IPB

Welcome Guest ( Log In | Register )

<% ANNOUNCEMENT %>
 
Reply to this topicStart new topic
நிஜங்களின் தரிசனம்...........2
சத்தியா
post Nov 25 2004, 06:46 PM
Post #1


Senior
**********

Group: Moderators
Posts: 25,080
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



நிஜங்களின் தரிசனம்...........2

அந்தத் தொழிற் கல்விக் கூடத்தில் சில வாரங்களுக்கு முன் ஆரம்ப மொழிபயிலும் பிரிவில், கிட்டத்தட்ட 40-45 வயது மதிக்கத்தக்க அந்த நபருடன் ஓர் நாள் வந்து சேர்ந்தாள் சுருதி. அவளை தேநீர் இடைவேளையின் போது நான் அடிக்கடி சந்திப்பதுண்டு.

மொட்டைத் தலையும், அளவுக்கு மீறிய உடல் பரும னும், பென்னம் பெரிய வயிறும் இத்தனையும் ஒருங்கே அமைந்த அந்த நபரைப் பார்த்ததும் சுருதியின் தந்தை யாக இருக்கும் என்று நானும் நினைத்துக் கொண்டேன்.

தினசரி காலையும், மதியமும், மாலையும் காரில் கூட்டி வந்து விடுவதும், ஏற்றிச் செல்வதையும் நான் அடிக்கடி கண்டிருக்கிறேன். சுருதியைக் காணும் வேளைகளில் நானும் சிரித்து விட்டு செல்வதுண்டு.

சில சந்தர்ப்பங்களில் நானும்….

“உங்களுக்கு என்ன சுருதி ? அப்பா பிள்ளேல நல்ல பாசம் போல. பிள்ளையை நடக்க விடாமல் காரில் தினமும் ஏற்றி இறக்கிறார்”… என்பேன்.

பதிலுக்கு அவளும் வில்லங்கத்துக்கு வரவழைக்கப்பட்ட ஓர் புன்னகையை உதிர்த்து விட்டுச் செல்வாள். அது வும் அந்த நபர் அருகிலிருக்கும் சமயத்தில் நான் சிரித்தால் கூட பதிலுக்கு அவள் புன்னகை செய்வதே கிடையாது. ஏதோ ஓர் வித பயத்தில் நடுக்கம் கொண்ட வளாய் எதையுமே காணாதது போல் போய் விடுவாள்.

“ஓ!… அப்பா மிகவும் கண்டிப்பானவர் போல. அதுதான் சுருதி சிரிக்கவும் பயப்படுகிறாள்… என்று நானும் நினைத்தவளாய் அப்படியான வேளைகளில் நானும் புன்னகை செய்வதைத் தவிர்த்துக் கொண்டேன்.

இப்படியான அப்பாமார்கள் இன்னமும் அதுவும் வெளி நாட்டிலும் உலாவுகிறார்களா?… என்ற கேள்வி எனக்குள் அடிக்கடி எழுவதும் உண்டு.

அன்று ஓர் நாள். சுருதியின் வகுப்பில் ஆசிரியர் வகுப்பு க்கு வரவில்லை. ஆதலால் அவர்கள் எல்லோரும் திரு ம்பி வீட்டுக்கு போக வேண்டிய நிலை. அந்த வகுப்பி
லிருந்தவர்கள் எல்லோரும் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டு இருந்தார்கள். சுருதி என் வகுப்பு வாசலில் வந்து நின்று கொண்டு என்னை வரும்படி கையால்,
சைகை காட்டினாள்.

நானும் எனது ஆசிரியரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு அவளருகில் சென்று என்னவென வினாவி னேன். அவளும் தன் நிலமையைக் கூறி…

“ மதியம் வரை உங்கள் வகுப்பில் இருக்க முடியுமா?”… எனக் கேட்டாள். நானும் எனது ஆசிரியரிடம் அனுமதி வாங்கிக் கொள்ள… சுருதியும் என்னருகில் வந்து அமர்ந்து கொண்டாள். காலை 10 மணிக்கு தேநீர் இடை வேளையின் போது……..

