புயலுக்கு இரையாகிய பூ ....! |
![]() ![]() |
புயலுக்கு இரையாகிய பூ ....! |
Mar 20 2005, 04:33 PM
Post
#1
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 951 Joined: 17-December 03 Member No.: 3 |
புயலுக்கு இரையாகிய பூ.....!
"""""""""""""""""""""""" தாரணியின் கடந்தகால வாழ்வின் கசப்பான நிகழ்வுகளுக்கு முத்தாய்ப்பு இடுவதுபோல் இருந்தது அந்தக் கடிதம். ஆனாலும் அவள் மனம் மறுத்தது. இளமைப்பருவத்தின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாகியதால் மணவாழ்க்கையுடன் மரணித்துவிட்ட உணர்வுகளை அவளால் ஜீரணித்துப்பார்க்க முடியவில்லை. தாரணி ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள். இயற்கை எழிலோடு இறையருளும் மிகுந்தது அவளது கிராமம். தாரணியின் தந்தை கனகசபை.. வியாபாரத்தோடு சிறு விவசாயமும் செய்து வந்ததால் அவர்களது குடும்பம் ஓரளவு வசதியாகவே காணப்பட்டது. தாரணி குடும்பத்தில் மூத்தவள். அவளுக்குக் கீழ் இன்னுமொரு தங்கை வரணி கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை எழுதிவிட்டு பெறுபெறுக்காக காத்திருந்தவள். தாய் பார்வதிக்கு உதவியாக இருந்து வீட்டு வேலைகளைக் கவனித்து வந்தாள். ஆயினும் வரணியும் பருவத்தின் படிகளைத் தாண்டிக் கொண்டிருப்பதால் தனது இரு பிள்ளைகளினதும் எதிர்காலங்களைப் பற்றியே தினமும் சிந்தித்துக் கொண்டிருந்தது அந்தத் தாயுள்ளம். தாய்மையின் எதிர்பாரபபுகள் இத்தகையதாய் இருந்த போதிலும்; தாரணியோ தான் பிறந்து வளர்ந்துகல்வியில் கலங்கரையாய் திகழவைத்த தன் கிராமத்துக்கு இயன்றளவு நற்பணி செய்ய வேண்டுமென்பது ஆவளது ஆசை. அதுபோலவே பள்ளிப் பருவத்திலேயே அக்கிராமத்து நற்பணி மன்றம் ஒன்றின் உப தலைவியாகவும் இருந்தாள். தனது மகளின் உள்ளத்திலே ஏற்பட்டுள்ள உணர்வுகளைக் கண்டு தந்தையின் உள்ளம் உவகை கொண்டாலும் குறுகிய நோக்கம் கொண்ட சில அரசியல்வாதிகளின் கோரப்பிடிக்குள் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு இத்தகைய நற்பணி மன்றங்கள் பயனளிக்காது என்பது அவருக்குத்தெரியும். இருந்தாலும் மகளது நன் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்க அவர் விரும்பவில்லை. காலச்சக்கரம் சுழன்றது. ஆளுமையின் பிடிக்குள் சிக்கி அவஸ்தைப்பட்டது அந்தக் கிராமம். அங்கிருந்து பிரதான நகரங்களுக்குச் செல்லும் பாதைகள் மூடப்பட்டன. வேளாண்மையை நம்பி வாழ்ந்த குடும்பங்கள் விளைந்த பயிர்களை சந்தைப்படுத்த முடியாது தவிக்க அவரவர் குடும்பங்களும் வறுமையினால் வாடின. இது தாரணியின் பெற்றோர்களுக்கு மட்டும் விதிவிலக்கா என்ன....? அங்கும் வறுமை கோலம்போட ஆரம்பித்தது. கூடவே தந்தையின் உடல் நிலையிலும் சற்று மாறுதல் தோன்ற உழைப்பால் உரமேறிய உடம்பில் திரண்டு தினவெடுத்திருந்த