Jump to content

நிலாமுற்றம் அன்புடன் வரவேற்கிறது !
நிலா முற்றத்தில் நீங்களும் இணைந்து கொள்ளலாமே ? உங்கள் கதைகள்..கவிதைகள்..மாத்திரமன்றி தரமான உங்கள் பின்னூட்டங்கள்..விமர்சனங்கள் கூட நம் தமிழ்ப்பணியின் காலக் கட்டாயம் !

உங்கள் வரவைக் காண எதிர்பார்த்திருக்கிறோம். - நிலா.

சொல்லிவிடு !


  • You cannot start a new topic
  • Please log in to reply
18 replies to this topic

#1 நிலா

நிலா

    நிர்வாகி

  • நிர்வாகம்
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • 1,867 posts
  • Joined 9 Years, 5 Months and 5 Days
  • 378 topics

Posted 02 January 2012 - 04:35 PM

எட்ட நின்றுவிட்டாய்..
என் செய்ய.. ஏறிட்டு மட்டும் பார்க்கிறேன்
எடுத்தெறிந்துவிட்டாய்..
எதைச் செய்ய.. ஏரியோரம் ஒதுங்கிவிட்டேன்

சுழற்சியின் போக்கில் ஒரு பாதியில்
சுட்டெரிக்கிறான் சூரியன் - மறுபாதியில்
சுருண்டு விழச் செய்கிறான் - ஏன்
சுமந்து செல்ல மறுக்கிறான் ..?

திறந்திருக்கும் விழிகளூடே - நான்
திணித்துக்கொள்ளும் அழகெலாம்
திரை கலையும் சாமத்தில்
திசை கலைந்து செல்கிறது..

ஒட்டிக்கொள்ளும் திவலைகள்
ஒய்யாரமெல்லாம் விட்டகலும் வரை
ஒடுங்கிக் கொள்ளும் ஒக்கல்கள் எல்லாம்
ஒழுங்கானதோர் தருணம் வரை

விட்டகலா வினைத் தெளிவுடன்
விடியலோ விரசமோ விகாரமோ விகிதமோ
விக்கலடைந்தும் விக்கித் தவித்தும் - அந்த
விண்ணைத் தாண்டியுந் தொடரச் சித்தங்கொண்டு

கட்டுண்ட கன்றெனக் கொட்டுண்ட சிந்தனை
கடப்பாரை கொண்டகழ்ந்து கண்ணாலகல்ந்து
கடுப்பண்டிய சொற்கலைந்து கடுவிலை தந்து
கட்புலம் தருவதெல்லாம் இச்சுகம் எனக் கொண்டு

மண்டி நான் மடஞ் சேர்ந்தபோது
மறுபடியும் தள்ளிவிட்டாய் ..

மனம் வலிக்கிறது.. மறைக்கவில்லை
மடு கண்ட வடு துளிர்க்கிறது தடுக்கவும் இல்லை
மண்டை வெடிக்கிறது - சொல்லிவிடு !

மண்டி நான் மடஞ் சேர்ந்தபோது
மறுபடியும் ஏன் எனைத் தள்ளிவிட்டாய் ?
மண்டி நான்.. மடஞ் சேர்ந்தபோது
மறுபடியும் ஏன் எனைத் தள்ளிவிட்டாய் !?
எத்தனை சுருக்கினாலும்.. தேவைகள் மட்டும் விரிகிறது !!

மாயா.... இங்கே !

#2 தனிமதி

தனிமதி

    மூத்தவர்

  • தூண்கள்
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • 29,560 posts
  • Joined 7 Years, 5 Months and 19 Days
  • 3,526 topics

Posted 04 January 2012 - 08:24 AM

Quote

மண்டி நான் மடஞ் சேர்ந்தபோது
மறுபடியும் ஏன் எனைத் தள்ளிவிட்டாய் ?
மண்டி நான்.. மடஞ் சேர்ந்தபோது
மறுபடியும் ஏன் எனைத் தள்ளிவிட்டாய் !?

இன்னும் அனுபவிக்க நிறைய இருக்கு என்றுதானோ!!

இருங்க இருங்க என்ன அவசரம்..? :emot-eek.gif:

வேதனைகளும், சோதனைகளும், இன்பங்களும், துன்பங்களும் நிறைந்தது தானே வாழ்க்கை..

நீண்ட நாட்களின் பின்னர் அருமையான கவிதை

வாழ்த்துகள் நிலா..... :th_up
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"
Posted Image

#3 ரதிதேவி

ரதிதேவி

    மூத்தவர்

  • தூண்கள்
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • 19,820 posts
  • Joined 5 Years, 3 Months and 27 Days
  • 2,957 topics

Posted 19 January 2012 - 04:15 PM

அழகான வரிகள்...
வாழ்த்துகள் நிலா
விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
கிடைத்துள்ளதை விரும்பு

Posted Image

காகிதத்தில் கிறுக்கியவை

#4 Suganthe

Suganthe

    மூத்தவர்

  • தூண்கள்
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • 6,176 posts
  • Joined 7 Years, 8 Months and 17 Days
  • 208 topics

Posted 29 January 2012 - 06:31 PM

Quote

மண்டி நான் மடஞ் சேர்ந்தபோது
மறுபடியும் தள்ளிவிட்டாய் ..

