சார்ந்து விடு |
![]() ![]() |
சார்ந்து விடு |
Jan 31 2008, 03:23 AM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,557 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
சார்ந்து விடு
ஆணைகொளக் காத்திருக்கும் அன்பனிவன் மடல் ஆதரவில் லாததனால் அழுதவிழிக் கடல் காணுகிற நாள்எதுவோ காலம்சொலும் பதில் காலம்பதில் தரும்வரையும் கவலைமிக இதில் ஏன்றவரை பார்த்திருந்தும் என்னவளின் உரை இங்குவர வில்லைஇது எத்தனைநாள் வரை நோன்றவரை நோற்றிருந்த நோன்புகளும் சதம் நூற்றுக்குமேல் ஆயினும்அந் நூறும்பல விதம் பித்தன்என ஏளனமாய் பேசுகிற சகம் பேச்சில்இரு பொருள்தொனிக்க பீச்சுகிற ரகம் கத்தியினை கண்களிலே காட்டுகிற சகம் கத்தலுக்கு மத்தியிலே கரைகிறது யுகம் எத்தனையோ பௌர்ணமிகள் ஏகியது மெல இவ்வருடம் அவ்வருடம் என்றுயுகம் செல சித்திரவ தைப்படுதல் சித்த உள மிசை செய்வதறி யாதுதவித் தேன்உயிரை இசை வரும்வரையும் வடிக்கிறது வட்டவிழிக் குளம் வந்துஅமர கவனமுடன் வடிவமைத்த தளம் கரும்பனைய எனதுமனம் களிப்பதுநின் பெயர் காதவழி தொடருவது காரிகையின் உயிர் உச்சரிக்கும் மந்திரத்தில் உனதுபெயர் வரும் உழலுகிற தீவினைகன் ஒருநொடியில் அறும் பிச்சிமலர் பெய்தகுழல் பெரியமணம் தரும் பெரியமண வாசனையில் பேதைமனம் விழும் பேதைஇவன் வாய்ப்பரப்பில் பீடுநடை இடும் பீடைஎனும் பேய்கள்வ பிய்ந்துபட அழும் சாதல்எனும் சங்கதிகள் சம்பவிக்கும் முனம் சார்ந்துவிடு சார்ந்துவிடு தமியனது உளம் யாருமிலை தனிமையிலே அலைகிறது தினம் ஆண்டுகொள அம்பிகைவா அமர்கிறது மனம் ஊருமிலை உறவுகளும் ஒட்டவிலை நமை உன்னுருவைப் பூரணமாய் உறிஞ்சுதடி இமை காட்டவிலை அருள்விளக்கம் காரணமேன் உரை கையில்ஒரு கோல்எடுத்தால் காகிதத்தில் உறை பாட்டளவில் பரிணமித்து பாவனையில் நிறை பாவ வினை யாஉடனே பறந்துவிடும் குறை உயிர்துடிக்கும் வாசகங்கள் ஒலிக்கிறதா செவி ஒன்றுமிலை என்னில்எமை உன்இணையில் அவி மயிர்சிர்க்கும் அவ்வளவு மகத்துவங்கள் புரி மங்கைநினை வாய் எரிக மனவிளக்குத் திரி ![]() - m a g u d a d h e e b a n This post has been edited by magudadheeban: Feb 1 2008, 03:56 PM -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Feb 1 2008, 03:09 AM
Post
#2
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 4,937 Joined: 5-September 05 From: Markham (Toronto )canada Member No.: 329 |
அம்பிகையின் புகழ்பாடிய கவிதை நன்று
வாழ்த்துக்கள் மகுடதீபன் -------------------- உன்னையே நீ உணர்
|
|
|
|
Feb 1 2008, 04:06 PM
Post
#3
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,557 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
அம்பிகையின் புகழ்பாடி
இரசித்த சுகந்தீமா பாராட்டுக்கு நன்றிகள் ! -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Feb 1 2008, 05:04 PM
Post
#4
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Advancing Members Posts: 340 Joined: 27-November 07 Member No.: 2,614 |
வாழ்த்துக்கள் மகுடதீபன்
|
|
|
|
Feb 1 2008, 11:31 PM
Post
#5
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 890 Joined: 2-June 05 Member No.: 252 |
QUOTE (magudadheeban @ Jan 31 2008, 03:23 AM) சார்ந்து விடு ஆணைகொளக் காத்திருக்கும் அன்பனிவன் மடல் ஆதரவில் லாததனால் அழுதவிழிக் கடல் காணுகிற நாள்எதுவோ காலம்சொலும் பதில் காலம்பதில் தரும்வரையும் கவலைமிக இதில் பித்தன்என ஏளனமாய் பேசுகிற சகம் பேச்சில்இரு பொருள்தொனிக்க பீச்சுகிற ரகம் கத்தியினை கண்களிலே காட்டுகிற சகம் கத்தலுக்கு மத்தியிலே கரைகிறது யுகம் யாருமிலை தனிமையிலே அலைகிறது தினம் ஆண்டுகொள அம்பிகைவா அமர்கிறது மனம் ஊருமிலை உறவுகளும் ஒட்டவிலை நமை உன்னுருவைப் பூரணமாய் உறிஞ்சுதடி இமை ஆதித்ததாஸன் 1-2-2008 மடலுக்குள் மடல்விரிக்கும்!விழி மடலுக்குள் படம்பிடிக்கும்!மொழிக் கடலுக்குள் முத்தெடுக்கும்!கவிக் கடலுக்குள் முத்திருக்கும் மகுடம்! வாழ்த்துக்கள் ஐயா! தொடரட்டும் கவி முத்துக்கள்! அன்புடன் ஆதித்ததாஸன் -------------------- அன்புடன்
ஆதித்ததாஸன் |
|
|
|
Feb 1 2008, 11:31 PM
Post
#6
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,557 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
தம்ஸ் அப்
வாழ்த்துக்கு நன்றி ஷைந்தவி, உங்கள் கவிதைகள்தான் வாமன அவதாரம் மாதிரி மூன்றடிக்குள் அளந்து முடிக்கிறது, வாழ்த்துக்களுமா ? - m a g u d a d h e e b a n -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Feb 2 2008, 06:46 AM
Post
#7
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 284 Joined: 12-January 08 From: Malaysia Member No.: 2,674 |
சார்ந்துதான் இருக்கிறேன் என்னவனின் கிருபையினால்
கவிதை பக்திப் பரவசத்தை தருகின்றது. நன்றி... -------------------- ![]() பிரபஞ்சத்தின் விந்தைகளை மனிதா நீ அனுபவித்திடு! என் கவிப்பூ - பனித்துளிகள் என் சிந்தனைப் பூ - நவன் உலகம் |
|
|
|
Feb 2 2008, 09:34 AM
Post
#8
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 2,901 Joined: 19-September 06 From: Trichy, Tamil Nadu, India. Member No.: 652 |
அம்பிகையின் அருள்
அன்பன் இவனை ஆட்கொண்டு அருளட்டும் ஆசிகள் வாழ்த்துக்கள் நண்பர் மகுடதீபன். -------------------- |
|
|
|
Feb 2 2008, 01:08 PM
Post
#9
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,557 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
கட்டிமணிச் சொற்களினால் வாழ்த்துச் சொன்ன
கவிமணியே ஆதித்த தாசா மற்றும் நட்பார்க்கும் கலைஅரசே புதிதாய் சேர்ந்த நவன் என்ற நனி நட்பே என் வணக்க்ம ! அனைவரின் வாழ்த்துக்கும் நன்றிகள். . . - m a g u d a d h e e b a n -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 06:55 AM |