IPB

Welcome Guest ( Log In | Register )

<% ANNOUNCEMENT %>
 
Reply to this topicStart new topic
வருவாயா...?
சத்தியா
post Apr 6 2009, 02:54 PM
Post #1


Senior
**********

Group: Moderators
Posts: 34,511
Joined: 16-February 04
From: ஐரோப்பா
Member No.: 53





வருவாயா...?


அடிக்கடி
உன் நினைவுகள்
எனை நெருங்கி
ஓங்கி எரியவைக்க...

அன்பாய் அணைத்து
பாசம் தரும் தாகம்
என் நெஞ்சினுள் நிறைந்திருக்க...

ஒரு முறை கண்டு களித்து
விலகிய கண்களிரண்டும்
மறுமுறை உனை காணத்துடிக்க...

அம்மாவின் சேலை நுனி பற்றி
அலையத் துடிக்கும் குழந்தையாய்
உன் பின்னால்
அலைந்து திரிகிறது என் நேசம்!

ம்...
உன்மேல் உண்டான அன்பு
வேசமும் மறைப்புமில்லாமல்
நடிப்பும் பாசாங்குமில்லாமல்
சுயநலம் எதுவுமில்லாமல்
ஆழ்மனதின் அன்பின் ஊற்றாய்...

ஒரு புல்லாங்குழல்
ராகத்தைத் தேடுவது போலே...

உனை
தேடிக் கொண்டிருக்கிறேன் நான்!

எங்கே...
நீயும் ஒரு முறை வந்து
அடை மழை பொழிவதாக
உன் அன்பை
பொழிந்துவிட்டுச் செல்லேன்!


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
rathiDevi_u
post Apr 7 2009, 02:09 PM
Post #2


Senior
**********

Group: Senior Members
Posts: 12,034
Joined: 26-January 08
Member No.: 2,683



QUOTE
எங்கே...
நீயும் ஒரு முறை வந்து
அடை மழை பொழிவதாக
உன் அன்பை
பொழிந்துவிட்டுச் செல்லேன்!


ஆஹா!
சீக்கிரம் வாங்கப்பா!
அழகான கவிதை வரிகள்!
சூப்பர் சூப்பர்!
வாழ்த்துக்கள் சத்தியா! rolleyes.gif


--------------------
விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு.

*** காகிதத்தில் கிறுக்கியவை ***
Go to the top of the page
 
+Quote Post

Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



RSS Lo-Fi Version Time is now: 1st August 2010 - 07:27 AM