Jump to content

நிலாமுற்றம் அன்புடன் வரவேற்கிறது !
நிலா முற்றத்தில் நீங்களும் இணைந்து கொள்ளலாமே ? உங்கள் கதைகள்..கவிதைகள்..மாத்திரமன்றி தரமான உங்கள் பின்னூட்டங்கள்..விமர்சனங்கள் கூட நம் தமிழ்ப்பணியின் காலக் கட்டாயம் !

உங்கள் வரவைக் காண எதிர்பார்த்திருக்கிறோம். - நிலா.

கொள்ளு ஏன் சாப்பிடவேண்டும்?


This topic has been archived. This means that you cannot reply to this topic.
10 replies to this topic

#1 தனிமதி

தனிமதி

  மூத்தவர்

 • தூண்கள்
 • PipPipPipPipPipPipPipPipPipPip
 • 30,815 posts
 • Joined 11 Years and 8 Days

Posted 18 October 2011 - 06:36 AM

Posted Imageணவே மருந்து, மருந்தே உணவு’ என்றது நம் பாரம்பரிய ரகசியம்... அதனை அச்சுப்பிசகாமல் மொழிபெயர்த்துக் கொண்டுபோய் ‘உணவு என்பது சுவைக்காக மட்டுமல்ல  நோய் வராமல் தடுக்கவும்தான்’ என்று அரிதாரம் பூசிக்கொண்டு ஆங்கிலத்தில் functional foods என்று கூறும்போது நம் மனம் சட்டென்று  ஏற்றுக்கொள்கிறது.
காஃபிக்குப் பதில் cornflakes, மதிய உணவுக்கு. burgerம் என்று வேகமாக வளர்ந்து வரும் கம்ப்யூட்டர் கலாச்சாரத்தில் இட்லியும், அரிசி சோறும்  அந்நியன் ஆகிவிட்டது.   அதிலும் சிறுதானியங்களின் மகத்துவத்தை சிறுமையாகவே கருதும் மேற்கத்திய மோகம் நம்மை இறுக்கமாக பற்றிக்கொண்டது.

தினை, அரிசி, கம்பு, சோளம்... என நீளும் இந்த சிறுதானியப் பட்டியலில் கொள்ளு என்ற தானியத்தை குதிரைக்கு மட்டுமே என பட்டா செய்துவிட்டோம். கொள்ளில்  லோ கிளைசீமிக் தன்மையும் (low glycemic index), நார்ச் சத்துக்களும், நம்முடைய உடலுக்கு தினமும் தேவையான இரும்புச் சத்தும், புரதச் சத்தும்,  அழகும் ஆரோக்கியமும் அளிக்கும் அருமருந்தாகிய natural polyphenols உள்ளது.


Posted Image
பாட்டன் சொத்தாக காணிநிலம் வருதோ இல்லையோ, பரம்பரை வழியாக இந்த நீரிழிவு நோய் பலருக்கும் முப்பதுகளிலேயே வந்துவிடுகிறது. இதற்கு முக்கியக் காரணம்  கண்ட கண்ட மசாலாக்களைக் கொட்டித் தயாராகும் ஃபாஸ்ட் ஃபுட்டும், முறையான தூக்கமில்லாத உழைப்பும்தான்.
சர்க்கரை நோயாளிகள், பருமனான உடல் வாகு கொண்டவர்கள், அரிசிக்கு மாற்று என கோதுமையில் தவம் கிடப்பதைக் காட்டிலும், கம்பங் களியும் கொள்ளு ரசமும்  வாரம் 1-2 நாட்கள் மாற்றிக் கொள்வது நல்லது. உடலை வளர்க்கும் முக்கிய அமினோ அமிலங்களை இயல்பாக உள்ளடக்கிய கொள்ளு போன்ற தானியங்கள், நமக்கு  உணவாவது மட்டுமின்றி, நம்முடைய நோய் எதிர்ப்பாற்றலையும் வளர்க்கும்.