“என்ன சுருதி அப்பாவுக்காக காத்திருக்கிறீர்களா?”…. என்றேன் நான்.

அவளின் முகம் சட்டென மாறியது. அவள் கண்கள் கலங்கின.

“எல்லோரும் அப்படித்தான் சொல்கிறார்கள் சத்தியா. அது எனது அப்பா அல்ல. அது என் கணவர் என்றாள்.”

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. மிகவும் மெல்லிய
உடலமைப்பும், வெள்ளை நிறமும் கொண்ட இவளைப் பார்த்தால் அவரின்மகள் போலல்லவா இருக்கிறாள்? இவளின் வயதுக்கும், உருவத்துக்கும் ஏணி வைத்தா லும் எட்டாத, பொருத்தமற்ற ஓருவர் எப்படி இவள் கணவராய் வந்தார்?…. இப்படி என்னுள் ஆயிரம் கேள்விகள் அடுக்கடுக்காய் எழுந்தன. இருந்தாலும் என்னைச் சுதாகரித்துக் கொண்டு…

”மன்னித்துக் கொள்ளுங்கள் சுருதி”… என்றேன்.

“இல்லைச் சத்தியா இதில் உங்களில் என்ன பிழை இருக்கிறது? நீங்கள் மட்டு மல்ல பார்ப்பவர்கள் எல்லோ ரும் அப்படித்தான் நினைக்கிறார்கள், அப்படித்தான்
சொல்கிறார்கள்.”… என்றாள். பின் அவளாகவே தன் கதையைச் சொல்லத் தொடங்கினாள்.

ஆம். அவள் குடும்பம் ஓர் ஏழ்மைக் குடும்பம். ஐந்து பெண் பிள்ளைகள். ஐந்து பெண்களைப் பெற்றால் “அரசனும் ஆண்டியாவான்” என்பது போல், அவளின்
குடும்பமும் கஸ்ரத்தை சுமந்தது.

சுருதி தன் படிப்பை முடித்து விட்டு தன் தாயாருக்கு உதவியாய் வீட்டில் இருந்தாள். சுருதியின் தாயாருக்கும் தந்தைக்கும் ஐந்து பெண் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து ஒரே வேதனை. இந்த வேளையில்தான் சுருதியின் மாமனார் மூலம் சுருதிக்கு ஓர் வரன் பேசப்
பட்டு வந்தது.

“வெளிநாட்டு மாப்பிள்ளையாம். அதிலும் சீதனம் எதுவும் வேண்டாமாம். ஓர் அழகான பெண்ணை மாத்திரம்தான் அவர்கள் எதிர்பார்க்கின்றார்களாம்.”…

இப்படி அவளின் மாமனார் சொன்னதும், தம் குடும்பக் கஸ்ரத்தின் நிமித்தம் தம் பெண் பிள்ளைகளை எப்படிக் கரை சேர்ப்பது? அதிலும் இந்தக் காலத்தில் பெண்ணை சீதனம் எதுவும் இல்லாமல் எப்படிக் கரை சேர்ப்பது? என்ற சோகத்துக்குள் துடித்துக் கொண்டிருந்த அவளின் பெற்றோருக்கு ஏதோ விடிவு பிறந்தது போல் உணர்வு.

பெற்றோர்கள் இருவரும் யோசித்து ஓர் முடிவுக்கு வந்தவர்களாய்… இந்த விடயத்தை சுருதிக்குச் சொன் னார்கள். சொன்னதும் சுருதி உடனே மறுத்து விட்டாள்.

அம்மா அப்பாவைப் பிரிந்து தான் தூரதேசம் போக மாட்டேன் என்றாள் சுருதி. அது மட்டுமல்ல அவளின் வயதோ 19. ஆனால் அந்த மணமகனின் வயது 41. இதுவும் ஓர் காரணமாக இருந்தது. அப்போது அவளின் தாயும், தந்தையும் தமது கஸ்ரத்தை எடுத்துக் கூறி, அவளை ஒருவாறு சம்மதிக்க வைத்து விட்டார்கள். மாதங்கள் சில கடந்தன. சிங்கப்பூரில் மாப்பிள்ளை வந்து திருமணம் செய்வதாய் ஏற்பாடு செய்யப்பட்டது.

