Jump to content

நிலாமுற்றம் அன்புடன் வரவேற்கிறது !
நிலா முற்றத்தில் நீங்களும் இணைந்து கொள்ளலாமே ? உங்கள் கதைகள்..கவிதைகள்..மாத்திரமன்றி தரமான உங்கள் பின்னூட்டங்கள்..விமர்சனங்கள் கூட நம் தமிழ்ப்பணியின் காலக் கட்டாயம் !

உங்கள் வரவைக் காண எதிர்பார்த்திருக்கிறோம். - நிலா.

மூட நம்பிக்கைகள்


This topic has been archived. This means that you cannot reply to this topic.
129 replies to this topic

#41 logeshkumar

logeshkumar

  வேகமானவர்

 • மலர்கள்
 • PipPipPip
 • 140 posts
 • Joined 6 Years, 4 Months and 22 Days

Posted 18 September 2010 - 12:15 PM

பாரதிபிரியன், தனிமதி, நாஞ்சில் தாஸ், காயத்ரி மற்றும் பவன் அவர்களுக்கு என் வணக்கங்கள்.

Quote

சிறிது வேலைப்பளு...

சிறிது வேலை பளு இருந்தாலும் ஒரு பதிவு கொடுத்தாலும் சும்மா நச்சுனு கொடுத்திருக்கார். அனைத்து மதங்களிலும் உள்ள விஷயங்களை கூறி உள்ளீர்கள்.
அ,ஆ.இ ... உதாரணங்கள் அருமை. புரிந்தது.

கடவுள் நம்பிக்கை பற்றி நாஞ்சில் தாஸ் அவர்களை கேட்டேன். அப்பப்போ இந்த பக்கம் வாங்க.
மற்றும் உங்களின் மேலான கருத்துகளுக்கு என் தலைவணக்கங்கள்.

தனிமதி அவர்கள் ஒரு சிறு ஆராய்ச்சியே செய்து இருக்கிறார் போல. உங்களின் அனுமானம் சரியானதாகவே தோன்றுகிறது. அப்படியும் இருக்கலாம்.

Quote

நான் எழுதியவைகளில் தவறான கருத்தும் இருக்காலம்.....யாரிடமும் எதற்கும் ஆதாரம்இல்லைதானே...அதனால் முற்று முழுவதுமாக இதுதான் உண்மை என்று அடித்துக்கூறமாட்டேன்....என்னறிவுக்கு எட்டியதைதான் எழுதினேன்..
உங்களின் தன்னடக்கம் பிடிக்கிறது.

எனக்கு தெரிந்த வரை ஆதி காலத்தில் மனிதன் தன் சக்திக்கு மிஞ்சிய சக்திகளுக்கு பயந்தான். அதனால் நமக்கு பாதிப்பு வரகூடாது என்பதற்காக. பொதுவா எப்படி உயர் அதிகாரிகளுக்கு வணக்கம் சொல்வது போல!!!

புயல் காற்று பலமாக அடிக்கிறது மனித சக்தியால் தடுக்க முடியவில்லை என்ன செய்வது ? உடனே காற்றை கும்பிட்டான் - வாயு பகவான் என்று ,
காட்டு தீ அதிகமாக பரவுகிறது மனித சக்தியால் தடுக்க முடியவில்லை - அக்னி பகவான்,
மழை அல்லது வெள்ளம் அதிகமாக வருகிறது மனிதனால் தடுக்க முடியல - வருண பகவான்.
இதை போன்றே பாம்பை பார்த்தல் படையே நடுங்குகிறது அதுவும் சாமி, இடி , மின்னல்களை பார்த்தல் சாமி, சிங்கம் , புலி கடவுளின் வாகனங்கலாக்கி வணங்கினான்.
பசு - தாய்க்கு அடுத்தபடியாக பசுவின் பாலை அருந்துகிறோம் - அதை கோமாதா ஆயிற்று.
இதை போன்றே கால போக்கில் வந்து இருக்கலாம் என்பதே என் அனுமானமே தவிர இது தான் உண்மை என்று கூறவில்லை.

காயத்ரி அவர்கள் நடக்க ஆரம்பித்ததற்கு வாழ்த்துக்கள். நானும் இப்போ தான் ஆரம்பித்து இருக்கிறேன்.


Quote

மனிதக் கையாடல் இல்லாத மூலம் எங்கே காணப்படுகிறது என்பதைத் தேடி அதில் இருக்கும் விடயங்களை ஒப்பிட்டு நோக்கினால், இந்து மதமோ, கிறிஸ்தவமோ, இஸ்லாமோ தம் அடிப்படையில் ஒரே விடயத்தைப் போதிப்பனவையாகவே இருக்கும் என்பது என் கருத்து.

இது ஏற்க கூடிய கருத்து மறுப்பு கூற முடியாது. பவன் அவர்கள் கூறியது போல தானே அன்று விவேகனந்தர் சொன்னார். பல ஆறுகள் எங்கே  தோன்றினாலும் கடைசியில் கடலை அடைகிறது. நாம் எந்த மதத்தை பின்பற்றினாலும் கடைசியில் பரம்பொருளை அடைகிறோம்.

அனைவரும் அனைத்து மதங்களில் இருக்கும் கருத்துக்களை நடுநிலையாக சொல்ல நாஞ்சில் டாஸ் அவர்கள் மட்டும் வெளிய வரல. அவர் முற்றத்தில் உள்ளவர்கள் பதிலளிக்கலாம் என்று கூறுவதற்கு பதிலாக பதிலை என்னிடம் கேட்டு விட்டார். ஏதோ எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.லோகேஷ் குமார்

#42 NANJILDOSS

NANJILDOSS

  வளர்பிறை

 • மலர்கள்
 • PipPip
 • 42 posts
 • Joined 6 Years, 3 Months and 4 Days

Posted 18 September 2010 - 12:23 PM

View Postபவன், on 18 September 2010 - 10:03 AM, said:

நாஞ்சில் தாஸ், இப்போதுதான் எனது கடைசிப் பதிவில், தலைப்பை ஆரம்பித்த நீங்கள் இது வரை சரியான முறையில் பதிலை முன் வைக்கவில்லை என்று ஆதங்கத்தை வெளியிட்டிருந்தேன், நான் எழுதும் போது நீங்கள் இந்தப் பதிவை பதிந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

உங்கள் நோக்கம் ஒரு மதத்தைச் சாடுவது என்பதாக இருந்தால், அது இங்கு ஆரோக்கியமான தேடலுக்கு வழி வகுக்காது என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.

உலகில் எந்த மதமும் இவ்வாறு எதையும் செய்யும்படி மனிதருக்கு ஏவியிருக்கிறது என்று உங்களால் நிரூபிக்க முடியுமா? இது அத்தனையும் மனிதர்களினால், மதத்தின் பெயரால், காலப்போக்கில் எவ்வாறு உருவாக்கப்பட்டது,அதை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதுதான் நமது தேடலாக இருக்க வேண்டுமே தவிர ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையைக் கேலி செய்வது இருக்கக்கூடாது.

இது உங்கள் கருத்தாடல் திறமையையும் மழுங்கடித்து, உங்களுக்குப் பதில் சொல்வதற்காக வேறு மதங்களை உதாரணத்துக்கு முன்னெடுப்பதன் மூலம் லோகேஷின் உண்மையான சிந்தனையையும் மழுங்கடித்து விடும்.

எனவே, முதலில் இங்கு மதங்களினால் அல்ல மதங்களின் பெயரால் மனிதர்களாலேயே மூட நம்பிக்கைகள் வளர்க்கப்படுகிறது எனும் அடிப்படையைப் புரிந்து கொண்டு அதிலிருந்து அனைவருக்கும் பயன் தரக்கூடிய கருத்துக்களைத் தாங்கள் முன் வைப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
நன்றி பவன் அவர்களேதிரு லோகேஷ் அவர்கள் இந்து மதத்தை தவிர மற்ற மதத்தினர் புண்பட கூடிய கருத்துகளைகூறியிருந்தார் நான் யாரையும் புண்படுத்தவில்லை .லோகேஷ் தெரியாமல் சில கேள்விகளை

எழுப்பியிருந்தார் அவருக்கு நீங்களே பதிலளித்தீர்கள் .நான் மதங்களை குறிப்பிடவில்லை

இந்து மதமும் நல்ல கருத்தை தான் போதிக்கிறது .அதற்கும் மேல் கோடிகணக்கான மக்களின்

நம்பிக்கை.மக்களின் நம்பிக்கையில் குறை சொல்லுவது எனது நோக்கமல்ல

ஆனால் மதத்தின் பெயரால் நடக்கும் சில முட்டாள் தனமான செயல்களால் நம் இந்திய

மக்கள் வெளிநாடுகளில் சென்றல் கூட   பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இதற்கெல்லாம் மக்களீன்

அறியாமையே காரணம் .இதை பயன்படுத்தி  காசு பார்க்கும் கூட்டம் சீல உள்ளது.எல்லா மதத்திலும்

குறைகள் உள்ளது.ஒவ்வொருவரும் தம் இதயப்பூர்வமாக கடவுளை தேடினால் கடவுள் வருவார்.

ஆனால் உன் தோஷம் தீர வேண்டுமானால் பரிகாரம் செய் ,இன்னும் பற்பல உண்டு நான் கூற விரும்ப வில்லை

இது போன்ற மூட நம்பிக்கைகளையே நான் சொன்னேன். இதனால் யாருடைய மனதையாவது

புன்படுதியிருன்த்தால் வருந்துகிறேன். வளர்ந்து விட்ட நாகரீக உலகத்தில இன்னும் இந்த மூட நம்பிக்கைகள்

தேவை தானா என்பதை சிந்திக்க வேண்டும் .நாம் அனைவரும் சேர்ந்து மூட நம்பிக்கைகளை எதிர்க்க வேண்டுமே

தவிர குறை சொல்லாமலிருப்பது நல்லது. ஒரு முஸ்லிமோ ,கிறிஸ்தவனோ ,இந்துவோ தனக்கும் மேலாக

அனைத்தையும் படைத்த சக்தி ஓன்று உண்டு என்று மனமார நம்பினால் கடவுளை காண்பான்,இதற்க்கு,சாதி,மதம்,மூடநம்பிக்கை போன்றவை தேவையில்லை. தூய்மையான உள்ளம் ஒன்றே போதும். மதம் மனிதனை

நல்வழி படுத்துகிறது.மூடநம்பிக்கை தான் தடம்புரள வைக்கிறது. மூடநம்பிக்கையால் தான் ஆங்காங்கே

மத சச்சரவுகள் ஏற்படுஹின்றன.

#43 NANJILDOSS

NANJILDOSS

  வளர்பிறை

 • மலர்கள்
 • PipPip
 • 42 posts
 • Joined 6 Years, 3 Months and 4 Days

Posted 18 September 2010 - 12:47 PM

View Postlogeshkumar, on 18 September 2010 - 12:15 PM, said:

பாரதிபிரியன், தனிமதி, நாஞ்சில் தாஸ், காயத்ரி மற்றும் பவன் அவர்களுக்கு என் வணக்கங்கள்.சிறிது வேலை பளு இருந்தாலும் ஒரு பதிவு கொடுத்தாலும் சும்மா நச்சுனு கொடுத்திருக்கார். அனைத்து மதங்களிலும் உள்ள விஷயங்களை கூறி உள்ளீர்கள்.
அ,ஆ.இ ... உதாரணங்கள் அருமை. புரிந்தது.

கடவுள் நம்பிக்கை பற்றி நாஞ்சில் தாஸ் அவர்களை கேட்டேன். அப்பப்போ இந்த பக்கம் வாங்க.
மற்றும் உங்களின் மேலான கருத்துகளுக்கு என் தலைவணக்கங்கள்.

தனிமதி அவர்கள் ஒரு சிறு ஆராய்ச்சியே செய்து இருக்கிறார் போல. உங்களின் அனுமானம் சரியானதாகவே தோன்றுகிறது. அப்படியும் இருக்கலாம்.


உங்களின் தன்னடக்கம் பிடிக்கிறது.

எனக்கு தெரிந்த வரை ஆதி காலத்தில் மனிதன் தன் சக்திக்கு மிஞ்சிய சக்திகளுக்கு பயந்தான். அதனால் நமக்கு பாதிப்பு வரகூடாது என்பதற்காக. பொதுவா எப்படி உயர் அதிகாரிகளுக்கு வணக்கம் சொல்வது போல!!!

புயல் காற்று பலமாக அடிக்கிறது மனித சக்தியால் தடுக்க முடியவில்லை என்ன செய்வது ? உடனே காற்றை கும்பிட்டான் - வாயு பகவான் என்று ,
காட்டு தீ அதிகமாக பரவுகிறது மனித சக்தியால் தடுக்க முடியவில்லை - அக்னி பகவான்,
மழை அல்லது வெள்ளம் அதிகமாக வருகிறது மனிதனால் தடுக்க முடியல - வருண பகவான்.
இதை போன்றே பாம்பை பார்த்தல் படையே நடுங்குகிறது அதுவும் சாமி, இடி , மின்னல்களை பார்த்தல் சாமி, சிங்கம் , புலி கடவுளின் வாகனங்கலாக்கி வணங்கினான்.
பசு - தாய்க்கு அடுத்தபடியாக பசுவின் பாலை அருந்துகிறோம் - அதை கோமாதா ஆயிற்று.
இதை போன்றே கால போக்கில் வந்து இருக்கலாம் என்பதே என் அனுமானமே தவிர இது தான் உண்மை என்று கூறவில்லை.

