நிலா முற்றம்: **அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும - நிலா முற்றம்

Jump to content

நிலா முற்றத்தில் நீங்களும் இணைந்து கொள்ளலாமே ? (Login l Register)
Page 1 of 1

**அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும

#1 User is offline   பாரதிப்பிரியன் 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 670
  • Joined: 09-October 09
  • Current Mood: Current Mood: None Chosen

 தமிழ் ஒழிப்பாரைக் காமுறோம், தமிழ் ஒலிப்பாரைக் காதல் செய்குவோம்.  தமிழ் ஒழிப்பாரைக் காமுறோம், தமிழ் ஒலிப்பாரைக் காதல் செய்குவோம். Posted 31 July 2010 - 02:36 PM

பேஸ்புக்கில் இருந்து....

அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடுமா?

குறிப்பு: இந்தக் கட்டுரையில் கூறப்பட்டிருப்பது போன்று நிலைமை எல்லை கடந்துவிடவில்லை. உலக நாடுகள் பலவற்றில் முன் எப்போதையும்விட தமிழ் வேறூன்றி உள்ளது. பல நாடுகளில் பல்கலை வரை தமிழ்ப் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ் - தமிழர்களுக்கு நிலையான பாதுகாப்பு ஏற்பட்டிருக்கிறது. இணையத்தில் தமிழ் எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு வளர்ந்து வருகிறது.

ஆயினும் இந்தக் கட்டுரையில் சில அடிப்படை உண்மைகள் இருப்பதை மறுத்துவிட முடியாது.

இதனைப் படித்துவிட்டு இந்த நிலைமை மாறுவதற்கு நாம் என்ன செய்யலாம் என்பதை விவாதிக்க உங்களை அன்புடன் அழைக்கிறேன்.

அன்புடன்:-
சுப.நற்குணன்

படிமம்

**அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடுமா? **

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ் என்பார்கள். ஆனால் அந்த தங்கத்தமிழ் அடுத்த நூற்றாண்டில் இருக்காது என்னும் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி இருக்கிறது. மொரிஷியஸ் நாட்டில் வாழ்பவர்களில் பலர் தமிழர், தமிழ்ப் பெயர்களில்தான் அவர்கள் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு தமிழ் பேசவோ எழுதவோ தெரியாது. அந்த நிலை தமிழ் நாட்டுக்கும் வந்து விடும் என்கிறார், தமிழ் இணையப் பல்கலைக் கழக இயக்குனர் மு. பொன்னவைக்கோ.

தற்போது உலகம் முழுவதும் 6000 மொழிகள் உள்ளன. ஆனால் வருகிற 22-ம் நூற்றாண்டில் அதாவது அடுத்த நூற்றாண்டில் 80 சதவீத மொழிகள் இருக்காது என்னும் அதிர்ச்சியூட்டும் தகவலை யுனஸ்கோ அறிவித்துள்ளது.

மற்றொரு ஆய்வு உலகில் அடுத்த நூற்றாண்டில் 12 மொழிகள் மட்டும்தான் வளமையுடனும், செழிப்பாகவும் இருக்கும் என்கிறது. இந்த இரண்டு ஆய்வறிக்கைகளிலும், கூறப்படும் எஞ்சியுள்ள மொழிகளில் தமிழ் இல்லை. இந்தியாவில் தற்போதுள்ள 18 மொழிகளில் இரண்டே இரண்டு மட்டும் தான்
எஞ்சி நிற்கப் போகின்றன. அவை இந்தி, வங்காளி மட்டுமே.
தமிழ் கூறும் நல்லுலகம் என்ன பாதுகாப்பு முன்னேற்பாடுகளைச் செய்யப் போகின்றன?

ஒவ்வொரு ஆண்டும் பல மொழிகள் சிதைந்து மறைந்து வருகின்றன. கடந்த சில நூற்றாண்டுகளில் நடந்த மாற்றங்களால் பல மொழிகள் மறைந்தன. மறைந்து வருகின்றன. இன்னும் நூறு ஆண்டுகளில் அழியக் கூடிய மொழிகளின் பட்டியலில் தமிழும் இடம் பெற்று இருக்கிறது.

மொழிகள் ஏன் மறைகின்றன என்ற வினாவுக்கு விடைகள் பல உள்ளன. மொழி பேசுவோரை அடியோடு அழித்துவிட்டால், அவர்களை உலகெங்கும் சிதறடித்து விட்டால் மொழி அடியோடு மறைந்து போகலாம்.

அமெரிக்கப் பழங்குடிகள், யூதர்கள், ஆர்மினியர்கள், ஈழத்தமிழர்கள் போன்றோர் இந்த இடரை நோக்கிச் செயல்பட்டிருக்கின்றனர். அவர்களில் சிலர் தம் மொழியைக்
காப்பாற்ற அரும்பாடுபட்டு வெற்றியும் கண்டிருக்கின்றனர். இருப்பினும், பெரும்பாலும் மொழிகள் அழிவது அந்தந்த மொழி பேசும் குடிகள் தாமாகவே தம் மொழியை உதறுவதால் தான் என்பது அறிஞர்கள் கருத்து. ஏன்? தாய் மொழியை உதறி வேறு மொழியை ஏற்கிறார்கள் என்பதை அறிஞர்களால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. அதைப் பற்றிப் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.