சுருதியும் ஆயிரம் எண்ணங்களைச் சுமந்து கொண்டு சிங்கப்பூர் வந்து இறங்கினாள். அவள் சிங்கப்பூர் வந்து ஓரிரு நாட்களில் பிரான்சிலிருந்து மாப்பிள்ளையும் சிங்கப்பூர் வருகிறார். மாப்பிள்ளையை வரவேற்க மாமா வுடன் எயாப்போட் சென்றாள் சுருதி. மொட்டைத் தலை மாப்பிள்ளையைக் கண்டதும் திகைத்து விட்டாள் சுருதி. மனம் உடைந்தவளாய் தனக்கு இந்த மாப்பிள் ளையைப் பிடிக்கவில்லை என்று மாமனாரிடம் கூறி அழுதாள்.

“ஓம் என்று நீயும் ஒத்துக் கொண்டு தானே வந்தாய்?” என்கிறார் மாமனார்.

“மாமா போட்டோவில் அவர் அழகாகத்தானே இருந்தார்… அத்தோடு தலையில் நிறைய முடியும் இருந்ததே?”….

இது அவளின் கண்ணீரோடு சிந்திய வார்த்தைகள். ஆனால் திருமணத்துக்கான திட்டங்களும், ஏற்பாடுக ளும் எல்லாமே முடிவுற்ற நிலையில் இப்போது எப்படி வேண்டாம் என்று சொல்வது? இது மாமனாரின் வாதம்.

அவளின் வாதங்கள் எதுவுமே அங்கு செல்லுபடியா காத நிலையில் மனதைக் கல்லாக்கிக் கொண்டு பலிக் கடாவைப் போல் கழுத்தை நீட்ட… தாலி சுருதியின் கழுத்தில் ஏறி விடுகிறது.

பிறகு என்ன? பிரான்ஸ் வந்து சேர்ந்தாள். உருவத் திலோ, வயதிலோ ஒத்து வராத கணவனின் மனதுக் குள் ஓர் தாழ்வு மனப்பான்மையும், சந்தேகமும் நிறை ந்து வழிய… சுருதி யாருடனும் பழகுவதையோ, கதைப் பதையோ விரும்பாது கட்டுப்பாடுகளை கொட்டிக் குவிக் கிறார் மாப்பிள்ளை.

”இதோ இங்கு வெளி வரும் அத்தனை தமிழ் ரீ வீ இன் வருட சாந்தா அட்டை. அதைப் பார்த்துக் கொண்டு வீட்டுக்குள் பேசாமல் இரு”… என்கிறாராம். செய்வதறி யாது துடிக்கின்றாள் சுருதி.

“இவை எல்லாம் உங்கள் அம்மா, அப்பாவுக்குத் தெரியுமா?”… என்று கேட்டேன்.

“இல்லை. நான் இதுவரை எதுவுமே சொல்லவில்லை. சொல்லித்தான் இனி என்ன நடக்கப் போகிறது? நான் மறுத்த போது என் பேச்சைக் கேட்காது, என் உணர்ச்சி களை மதிக்காது என்னை கட்டாயப்படுத்தி அனுப்பி விட்டார்கள். மகள் சந்தோசமாக இருக்கிறாள் என்ற சந்தோசத்தோடு அவர்களாவது நிம்மதியாய் இருக்கட் டும்”… என்று கூறியவள், இறுதியாக….

“எங்காவது ஓடிப் போகலாம் என்று நான் நினைக்கின் றேன். ஆனால் எனக்கு என யாரும் இங்கே இல்லை”… என்றாள் பரிதாபக் குரலில்.



1) குடும்ப கஸ்ரத்துக்காக பெற்றோர்கள் ஓர் பெண்ணின் உணர்ச்சிகளை மதிக்காது, வயது வித்தியாசத்தைப் பாராது திருமணம் செய்து வைப்பது சரியா?

