பூமியில் இடத்தைக் காட்டும் கருவி GPS |
![]() ![]() |
பூமியில் இடத்தைக் காட்டும் கருவி GPS |
Jan 28 2009, 11:19 AM
Post
#1
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Advancing Members Posts: 152 Joined: 25-January 09 From: Dubai UAE Member No.: 2,978 |
இந்த நவீன விஞ்ஞான உலகில் ஒரு அசைக்க முடியாத இடத்தை பெற்றிருப்பது GPS(Global Positing System). அதாவது பூமியில் இடத்தைக் காட்டும் கருவி.வானத்தில் பறக்கும் விமானம் முதல் கையில் உள்ள தொலைபேசி வரை இதன் பங்கு உண்டு.
இதனோடு தொடர்புடையவன் என்ற முறையில் GPSஐ பற்றி நான் படித்து அறிந்த விபரங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். ![]() Global Positioning System (GPS) பூமியில் இடத்தைக் காட்டும் கருவி Global Positioning System (GPS) ஆனது செயற்கைக்கோள் மூலமான வழிகாட்டல் முறையாகும். அதாவது உலகின் எந்த பகுதியில் இருந்துகொன்டும் நாம் இருக்கும் இடத்தை துள்ளியமாக தெரிந்து கொள்ள முடியும். GPSஎன்பது NAVSTAR (NAVigation Satellite Timing And Ranging)என்பதின் சுருங்கிய வடிவம் என்று சொல்லலாம். இது 24 முதல் 31 செயற்கைகோள்களின் அலைகளை ( Carrier Waves) கொண்டு இயங்கும் ஒரு கருவி ஆகும். ஒவ்வொரு செயற்கை கோளும் ஆறு நீள்வட்டப் பாதையில் (Orbital Plane) பிரிக்கப்பட்டு பூமியை சுற்றுகின்றன. ஒவ்வொரு செயற்கை கோளும் பூமியின் தரை மட்டதிலிருந்து 20200கிமீ Altitude ல் மணிக்கு 11500கிமீ வேகத்தில் பூமியை சுற்றிவருகின்றன. அதாவது ஒவ்வொரு செயற்கை கோளும் பூமியிலிருந்து குறைந்த தூரமாக 20200கிமீ ஐ 12 மணிக்கொருமுறை தொட்டு செல்லும். ![]() இதன் சோதனை முயற்சிகள் 1960 ல் அமெரிக்க பாதுகாப்பு துறையினரால் தொடங்கப்பட்டது. 1970 ம் ஆண்டு தரை சார்ந்த முறையாக (The ground-based Omega Navigation System)உருவாக்கப்பட்டது. முதலில் பாதுகாப்பு துறைக்கு மட்டும் பயன்படுத்தப்பட்ட இது 1983 ம் ஆண்டு முதல் பொதுத்துறை யும் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. 1978ம் ஆண்டு GPS ற்கான முதல் செயற்கை கோள் அனுப்பப்பட்டது. 1995 ம் ஆண்டு ஜூலை 17ம் நாள் 24 செயற்கை கோள்களுடன் GPS System முழுத்திறனுடன் உபயோகத்திற்கு வந்தது. இதன் பயன்பாடுகளும் , வகைகளும் தொடர்ந்து உங்களை வந்து சேறும்..... (நன்றி : Wikipedia, Introduction To Gps, ShortGuide to Gps, Introduction To NAVSTAR GPS) This post has been edited by Raamkumar: Jul 4 2009, 11:05 AM -------------------- ...ராம்குமார்...
![]() ....நிலையற்ற இவ்வுலகில் நிலையானது அன்பு ஒன்றுதான்..... |
|
|
|
Jan 28 2009, 03:04 PM
Post
#2
|
|
![]() நிர்வாகம் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Support Posts: 4,369 Joined: 18-December 03 From: Scotland Member No.: 7 |
வாழ்த்துக்கள் ராம்குமார், நல்ல தகவல், இன்னும் விளக்கமாக ஆராய முடிந்தால் ஆய்வொன்றை மேற்கொள்ளுங்கள். இவற்றின் பயன்பாடு, அபிவிருத்தி மற்றும் அடிப்படை என்று சில உப தலைப்புகளில் எழுத ஆரம்பித்தீர்கள் என்றால் இதையே ஒரு முழுமையான ஆய்வாக மாற்றிக்கொள்ளலாம்.