தசைகள் ஓய்வு கேட்பதற்கான அறிகுறிகளும் தென்பட்டன. குடும்பத்தில் நிலவிய வறுமை தகப்பனின் இயலாமை இவைகளுக்கு மத்தியில்தான் தாரணியின் கல்வித் தகைமைக்குத் தக்க தொழில் அவளைத் தேடிவந்தது அயலூர்க் கம்பனி ஒன்றில் அவளுக்குக் கிடைத்திருந்த காசாளர் பதவியினால் ஏற்பட்ட சந்சோசத்தைவிட தன் கிராமத்தை விட்டுப் பிரியப்போகிறேனே என்ற வேதனைதான் அவளிடத்தில் மேலோங்கி நின்றது. ஆனாலும் அவளுக்குப் பின்னால் உள்ள சுமைகளின் நிமித்தம் அங்கு சென்று கடமையைப் பொறுப்பேற்பதைத் தவிர அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. வேலைக்கு அமர்ந்து சில மாதங்கள் கரைந்து செல்ல தாரணியின் வருமானத்தினால் வறுமை நிலையில் இருந்து அவர்களது குடும்பம் விடுபட்டு மகிழ்ச்சி நிலவியது. ஆனாலும் மகளது உழைப்பினால் தனது குடும்பம் வாழ்வதையும் தனது இயலாமையையும் எண்ணி தந்தையின் உள்ளம் குமுறியது . தந்தை என்ற ஸ்தானத்தில் இருந்துகொண்டு சத்தியத்திற்கும் தர்மத்திற்கும் கட்டுப்பட்டு ஒழுக்க சீலராய் வாழ்ந்த ஒருவருக்கு காலத்தின் தேவையறிந்து செய்யவேண்டிய தனக்குரிய கடமைகளைச் செய்ய முடியாமல் போனதனால் ஏற்பட்ட வேதனைகளை வெளிப்படுத்தமுடியாமல் தனக்குள்ளேயே அழுது கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தது அந்த உள்ளம். இந்த வேளையில்தான் தாரணியின் பருவ வாழ்வினில் புயலொன்று வீசியது. தாரணி வேலைபார்க்கும் அதே கம்பனியில் பணிபுரியும் தூயவன் என்ற இளைஞன் அவள் வீது மையல்கொள்ள ஆரம்பித்தான்.இனம்புரியாத இந்த உறவுக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்க எண்ணினாலும் முடியாது தவித்தாள் தாரணி. தூயவனின் அன்பு கலந்த வார்த்தைகளுக்கு அடிமையாகிவிட்ட அவளது இதயம் அந்தப் புனிதமான உறவுக்கு மறுப்புத்தெரிவிக்க மறுத்தது. ஆனாலும் வயதாகிய அப்பா ...அம்மா தனது எதிர்காலமே என் கையில்தான் என கனவு காணும் தங்கை.. இவைகளுக்கு மத்தியில் தனது கழுத்து மட்டும் மாங்கல்யம் கேட்பதை நினைக்கும்போது பயமாகவும் இருந்தது. இருந்தாலும் தனது சுகபோகங்களை எல்லாம் உதறித்தள்ளிவிட்டு எந்தவித எதிர்பார்ப்புகளும் இன்றி தூயவனின் உள்ளத்திலே அரும்பாகிய இந்த உறவு இல்லறம் என்ற இனிய பூங்காவினுள் மலர்ந்து மணம் வீசவேண்டும் என்பதே அவளது ஆவலாகவும் இருந்தது. கருத்தொருமித்து காதல் வயப்பட்ட இதயங்கள் களிப்படைந்திருந்தவேளையில் வதி இவர்களைப் பார்த்து சிரித்ததோ என்னவோ...விசயம் தூயவனின் தந்தை கைலாசத்தின் காதுகளை எட்டியது. செய்வதறியாது திகைத்து நின்ற அவர்.. தனது அந்தஸ்துக்கும் கௌரவத்துக்கும் ஏற்படப்போகும் இழுக்கு என எண்ணினார். கைலாசம் பிரபல தொழிலதிபர் தென்னிலங்கையில் வசிக்கும் மிகப் பெரிய செல்வந்தர்களுள் இவரும் ஒருவர். அங்கு இனக்கலவரங்கள் ஏற்பட்டபோதெல்லாம் சிங்களக் கிராமங்களில் தனது பணபலத்தால் பாதுகாப்பாக வாழ்ந்தவர். குடியிருப்பதற்கு அரண்மனைபோல் வீடு..