2)இந்த சுருதி எங்காவது ஓடி விடலாம் என்று சொல்கிறாளே! அப்படி ஓர்
தவறை நாளை அவள் செய்தாளானால் அவளைத்தானே கூடாதவள் என்று எல்லோரும் அவளை ஒதுக்கி வைக்கவும் போகிறார்கள்?
[/color]


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
thanuja
post Nov 25 2004, 07:01 PM
Post #2


Senior
**********

Group: Disabled Members
Posts: 1,457
Joined: 14-July 04
Member No.: 137



நன்றி.இப்படி எத்தனையோ சோகங்கள் புலம்பெயர்
வாழ்வில் குடி கொண்டிருக்கின்றன.


--------------------
அன்பு வைப்பவரின் அன்பை நேசி ; துன்பம் வரும் போதும் இன்பமாய் தெரியும்
Go to the top of the page
 
+Quote Post
றெனிநிமல்
post Nov 25 2004, 08:45 PM
Post #3


Senior
**********

Group: Disabled Members
Posts: 11,282
Joined: 25-February 04
Member No.: 61



நன்றி சத்தியா.

சுருதி நிலையை நினைக்கும் போது கஸ்டமாகத்தான் இருக்கின்றது.

பொதுவாகவே வெளிநாடு மாயை எங்கள் நாட்டிலே இருக்கின்றது. இதற்கு காரணம் நிறையவே சொல்லலாம்.
இங்கே எவ்வளவு கஸ்டப்பட்டாலும், ஊருக்குப் போய் விட்டால் ஏதோ ராஜா வீட்டு பிள்ளை போல் நடந்து கொள்வார்கள் பலர். கண்ணுக் கெட்டிய தூரத்தில் இருக்கும் இடத்திற்கு போவதற்கு வாடகை வாகனம், பாதையிலே பிச்சைக்காரரைப் பார்த்தால் நூறு ரூபா நோட்டை கொடுத்தல். என்று எல்லாமே பகட்டாகவே நடந்து கொள்வார்கள்.

பாவம் இதை நம்பி எம் மக்களும் ஏமாந்து விடுவார்கள். ஐஸ் கொட்டும் போது அதில் விளையாடலாம் என்று கூட நினைப்பார்கள்! ஆனால் ஐஸின் கொடுமை அனுபவித்தால் தான் தெரியும்.

பெண்ணைப் பெற்றவர்கள் எப்படியாவது அவளைக் கரை சேர்த்து விட்டால் போது என்று நினைப்பது பெரிய தவறு. அதையும் விட கொடுமை ஊரிலே பெண்ணைக் கொடுத்தால் பார்த்துக் கொண்டாவது இருக்கலாம்,ஆனால் அவர்கள் வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு கொடுப்பதை ஆடம்பரமாகவும்,பிள்ளை நல்லா இருக்கும் என்றும் எண்ணுகின்றார்கள்.

ஊரில் என்றால் பெண்ணைக் கொடுக்கும் முன் சாதி,சமயம்,குடும்பம்,அந்தஸ்து,வயது,ஜாதகம்,அழகு என்று எத்தனையோ வற்றைப் பார்ப்பார்கள். ஆனால் இவைவெல்லாம் வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு கிடையாது! காரணம் வெளிநாட்டு மாயை!

பள்ளி விட்டால் வீடு. மாலை 6மணிக்கு மேல் வெளியே விடுவது கிடையாது, பக்கத்து ஊருக்குப் போவதற்கு கூட துணையில்லை என்றால் பயணமே கிடையாது. இப்படி எல்லாம் வளர்த்தவர்கள் கடைசியில் கண்டம் விட்டு கண்டம் தனியே அனுப்புகின்றார்கள். அதிலும் முகவர்களோடு! இதையெல்லாம் எப்படி செய்கின்றார்கள் என்று தான் நானே நினைத்துப் பார்ப்பது உண்டு.