ஆங்கிலத்தில் Longer the waist line. shorter the life line என்று மருத்துவத்துறை அச்சமூட்டும் இக்காலகட்டத்தில், கொள்ளினால்  செய்யப்பட்ட கொள்ளு பருப்புப் பொடி, கொள்ளுச் சட்னி, கொள்ளு வடை ஆகியவை நம் உடல் எடையைக் குறைக்க நம் முன்னோர்கள் வகுத்த அருமையான  ரெசிபீஸ் என்றே சொல்ல வேண்டும். உடல் எடையைக் குறைக்க எடுக்கும் முயற்சிகள் எல்லாம் நம் பாக்கெட்டின் எடையை மட்டுமே குறைக்கின்றன. குண்டு உடம்பு  இளைப்பதென்பது பலருக்கு பகல்கனவாகிவிட்ட சமயத்தில் கொள்ளினால் செய்யப்படும் உணவு வகைகள் need of the hour ஆகிவிட்டன. இன்று கல்லூரிப்  பெண்கள் பலர் கலோரி கணக்குப் பார்த்து உண்ணும் கலாச்சாரத்தில்... கொள்ளு ரசம், கொள்ளுப் பருப்புப் பொடி ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும்.

காலைக்கடன் என்று சொன்னவுடன்,அதனை தினசரி வெளியேற்றாவிட்டால் வட்டியுடன் சோதனை தரும் என அறியாமல் மலச்சிக்கலுடன் மல்யுத்தம் செய்வோர்  நிறையப் பேர் உண்டு. கொள்ளில் உள்ள நார்ச் சத்துக்களால் சிரமமின்றி முழுமையாக மலத்தை வெளியேற்றுவது ஆரோக்கியத்தின் முதல் படி
.
Posted Image

தவிர, கொள்ளு உடல் வெப்பத்தை அதிகரிப்பதால், குளிர்காலங்களுக்கு ஏற்ற உணவாகிறது. கொள்ளு ரசத்தினால் தொண்டையில் கட்டும் கோழை, சிறுநீரக கல்லடைப்பு  போன்ற நோய்களுக்கு குட்பை சொல்லிவிடலாம்.

கொள்ளினால் செய்யப்பட்ட உணவுகள், அனைவரும் உண்ணும் அமிர்தமானாலும் கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் இதனைத் தவிர்ப்பது நல்லது. சரி...  கொள்ளு ரெசிபிக்களை எந்த பாட்டியிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதென குழம்பவேண்டாம். உங்களுக்காக சில ரெசிபிக்கள் ஆங்காங்கே.

படம்: கென்னடி
குமுதம்
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"
Posted Image

#2 ரதிதேவி

ரதிதேவி

  மூத்தவர்

 • தூண்கள்
 • PipPipPipPipPipPipPipPipPipPip
 • 21,242 posts
 • Joined 8 Years, 10 Months and 16 Days

Posted 18 October 2011 - 11:27 AM

கொல்லுவில் இவ்வளவு சமையல் செய்யலாமா...
நான் சுண்டல் மட்டும் செய்து உண்டதுண்டு..

இவற்றையும் செய்து பார்க்கிறேன் தோழி
விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு

Posted Image

காகிதத்தில் கிறுக்கியவை

#3 Suganthe

Suganthe

  மூத்தவர்

 • தூண்கள்
 • PipPipPipPipPipPipPipPipPipPip
 • 6,707 posts
 • Joined 11 Years, 3 Months and 6 Days

Posted 18 October 2011 - 03:48 PM

நல்ல தகவல்
நன்றி தனிமதி
கொள்ளின் ஆங்கிலப் பெயர் என்ன தனிமதி?
உன்னையே நீ உணர்

#4 ரதிதேவி

ரதிதேவி

  மூத்தவர்

 • தூண்கள்
 • PipPipPipPipPipPipPipPipPipPip
 • 21,242 posts
 • Joined 8 Years, 10 Months and 16 Days

Posted 18 October 2011 - 05:02 PM

View PostSuganthe, on 18 October 2011 - 03:48 PM, said:

நல்ல தகவல்
நன்றி தனிமதி
கொள்ளின் ஆங்கிலப் பெயர் என்ன தனிமதி?

