லியும் நீ கேட்டியா?”…. என்றான் சிவா. “சிவா!… உங்க மனசில நானில்லை… நீங்க என்னைக் காதலிக்கேல்லை… எண்டு என்ர தலையில அடிச்சு சத்தியம் பண்ணுங்க பாப்பம்… நீங்க இல்லை எண்டு சொல்லுங்கோ நான் உங்கள விட்டு விலகிறன்.”… என்று ராதா கேட்க… பதில் ஏதும் சொல்ல முடியாது மரத்துப் போய் நின்றான் சிவா. “பின்னேரத்துக்குள்ள நீங்கள் நல்ல முடிவா எனக்கு சொல்ல வேணும். உங்கட முடிவுக்காக நான் காத்திப்ருப்பன்.”… என்று கூறிவிட்டு அழுதபடியே ஓடிச் சென்றாள் ராதா. ஆம்!… சிவாவிற்கும் ராதாமேல் காதல் இல்லாம லில்லை. இருந்த போதும் அவனின் நிலமைகள் யாவும், உள்ளத்தில் ஊற்றெடுத்திருந்த காதலை வெளிக்காட்ட விடாமல் தடுத்தன. தினசரி ராதாவை பாடசாலை, ரியூசன் என ஏற்றிச் செல்லும் போதெல்லாம் ராதாவின் நடவடிக்கையில் காதலை உணர்ந்த போதும், எதுவுமே புரியாதது போல் நடித்துக் கொள்வான். சிவாவிற்கு அழகும், அறிவும் இருந்தாலும் ராதாவை காதலிக்கும் அளவிற்கு தனக்கு என்ன தகுதி இருக்கிறது?… என தன்னைத் தானே கேட்டு மனதைக் கட்டுப்படுத்திக் கொள்வான். கார் வீட்டை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. சிவா தன் கடந்த காலத்தையெல்லாம் படிப்படியாக சிந்தித்தான். இறுதியில் அவன் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்தான். “நான் வேலை தேடி அலைந்த போது… எனக்கு வேலை தந்து… என் அம்மா இறந்த பின் என்னை தன் பிள்ளை போல் பார்க்கும் முதலாளிக்கு நான் துரோகம் செய்யலாமா? … அவரின் மானம், மரியாதை எல்லாவற்றையும் நான் குலைக்கலாமா?… அவர் போட்ட சாப்பாட்டின் நன்றியை மறக்கலாமா?… கூடாது… கூடாது”…. என்ற முடிவுக்கு வந்தவனாய்… “ராதா!… என்ன மன்னிச்சுக் கொள்ளம்மா. அடுத்த ஜென்மம் என்று ஒன்றிருந்தால்… அந்த ஜென்மத் திலயாவது நாங்கள் ஒன்று சேர்வோம்.”… என்று மனதிற்குள் தீர்க்கமான முடிவுக்கு வந்த சிவா, வீட்டிற்கு திரும்பும் சந்தி வந்ததை உணர்ந்தவனாய்… சடாரென விரைவாக வந்த அந்த வேகத்துடனேயே காரை திருப்பிய போது…. எதிரே வேகமாய் வந்த லொறியைக் கூட கவனிக்காது ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவனும்… மிக அருகாமையில் நெருங்கியதுமே அதைக் கவனித்தான். ஆனால்…. வந்த வேகத்தை கட்டுப்படுத்த முயலுமுன்னேரே அவனின் கார்… அந்த லொறியுடன் பலமாக மோதியது. “முதலாளி”… என்று கதறியபடி அவன் உயிர் அந்த இடத்திலேயே பிரிந்தது. -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Feb 21 2004, 07:00 PM
Post
#2
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Members Posts: 377 Joined: 12-January 04 Member No.: 39 |
விசுவாசமுள்ள தொழிலாளி,
காதலிக்கும் பணக்காரப்பெண்.. கதையில் வராத முதலாளி... அடுத்த ஜென்மம் நோக்கிப் பயணமாகும் அமரக் காதல்... பலமுறை வாசித்தேன், உலகத்தை நேசிக்கும் உண்மையான இலக்கியம் உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன். வாழ்த்துக்கள்! நிறைய எழுதுங்கள், நிறையப் படியுங்கள்... தீட்டத் தீட்டத் தான் கத்தி கூர்மையாகும். " புகழ்ச்சி கண்டனத்தை விட ஆபத்தானது" எமர்ஸன். உங்கள் ஆர்வம் மிகப் பராட்டுக்குரியது. -------------------- "அனுபவஞானம் பிரம்மம்"
"pirakgnanam birammam" |
|
|
|
Feb 21 2004, 08:52 PM
Post
#3
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 647 Joined: 19-December 03 Member No.: 14 |
நம்பிக்கையின் இரு கோடுகளுக்குள் ஒரு ஊர்தியின் ஊர்வலம் !