மனம் வலிக்கிறது.. மறைக்கவில்லை
மடு கண்ட வடு துளிர்க்கிறது தடுக்கவும் இல்லை
மண்டை வெடிக்கிறது - சொல்லிவிடு !

அழகான அருமையான கவிதை

வாழ்த்துகள் நிலா.

Edited by Suganthe, 29 January 2012 - 06:32 PM.

உன்னையே நீ உணர்

#5 தனிமதி

தனிமதி

    மூத்தவர்

  • தூண்கள்
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • 29,560 posts
  • Joined 7 Years, 5 Months and 19 Days
  • 3,526 topics

Posted 29 January 2012 - 07:10 PM

நிலா, எங்கயிருக்கிறீங்க...?
நீண்ட நாட்களாக முற்றத்தில் உங்கள்  படைப்புகள் எதுவும் வரலையே..
உங்களையும் காணவில்லையே..? நலந்தானே நிலா.. :emot-eek.gif:
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"
Posted Image

#6 நிலா

நிலா

    நிர்வாகி

  • நிர்வாகம்
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • 1,867 posts
  • Joined 9 Years, 5 Months and 5 Days
  • 378 topics

Posted 31 January 2012 - 10:37 AM

சொல்லிவிடுனு ... தலைப்பை வச்சுட்டு.. சொல்லாமலே போயிட்டனா... ம்.. வாழ்க்கை மாறுதல்கள்.. பணிச்சுமை.. அங்கும் இங்கும் என ஓட்டம்... இப்டி ஒரு சிக்கலான கால கட்டமா போச்சு நண்பர்களே... உணர்வுகளோடு முட்டி மோதிக்கொண்ட உங்கள் இரசனைக்கு என் நன்றிகள் !
எத்தனை சுருக்கினாலும்.. தேவைகள் மட்டும் விரிகிறது !!

மாயா.... இங்கே !

#7 தனிமதி

தனிமதி

    மூத்தவர்

  • தூண்கள்
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • 29,560 posts
  • Joined 7 Years, 5 Months and 19 Days
  • 3,526 topics

Posted 01 February 2012 - 06:03 AM

View Postநிலா, on 31 January 2012 - 10:37 AM, said:

சொல்லிவிடுனு ... தலைப்பை வச்சுட்டு.. சொல்லாமலே போயிட்டனா... ம்.. வாழ்க்கை மாறுதல்கள்.. பணிச்சுமை.. அங்கும் இங்கும் என ஓட்டம்... இப்டி ஒரு சிக்கலான கால கட்டமா போச்சு நண்பர்களே... உணர்வுகளோடு முட்டி மோதிக்கொண்ட உங்கள் இரசனைக்கு என் நன்றிகள் !

நன்றி நிலா..
நேரத்தை மிச்சப்படுத்தி வாருங்கள்...... :blow
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"
Posted Image

#8 பாரதிப்பிரியன்

பாரதிப்பிரியன்

    வல்லவர்

  • பறவைகள்
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • 1,055 posts
  • Joined 3 Years, 7 Months and 13 Days
  • 128 topics

Posted 26 February 2012 - 09:59 AM

அழகான கவிதை..
வலிகள் தான் வாழ்க்கையா?..
வாழ்த்துகள்..!
அன்ன மூட்டிய தெய்வ மணிக்கையின்
ஆணை காட்டில் அனலையும் விழுங்குவோம்...!
Posted Image
செம் மை கொண்டு உடமை காப்போம்!
http://www.palkalaikazhakam.com/
http://www.enthamil.com

#9 செல்வி

செல்வி

    வல்லவர்

  • பறவைகள்
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • 1,868 posts
  • Joined 1 Year, 9 Months and 19 Days
  • 349 topics

Posted 09 March 2012 - 01:48 PM

திறந்திருக்கும் விழிகளூடே - நான்
திணித்துக்கொள்ளும் அழகெலாம்
திரை கலையும் சாமத்தில்
திசை கலைந்து செல்கிறது..

..அழகான வரிகள். வாழ்த்துகள் நிலா.
நல்லதே நினை ! நல்லதே செய் ! நல்லதே நடக்கும் !
என்றும் பண்புடன்.
Posted Image

#10 கோமதி

கோமதி

    விவேகமானவர்

  • பறவைகள்
  • PipPipPipPipPipPipPip
  • 363 posts
  • Joined 1 Year, 10 Months and 25 Days
  • 36 topics

Posted 22 March 2012 - 04:18 PM

சுழற்சியின் போக்கில் ஒரு பாதியில்
சுட்டெரிக்கிறான் சூரியன் - மறுபாதியில்
சுருண்டு விழச் செய்கிறான் - ஏன்
சுமந்து செல்ல மறுக்கிறான் ..?