Horse Gram என்று சொல்வார்கள் சுகந்தி!
மேலும் விபரங்களுக்கு இதனை சொடுக்குங்கள்...

http://en.wikipedia....wiki/Horse_gram
விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு

Posted Image

காகிதத்தில் கிறுக்கியவை

#5 தனிமதி

தனிமதி

  மூத்தவர்

 • தூண்கள்
 • PipPipPipPipPipPipPipPipPipPip
 • 30,815 posts
 • Joined 11 Years and 8 Days

Posted 19 October 2011 - 01:12 AM

View Postரதிதேவி, on 18 October 2011 - 05:02 PM, said:


Horse Gram என்று சொல்வார்கள் சுகந்தி!
மேலும் விபரங்களுக்கு இதனை சொடுக்குங்கள்...

http://en.wikipedia....wiki/Horse_gram

தேடும் முயற்சிக்கு
விடை தந்த
தோழிக்கு நன்றி.....

அடடா குதிரைத் தாணியம்...என்ற பெயரா..?

பார்வையிட்டோருக்கு  என் நன்றி.. :emot-eek.gif:
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"
Posted Image

#6 ரதிதேவி

ரதிதேவி

  மூத்தவர்

 • தூண்கள்
 • PipPipPipPipPipPipPipPipPipPip
 • 21,242 posts
 • Joined 8 Years, 10 Months and 16 Days

Posted 20 October 2011 - 05:52 AM

View Postதனிமதி, on 19 October 2011 - 01:12 AM, said:


தேடும் முயற்சிக்கு
விடை தந்த
தோழிக்கு நன்றி.....

அடடா குதிரைத் தாணியம்...என்ற பெயரா..?

பார்வையிட்டோருக்கு  என் நன்றி.. :emot-eek.gif:

குதிரைக்கு தான் இந்த பயிரை கொடுப்பார்கள்.
அதனால தான்  இந்த பெயர் வந்தது
அதிக சத்து நிறைந்த பயிர்களில் இதுவும் ஒன்று
விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு

Posted Image

காகிதத்தில் கிறுக்கியவை

#7 தனிமதி

தனிமதி

  மூத்தவர்

 • தூண்கள்
 • PipPipPipPipPipPipPipPipPipPip
 • 30,815 posts
 • Joined 11 Years and 8 Days

Posted 20 October 2011 - 06:13 AM

View Postரதிதேவி, on 20 October 2011 - 05:52 AM, said:


குதிரைக்கு தான் இந்த பயிரை கொடுப்பார்கள்.
அதனால தான்  இந்த பெயர் வந்தது
அதிக சத்து நிறைந்த பயிர்களில் இதுவும் ஒன்று

அப்ப நாங்களும் கோர்ஸ் பவரில திரிவோம் என்றீங்க...
நல்லது தோழி... :teeth_smile:
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"
Posted Image

#8 ரதிதேவி

ரதிதேவி

  மூத்தவர்

 • தூண்கள்
 • PipPipPipPipPipPipPipPipPipPip
 • 21,242 posts
 • Joined 8 Years, 10 Months and 16 Days

Posted 20 October 2011 - 06:23 AM

View Postதனிமதி, on 20 October 2011 - 06:13 AM, said:


அப்ப நாங்களும் கோர்ஸ் பவரில திரிவோம் என்றீங்க...
நல்லது தோழி... :teeth_smile:
பெண்களுக்கு அந்த பவர் இருந்தால் தானே
நல்லது தோழி
விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு

Posted Image

காகிதத்தில் கிறுக்கியவை

#9 உடையார்

உடையார்

  விவேகமானவர்

 • பறவைகள்
 • PipPipPipPipPipPipPip
 • 464 posts
 • Joined 5 Years, 4 Months and 6 Days

Posted 20 October 2011 - 07:46 AM

View Postரதிதேவி, on 20 October 2011 - 06:23 AM, said:


