நீ.. |
![]() ![]() |
நீ.. |
Oct 19 2009, 05:45 AM
Post
#1
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 23,105 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
நீ.. ![]() நான் என்னை மறந்து நினைக்கும் போதெல்லாம்.. நீ மட்டும் தெய்வமாகிறாய்.. காரணம் கேட்டு.. மனச்சாட்சியை கேள்வி கேட்கும் பொழுதும்.. அங்கே நீ மட்டும் ஆட்சி செய்கின்றாய்.. தீபாவளி இனிப்புப் பண்டங்களை ருசித்து சாப்பிடும் போதும்.. இனிக்க இனிக்க நீயே முன் நிற்கின்றாய்.. கோவிலுக்குச் சென்று.. அமுது உண்ணும் போதும்.. நீ தந்த அமுது தான் ஞாபகம்.. இனிப் போதும்..போதும்.. உறங்கவும் முடியவில்லை.. உண்ணவும் முடியவில்லை.. எண்ணங்கள் யாவும்.. மரத்தின் கிளை, இலை போலவும்.. வானின் நட்சத்திரங்கள் போலவும்.. நீயே தான்..... என்னுள் சங்கமித்துள்ளாய்.. உன் நினைவேயன்றி வேறு எதுவுமில்லை... நீ எனக்கு கற்பித்த.. வளர்த்த தமிழ்.. உப்புக் கடல் நீராய்..என் உதிரத்தில்.. என்னுள் உறைந்து கிடக்கின்றது.. கோபுர கலசம் போல்.. என் வாழ்வின் சுடர் ஒளி நீ.. உள்ளங்கை ரேகை போல்.. உள்ளத்தில் கலந்திருக்கும் உயிரும் நீ.. என் வாழ்வில் வந்த வசந்தம்..நீ மெய்யுள் கலந்த பந்தம் நீ.. என்றும் என் சொந்தம்..நீ.. This post has been edited by Thanimathy: Oct 19 2009, 09:36 PM -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Oct 21 2009, 09:21 PM
Post
#2
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,221 Joined: 25-July 06 From: germany Member No.: 589 |
ம்…தனிமதி…
கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு சகோதரி… அந்த சொந்தம் கொடுத்து வைத்தவர் தான்.. உங்கள் அன்பை பெற்றுகொண்டார்…எனக்கு பொறாமையா இருக்கு இப்படி ஒரு உறவு எனக்கு இல்லையே என்று… இருந்தாலும் உங்கள் அன்பு எங்கள் அனைவருக்கும் முற்றத்தில் கிடைத்ததே…தனிமதியின் பாசம் என்றால் சும்மாவா…தனியே…! வாழ்த்துக்கள்..!!! |
|
|
|
Oct 21 2009, 10:29 PM
Post
#3
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 547 Joined: 9-October 09 From: நாடோடி! Member No.: 3,114 |
QUOTE கோவிலுக்குச் சென்று.. அமுது உண்ணும் போதும்.. நீ தந்த அமுது தான் ஞாபகம்.. இந்த வரிகளுக்குரிய சொந்தம்... அன்னையைத் தவிர வேறு யாராக இருக்கமுடியும்? கவிதைக் கடலில் எம்மை மூழ்கடித்தமைக்கு பாராட்டுக்கள்... -------------------- அன்ன மூட்டிய தெய்வ மணிக்கையின் ஆணை காட்டில் அனலையும் விழுங்குவோம்...! ![]() ![]() |
|
|
|
Oct 26 2009, 08:20 PM
Post
#4
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 23,105 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
ம்…தனிமதி… கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு சகோதரி… அந்த சொந்தம் கொடுத்து வைத்தவர் தான்.. உங்கள் அன்பை பெற்றுகொண்டார்…எனக்கு பொறாமையா இருக்கு இப்படி ஒரு உறவு எனக்கு இல்லையே என்று… இருந்தாலும் உங்கள் அன்பு எங்கள் அனைவருக்கும் முற்றத்தில் கிடைத்ததே…தனிமதியின் பாசம் என்றால் சும்மாவா…தனியே…! வாழ்த்துக்கள்..!!! QUOTE தனிமதியின் பாசம் என்றால் சும்மாவா…தனியே…! உங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் மீரா..... இந்த வரிகளுக்குரிய சொந்தம்... அன்னையைத் தவிர வேறு யாராக இருக்கமுடியும்? கவிதைக் கடலில் எம்மை மூழ்கடித்தமைக்கு பாராட்டுக்கள்... வேறு யாராகயிருந்தாலும்.. அன்னையாக பார்க்கலாம் அல்லவா.. உங்கள் அன்பான பாராட்டுக்களுக்கு நன்றி பாரதி..... -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Nov 7 2009, 09:58 AM
Post
#5
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 12,034 Joined: 26-January 08 Member No.: 2,683 |
நன்றாயிருந்தது!
வாழ்த்துக்கள் தனிமதி! -------------------- |
|
|
|
Nov 7 2009, 06:20 PM
Post
#6
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 23,105 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
-------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 1st August 2010 - 07:13 AM |