காயத்ரி அவர்கள் நடக்க ஆரம்பித்ததற்கு வாழ்த்துக்கள். நானும் இப்போ தான் ஆரம்பித்து இருக்கிறேன்.
இது ஏற்க கூடிய கருத்து மறுப்பு கூற முடியாது. பவன் அவர்கள் கூறியது போல தானே அன்று விவேகனந்தர் சொன்னார். பல ஆறுகள் எங்கே  தோன்றினாலும் கடைசியில் கடலை அடைகிறது. நாம் எந்த மதத்தை பின்பற்றினாலும் கடைசியில் பரம்பொருளை அடைகிறோம்.

அனைவரும் அனைத்து மதங்களில் இருக்கும் கருத்துக்களை நடுநிலையாக சொல்ல நாஞ்சில் டாஸ் அவர்கள் மட்டும் வெளிய வரல. அவர் முற்றத்தில் உள்ளவர்கள் பதிலளிக்கலாம் என்று கூறுவதற்கு பதிலாக பதிலை என்னிடம் கேட்டு விட்டார். ஏதோ எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.#44 logeshkumar

logeshkumar

  வேகமானவர்

 • மலர்கள்
 • PipPipPip
 • 140 posts
 • Joined 6 Years, 4 Months and 22 Days

Posted 18 September 2010 - 01:30 PM

நன்றி

Edited by logeshkumar, 18 September 2010 - 02:03 PM.லோகேஷ் குமார்

#45 logeshkumar

logeshkumar

  வேகமானவர்

 • மலர்கள்
 • PipPipPip
 • 140 posts
 • Joined 6 Years, 4 Months and 22 Days

Posted 18 September 2010 - 02:03 PM

நாஞ்சில் அவர்களே இதை லோகேஷ்குமார் வாசித்து இருப்பார் என்று கூறிவிட்டு நீங்களே படிக்கல போல.

தனிமதி அவர்கள் எப்படி மரங்களை மனிதன் வணங்கினான் என்று அவர் விவேகமாக விளக்கி உள்ளார் அத படித்த பின்பும்

நீங்கள் இப்படி சொல்வது எனக்கு உங்களின் நோக்கம் என்ன என்று தெரியவில்லை.
எவ்வளவோ சொல்லியும்

Quote

தலித்துகளை கோயிலுக்கு உள்ளே அனுமதிக்காதது என்று
சொல்லி சாதி கலவரம் செய்துவிடுவீர்கள் போல. சாதி அந்த காலத்தில் அவரவர் செய்யும் தொழிலை வைத்து ஏற்படுத்தி இருக்கலாம். எந்த மதத்தில் இல்ல சாதி.

இந்துமதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா நண்பரே ?

ஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்தி உயர்த்தி சொல்லல் பாவம்! என்றார் பாரதியார்.
ஜாதிகள் ஆயிரம் இருப்பினும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் இருப்பது மேலான வாழ்க்கை. ஆனால் ஜாதிகளும் பிரிவுகளும் இந்துக்களிடம் மட்டும் தான் இருக்கிறதா? கொஞ்சம் சமூகத்தைச் சுற்றிப்பார்த்தால் பல விஷயங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது நண்பரே . வாருங்கள்! பாப்போம்!

இந்துக்களிடம் தான் பல பிரிவுகள் இருக்கின்றன என்றும் மற்றவர்கள் எல்லோரும் ஒரே மதம் ஒரே கடவுள் என்ற கொள்கையில் ஒன்றாக ஒற்றுமையாக இருப்பது போன்ற தோற்றத்தை நண்பர் நாஞ்சில் தாஸ் சொன்னார். சினிமாக்காரர்களும் இந்துக்களிடம் இருக்கும் ஜாதிகளை கதையாக வைத்தே படமாக்கி வியாபாரம் செய்கிறார்கள். அதாவது ஜாதி வேற்றுமையை மறந்து மக்கள் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்று மக்களுக்கு போதிப்பார்கள். ஆனால் இவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் உடனே ஜாதி சங்கங்களில் சரணடைந்து விடுவார்கள் என்பது வேறு விஷயம்.

எந்த மதமாகினும் பிரிவினைகள் இருப்பதும் அதில் ஏற்றத்தாழ்வுகள் பார்க்கப்படுவதும் மனித குல அமைதிக்கு ஒவ்வாததே. இருப்பினும் ஒரு விழிப்புணர்ச்சிக்காகவாயினும் நாம் பிற மதங்களில் கடைபிடிக்கப்படும் ஜாதீய பிரிவுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

இதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கையில் என் நண்பர் ஒருவர் கிறிஸ்தவ மதத்தின் பிரிவுகளைப் பற்றி பகிர்ந்துகொண்ட தகவல்களை கொஞ்சம் பார்ப்போம்.

ஒரே கிறிஸ்து, ஒரே பைபிள், ஒரே மதம் என்று சொல்லி எத்தனைப் பிரிவுகள்!

லத்தீன் கத்தோலிக்கர்கள், சிரியன் கத்தோலிக்க சர்ச்சுக்குள் நுழைய மாட்டார்கள்.

இந்த இரு பிரிவினரும் மார்தோமா சர்ச்சுக்குள் நுழைய மாட்டார்கள்.

இந்த மூன்று பிரிவினரும் பெந்தகோஸ்ட் சர்ச்சுக்குள் நுழையமாட்டார்கள்.

இந்நான்கு பிரிவினரும் (Salvation Army Church) சால்வேஷன் ஆர்மி சர்ச்சுக்குள் நுழையமாட்டார்கள்.

இந்த ஐந்து பிரிவினரும் சென்வென்த் டே அட்வென்டிஸ்ட் சர்ச்சுக்குள் நுழைவதில்லை.

இந்த ஆறு பிரிவினரும் (Orthodox Church.) ஆர்தோடாக்ஸ் சர்சுக்குள் நுழையமாட்டார்கள்.

இந்த ஏழு பிரிவினரும் (Jacobite church) ஜேகோபைட் சர்ச்சுக்குள் நிழையாமாட்டார்கள்.

இப்படி கிறிஸ்தவர்களில் 146 பிரிவினர்கள் கேரளாவில் மட்டுமே இருக்கிறார்கள் என்கிறது அந்த தகவல்.

தமிழகத்தை எடுத்துக் கொண்டால் நாடார் கிறிஸ்தவர்கள், தலித் கிறிஸ்தவர்கள், வன்னியர் கிறிஸ்தவர்கள் என்று மதம் மாறிய பிரிவினர்கள் எல்லோரும் அவர்களது ஜாதியை கிறிஸ்தவ ஜாதியாக மாற்றி ஜாதி கிறிஸ்தவர்களாகவே வாழ்கிறார்கள். இப்படி மதம் மாறிய கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பப் பிள்ளைகளுக்கு வரன் பார்க்கும் போது சொந்தப் பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்களாகவே பார்ப்பதும் நடக்கிறது.

அவ்வளவு ஏன், மாதாவைக் கும்பிடும் கிறிஸ்தவர்கள் ஏசுவை ஏற்றுக் கொள்வதில்லை. ஏசுவைக் கும்பிடும் கிறிஸ்தவர்கள் மாதாவைக் கும்பிடுவதில்லை. இரண்டுமே கிறிஸ்தவத்தின் கடவுள் என்றாலும் இவ்விரண்டு பிரிவினரும் ஏசுவயும் மாதாவையும் பரஸ்பரம் சாத்தான்களை ஏசுவதைப் போல ஏசுவார்கள்.

சில வருடங்களுக்கு முன் ஒரிசாவில் கிறிஸ்தவர்களின் அட்டூழியங்களுக்கு எதிராக இந்துக்களின் எழுச்சி நிகழ்ந்த போது தமிழகத்திலும் பல இடங்களில் சிலுவைகள் நொறுக்கப்பட்டன. தென் தமிழகத்தில் அதிகம் நிகழ்ந்த இந்த தாக்குதல் சம்பவங்களை நடத்தியவர்கள் இந்துக்களே என்று ஊடகங்கள் செய்தி பரப்பின. ஆனால் உண்மையை கூர்ந்து கவனித்த பின்னர் தான் பல இடங்களில் ஏசு சிலையை சேதப்படுத்தியவர்கள் மாதாவைக் கும்பிடுவர்கள் என்றும், பல இடங்களில் மாதா சிலையை சேதப்படுத்தியவர்கள் ஏசுவைக் கும்பிடுபவர்களாக இருந்தார்கள் என்ற உண்மை வெளியே வந்தது. ஆனால் உடனே அந்த விஷயம் பரவாமல் தடுக்கவும் பட்டது. இது செக்யூலரிச நாடாயிற்றே!

கிறிஸ்தவத்தில் பிரிவினை இல்லை என்ற மாயை உடையாமல் பார்த்துக் கொண்டன மத'சார்பு' ஊடகங்கள்.

சரி இனி முஸ்லீம்களின் பிரிவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

ஏகத்துவம் என்ற பெயரைக் கொண்டு ஒரே கடவுள் ஒரே மதம் என்று கூறும் இஸ்லாத்தில் எத்தனை பிரிவுகள் என்று தகவல்கள் கீழ்கண்டவாறு தெரிவிக்கின்றன.
Among Muslims, Shia and Sunni kill each other in all the Muslim countries.
முஸ்லீம்களில் சுன்னி, ஷியா என்று இரு பெரும் பிரிவுகள் உள்ளன. உலகெங்கிலும் ஒரே கடவுள் தான் என்று சொல்லிக்கொள்ளும் இந்த முஸ்லீம்கள் தம் சக மதத்தவரையே கொன்றுகுவித்து வருகிறார்கள். இன்றைக்கும் பாகிஸ்தானில் மசூதிகளில் குண்டு வெடிப்பதற்கு இதுவே காரணம்.

அநேக மதக்கலவரங்கள் பல முஸ்லீம் நாடுகளிலும் இந்த இரு பிரிவினருக்கு இடையில் தான் நடக்கிறது.

ஷியா முஸ்லீம் சுன்னி முஸ்லீம்களின் மசூதிக்குச் செல்லமாட்டார்.

இந்த இரு பிரிவினரும் அஹமதியா மசூதிக்குச் செல்லமாட்டார்கள்.

இந்த மூன்று பிரிவினரும் சுஃபி மசூதிக்குச் செல்லமாட்டார்கள்

இந்த நான்கு பிரிவினரும் முஜாஹிதீன் மசூதிக்குச் செல்லமாட்டார்கள்.

இப்படி முஸ்லீகளிலேயே 13 பிரிவுகள் இருக்கின்றன.

இது மட்டுமா முஸ்லீம்களின் வேறுபல பிரிவினரையும் பார்க்கலாம். (ஆங்கிலத்தில்)

Ansari
Arain
Awan
Bohra
Dawoodi Bohra
Dekkani
Dudekula
Ehle-Hadith
Hanabali
Hanafi
Ismaili
Khoja
Labbai
Lebbai
Lodhi
Malik
Mapila
Maraicar
Memon
Mugal
Mughal
Pathan
Quresh
Qureshi
Rajput
Rowther
Salafi
Shafi
Sheikh
Shia
Siddiqui
Sunni Hanafi
Sunni Malik
Sunni Shafi
Syed

அனுமார்வால் பொன்று நீண்டிருக்கும் இத்தனை ஜாதிகளைக் கொண்ட முஸ்லீம்கள் வேறு ஜாதிகளில் பெண் கொடுக்கவோ எடுக்கவோ மாட்டார்கள். அதிலும் மரைக்காயர் மற்றும் லெப்பைகள் போன்றோர் அரபு முஸ்லீம்கள் என்று கூறிக்கொள்வர். இவர்களைப் பொறுத்தவரை மற்றவர்களுக்கு பெண் கொடுக்க மாட்டார்கள். ஜாதிகளும் அதில் மேல் கீழ் என்று பிரிவுகளும் முஸ்லீம்களிலும் உண்டு. பட்டாணி முஸ்லீம் பெண்மணியை நாசுவன் ஜாதி ஆணுக்கு திருமணம் செய்து வைக்கமாட்டார்கள்.

இல்லையென்றால் மேட்ரிமோனியல் தளங்கள் அவர்கள் வசதிக்காக இத்தைனைப் பிரிவுகளை உண்டாக்கி வியாபாரம் செய்ய முன்வருமா என்ன?

இத்தனைப் பிரிவுகளுக்குள்ளும் நிறைய ஏற்றத்தாழ்வுகள் உண்டு. மைனாரிட்டி என்பதால் வெளியே தெரிவதில்லை அல்லது வெளியே தெரிந்து அவர்களின் ஜாதி வெறி பிம்பங்கள் கலைய ஊடகங்கள் அனுமதிப்பதில்லை என்பதே உண்மை. இந்த சினிமாக்காரர்களும் இத்தகைய மதங்களில் நிகழும் வேற்றுமைகளை வெளிப்படுத்தும் வன்னம் படம் எடுத்து மக்களுக்குக் காட்டியதில்லை.

ஆனால் இவர்கள் வெளியே சொல்லிக் கொள்வதோ ஒரே இறைவன், ஒரே மதம், ஒன்றான மக்கள் என்றுதான். அப்பிரானி இந்தியர்களும் குறிப்பாக இந்துக்களும் இதை நம்பிவிடுகின்றனர். ஐயோ பாவம்!

ஒரே கடவுள் ஒரே மதம் என்று கூறிக்கொள்ளும் இவர்களுக்குள் எத்தனைக் கொடிய கொலைகள். அப்பாவி மக்களும் ஊடகங்கள் கூறுவது போல இந்துக்கள் மட்டுமே ஜாதிப்பிரிவினை கொண்டு சண்டை இட்டுக் கொள்கிறார்கள் என்று நம்பி ஏமாந்து போகிறார்கள். வெறும் ஆயிரம், இரண்டாயிரம் வருடங்கள் கொண்ட மதங்களுக்குள்ளேயே இத்தனை பிரிவுகள் இருக்கின்றன எனில் லட்சக்கனக்கான வருடங்கள் பாரம்பரியம் உள்ள இந்து தர்மத்தைச் சேர்ந்த மக்கள், வாழும் வகைகளில் உட்பிரிவுகள் கொண்டிருப்பதில் ஆச்சரியமோ அதிர்ச்சியோ என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.

