Jump to content

நிலாமுற்றம் அன்புடன் வரவேற்கிறது !
நிலா முற்றத்தில் நீங்களும் இணைந்து கொள்ளலாமே ? உங்கள் கதைகள்..கவிதைகள்..மாத்திரமன்றி தரமான உங்கள் பின்னூட்டங்கள்..விமர்சனங்கள் கூட நம் தமிழ்ப்பணியின் காலக் கட்டாயம் !

உங்கள் வரவைக் காண எதிர்பார்த்திருக்கிறோம். - நிலா.

"நேசிக்கும் தென்றல்" (7)

This topic has been archived. This means that you cannot reply to this topic.
4 replies to this topic

#1 aathithathashan

aathithathashan

வல்லவர்

• துயில்வோர்
• PipPipPipPipPipPipPipPipPipPip
• 1,171 posts
• Joined 11 Years, 6 Months and 9 Days

Posted 19 February 2012 - 03:16 AM

ஆதித்ததாஸன்
19-2-2012

"நேசிக்கும் தென்றல்" (7)Attached File  218128_1330447476897_1702311616_568954_2961919_n azhaana kavithai.jpg   32.62K   0 downloads

" ஆள விரும்புகிற அன்பைக்காட்டிலும்
ஆட்படுகிற அன்பு மிகவும் பக்குவமானது!
ஆளவிரும்புகிற அன்பில் சுயநலமும்
அகங்காரங்களும் உண்டு! ஆட்படுகிற
அன்பிலோ தியாகத்தைத் தவிர
வேறெதுவுமே இல்லை"

----நா பார்த்தசாரதி (மணிவண்ணன்)---"பொன்விலங்கு"

அழகான அந்த வரிகளுக்குள்
அழகான வாழ்வியல் புரிதலில் காதல்
இளகாத மனதினையும் திரும்பிப்பார்க்கவைக்கும்
இளங்காலைக் கவிதையாய்க் காதலின் தத்துவம்...

புரியாத மனங்கள் புரிந்துகொண்டால்...
விரியாத இதயங்கள் விரிந்துகொண்டால்...
தெரியாத யுகங்கள் விலகிடும்!காதல்
புரியாத கணங்கள் புரிந்திடும்!

காதல் கட்டிப்போட்டு
கவிக்கனிகளைக் கொட்டிக்குவிக்கும்!
உண்மைக்காதல் சக்திக்குள்
சக்தியாய்ச் சுகம்கொடுக்கும்!

பெண்மையின் மென்மையே
தியாகத்தின் தன்மையே!இதய
வெண்மையின் தன்மையே
காதல் யாகத்தின் வேள்வியே!

"காதல்! காதல்! காதல்!
காதல் போயின் சாதல் சாதல்"
என்றான் கவிபாரதி!
"பொன்விலங்கு" நாயகன்
சத்தியமூர்த்தியாய் சக்திக்குள் அரிய
சக்தியாய் சந்தணமாய் மணம்வீசும்
சங்கீத சுந்தரனாய் அவன்...

சக்திக்குள் பார்வைக் காந்தசக்திக்குள்
கட்டுண்டாள் சுடர்விழி!
கிருஸ்ணகாந்த விழிப்பார்வைக்குள்
ஓர்அதிசயமாய் அவன் விழிகள்!

ஆயிரங்கரங்கள் கொண்ட
எழுகதிர்ப்பவனி
அந்தத்தேவனின் கதிர்களாய்
அவன் விழிமொழிகள்!

கிருஸ்ண கானமாய்
தேன்குரலோடு தென்றலாய்
வருடுகின்ற பார்வைமொழிகள்!
குரல்மொழிகள்!

பாயிரங்கள் பாடும் பாவையாய்
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஆண்டாளாய் அவள்...
காதலில் கட்டுண்ட கவிதையானாள்!இன்ப
மோதலில் மொட்டவிழ் மலரானாள்!

கட்டுண்ட கவிதை மெட்டுக்கள்
தனைநோக்கி மெல்லிசையாய் நகர
மெட்டுக்குள் மீட்டுகின்ற
வீணைவித்தகனாய் அவன்!விரக

மெட்டுக்கள் மெல்ல மெல்ல நடைபயில
இசைந்துகொண்ட பார்வைகள்
இசைந்துகொண்டு இனிமையாய்க்
கதைபேசும் தருணம் இதயம்
ஒன்றாகிக்கலந்து கொண்டு
கவிதைபேசத்தொடங்கிடும் தருணம்..

அழைப்புமணி சத்தம்
அவர்களை திடுக்கிட வைத்தது!
'யாரது சிவபூஜை நேரத்தில் கரடிபோல்...
யாராய் இருக்கலாம்' என்ற நினைப்போடு
"சற்று அமருங்கள் வருகிறேன்" என்றவள்

தென்றல்காற்றாய்
காதோரம் பேசியவள்
சற்றும் சத்தமின்றி மெல்ல அடிஎடுத்து
கதவுத் துவாரமூடாகப் பார்வையை செலுத்தினாள்!

