IPB

Welcome Guest ( Log In | Register )

<% ANNOUNCEMENT %>
 
Reply to this topicStart new topic
இன்னும் ஒரு நாளென...!
சத்தியா
post Aug 14 2009, 01:18 PM
Post #1


Senior
**********

Group: Moderators
Posts: 34,511
Joined: 16-February 04
From: ஐரோப்பா
Member No.: 53






இன்னும் ஒரு நாளென...


பாதி வாழ்க்கை தனிமையிலும்
மீதி வாழ்க்கை விரக்தியிலும்
நரம்புகள் அறுந்துபோய்
முகாரி பாடும் வீணையில்
விழுந்த கீதங்களாய்...

இன்னும் இன்றும்
என் விரைத்த விரல்களிலிருந்து
விழும் வார்த்தைகளில்...
ஒழுகும் நினைவுகளில்...
ஒய்யாரமாய் உட்காந்திருக்கிறது
ஓராயிரம் தழும்புகள்!

ஓ...!
என் நெஞ்சப் பெட்டகத்தின்
நினைவுகளின் அடியில்
இன்னும் ஈரம் காயாமல்
உள் விளிம்புவரை
துருப்பிடித்துக் கிடப்பதெல்லாம்
ஆறாத பல ரணங்கள் தானே!

ம்...!
நான் காலம் காலமாய்
தேடிச் சுவாசித்து நேசித்த
அன்பெனும் ஸ்ருதி மட்டும்
சேரவேயில்லை இறுதிவரை!

ஆனால்
காலம் மட்டும்
ஓடும் மேகங்களாய்
சுற்றிச் சுழன்றுகொண்டிருக்கிறது
இன்னும் ஒரு நாளென...!


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
meera
post Aug 14 2009, 01:55 PM
Post #2


Senior
**********

Group: Senior Members
Posts: 1,221
Joined: 25-July 06
From: germany
Member No.: 589



தினம் தினம் பிறந்தாலும்
மனம் இங்கு மாறாமல்
முகாரி பாடுகிறது….
ரணங்கள் மாறாமல்
கூடுகிறது…
பல மறக்கின்ற மனங்கள் மத்தியில்
சில நினைக்கின்ற நெஞ்சங்களும்
உண்டு என்கிறது…
ஸ்ருதி சேராத அன்பில்
அர்த்தமில்லை என்கிறபோதும்…
இன்னும் ஒரு நாளென
காத்திருக்கும் இதயத்தின்
கவிதை கனக்கிறது…
நல்ல கவிதையும்
வார்த்தைகளும்..
ம்…கவிதைக்கு
வாழ்த்துக்கள் சத்தியா…


Go to the top of the page
 
+Quote Post
rathiDevi_u
post Sep 18 2009, 08:00 AM
Post #3


Senior
**********

Group: Senior Members
Posts: 12,034
Joined: 26-January 08
Member No.: 2,683



QUOTE
காலம் மட்டும்
ஓடும் மேகங்களாய்
சுற்றிச் சுழன்றுகொண்டிருக்கிறது
இன்னும் ஒரு நாளென...!


அழகான வரிகள்!
வாழ்த்துக்கள் சத்தியா! smile.gif


--------------------
விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு.

*** காகிதத்தில் கிறுக்கியவை ***
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Sep 20 2009, 01:32 PM
Post #4


Senior
**********

Group: Moderators
Posts: 34,511
Joined: 16-February 04
From: ஐரோப்பா
Member No.: 53




ம்ம்... உங்கள் வாழ்த்திற்கு நன்றிகள் மீரா & ரதி. smile.gif


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post

Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



RSS Lo-Fi Version Time is now: 1st August 2010 - 07:17 AM