இந்துக்களில் இருக்கும் பிரிவினர்களிடையே எழும் ஜாதி மோதல்கள் பொருளாதார ரீதியான ஏற்றத்தாழ்வுகளுக்காக எழும் உரிமைப் போராட்டங்களாகவே பார்க்கப்படுகின்றனவே அன்றி அவை மதரீதியான பிரிவினை அல்ல. பொருளாதார ரீதியாக அனைத்து இந்துக்களும் சமமான வளர்ச்சி பெற்று விட்டால் இந்து மதத்தின் பிரிவுகள் தானே மங்கிப்போகலாம். அல்லது அரசியல் தலைவர்கள் ஓட்டு வங்கிக்காக ஜாதித்தீயை வளர்க்காமல் இருந்தால் ஜாதியின் அழுத்தம் நீர்த்தும் போகலாம். ஆனால் இந்துக்களிடைய ஜாதீய தாக்கம் நீர்த்துப்போகாமல் பார்த்துக்கொள்வதே அரசியல் வாதிகளும் ஊடகங்களும் தான். வெள்ளையர்களின் பிரித்தாளும் கொள்கையை இந்துக்களிடை நடைமுறைபடுத்தி பலர் தலைவர்களாக குளிர்காய்வதே இந்துக்களிடையே நிலவும் பிரிவினைக்கு மூலக்காரணம்.

        பலஆயிரம் வருட பாரம்பரியம் உள்ள இந்துக்களின் வாழ்கையில் - 1280 வகையான மத புத்தகங்கள் உள்ளன. பல ஆயிரம் வகையான சொற்பொழிவுகளும், சொற்பொழிவாளர்களும் இருக்கிறார்கள். என்னிலடங்கா கடவுளர்கள் உள்ளனர். பல வகையான மகான்களும், ரிஷிகளும், ஆச்சாரிய குருமார்களு இருக்கின்றனர். பல்வேறு வகையாக தத்துவங்கள் போதிக்கப்படுகின்றன. இந்து தர்மத்தின் படி வாழும் மக்கள் நூறுக்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகள் பேசும் மக்களாக இருக்கின்றனர். ஆயிரக்கனக்கான கோவில்கள் இருக்கின்றன. இந்த வெவ்வேறு மொழி பேசும் கோடிக்கனக்கான மக்கள், பல நூறு தெய்வங்களையும் பல்வேறு கோவில்களையும் ஒன்றாக ஒற்றுமையாக அமைதியாகத்தான் வழிபட்டுக்கொண்டு இருக்கின்றனர். தீபாவளிப் பண்டிகையை கோடான கோடி மக்கள் இறையுணர்வுடன் ஒரே மாதிரி கொண்டாடுகிறார்கள்.

இந்துக்களில் மாரியம்மனை கும்பிடுபவர் முருகனை அவமதிப்பதில்லை. பிள்ளையாரைக் கும்பிடுபவன் ஐயப்பனை வெறுப்பதில்லை. விஷ்னு பக்தன் ஆயினும் சிவன் கோவிலுக்குப் போகாமல் இருப்பதில்லை. சிவன் பக்தனாயினும் திருப்பதிக்குப் போய் வழிபடாத இந்துக்கள் இருக்கமுடியாது. ஏன் இந்துக்கள் வேளாங்கன்னி மாதாவையும், நாகூர் தர்காவையும் கூட ஒரே கடவுளின் தோற்றமாகவே பார்க்கின்றனர். பல நூறு கடவுளர்களை வழிபடுபவராயினும் இந்துக்களுக்கு எல்லாம் கடவுளே! அதாவது அடிப்படையில் ஏகத்துவம்!

ஆக ஒரே மதம் ஒரே தேவன் என்று சொல்லிக்கொண்டு ஒரு நாட்டையே பிரிவினையால் அழிக்கும் பிற மதத்தவரை விட பல நூறு கடவுளரைக் கொண்டாலும் ஒரே கலாச்சாரம் ஒன்றான வாழ்க்கை என்று அமைதியாக வாழும் இந்துக்களின் வாழ்க்கை நன்றாகவே உள்ளதே.

மொத்தத்தில் எந்த மதத்தில் ஜாதிகளிருந்தாலும் எல்லாவருக்கும் ஒரே பாடல்
"ஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்"
- மகாகவி பாரதியார்

நான் எங்காவது இந்து மதத்தை தவிர வேறு எந்த மதமும் உயர்ந்தது இல்லை என்று கூறவில்லை.
நானும் வார வாரம் சிவன் கோவிலுக்கு போய்விட்டு CSI central சர்ச்-கு போகும் என்னையும் மதமாற்றும் செய்ய நினைகும் அவர்களை நினைத்தால் மனம் வருந்தவே செய்கிறது.

ஏசு - அவர் ஒரு மகான்.எப்படி விவேகனந்தர் , ஸ்ரீ ராகவேந்திரர், ஆதிசங்கரர் போல அவரும் ஒரு மகான். அதை போல தான் நினைத்து செல்கிறேன்.
அனைவரும் அனைத்து மதங்களிலும் இருக்கும் நிறைகளையும் குறைகளையும் சொல்லிவிட்டார்கள். நீங்கள் இந்து மதத்தில் குறைகளை மட்டுமே சொல்றீங்க. நானும் இந்து மதத்தில் இருக்கும் குறைகளை சுட்டி காட்டி உள்ளேன்.சற்று வருத்தமாகவே இருக்கிறது.

நன்றி,

Edited by logeshkumar, 18 September 2010 - 03:19 PM.லோகேஷ் குமார்

#46 தனிமதி

தனிமதி

  மூத்தவர்

 • தூண்கள்
 • PipPipPipPipPipPipPipPipPipPip
 • 30,815 posts
 • Joined 11 Years and 8 Days

Posted 18 September 2010 - 02:56 PM

நன்றி பவன், லோகேஸ்குமார், நாஞ்சில்தாஸ்,பாரதி மற்றும் காயு...

Quote

புயல் காற்று பலமாக அடிக்கிறது மனித சக்தியால் தடுக்க முடியவில்லை என்ன செய்வது ? உடனே காற்றை கும்பிட்டான் - வாயு பகவான் என்று ,
காட்டு தீ அதிகமாக பரவுகிறது மனித சக்தியால் தடுக்க முடியவில்லை - அக்னி பகவான்,
மழை அல்லது வெள்ளம் அதிகமாக வருகிறது மனிதனால் தடுக்க முடியல - வருண பகவான்.
இதை போன்றே பாம்பை பார்த்தல் படையே நடுங்குகிறது அதுவும் சாமி, இடி ,  மின்னல்களை பார்த்தல் சாமி, சிங்கம் , புலி கடவுளின் வாகனங்கலாக்கி  வணங்கினான்.
பசு - தாய்க்கு அடுத்தபடியாக பசுவின் பாலை அருந்துகிறோம் - அதை கோமாதா ஆயிற்று.
இதை போன்றே கால போக்கில் வந்து இருக்கலாம் என்பதே என் அனுமானமே தவிர இது தான் உண்மை என்று கூறவில்லை.

இதனைத்தான் நானும் எதிர்நோக்கினேன்.....
நன்றி லோகேஸ்குமார் அவர்களே..
தாங்கள் பிற மதங்களையும் ஆராய்ந்து தந்திருக்கும் பதிவு மிக ஆழமானது..
பலதரப்பட்ட விடயங்களை அறியாமல் இருந்தேன்.....இன்று அறிந்துகொண்டேன்..
உண்மையில் ஒரு இஸ்லாமியரோ, அல்லது கிறிஸ்தவர்களோ இந்துக்கோவிலுக்குச் செல்ல மாட்டார்கள்...ஆனால் ஓர் இந்து தான் விரும்பினால் எல்லாக் கோவிலுக்கும் சென்று வருகிறான்..இதனைப் பார்க்கும் மனரீதியாக கடவுள்களில்  அவருடைய  கடவுள், இது இவருடைய கடவுள் என்றதை போட்டியாக, பொறாமையாக எடுத்துக்கொள்ளாமல்  சென்று வருகிறான்...


Quote

ஆனால் மதத்தின் பெயரால் நடக்கும் சில முட்டாள் தனமான செயல்களால் நம் இந்திய
மக்கள் வெளிநாடுகளில் சென்றல் கூட   பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இதற்கெல்லாம் மக்களீன்
அறியாமையே காரணம் .இதை பயன்படுத்தி  காசு பார்க்கும் கூட்டம் சீல உள்ளது.எல்லா மதத்திலும்
குறைகள் உள்ளது.ஒவ்வொருவரும் தம் இதயப்பூர்வமாக கடவுளை தேடினால் கடவுள் வருவார்.
ஆனால் உன் தோஷம் தீர வேண்டுமானால் பரிகாரம் செய் ,இன்னும் பற்பல உண்டு நான் கூற விரும்ப வில்லை
இது போன்ற மூட நம்பிக்கைகளையே நான் சொன்னேன். இதனால் யாருடைய மனதையாவது
புன்படுதியிருன்த்தால் வருந்துகிறேன். வளர்ந்து விட்ட நாகரீக உலகத்தில இன்னும் இந்த மூட நம்பிக்கைகள்
தேவை தானா என்பதை சிந்திக்க வேண்டும் .நாம் அனைவரும் சேர்ந்து மூட நம்பிக்கைகளை எதிர்க்க வேண்டுமே

வணக்கம் நாஞ்சில்தாஸ்..
இந்தப்பதிவில்  தாங்கள் ஒரே பதிவில் ஒரே கருத்து இரண்டு தடவைகள் பதியப்பட்டிருக்கின்றன...அதனை சரிபார்த்துக்கொள்ளுங்கள்..அடுத்து  தாங்கள் குறிப்பிடும் மூடப்பழக்கங்களின் வழி எது என விளக்கியிருக்கிறேன்....இதுபோல் போலவே மூடப்பழக்கம் வழிவழியாக வெவ்வேறு விதத்தில் தலைதூக்கியிருக்கின்றது..

உங்கள் அம்மா, அப்பா அல்லது அவர்களைப் பெற்றவர்கள், அல்லது அதற்கும் முன்னோர்கள் இந்த மூடப்பழக்வழக்கத்திற்கு  அடிபணிந்திருக்கமாட்டார்கள் என்றதை நிச்சயமாக உங்களால் கூறமுடியுமா....முடியாது.......காரணம் அவர்கள் உங்களுக்கு  கண்ணூறாவது (திருஷ்டி பட்டிருக்கும் என் பிள்ளைக்கு என்று ) சுத்தியாவது போட்டிருப்பார்கள்..

உங்கள் வாழ்க்கையில் இதெல்லாம் வெறும் மூடநம்பிக்கைகள்  என்று நீங்கள்
நாடாமல் விட்டிருப்பீர்கள்...
அதுபோல்தான் இன்றைய வாழ்க்கையில் அந்த மூடப்பழக்கங்களிலிருந்து ஏற்க முடியாத சில விடங்களிலிருந்து மக்கள் முன்னேறி விட்டார்கள்...ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த வாழ்க்கையல்ல நாம் வாழும் வாழ்ககை....
இன்னும் ஆயிரம் ஆண்டுகள்கூடச் செல்லலாம்....முற்றாக இந்த மூடப் பழக்கவழக்கங்கள் இல்லாமற்போகலாம்...ஆனாலும்  வேறொரு ரூபத்தில் அவரவர் லாபம் கருதி வளராலாம்..

தற்போது  கல்வியறிவு  பரந்து வாழும் மக்களிடையே  பரவிக்கொண்டிருப்பதால்.......உங்களைப்போல் பல்நோக்கு சிந்தனைாவாதிகள் இதிலிருந்து  விலத்திக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்....

நன்றி அனைவருக்கும்..:)

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"
Posted Image

#47 logeshkumar

logeshkumar

  வேகமானவர்

 • மலர்கள்
 • PipPipPip
 • 140 posts
 • Joined 6 Years, 4 Months and 22 Days

Posted 18 September 2010 - 03:01 PM

அட நாஞ்சில் தாஸ் அவர்களும் பொதுவான கருத்துகளை சொல்லி இருக்காறே திருந்திட்டறு போல. நான் இதை பார்க்காம ஒரு பதிப்பை போட்டுவிட்டேன் போல. இதை போன்று முதலில் இருந்தே உங்களின் கருத்துகளை சொன்னால் நன்றாக இருந்திருக்கும்.

மற்றபடி உங்களின் கடைசி பதிவு சரியானதே
நன்றி,

Edited by logeshkumar, 18 September 2010 - 03:06 PM.லோகேஷ் குமார்

#48 ரதிதேவி

ரதிதேவி

  மூத்தவர்

 • தூண்கள்
 • PipPipPipPipPipPipPipPipPipPip
 • 21,242 posts
 • Joined 8 Years, 10 Months and 16 Days

Posted 18 September 2010 - 03:49 PM

அனைத்து கருத்துக்களும் ஏற்கொள்ளக் கூடியது தான்!
தனிமதி, காயு, லோகேஷ், நாஞ்சில் தாஸ், பவன் ஆகியோருக்கும் எனது நன்றிகள்!
விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு

Posted Image

காகிதத்தில் கிறுக்கியவை

#49 பவன்

பவன்

  நிர்வாகம்

 • நிர்வாகம்
 • PipPipPipPipPipPipPipPipPipPip
 • 4,584 posts
 • Joined 12 Years, 11 Months and 24 Days

Posted 18 September 2010 - 04:50 PM

லோகேஷ், உணர்ச்சிவசப்படுவதில் நீங்கள் காட்டும் வேகத்தை உண்மைகளை நிரூபிப்பதில் காட்டுவதற்கு பயன்படுத்த வில்லையே என்று கவலையாக உள்ளது.

