நிலா முற்றம்: அன்புடன்.. - நிலா முற்றம்

Jump to content

நிலா முற்றத்தில் நீங்களும் இணைந்து கொள்ளலாமே ? (Login l Register)
Page 1 of 1

அன்புடன்..

#1 User is online   தனிமதி 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 24,019
  • Joined: 03-December 05
  • Current Mood: Current Mood: Tired

   தற்போது கணனிக்குள் அடக்க முடியாதது எதுவாகயிருக்கும்..?  தற்போது கணனிக்குள் அடக்க முடியாதது எதுவாகயிருக்கும்..? Posted 11 April 2009 - 04:59 PM

அன்புடன்.

அக்காவின் திருமணத்திற்குப்பிறகு தங்கை ஷங்கரியும் மேல் படிப்பு படிக்க வசதியாகயிருக்கும் என்று அக்கா கூடவே தங்கி படித்துக்கொண்டு வந்தாள். பிரமன் அளந்து தான் செதுக்கியிருக்க வேணும் அப்படி ஒரு அழகு. சுமாரான உயரம், காந்தக் கண்கள், மா நிறம், அம்மன் சிலை போல எப்பவும் சிரித்த முகம்..எடுப்பான நடை, கனிவான பேச்சு ஒரு தடவை பார்த்துப் பழகிவிட்டால் போதும்..அடடா மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டும் அழகு, ஒவ்வொருவர் மனமறிந்து பேசும் திறமை, குறும்பாகப் பேசுவாள்..சுறுசுறுப்பாக இயங்குவாள்..ஆஹா.....இப்படியே அடுக்கிக் கொண்டு அத்தனையும் காணலாம் ஷங்கரியிடம்..

அவளைச்சுற்றி எப்பவும் ஒரு கூட்டம்...கலகல என்று எப்பவும் சந்தோசமாக சுற்றித்திரியும் வண்ணத்துப்பூச்சிகள்...அவள் அன்பில், பண்பில், அழகில் மயங்கி பலபேர் விண்ணப்பப் படிவம் கொடுத்தும் எதையும் தூக்கி எறியாது சாந்தமாக அவர்கள் நிலையைச்சொல்லி, வாழ்வின் இலட்சியங்களை எடுத்துக்கூறி நிராகரித்தாள் ஷங்கரி. அதற்காக யாருடனும் அவள் எப்போதும் கோபப்பட்டதுமில்லை.

அன்று பாடசாலை முடிந்து அக்கா வீடு சென்றவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது....3 வருடங்களுக்கு முதல் வெளிநாடு சென்றவர் கண்ணன், அத்தானின் தம்பி திடீர் என்று வந்திருந்தார்.அவரை கேள்விப்பட்டிருக்கிறாள்.ஆனால் பார்த்ததில்லை. இன்று தான் முதன் முதலாகப் பார்த்தாள்.

..இதுவரை காலமும் யாரிடமும் மனதைப் பறிகொடுக்காத ஷங்கரி முதன் முதலில் கண்ணனைக் கண்டவுடன் தலை குனிந்தாள்..மனம் படபடத்தது.கால்கள் மேலும் ஒரு அடி எடுத்து வைக்கக்கூட தைரியமில்லாது பின்வாங்கியது..ஒரு தடவைதான் பார்த்திருந்தாள் ஆனால் அவன் முகம் அவளுள் சித்திரம் வரைந்தது...அவன் வருகைக்காவே இத்தனை நாள் காத்திருந்தாள்.

பாடல்..: கண்ணன் வரும் வேளை அந்தி மாலை நான்..

படம்....:தீபாவளி.

எல்லோருடனும் அதிகமாக மனம் விட்டுப் பேசும் ஷங்கரி கண்ணனுடன் மட்டும் தன் பேச்சை குறைத்துக்கொண்டாள்..