பிஷ்மன் என்ற அறிஞரின் கருத்துப்படி அவ்வகைக் காரணங்களில் சில.. புலம் பெயர்தல், இடம் விட்டு இடம் பெயரும் மக்கள் பிழைப்புக்காக வேறு மொழியைக் கற்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். குழந்தைகள் வேற்று மொழி மக்களை மணமுடித்துக் கொண்டால், மொழியை உதற வேண்டிய இக்கட்டுக்கு ஆளாகலாம்.

பொருளாதார சிக்கல்கள்.. வேலைவாய்ப்புக்காகவும், வணிகத்துக்காகவும் ஆதிக்க மொழியைக் கற்க வேண்டி வரும். நாட்டுப்பறங்களில் வேளாண்மையை நம்பிப் பிழைத்துக் கொண்டிருக்கும்போது தாய் மொழியை விட்டு விடத் தேவையில்லை. ஆனால், மற்ற குடிகளோடு வணிகம் செய்யும் போது ஆதிக்க மொழிகளை எதிர்ப்பது கடினமே. உங்கள் வாடிக்கையாளர்களின் மொழியே உங்கள் மொழியாக வேண்டிய நிலையில் தாய் மொழியைத் தக்க வைத்துக் கொள்வது எளிதல்ல.

ஊடகங்கள்.. தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாட்கள், இணையம் போன்ற ஊடகங்கள் ஆதிக்க மொழியின் வீச்சுக்கு அடிமையாகின்றன. எம்.டிவி. மற்றும் அமெரிக்கத் தொலைக்காட்சிகளின் வல்லமையை அளவிட முடியாது. கணினி
விளையாட்டுகள் போன்றவையும் மனமகிழ்ப் போர்வையில் ஊடுருவுகின்றன.
மேட்டுக்குடி குறியீடுகள்.. மக்கள் பெரும்பாலும் தாம் மதிப்பவர்களைப் போல் மேட்டுக்குடியினரைப் போல் வாழ நினைப்பார்கள். ஆளும் வர்க்கத்தின் பழக்க வழக்கங்களை மக்கள் ஏற்றுக் கொண்டிருப்பது பல முறை நடந்திருக்கிறது.
ஆதிக்க மொழியின் மோகத்தில் தாய் மொழியைத் தவிர்ப்பதும் அடிக்கடி நடப்பதுதான்.

தாய் மொழியையும், தம் பண்பாட்டையும் தாழ்வாக நினைத்து அவற்றைத் துறப்பதைப் பல நாடுகளில் காணலாம். அதில் குறிப்பாக இளைஞர்களிடம் காணலாம். நாம் இதுவரை குறிப்பிட்ட அறிகுறிகள் தமிழ் பேசும் மக்களிடம் இல்லையென்று மறுக்க இயலாது. கூடிய மட்டிலும் தமிழில் எழுதத் தெரிந்தவர்கள், அதிலும் தமிழ் நூல்களைக்கற்றுக் கொள்ளத் தெரிந்தவர்கள் தமிழ் மடற்குழுக்களில் எழுதும் பொழுது தமிழிலேயே எழுத வேண்டும். அவர்களும் ஆங்கிலத்தில் எழுதுவதைத் தமிழுக்கு வரும் இன்னொரு இடர்ப்பாடு என்று கருத வேண்டியிருக்கிறது.

வடமொழிக் கலப்பால், தெலுங்கு, கன்னடம், பிறகு மலையாளம் ஏற்பட்டது போல் இப்பொழுது தமிங்கிலர் என்ற புதிய மொழி பேசுபவர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். எப்படிச் சிங்களர்கள், கலிங்கர்கள் தமிழர் கலப்பால் தோன்றிப் பின் தமிழரையே புறந்தள்ளினரோ, அது போல இந்தத் தமிங்கிலர்கள் தமிழரைப் புறந்தள்ளத் தயங்க மாட்டார்கள்.

இதற்குத் தமிழ்நாட்டின் சில அரசியலாளர்களும், முன்னிலையில் இருக்கும் அறிஞர்களும் உடந்தை. தமிழ்நாட்டில் உள்ள அதிகார வர்க்கமும் இதற்கு உறுதுணையாக உள்ளனர். இனியும் இருப்பார்கள். இவர்களுக்கு இன்னொறு உறுதுணையாக இருப்பது சர்ச் கான்வென்ட், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நடத்தும் கல்வி வணிகர்கள். இந்த பாழாயப்போன தமிழாசிரியர்கள் ஒருகாலத்தில் நாட்டுப்புறங்களில் தலைமையாசிரியரைக் காட்டிலும், தமிழாசிரியருக்கு ஊரிலும் மாணவரிடத்திலும் கூடவே மதிப்பு இருந்தது. பட்டி மன்றம், வழக்காடு மன்றம்
என்று அலைந்து தங்கள் பொருளாதார நலம் பேணுவதிலேயே குறியாய் இருந்து தங்களுக்கென்று இருந்த தலைமைப் பண்பை இழந்து தறுதலையாய்ப் போனார்கள். மக்கள் வழி பிறழ்ந்தார்கள்.

இது புண்படுத்துவதாய் இருக்கலாம். ஆனால் உண்மை நிலைமை மிகவும் பாடாவதியாக இருக்கிறது.

தேர்வடம் பிடிக்க எத்தனை பேர் வருவீர்கள் என்பதுதான் கணக்கே தவிர, வடம் பிடிக்கலாமா என்பதல்ல. இப்படியே இருந்தால், என்றைக்கு வடம் பிடிப்பது? என்றைக்குத்தேர் நிலை கொள்வது?