தற்போதைய உங்கள் நிலையானது, இந்து மதத்தை நிறுவுவதும், அதற்குப் பிற மதங்களை ஒப்பிடுவதுமாக இருப்பதனால், மீண்டும் உங்களை அழைத்துச்சென்று மூட நம்பிக்கைகளை வகைப்படுத்துங்கள், அதன் மூலம் மதங்களின் சீரான வழியை நெறிப்படுத்துங்கள் என்று தற்காலிகமாகக் கேட்க முடியாது என்பதை உங்கள் பதிவின் வேகமும் அதில் அடங்கியிருக்கும் விடயங்களும் உணர்த்துகின்றன.

கிறிஸ்தவ மதத்திலும் இஸ்லாத்திலும் இருக்கும் பிரிவுகளும் தமிழ் நாட்டில் மக்கள் மத்தியில் இருக்கும் ஜாதிப் பிரிவுகளும் ஒன்றையொன்று ஒப்பீட்டுக்கு உகந்தனவையா என்பதில் மேலும் ஆய்வு தேவை என்றே நினைக்கிறேன்.

ஏனெனில் பொதுவாக, கிறிஸ்தவ மதத்தில் காணப்படும் பிரிவுகளுக்கான அடிப்படைக்கும் பொதுவான ஜாதிப் பிரிவிகளுக்குமான அடிப்படையில் வேற்றுமைகள் உள்ளது. மேற்குறிப்பிட்ட மதங்களில் காணப்படும் பிரிவுகள் என்பது அவர்களுடைய மதத்தின் மீதான நம்பிக்கையிலும், அந்த நம்பிக்கைகளை நடைமுறைப்படுத்துவதிலும் இருக்கும் முரண்பாடுகளின் தோற்றங்களே தவிர, மனிதகுலத்தின் பொருளாதார ஏற்றத்தாழ்வு அல்லது பிறப்பு முறை ஏற்றத்தாழ்வுகளைக் குறிப்பன அல்ல என்பது எனது அபிப்பிராயமாகும்.

சமூக ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் இன்று பொதுப்படையாக நாம் அறிந்திருக்கு ஜாதீயத்துக்கு இந்து மதமே பொறுப்பு என்று கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ளவும் முடியாது.ஏனெனில் இந்த சமூக ஏற்றத்தாழ்வுகளைப் பிரதிபலிக்கும் ஜாதீயத்துக்கு கிறிஸ்தவர்களும் அதே போன்று முஸ்லிம்களும் கூட முகங்கொடுக்கிறார்கள் என்பதை நீங்களும் மறுக்க முடியாது.

வேறு யாருமே இங்கு குற்றங் கூறாத தருணத்தில் நீங்களாக முன் வந்து இந்து மதத்தில் மட்டுமா ஜாதிப் பிரிவினை இருக்கிறது என்று கேட்பதானது அறிந்தோ அறியாமலோ தமிழ் நாட்டில் நிலவும் ஒட்டு மொத்த ஜாதிகளும் இந்து மதத்திலிருந்தே பிறக்கின்றன என்று நீங்களே ஒத்துக்கொள்வதாகவும், ஏற்றுக்கொண்டு அதனை பிற மதங்களோடு ஒப்பிடுவதாகவும் அமைந்திருப்பதை இன்னும் கொஞ்சம் ஆறுதலாக உங்கள் பதிவுகளை வாசித்தால், அதிலும் நாஞ்சில் தாஸ் எப்போதோ குறிப்பிட்டிருந்த ஒரு பதிவின் பகுதியை மேற்கோள் காட்டி வேக வேகமாகப் பதிந்திருப்பதைக் கொண்டு உணர்ந்து கொள்ள முடியும்.அதற்குப் பின்னரான அவரது பதிவுகளும் கூட ஓரளவில் மூட நம்பிக்கைகள் எனும் தலைப்பிற்குள் திரும்புவதாக அமைந்து வருகிறது.

எனவே,பதிவுக்குத் தொடர்பில்லாமல் உணர்ச்சிவசப்பட்ட உங்கள் தற்போதைய சூழ்நிலை இந்து மதத்தைக் காப்பாற்றுவது எனும் நிலை தவறி, ஒட்டு மொத்த ஜாதிகளின் பிறப்பிடம் இந்து மதம் என்று ஏற்றுக்கொள்வதாக அமைகிறது.

ஆயினும், நீங்கள் முன் வைத்திருக்கும் சில விடயங்கள் தொடர்பான மேலதிக விளக்கங்கள் இங்கு இணைக்கப்பட வேண்டிய தேவை இருப்பதாகவே நினைக்கிறேன்.

நீங்களும் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது போன்று,எம்மதமாக இருந்தாலும் மக்கள் மத்தியில் காணப்படும் மூட நம்பிக்கைகள் ஒன்றைப்பற்றித்தான் இங்கு நாம் கலந்துரையாடிக்கொண்டிருக்கிறோம்.இதில் மற்ற சமயங்களில் காணப்படும் கோத்திரங்களின் வேறுபாட்டை ஒரு ஜாதி வேறுபாடாக நீங்கள் காட்ட முனைந்திருப்பதில் தவறிருக்கிறது.கிறிஸ்தவர்களில் பல நூறு பிரிவுகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள், இருப்பினும் அந்தப் பல நூறு பிரிவினரும் பிளவு பட்டிருப்பது தமது வழிமுறைகளிலும்,சமயக் கோட்பாட்டிலுமே தவிர சமூக ஏற்றத்தாழ்வுகளால் அல்ல என்பதை பெருவாரியான மேலை தேச வாழ்க்கை முறையைக் கொண்டு நிரூபிக்க முடியும். அதை நிரூபிக்க முடியாத ஒரு இடம் இருந்தால் அது பிரதானமாக இந்தியாவிலாகவே இருக்க முடியும் என்று எண்ணுகிறேன்.

அதே போல, இஸ்லாமியர்களிடம் இருக்கும் கோத்திர வேறுபாடுகளை அவர்களுக்குள் இருக்கும் ஜாதி வேறுபாடாக நீங்கள் முன் வைக்கிறீர்கள்,அந்த விடயத்தைப் பொறுத்தவரை அங்கே நீங்களே இணைத்திருக்கும் ஒவ்வொரு தலைப்பையும் கூகிள் தேடியில் தேடிப் பார்த்தால் கூட அவை தனித்தனியான ஜாதிகள் இல்லை என்பதையும் அவை வெவ்வேறு சமூகத்தைக் குறிப்பன என்பதையும் அறிந்து கொள்வீர்கள். அதனடிப்படையில் இஸ்லாமியர்களில் இரண்டு பிரிவினரையே நிறுவக்கூடிய பிரிவினராக முன்வைக்க முடியும், அவர்கள் சியா மற்றும் சன்னி ஆகிய பிரிவினர்களாவார்கள், இவர்களுக்கிடையிலான பிரிவின் அடிப்படை வணக்க முறையில் காணப்படும் முரண்பாடே ஒழிய மத நம்பிக்கையில் அல்ல. இதனை ஊதிப் பெருப்பித்து பெருவாரியான சியாக்களும் சன்னி முஸ்லிம்களும் வாழும் ஈரான்-ஈராக்குக் கிடையிலான சண்டையை மூட்டி விட்டு,ஆயுதத்தையும் கொடுத்து அதில் குளிர் காய்ந்த பெருமை மேற்குலகையே சேரும்.

இந்தியாவில் இந்துத்துவாதக் கொள்கையையும்,முஸ்லிம் பிரிவினையையும் வளர்த்து விட்ட பெருமையும் மேற்குலகின் சூழ்ச்சியே என்பதை யாரும் மறுக்கப்போவதில்லை. தமது சுய நலத்துக்காகவும், ஆட்சி மற்றும் தாம் சார்ந்த பொருளாதார நலனுக்காகவும் எவ்வாறு சிற்றரசர்கள் முதல் பேரரசர்கள் வரை மக்களை பிரித்தாளுவதில் கெட்டிக்காரர்களாக இருந்தார்களோ அவ்வாறே தமது இலாபத்தை ஈட்டும் தொழில் வல்லமையாக சமூகப் பெயர்களில் திருமண இணையத்தளங்கள் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பதை நீங்கள் அறியாமல் தான் அவர்களை உதாரணத்திற்கு எடுத்திருக்கிறீர்களா எனும் கேள்வி எழுகிறது.

பல்வேறு பிரிவுகள் இருந்தாலும், எவ்வாறு எல்லோரும் கடவுள் எனும் மூலத்தில் ஒன்று படுவார்களோ அதே போன்று தான் மனிதர்களிடையே ஜாதிப் பிரிவினையை உருவாக்கியதில் ஆளும் வர்க்கம் மற்றும் முதலாளி வர்க்கங்கள் ஒன்று படப்போகிறது, இதனை தீர ஆராய்ந்தால் நீங்கள் அதனைக் கண்டு கொள்ளலாம், அதிலும் குறிப்பாக இந்த கைங்கரியங்கள் அனைத்தும் ஆசிய நாடுகளில், அதுவும் அபிவிருத்தியடைந்து வரும் மற்றும் அபிவிருத்தியடையாத நாடுகளில் மாத்திரமே நடந்தேறுகின்றன எனும் உண்மையையும் மறுப்பதற்கில்லை.

இந்தியா,இலங்கை,பாகிஸ்தான் முதல் பர்மா,இந்தோனேஷியா,சீனா மற்றும் மத்திய கிழக்கு,ஆபிரிக்க பகுதியிலும் காணப்படும் இந்த வேறுபாடுகள் வளர்ச்சியடைந்த நாடுகளில் விரும்பியோ விரும்பாமலோ காண்பதற்கில்லை எனும் உண்மையை நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

உதாரணமாக இங்கிலாந்தில் இருக்கும் ஒரு சிவன் கோவிலாக இருக்கட்டும், முருகன் கோயிலாக இருக்கட்டும் இல்லை அம்மன் கோயிலாகத்தான் இருந்தாலும், அவரவர் பின்னணி என்ன என்பது இங்கு ஆராயப்படுவதில்லை, அது குறிப்பாக திருமணம் என்று வரும் போது அதுவும் ஊரில் இருந்து வந்த பழைய சமூகத்தாரால் மாத்திரமே பார்க்கப்படுகிறது.

இங்கிருக்கும் கிறிஸ்தவர்கள் தமிழில் ஆராதனை இடம்பெறுகிறது என்ற ஒரே குடையின் கீழ் வாரத்தில் ஒரு நாள் தமது பிராந்தியத்தில் ஏதாவது ஒரு தேவாலயத்தில் ஒன்று கூடுகிறார்களே தவிர, ஊரில் இருந்து ஜாதீயத்தை இங்கிருக்கும் தேவாலயங்களுக்கு இறக்குமதி செய்வதில்லை.

தாம் விரும்பும் எந்த சட்டதிட்ட மரபைப் பின்பற்றினாலும், எவ்வகையில் வழிபாட்டு முறையில் வேறுபட்டாலும் அனைத்து முஸ்லிம்களும் தமது மசூதிகளில் அவரவர் விரும்பும் வழியில் தமது வணக்கத்தை மேற்கொள்கிறார்கள்.

இவற்றின் அடிப்படையில் உற்று நோக்குவீர்களாக இருந்தால், இந்த ஜாதீயப் பிரச்சினைகளின் அடித்தளம் எங்கு வாழும் மக்களை ஆளுமை செய்கிறது? ஏன் ஆளுமை செய்கிறது? எனும் கேள்விகளுக்கான விடை உங்களுக்குக் கிடைக்கும், அதனடிப்படையில் அதன் பின்னணி என்ன என்பதைத் தீர ஆராய்ந்தீர்கள் என்றால் பகுத்தறிவு அரசியல் பேசுபவர்கள் கூட தமது நலத்திற்காக ஜாதித் தீயில் குளிர் காய்ந்துதான் அரசியல் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் உணர்வீர்கள்.

உண்மைகள் இவ்வாறு இருக்க, மதங்களை மதங்களோடு ஒப்பிட்டு நிறுவுவதுதான் இங்கே உங்கள் தேவை எனக் கருதுவது தலைப்பிற்குப் பொருத்தமில்லாத விடயம் என்பது எனது தாழ்மையான கருத்து.
அன்புடன் : பவன்.

#50 logeshkumar

logeshkumar

  வேகமானவர்

 • மலர்கள்
 • PipPipPip
 • 140 posts
 • Joined 6 Years, 4 Months and 22 Days

Posted 18 September 2010 - 05:15 PM

பவன் அவர்களுக்கு

Quote

தலித்துகளை கோயிலுக்கு உள்ளே அனுமதிக்காதது ஏன்

என்று நாஞ்சில் தாஸ் கேட்டார்.

நாஞ்சில் தாஸ் அவர்கள் கேட்ட கேள்விக்கே பதிலளிதேனே தவிர நானாக சொல்லவில்லை என்பதே என் கருத்து.