காதலுக்கும் விசுவாசத்திற்கும் இடையில் மீண்டுமொரு யுத்தம் ! வென்றது விசுவாசம் நின்றதோ அவன் சுவாசம் ..ஒரு விசுவாசத்தின் வெற்றியில் இன்னொரு விசுவாசத்தின் தோல்வி, அருமையான கதையோட்டம். வாழ்த்துக்கள். ஷ்..பட்சி வந்திடுச்சு..பட்சி வந்திடுச்சு..ஷ் -------------------- உலகெங்கும் தேடுகிறேன்..மனிதமதைக் காணலையே..,
வானமே எல்லை..........! |
|
|
|
Feb 22 2004, 10:34 AM
Post
#4
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 470 Joined: 18-December 03 Member No.: 6 |
கதை மிகவும் நன்றாக அமைந்திருக்கிறது.நன்றி.வாழ்த்துக்கள்.
|
|
|
|
Feb 26 2004, 11:05 AM
Post
#5
|
|
![]() நிர்வாகம் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Support Posts: 4,369 Joined: 18-December 03 From: Scotland Member No.: 7 |
நம்பிக்கைக்குத் துரோகம் செய்வதைவிட ஒரு பாவம் வேறு இருக்க முடியாது,அந்த நம்பிக்கைக்காக உயிர் திறப்பதும் ஒருவகைத் தியாகமே.
வாழ்த்துக்கள் சத்தியா,தொடரட்டும் உங்கள் பணி. -------------------- |
|
|
|
Feb 26 2004, 12:31 PM
Post
#6
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 951 Joined: 17-December 03 Member No.: 3 |
சத்தியா நிறைய எழுதுங்கள். அடுத்த யென்மத்திலாவது சிவாவும் ராதாவும் ஒன்று சேரட்டும்.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள.
-------------------- வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும் நினைவுகள் ..... என்றும் சுகமானவை.. ..நட்புடன் சிவனேஸ்.. சிந்தனைப்பூக்கள். |
|
|
|
Mar 3 2004, 01:33 AM
Post
#7
|
|
|
Senior Member ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 718 Joined: 18-December 03 Member No.: 8 |
பாராட்டுக்கள் சத்தியா! அருமையாக எழுதுகிறீர்கள்.
இனியொரு கதை முயற்சிக்கும்போது நீங்கள் வாழும் நாட்டு சூழலை பின்புலமாக வைத்து எழுத முயற்சியுங்கள். இன்னும் நிறைய தரமாக எழுத வரும் என்று நினைக்கிறேன். This post has been edited by சத்தியா: Mar 30 2007, 11:50 AM |
|
|
|
Jun 17 2004, 09:38 AM
Post
#8
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 4,103 Joined: 29-December 03 From: Norway Member No.: 24 |
பாராட்டுக்கள் சத்யா. நன்றாக கதை எழுதுகிறீர்கள். ஏன் புதிய கதைகள் எதுவும் எழுதவில்லை?
தன் மனதில் காதல் இருந்தும், நன்றிகடனுக்காக அதை துறக்க தயாராய் இருந்த ராமுவின் காதலுக்கு 'கண்' இருந்திருக்கிறது என்று நினைக்கிறேன். சோகமான முடிவாய் இருந்தாலும், ராமுவிடம் இருந்து ராதா, அவர்கள் இருவரும் இந்த ஜென்மத்தில் இணைய முடியாது என்ற வார்த்தையை கேட்க முடியாதபடி தடுத்து விட்டீர்கள். இதுவும் ஒரு வகையில் நிம்மதியோ? -------------------- <span style='font-size:8pt;line-height:100%'>
அன்புதான் உலக மகா சக்தி............. என்றும் அன்புடன்..கலை</span> ![]() |
|
|
|
Jun 29 2004, 07:33 AM
Post
#9
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 11,282 Joined: 25-February 04 Member No.: 61 |
ம்..நன்றாகத்தான் இருக்கின்றது.
காதலனை கொன்று..... காதலை பிரித்த சத்தியாவை.. காதலர்கள் மன்னிக்கவும். வாழ்த்துக்கள் சத்தியா. பி. கு அப்படியும் காதலர்கள் மன்னிக்காவிடில் "மறு ஜென்மம்" என்று ஓர் கதை ஒன்றை எழுதி அவர்களை சேர்த்து விடுங்கள்! This post has been edited by சத்தியா: Mar 30 2007, 11:50 AM -------------------- பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம். ![]() |
|
|
|
Aug 7 2004, 02:52 PM
Post
#10
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,086 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
விமர்சனங்களைத் தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
-------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Aug 9 2004, 04:27 PM
Post
#11
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,781 Joined: 10-March 04 Member No.: 72 |
நன்றி சத்தியா.
நன்றாக இருக்கின்றது. QUOTE பி. கு அப்படியும் காதலர்கள் மன்னிக்காவிடில் "மறு ஜென்மம்" என்று ஓர் கதை ஒன்றை எழுதி அவர்களை சேர்த்து விடுங்கள்!
This post has been edited by சத்தியா: Mar 30 2007, 11:51 AM -------------------- ![]() ................உன் கவலை மறந்து பட்டாம் பூச்சியாக பற!................... |
|
|
|
Aug 26 2004, 12:58 PM
Post
#12
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,457 Joined: 14-July 04 Member No.: 137 |
நன்றி சத்தியா
-------------------- அன்பு வைப்பவரின் அன்பை நேசி ; துன்பம் வரும் போதும் இன்பமாய் தெரியும்
|
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 03:46 PM |