நேரம் ஒத்துழைத்தால் தொடர்ந்து எழுதுங்கள். -------------------- |
|
|
|
Jan 28 2009, 03:37 PM
Post
#3
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 8,831 Joined: 26-January 08 From: Bangalore Member No.: 2,683 |
நல்ல தகவல்கள்!
நல்ல முயற்சி தான்! வாழ்த்துக்கள் ராம்குமார்! -------------------- |
|
|
|
Jan 28 2009, 04:06 PM
Post
#4
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 19,965 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
NAVSTAR GPS ஆய்வுத் தகவல்கள் மிகவும் அருமையும் பயனுள்ள தகவல்களும்..
நன்றி..... -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Jan 29 2009, 03:27 AM
Post
#5
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Advancing Members Posts: 152 Joined: 25-January 09 From: Dubai UAE Member No.: 2,978 |
வாழ்த்துக்கள் ராம்குமார், நல்ல தகவல், இன்னும் விளக்கமாக ஆராய முடிந்தால் ஆய்வொன்றை மேற்கொள்ளுங்கள். இவற்றின் பயன்பாடு, அபிவிருத்தி மற்றும் அடிப்படை என்று சில உப தலைப்புகளில் எழுத ஆரம்பித்தீர்கள் என்றால் இதையே ஒரு முழுமையான ஆய்வாக மாற்றிக்கொள்ளலாம். நேரம் ஒத்துழைத்தால் தொடர்ந்து எழுதுங்கள். மிக்க நன்றி பவன்..... நிச்சயமாக தொடர்ந்து எழுதுவேன்.... உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும், பாராட்டுகளும் எனக்கு மேலும் உற்சாகத்தை அளிக்கின்றன. -------------------- ...ராம்குமார்...
![]() ....நிலையற்ற இவ்வுலகில் நிலையானது அன்பு ஒன்றுதான்..... |
|
|
|
Jan 29 2009, 03:28 AM
Post
#6
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Advancing Members Posts: 152 Joined: 25-January 09 From: Dubai UAE Member No.: 2,978 |
நல்ல தகவல்கள்! நல்ல முயற்சி தான்! வாழ்த்துக்கள் ராம்குமார்! மிக்க நன்றி rathiDevi .... -------------------- ...ராம்குமார்...
![]() ....நிலையற்ற இவ்வுலகில் நிலையானது அன்பு ஒன்றுதான்..... |
|
|
|
Jan 29 2009, 03:31 AM
Post
#7
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Advancing Members Posts: 152 Joined: 25-January 09 From: Dubai UAE Member No.: 2,978 |
NAVSTAR GPS ஆய்வுத் தகவல்கள் மிகவும் அருமையும் பயனுள்ள தகவல்களும்.. நன்றி..... மிக்க நன்றி Thanimathy..... நிச்சயமாக தொடர்ந்து எழுதுவேன்.... -------------------- ...ராம்குமார்...