Quote

வேறு யாருமே இங்கு குற்றங் கூறாத தருணத்தில் நீங்களாக முன் வந்து இந்து மதத்தில் மட்டுமா ஜாதிப் பிரிவினை இருக்கிறது என்று கேட்பதானது அறிந்தோ அறியாமலோ தமிழ் நாட்டில் நிலவும் ஒட்டு மொத்த ஜாதிகளும் இந்து மதத்திலிருந்தே பிறக்கின்றன என்று நீங்களே ஒத்துக்கொள்வதாகவும், ஏற்றுக்கொண்டு அதனை பிற மதங்களோடு ஒப்பிடுவதாகவும் அமைந்திருப்பதை இன்னும் கொஞ்சம் ஆறுதலாக உங்கள் பதிவுகளை வாசித்தால், அதிலும் நாஞ்சில் தாஸ் எப்போதோ குறிப்பிட்டிருந்த ஒரு பதிவின் பகுதியை மேற்கோள் காட்டி வேக வேகமாகப் பதிந்திருப்பதைக் கொண்டு உணர்ந்து கொள்ள முடியும்.அதற்குப் பின்னரான அவரது பதிவுகளும் கூட ஓரளவில் மூட நம்பிக்கைகள் எனும் தலைப்பிற்குள் திரும்புவதாக அமைந்து வருகிறது.

இதை டைப் செய்து போஸ்ட் போஸ்ட் பன்ன பிறகு தான் தெரிந்தது தாஸ் அவர்கள் அனுப்பி இருந்த கருத்துக்களை பார்த்தேன்.

Quote

எனவே,பதிவுக்குத் தொடர்பில்லாமல் உணர்ச்சிவசப்பட்ட உங்கள் தற்போதைய சூழ்நிலை இந்து மதத்தைக் காப்பாற்றுவது எனும் நிலை தவறி, ஒட்டு மொத்த ஜாதிகளின் பிறப்பிடம் இந்து மதம் என்று ஏற்றுக்கொள்வதாக அமைகிறது.

இந்து மதத்தை காப்பாற்ற நான் யார்?

Quote

இவற்றின் அடிப்படையில் உற்று நோக்குவீர்களாக இருந்தால், இந்த ஜாதீயப் பிரச்சினைகளின் அடித்தளம் எங்கு வாழும் மக்களை ஆளுமை செய்கிறது? ஏன் ஆளுமை செய்கிறது? எனும் கேள்விகளுக்கான விடை உங்களுக்குக் கிடைக்கும், அதனடிப்படையில் அதன் பின்னணி என்ன என்பதைத் தீர ஆராய்ந்தீர்கள் என்றால் பகுத்தறிவு அரசியல் பேசுபவர்கள் கூட தமது நலத்திற்காக ஜாதித் தீயில் குளிர் காய்ந்துதான் அரசியல் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் உணர்வீர்கள்.
இதை வேண்டும் என்றால் பரிசீலித்து பாப்போம்.


லோகேஷ் குமார்

#51 NANJILDOSS

NANJILDOSS

  வளர்பிறை

 • மலர்கள்
 • PipPip
 • 42 posts
 • Joined 6 Years, 3 Months and 4 Days

Posted 19 September 2010 - 01:02 PM

நன்றி லோகேஷ்

உலகம் பறந்து விரிந்தது கொஞ்சம் வெளியே எட்டி பாருங்கள் .இன்னமும் நான் அப்படிதான் இருப்பேன்

என்பதில் அர்த்தமில்லை அவசரபடாமல் நிதானமாக சிந்தியுங்கள் .நீங்கள் சர்ச் க்கு போகிறவர் என்று சொன்னால்

யாராவது நம்புவாங்களா??????????????சார் உங்களது பதில் ஒரு குரிப்பிட்ட  மத வாதி போல உள்ளது .அதிலும் தீவிரமாக

பிற மதத்தை கொச்சை படுத்த வேண்டாம் .மூடநம்பிக்கையை மட்டும் பாருங்கள் .

உங்களது மதத்தை பற்றி பேசவேண்டுமேன்றல் { நீங்கள் வசை பாடியிருப்பத்போல் }

100 கோடி பக்கங்களாகவும் வேண்டும் .உங்கள் மனசாட்சிக்கே தெரியும் .கொஞ்சம் இந்து மதத்தை விட்டு வெளியே

வந்து ரிலாக்சாக சிந்தியுங்கள் இந்து ,பைபிள் ம்ம்  குரானும் கடவுள் ஒருவன் என்று தான் சொல்லுகிறது

ஆபிரஹாமின்  பேரங்கள்  தான் யாகோபும் ,இஸ்மாய லும் இவர்கள் இரண்டு பேருடைய கிளைகள் தான்

கிறிஸ்தவமும், இஸ்லாம் ,என்று நான் நினைக்கிறேன் .இது வரலாறு.மேலும் அதிகமாக விளக்கலாம் எனக்கு நேரமில்லை

அதனால மற்ற மதங்களின் பிரிவுகளை பற்றி ஆராய்ச்சி பண்ணி இந்துவெறி அரசியல்வாதி போன்று பேசி

கொச்சை படுத்தவேண்டாம் .தயவு செய்து மனிதன் காலடி பட்ட இடங்களை வணகுவது மனிதனை கடவுளாக வணங்குவது

போன்ற basic மூட நம்பிக்கையாவது தவிர்க்க முயலுவோம் .

சார் ரொம்ப காமடியாக இருக்கு சார் கிறிஸ்தவர்கள் எத்தனையோ பிரிவுகளாக இருக்கலாம் .ஆனால் அவள்களின்

ஒரே தேவன் இயேசு மட்டுமே .அதபோல் முஸ்லிம்களும் இறைதூதர் நபி வழியாக கடவுளை வணங்குஹின்ற்றனர்

ஒரு ஆரோக்யமான விவாதத்தை இப்படி திசை திருப்ப வேண்டாம். ஏனன்றால் நான் உங்கள் மதத்தில்  எதனை பிரிவுகள்

எதனை சாமிகள் என்று ஒரு போதம் கேட்கவில்லை .நன்றி தயவு செய்து இனிமேல் குழப்பாதீர்கள்

Edited by NANJILDOSS, 20 September 2010 - 02:48 PM.


#52 பாபு

பாபு

  வல்லவர்

 • பறவைகள்
 • PipPipPipPipPipPipPipPipPipPip
 • 1,631 posts
 • Joined 6 Years, 11 Months and 10 Days

Posted 20 September 2010 - 03:48 PM

வணக்கம் நண்பர்களே,

கடந்த 14ம் நாளிலிருந்து எனது இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. (ஏதோ தொழில்நுட்பக் காரணமாம், காரணத்தையும் சரிவரக் கூறவில்லை) பல நாட்கள் போராடி இன்று மாலைதான் தொடர்பு கிடைத்தது. தாமதத்திற்கு மன்னிக்கவும்.

நண்பர்களின் பதிவுகளை சற்று மேலோட்டமாகவே வாசித்தேன், ஊன்றிப்படிக்க நேரம் இருப்பதாகக் கருதாத காரணத்தால். நான் உணர்ந்து கொண்டவரையில், சற்றுக் காட்டமாகவும், காழ்ப்புணர்ச்சிகளுடன் சில பதிவுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கருதுகின்றேன். வருத்தம் கொள்கின்றேன். சிலர் எடுத்துரைத்தும் இடித்துரைத்தும் வழியெடுத்துச்சென்றதை வரவேற்கின்றேன்.

மாற்று மதத்தினை விமர்சிக்க நமக்கு ஒரு தகுதி வேண்டும். அது, நாம் நமது மதம் என்று கருதும் மதத்திலிருந்து முதலில் வெளிவரவேண்டும். அப்பொழுதுதான் சமநோக்கான பார்வையில் நமது கருத்துக்களை முன்வைக்க இயலும். அந்தப் பக்குவம் இல்லையெனில் விமர்சனங்களைத் தவிர்த்துக்கொள்வது நலம். வீண் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். நண்பர்களையும் இழக்காமல் மீளப்பெறலாம்.

மற்றொரு விடயம், "நீங்கள் செய்தது தவறு" என்று சொல்வதற்கும் "நாம் செய்தது தவறு" என்று சொல்வதற்கும் உள்ள வேறுபாட்டினைக் கவனியுங்கள். முதலாவது வாக்கியத்தில் நான் மட்டும் நல்லவன் என்று தொனிக்கின்றது. இதனை எவரும் விரும்பமாட்டர். இரண்டாவது வாக்கியத்தில் நாம் என்றதால் எதிராளியும் நானும் ஒரே அணி என்பதால் சற்றே சிந்திக்க வாய்ப்பு ஏற்படும்.

"அவர் ஒரு எருமைமாடு" என்று சொல்வதற்கும் "அவர் ஒரு பசுமாடு" என்று சொல்வதற்கும் உள்ள வேறுபாட்டினைக் கவனியுங்கள்.  ஒருவரை நாம் மனிதராகக் கருதாமல் விலங்கினமாகக் கருத எண்ணிவிட்டோம். அதனை வெளிப்படுத்த மேற்சொன்ன இரண்டு வாக்கியங்களையுமே பயன்படுத்தலாம். எதனைப் பயன்படுத்தினால் அவருக்கு கோபம் வராது ஆனால் நம் கருத்தினையும் வெளிப்படுத்தினமாதிரி இருக்கும்?

இது போன்ற வாக்கிய யுக்திகளைக் கையாண்டிருப்பின் சற்றே அழகாக சென்றிருக்கும் மூடநம்பிக்கைகள் என்றவொரு அருமையான தலைப்பினாலான பதிவுகள். எனக்கு இந்தப் பக்கம் சற்றே கரடுமுரடாகத் தெரிகின்றது.

சகிப்புத்தன்மை, மனிதர்களைக் குறைகளிருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம், நான் மதங்களைக் கடந்த மனிதன், நான் மற்றவரை விட எந்தவிதத்திலும் உயர்ந்தவனில்லை போன்ற சிந்தனைகளும் குணங்களும் நமக்குள் ஊன்றப்பட்டபின் பதிவுகள் மேற்கொள்வோமானால் மகிழ்ச்சி. தலைப்பும் மிகச்சிறந்த வகையில் முன்னெடுத்துச் செல்லப்படும். இத்தலைப்பைத் துவங்கியவர் என்ற வகையில் நண்பர் NanjilDoss அவர்களுக்கே பொறுப்புணர்வு அதிகம். உணர்ந்தீரென்றால் மகிழ்பவர்களில் முதலாமவன் நானே.

நன்றி, தொடர்வோம்.

http://www.thamilwor...showtopic=12856 இதனையும் ஒரு பார்வை பார்த்து விடுங்கள்.

Edited by பாபு, 22 September 2010 - 08:02 AM.

அன்புடன்,
_பாபு.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து. (குறள் - 978)

பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும்,
ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

#53 logeshkumar

logeshkumar

  வேகமானவர்

 • மலர்கள்
 • PipPipPip
 • 140 posts
 • Joined 6 Years, 4 Months and 22 Days

Posted 20 September 2010 - 03:52 PM

Quote

உலகம் பறந்து விரிந்தது கொஞ்சம் வெளியே எட்டி பாருங்கள் .இன்னமும் நான் அப்படிதான் இருப்பேன்

என்பதில் அர்த்தமில்லை அவசரபடாமல் நிதானமாக சிந்தியுங்கள் .

கொஞ்சம் வெளியே எட்டி பாருங்கள் என்று நண்பர் தாஸ் அவர்கள் சொல்வது எனக்கு ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது. கதையை ஆராயாமல் கருத்து மட்டும் எடுப்பீர்கள் என்றால் நல்லது. ஒரு சமயம்
              ராமர் நதியில்  குளிக்க சென்றார், அச்சமையம் கையில் வில், அம்புகளை வைத்து இருந்தார். யுத்த தர்ம படி அம்புகளை கீழே வைக்க கூடாது. மரத்திலோ அல்லது தரையிலோ குத்தி வைக்க வேண்டும். ராமரும் அவ்வாறே செய்து, குளித்து விட்டு வந்து பார்த்தார் அம்பின் கீழே ஒரு தேரை மாட்டிகொண்டு இருந்தது.
         ராமர் உடனே எடுத்து தேரையே "ஒரு சிறு துன்பம் ஏற்பட்டாலே சத்தம் செய்வாயே, அம்பு குத்தியதே ஏன் சத்தம் செய்யவில்லை" என்று கேட்டார். அதற்கு அந்த தேரை சொன்னது "எனக்கு யாரவது துன்பம் ஏற்படுத்தினால் ராமா! ராமா! என்று உன்னை அழைப்பேன் , எனக்கு அந்த ராமரே துன்பம் ஏற்படுத்தினால் நான் யாரை அழைப்பது" என்று கேட்டது.
அது போல மதத்தில் இருந்து அவரே முதலில் வெளியே எட்டி பார்க்கவில்லை, அவர் மற்றவரை வெளியே எட்டி பார்க்க சொன்னால் யாரிடம் சொல்லுவது.

நாஞ்சில் டாஸ் அவர்களே உங்களிடம் ஒரு கேள்வி

நண்பர் பரதிபிரியன் அவர்களின் கருத்துக்களை பார்த்தோம், அதே போல் தனிமதி, பவன் மற்றும் என் கருத்துக்களை பார்த்தோம். இதில் அனைவரின் கருத்துகளிலும் அனைத்து மதங்களில் உள்ள மூட நம்பிக்கைகளை பதித்தார்கள். நீங்கள் மட்டும் தான் இந்து மதத்தை தவிர வேறு எந்த மதத்திலும் மூடநம்பிக்கை இல்லை என்பது போல கூறி உள்ளீர்கள். ஒரே ஒரு மூடநம்பிக்கை கூட கிருஸ்தவ மதாதிலோ இஸ்லாமியதிலோ மேற்கோள் காட்டவில்லை.இதை ஏன் என்று கூறமுடியுமா ?Quote

கோயில் வைக்கிறது ஒரு கணக்கே இல்லையா?