ஏன் பெண் பிள்ளை மீதும் குறையில்லாமல் இல்லை. இப்போ ஓடிப் போகலாமா, நடந்து போகலாமா என்று நினைப்பவர்கள். திருமணத்தின் முன் முடியாது என்று சொல்லாம் தானே?


--------------------
பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம்.
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Nov 26 2004, 07:47 AM
Post #4


Senior
**********

Group: Moderators
Posts: 25,080
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



QUOTE (றெனி @ Nov 25 2004, 08:45 PM)
ஏன் பெண் பிள்ளை மீதும் குறையில்லாமல் இல்லை. இப்போ ஓடிப் போகலாமா, நடந்து போகலாமா என்று நினைப்பவர்கள். திருமணத்தின் முன் முடியாது என்று சொல்லாம் தானே?


இல்லையே றெனி. இங்கே பாருங்களேன்....

QUOTE
இந்த விடயத்தை சுருதிக்குச் சொன்னார்கள். சொன்னதும் சுருதி உடனே மறுத்து விட்டாள். அம்மா அப்பாவைப் பிரிந்து தான் தூர தேசம் போக மாட்டேன் என்றாள் சுருதி. அது மட்டுமல்ல அவளின் வயதோ 19. ஆனால் அந்த மணமகனின் வயது 41. இதுவும் ஓர் காரணமாக இருந்தது. அப்போது அவளின் தாயும், தந்தையும் தமது கஸ்ரத்தை எடுத்துக் கூறி, அவளை ஒருவாறு சம்மதிக்க வைத்து விட்டார்கள்.


அதை விட பின்பு மாமனாரிடமும் இதை மறுத்து இருக்கிறாளே?
QUOTE
மனம் உடைந்தவளாய் தனக்கு இந்த மாப்பிள்ளையைப் பிடிக்கவில்லை என்று மாமனாரிடம் கூறி அழுதாள்.

"ஓம் என்று நீயும் ஒத்துக் கொண்டு தானே வந்தாய்?" என்கிறார் மாமனார்.

"மாமா போட்டோவில் அவர் அழகாகத்தானே இருந்தார். அத்தோடு தலையில் நிறைய முடியும் இருந்ததே?" இது அவளின் கண்ணீரோடு சிந்திய வார்த்தைகள். ஆனால் திருமணத்துக்கான திட்டங்களும், ஏற்பாடுகளும் எல்லாமே முடிவுற்ற நிலையில் இப்போது எப்படி வேண்டாம் என்று சொல்வது? இது மாமனாரின் வாதம். அவளின் வாதங்கள் எதுவுமே அங்கு செல்லு படியாகாத நிலையில் மனதைக் கல்லாக்கிக் கொண்டு பலிக்கடாவைப் போல் கழுத்தை நீட்ட, தாலி சுருதியின் கழுத்தில் ஏறி விடுகிறது.


மொத்தத்தில் அவளின் வார்த்தைகளை எங்கும் எவரும் கேட்டவில்லையே?
இதற்கு சுருதி என்ன செய்ய முடியும்?


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
jay_jay
post Nov 26 2004, 08:09 AM
Post #5


Senior
**********

Group: Disabled Members
Posts: 1,461
Joined: 28-July 04
Member No.: 141



நன்றி சத்தியா, றெனி. நல்ல விவாதம்.


--------------------
தமிழன் இல்லாத நாடில்லை - தமிழனுக்கென்று ஓரு நாடில்லை
Go to the top of the page
 
+Quote Post
bavan
post Nov 26 2004, 12:37 PM
Post #6


நிர்வாகம்
**********

Group: Support
Posts: 4,369
Joined: 18-December 03
From: Scotland
Member No.: 7



இந்த விடயத்தில் ஒரு விடயத்தை எடுத்துக்கூறலாம்.

திருமணத்திற்கு சுருதி ஒத்துக்கொண்டது பெற்றோருக்காக,ஆனாலும் அவ்வேளையிலேயே கணவருக்கு 41 வயது என்பது அவருக்குத் தெரியும்.