அதைச்சுற்றி பூந்தோட்டம். இவைகளைக் கவனிக்க வேலையாட்கள். உல்லாசமாய் திரிவதற்கு கார். இவற்றை அனுபவிக்க ஒரே வாரிசாக தூயவன். இத்தகைய சுகபோகங்களை அனுபவிப்பதற்கு இந்த வீட்டிற்குள் வரும் மருமகள் எத்தகையவளாய் இருக்கவேண்டும் என்று மனப்பால் குடித்தவர் இந்த கைலாசம். இப்படிப்பட்ட மனிதநேயமற்ற மனிதருக்கு மகனாகப் பிறந்த தூயவன் ஏழ்மையை விரும்புபவனாகவும்.. தான் பிறந்த மண்ணை நேசிப்பவனாகவும் இருந்தது கைலாசத்தின் வரட்டுக் கவுரவத்திற்கு தடைக்கல்லாக அமைந்தது. இருந்தபோதிலும் ஒருவாறு சமாளித்துக்கொண்டு காலத்தை ஓட்டிய அவருக்கு மகனது காதல் விவகாரம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் இருந்தது. நெஞ்சினுள் ஆர்ப்பரித்தெழுந்த ஆத்திரத்தை அடக்கமுடியாமல் தவித்த கைலாசம் தாரணியின் பெற்றோருக்கும் இதை தெரியப்படுத்தியதோடு பெரிய இடத்தில் சம்பந்தம் கலப்பதற்கு சில தகுதிகளும் தேவை என்று கூறி எச்சரிக்கை செய்தார். இதைக் கேள்விப்பட்ட தாரணியின் பெற்றோர் தங்கள் ஏழ்மைக்கு ஏற்றட்டிருக்கும் சோதனை என எண்ணி மிகவும் வேதனைப்பட்டனர். வேதனையின் நெருடல்களால் நொந்துபோய் இருந்த அவர்களது உள்ளத்தை கைலாசத்தின் சொல் அம்புகளும் சதா புண்படுத்தவே..உள்ளூர்த் தரகரின் உதவியுடன் தங்கள் வசதிக்கு ஏற்றவரனைத்தேடி நிச்சயதார்த்தத்திற்கும் நாட்குறித்து விட்டனர். இதைக் கேள்விப்பட்ட தாரணிக்கு தன் இதயத்துடிப்பு நின்றுவட்டதைப்போன்ற பிரமை ஏற்பட்டது. இதயத்தில் வைத்து பூசித்தவரை உதறித்தள்ளிவிட்டு இன்னொருவருடன் வாழ்க்கை நடாத்துவதற்கு அவளால் இம்மியளவும் நினைத்துப்பார்க்க முடியவில்லை. ஆனால் பெற்றோரின் அன்புப்பிணைப்புக்குள் வாழ்ந்த அவளுக்கு அவர்களது வார்த்தைகளை உதாசீனப்படுத்தும் மனவலிமையும் இல்லை. எதையோ சொல்ல நினைத்தும் முடியாது தவித்த மகளது உள்ளத்து உணர்வுகளைப் புரிந்துகொண்ட தாயுள்ளம்... "எல்லாம் தெரிந்த பின்பு தானம்மா நாம் இந்த முடிவுக்கு வந்தோம். குடிசையில் வாழ்பவர்கள் நாம். கோபுரத்தில் இருப்பதற்கு ஆசைப்படலாமா.".....? என்றார். "அருண் மிகவும் நல்ல பையன். அவரை நீ திருமணம் செய்வதன் மூலம்... உன் தங்கையின் நல்வாழ்வும் நல்லதாய் அமையுமென நாம் நம்புகிறோம்." என்று நா தளதளக்க கூறிய தந்தையின் வார்த்தைகளையும் செவிமடுத்த அவளுக்கு மேற்கொண்டு எதுவுமே சொல்ல முடியாது மனம் தவித்து நிற்க... அந்தத் தவிப்புத்தாங்க முடியாமவ் அவள் கண்களிலிருந்து வடிந்த கண்ணீர்த்துளிகளை மட்டும் தன் காதலுக்கு காணிக்கையாக்கிவிட்டு.. பெற்றவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் தனக்கு மனநிறைவைத் தரும் என நம்பினாள். அப்போதுதான் அந்த விபரீதம் நடந்தது...... நிச்சயதார்த்தம் முடிந்து சில வாரங்கள் இனிதாய் நகர்ந்துகொண்டிருக்க..