![]() ....நிலையற்ற இவ்வுலகில் நிலையானது அன்பு ஒன்றுதான்..... |
|
|
|
Jan 29 2009, 11:25 AM
Post
#8
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Advancing Members Posts: 152 Joined: 25-January 09 From: Dubai UAE Member No.: 2,978 |
பூமியில் இடத்தைக் காட்டும் கருவியின் மூன்று பகுதிகள் (Three Segments of the GPS)
![]() 1.வான்வெளி பகுதி (Space segment) 2.கட்டுப்பாட்டு பகுதி (Control Segment) 3.உபயோகிப்போர் பகுதி (User Segment) 1.வான்வெளி பகுதி (Space Segment ): ![]() இது முந்தைய பதிப்பில் கூறியது போல 24 முதல் 31 செயற்கைக்கோள்களை உள்ளடக்கியதாகும். தொடக்கத்தில் 24 செயற்கைக்கோள்களை கொண்ட அமைப்பு (Constellation)6x4ஆக பிரிக்கப்பட்டு ஆறு நீள்வட்டப் பாதையில் (Orbital Plane) பூமியை சுற்றிவந்தன.பின்னர் அந்த நீள்வட்டப் பாதையில் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இவை அனுப்பும் சமிக்ஞைகள் carrier Frequencies, Digital Codes மற்றும் Navigation Message ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். ஒவ்வொரு செயற்கை கோளும் பூமியின் தரை மட்டதிலிருந்து 20200கிமீ Altitude ல் மணிக்கு 11500கிமீ வேகத்தில் Equatar லிருந்து 55 Degree சரிவில் பூமியை சுற்றிவருகின்றன. 2.கட்டுப்பாட்டு பகுதி (Control Segment) ![]() இந்த கட்டுப்பாட்டு பகுதி ஆனது ஒரு முதன்மை கட்டுப்பாட்டு நிலையம் (Master Control Station) 5 கண்கணிப்பு நிலையம்( (Monitor Station) மற்றும் 4 நில வானலை வாங்கி(Ground Antenna) களையும் உள்ளடக்கிடயது . முதன்மை கட்டுப்பாட்டு நிலையம்(Master Control Station) அமெரிக்காவில் காலராடொ ஸ்பிரிங்ஸ்(Colorado)வில் உள்ளது. 5 கண்கணிப்பு நிலையங்கள் முறையே Colorado springs, Hawaii, Kwajalein,Diego Garcia, Ascension Island ல் உள்ளது. நில வானலை வாங்கி(Ground Antenna) கள் முறையே Kwajalein,Diego Garcia, Ascension Island மற்றும் Cape Canaveral ல் உள்ளன. செயற்கைக்கோள்களின் இருப்பிடங்களை கண்டறிதல், அவற்றின் பணிகளை கண்காணித்தல், செயற்கைக்கோள்களிடமிருந்து சமிக்ஞை களை பெறுதல் போன்றவை இந்த கட்டுப்பாட்டு பகுதியின் பணிகளாகும். 3.உபயோகிப்போர் பகுதி (User Segment) ![]() இது பாதுகாப்பு துறை மற்றும் அதனை சாராமல் GPS உபயோகிப்பவர்களை உள்ளடக்கியதாகும். இவர்கள் தங்களிடமுள்ள பெறும் கருவி (Reciever) மூலம் GPS சமிக்ஞை களை பெறலாம். இதன் பல்வேறு வகையிலான பயன்பாடுகள் தொடர்ந்து உங்களை வந்து சேறும்..... (நன்றி : Wikipedia, Introduction To Gps-Ahmed El-Rabbany, Introduction To NAVSTAR GPS-Charlie Leonard) This post has been edited by Raamkumar: Jan 31 2009, 06:40 AM -------------------- ...ராம்குமார்...
![]() ....நிலையற்ற இவ்வுலகில் நிலையானது அன்பு ஒன்றுதான்..... |
|
|
|
Jan 29 2009, 12:38 PM
Post
#9
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,080 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
ம்ம்... நன்றிகளும் வாழ்த்துக்களும் ராம்குமார்... தொடர்ந்து எழுதுங்கள். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jan 29 2009, 01:43 PM
Post
#10
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 8,831 Joined: 26-January 08 From: Bangalore Member No.: 2,683 |
படத்துடன் கூடிய விளக்கங்கள் மிகவும் அருமை!
வாழ்த்துக்களும் நன்றிகளும் ராம்குமார்! -------------------- |
|
|
|
Jan 29 2009, 08:37 PM
Post
#11
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 19,965 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
நன்றி ராம்குமார்...
-------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Jan 30 2009, 04:34 PM
Post
#12
|
|
![]() நிர்வாகம் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Support Posts: 4,369 Joined: 18-December 03 From: Scotland Member No.: 7 |
வாழ்த்துக்கள் ராம்குமார், தொடர்ந்து எழுதுங்கள், ஒரு சிறிய விடயத்தை உங்கள் அவதானத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.