QUOTE
"மாமா போட்டோவில் அவர் அழகாகத்தானே இருந்தார். அத்தோடு தலையில் நிறைய முடியும் இருந்ததே?" இது அவளின் கண்ணீரோடு சிந்திய வார்த்தைகள்


19 வயது நிரம்பிய சுருதியின் எதிர்பார்ப்பு தவறு என்று கொள்ள முடியாது.எனினும், மனிதனின் வெளித்தோற்றத்தினை வைத்து ஒரு மனிதனை வெறுப்பதும் தவறானது.

QUOTE
ஆனால் திருமணத்துக்கான திட்டங்களும், ஏற்பாடுகளும் எல்லாமே முடிவுற்ற நிலையில் இப்போது எப்படி வேண்டாம் என்று சொல்வது? இது மாமனாரின் வாதம். அவளின் வாதங்கள் எதுவுமே அங்கு செல்லு படியாகாத நிலையில் மனதைக் கல்லாக்கிக் கொண்டு பலிக்கடாவைப் போல் கழுத்தை நீட்ட, தாலி சுருதியின் கழுத்தில் ஏறி விடுகிறது.


திருமணமான பின்பு ஓடிப்போக எத்தனிக்கும் சுருதி,தனது வார்த்தைகள் எதுவும் செல்லுபடியாகவில்லை என்று தெரிந்த நேரத்திலேயே ஓடிப்போயிருந்தால் அவருக்கும் அதில் பயன் இருந்திருக்கும்.

இப்போது ஓடிப்போனால் இரண்டு குடும்பமும் பாதிக்கப்படும்.

QUOTE
உருவத்திலோ, வயதிலோ ஒத்து
வராத கணவனின் மனதுக்குள் ஓர் தாள்வு மனப்பான்மையும், சந்தேகமும் நிறைந்து வழிய, சுருதி யாருடனும் பழகுவதையோ, கதைப்பதையோ விரும்பாது கட்டுப் பாடுகளை கொட்டிக் குவிக்கிறார் மாப்பிள்ளை. "இதோ இங்கு வெளி வரும் அத்தனை தமிழ் ரீ வீ இன் வருட சாந்தா அட்டை. அதைப் பார்த்துக் கொண்டு வீட்டுக்குள் பேசாமல் இரு" என்கிறாராம்


தன்னைவிட மிகவும் இள வயதான 19 வயதுப்பெண்ணை விரும்பிய மாப்பிள்ளை இந்த அளவுக்குக் கொடூரமாக கற்பனை செய்வது கண்டிக்கப்படவேண்டும்.

எனினும்,அடிப்படையில் பெண்களை வேலைக்கு அனுப்பி அவர்கள் சம்பளத்தில் வாழும் சில கணவன்களும் ஐரோப்பாவில் இருக்கிறார்கள்.

இப்படியான சமுதாய உண்மைகளை சுருதி தெரிந்துகொண்டால் அல்லது அவர்கள் வேலையில்,வீட்டில் படு்ம் வேதனைகளை நேரில் பார்த்தால் ஒரு வேளை அவருடைய மனதில் மாற்றங்கள் ஏற்படும்.

QUOTE
1) குடும்ப கஸ்ரத்துக்காக பெற்றோர்கள் ஓர் பெண்ணின் உணர்ச்சிகளை மதிக்காது, வயது வித்தியாசத்தைப் பாராது திருமணம் செய்து வைப்பது சரியா?


எனவே, முழுக் குற்றமும் பெற்றோரை சென்றடைகிறது.

ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள், தங்கள் பிள்ளைகளுக்கான தொழில் சார் கல்வியைப் பெற்றுக்கொடுத்து வாழ்க்கையை முன்னேற்றியிருக்கலாம்.