அன்று நிகழ்ந்த அந்த ஆழிப்பேரலை அனர்த்தம் அருணினது உயிரையும் காவு கொள்ள ..தாரணி பூவையும் பொட்டையும் இழக்க நேரிட்டது. செய்தி கேட்டதும் அதிர்ச்சி தாங்க முடியாமல் தாரணியின் தந்தையின் உயிரும் பிரிய... விவைத்தாயுடன் அவளும் அங்கே நிர்க்கதியாய் நிற்க சொந்த பந்தங்கள் தாரணி தாலிபாக்கியம் இல்லாதவள் என்று நச்சரிக்க.. எச்சரிக்கை செய்வதுபோல் வந்தது அந்தக் கடிதம். அதில் தூயவன் கையொப்பம் இட்டிருந்தான். அன்புள்ள தாரணிக்கு.. பசுமரத்தாணிபோல் பதிந்துவிட்ட உன் நினைவுகள் என் நெஞ்சத்திரையில் இருந்து நீங்க மறுப்பதனால் இக்கடிதத்தை எழுதுகிறேன். உனது வாழ் வினில் வீசிய கொடிய சூறாவளிக்கு உன் எதிர்பார்ப்புக்களும் இரையாகிப்போனதையிட்டு மிகவும் வேதனைப்படுகிறேன். ஆனாலும்... தரிசனத்திற்கு உதவாத சாக்கடைப் பூ என்று கூறி உன்னை ஒதுக்கிவைத்து.. வேடிக்கை பார்க்கும் உனது சொந்த பந்தங்களுக்காகவாவது.. நீ மஞ்சள் குங்குமத்துடன்.. தீர்க்க சுமங்கலயாய் வாழவேண்டுமென்பது எனது ஆசை. உனது இதயத்தில் எனக்கொரு இடம் ஒதுக்கப்பட்டிருந்தால்...! அன்பே.... நீ என் உயிரோடு கலந்துவிடு. என்று எழுதப்பட்டிருந்தது. கடிதத்தில் எழுப்பட்டிருந்த வாசகங்கள் வலுவிழந்து நிற்கும் இதயத்திற்கு இதமாக இருந்தாலும் உள்ளத்தால் களங்கப்பட்டுப்போன அவள் மீண்டும் ஒரு புனிதமான இதயத்தைமாசுபடுத்த விரும்பாமல் அருணின் நினைவுகளுடனேயே வாழ விரும்பினாள். சிறு வயதில் சமுகப் பணிகளில் அவளுக்கிருந்த ஆர்வத்தினால் தன்னை ஒரு சமுக சேவகியாக்குவதன் மூலம் தனக்கு உள்ள மனச் சுமைகள் குறையும் என எதிர்பார்த்த அவள் தன்னைப்போன்ற அபலைப் பெண்கள் தங்கி இருக்கும் அந்த மறுமலர்ச்சி இல்லத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அங்கேதான் அவளது கடந்த கால காதல் வாழ்வில் முற்றுப் பெறாமல் முடங்கிப்போய்க் கிடந்த "காதல்" என்ற புத்தகம் நிறைவு பெறக் காத்திருந்தது. வாழ்விழந்து நிர்க்கதியாய் நிற்கும் இளம் வதவைகளுக்கு மறுவாழ்வளிக்க விரும்பி விண்ணப்பித்திருந்த தியாகி உள்ளம் படைத்தவர்களின் பெயர்ப்பட்டியலில் தூயவனின் பெயரும் இடம்பெற்றிருந்தது. விதிவசத்தால் இருதுருவங்கள் ஆக்கப்பட்ட இவர்ககள் நிச்சயம் ஓருநாள் ஒன்றுசேருவார்கள். சிவனேஸ்வரன். பிரான்ஸ். """""""""""""""""""""""""""" -------------------- வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும் நினைவுகள் ..... என்றும் சுகமானவை.. ..நட்புடன் சிவனேஸ்.. சிந்தனைப்பூக்கள். |
|
|
|
Mar 20 2005, 04:49 PM
Post
#2
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 11,282 Joined: 25-February 04 Member No.: 61 |
நன்றி சிவனேஸ்.