நன்றி:
கதிரேசன்
வசந்தம் இணைப்பிதழ்
தினகரன்

---------------------------------
தமிழ் வளர்க்க நாம் என்ன செய்யலாம்? அன்பு நெஞ்சங்களின் கருத்துக்கள்..............?
அன்ன மூட்டிய தெய்வ மணிக்கையின்
ஆணை காட்டில் அனலையும் விழுங்குவோம்...!

Posted Image

0

#2 User is offline   ரதிதேவி 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 12,669
  • Joined: 26-January 08
  • Current Mood: Current Mood: busy

   இந்த உலகத்தில் நஞ்சால் அழிந்தவர்களைவிட, ஆசையால் அழிந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்.  இந்த உலகத்தில் நஞ்சால் அழிந்தவர்களைவிட, ஆசையால் அழிந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம். Posted 01 August 2010 - 02:59 AM

QUOTE
பிஷ்மன் என்ற அறிஞரின் கருத்துப்படி அவ்வகைக் காரணங்களில் சில.. புலம் பெயர்தல், இடம் விட்டு இடம் பெயரும் மக்கள் பிழைப்புக்காக வேறு மொழியைக் கற்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். குழந்தைகள் வேற்று மொழி மக்களை மணமுடித்துக் கொண்டால், மொழியை உதற வேண்டிய இக்கட்டுக்கு ஆளாகலாம்.

நூற்றுக்கு நூறு உண்மையான வார்த்தைகள் தான்...
ஆனால் இதற்கு வழி வீட்டில் இருக்கும் போதாவது தமிழில் பேசவேண்டும்... குழந்தைகளுக்கு தமிழையும் வீட்டில் சொல்லிகொடுக்க வேண்டும்...
QUOTE
வடமொழிக் கலப்பால், தெலுங்கு, கன்னடம், பிறகு மலையாளம் ஏற்பட்டது போல் இப்பொழுது தமிங்கிலர் என்ற புதிய மொழி பேசுபவர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். எப்படிச் சிங்களர்கள், கலிங்கர்கள் தமிழர் கலப்பால் தோன்றிப் பின் தமிழரையே புறந்தள்ளினரோ, அது போல இந்தத் தமிங்கிலர்கள் தமிழரைப் புறந்தள்ளத் தயங்க மாட்டார்கள்.

அய்யோ நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது... அந்த நிலைமை நிச்சயம் தமிழுக்கு வராது என்று மனதார கூறுகிறேன்...

QUOTE
இதற்குத் தமிழ்நாட்டின் சில அரசியலாளர்களும், முன்னிலையில் இருக்கும் அறிஞர்களும் உடந்தை. தமிழ்நாட்டில் உள்ள அதிகார வர்க்கமும் இதற்கு உறுதுணையாக உள்ளனர். இனியும் இருப்பார்கள். இவர்களுக்கு இன்னொறு உறுதுணையாக இருப்பது சர்ச் கான்வென்ட், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நடத்தும் கல்வி வணிகர்கள். இந்த பாழாயப்போன தமிழாசிரியர்கள் ஒருகாலத்தில் நாட்டுப்புறங்களில் தலைமையாசிரியரைக் காட்டிலும், தமிழாசிரியருக்கு ஊரிலும் மாணவரிடத்திலும் கூடவே மதிப்பு இருந்தது. பட்டி மன்றம், வழக்காடு மன்றம்
என்று அலைந்து தங்கள் பொருளாதார நலம் பேணுவதிலேயே குறியாய் இருந்து தங்களுக்கென்று இருந்த தலைமைப் பண்பை இழந்து தறுதலையாய்ப் போனார்கள். மக்கள் வழி பிறழ்ந்தார்கள்.

நாம் நமது (தமிழ் தெரிந்த) நண்பர்களிடம் தமிழில் தான் பேசவேண்டும்.
வீட்டில் தமிழில் பேச வேண்டும்.
குழந்தைகளுக்கு தமிழில் சொல்லி கொடுங்கள்.
தமிழை பிழையின்றி பேசவும் எழுதவும் பழகி கொள்ளுங்கள்.
தமிழ் தெரிந்த நண்பர்களுக்கு பரிசு பொருளாக தமிழ் புத்தகங்களை பரிசளியுங்கள்...
தமிழில் அருமையான புத்தகங்கள் பல உள்ளன... அதை குழந்தைகளுக்கு வாசித்து சொல்லுங்கள்... அவர்களையும் படிக்க வையுங்கள்...

நிச்சயம் தமிழை யாராலும் அழிக்க முடியாது smile.gif

This post has been edited by rathiDevi_u: 01 August 2010 - 03:01 AM

விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு

Posted Image

காகிதத்தில் கிறுக்கியவை
0

#3 User is offline   பாபு 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 584
  • Joined: 01-January 10
  • Current Mood: Current Mood: fresh

 ஏறு போல் வீறு கொள்வதெப்போ தமிழா ?  ஏறு போல் வீறு கொள்வதெப்போ தமிழா ? Posted 01 August 2010 - 12:30 PM

வெட்கித் தலைகுனியுமளவிற்கு உண்மைகள் உணர்த்தப்பட்டுள்ளன. ஆனால் என்றோ மானம் மரியாதைகளை இழந்துவிட்டு நிற்கும் நம்மினத்தார்க்கு விளங்குமா இதெல்லாம்? பகட்டிற்காக மட்டும் தமிழை முன்னிறுத்தும் இழிதலைவர்கள், அவர்களே தெய்வம் எனத் துதிபாடும் அவலநிலைத் தொண்டர்கள், வேற்றுமொழி மோகம் கொண்ட ம(மா)க்கள் இருக்கும் வரை, உலகின் இறுதிநாள் வரை தமிழைக் கொண்டு சேர்க்கத் துடிக்கும் மெய்யுணர்வாளர்களுக்கு உறக்கம் கிடையாதுதான்.