Quote

புது புது சாமிகளை கண்டுபிடித்து

வழி நெடுஹிலும் வைத்து மக்களை பயமுறுத்துவது
என்று கூறிவிட்டு

Quote

இந்து ,பைபிள் ம்ம் குரானும் கடவுள் ஒருவன் என்று தான் சொல்லுகிறது


இந்து மதத்தில் கோவில் வைக்க ஒருஅளவே இல்லையா? இந்து மதத்தில் புது புது சாமிகளை கண்டுபிடித்து வழி நெடுக்கிலும்  வைத்து மக்களை பயமுறுத்துவது என்று கூறிவிட்டு இந்து மதத்தில் கடவுள் ஒருவன் தான் என்று சொல்கிறது தாங்கள் சொல்வது, உங்களின் கருத்துக்கள் எங்களுக்கு முரண்பாடாகவே தோன்றுகிறது

இந்து மதத்தில் நிறையவே மூடநம்பிக்கை இருக்கிறது இதை அனைவராலும் ஏற்று கொள்ளகூடிய கருத்துதான். ஆனால் இந்து மதத்தில் மட்டுமே மூடநம்பிக்கை இருக்கிறது என்பது ஏற்று கொள்ளகூடிய கருத்து இல்லை.

நமது தேடல்களை வேறு விஷயங்களுக்காக செலவு செய்வோம் ஆயின் நமது கருத்து பரிமாற்றம் நன்றாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.லோகேஷ் குமார்

#54 logeshkumar

logeshkumar

  வேகமானவர்

 • மலர்கள்
 • PipPipPip
 • 140 posts
 • Joined 6 Years, 4 Months and 22 Days

Posted 20 September 2010 - 04:03 PM

அட பாபு சார் இந்த பக்கம் இப்போ வந்து இருகாரு. இப்போவாவது வந்தரே. நீங்கள் சொல்வது சரியே. இதை பார்க்காமல் என்னுடைய பதிப்பினை போட்டுவிட்டேன். சரி நீங்கள் சொல்வது போல சில தவறுகள் நடந்துள்ளது. அதில் என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்.

நீங்கள் சொல்வதை பின்பற்றலாம் தப்புஇல்லை என தோன்றுகிறது.

நன்றி,லோகேஷ் குமார்

#55 பாபு

பாபு

  வல்லவர்

 • பறவைகள்
 • PipPipPipPipPipPipPipPipPipPip
 • 1,631 posts
 • Joined 6 Years, 11 Months and 10 Days

Posted 20 September 2010 - 04:28 PM

நாம் செய்த தவற்றினை எடுத்துரைத்தபின் நாமே உணர்வது, நமது வளர்ச்சியின் ஒரு படி. அவ்வகையில் ஒரு படி தாண்டி விட்டீர்கள். எடுத்துரைக்குமுன் உணர்ந்தோமென்றால் இருபடிகள் தாண்டுவதற்குச் சமம். தவற்றினை இழைக்குமுன் உணர்ந்தோமானால் நான்குபடிகள் தாண்டுவதற்குச் சமம். அப்படியொரு தவறான சிந்தனையே எழவில்லையெனில் இனித் தாண்டுவதற்கு ஏதுமில்லை.

மனிதம் போற்றுவோம், மனிதம் தேடுவோம்.
அன்புடன்,
_பாபு.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து. (குறள் - 978)

பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும்,
ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

#56 பவன்

பவன்

  நிர்வாகம்

 • நிர்வாகம்
 • PipPipPipPipPipPipPipPipPipPip
 • 4,584 posts
 • Joined 12 Years, 11 Months and 24 Days

Posted 21 September 2010 - 11:23 AM

மூட நம்பிக்கைகளின் அடிப்படை அறியாமையா?

மனிதர்களிடத்தில் நம்பிக்கைகள் என்பது அவரவர் கற்றுணரும் அநுபவங்களிலிருந்தும்,பரம்பரைப் பழக்கவழக்கங்கள்,சமூகப் பழக்கவழக்கங்களிலிருந்தும் ஆரம்பிக்கின்றன.அவற்றில் பெரும்பாலானவை காலத்திற்கு ஏற்ற வடிவங்களைப் பெறாததனால் பிற்படுத்தப்பட்ட பழக்கவழக்கங்களாக கணிக்கப்படுகின்றன.இதைப் போன்றே மரபு ரீதியான பழக்க வழக்கங்களிலும் இந்தக் குறைபாடு ஏற்படுகின்றன. எனினும், அது அறியாமையின் வெளிப்பாடா அல்லது புறக்கணிப்பா என்பது ஆராயப்பட வேண்டிய விடயம்.

சில குடும்பங்களைப் பொறுத்தவரை தாம் மரபு ரீதியாகப் பின்பற்றி வரும் சில பழக்க வழக்கங்களை விட்டுக்கொடுக்கத் துணிவதில்லை, அவை நாளடைவில் நாகரீக உலகின் முன் நிறுத்தி ஒப்பிட்டுப் பார்க்கப்படும் போது, ஏற்றுக்கொள்ள முடியாதவையாகவும், தவறான நம்பிக்கைகளாவும் தென்படுவதனால்,அதனைப் பிரித்து அறியக்கூடியவர்கள் அவற்றை மூட நம்பிக்கைகள் என்று வகைப்படுத்துகிறார்கள்.அவ்வாறு வகைப்படுத்தப்படும் மூட நம்பிக்கைகளை கைவிடும் படி யாரையும் வற்புறுத்த முடியாதாயினும், அவை ஏன் தவறான நம்பிக்கைகளாக இருக்கலாம் என்பது எடுத்தியம்பக்கூடியதாகும்.

இதற்கு முன்னர் ஒரு பதிவில் தனிமதி சுட்டிக்காட்டியிருக்கும் சில பழக்க வழக்கங்கள் போன்று பல்வேறு அம்சங்கள் அறியாமை அல்லது அதை அறிந்து கொள்ளத் துணியாமையின் பயன்பாட்டால் நம்மிடையே இன்றும் நிலவி வருகிறது.அவ்வாறான விடயங்களை அலசி ஆராய்வதன் மூலம் அவற்றின் நன்மை தீமைகளை மாத்திரமன்றி அவற்றிற்கான உண்மையையும் அறிந்து கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் உருவாகிறது.

எனினும், எந்தவொரு பழக்கவழக்கத்தையும் முதலில் தம்மிடம் தாமே கேள்வி கேட்கக்கூடிய திறமையும் நம்பிக்கையும் அவரவரிடமே வர வேண்டும், இல்லையெனில் நமது நிலையில் இருந்து சரியெனப் பார்க்கும் சில விடயங்கள் வெளியார் பாவையில் தவறாகப் படலாம். எனவே, என்னைப் பாதித்த ஒரு விடயத்தை இங்கே முன்வைக்கலாம் என்று நினைக்கிறேன்.

எதிர்காலத்தை அறிவதில் நாட்டமில்லாதவர்கள் யாரும் இருக்கப்போவதில்லை எனலாம், தமது எதிர்காலத்தை முன் கூட்டியே அறிந்து அதை மாற்றிக்கொள்ளலாம் அல்லது அதற்கான பரிகாரங்களைச் செய்வதன் மூலம் அதிலிருந்து விமோசனம் பெறலாம் எனும் நம்பிக்கை நமது சமூகத்தில் இன்னும் பலமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஒருவருடைய முழு ஜாதகத்தையும் முன் கூட்டியே அறிந்து கொள்வதற்காக பல்லாயிரக்கணக்கில் செலவு செய்பவர்கள் இருக்கிறார்கள்.

ஆயினும், அங்கு இவர்களுக்காகத் தரப்படும் தரவுகள் மற்றும் இதர வழிமுறைகள் முழுக்க முழுக்கக் கணிப்பில் அமையும் விடயம் எனும் அடிப்படை இங்கே மறுக்கப்படுகிறது.

சோதிடக்கணிப்பு மற்றும் எதிர்வு கூறல்களைப் பொறுத்தவரை ஏன் அவர்களால் உறுதியாக ஒரு விடயத்தை வலியுறுத்திக் கூற முடிவதில்லை எனும் இடத்தில் இருந்து எனது கேள்விகள் ஆரம்பிக்கின்றன.

குறிப்பிட்ட நபர்,முனிவர்,யோகி அல்லது சோதிடர் தனக்குச் சரியான தகவல்களைத் தந்து, எதிர்காலத்துக்கு உதவினார் எனும் யாராவது ஒருவரின் வாய் மூல விளம்பரத்திலிருந்தே இவ்வாறான தொழில்கள் வளர்ச்சியடைகின்றன. அப்படியான விளம்பரங்கள் வேலை செய்யவில்லை என்றால் அந்தத் தொழிலை செய்பவரே வருமானமின்றித் தவிப்பதை நான் கண் கூடாகக் கவனித்திருக்கிறேன்.

யாராவது நம்பிக்கையுள்ளவர்கள் வெளியே சென்று வாய்மூல விளம்பரம் செய்வதிலிருந்து ஆரம்பிக்கும் இவர்கள் தொழில், வரும் பக்தர்களுக்கு எதிர்கால நன்மைகளுக்கு வழி காட்டுகிறது என்ற நம்பிக்கை ஒரு புறம் இருக்க, இந்தத் தொழிலை செய்வதற்காக வெளி நாடுகளுக்கு வந்து இங்கே வியாபார நிலையங்களை வாடகைக்கு எடுத்து, இறுதியில் அந்த வாடகையையும் செலுத்த முடியாமல் அவர்களே திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள், ஊருக்கே எதிர்காலம் கூறும் இவர்கள் தம்முடைய எதிர்காலத்தைக் கணிக்காமலா இப்படி வந்து துன்பப்படுகிறார்கள்? ஆழமாக அவர்களுடன் பேசும் போது அவர்கள் செய்வது ஒரு தொழில் என்பதும், அந்தத் தொழிலுக்காக தமது அநுபவங்களையும் எண்ணங்களையும் ஊகத்தின் அடிப்படையிலேயே பிறருக்குக் கூறுகிறார்கள் என்பதும் தெரிந்து கொள்ளக் கூடிய விடயங்களாக இருக்கின்றன.

ஒரு காலத்தில் ஆந்திரப் பிரதேசங்களிலிருந்து இங்கிலாந்துக்குப் படையெடுத்து வந்த சோதிட சாஸ்திரர்கள் திடீரென தலை முறை மாற்றத்தை சந்திக்க நேர்ந்ததன் மூலம் அவர்களையும் அப்படியான கட்டாயத்திற்கு உந்திச் செல்வது அறியாமையில் தவிக்கும் மக்களே எனும் முடிவுக்கு வரக்கூடியதாக இருக்கிறது. ஆரம்பத்தில் சாதாரணமாக 28-35 வயது மதிக்கத்தக்க சோதிடர்களின் ஆதிக்கம் ஆரம்பித்தாலும், நாளடைவில் இங்கே இருக்கும் மக்கள் மத்தியில் சோதிடம் சொல்வதற்கு இவர்களுக்கு அநுபவம் இருக்கிறதா என்று பரவலாக உருவான கேள்வியின் விளைவாக இப்போது அவர்களது தந்தையர் மற்றும் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் இப்போது அவர்களுக்குப் பதிலாக இந்தத் தொழிலை நாடு விட்டு நாடு வந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதன் அடிப்படையில் பார்க்கும் போது, ஏதோ ஒரு வகையில் அநுபவம் தான் சோதிடத்தின் அடிப்படை என்று பக்தர்கள் ஏற்றுக்கொண்டாலும் கூட, மீண்டும் அவர்கள் அதன் பின்னால் நேரத்தையும்,பணத்தையும் விரயமாக்கி,நாட்டின் சட்ட திட்டங்களுக்கும் ஊறு விளைவித்து,முச்சந்தியில் முட்டை உடைப்பதும்,பரிகாரம் எனும் பெயரில் சொத்தை இழப்பதுமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்படியானவர்கள் அறியாமையில் மூழ்கியிருக்கிறார்களா இல்லையா என்பதை அறிந்து கொள்வதே மிகக்கடினமாக உள்ளது.
அன்புடன் : பவன்.

#57 பாபு

பாபு

  வல்லவர்

 • பறவைகள்
 • PipPipPipPipPipPipPipPipPipPip
 • 1,631 posts
 • Joined 6 Years, 11 Months and 10 Days

Posted 21 September 2010 - 12:54 PM

பவன்,

தங்களின் முந்தைய பதிவின் துவக்கக் கேள்விக்கு நான் விடையளிப்பதாக இருந்தால், ஆம் என்றே விடையளிப்பேன். அதனால்தான் நான் கிறுக்கனாகப் பார்க்கப்பட்டாலும், கலகக்காரனாகப் பார்க்கப்பட்டாலும், சற்று மேதாவித்தனமாகப் பேசுபவன் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டாலும் பரவாயில்லை என்று, எல்லோரிடமும் எதிர்க்கேள்விகள் கேட்பேன். அப்பொழுதாவது அவர்களைச் சிந்திக்க வைத்துவிடமாட்டோமா என்றொரு ஆவல். ஆடையணியதோர் ஊரில் நான் மட்டும் அரைக்கச்சையணிந்து திரிவது போல் இருக்கின்றேன். சிறு குழந்தைகளையும் அறிவியற்பாற் சிந்திக்கவைக்கும் முகமாக விளையாட்டாகக் கேள்விகளையும் கேட்பேன். விடைதெரிய அவர்களையே சிந்திக்கத் தூண்டுவேன். மொத்தத்தில் அறியாமையை முழுமையாக அகற்ற என்னால் இயலாவிட்டாலும் அடுத்த தலைமுறைகளைச் சற்றே சிந்திக்கும் வழிமுறையை அறிமுகப்படுத்துகிறேன் என்ற திருப்தி எனக்கேற்படுகின்றது.