பெண்களுக்கு அந்த பவர் இருந்தால் தானே
நல்லது தோழி

நன்றி தனிமதி பகிர்வுக்கு,

மனிசிட்ட இதுகளை செய்து தங்கோ என்று சொன்ன எள்ளும் கொள்ளுமா வெடிக்கப் போறா,

ரதிதேவி - பெண்கள் மானாடா மயிலாட அன்னம் மாதிரி இருக்கனும், குதிரை வேகத்தில நீங்க ஓடினா, நாங்க எப்படி கலைத்து பிடிப்பது, பிறகு காளை மாடு அடக்கிற போட்டி நடவாது, இளம் பெண்களை ஓடவிட்டிட்டு கொஞ்ச தூரம், ஆண்களை சொல்லுவார்கள் ஏலும் என்றால் ஓடி பிடித்து வா என்று, முன்னுக்கு ஓடின பெண், முதலே அங்கு தனக்காக காத்திருக்கும் காதலனுடன் இழுத்திகிட்டு மேலும் ஓடிவிட, பின்னால் ஓடிய ஆண் அணில ஏற விட்ட நாய் மாதிர நாக்கை தொங்க போட்டுகிட்டு திரும்பி வர சரி,
இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது! கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள் கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு! தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை! - பாவேந்தர் பாரதிதாசன்

#10 தனிமதி

தனிமதி

  மூத்தவர்

 • தூண்கள்
 • PipPipPipPipPipPipPipPipPipPip
 • 30,815 posts
 • Joined 11 Years and 8 Days

Posted 21 October 2011 - 03:39 AM

[quote]name='உடையார்' timestamp='1319096812' post='197915']


நன்றி தனிமதி பகிர்வுக்கு,

மனிசிட்ட இதுகளை செய்து தங்கோ என்று சொன்ன எள்ளும் கொள்ளுமா வெடிக்கப் போறா,

ரதிதேவி - பெண்கள் மானாடா மயிலாட அன்னம் மாதிரி இருக்கனும், குதிரை வேகத்தில நீங்க ஓடினா, நாங்க எப்படி கலைத்து பிடிப்பது, பிறகு காளை மாடு அடக்கிற போட்டி நடவாது, இளம் பெண்களை ஓடவிட்டிட்டு கொஞ்ச தூரம், ஆண்களை சொல்லுவார்கள் ஏலும் என்றால் ஓடி பிடித்து வா என்று, முன்னுக்கு ஓடின பெண், முதலே அங்கு தனக்காக காத்திருக்கும் காதலனுடன் இழுத்திகிட்டு மேலும் ஓடிவிட, பின்னால் ஓடிய ஆண் அணில ஏற விட்ட நாய் மாதிர நாக்கை தொங்க போட்டுகிட்டு திரும்பி வர சரி,[/quote]

ஹாஹாஹா..
உடையார் இதற்காக நீங்க சந்தோசப்படுங்க..
விசயம் தெரியாம நீங்க பின்னால ஓட, கஸ்டப்பட்டு ஒரு மாதிரி அந்த பெண்ணை எட்டிட்டிங்க என்றா பார்த்திருந்த காதலன்....எட்டி மிதிச்சிடமாட்டானா.?...அதனால அப்பனே முருகா ஆள விடு என்று நீங்க இருங்க.. :teeth_smile:
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"
Posted Image

#11 ரதிதேவி

ரதிதேவி

  மூத்தவர்

 • தூண்கள்
 • PipPipPipPipPipPipPipPipPipPip
 • 21,242 posts
 • Joined 8 Years, 10 Months and 16 Days

Posted 21 October 2011 - 06:25 AM

அவ கொள்ளு சாப்பிட்டு ஓடியதால
நீங்கள் கொள்ளு சாப்பிட்டு ஓடினா அவள பிடிச்சிடலாம் உடையார்!

சுறுசுறுப்பு பெண்ணுக்கு வேனுமே தவிர
நீங்கள் சொல்வது போல வேண்டாம்
விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு

Posted Image

காகிதத்தில் கிறுக்கியவை