அதுதானே இயற்கை நமக்கு சொல்லாமல் சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்?!!!!..........வாழ்த்துகள் நிலா.

#11 Prabu Ram

Prabu Ram

    வளர்பிறை

  • மலர்கள்
  • PipPip
  • 31 posts
  • Joined 1 Year, 1 Month and 20 Days
  • 12 topics

Posted 02 April 2012 - 06:42 AM

அருமை...
பிரபு ராம்

#12 மஞ்சுபாஷிணி

மஞ்சுபாஷிணி

    வல்லவர்

  • பறவைகள்
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • 713 posts
  • Joined 3 Years, 1 Month and 25 Days
  • 76 topics

Posted 04 April 2012 - 09:04 AM

மனமும் உணர்வுகளும் நிறைந்த உடலின் துணைக்கொண்டு மனிதன் செய்யும் சாகசங்கள் அதனால் பெறும் அனுபவங்கள்....

சோர்ந்து துவண்டுவிட்டால் பின் மீள வழியேது?
அனுபவமாய் எடுத்துக்கொண்டு மீள முயல்வது தான் சிறந்தவழி...

அருமையான வரிகள் நிலா....

அன்பு வாழ்த்துகள்...
www.manjusampath.blogspot.com

#13 vasikaran

vasikaran

    வல்லவர்

  • பறவைகள்
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • 837 posts
  • Joined 2 Years, 3 Months and 16 Days
  • 65 topics

Posted 20 April 2012 - 04:03 AM

:lightbulb: கவிதை அருமை .
சொல்லுது காதலின் பெருமை ,
சொல்லிவிடு என்று சொல்லிவிட்டு
சொல்லாமலே போனது ..
வசிகரன்

#14 சாந்தி

சாந்தி

    விவேகமானவர்

  • பறவைகள்
  • PipPipPipPipPipPipPip
  • 424 posts
  • Joined 2 Years, 3 Months and 26 Days
  • 10 topics

Posted 31 August 2012 - 06:50 AM

உணர்வுபூர்வமான கவிதை வாழ்த்துக்கள்...
புன்னகையுடன்: ரூபிதினேஷ்

#15 kathirmohan

kathirmohan

    வேகமானவர்

  • மலர்கள்
  • PipPipPip
  • 57 posts
  • Joined 6 Months and 7 Days
  • 23 topics

Posted 16 November 2012 - 09:10 AM

அன்பு நிலா, சொல்லிவிடு--, சொல்லி.....விடு, சொல்லாமல் விட்டால் வலி உனக்குமட்டுமல்ல!!, ஆம், சொல்லிவிட்டாய்- இனி விட்டுவிடு.
தேடிச் சென்றால் விலகிச் செல்லும்-விலகிச் சென்றால் தேடிவரும். that's all.

#16 நிலா

நிலா

    நிர்வாகி

  • நிர்வாகம்
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • 1,867 posts
  • Joined 9 Years, 5 Months and 5 Days
  • 378 topics

Posted 17 December 2012 - 11:56 AM

சொல்லிவிடு கண்டு... எண்ணங்களை...தம் அன்பைச் சொல்லிச்சென்ற உள்ளங்களுக்கெலாம் நன்றிகள் !
எத்தனை சுருக்கினாலும்.. தேவைகள் மட்டும் விரிகிறது !!

மாயா.... இங்கே !

#17 மஞ்சுபாஷிணி

மஞ்சுபாஷிணி

    வல்லவர்

  • பறவைகள்
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • 713 posts
  • Joined 3 Years, 1 Month and 25 Days
  • 76 topics

Posted 06 February 2013 - 10:09 AM

தள்ளி விட தள்ளிவிடத்தான் அன்பும் பெருகும் என்பதை உங்கள் கவிதை வரிகள் நிரூபிக்கிறதுப்பா.. அன்புவாழ்த்துகள்....
www.manjusampath.blogspot.com

#18 ஜீவா

ஜீவா

    வளர்பிறை

  • மலர்கள்
  • PipPip
  • 34 posts
  • Joined 29 Days
  • 10 topics

Posted 25 April 2013 - 09:27 AM

வாவ்.. அருமை.
வாக்கியங்களின் கோர்வையும், எழுத்து நடையும் அருமை. :regular_smile:

#19 கோமகன்

கோமகன்

    வேகமானவர்

  • மலர்கள்
  • PipPipPip
  • 144 posts
  • Joined 28 Days
  • 33 topics

Posted 25 April 2013 - 09:57 AM

படைப்பிற்கு எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் நிலா . தொடருங்கோ :emot-eek.gif: .
உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

http://koomagan.blogspot.fr/

http://vadakovaiouraan.blogspot.fr/

http://koovaiuraan.blogspot.fr/




0 user(s) are reading this topic

0 members, 0 guests, 0 anonymous users


This topic has been visited by 27 user(s)