ஷங்கரி..
கண்ணன் கூப்பிட்டதைக் கேட்டும் கேட்காதது போல இதயம் படபடக்க புத்தகத்தில் தன் கவனத்தை செலுத்தியது போல இருந்தாள். அவள் அப்படி இருந்தாலும் அவள் அருகில் நின்ற கண்ணனுக்கு அவள் விடும் மூச்சின் வெப்பம், விழியின் சிவப்பு மேல்மூச்சு வாங்கும் உடல் யாவற்றையும் கவனித்த கண்ணன் சிரித்தான்..

ஏய் ஷங்கரி.......என்ன..? என்னைப் பார்க்க பயமாயிருக்கா..? கொஞ்சம் திரும்பேன்...

மெதுவாக முகத்தைத் திருப்பி கண்ணனை பார்த்தாள் விழிகள் அங்கும் இங்கும் லெவ்ட் ரைட் சொல்லாமல் பாய்ந்தடித்துக்கொண்டது..

அப்பாடா இந்த முகத்தைக் காட்டவா இத்தனை பதற்றம்..ஹாஹாஹா..

சொல்லு ஷங்கரி ஏன் நீ உன் அக்கா கூட கோவிலுக்குப் போகல்ல..?

ஆ....அது..அது..வந்து..வந்து...

ம்....நீ சொல்லத்தேவையில்ல..நானே சொல்லிடிறன்..இந்த மச்சான் தனிய நிற்கிறான் என்றுதானே நீயும் போகல்ல...

நோ...நோ....அப்படியில்ல....எனக்கு கோவிலுக்கு...கோவிலுக்கு.. இன்னைக்கு... மீண்டும் தலையைக்குனிந்து கொண்டாள்..

ஓ.....ஓகே..ஓகே....சொறி..சொறி...விளங்கிட்டு...ம்.....அப்புறம் சொல்லுங்க..என்ன படிக்கிறீங்க..? என்னவாகப்போறீங்க..? படிப்பெல்லாம் எப்படிப்போகிறது..? மாமி,மாமா சுகங்கள் எல்லாம் எப்படி..?

அட என் பாட்டிற்கு பைத்தியக்காரன் மாதிரி பேசிட்டிருக்கேன் ஒரு பதிலும் சொல்லல்ல....நான் வி.டி.ஓ வில பார்த்த ஷங்கரி சும்மா ஓன் பண்ணின ரேடியோ மாதிரி எப்பவும் கலகலப்பா இருக்கும்....இப்ப என்னாச்சு..?

ஆ...என்ன கேட்டீங்க..?

போச்சுடா அப்ப ஸ்பீக்கரும் அவுட்டா...?

கையிலிருந்த புத்தகத்தை நெஞ்சோடு அனைத்துச் சிரித்துக்கொண்டாள்....என்னமோ கண்ணன் நீங்க வந்த நாளிலிருந்து ஒரே பயமாயிருக்கு..

அட ஏனப்படி..? நான் என்ன பேயா, பிசாசா அல்லது அவர்களைப்போல அழகா..

சீ...அப்படியில்ல.....கண்ணன்...

அப்ப ஏனாம் பயம்..?

தெரியல்ல....சரி கண்ணன் எனக்கு 7 மணிக்கு டியூசன் கிளாஸ்..நான் போயிட்டு வாறன்...

ஓ....நானும் கூட வரட்டா...

ஐயையோ..........நீங்களா......வேணாம் வேணாம்....என்கூட படிக்கிறதுகள் எல்லாம் ஒரு லூசு கேசுகள்..நாளைக்கே 2 பேரையும் வச்சு கிண்டல் பண்ணுவாங்க..

ம்........நினைச்சேன்...இந்த லூசோட படிக்கிறவங்க அப்படித்தானேயிருப்பாங்க...

ஆஆஆ....இருங்க..இருங்க வந்து கவனிக்கிறன்..இப்ப போயிட்டு வாறன்..

சீயுடா பாய்..... டேக் கெயார்..சொல்லிக்கொண்டே மாலைச் செய்தி பார்க்க டி.வி க்கு முன்னால் இருந்த கண்ணனுக்கு ஷங்கரியின் ஒவ்வொரு அசைவும் மனதில் சலங்கை கட்டி ஆடத்தொடங்கின..


பாடல்...: பூப்போல தீ போல, மான் போல மழை போல..வந்தாய்...