சரகம் என்பது நல்லதொரு வார்த்தைப் பிரயோகம், ஒரு நாட்டின் பகுதி அல்லது ஆங்கிலத்தில் Region or District of a Country என்று அகராதியில் குறிப்பிடப்படுகிறது. Segmentation என்றால் பகுதிகளாகப் பிரித்தல் என்று பொருள் படும். எனவே Segment என்றால் பகுதி அல்லது பிரிவு என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம். எதற்கும் சரகம் என்பதும் பொருத்தமான மாற்றீடா என்பதைப் தேடிப்பாருங்கள், பொருத்தமான மொழிபெயர்ப்பாக இருந்தால் விட்டுவிடுவோம், இல்லை என்றால் அவற்றை பகுதி அல்லது பிரிவு என்று மாற்றிவிடுங்கள். -------------------- |
|
|
|
Jan 31 2009, 06:25 AM
Post
#13
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Advancing Members Posts: 152 Joined: 25-January 09 From: Dubai UAE Member No.: 2,978 |
ம்ம்... நன்றிகளும் வாழ்த்துக்களும் ராம்குமார்... தொடர்ந்து எழுதுங்கள். மிக்க நன்றி சத்தியா...... -------------------- ...ராம்குமார்...
![]() ....நிலையற்ற இவ்வுலகில் நிலையானது அன்பு ஒன்றுதான்..... |
|
|
|
Jan 31 2009, 06:26 AM
Post
#14
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Advancing Members Posts: 152 Joined: 25-January 09 From: Dubai UAE Member No.: 2,978 |
படத்துடன் கூடிய விளக்கங்கள் மிகவும் அருமை! வாழ்த்துக்களும் நன்றிகளும் ராம்குமார்! மிக்க நன்றி rathiDevi .... -------------------- ...ராம்குமார்...
![]() ....நிலையற்ற இவ்வுலகில் நிலையானது அன்பு ஒன்றுதான்..... |
|
|
|
Jan 31 2009, 06:36 AM
Post
#15
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Advancing Members Posts: 152 Joined: 25-January 09 From: Dubai UAE Member No.: 2,978 |
வாழ்த்துக்கள் ராம்குமார், தொடர்ந்து எழுதுங்கள், ஒரு சிறிய விடயத்தை உங்கள் அவதானத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். சரகம் என்பது நல்லதொரு வார்த்தைப் பிரயோகம், ஒரு நாட்டின் பகுதி அல்லது ஆங்கிலத்தில் Region or District of a Country என்று அகராதியில் குறிப்பிடப்படுகிறது. Segmentation என்றால் பகுதிகளாகப் பிரித்தல் என்று பொருள் படும். எனவே Segment என்றால் பகுதி அல்லது பிரிவு என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம். எதற்கும் சரகம் என்பதும் பொருத்தமான மாற்றீடா என்பதைப் தேடிப்பாருங்கள், பொருத்தமான மொழிபெயர்ப்பாக இருந்தால் விட்டுவிடுவோம், இல்லை என்றால் அவற்றை பகுதி அல்லது பிரிவு என்று மாற்றிவிடுங்கள். மிக்க நன்றி பவன்....தமிழ் அகராதியில் பொருள் தேடிய பொழுது எதிர்பட்ட வார்த்தைதான் அந்த சரகம். எனக்கும் அதில் ஒரு சந்தேகம் இருந்தது உண்மை தான். நீங்கள் குறிப்பிட்டதுபோல பகுதிகள் என்பது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். மாற்றமும் செய்திருக்கிறேன். -------------------- ...ராம்குமார்...
![]() ....நிலையற்ற இவ்வுலகில் நிலையானது அன்பு ஒன்றுதான்..... |
|
|
|
Jan 31 2009, 06:42 AM
Post
#16
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Advancing Members Posts: 152 Joined: 25-January 09 From: Dubai UAE Member No.: 2,978 |
-------------------- ...ராம்குமார்...