இங்கு தமிழகத்தில், குறிப்பாகச் சென்னையில் எனக்கு மக்களுடன் ஊடாடுவதே வெறுப்பாகத் தோன்றுகின்றது. எந்தவொரு தனியார் நிறுவனத்திற்குப் போனாலும், மனமாரத் தமிழில் உரையாட முடிவதே இல்லை. நாம் தமிழில் தொடங்கினாலும், அவர்கள் ஏதோ நமக்குத் தமிழ் தெரியாததுபோலவே ஆங்கில மொழியில் பேசுகிறார்கள். வாடிக்கையாளர் சேவை மையம், இது சென்னையில் இருந்தாலும் சரி மற்ற மாநிலங்களில் இருந்தாலும் சரி, தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டால் ஆங்கிலம் அல்லது இந்தி தான்.

எனக்கு ஒன்று புரியவில்லை, தமிழ்நாட்டில் வசிக்கும் மக்களுக்குச் சேவை செய்து பிழைக்கத்தானே இங்கு தொழில் தொடங்குகிறீர்கள். பின் எங்களுக்கு அந்நியமான மொழிகளில் உரையாட ஏன் நெருக்குகிறீர்கள்? மானமிழந்த சிலரின்பொருட்டு வேறுவழியின்றி (என்னைப்போல்) பலரும் மாற்று மொழிகளில் தொடரவேண்டிய கட்டாயத்திலேயே இருக்கின்றோம்.

தமிழக அரசானது சென்னை மாநகரத்திலே வியாபார நிறுவனங்களெல்லாம் பெயர்ப்பலகைகளில் முதன்மையாக பெரிய எழுத்துக்களில் தமிழும் பின் சற்றுச் சிறிய எழுத்தில் ஆங்கிலமும் பின் மாற்று மொழிகளிலும் எழுத வேண்டும் என சட்டம் கொண்டுவந்து செயல்படுத்த முனைந்து கொண்டிருக்கின்றது. திரைப்படங்களில் பெயர்கள் தமிழில் இருந்தால் வரிவிலக்கோ மானியமோ வேறு கொடுக்கிறார்கள்.

எனக்கு, இம்சை அரசன் 23-ம் புலிகேசி திரைப்படத்து வசனம்தான் நினைவிற்கு வருகின்றது. "உள்ளே உங்களது ஆங்கிலப் பூர்வாத்திரமே இருக்கலாம் ஆனால் வெளியே பெயரில் தமிழ்தான் இருக்கவேண்டும்"

யார் யாரை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் எனப் புரியவேயில்லை. தமிழ் பேசும் வாடிக்கையாளர்களுக்குத் தமிழில் தகவல்கள் தரவுகள் தரத் தமிழ்பேசும் அலுவலரை நியமிக்கவேண்டும் எனக் கட்டாயப்படுத்தாமல் ஏன் இங்கு தொழில் செய்ய அனுமதிக்கிறார்கள்? படிக்காத பாமர மக்கள் என்றுதான் நகரத்து வசதிகளை அனுபவிப்பது?

கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போல் அரசும் அது சார்ந்த அரசியல்வியா(வா)திகளும் உடந்தைதான்.

ரதிதேவியின் கருத்துக்களும் வரவேற்கவேண்டியதே.
அன்புடன்,
_பாபு.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து. (குறள் - 978)

பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும்,
ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
0

#4 User is offline   பாரதிப்பிரியன் 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 670
  • Joined: 09-October 09
  • Current Mood: Current Mood: None Chosen

 தமிழ் ஒழிப்பாரைக் காமுறோம், தமிழ் ஒலிப்பாரைக் காதல் செய்குவோம்.  தமிழ் ஒழிப்பாரைக் காமுறோம், தமிழ் ஒலிப்பாரைக் காதல் செய்குவோம். Posted 01 August 2010 - 04:51 PM

நன்றி உங்கள் கருத்துகளுக்கு ரதிதேவி, பாபு

தமிழ் அழியாமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்று ஒரு இணைந்த கட்டுரை எழுதுவோமா? உங்கள் கருத்துக்கள் அனைத்தும் உள்ளடக்கியபின்னர் தொகுத்து எழுதினால் நன்று.
அன்ன மூட்டிய தெய்வ மணிக்கையின்
ஆணை காட்டில் அனலையும் விழுங்குவோம்...!

Posted Image

0

#5 User is offline   தனிமதி 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 24,027
  • Joined: 03-December 05
  • Current Mood: Current Mood: busy

   தற்போது கணனிக்குள் அடக்க முடியாதது எதுவாகயிருக்கும்..?  தற்போது கணனிக்குள் அடக்க முடியாதது எதுவாகயிருக்கும்..? Posted 01 August 2010 - 06:40 PM

நன்றி பாரதி..
நல்லதொரு பதிவினை எம்முன் கொண்டு வந்தீர்கள்..நன்றி..

எனது அபிப்பிராயம்..