படம்..: வசீகரா..

நாட்கள் அதி வேகமாகப் போய்கொண்டு இருந்தது.அம்மா,..அண்ணா,அண்ணி, தங்கை, தம்பி, அண்ணா குழந்தைகள் என்று அழகான நாட்களாக கண்ணன் கழித்துக்கொண்டிருந்தான்.

பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் வைக்கக்கூடாது என்று, பழைய பஞ்சாங்கங்களான ஷங்கரியின் அம்மா, அப்பா.. கண்ணன் வந்த சில நாட்களிலேயே தங்களோடு கூப்பிட்டு வைத்திருந்தார்..கண்ணன் மனதில் ஷங்கரி இருந்தாலும் ஒருபோதும் அதனை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.


வேலைக்குச் சென்ற அண்ணா திரும்பி வரவேயில்லை....ஆக்ஸிடென்டில் இறந்து விட்டதாக மட்டும் செய்தி வந்தது.

குடும்பப் பாரம் தலைக்கு மேல் வெள்ளம் போலானது.கையிலிருந்த பணம் யாவும் முடிந்து கடனாளியானான்...மாதங்கள் உருண்டோடி அண்ணா இறந்து ஆண்டு 1 வந்தது....அப்போது நினைத்துக்கொண்டான் தான் மனதிலே கட்டி வைத்த கோட்டையையும் இடிந்து 1 வருடமாகியது..

எதுவுமே எதிர் பார்த்து நடப்பதில்லை..இன்னது இன்றைக்கு நடக்கவேண்டும் என்றால் அதுதான் நடக்கும்...அவன் நம்பிக்கையில் அதுவும் ஒன்று. அதுபோல் கனடாவிலிருந்து அழைப்பு...அதுவும் மாப்பிள்ளையாக...

மனம் தடுத்தது...அண்ணன் இல்லாத குடும்பம், அப்பா இல்லாத தங்கை, தம்பி மனவருத்தத்தோடு போராடும் அம்மா, அண்ணி,குழந்தைகள்...இத்தனை பேரையும் காப்பாற்றும் பொறுப்பு அவன் தலையில் ..

ஒரு நிமிடம் ஷங்கரியை நினைத்துப்பார்த்தான்...அவளை தொட்டுக்கூட கதைச்சதில்லை. காதல் கடிதம், ஏதாவது ஹிப்ட்.....நோ நத்திங்..அவளுடைய அழகிற்கும் அறிவிற்கும் எப்ப வேண்டுமானாலும் சக்சஸ் தான்..ஆனால்..

டிறிங்...டிறிங்...டிறிங்...டெலிபோன் மணி ஒலித்ததில் அவன் அமைதி கலைக்கப்பட்டது.

ஹலோ...

ஹலோ...ஹாய் ஐ ஆம் காயத்ரி..மே ஐ ஸ்பீக் டூ கண்ணன்..

யெஸ்....ஸ்பீக்கிங்...

ஹாய் கண்ணன் நான் கனடாவில இருந்து காயத்ரி....என்னோட போட்டோ ஈமெயிலில அனுப்பிவச்சிருந்தேன்...பார்த்திருப்பீங்க...

ம்...யெஸ்....தாங்கியூ.....

உங்க போட்டோவும் பார்த்தேன்....ஹிந்தி ஆக்டர்ஸ் வடிவாயிருக்கிறீங்க..உங்க ஸ்மையில் ஐ லைக் இட்...பை த..பை...கண்ணன்..நான் எப்பவுமே டிரெக்ட்டாக பேசிடுவேன்....சோ அதனால இந்த போன் கோல்..

குட்.....சொல்லுங்க..

முதலில உங்க அமைதியான சுபாவம் ரொம்ப.ரொம்ப பிடிச்சிருக்கு...அடுத்தது இங்க நான் 7 வயசில வந்தனான்...நிறைய பிரண்ட்ஸ்..ஆனாலும் எனக்கு எங்கட நாட்டில இருந்துதான் லைவ்ப் பார்ட்னர் விருப்பம்....சோ இப்ப அந்த ஆசையும் எங்கட ரிலேற்றிவிலால நிறைவேறிச்சு..

