பாடலில் பிறந்த கவிதை! |
![]() ![]() |
பாடலில் பிறந்த கவிதை! |
Oct 18 2009, 09:40 PM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
பாடலில் பிறந்த கவிதை! சில திரையிசைப் பாடல்களைக் கேட்டு ரசிக்கும் போது... அந்தப் பாடல் இனம்புரியாத ஒரு தாக்கத்தை மனதுள் ஏற்படுத்தி உள்ளத்தின் உள்ளே ஓர் அசையாத இடத்தைப் பிடித்து விட... அந்த நிமிடம் நானும்... அசைவின்றி, ஆட்டமின்றி, செயலின்றி... உணர்வும் அற்று இசையின் மடியில் மூழ்கிப்போவதுண்டு. அப்படி என் மனதில் இடம் பிடித்த பாடல்களுக்கு... என் விரல்வழி பிறக்கும் வார்த்தைகளைக் கோர்தெடுத்து... நல் கவியாகத் தொடுத்து ... இங்கே... ''பாடலில் பிறந்த கவிதை'' யாகத் தொடர்கிறேன். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Oct 18 2009, 09:44 PM
Post
#2
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
பாடலில் பிறந்த கவிதை - 1 ஒருபுறம் பரந்து, விரிந்து உறைந்து , கரைந்து உருகி வழிகிறது வானம்! மறுபுறம் ஏமாற்றத்தின் விலாசங்களுடன் அலையும் மனசுக்குள் குமிக்கப்பட்ட குழப்பங்களோடு ஏதோ ஓர் ஆறுதல் தேடி... உன் கனிவான பார்வையின் தீண்டலுக்காய்... உன் கள்ளமற்ற பிரியமான புன்னகைக்காய்... உன் பாசமான அணைப்பின் ஆறுதலுக்காய்... என் மனசைப் பிளந்து வைத்து உன் காலடி ஓசை தேடியவளாய் நான்! படம் - Johny! பாடல் - காற்றில் எந்தன் கீதம்... -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Oct 19 2009, 09:11 PM
Post
#3
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
பாடலில் பிறந்த கவிதை - 2 ஏன் பிறந்தேன் எதற்காய் வாழ்ந்தேன் எதுவுமே தெரியாமல் இது வரை நான் ! உன்னைக் கண்ட பின் பிறந்ததன் பலன் கண்டேன் வாழ்ந்ததன் அர்த்தம் புரிந்தேன் ! உனக்காய் எனைத் தந்து எனக்குள் உனைச் சுமந்து என் ஆயுள் உள்ளவரை உன் சுமைகளைத் தாங்கும் சுமைதாங்கியாய் நான் இருக்க.... இனிமேலும் ஏன் அன்பே ! உன் கண்ணில் ஈரங்கள்...? படம் --- காதல் ! பாடல் --- உனக்கென இருப்பேன் உயிரையும்... -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Oct 21 2009, 01:35 AM
Post
#4
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 4,937 Joined: 5-September 05 From: Markham (Toronto )canada Member No.: 329 |
''பாடலில் பிறந்த கவிதை'' பாடலுக்கு பொருத்தமாக நன்றாக இருக்கிறது
நன்றி சத்தியா தொடருங்கள் -------------------- உன்னையே நீ உணர்
|
|
|
|
Oct 21 2009, 09:11 PM
Post
#5
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
''பாடலில் பிறந்த கவிதை'' பாடலுக்கு பொருத்தமாக நன்றாக இருக்கிறது நன்றி சத்தியா தொடருங்கள் ம்ம்... மிக்க நன்றி சுகந்தி. -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Oct 21 2009, 09:19 PM
Post
#6
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
பாடலில் பிறந்த கவிதை - 3 காதல் என்னும் நெருப்பின் தேனாற்றை என் இதயத்தினுள் ஊற்றி விட்டுச் சென்றது நீ! சிலிர்த்து எழும் கனவுகளுக்குள் தினம் மிதந்து சிக்குமுக்காடி தவித்துக் கிடக்கிறேன் நான்! நீ மனம் திறந்து அவிழ்க்க வேண்டிய சில புதிர்கள் இன்னும் புதர்களாய்க் கிடக்க... மேகம் என்று உருகிடாமல் தீ என்று காய்ந்திடாமல் நான் சருகாகி உதிர்கிறேன் தினம் உன் நினைவாலே...! படம் - யாரடி நீ மோகினி. பாடல் - வெண்மேகம் பெண்ணாக உருவானதோ... -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Oct 23 2009, 05:57 PM
Post
#7
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