![]() ....நிலையற்ற இவ்வுலகில் நிலையானது அன்பு ஒன்றுதான்..... |
|
|
|
Feb 5 2009, 03:55 AM
Post
#17
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Advancing Members Posts: 152 Joined: 25-January 09 From: Dubai UAE Member No.: 2,978 |
பூமியில் இடத்தைக் காட்டும் கருவி (GPS) ன் பயன்பாடுகள்
Gps ன் பயன்பாடுகளை Location , Navigation , Tracking , Mapping , Timing என்ற பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தலாம். 1. Location - இருப்பிடங்களை அறிந்துகொள்ள ![]() இருப்பிடங்களை அறியத்தருவதுதான் GPSன் முதன்மையான மற்றும் முக்கிய பணியாகும். இதன்மூலம் உலகின் எந்த ஒரு பகுதியின் இருப்பிடத்தகவலையும் (location datas) எந்த ஒரு காலநிலையிலும் துல்லியமாக பெறலாம்.இதில் கீழ்கானும் GPS ன் மூன்று வகைகள் குறிப்பிடத்தக்கன. a).Hand-Held GPS ![]() B. Differential Code-Phase GPS (Dgps) ![]() c).Carrier-Phase GPS ![]() 2.Navigation-ஒரு குறிப்பிட்ட இடதிற்கு செல்ல வானிலும் , நிலத்திலும் நீரிலும் ஒரு குறிப்பிட்ட இடம் எங்கே இருக்கிறது என்று அறிவத்ற்கும் அந்த இடத்தைஅடைவதற்கும் GPS மிகவும் பயன்படுகிறது. 3.Tracking-கண்கானித்தல் மேலை நாடுகளிலும் தற்போது நம் நாட்டிலும் பார்த்த்ருப்பீர்கள். ஒரு விபத்து அல்லது எதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அடுத்த சில நிமிடங்களில் காவல்துறையோ, அவசர மருத்துவ ஊர்தியோ, தீயனைப்பு ஊர்தியோ வந்து சேறும். இதனை Tracking ற்கு உதாரணமாக கூறலாம். அதாவது சம்பவ இடத்திற்கு அருகில் எந்த ஊர்தி உள்ளது என்பதை அறிந்து அதனை உடனடியாக உதவிக்கு அனுப்புதல். 4.Mapping - வரைபடங்கள் உருவாக்கல் நாடு நகரங்களின் பலவகைப்பட்ட வரைபடங்களை துல்லியமாக தயாரிப்பதிலும் GPS பெரும்பங்கு வகிக்கிறது. இதன்மூலம் மலைகள், நதிகள். காடுகள்,சாலைகள், தெருக்கள், விலங்குகள், தனிமங்கள், இயற்கை பேரழிவுகள் உட்பட அனைத்து தகவல்களையும் பெறலாம். 5.Timing - நேரத்தை அறியத்தருதல் GPS உபயோகிப்பவர்களுக்கு துல்லியமான நேரத்தை வழங்குவதும் இதன் முக்கிய பணிகளில் ஒன்றாகும். செயற்கைக்கொளில் உள்ள Atomic Clock மூலம் GPS இப்பணியை செய்கிறது. [Coordinated Universal Time(UTC) ஐ பெறுவதற்கும், International Atomic Time (TAI)ஐ பெறுவதற்கும் தகுந்த Constant உபயோகிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.] (நன்றி : Wikipedia, Introduction To Gps-Ahmed El-Rabbany, Introduction To NAVSTAR GPS-Charlie Leonard, Trimle-Gps வலைத்தளம்,Gisdevelopment வலைத்தளம் ) This post has been edited by Raamkumar: Feb 5 2009, 04:06 AM -------------------- ...ராம்குமார்...