சரி....சொல்ல வந்ததை சொல்லுங்க..கண்ணன் கூறினான்..

ம்.....நீங்க எமிரேட் பக்கம் தான் சுற்றிட்டிருந்தீங்க..சோ இங்குள்ள லைவ் பற்றி தெரிந்திருக்க முடியாது...

ம்...அப்ப ஆள விடுங்க.....வச்சிடட்டுமா....மீண்டும் குறுக்கிட்ட கண்ணன்..

நோ...கண்ணா அப்படியில்ல....டிரெக்டாகவே சொல்லிடிறன்...நான் பார்க்கிற வேலையில 5 வருசம் கெண்டினியுவா முடிச்சா மனேஜர் போஸ்...

ஓ..வெரி குட்....(இது கண்ணன்..)

அதனால நமக்கு குழந்தை வேணாம்...(காயத்ரி)

சற்று நேர அமைதிக்குப்பிறகு....ம்....வேற..வேற என்னவெல்லாம் கண்டிஷன்..??? அதையும் இப்ப சொல்லிடிங்க மிஸ்.காயத்ரி.

என்னுடைய பேர்ஷனல் மேட்டர்களில தலையிடக்கூடாது.அது போல நானும் நீங்க எங்க போறீங்க : எத்தனை மணிக்கு வாறீங்க.? யார் கூட போனில கதைக்கிறீங்க..எதுவுமே கேட்க மாட்டேன்......ஓகேயா....

காயத்ரி நீங்க நினைக்கிற அளவிற்கு நான் நாட்டுக்கட்டை இல்ல...எதை எதை எப்ப புரிந்து கொள்ள வேண்டும் என்று எனக்குத் தெரியாதா....?எனக்கும் நிறைய நிறைய கேர்ள்ஸ், அன்ட் போய்ஸ் பிரண்ட்ஸ்..நண்பர்களை மதிக்கிறேன். நீங்க அதுபற்றி கவலைப்படவேண்டாம். அதே டைம் என்னுடைய மனைவியில நான் அக்கறை எடுக்க வேண்டிய கட்டாயத்தில என் கடமையைச்செய்வேன்...சரி தானே..காயத்ரி.

கண்ணா இப்படிச்சொல்லியே எத்தனை டைவேர்ஸ் கேஸ் நடந்திருக்கு தெரியுமா.......? அதற்கு அடிப்படைக் காரணம் சந்தேகம்...உங்களுக்கும் அந்த நோய் வரக்கூடாது என்றுதான் முன்கூட்டியே சொல்லி வைக்கிறேன்...இங்கு வரும் அதிகமான பேர் வந்து 3 மாதம் கூட ஆகாது நீ வேலைக்குப் போகக் கூடாது...நான் உழைப்பது 2 பேருக்கும் காணும் என்று உடனே ரூல்ஸ் எல்லாம் போடுவாங்க..வரும் போது ஹாயாக வருவார்கள். பிறகு எல்லாத்திற்கும் தலையிடுவார்கள். எனக்கு இதெல்லாம் பிடிக்காது...

போகப் போக உங்களுக்கே புரிந்துணர்வு வந்திடும்....கண்ணா நான் முதன் முதலில் உங்களைத்தான் பார்த்தேன்....ப்ளஸ் பொயின்டாக உங்க அமைதியான சுபாவம் எனக்கு பிடிச்சிருக்கு....அந்த அமைதி நிச்சயம் எங்கள் லைஃப்பில எந்த இடையூறும் வராது கண்ணா..

காயத்ரி தாங்கியூ ஃபோர் கோலிங்..என்னுடைய அமைதியை வச்சு பல பேர் அதையே தங்களுக்குச் சாதகமாக எடுத்திருக்கிறார்கள்..உங்களுக்கும் அந்த அமைதிதான் சாதகமாக அமையவேணுமென்றால் நாங்க இப்பவே சப்ஜெக்ட்டை குளோஸ் பண்ணுறதுதான் இருவருக்கும் நல்லது...


