உள்ளத்தில் கலந்த உறவே.. |
![]() ![]() |
உள்ளத்தில் கலந்த உறவே.. |
Oct 3 2009, 05:33 AM
Post
#1
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 19,965 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
![]() உள்ளத்தில் கலந்த உறவே.. பழகிய நாட்கள்.. பசுமையான நினைவுகள்.. பல ஆண்டுகளாக நினைக்க மட்டும்தான் என்றே என் மனம் ஏங்க.. அதிகாலைப்பொழுதினில்.. காலைத் தென்றலாய் நீ காற்றலையில் கடமையாற்ற தூரத்து மல்லிகையின் மணம் காற்றோடு கலந்து உள்மூச்சில் விழுந்தது போல்.. நீங்கதானே..என்று என்னை இனங் கண்டு கொண்ட அன்புள்ள கிருஷ்ணா.. ஆண்டுகள் பல கடந்தபின்பும்.. ஆடிப்பாடித் திரிந்த கதைகள் நீ சொல்ல.. அதை இடைநிறுத்தி அதன் தொடர் நான் சொல்ல.. நீயூம் நானும் பின்னோக்கி அந்தப் பருவத்திற்குச் செல்ல.. ஒரு நாள் நீடிக்காத சின்னச் சின்ன கோபங்கள்.. பொய்யான பந்தையங்கள்... களவாய்ப் பிடுங்கும் மாங்காய்கள் பார்த்த படங்கள்... ம்....இதுவரை யாருமே பார்க்காத பக்கங்கள்.. ஓ..அத்தனையும் நினைத்துப் பார்க்கிறேன்.. மலரில் விழுந்த மழைத்துளியாய்.. என் கண்ணில் முத்தாய் கண்ணீர்த் துளிகள்.. பலவர்ண நிறங்களில் தினம் பூத்து மணம் பரப்பும் பூக்களாய் எனது சகோதரர்களும்.. உனது சகோதரர்களும்.. ஒன்றாகச் சேர்ந்து.. முற்றத்தில் பூத்துக் கைகோர்த்து திரிந்த நாட்களை அந்த முற்றம் கூட மறந்து விடாது.. போகிற திசை தெரியாமல்.. ஓடுகின்ற அருவி போல்.. நேரம் போவது தெரியாமல் நெடு நேரம் பேசிக்கொண்டேயிருக்கிறோம்.. ஓடிக்கொண்டு இருக்கும் கடிகாரம்.. அடித்துக்கொண்டிருக்கும் இசைபோல்.. ஓயாது என் நினைவில் உன் எண்ணம்.. சரியாக இடப்பட்ட முகவரி காலம் கடந்தாலும்.. கை வந்து சேருவது போல்.. உண்மை அன்பை நெஞ்சார நேசித்த எங்கள் உறவு பல ஆண்டுகள் கடந்த பின்பு காற்றலை சேர்த்து வைத்து விட்டது.. என் சகோதரிகள் சார்பாக உன்னைக் கேட்கிறேன்.. எங்காவது போவதாகயிருந்தால் சொல்லிவிட்டுப்போ..ஆறுதலாகயிருக்கும்.. உன்னைக் கண்டு கொண்ட சந்தோசங்களிலும்.. உன்னைக் காணவில்லையே என்று ஏங்கிய இதயத்தின் வலியை மீண்டும் உருவாக்கிவிடாதே.. -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Oct 3 2009, 06:51 AM
Post
#2
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 977 Joined: 25-July 06 From: germany Member No.: 589 |
மனம் தேடுது
மறக்கமுடியாமல்… தினம் வாடுது வாய்திறக்க முடியாமல்… போகுமிடம் சொல்லிவிடு ! பூங்காற்றே…. பூவையிவள் வாடுவதை அறிவாயோ ! உள்ளத்து ஆசைகளை உள்ளே புதைத்துவைத்து ஊமையாய் அழும் பெண்ணை அறியவும் மறப்பாயோ..? தனிமதியின் பாசத்தை தாராளமாக காட்டிவிட்டது கவிதை… ம்… சொல்லாமல் போனால் அடி கொடுப்போம் அவங்களுக்கு.. உங்கள் அன்பைப்பெற அவங்கள் கொடுத்து வைச்சிருக்கனும்… என்றும் இணைந்திருக்க என் வாழ்த்துக்கள் ! |
|
|
|
Oct 3 2009, 06:08 PM
Post
#3
