ம்ம்... நன்றி ரதி.
பாடலில் பிறந்த கவிதை!
#101
Posted 03 July 2010 - 01:34 PM
ம்ம்... நன்றி ரதி.
#102
Posted 03 July 2010 - 01:39 PM
பாடலில் பிறந்த கவிதை - 56
இருண்டுபோன மனதோடும்
வறண்டுபோன புன்னகையோடும்
உன் நிழல் தேடி அலையும்
ஒரு காய்ந்த சருகாய் நான்!
என் இருண்ட மனதிற்கு
ஒளி தந்தது நீ!
என் உலர்ந்த உதட்டிற்கு
ஒரு சிறு புன்னகை தந்தது நீ!
உன் விழி பொழியும் காதலில்
உன் கரம்தரும் அணைப்பினில்
உன் மொழி பொழியும் அன்பினில்
உயிரோடு உயிராகி உறைந்து கிடக்கிறேன்!
இன்னும் வலிக்காத அன்பு தா
நான் வாழும் கொஞ்சக்காலம்
உன் அன்பில் வாழ்ந்துவிட்டுப் போகிறேன்!!!
படம் - அங்காடித் தெரு.
பாடல் - உன் பேரை சொல்லும் போதே ...
#103
போற்றுவோர் போற்ற; தூற்றுவோர் தூற்ற எம் தமிழ்ப் பயணம் தொடரும்...
போற்றுவோர் போற்ற; தூற்றுவோர் தூற்ற எம் தமிழ்ப் பயணம் தொடரும்...
Posted 04 July 2010 - 04:07 PM
பாடலில் பிறந்த கவிதை - 53
புத்தகம் நடுவே
மறைத்து வைக்கப்பட்ட
மென்மையான அந்த
மயில் இறகைப் போல...
நல்ல உவமானம் உவமேயம் கொண்ட வரிகள்!
பாடலில் பிறந்த கவிதை - 54
உனை என் கருவறையில்
சுமக்காத போதும்
என் இதயத்தில் சுமக்க...
என் கண்களில் இருந்து
சிந்தும் கண்ணீர்த் துளிகளில்
சந்தோசமும் துக்கமும் நீயாகிறாய்!!!
படம் - பவித்ரா.
பாடல் - அழகு நிலவே கதவு திறந்து ...
அருமை..!
பாடலில் பிறந்த கவிதை - 55
ஆழத்திலிருந்து
மெல்ல முளைவிட்டெழும்
வாழைக் குருத்தென
என் மனசுக்குள்
ரகசியமாய் நுழைந்து
மெல்ல முழைவிட்டு
வெளியே விரிகிறாய் நீ!
உன் பார்வைக் கணைகளால்
கோலம் போட்டுச் செல்கிறாய்
நீ வைத்துச் சென்ற
ஒவ்வொரு புள்ளியிலும்
ஆயுள் கைதியாய் நான்!!!
படம் - கோரிப்பாளையம்.
பாடல் - என்ன இந்த மாற்றமோ ...
கோலத்தின் புள்ளியை பார்வையுடன் ஒப்பிட்டவிதம் அருமை..!
பாடலில் பிறந்த கவிதை - 56
இன்னும் வலிக்காத அன்பு தா
நான் வாழும் கொஞ்சக்காலம்
உன் அன்பில் வாழ்ந்துவிட்டுப் போகிறேன்!!!
படம் - அங்காடித் தெரு.
பாடல் - உன் பேரை சொல்லும் போதே ...
அருமையான கவிதை முத்துகள்...பாராட்டுகள் ...வரிகள் மிகவும் அழகு.. அருமை...!
ஆணை காட்டில் அனலையும் விழுங்குவோம்...!