பெஸ்ட் விஷ்சஸ், குட் லக்....குட் பை.

டெலிபோனை வைத்துவிடவும்..என் செல்லக்குட்டி அங்க பாரு பாரு..எங்க ஆ சொல்லுடா .அம்புலிமாமாவைக் காட்டி நிலாச்சோறு ஊட்டிக்கொண்டிருந்தாள்..ஷங்கரி அவள் அக்கா குழந்தைக்கு.

கிட்டப் போனான் கண்ணன் குழந்தையை வாங்கிக் கொண்டான்...

ஏன் ஷங்கரி உனக்கு குழந்தைகள் என்றால் பிடிக்குமா....

ஓ.....நல்லா பிடிக்குமே....ஏன் கேட்கிறீங்க...ஆமா கண்ணன் நீங்க கனடா போகிறீங்களாமே...அம்மா சொன்னாங்க.....நிஜமாவா...? அட இது என்ன பாஷன்.. எனக்கு சேர்ட் போடுவதுதான் ரொம்ப பிடிக்கும்....இப்ப போட்டிருக்கிற இது வடிவேயில்ல..என்ன கலர் இது...ஆமா சொல்லுங்க கனடா போகப் போறீங்களாமே அதுவும் மாப்பிளையாக..அதைக் கேட்டதிற்குப் பிறகு தான் எங்கம்மா இங்க அக்காவிற்குத் துணையாக என்னை அனுப்பிவசிசருந்தாங்க..பெருசுகள் ரொம்ப ஸ்மார்ட் பார்த்தீங்களா..கண்ணன். கலகலகவென்று சிரித்தாள் ஷங்கரி..

இல்ல போகல்ல...ஷங்கரி.

ஓ......ஏன்...கண்ணன்...நீங்க அங்க கலியாணம் கட்டப் போறீங்களாமே...

நானும் அப்படித்தான் நினைச்சேன்....அங்க போனால் எல்லாருக்கும் விடியல் என்று...ஆனால் மனம் வச்சு வாழ்ந்தால் எங்க போயும் பிழைக்கலாம் கனடா தான் தேவை என்றில்லை.போன இடத்திற்கே போய் வாழலாம் என்றிருக்கிறேன்..ஷங்கரி...உன்னட்ட ஒன்று கேட்கலாமா ஷங்கரி..

என்ன சொல்லுங்க..கண்ணன்.. ஏதும் உதவி வேணுமா..?


நீ எனக்கு அதுதான் வடிவு..இது தான் தேவை என்கிறீயே.....நானும் உனக்கு என்ன சொன்னாலும் கேட்டு நடப்பியா..


அடடா இதில என்னயிருக்கு வெரி சிம்பிள்..எங்க மீது ஒருவர் நல்லதிற்காக அக்கறை எடுத்து நல்லது சொன்னா ஏன் தடுக்கனும் சொல்லுங்க..


குட்....ஷங்கரி...நான் உன்னைக் கலியாணம் கட்ட சம்மதமா..? ஐ லவ் யூ....


அட நீங்களும் அப்ளிகேஷனா....டூ லேட் கண்ணன். டூ.லேட்....நான் ஏற்கனவே ஒருவருக்கு சரண்டர் ஆகிட்டேன்....சோ..ஐம் சொறி...அக்கா திட்டப் போகிறா. வாடா யதுஷன் ( அக்காவின் குழந்தையை கண்ணனிடமிருந்து வேண்டிக்கொண்டு போனாள் ஷங்கரி..)


கண்ணனுக்கு நெஞ்சில் இடி விழுந்தது போல இருந்தது...ஏதோ ஒரு எஃப் எம் ல் காற்றலையூடாக...

பாடல்...: பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத் தேடிப்பார்த்தேன்...
படம்...: உயிரே...

அவன் மொபைல் அலறியது...ஹலோ....

ஹலோ மச்சான்...மச்சாள் ஷங்கரி...தொடர்ந்து கலகல என்று அடுக்கிக் கொண்டே போனாள்...