பாடலில் பிறந்த கவிதை - 4 என் உயிரை மெல்லத் துளைத்து உள்ளே நுழைந்த தேன்குயிலே! கடல் ஆழத்தில் இருந்து நீர் மட்டம் வரை அடிக்கடி நீந்தி வந்து சுவாசிக்கும் மீன்கள் போல்... என்மன ஆழத்துள் உன் நினைவுகளும் நீச்சலடித்து நீந்தி வர... அங்கேயும் இங்கேயுமாய் அலைந்து திரிந்து உன் தரிசனம் தேடி நாள் முழுவதும் நான் தேய்ந்துதான் போகிறேன்! படம் ----- சச்சின் பாடல் ----- கண்மூடித் திறக்கும் போது...... -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Oct 23 2009, 11:11 PM
Post
#8
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 4,937 Joined: 5-September 05 From: Markham (Toronto )canada Member No.: 329 |
பாடலுக்கேற்ற உங்கள் கவிதைகள் பிரமாதம்
நன்றி சத்தியா -------------------- உன்னையே நீ உணர்
|
|
|
|
Oct 24 2009, 01:04 PM
Post
#9
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
பாடலுக்கேற்ற உங்கள் கவிதைகள் பிரமாதம் நன்றி சத்தியா ம்ம்... மிக்க நன்றிகள் சுகந்தி. சிரமங்கள் பாராது உடனடியாக பாடல்களைத் தேடித் தந்தமைக்கு மீண்டும் என் நன்றிகள். இனிமேலும் உங்கள் உதவி வேண்டும்... ஓகேவா? -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Oct 24 2009, 04:08 PM
Post
#10
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
பாடலில் பிறந்த கவிதை - 5 நீயாக வந்து மாட்டிக் கொள்ளவுமில்லை நானாக வந்து வீழ்ந்து கொள்ளவுமில்லை தானாகத் தானே நாமானோம்...! ம்ம்... உன் ஞாபகங்கள் எனை விடாமல் துரத்துகின்றன தவிர்க்கவும் முடியவில்லை உனைத் தூக்கி எறியவும் மனம் இல்லை! ஓ...! வலி! மரண வலி! உயிர் போகும் வலி! ஆனாலும் எனைத் தொடரும் உன் நினைவுகளைத் தத்தெடுத்து போர்த்திக் கொள்கிறேன் நான்! படம் - தாம் தூம் பாடல் - வலியே என் உயிர் வலியே... -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Oct 24 2009, 09:34 PM
Post
#11
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 4,937 Joined: 5-September 05 From: Markham (Toronto )canada Member No.: 329 |
அழகான கவிதை வரிகள்
வாழ்த்துக்கள் சத்தியா QUOTE இனிமேலும் உங்கள் உதவி வேண்டும்... ஓகேவா? you tube ல் இருக்கும் பாடல்கள் என்றால் ஒ.கே நன்றி சத்தியா This post has been edited by Suganthe: Oct 24 2009, 09:36 PM -------------------- உன்னையே நீ உணர்
|
|
|
|
Oct 25 2009, 01:08 PM
Post
#12
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
அழகான கவிதை வரிகள் வாழ்த்துக்கள் சத்தியா ம்ம்... உங்கள் வாழ்த்திற்கு நன்றிகள் சுகந்தி. you tube ல் இருக்கும் பாடல்கள் என்றால் ஒ.கே நன்றி சத்தியா ஓகே சுகந்தி ஓகே. -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Oct 25 2009, 03:34 PM
Post
#13
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
பாடலில் பிறந்த கவிதை - 6 என் மனசெல்லாம் உடைந்த கண்ணாடியாய் சிதறிக் கிடக்கிறது உன் நினைவுகள்! நீ என்னை மறந்தாயோ அல்லது என் கண்ணில் படாமல் மறைந்தாயோ தெரியவில்லை! என் விழி திறந்து தாய் மொழி மறந்து மனதில் ஏக்கங்கள் சுமந்தபடி உன் பெயரை உச்சரித்து... கனவாய் கலைந்த உன்னை கண்ணீரோடு தேடுகின்றேன்! உன் மௌனப் பூட்டுடைத்து எப்போது என் மனதை குளிர வைக்கப் போகின்றாய்...? படம் : உயிரே! பாடல் : கண்ணீரே! கண்ணீரே! ... -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Oct 26 2009, 02:24 AM
Post
#14
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 4,937 Joined: 5-September 05 From: Markham (Toronto )canada Member No.: 329 |
கவிதை அருமை
வாழ்த்துக்கள் சத்தியா நீங்கள் இந்த திறமையை வானொலி நிகழ்ச்சிகளில் பயன்படுத்தலாமே. -------------------- உன்னையே நீ உணர்
|
|
|
|
Oct 26 2009, 11:15 AM
Post
#15
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