இந்தக் கணணி உலா வர முதல் இதுபற்றி யாரும் பேசினோமா..? அல்லது அச்சிட்டு தெரியப்படுத்தினோமா...? அந்தக் காலத்தில் இருந்த தமிழ் மக்கள் யாரும் ஆங்கிலக் கல்வி கற்கவில்லையா..? வெளிநாடுகளில் கல்வி பயின்று கொள்ளவில்லையா...அப்பொழுது கணிசமான மக்கள் தொகை என்ற படியினால் அதற்கு ஏற்றது போல் சென்றார்கள், வாழ்ந்தார்கள்.. இந்த ஏக்கம் தெரியவில்லை...எனலாம்..

இப்பொழுது பல கோடி தமிழர்கள். இதில் ஆங்கில மோகம் அதிகமாக வீட்டிற்கு வீடு, பாடசாலைகள், பொது சந்தை வியாபாரங்கள், இப்படி எல்லா இடங்களையும் அடுக்கிக் கொண்டே போகலாம்..
ஆனாலும் இன்றும் நாளாந்தம் தமிழ் வானொலிகள் மாதத்திற்கு ஒன்று அல்லது ஆண்டிற்கு 5 என்ற ரீதியிலாவது பெருகிக் கொண்டுதான் வருகின்றது. thumbs_up.gif

அடுத்து, பத்திரிகைகள் என்று எடுத்துக்கொண்டு வானொலியின் பெருக்கம் போலவே பத்திரிகைகளும், விளம்பரங்களும் தமிழில் பெருகிக் கொண்டே போகின்றது.. thumbs_up.gif

இங்கு நடத்தும் வானொலி சேவைகளில் ஆங்கிலத்தில் யா, யா சொன்னாலும், உடனே அறிவிப்பாளர்கள் கேட்பார்கள் யா, யா என்றதிலும் தமிழில் அழகாக ஓம், ஓம், அல்லது ஆம் ஆம் என்று சொல்லலாம் தானே என்று.....இது போல் பல பல எடுத்துக்காட்டுகள்..

இங்கு நான் ஒரு முயற்சி எடுத்திருக்கிறேன்.....(கனடா வன்கூவரில்) நான் படித்துப் பக்குவமாக அடுக்கி வைத்திருக்கும் சின்னச் சின்ன சஞ்சிகைகள் (குமுதம், ஆனந்த விகடன், கவிதை, கதை என்று புத்தகங்கள் ) இங்குள்ள ஆங்கில வாசிக சாலைகளில் கொண்டே கொடுத்து அங்கே அவர்கள் தமிழ் என்று குறிப்பிட்ட இடத்தில் வைப்பார்கள்...

யாரும் எடுத்துப்படிக்கிறார்களா என்ற ஏக்கத்தை விட ஒருவராவது சந்தோசமாக கையில் எடுத்து பார்த்தாலே தமிழை காப்பாற்றலாம் என்ற எண்ணம் ஏற்படுமல்லவா..

இணையதளங்களைப் பார்த்தாலும் நாளாந்தம் வலைப்பூ, செய்திகள்,தமிழ் சினிமா, தமிழ் விளம்பரங்கள் என்று தமிழ், தமிழ் என்றுதானே பெருகிக்கொண்டு இருக்கின்றது..

அடுத்து தொலைக்காட்சி நிகழ்வுகளும் பல பல தமிழில் புதிதாக வந்துகொண்டேயிருக்கின்றது.

ஆனாலும் தமிழ் அழிகின்றதே என்ற கண்ணீர் கவலை எனக்குள்ளும் சிவப்பு ஆறாக ஓடிக்கொண்டிருக்கின்றது. அது என் தாயகதேசத்தில்தான்..
அங்கு சிங்களவர்கள் முன்னிலையில் தமிழில் பேசவேமுடியாது..அங்குள்ள வங்கியிலும் சரி, தபால் நிலையங்களிலும் சரி, தெரு வழிகளில் நடைபெறும் சோதனைச் சாவடியிலும் சரி, கடமையில் இருப்பவர்களுக்கு தமிழ் ஓரளவு தெரிந்திருந்தாலும்...நாம் தமிழில் பேசினால் பெரிதாக வரவேற்க மாட்டார்கள்...அவர்கள் முன்னிலையில் அடக்கி ஒடுக்கப்பட்ட எம்மினம் அழிந்துதான் போகும்...(எப்பொழுது முழுச்சிங்களமயமாக்கப் படுகின்றதோ அப்பொழுது.அதுவரை ஒரு தமிழ் குழந்தையிருந்தாலும் தமிழ் வாழும்)

நாம் புலம்பெயர்ந்த நாட்டில் வாழ்கின்றோம்.அதற்கான காரணமாக மிக,மிக அதிகப்படியான தமிழர்களுக்கு தெரியும், தமிழின் அருமை...அங்கு தமிழர்களாக வாழவே முடியாதவர்கள் என்ற நிலையில் வந்திருக்கின்றோம் என்று...ஆகவே ஒவ்வொரு தமிழனும் இதனை உணர்ந்து செயல்பட்டால் ஏன் தமிழை காப்பாற்ற முடியாது..?

இன்னுமொரு விடயத்தினையும் கூறலாம் என்று நினைக்கிறேன்..
புலம் பெயர்ந்த நாடுகளிலும் தமிழ் சிறுவர்கள் சிறுமியர்கள் பலநூற்றுக்கணக்கானோர் பரதநாட்டியம் பயிலவும், வீணை, மிருதங்கம், இசை நடனம் போன்ற இன்னும் பல கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றி எம்மை வியக்கவைக்கின்றனர். வெளிநாடுகளில் அதற்கான பயிற்ச்சிக் கட்டணத்தை தாராளமாக பெற்றோர்கள் செலவு செய்து தம் பிள்ளைகளை ஊக்கப்படுத்துகிறார்கள். எம் தாயக இடங்களில் பண வசதியுள்ளவர்கள் மட்டுமே இவ்வாறு பங்கேற்பார்கள்..