பிள்ளைகளுக்குத் தொழில் சார் கல்வியையோ அடிப்படைக் கல்வியையோ வழங்க முடியாத நிலையில் அவர்கள் வாழ்க்கைத் தரம் இருந்திருந்தால் பிள்ளைகள் அவர்களது வாழ்க்கைத் தரத்ததை உணர்ந்தவர்களாக வளர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

ஊரில் கஸ்டப்படுவதை விட வெளிநாட்டில் மகள் சொகுசாக வாழலாம், எதிர்காலத்தில் தங்கைகளுக்கும் வாழ்க்கைக்கு உதவி செய்வார் என்ற நம்பிக்கையுடன் சுருதியின் பெற்றோர்கள் கட்டாயப்படுத்தியிக்கலாம்.

வெளிநாட்டு மாப்பிள்ளை தேடும் பலரிடம் இவ்வகையான எதிர்பார்ப்புக்கள் இருக்கிறது.

இந்த நிலையை நாட்டின் பொருளாதாரம்,புறச் சூழல் என்று பலவகை எதிர்பாராத விளைவுகளின் காரணமாக ஏற்பட்ட பின்னடைவாகவே கொள்ளலாம்.

சுருதிக்கு வயது 19 என்பதால் அவரும் நெருக்கடியான கால கட்டத்தில் பிறந்தவராகவே இருக்க வேண்டும்.

எனினும், சமூகத்தில் இவ்வாறான தவறுகள் கண்டிக்கப்படவே வேண்டும்.

சுருதி உட்பட, ஐந்து பெண் பிள்ளைகளின் பெற்றோர்களான சுருதியின் பெற்றோருக்கும், தன்னை விட மிகவும் இளமையான பெண்ணை திருமணம் செய்துவிட்டு சந்தேகப்படும் கணவன் என்று அவர்கள் அனைவரும் குற்றவாளிகளாகவே எனது பார்வையில் தெரிகிறார்கள்.

இரண்டு குடும்பமும் சேர்ந்து சுருதியின் பேச்சுக்கும் மதிப்பளித்து கலந்து ஆலாசிப்பதே சிறந்த வழி என்று நினைக்கிறேன்.


--------------------
நிலா ஒன்லைன் - எங்கும் எப்போதும் உங்களோடு..!
அன்புடன் : பவன்.
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Nov 26 2004, 12:51 PM
Post #7


Senior
**********

Group: Moderators
Posts: 25,080
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



QUOTE (bavan @ Nov 26 2004, 12:37 PM)
QUOTE
1) குடும்ப கஸ்ரத்துக்காக பெற்றோர்கள் ஓர் பெண்ணின் உணர்ச்சிகளை மதிக்காது, வயது வித்தியாசத்தைப் பாராது திருமணம் செய்து வைப்பது சரியா?


எனவே, முழுக் குற்றமும் பெற்றோரை சென்றடைகிறது.

ஊரில் கஸ்டப்படுவதை விட வெளிநாட்டில் மகள் சொகுசாக வாழலாம், எதிர்காலத்தில் தங்கைகளுக்கும் வாழ்க்கைக்கு உதவி செய்வார் என்ற நம்பிக்கையுடன் சுருதியின் பெற்றோர்கள் கட்டாயப்படுத்தியிக்கலாம்.

வெளிநாட்டு மாப்பிள்ளை தேடும் பலரிடம் இவ்வகையான எதிர்பார்ப்புக்கள் இருக்கிறது.

சுருதிக்கு வயது 19 என்பதால் அவரும் நெருக்கடியான கால கட்டத்தில் பிறந்தவராகவே இருக்க வேண்டும்.

எனினும், சமூகத்தில் இவ்வாறான தவறுகள் கண்டிக்கப்படவே வேண்டும்.

சுருதி உட்பட, ஐந்து பெண் பிள்ளைகளின் பெற்றோர்களான சுருதியின் பெற்றோருக்கும், தன்னை விட மிகவும் இளமையான பெண்ணை திருமணம் செய்துவிட்டு சந்தேகப்படும் கணவன் என்று அவர்கள் அனைவரும் குற்றவாளிகளாகவே எனது பார்வையில் தெரிகிறார்கள்.



நன்றி பவன். இந்தக் கருத்துக்களே என் மனதிலும் பட்டமையால் தான் அந்த
வினாவை நான் முன் வைத்தேன்.