கவிதை அருமை வாழ்த்துக்கள் சத்தியா ம்ம்... முதற்கண் உங்கள் வாழ்த்திற்கு என் நன்றிகள் சுகந்தி. நீங்கள் இந்த திறமையை வானொலி நிகழ்ச்சிகளில் பயன்படுத்தலாமே. ம்... முன்பு வானொலி நிகழ்ச்சியில் இது போன்ற கவிதைகள் எழுதி பங்குபற்றியதுண்டு. இப்போது அதிலெல்லாம் நாட்டம் இல்லை சுகந்தி. ஆனால்... எனக்கு ஆரம்ப காலத்திலிருந்தே இப்படி பாடல்களுக்கு கவிதைகள் எழுதுவதில் நல்ல விருப்பம். அதை விட மனமும் இல்லை. அதனால் இங்கே தொடர்கிறேன் சுகந்தி. -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Oct 27 2009, 03:09 PM
Post
#16
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
பாடலில் பிறந்த கவிதை - 7 அதோ... மேகத்தின் மேனியில் மெல்ல மறைந்தபடி ஓர் அழகிய மஞ்சள் நிலா! அது என் தேகமெங்கும் வழிந்தோட வைக்கிறது நின் ஞாபகங்களை! இதோ... துளித் துளியாய் வந்து விழுகிறது மழைத் துளி! அது உன் அருகாமையை என்னருகில் அழைத்து வந்தது! இப்படியே மலர்கிற ... மறைகிற ஒவ்வொரு நொடியிலும் எனை நீ இம்சை செய்ய... மதம் மறந்து... மனம் தொலைத்து... தீராத காதலில் மூழ்கி... தினம்தோறும் தேய்கிறேன் நான்! படம் : பொக்கிஷம். பாடல் : நிலா நீ வானம் காற்று... -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Oct 28 2009, 03:07 PM
Post
#17
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
பாடலில் பிறந்த கவிதை - 8 உள்ளத்து உணர்வுகள் உன் உணர்வால் எனை மெல்ல அணைத்துக் கொள்ள... நீ வரும் வழி பார்த்து என் விழிகள் வழியில் தவம் கிடக்கின்றன! அமைதியாய் நானிருந்து அன்போடு உனை நினைத்து உருகும் ஒவ்வொரு துளிக் கண்ணீரிலும் நீயாக நிறைய... ஒவ்வொரு பொழுதுகளிலும் என்னருகில் நீ வேண்டும்போல் என் மனம் வாஞ்சைப்பட்டுக் கொள்கிறது! ம்! என் மன வானில் எப்போது நீ பெளர்ணமியாவாய்...? படம்: டும் டும் டும். பாடல்: உன்பேரைச் சொன்னாலே... -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Oct 30 2009, 09:57 AM
Post
#18
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
பாடலில் பிறந்த கவிதை - 9 பிரிவுகளின் வலி மிகுந்த இந்த வேளையில்… உனது பிரிவைத் தாங்காது எனது உள்ளம் மெதுவாக அழுகிறது! நீ அருகில் இல்லாத நொடிகள் எல்லாம் யுகமாய் வலிக்க... காயங்களால் ரணப்பட்டு கொந்தளித்துப் போகிறது இந்த மனம்! ம்…! இந்தச் சின்ன இதயம் பிழியும் சோகங்களை எல்லாம் எந்த ஆறுதல்கள் அமைதிப்படுத்தும்…? படம் - காதல் சடுகுடு. பாடல் - மேகத்தில் ஒன்றாய் நின்றோமே... -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Oct 31 2009, 12:53 AM
Post
#19
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 4,937 Joined: 5-September 05 From: Markham (Toronto )canada Member No.: 329 |
ம்ம்... முதற்கண் உங்கள் வாழ்த்திற்கு என் நன்றிகள் சுகந்தி. ம்... முன்பு வானொலி நிகழ்ச்சியில் இது போன்ற கவிதைகள் எழுதி பங்குபற்றியதுண்டு. இப்போது அதிலெல்லாம் நாட்டம் இல்லை சுகந்தி. ஆனால்... எனக்கு ஆரம்ப காலத்திலிருந்தே இப்படி பாடல்களுக்கு கவிதைகள் எழுதுவதில் நல்ல விருப்பம். அதை விட மனமும் இல்லை. அதனால் இங்கே தொடர்கிறேன் சுகந்தி. வாழ்த்துக்கள் சத்தியா எல்லா கவிதைகளும் பிரமாதம்.இந்த கவிதைகளை பாடல்களுடன் உஙகள் குரலில் கேட்கும் போது எப்படி இருக்கும் என்று கற்பனை பண்ணியதுண்டு -------------------- உன்னையே நீ உணர்
|
|
|
|
Oct 31 2009, 11:14 AM
Post
#20
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
வாழ்த்துக்கள் சத்தியா எல்லா கவிதைகளும் பிரமாதம்.இந்த கவிதைகளை பாடல்களுடன் உஙகள் குரலில் கேட்கும் போது எப்படி இருக்கும் என்று கற்பனை பண்ணியதுண்டு ம்ம்... நன்றிகள் சுகந்தி. -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 04:28 PM |