ஆகவே இங்கேயும் தமிழை வளர்க்கிறார்கள்...ஒரு வீட்டுச் செடி தானாக வளருவதில்லை......அதற்குத்தேவையான ஒளி, நீர் போன்றவற்றை நாமு்ம் ஏற்படுத்தினால்தானே வளரும். அதுபோல் தமிழை நாமும் வளர்த்தால் வளரும். நாம் கவனிக்காது செடி வாடுது வாடுது என்று சொல்லிக்கொண்டேயிருந்தால் அது மனஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

முடிந்தால் தமிழ் தொலைக்காட்சிகளின் நிறுவனங்களுக்கும், பல வானொலி சேவை உரிமையாளர்களுக்கும், தற்பொழுது சிந்தனைக்கு வராத இன்னும் பல பல நிறுவனங்களுக்கும் நாம் செய்தி ஒன்றை அனுப்பிவைக்கலாம்...தமிழை மட்டுமே வளரவிடுங்கள் வாழ்துகிறோம் தமிழராய்..அவசியமற்ற இடங்களில் வேற்று மொழிகளை தவிருங்கள் என்று...

அடடா எழுதிக்கொண்டு போனதே தெரியவில்லை....ஏதாவது எழுதலாம் என்று நினைத்து நினைத்து காலத்தை கடத்திவந்தேன்.
இன்று தமிழ் என்னை எழுத வைத்துவிட்டது.... biggrin.gif

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"
Posted Image
0

#6 User is offline   பாபு 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 584
  • Joined: 01-January 10
  • Current Mood: Current Mood: fresh

 ஏறு போல் வீறு கொள்வதெப்போ தமிழா ?  ஏறு போல் வீறு கொள்வதெப்போ தமிழா ? Posted 02 August 2010 - 04:48 AM

தங்களின் கருத்துக்களை வரவேற்கின்றேன் தனிமதி. நீங்கள் கூறுவது போல் வானொலி, தொலைக்காட்சி, வலைத்தளம், இதழ்கள் எனத் தமிழில் தொடங்கப்படுகின்றனதான். ஆனால் அவைகளெல்லாம் உறவாடிக்கெடுக்கும் செயல்களைச் செய்யும்பொழுதுதான் வேதனையாக இருக்கின்றது. அத்தனையிலும் ஆங்கிலக் கலப்பு. தனித்தமிழ் பார்த்ததில்லை நான். செம்மொழி மாநாடு மட்டும் நடத்தினால் போதுமா? குழந்தைகளுக்காகத் தொடங்கப்பட்ட சித்திரம தொலைக்காட்சியில் ஆங்கிலத்தைத் தமிழில் ஒலிபெயர்த்தால் அது தமிழாகிவிடுமா? (மக்கள் தொலைக்காட்சி மட்டும் சற்று மாறுபடுகிறார்கள்) புரிந்துகொள்ளுங்கள் தமிழை பிஞ்சு உள்ளங்களில் இருந்தே அகற்றும் வேலையைத் தொடங்கிவிட்டார்கள். இப்படித்தான் ஒரு காலத்தில் சமசுகிருதமும் தமிழும் கலந்த மனதை மயக்கும், துள்ளல்கள் நிறைந்த மணிப்பிரவாளம் என்றொரு பதத்தில் தமிழைச் சிதைக்க, சீரழிக்கப்பார்த்தார்கள்.

ஈழத்திலாவது இருவேறு மொழிகள் இருக்கின்றன, அதில் மோதல்கள் இருக்கின்றன. இங்கு தமிழ் மட்டுமே ஆட்சி மொழியாக இருக்கும் தமிழகத்தில் என் போன்றோர் தமிழ் பேசினால் எம்மை இழிவாகப் பார்க்கப்படுகின்ற வேதனையை எங்குபோய் சொல்வது?

அதனாலேயே எனது எழுத்துக்களில் தேவைகளின்றி ஆங்கிலப் பதங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கின்றேன். முடிந்தவரை தனித் தமிழிலேயே அனைவருக்கும் புரியும் வகையில் எழுதவும் முயற்சிக்கின்றேன்.

வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் தங்க நேரிடும்பொழுது நான் தமிழ் பேசத் தவிக்கும் தவிப்பு இருக்கின்றதே... தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்களே அதுபோன்றுதான். நம் கையில் இருக்கும் எதற்கும் நமக்கு மதிப்புத் தெரிவதில்லை. இழந்தபின்தான் கதறுவோம்.