![]() ....நிலையற்ற இவ்வுலகில் நிலையானது அன்பு ஒன்றுதான்..... |
|
|
|
Feb 5 2009, 03:56 AM
Post
#18
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Advancing Members Posts: 152 Joined: 25-January 09 From: Dubai UAE Member No.: 2,978 |
பல துறைகளில் இதன் நேரடி பயன்கள்
பாதுகாப்புத்துறை (Defence) ![]() 1. போர்காலங்களில் எதிர்நாட்டு படைவீரர்கள் மற்றும் படைக்கலகளின் இருப்பிடங்களை அறியத்தருகிறது. 2. தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகனைகள் இலக்கை சரியாக சென்று தாக்க உதவுகிறது. 3. போரி காயமடைந்த வீரர்கள் மற்றும் விபத்திற்குள்ளான விமானங்களின் இருப்பிடங்களை அறியத்தருகிறது. 4.போர்விமானங்களிலும் , டாங்கிகளிலும், கடற்படை கப்பல்களிலும், GPS பெரிதும் பயன்படுகின்றது. (உ.ம்) F-16 fighters, KC-135 aerial tankers, and B-52 bombers (ஆ) அளவையியல் துறை (Land Surveying) ![]() 1. அளவையியல் GPS லிருந்து பெறப்படும் Coordinate ஐ அடிப்படையாகக்கொண்டுதான் செயல்படுகிறது. இதனை GPS Control Point என்பர். Magnatic North, Sun Azimuth System போன்ற முறைகளெல்லாம் கடந்து GPS Reference Points என்பது தற்காலத்தில் முதன்மை வகிக்கிறது.இந்த GPS Reference Points ஐ அடிப்படையாகக்கொண்டு Total Station கள் இயங்குகின்றன. கீழ்கண்ட அளவையியல் பிரிவுகளில் GPS ன் பயன்பாடு மிகவும் இன்றியமையாதது. 1.Building Construction 2.Recconaissance Survey 3.Topographical Survey 4.Marine Survey 5.GIS Survey (இ) போக்குவரத்து (Navigation/Transporting) விமானங்கள், கப்பல்கள் ,காவல்துறை, அவசர மருத்துவ ஊர்தி மற்றும் தீயனைப்பு வண்டிகளில் பயன்பட்டு வந்த GPS தற்காலங்களில் தனியார் வாகங்களிலும் பெருமளவு பொருத்தப்படுகின்றது. இதன் மூலம் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இலக்கை வெகு எளிதில் சென்றடைய முடியும். ![]() (ஈ)GIS மூலம் உருவாக்கப்படும் வரைபடங்களுக்கும், அதற்கான தகவல்களை சேகரிக்கும் GIS Survey யிலும் GPS பயன்படுகிறது. ![]() (உ) தனிமங்களை வெட்டியெடுக்கும் சுரங்கங்களிலும், காடுகளில் உள்ள அரியவகை விலங்குகளை கண்காணிப்பதிலும் இது பயன்படுகிறது. (ஊ) தற்போது கைப்பேசிகளிலும் Navigator என்ற முறையில் GPS பயன்படுகிறது. ![]() (எ) மிகப்பெரிய பாலங்களிலும் , அணைக்கட்டுகளிலும் கூட இதன் பயன்படுகள் உள்ளன. ![]() மேலும் பல புதிய பரிணாமங்களுடன் பல்வேறு துறைகளில் பூமியில் இடத்தைக் காட்டும் கருவி (GPS) வளர்ச்சியடைந்து வருகிறது (நன்றி : Wikipedia, Introduction To Gps-Ahmed El-Rabbany, Introduction To NAVSTAR GPS-Charlie Leonard, Trimle-Gps வலைத்தளம்,Gisdevelopment வலைத்தளம் ) This post has been edited by Raamkumar: Feb 5 2009, 04:27 AM -------------------- ...ராம்குமார்...
![]() ....நிலையற்ற இவ்வுலகில் நிலையானது அன்பு ஒன்றுதான்..... |
|
|
|
Feb 5 2009, 08:20 AM
Post
#19
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 8,831 Joined: 26-January 08 From: Bangalore Member No.: 2,683 |
அனைத்து தகவல்களும் அருமை!
நன்றியும் வாழ்த்துக்களும் ராம்குமார்! -------------------- |
|
|
|
Feb 5 2009, 09:24 AM
Post
#20
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Advancing Members Posts: 152 Joined: 25-January 09 From: Dubai UAE Member No.: 2,978 |
அனைத்து தகவல்களும் அருமை! நன்றியும் வாழ்த்துக்களும் ராம்குமார்! உங்களுக்கும் நன்றிகள் ரதிதேவி.... -------------------- ...ராம்குமார்...
![]() ....நிலையற்ற இவ்வுலகில் நிலையானது அன்பு ஒன்றுதான்..... |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 01:40 PM |