என்ன இன்னும் சோகமா.....? இந்த ராதையின் கலியாணத்திற்காவது வருவீங்கதானே...அதோ அந்த கண்ணாடியைப் பாருங்க...என் மன்னன் கண்ணன் இருக்கிறான்.....

அடியேய் கள்ளி ஷங்கரி...கலியாணம் முடியட்டும் உனக்கு நல்லா அடிபோடுறன்...ஏய் எங்க ஓடப் பார்க்கிறாய்.நில்லு...ஷங்கரி...ஏய் ஓடாதே நில்லுடி..


அவளைத்தேடி ஓடுகிறான்..கண்ணன்.

முற்றும்.. smile.gif

This post has been edited by Thanimathy: 11 April 2009 - 05:00 PM

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி


"மதியின் மனவானில்"
Posted Image
0

#2 User is online   Suganthe 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 5,204
  • Joined: 05-September 05
  • Current Mood: Current Mood: None Chosen

Posted 13 April 2009 - 10:32 PM

உண்மைக் காதலுக்கு என்றுமே வெற்றி தான்
வாழ்த்துக்கள் தனிமதி

This post has been edited by Suganthe: 13 April 2009 - 10:33 PM

உன்னையே நீ உணர்
0

#3 User is offline   ரதிதேவி 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 12,669
  • Joined: 26-January 08
  • Current Mood: Current Mood: busy

   இந்த உலகத்தில் நஞ்சால் அழிந்தவர்களைவிட, ஆசையால் அழிந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்.  இந்த உலகத்தில் நஞ்சால் அழிந்தவர்களைவிட, ஆசையால் அழிந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம். Posted 15 April 2009 - 07:07 AM

அழகான காதல் கதை!
பாடல்களும் அருமை!
வாழ்த்துக்கள் தனிமதி! rolleyes.gif

விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு


Posted Image

காகிதத்தில் கிறுக்கியவை
0

#4 User is online   தனிமதி 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 24,019
  • Joined: 03-December 05
  • Current Mood: Current Mood: Tired

   தற்போது கணனிக்குள் அடக்க முடியாதது எதுவாகயிருக்கும்..?  தற்போது கணனிக்குள் அடக்க முடியாதது எதுவாகயிருக்கும்..? Posted 17 April 2010 - 02:06 AM

QUOTE (Suganthe @ Apr 13 2009, 11:32 PM) <{POST_SNAPBACK}>
உண்மைக் காதலுக்கு என்றுமே வெற்றி தான்
வாழ்த்துக்கள் தனிமதி



நன்றி சுகந்தி.... smile.gif
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி


"மதியின் மனவானில்"
Posted Image
0

#5 User is online   தனிமதி 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 24,019
  • Joined: 03-December 05
  • Current Mood: Current Mood: Tired

   தற்போது கணனிக்குள் அடக்க முடியாதது எதுவாகயிருக்கும்..?  தற்போது கணனிக்குள் அடக்க முடியாதது எதுவாகயிருக்கும்..? Posted 17 April 2010 - 02:08 AM

QUOTE (rathiDevi_u @ Apr 15 2009, 08:07 AM) <{POST_SNAPBACK}>
அழகான காதல் கதை!
பாடல்களும் அருமை!
வாழ்த்துக்கள் தனிமதி! rolleyes.gif



நன்றி ரதிதேவி.... smile.gif

சரியாக ஒருவருடம் முடிந்துவிட்டபிறகு இப்ப வருகிறேன் என்ன... biggrin.gif

சுகந்தி, ரதி இருவரும் மன்னித்துக்கொள்ளுங்கள்... sad.gif

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி


"மதியின் மனவானில்"
Posted Image
0

#6 User is offline   ஞானாம்பாள் 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Advancing Members
  • Posts: 394
  • Joined: 28-March 10
  • Current Mood: Current Mood: None Chosen

Posted 17 April 2010 - 05:00 PM

எங்க போனீங்க மதி இத்தனை நாளா??

சௌக்கியமாப்பா? வீட்ல எல்லாரும் சௌக்கியமாப்பா?