#104
ஒவ்வொரு மனிதனுடைய வாசலையும் குறைந்தபட்சம் ஒருமுறையாவது அதிர்ஷ்டம் தட்டுகிறது
ஒவ்வொரு மனிதனுடைய வாசலையும் குறைந்தபட்சம் ஒருமுறையாவது அதிர்ஷ்டம் தட்டுகிறது
Posted 06 July 2010 - 03:38 PM
கவி வரிகள்...
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தோழி!
#106
Posted 31 August 2010 - 07:15 PM
பாடலில் பிறந்த கவிதை - 57
உன் சுவாசம் தேடி
அலையும் பூவாய்
என் இதயம்!
இந்தக் கணமே
உன்னைப் பார்த்து
ஆசையாய்
சில வார்த்தைகள் பேசி…
ஆதரவாய் அணைக்கும்
உன் அன்புக் கரங்களுக்குள்
ஒரு கணம் இமை மூடி…
அமைதியாய் உறங்கிய
அந்த கருவறை சுகத்தை
மீண்டும் காணத் துடித்து…
உன் அன்பு வேண்டி
என் இருகரங்களை நீட்டுகிறேன்
சூடாமல் சென்று விடாதே என்னை!
!
படம் - நினைத்தாலே இனிக்கும்
பாடல் - அழகாய் பூக்குதே...
This post has been edited by சத்தியா: 31 August 2010 - 09:45 PM
#107
போற்றுவோர் போற்ற; தூற்றுவோர் தூற்ற எம் தமிழ்ப் பயணம் தொடரும்...
போற்றுவோர் போற்ற; தூற்றுவோர் தூற்ற எம் தமிழ்ப் பயணம் தொடரும்...
Posted 01 September 2010 - 10:52 PM
சத்தியா, on 31 August 2010 - 07:15 PM, said:
பாடலில் பிறந்த கவிதை - 57
உன் சுவாசம் தேடி
அலையும் பூவாய்
என் இதயம்!
படம் - நினைத்தாலே இனிக்கும்
பாடல் - அழகாய் பூக்குதே...
இந்தப் பாடல் எனக்குப் பிடித்தது என்பதை விட மனதுள் ஏதோ ஒரு புரியாத வலியைத் தரும் பாடல் என்று சொல்லலாம், அந்தப் பாடலுக்கேற்ப அழகாக பூத்த சத்தியாவின் கவிதை வரிகள் இனிக்கின்றன.
ஆணை காட்டில் அனலையும் விழுங்குவோம்...!

#109
ஒவ்வொரு மனிதனுடைய வாசலையும் குறைந்தபட்சம் ஒருமுறையாவது அதிர்ஷ்டம் தட்டுகிறது
ஒவ்வொரு மனிதனுடைய வாசலையும் குறைந்தபட்சம் ஒருமுறையாவது அதிர்ஷ்டம் தட்டுகிறது
Posted 02 September 2010 - 03:40 PM
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தோழி!
#111
Posted Yesterday, 11:49 AM
பாடலில் பிறந்த கவிதை - 58
இதுவரை உன்னை விழுங்கிய
எல்லா இரவுகளுக்குள்ளும்
இருந்த தனிமை தொலைத்து...
மனதின் அடி ஆழத்திலிருந்து
மொட்டவிழ்ந்த காதலோடு
உன் விரல்கள் வீணை மீட்டத் துடிக்க...
சோலைப் பூங்குயிலொன்று
சொக்கத் தங்கமாய்
சோடி சேரத் தவமிருக்க...
அன்பின் நீரோட்டமாய்
காலப் பெருங்கடலில்
கட்டியெழுப்பிய கனவுகளோடு
பொன் முடிச்சு மூன்று விழும்
பொன்னான நன்நாளில்...
இல்லற அன்பில் இணைந்து
இருவரும் இனிதே வாழ்கவென
இதயம் நிறைந்து வாழ்த்துகிறேன்!!!
படம் - கோபுர வாசலிலே
பாடல் - தேவதை போலொரு...

***இவள் - சத்தியா***

Help