தபால்காரன் வாசலில்
பதிவுத்தபாலோடு காத்திருப்பது தெரிந்தது!
"அப்பாடா" என்று மூச்சை
நிதானமாக்கிக்
கதவைத்திறந்தாள்!

"சுடர்விழி நீங்கள்தானே!
உங்களுக்கு ஓர்
பதிவுத்தபால் இலண்டனில்
இருந்து" என்றான்!

படர்விழிப் பார்வைக்குள்
ஆயிரம் எண்ணங்கள்!
'பதிவுத்தபால் என்றால்'...
தபால்காரன் "கையெழுத்துப் போடுங்கள்"
என்றபோதுதான் சுய நினைவுக்குத் திரும்பினாள்!

நன்றி!சொல்லித் தபால்காரனை
அனுப்பிவைத்தவள் தாம்
ஒன்றி நின்ற நிலையெண்ணி
வெட்கத்தால் தலைகுனிந்து

"மன்னியுங்கள்!" என்றாள்!
"எதற்கு! மன்னிப்பு வேண்டாமே!நாம்
நம்மைச் சிந்திக்க வைக்க
வந்த தபால்காரன் அவன் அழைப்புமணி
நமக்குள் நன்மைக்குத்தான் அன்றி
வேறொன்றுமில்லை!
அதற்கெதற்குச் சுடர்விழி மன்னிப்பு!"
என்றான்!

இதயம்
ஒன்றாகிக் கலந்திட்டபோதும்
இமையோடு இமைபாடம்
நடத்திட்டபோதும்
விழிகூடி மௌனமாய் இதழ்
சேர்த்திட்டபோதும்

இசைந்திட்ட வீணையை
மீட்டஆரம்பிக்கும்போதே
தபால்காரன் வந்தது
தப்பாகத்தெரியாமல் நிதான
ஒப்புதலாய் அவன்!

வெறித்தனங்கள் ஏதுமின்றி
விதானமாய் பவ்வியமாய்
இசைந்துகொண்ட அவன் அணைப்பில்
இசைந்து கொண்ட சுடர்விழி..

நிதானமாய் அவன்
பேசத்தொடங்கினான்!அவள்
நேசம் நிறைத்து அவன்பேசும்
அழகோடு கலந்துகொள்ள
அவன் பேசினான்....

என்ன பேசினான்..
காத்திருங்கள்!

"சுடர்விழி"
(வளருவாள்!)

Edited by aathithathashan, 19 February 2012 - 03:22 AM.

அன்புடன்

ஆதித்ததாஸன் Posted Image

" உனக்கும் கீழே உள்ளவர் கோடி

நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு!"-

கிருஸ்ணகாந்தமலர்

aathithathashan@hotmail.com

#2 கோமதி

கோமதி

விவேகமானவர்

• பறவைகள்
• PipPipPipPipPipPipPip
• 372 posts
• Joined 5 Years, 5 Months and 14 Days

Posted 28 February 2012 - 05:08 AM

ம்...... தொடருங்கள் ஆதி.............

#3 aathithathashan

aathithathashan

வல்லவர்

• துயில்வோர்
• PipPipPipPipPipPipPipPipPipPip
• 1,171 posts
• Joined 11 Years, 6 Months and 9 Days

Posted 03 March 2012 - 10:43 PM

நன்றிங்க கோமதி...
ரொம்ப நாளாய்ச்சு ..மன்னிச்சிடுங்க...

அன்புடன்

ஆதித்ததாஸன் Posted Image

" உனக்கும் கீழே உள்ளவர் கோடி

நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு!"-

கிருஸ்ணகாந்தமலர்

aathithathashan@hotmail.com

#4 Suganthe

Suganthe

மூத்தவர்

• தூண்கள்
• PipPipPipPipPipPipPipPipPipPip
• 6,707 posts
• Joined 11 Years, 3 Months and 6 Days

Posted 29 March 2012 - 01:07 AM

Quote

பெண்மையின் மென்மையே
தியாகத்தின் தன்மையே!இதய

வெண்மையின் தன்மையே
காதல் யாகத்தின் வேள்வியே!

"காதல்! காதல்! காதல்!
காதல் போயின் சாதல் சாதல்"
என்றான் கவிபாரதி!

நேசிக்கும் தென்றல். :heart: ....... ரசனையுடன் நன்றாகப் போகிறது
வாழ்த்துக்கள் ஆதித்ததாசன்.
தொடருங்கள்.......
உன்னையே நீ உணர்

#5 செல்வி

செல்வி

வல்லவர்

• பறவைகள்
• PipPipPipPipPipPipPipPipPipPip
• 2,465 posts
• Joined 5 Years, 4 Months and 8 Days

Posted 16 December 2012 - 12:24 PM

தொடருங்கள் ஆதி. நானும் படிக்கிறேன்.
நல்லதே நினை ! நல்லதே செய் ! நல்லதே நடக்கும் !
என்றும் பண்புடன்.
Posted Image