ஆக, அறியாமைதான் பயம், பயத்தின் காரணமாகவே கடவுள் நம்பிக்கை, அதன்பாற்பட்டதே மூடநம்பிக்கைகளும், மனிதர்களுள் ஏற்றத்தாழ்வுகளும். வரலாற்றைப் பார்த்தாலே நாம் இதனை ஓரளவு விளங்கிக்கொள்ளலாம். புவிதான் மையம் அதனைச்சுற்றியே அனைத்துக் கோள்களும் என்ற கொள்கை புரையோடிப்போயிருந்தது எத்தனை காலம்? மாற்றுக் கருத்து வைக்கவும் அறிஞர்கள் பட்ட துன்பம் எத்தனை? காரணம், மக்களை அறியாமையில் வைத்திருந்த மதப்பூசாரிகளல்லவா? மக்கள் அறிந்துகொண்டபின் அவர்களின் புரட்டுக்கள் வேறு வடிவம் கொண்டுள்ளது தற்போது. அறியாமல் ஏமாறுவதற்கு நாம் தயாராக இருக்கும் வரையில் மதப்பூசாரிகளும், அதிகாரம் படைத்தவர்களுக்கும் கொண்டாட்டம்தான். இதில் மற்றொரு காரணியும் உண்டு, பிரிவினை. நாம் யாரும் எதிலும் ஒன்று படுவதில்லை. அறிவினைத் தேடுவோம் என்பதில் மட்டும் ஒன்றிணைந்தோமானால் போதும், புவியில் யாரும் யார்க்கும் அடிமையில்லை. அவரவர் வேலைகளைச் செவ்வனே செய்து கொண்டிருக்கலாம்.

சரி, விடயத்திற்கு வருகிறேன். சோதிடம், குறி சொல்வது, மந்திரம் போன்றவைகளை ஒரு பகுத்தறிவுவாதியாக எதிர்த்தே ஆகவேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால், பகுத்தறிவு என்பது எதனையும் மறுப்பதில்லை மாறாக அதன் வேர் வரை சென்று உண்மையை உணர்வது என்று உணர்ந்தபின்னர் எனது போக்கில் சற்று மாறுபாடுகள் ஏற்படுத்திக்கொண்டேன்.

எனக்குத் திருமணமான புதிது. எனது மனைவி மற்றும் அவர்களைச் சார்ந்த உறவினர்கள் பலர் ஒரு குறிசொல்லும் நபரைப் பரிந்துரைத்து அவரைப் போய்ப் பார்க்குமாறு வற்புறுத்தினர். எங்களுக்கு எந்தத் துன்பங்களும் இல்லையென்றாலும் என் கொள்கைகளை மாற்றும் முகமாக அப்படிச் செய்தனர். நானும் சற்று அசைந்து கொடுத்து என்னதான் நடக்கிறது என்று பார்க்கலாம் என அங்கு சென்றேன். சிறிது நேரம் காத்திருத்தலுக்குப்பின் உள்ளே அழைக்கப்பட்டோம். எங்களை அவர் எதுவுமே கேட்கவில்லை, நாங்களும் எதுவுமே சொல்லவில்லை. தனக்கு இடதுபக்கம் உள்ள அறையினைச் சற்று எட்டிப் பார்த்தார். நானும் பார்த்தேன். அங்கு அதிபயங்கர உருவில் ஆளுயரத்திற்கு காளி சிலை ஒன்று. பின்னர், எங்களிடம், என் தாயாரின் பெயரையும், என் மனைவியின் தாயாரின் பெயரையும் கூறி, அப்படி யாரும் உங்கள் வீட்டில் உள்ளனரா என்பது தொடங்கி எனது குணங்களைப் பற்றியும் எங்கள் குடும்பத்தார்களைக் குறித்து சில விடயங்களை சொல்லச் சொல்ல நான் வியப்பின் விளிம்பிற்கே சென்று விட்டேன். பின்னர் அவற்றையெல்லாம் பெரிதாகக் கருதவில்லையெனினும், எதனையும் ஆதாரமின்றி மறுக்கக்கூடாது என்பதைமட்டும் உணர்ந்து கொண்டேன்.  அதனைபோன்றே ஆதாரமின்றி எதனையும் ஏற்றுக்கொள்ளக்கூடாது, அறிவின் துணைகொண்டு அறிந்திடல் வேண்டும் என்றும் உறுதிகொண்டேன்.

ஆக, இவ்வுலகில் நமக்குத் தெரிந்தது வெகு குறைவானதே. நமக்குத் தெரியவில்லை என்பதால் ஒரேயடியாக இல்லை என்று மறுத்துவிடுகிறோம். அல்லது அவர் சொன்னார், இவர் சொன்னார் உண்மைதான் என்றும் ஒரேயடியாக நம்பிவிடுகிறோம். ஒன்று இந்த ஓரம் அல்லது அந்த ஓரம், நடுநிலையில் நின்று கவனிக்க விரும்புவதில்லை.

இந்தப் போக்குதான் மாறவேண்டும். அதற்கு ஏதுவாக இந்தப் பக்கத்தில் நாம் நம்பும் சில நம்பிக்கைகளை முன்வைத்து இவைகள் சரியா, தவறா என நண்பர்களின் கருத்துக்களைக் கேட்டுத் தெளிவு பெறுவோம் எனில் அனைவருக்கும் மகிழ்ச்சியாகவும் இருக்கும், சுயமாக சிந்திக்கும் வாய்ப்புக்களும் கிடைக்கும். என் மதம் பெரிது, உன் மதம் சிறிது என்ற எண்ணங்கள் தேவையில்லை. நாம் பிறக்கும் போது மதங்கள் தெரியாமல்தான் பிறக்கின்றோம். பிறந்தவுடன் வேற்று மதத்தாரிடம் வளர்ந்தோமானால் நம் மதம் எது? நம் மதம் எனக் கருதும் மதத்தில் உள்ள மூடநம்பிக்கைகளை முதலில் உணர்வோம், பின்னர் மாற்று மதத்தில் உள்ள மூடநம்பிக்கைகளுக்குள் நுழைவோம்.

விவாதிக்கும் முன் எந்த மதத்தையும் சாராத பார்வையில் விவாதிப்போம்.

எனது கேள்வியாக நான் முன்வைப்பது, எந்த மதமாகட்டும், எல்லாம்வல்ல அனைத்துமறிந்த கடவுளுக்கு காணிக்கை அல்லது நேர்த்திக்கடன் செலுத்துவது என்பது எதற்காக?
அன்புடன்,
_பாபு.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து. (குறள் - 978)

பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும்,
ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

#58 பவன்

பவன்

  நிர்வாகம்

 • நிர்வாகம்
 • PipPipPipPipPipPipPipPipPipPip
 • 4,584 posts
 • Joined 12 Years, 11 Months and 24 Days

Posted 21 September 2010 - 01:45 PM

என்னைப் பொறுத்தவரை சோதிடம்,சாஸ்திரம்,குறி சொல்லுதல் போன்ற விடயங்கள் வெறும் ஊகத்திலும்,அநுமானத்திலும் மட்டுமே இடம் பெறுகின்றன. பாபு கூறிய சம்பவம் ஒன்றிற்கு நேரதிரான அநுபவம் ஒன்றை ஒரு தடவை நிலா அவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன். ஒருவருடைய பெயரை மாத்திரம் கூறினால் அவரது பரம்பரையில் உள்ள அனைவர் பற்றிய விபரங்களையும் தரக்கூடிய ஒரு சோதிடக்காரர் இருந்ததாகக் கூறி அவரைப் பார்க்கச் சென்ற இடத்தில், தனது நண்பருக்கு அவர் கூறிய பல பெயர்கள் அவர்களது குடும்பத்தில் காணப்பட்டாலும், தன்னுடைய பெயரை மாற்றிச் சொன்னதன் மூலம் தன்னிடம் அந்த சோதிடர் பொய்யான பெயர்களைக் கூறி அவரது கணிப்பைத் தவற விட்ட சோதிடர் பற்றி நிலா அவர்கள் கூறியிருந்தார்.

ஒருவரின் பெயரை வைத்து அவரது முழுக்குடும்பத்தவரின் பெயர்களையும் வெளியில் சொல்லக்கூடிய திறமையுள்ள சோதிடருக்கு இன்னொருவர் பொய்ப் பெயரைத்தான் கூறுகிறார் என்று கண்டறியும் சக்தியும் இருக்க வேண்டும் என்பது என் நிலைப்பாடு.

அத்துடன், சோதிடம் என்பது புதிதாக எதையும் கொண்டு வந்து நம் முன் வைக்க முடியாத ஒரு கலை. அந்தக் கலையின் அடிப்படை என்பது கடந்த கால உலக வரலாறு மற்றும் மனிதர்களின் குணாதிசயங்களின் தொகுப்பை அறிந்து கொள்தலும், அதிலிருந்து ஒற்றுமையான தரவுகளைக் கொண்டு கணிப்பிட்டு கூறப்படும் பழைய தகவல்களும் தானே ஒழிய வேறு ஒன்றுமில்லை.

ஒரு தடவை இங்குள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கணித மேதையொருவரின் நிகழ்ச்சியொன்று ஒளிபரப்பினார்கள், அவர் எப்படிப்பட்ட கணிப்பீட்டு மேதை என்றால் 1000 பேர் உள்ள ஒரு அரங்கத்திற்குள் உள்ள யாராவது ஒருவர் தான் கொடுக்கும் ஒரு 40 பக்க பத்திரிகையிலிருந்து ஒரு சொல்லைத் தெரிவு செய்யச் சொன்னால் அதில் உள்ள ஆயிரக்கணக்கான சொற்களில் எதைத் தெரிவு செய்வார் என்பதை முன் கூட்டியே எழுதி வைத்து விட்டு அதை நிரூபிப்பார். அவரை மற்றவர்கள் கணிப்பீட்டு மேதை என்று கூறினாலும், தானொரு மேதையில்லை தான் பாவிப்பது உளவியல் நுணுக்கங்களுடனான தந்திரம் மாத்திரமே என்று அவர் வெளிப்படையாகவே கூறுவார்.

இவரது குறிப்பிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த விடயம் எது வென்றால், யாரென்றே தெரியாத ஒரு குறிப்பிட்ட நபருக்கு தபால் மூலம் பந்தயங்கள் கட்டினால் அதில் வெற்றி பெறும் இலக்கங்களை அறிவிப்பதாகும். அதன் அடிப்படையில் அந்த நபர் வற்புறுத்தப்படவும் மாட்டார். இப்படியாக தெரிவு செய்யப்பட்ட ஒரு பெண்மணிக்குத் தொடர்ந்து பல சீட்டிழுப்புகளுக்கான வெற்றி இலக்கங்கள் மற்றும் சிறு சிறு பந்தயங்களுக்கான வெற்றி இலக்கங்களை எப்போதுமே தெரிவித்துக்கொண்டே இருப்பார், அதிலும் நூறு வீதம் இவரது கணிப்பு சரியாகவே இருக்கும், அந்தக் கணிப்பின் அதி உயர்ந்த நம்பிக்கையில் இப்போது இவரது சக்திக்கும் மேலதிகமான பணத்தைத் திரட்டி ஒரு குதிரைப் பந்தயத்தில் பணம் செலுத்தும்படி இந்த பெண்மணிக்கு உத்தரவு வரும், முதலில் நிறையவே யோசித்தாலும்,கடந்த அநுபவங்களின் அடிப்படையில் அந்தப் பெண்மணியும் அதற்காக பல ஆயிரம் பவுண்கள் கடன் பெற்று அந்தப் பந்தயத்தில் பணத்தைக் கட்டுவார்.

மிக உயர்ந்த தொகை பணம், அதுவும் தனக்கு இந்தக் கணிப்பு மேதையின் உதவியால் கிடைக்கப்பெற்ற பணத்தின் பல மடங்கு,அதில் பெரும்பாலான பங்க கடனாகப் பெற்றுக்கொண்டது, எனவே இறுதியில் அந்தப் பந்தயத்திற்குச் சென்று பணம் கட்டும் போது, அந்தப் பெண்மணி தடுமாற்றத்திற்குள்ளாவார்,எனினும் அவர் பணம் கட்டியே ஆக வேண்டும் என்னும் நிபந்தனையினால் இந்தத் தடவை தனக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலையும் மீறி தனது சொந்தத் தெரிவில் ஒரு குதிரை மேல் பந்தயப் பணத்தைக் கட்டிவிடுவார்.

துரதிஷ்டவசமாக அந்தக் குதிரை தோற்றுப் போகவே, இறுதியாக அத்தனையையும் இழந்து அந்தப் பெண்மணி கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பார்.

ஆனாலும் அந்த இடத்திற்கு வந்து தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் அந்த கணிப்பீட்டாளர், இவர் பெயரில் தான் ஏற்கனவே பணம் செலுத்திய ஒரு பற்றுச்சீட்டைக் காட்டும் போது, அவரது கணிப்பிலான அந்தக் குதிரையே வெற்றி பெற்றிருக்கும், அதுவும் இந்தப் பெண்ணின் பெயரில் தான் கட்டப்பட்டிருக்கும், எனவே இந்தப் பெண்ணுக்கு அவரது பணமும் மேலதிக பணமும் மீளக் கிடைத்துவிடும்.

இந்த நிகழ்ச்சியைப் பார்வையுற்றோர் மாத்திரமல்ல, அந்தப் பெண்மணியால் கூட இவரது துல்லியமான கணிப்பை நினைத்து ஆச்சரியமாக இருக்கும், அந்த நிகழ்ச்சியின் நோக்கமும் அதுதான். ஆனால் அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் அவர் தரும் விளக்கத்தைப் பார்க்கும் போதுதான் அதற்கான பின்னணி விடயங்கள் தெளிவாக்கப்படும்.

