IPB

Welcome Guest ( Log In | Register )

<% ANNOUNCEMENT %>
 
Reply to this topicStart new topic
''நான் இருக்கிறேன்''
சத்தியா
post Oct 8 2009, 02:02 PM
Post #1


Senior
**********

Group: Moderators
Posts: 34,511
Joined: 16-February 04
From: ஐரோப்பா
Member No.: 53





''நான் இருக்கிறேன்''


கடந்து சென்ற காலங்களின்
அனுபவப் பயணங்கள் யாவும்
வெறும் காயங்களாகி
உள்ளே அணைந்து அணைந்து
எரியும் ஞாபகங்களாய்...

பணம் பூத்துக் குலுங்கும்
மரமாய் பூத்துக் குலுங்கி
கல்லெறி பட்டுப் பட்டு
காயங்கள் மட்டும் மிஞ்ச...

முகம் தொலைத்த
மனித முகங்களோடு
தினம் புண்ணாகித் தவித்து
மனசு இறுகி
உதடுகளில் ஓசை தொலைத்து
ஏதோ ஓர் வலித்த புள்ளியில்
திசை தெரியாமல் நின்றபோது...

அன்பாய், பாசமாய்
நட்பாய், காதலாய்
இவை எல்லாம் கலந்து...

உள்ளம் திறந்து
உள்ளன்போடு நீ உதிர்த்த
''கலங்காதே நான் இருக்கிறேன்''
என்ற அந்த ஒற்றை வார்த்தை
மரணித்துப் போன
என் உணர்வுகளுக்கெல்லாம் ஒத்தடமானது!

கடலில் வழிதேடிச்
செல்லும் கப்பலுக்கு
ஒளி உமிந்து
வழி காட்டும்
கலங்கரை விளக்கம் போல்...

வாழ்க்கைப் பாதையில்
வழி தேடிக் காய்ந்த மனதிற்கு
வழிகாட்டி ஆனாய் நீ!

ம்...!
உறவுகள் இழந்து
உணர்வுகள் இழந்து
வலியில் இடறி விழும் மனம்
நீண்ட பெருமூச்செறிந்து
உடைந்து விழும் போதெல்லாம்
என்னைத் தூக்கி நிறுத்துவது...

நீயும்
நீ அன்பின் இறுக்கத்தில்
சொல்லும் அந்த...
''நான் இருக்கிறேன்''
என்ற வார்த்தையும்தான்!


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
யாழ்_அகத்தியன்
post Oct 8 2009, 06:52 PM
Post #2


Senior
**********

Group: Senior Members
Posts: 932
Joined: 3-January 07
Member No.: 809



!

கடலில் வழிதேடிச்
செல்லும் கப்பலுக்கு
ஒளி உமிந்து
வழி காட்டும்
கலங்கரை விளக்கம் போல்...

வாழ்க்கைப் பாதையில்
வழி தேடிக் காய்ந்த மனதிற்கு
வழிகாட்டி ஆனாய் நீ!


மனிதனுக்கு ஞாபக சத்தி எவ்வளவு
அவசியமோ அவ்வளவு அவசியம் மறதியும்


இல்லையேல் யாராலும் சந்தோசமாய் வாழ முடியாது


--------------------
தூணிலும்
துரும்பிலும்
கடவுள் என்றால்

என் ஒவ்வொரு
துணிவிலும் நீ


-யாழ்_அகத்தியன்


புதுப் பொலிவுடன் என் வலைப்பூ

பகல் நிலா
Go to the top of the page
 
+Quote Post
rathiDevi_u
post Oct 11 2009, 03:38 PM
Post #3


Senior
**********

Group: Senior Members
Posts: 12,034
Joined: 26-January 08
Member No.: 2,683



சுகமான காதல் வலிகள்!
அருமை!
வாழ்த்துக்கள் சத்தியா! rolleyes.gif


--------------------
விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு.

*** காகிதத்தில் கிறுக்கியவை ***
Go to the top of the page
 
+Quote Post
மகுடதீபன்
post Oct 13 2009, 09:17 PM
Post #4


Senior
**********

Group: Senior Members
Posts: 1,560
Joined: 10-December 07
From: Ramanathapuram
Member No.: 2,655



வார்த்தை வரமும் தரும்
வாழ்வும் தரும் . . .

அதன் ஊக்கத்தில் வாழி சத்தியா !


--------------------
Go to the top of the page
 
+Quote Post
Suganthe
post Oct 17 2009, 03:09 AM
Post #5


Senior
**********

Group: Senior Members
Posts: 5,164
Joined: 5-September 05
From: Markham (Toronto )canada
Member No.: 329



''நான் இருக்கிறேன்''
என்ற வார்த்தை... அதற்கு நிகர் எதுவும் இல்லை
வாழ்த்துக்கள் சத்தியா


--------------------
உன்னையே நீ உணர்
Go to the top of the page
 
+Quote Post
meera
post Oct 18 2009, 12:13 AM
Post #6


Senior
**********

Group: Senior Members
Posts: 1,221
Joined: 25-July 06
From: germany
Member No.: 589



ம்....நீங்கள் அதிஸ்ட சாலி தான் சத்தியா....
நான் இருக்கிறேன் என்று நம்பிகையூட்டும் வார்தை....
கிடைத்த அதிஸ்ட சாலி நீங்கள்...
இனி உங்கள் வாழ்வில் வெற்றிதான் கவலைவிடுங்கள்...
கரம் கொடுக்க கடவுள் மனிதர்களை காட்டுவார் என்பது உண்மை..!!!
சோதனைகள் வரும் போது கைவிடப்படுவதில்லை ...
இறைவன் காத்து வழிநடத்துவார் என்பதற்கு
நல்ல உதாரணமாக இருக்கிறது உங்கள் கவிதை...
Go to the top of the page
 
+Quote Post
பாரதிப்பிரியன்
post Oct 21 2009, 10:46 PM
Post #7


Senior
**********

Group: Senior Members
Posts: 547
Joined: 9-October 09
From: நாடோடி!
Member No.: 3,114



எல்லாம் இழந்து விட்டோமே எனக் கலங்கிவிடாதீர்கள்.....
எவரிற்கோ எவரோ இருக்கின்றார்கள்...
அவரால் உங்கள் குறை தீர்த்து வைக்கப்படும்...
அது இறைவனாகவும் இருக்கலாம் அல்லது உங்கள் மீது அன்புகொண்ட நெஞ்சமாகவும் இருக்கலாம்...

இந்தத் தத்துவத்தை இந்தக் கவிதையில் அழகாக உணர முடிகின்றது..
எழுதிய உங்களுக்கு நிலா முற்றம் சார்பாக "நாங்கள் இருக்கிறோம்"


--------------------
அன்ன மூட்டிய தெய்வ மணிக்கையின்
ஆணை காட்டில் அனலையும் விழுங்குவோம்...!



Go to the top of the page
 
+Quote Post

Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



RSS Lo-Fi Version Time is now: 1st August 2010 - 07:17 AM