கதை படித்துவிட்டு கருத்து எழுதுறேன்பா....
உனக்கு வலிக்கும்போதெல்லாம் பிறருக்கு கொடுத்த வலியை உணர்ந்தாயா?

www.manjusampath.blogspot.com
0

#7 User is offline   ஞானாம்பாள் 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Advancing Members
  • Posts: 394
  • Joined: 28-March 10
  • Current Mood: Current Mood: None Chosen

Posted 17 April 2010 - 05:28 PM

அருமையான கதை மதி...

ரொம்ப நாள் கழிச்சி வந்தாலும் அருமையான படிப்பினை தரும் கதை...

அன்பும் காதலும் இருக்கும் இடத்தில் சந்தேகத்துக்கு இடமில்லை...

அமைதியும் கனிவும் இருக்கும் இடத்தில் வம்புக்கும் இடமில்லை....

இரு உள்ளங்கள் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுத்து போகும்போது வாழ்க்கையில் எந்தவித பிரச்சனைக்கும் இடமே இல்லை....

கல்யாணத்திற்கு முன்னாடியே காயத்திரி இத்தனை கண்டிஷன் போட்டால் மாப்பிள்ளை எங்கே தேடி வருவது???

நம்ம ஷங்கரியின் அன்பு தான் கடைசியில் கண்ணனின் மனதை வென்றது....

கதையும் சுபம்.....

அருமையான காரெக்டர்களை உருவாக்கி கண்முன் நடமாட விட்டிருக்கீங்க மதி... எங்கப்பா போனீங்க இத்தனை நாள் இத்தனை அழகான படைப்பை கொடுக்காம?

அன்பான பாராட்டுக்கள் மதி....
உனக்கு வலிக்கும்போதெல்லாம் பிறருக்கு கொடுத்த வலியை உணர்ந்தாயா?

www.manjusampath.blogspot.com
0

#8 User is online   தனிமதி 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 24,019
  • Joined: 03-December 05
  • Current Mood: Current Mood: Tired

   தற்போது கணனிக்குள் அடக்க முடியாதது எதுவாகயிருக்கும்..?  தற்போது கணனிக்குள் அடக்க முடியாதது எதுவாகயிருக்கும்..? Posted 21 April 2010 - 07:53 PM

QUOTE (ஞானா @ Apr 17 2010, 05:28 PM) <{POST_SNAPBACK}>
அருமையான கதை மதி...

ரொம்ப நாள் கழிச்சி வந்தாலும் அருமையான படிப்பினை தரும் கதை...

அன்பும் காதலும் இருக்கும் இடத்தில் சந்தேகத்துக்கு இடமில்லை...

அமைதியும் கனிவும் இருக்கும் இடத்தில் வம்புக்கும் இடமில்லை....

இரு உள்ளங்கள் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுத்து போகும்போது வாழ்க்கையில் எந்தவித பிரச்சனைக்கும் இடமே இல்லை....

கல்யாணத்திற்கு முன்னாடியே காயத்திரி இத்தனை கண்டிஷன் போட்டால் மாப்பிள்ளை எங்கே தேடி வருவது???

நம்ம ஷங்கரியின் அன்பு தான் கடைசியில் கண்ணனின் மனதை வென்றது....

கதையும் சுபம்.....

அருமையான காரெக்டர்களை உருவாக்கி கண்முன் நடமாட விட்டிருக்கீங்க மதி... எங்கப்பா போனீங்க இத்தனை நாள் இத்தனை அழகான படைப்பை கொடுக்காம?

அன்பான பாராட்டுக்கள் மதி....


அடடா நல்ல கருத்துகளையெல்லாம் வாரி வழங்கியிருக்கிறீங்க மஞ்சு..

ரொம்ப! ரொம்ப!! சந்தோசம்.நன்றியும்..
எங்க சென்றேன், வந்தேன்.இருவரும் பரிமாறிக்கொண்ட விடயம்.....நன்றி மஞ்சு.. smile.gif

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி


"மதியின் மனவானில்"
Posted Image
0

Share this topic:


Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

2 User(s) are reading this topic
0 members, 2 guests, 0 anonymous users