அதன்படி, இந்தப் பெண்மணியை இவர் தேர்வு செய்ததென்பது நேரடியான ஒரு தேர்வாக இருக்காது, பல லட்சம் பேர் இதே நேரத்தில், இதே பெண்மணிக்குக் கொடுக்கப்பட்டது போன்ற தகவல்கள் உதவிகளைப் பெற்றுக்கொள்வார்கள், அவர்களில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட அளவினரைத்தவிர மற்றவர்கள் தோல்வியைத் தழுவுவார்கள், அதாவது அவரது கணிப்பு அங்கே தவறாகப் போயிருக்கும். இப்படி ஒவ்வொரு கட்டத்தையும் தாண்டி வரும் போது பல சந்தர்ப்பங்களில் அவரது கணிப்போடு ஒத்துப்போன இறுதி எட்டுப் பேர் இருப்பார்கள், அந்த எட்டுப் பேருக்குமாக எட்டுக் குதிரைகளிலும் பந்தயம் கட்டப்பட்டிருக்கும், ஆனாலும் இந்தப் பெண்மணி ஒருவர்தான் வெற்றியைப் பெறுவார்.

பல லட்சம் பேர்களில் இப்படியொருவருக்குத்தான் அவரது கணிப்பு சரி வந்தது, அதை உண்மையாகக் காட்ட வேண்டும் என்பதால் அது தொலைக்காட்சியில் ஒரு விவரணமாக ஒளிபரப்பப்பட்டது, இதையே நமது நாடுகளில் என்றால் அந்த நபரை மேதையாக்கி விளம்பரப்படுத்தி அவரது தயவில் அனைத்தும் நடந்தேறிவிடும்.

எனவே, கணிப்பீடு என்பது வெறும் கணிப்பீடு தான், அது ஆயிரத்திலோ லட்சத்திலோ சில பேருக்கு சரியாகக் கணிக்கப்படுவதாக இருக்கலாம், அதில் ஒருவராக அன்றைய தினம் நீங்களும் இருந்திருக்கலாம் என்பதோடு அந்த விடயத்தை நான் வரையறுத்துக்கொள்கிறேன்.

:teeth_smile: :teeth_smile:  

ஏனெனில் உங்களைத் தவிர அன்றைய தினம் தவறான கணிப்பீட்டைப் பெற்ற பல பேர் இருக்கலாம், அவர்களைப் பொறுத்தவரை அவர்களது எண்ணத்தில் மாற்றமிருக்காது. இது போலத்தான் காண்டம் வாசிப்பதும், அதற்கு வேறாக நட்சத்திர விடுதிகளில் அறை வாடகைக்கு எடுத்து மாதக்கணக்கில் கஷ்டப்பட்டு அவர்கள் பற்றிய தகவல்களைப் பெற்று பின்னர் ஒரு ஒலி நாடா வடிவில் கொடுத்து விடுகிறார்கள், அதை நம்பி தம் சொத்தையிழந்த குடும்பங்கள் எத்தனையோ இருக்கின்றன.

இந்த வடிவமும் அதன் நிகழ்ச்சித் திட்டமும் தான் தற்போது கணணி மூலமும் பாவனையில் இருக்கிறது, சாதாரணமாக கணணியால் எதை சுயமாக சிந்திக்க முடியும்? எவ்வாறான தரவுகளைத் தர முடியும்? என்ற அறிவு தற்போது அனைவருக்கும் இருக்கிறது, அப்படியிருந்தும் கூட தனக்கு வழங்கப்பட்ட தகவற்தொகுப்பில் இல்லாத ஒன்றை அந்தக் கணணியால் சொல்ல முடியாது என்பதை அறிந்திருந்தும் கூட கணணி சோதிடம் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள்.

அங்கே கணிப்பீட்டுக்கான ஒரு நிகழ்ச்சி நிரல் உருவாக்குவதானால் அதற்கென்று விதிகள் இருப்பது மாத்திரமன்றி, அதன் தெரிவுகளை அது வெளியிடுவதற்கான தகவற் தொகுப்பு ஒன்றும் இருக்க வேண்டும், அந்தத் தொகுப்பைக் கற்றுக் கொள்வதைத்தான் வெளியில் இருந்து தொழில் செய்பவர்களும் செய்கிறார்களே தவிர, அவர்களுக்கு அருள் வந்து குறி சொல்கிறார், அல்லது அவர் வெளியுலகத் தொடர்பில் எதிர்காலத்தைச் சொல்கிறார் என்று நம்புவதெல்லாம் அளவுக்கு மீறிய அறியாமை என்றே கருதுகிறேன்.

அத்துடன் பாபுவின் காணிக்கை தொடர்பான கேள்வியைப் பொறுத்தவரை, இது எந்தக் கடவுளுக்கும் தேவையில்லாத ஒன்று என்றே கருதுகிறேன், எனினும், இதன் அடிப்படை ஏதோ ஒரு வகை நம்பிக்கையில் இருந்து ஆரம்பிக்கிறது, அந்த நம்பிக்கை நான் ஏற்கனவே கூறியது போன்று பரம்பரை பரம்பரையாக வளர்ந்து வரும் பழக்க வழக்கங்களின் அடிப்படையிலேயே பின்பற்றவும் படுகிறது என்று நினைக்கிறேன், இறுதியில் அதன் நன்மை யாரைப் போய் அடைகிறது என்பது வெளியில் தெரியாத விடயங்கள்.

முன்னர் ஒரு காலத்தில் ஊரில் இருக்கும் வறிய மக்களுக்குப் பயன்படுவதற்காக யாராவது பெரியவர்களால் இப்படி பணம்,பொருள் சேர்க்கப்பட்டு அவை மீண்டும் மக்களுக்கே வழங்கப்பட்ட நடைமுறைகள் பழகத்தில் இருந்திருக்கலாம், அவை நாளடைவில் திரிபடைந்து தற்போது அவை வேறு வடிவங்களில் பயன்படுத்தப்படுகிறது என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.
அன்புடன் : பவன்.

#59 பாபு

பாபு

  வல்லவர்

 • பறவைகள்
 • PipPipPipPipPipPipPipPipPipPip
 • 1,631 posts
 • Joined 6 Years, 11 Months and 10 Days

Posted 21 September 2010 - 01:59 PM

பவன் தாங்கள் கூறும் விளக்கங்கள் அனைத்திலும் நானும் உடன்படுகின்றேன். அருமையான, தெளிவான தர்க்கமுறையிலான விளக்கங்கள்தான். எனினும், இந்த உலகில் இன்னும் வெளிப்படுத்தப்படாத பல மறைபொருட்கள் உள்ளன. தாங்கள் அதனைச் சந்திக்கும் வாய்ப்புக்கள் ஏற்படவில்லை அல்லது சந்தித்தும் அதனைப் பொருட்படுத்தவில்லை என்றே கருதுகின்றேன். எனக்குச் சில தனிப்பட்ட அனுபவங்கள் உள்ளன. அவற்றை இங்கே முன்வைத்தால் மற்றவர்களை மடமைவழிக்கு அழைத்துச்சென்றவனாகிவிடுவேன் என்பதால் தவிர்த்துவிடுகின்றேன். எனினும் அவற்றை இன்னும் நான் நம்பாமல் ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளேன். நீங்கள் ஒரே வார்த்தையில் மறுத்துவிடுவது போன்றே நானும் மறுத்து வந்தேன். நமது வாழ்க்கையில் நமது அனுபவத்தில் உணராதவரை அப்படித்தான் இருப்போம். உணர்ந்த பின் சிலர் அப்படியே நம்பிவிடுவார்கள், நம்மைப்போன்ற சிலர் ஆராயத் துவங்கிவிடுவார்கள். உங்களுக்கும் அப்படியொரு வாய்ப்பு அமையும் வரை காத்திருப்போம்.

எந்த மதமாகட்டும், எல்லாம்வல்ல அனைத்துமறிந்த கடவுளுக்கு காணிக்கை அல்லது நேர்த்திக்கடன் செலுத்துவது என்பது எதற்காக? என்ற கேள்விக்கான தங்கள் பதில் நன்று, சிந்தனையும் சரியே.

மற்றவர்களும் பதிலளிக்கட்டும், பின்னர் அந்த நடைமுறை இன்னமும் பின்பற்றப்படவேண்டுமா, வேண்டுமெனில் நியாயமான காரணங்களைக் கூறித் தொடரலாம் அல்லது வேண்டாம் என்ற போக்கில் விவாதிப்போம்.
அன்புடன்,
_பாபு.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து. (குறள் - 978)

பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும்,
ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

#60 logeshkumar

logeshkumar

  வேகமானவர்

 • மலர்கள்
 • PipPipPip
 • 140 posts
 • Joined 6 Years, 4 Months and 22 Days

Posted 21 September 2010 - 02:35 PM

பாபு சார் மற்றும் பவன் அவர்களுக்கு என் வணக்கங்கள்,

Quote

பவன் அவர்கள் சொன்னது போல சிலர் மரபு ரீதியாகப் பின்பற்றி வரும் சில பழக்க வழக்கங்களை விட்டுக்கொடுக்கத் துணிவதில்லை.
உண்மைதான். ஜோதிடம் பற்றி இன்னும் நிறைய தெரிஞ்சிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. அதை பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ளேன்(படித்து கொண்டு இருக்கிறேன் - பணம் சம்பாதிப்பதற்காக அல்ல அது உண்மையா பொய்யா என்பதற்காக). அதில் நிறைய சிந்திக்க வேண்டிய விஷயங்கள் இருக்கு. பாபு சார் சொன்னது போல குறி சொல்லும் பெண்ணிடம் நண்பர்கள் குடும்பதினுடன் சென்றார்கள், என்னையும் அழைத்தார்கள். சரி, என்னதான் சொல்றாங்கனு நானும் சென்றேன். நாங்கள் அந்த குறி சொல்லும் பெண்ணின் இடத்தில இருந்து சுமார் 50KM தூரத்தில் இருக்கும் எங்கள் வீடு . விளக்கேற்றி ஆரம்பித்தார் ஒரு ஒரு பெயராக சொல்ல ஆரம்பித்தால் நானும் வியப்பாக பார்த்தேன். அசந்து விட்டேன். சுமார் 100 பெயர் சொல்லி இருப்பார். அவர்களின் நண்பர்கள் மற்றும் சொந்தகாரர்கள் பெயர்களை. அதற்கு அப்பரும் சில தகவல்கள் அது நம்பும் படி இல்லை, இல்லை என்றால், அது அனைவருக்கும் பொருந்தக்கூடியது.

பெயர்கள் அனைத்தையும் எப்படி அந்த பெண் சொன்னார் என்பது இன்னும் புரியவில்லை, இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முந்தைய பெயர்களையும் சொன்னார்.

      

Quote

அந்தத் தொழிலை செய்பவரே வருமானமின்றித் தவிப்பதை நான் கண் கூடாகக் கவனித்திருக்கிறேன்.
இதையை நானே பல முறை யோசித்து இருக்கிறேன்.

நானே என் கண்கூடாக பார்த்து இருக்கிறேன் அனைவருக்கும் வீடு கட்டித்தரும் கொத்தனார் அவருக்கே வீடு இல்லாமல் இருக்கும். அவருக்கு வீடு இல்லை என்பதற்காக அவருக்கு வீடு கட்ட தெரியாது ஆகுமா ?

அதை போலவே Electrician வீட்டுல டியுப் லைட் சரியா எரியாது,
ஸ்கூட்டர் mechanic வண்டி Starting Trouble -லா இருக்கும்.
ரேடியோ mechanic வீட்டுல ரேடியோ ஒரே இரைச்சலா இருக்கும்.
கம்ப்யூட்டர் Engineer வீட்டுல CPU-லா இடது பக்கம் டோர் திறந்தே இருக்கும்.
ஆச்சாரி வீட்டுல அவர் வீட்டு கதவு சரியா பூட்டாது.
சாப்ட்வேர் Engineer அவருடைய சொந்த ஆபீஸ்-இல் சாப்ட்வேர் நன்றாக இருக்காது.

அதற்காக அவர்களுக்கே அது தெரியாதுன்னு அர்த்தம் இல்லை அல்லவா. சில ஜோசியரை நான் பார்க்கும் போது இதை போலும் நினைப்பது உண்டு.

ஒரு சக்தி நமக்கு மேலை உண்டு. இதை பொதுவா நம்புறது இல்லை.
பொதுவாவே ஒரு மனுஷன் எப்போ நம்புறது இல்லனா

தமது ஐம் புலன்களால் ஒரு விஷயத்தை உணராமல் இருந்தால் அதை நம்புவது இல்லை. (பார்க்காதது, கேட்காதது, தொட்டு பார்க்காதது, சுவைகாதது, நுகரமுடியாதது)
அப்பரும் சொல்லறவங்க சரியா சொல்லலைனா நம்புவது இல்லை.
அப்பரும் புரிந்து கொள்ளும் பக்குவம் அவர்களுக்கு இல்லை என்றாலும் நம்புவது இல்லை.
அதனால உண்மையான விஷயங்கள் நம்பாததால பொய்ஆகாது.

நானும் நிறைய தேடலில் தான் உள்ளேன். நிறையே தெரியாதது இருக்கலாம் என்றே தோன்றுகிறது.

பலி கொடுப்பது அவரவர் விருப்பம். இதில் எனக்கு உடன்பாடு இல்லை.

Edited by logeshkumar, 21 September 2010 - 02:54 PM.லோகேஷ் குமார்