பாரதிப்பிரியன், நானறிந்தவரை இணைந்த கட்டுரையாகத் தொகுக்கச் சரியான ஆள் நீங்கள்தான். நம் நண்பர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுப்போம். முற்றத்திற்கு வெளியே உள்ள நண்பர்களுக்கும்தான். கூடியவரை முற்றத்திலேயே நேரடியாகப் பதிந்திடக் கேட்டுக்கொள்வோம் அல்லது மின்னஞ்சலில் கிடைக்கப்பெற்றால் அவர்கள் பெயரிலேயே இங்கு பதிந்துவிடுவோம். நமக்குள் வாதிடுவோம். ஒரு தெளிந்த நிலையில் தொகுத்த கட்டுரையினை உலகறியச் செய்வோம். சரிதானே நண்பர்களே ?
அன்புடன்,
_பாபு.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து. (குறள் - 978)

பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும்,
ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
0

#7 User is offline   ரதிதேவி 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 12,669
  • Joined: 26-January 08
  • Current Mood: Current Mood: busy

   இந்த உலகத்தில் நஞ்சால் அழிந்தவர்களைவிட, ஆசையால் அழிந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்.  இந்த உலகத்தில் நஞ்சால் அழிந்தவர்களைவிட, ஆசையால் அழிந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம். Posted 02 August 2010 - 06:51 AM

QUOTE
ஈழத்திலாவது இருவேறு மொழிகள் இருக்கின்றன, அதில் மோதல்கள் இருக்கின்றன. இங்கு தமிழ் மட்டுமே ஆட்சி மொழியாக இருக்கும் தமிழகத்தில் என் போன்றோர் தமிழ் பேசினால் எம்மை இழிவாகப் பார்க்கப்படுகின்ற வேதனையை எங்குபோய் சொல்வது?

என் கணவருக்கும் தமிழ் என்றால் கொள்ளை பிரியம்...
வீட்டில் எங்கு பார்த்தாலும் புத்தகங்கள் தான் இருக்கும்...
அவர் அலுவலத்தை தவிர மற்ற இடங்களில் எல்லாம் தமிழில் தான் பேசுவார்...
ஆனால் அவர்கள் நண்பர்களோ ஏளனமாக தமிழ் புலவர் வந்துவிட்டார் என்று சிரித்து கொண்டே சொல்லும் போது மனது வேதனையாக இருக்கிறது...

QUOTE
அதனாலேயே எனது எழுத்துக்களில் தேவைகளின்றி ஆங்கிலப் பதங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கின்றேன். முடிந்தவரை தனித் தமிழிலேயே அனைவருக்கும் புரியும் வகையில் எழுதவும் முயற்சிக்கின்றேன்.

ஒவ்வொரு நாளும் நானும் தூய தமிழில் எழுத முயற்சிக்கின்றேன்...

QUOTE
வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் தங்க நேரிடும்பொழுது நான் தமிழ் பேசத் தவிக்கும் தவிப்பு இருக்கின்றதே... தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்களே அதுபோன்றுதான். நம் கையில் இருக்கும் எதற்கும் நமக்கு மதிப்புத் தெரிவதில்லை. இழந்தபின்தான் கதறுவோம்.

உள்நாட்டிலே பலபேர் இப்படி தான் இருக்கிறார்கள் பாபு...

QUOTE
பாரதிப்பிரியன், நானறிந்தவரை இணைந்த கட்டுரையாகத் தொகுக்கச் சரியான ஆள் நீங்கள்தான். நம் நண்பர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுப்போம். முற்றத்திற்கு வெளியே உள்ள நண்பர்களுக்கும்தான். கூடியவரை முற்றத்திலேயே நேரடியாகப் பதிந்திடக் கேட்டுக்கொள்வோம் அல்லது மின்னஞ்சலில் கிடைக்கப்பெற்றால் அவர்கள் பெயரிலேயே இங்கு பதிந்துவிடுவோம். நமக்குள் வாதிடுவோம். ஒரு தெளிந்த நிலையில் தொகுத்த கட்டுரையினை உலகறியச் செய்வோம். சரிதானே நண்பர்களே ?

நானும் என்னால் முடிந்தவரை உதவி செய்வேன்...
நன்றி பாபு! smile.gif

விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு

Posted Image

காகிதத்தில் கிறுக்கியவை
0

#8 User is offline   பாபு 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 584
  • Joined: 01-January 10
  • Current Mood: Current Mood: fresh

 ஏறு போல் வீறு கொள்வதெப்போ தமிழா ?  ஏறு போல் வீறு கொள்வதெப்போ தமிழா ? Posted 02 August 2010 - 07:06 AM

முன்னெடுத்து வந்தமைக்காக பாரதிக்குத்தான் நன்றிகள் சொல்லவேண்டும்.

புலவர்கள் மட்டும்தான் தமிழ் உணர்வோடு இருக்கவேண்டும் என்றோர் எண்ணமுடையவர்களைக் கண்டு நாமல்லவா எள்ளி நகையாடவேண்டும்.

மேலும் தங்களின் முயற்சிக்கும், தங்கள் கணவரின் தமிழார்வத்திற்கும் பாராட்டுக்களும் நன்றிகளும்.
அன்புடன்,
_பாபு.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து. (குறள் - 978)

பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும்,
ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
0

#9 User is offline   தனிமதி 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 24,027
  • Joined: 03-December 05
  • Current Mood: Current Mood: busy

   தற்போது கணனிக்குள் அடக்க முடியாதது எதுவாகயிருக்கும்..?  தற்போது கணனிக்குள் அடக்க முடியாதது எதுவாகயிருக்கும்..? Posted 02 August 2010 - 05:49 PM

பின்னூட்டமிட்மைக்கு நன்றி பாபு...
மேலும் இந்தப் பகுதியை பாரதியின் முயற்சியோடு இணைந்து பல கருத்துக்களை பரிமாறுவோம்... smile.gif

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"
Posted Image
0

#10 User is offline   பாரதிப்பிரியன் 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 670
  • Joined: 09-October 09
  • Current Mood: Current Mood: None Chosen

 தமிழ் ஒழிப்பாரைக் காமுறோம், தமிழ் ஒலிப்பாரைக் காதல் செய்குவோம்.  தமிழ் ஒழிப்பாரைக் காமுறோம், தமிழ் ஒலிப்பாரைக் காதல் செய்குவோம். Posted 03 August 2010 - 11:17 PM

தனிமதி, பாபு, ரதிதேவி நன்றிகள்...