QUOTE
எனினும்,அடிப்படையில் பெண்களை வேலைக்கு அனுப்பி அவர்கள் சம்பளத்தில் வாழும் சில கணவன்களும் ஐரோப்பாவில் இருக்கிறார்கள்.

இப்படியான சமுதாய உண்மைகளை சுருதி தெரிந்துகொண்டால் அல்லது அவர்கள் வேலையில்,வீட்டில் படு்ம் வேதனைகளை நேரில் பார்த்தால் ஒரு வேளை அவருடைய மனதில் மாற்றங்கள் ஏற்படும்.


இது சரியாகப் பட்டாலும், என் மனதில் இன்னோர் வினா எழுகின்றது. சரி மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போமே?


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
roy
post Nov 26 2004, 05:43 PM
Post #8


Senior
**********

Group: Disabled Members
Posts: 1,979
Joined: 19-February 04
Member No.: 57



QUOTE (சத்த @ Nov 25 2004, 06:46 PM)
"எங்காவது ஓடிப் போகலாம் என்று நான் நினைக்கின்றேன். ஆனால் எனக்கு என யாரும் இங்கே இல்லை என்றாள் பரிதாபக் குரலில்.

ohmy.gif ohmy.gif ohmy.gif ohmy.gif ohmy.gif


--------------------
something is better than nothing
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Nov 26 2004, 06:39 PM
Post #9


Senior
**********

Group: Moderators
Posts: 25,080
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



QUOTE (றோய @ Nov 26 2004, 05:43 PM)
QUOTE (சத்த @ Nov 25 2004, 06:46 PM)
"எங்காவது ஓடிப் போகலாம் என்று நான் நினைக்கின்றேன். ஆனால் எனக்கு என யாரும் இங்கே இல்லை என்றாள் பரிதாபக் குரலில்.

ohmy.gif ohmy.gif ohmy.gif ohmy.gif ohmy.gif


என்ன றோய் இப்படி ஆகிவிட்டீர்கள்? அதாவது சுருதி சொன்ன கருத்தின் படி,
தான் ஆறுதல் என்று தேடி ஓடுவதற்கு சொந்தங்கள், பந்தங்கள், உறவுகள்,
நண்பர்கள் என்று தனக்கு யாருமே இங்கே இல்லையே என்றுதான். வேறு
விதமாக ஓடிப் போகும் அர்த்தத்தில் சொல்லவில்லை.


sad.gif sad.gif sad.gif sad.gif sad.gif


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
ரூபா
post Nov 28 2004, 12:06 PM
Post #10


Senior
**********

Group: Disabled Members
Posts: 1,781
Joined: 10-March 04
Member No.: 72



ஐயோ கடவுளே!

சுருதியை நினைக்கும் போது மிகவும் கஸ்ரமா உள்ளது.இப்படியும் உலகத்தில் மனிதர்கள் இருக்கிறார்களா?


நன்றி சத்தியா..............


--------------------

................உன் கவலை மறந்து பட்டாம் பூச்சியாக பற!...................
Go to the top of the page
 
+Quote Post
ramesh
post Nov 29 2004, 01:49 PM
Post #11


Senior
**********

Group: Disabled Members
Posts: 724
Joined: 18-December 03
Member No.: 9



நன்றி சத்தியா.
Go to the top of the page
 
+Quote Post
கலை
post Nov 29 2004, 02:48 PM
Post #12


Senior
**********

Group: Disabled Members
Posts: 4,103
Joined: 29-December 03
From: Norway
Member No.: 24



நிஜங்களை நாமும் தரிசிக்கச் செய்வதற்கு நன்றிகள் சத்யா.


--------------------
<span style='font-size:8pt;line-height:100%'>
அன்புதான் உலக மகா சக்தி.............
என்றும் அன்புடன்..கலை
</span>

Go to the top of the page
 
+Quote Post

Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



RSS Lo-Fi Version Time is now: 9th February 2010 - 01:31 PM