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 4,937 Joined: 5-September 05 From: Markham (Toronto )canada Member No.: 329 |
QUOTE என் சகோதரிகள் சார்பாக உன்னைக் கேட்கிறேன்.. எங்காவது போவதாகயிருந்தால் சொல்லிவிட்டுப்போ..ஆறுதலாகயிருக்கும்.. உன்னைக் கண்டு கொண்ட சந்தோசங்களிலும்.. உன்னைக் காணவில்லையே என்று ஏங்கிய இதயத்தின் வலியை மீண்டும் உருவாக்கிவிடாதே.. சொல்லாமல் போவதால் எத்தனை அன்பு உள்ளங்கள் தேடுவார்கள் கவலையடைவார்கள் என்று சிலருக்குப் புரிவதில்லை என்ன செய்யலாம்? வாழ்த்துக்கள் தனிமதி This post has been edited by Suganthe: Oct 4 2009, 02:32 PM -------------------- உன்னையே நீ உணர்
|
|
|
|
Oct 5 2009, 03:23 PM
Post
#4
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,557 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
தமிழ் இப்போது எல்லாம் உங்கள் கைகளிற் பட்டு
நளினமாக விளையாடுவதைக் கண்டு மகிழ்கிறேன் தனிமதி ! வாழ்த்துக்கள், தங்கள் குழந்தை நட்புக்கும் ! -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Oct 6 2009, 04:26 AM
Post
#5
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 8,831 Joined: 26-January 08 From: Bangalore Member No.: 2,683 |
மிகவும் நன்றாக இருந்தது!
ரொம்ப ரசித்து படித்தேன்! வாழ்த்துக்கள் தனிமதி! -------------------- |
|
|
|
Oct 8 2009, 04:26 AM
Post
#6
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 19,965 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
மனம் தேடுது மறக்கமுடியாமல்… தினம் வாடுது வாய்திறக்க முடியாமல்… போகுமிடம் சொல்லிவிடு ! பூங்காற்றே…. பூவையிவள் வாடுவதை அறிவாயோ ! உள்ளத்து ஆசைகளை உள்ளே புதைத்துவைத்து ஊமையாய் அழும் பெண்ணை அறியவும் மறப்பாயோ..? தனிமதியின் பாசத்தை தாராளமாக காட்டிவிட்டது கவிதை… ம்… சொல்லாமல் போனால் அடி கொடுப்போம் அவங்களுக்கு.. உங்கள் அன்பைப்பெற அவங்கள் கொடுத்து வைச்சிருக்கனும்… என்றும் இணைந்திருக்க என் வாழ்த்துக்கள் ! மீராவின் கவியில் பிறந்த கருத்துகள் வாசித்து சிரித்து மகிழ்ந்தேன்.. ஆமா ஆமா அடி கொடுப்போம்.. அன்புடன் நன்றி மீரா.... சொல்லாமல் போவதால் எத்தனை அன்பு உள்ளங்கள் தேடுவார்கள் கவலையடைவார்கள் என்று சிலருக்குப் புரிவதில்லை என்ன செய்யலாம்? வாழ்த்துக்கள் தனிமதி ஆமா ஆமா கரக்ட்.. அன்புடன் நன்றி சுகந்தி... தமிழ் இப்போது எல்லாம் உங்கள் கைகளிற் பட்டு நளினமாக விளையாடுவதைக் கண்டு மகிழ்கிறேன் தனிமதி ! வாழ்த்துக்கள், தங்கள் குழந்தை நட்புக்கும் ! தங்கள் கருத்திற்கும்.. அன்பான வாழ்த்திற்கும் நன்றிகள் மகுடதீபன் அண்ணா... மிகவும் நன்றாக இருந்தது! ரொம்ப ரசித்து படித்தேன்! வாழ்த்துக்கள் தனிமதி! அன்புடன் நன்றி ரதிதேவி... -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 02:42 PM |