நண்பர்களே...நான் ஒரு சில தகவல்கள் திரட்டிக்கொண்டு உள்ளேன், பின்னர் இதனைப் பற்றி ஆய்வதற்கு வருகின்றேன்,,,
இதுவரைக்கும் சிறப்பான தகவல்களைத் தந்த தனிமதி, பாபு, ரதிதேவி ஆகியோருக்கு நன்றிகள்...

* தேவையான ஆய்வுகள்

-----------
மொரீசியசு நாட்டில் தமிழர்கள் எப்போது குடி புகுந்தார்கள்?
பிரித்தானிய காலனித்துவ முக்கியத்துவம்...
அன்றைய காலத்தில் அவர்கள் மொழி எவ்வாறு இருந்தது..?
எப்படி அங்கு தமிழ் மொழி குலைந்தது...
-----
தமிழர்கள் வாழும் நாடுகளின் பட்டியல், இங்கே எங்கு தமிழன்/தமிழச்சி அதிகமாகத் தமிழை அன்றாட வாழ்விற்கு (வீடு, தெரு, அலுவலகம்) பயன்படுத்துகிறார்கள் (இலங்கை, இந்தியாவும் சேர்த்து)
___
கணிணி, வேலைவாய்ப்பின்மை, போதிய வருமானம் இல்லாமை, சொந்த நாட்டில் சிக்கல் போன்ற காரணிகள் எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகிறது....
---
குடும்பங்ககளாக குடியேற்றம் செய்தல் அல்லது கலப்புத்திருமணங்கள் மூலம் குடியேற்றம் செய்தல்
---
ஆங்கில மோகம் மட்டுமா...அல்லது வேறு மொழிகளிலும் மோகம் உண்டா?..
---
இன்னுமொன்று ஆராயக்கூடியது, எனினும் சிலகார்ணங்களுக்காக தவிர்க்கலாம், (மதம் )
---

அன்ன மூட்டிய தெய்வ மணிக்கையின்
ஆணை காட்டில் அனலையும் விழுங்குவோம்...!

Posted Image

0

#11 User is offline   தனிமதி 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 24,027
  • Joined: 03-December 05
  • Current Mood: Current Mood: busy

   தற்போது கணனிக்குள் அடக்க முடியாதது எதுவாகயிருக்கும்..?  தற்போது கணனிக்குள் அடக்க முடியாதது எதுவாகயிருக்கும்..? Posted 04 August 2010 - 03:07 PM

QUOTE (பாரத @ Aug 3 2010, 11:17 PM) <{POST_SNAPBACK}>
தனிமதி, பாபு, ரதிதேவி நன்றிகள்...

நண்பர்களே...நான் ஒரு சில தகவல்கள் திரட்டிக்கொண்டு உள்ளேன், பின்னர் இதனைப் பற்றி ஆய்வதற்கு வருகின்றேன்,,,
இதுவரைக்கும் சிறப்பான தகவல்களைத் தந்த தனிமதி, பாபு, ரதிதேவி ஆகியோருக்கு நன்றிகள்...

* தேவையான ஆய்வுகள்

-----------
மொரீசியசு நாட்டில் தமிழர்கள் எப்போது குடி புகுந்தார்கள்?
பிரித்தானிய காலனித்துவ முக்கியத்துவம்...
அன்றைய காலத்தில் அவர்கள் மொழி எவ்வாறு இருந்தது..?
எப்படி அங்கு தமிழ் மொழி குலைந்தது...
-----
தமிழர்கள் வாழும் நாடுகளின் பட்டியல், இங்கே எங்கு தமிழன்/தமிழச்சி அதிகமாகத் தமிழை அன்றாட வாழ்விற்கு (வீடு, தெரு, அலுவலகம்) பயன்படுத்துகிறார்கள் (இலங்கை, இந்தியாவும் சேர்த்து)
___
கணிணி, வேலைவாய்ப்பின்மை, போதிய வருமானம் இல்லாமை, சொந்த நாட்டில் சிக்கல் போன்ற காரணிகள் எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகிறது....
---
குடும்பங்ககளாக குடியேற்றம் செய்தல் அல்லது கலப்புத்திருமணங்கள் மூலம் குடியேற்றம் செய்தல்
---
ஆங்கில மோகம் மட்டுமா...அல்லது வேறு மொழிகளிலும் மோகம் உண்டா?..
---
இன்னுமொன்று ஆராயக்கூடியது, எனினும் சிலகார்ணங்களுக்காக தவிர்க்கலாம், (மதம் )
---

தேடுவோம் பாரதி...
நாம் ஒன்றைத் தேடத்தேட
நம் சிற்றறிவு மேலும் விருத்தியாகும்.. smile.gif
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"
Posted Image
0

#12 User is offline   தனிமதி 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 24,027
  • Joined: 03-December 05
  • Current Mood: Current Mood: busy

   தற்போது கணனிக்குள் அடக்க முடியாதது எதுவாகயிருக்கும்..?  தற்போது கணனிக்குள் அடக்க முடியாதது எதுவாகயிருக்கும்..? Posted 04 August 2010 - 03:27 PM

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"
Posted Image
0

Share this topic:

Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

1 User(s) are reading this topic
0 members, 1 guests, 0 anonymous users