நன்றாக உள்ளது கதை. தலைப்பும் நன்றாக பொருந்தி விட்டது. QUOTE தனது மகளின் உள்ளத்திலே ஏற்பட்டுள்ள உணர்வுகளைக் கண்டு தந்தையின் உள்ளம் உவகை கொண்டாலும் குறுகிய நோக்கம் கொண்ட சில அரசியல்வாதிகளின் கோரப்பிடிக்குள் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு இத்தகைய நற்பணி மன்றங்கள் பயனளிக்காது என்பது அவருக்குத்தெரியும். இருந்தாலும் மகளது நன் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்க அவர் விரும்பவில்லை. உண்மை நிழலாக தெரிகின்றது. -------------------- பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம். ![]() |
|
|
|
Mar 20 2005, 05:13 PM
Post
#3
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,075 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
ம்............ தலைப்பும், கதையும் அருமை. வாழ்த்துக்கள் சிவனேஸ். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Mar 20 2005, 07:16 PM
Post
#4
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,457 Joined: 14-July 04 Member No.: 137 |
வாழ்த்துக்கள் சிவனேஸ்.
-------------------- அன்பு வைப்பவரின் அன்பை நேசி ; துன்பம் வரும் போதும் இன்பமாய் தெரியும்
|
|
|
|
Mar 20 2005, 11:28 PM
Post
#5
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 130 Joined: 12-March 05 Member No.: 232 |
வாழ்த்துக்கள் சிவனேஸ்
காலத்திற்குப் பொருத்தமாகக் கதை அமைந்திருக்கிறது. தொடரட்டும் உங்கள் எழுத்துக்கள். -------------------- உங்களுக்காக
எஸ். சண்முகதாஸன் |
|
|
|
Mar 21 2005, 12:23 AM
Post
#6
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 647 Joined: 19-December 03 Member No.: 14 |
அழகான கதை! அழித்த அவள் வாழ்வினை மீட்டுத்தர இயற்கையே கண் திறக்கட்டும்... வாழ்த்துக்கள்.
-------------------- உலகெங்கும் தேடுகிறேன்..மனிதமதைக் காணலையே..,
வானமே எல்லை..........! |
|
|
|
Mar 21 2005, 02:37 AM
Post
#7
|
|
|
Senior Member ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 718 Joined: 18-December 03 Member No.: 8 |
வாழ்த்துக்கள் சிவனேஸ்.. கதை அருமை.
|
|
|
|
Mar 21 2005, 07:58 AM
Post
#8
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 2,267 Joined: 17-December 03 Member No.: 4 |
கதையும் கருவும் அற்புதம் ரசித்தேன் எழுத்தின் அமைப்பை மீண்டும் மீண்டும்
வாழ்த்துக்கள் -------------------- அன்பை நேசித்து இன்பமாக வாழ்
அன்போடு பிரியமானவள் |
|
|
|
Mar 21 2005, 10:36 AM
Post
#9
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 4,887 Joined: 3-March 05 From: Norway Member No.: 229 |
வாழ்த்துக்கள் சிவனேஸ். நல்ல ஒரு கதயை தந்ததட்கு நன்றி.
-------------------- ![]() いいいいいいいいいநேசமுடன் சிந்துいいいいいいいいい |
|
|
|
Mar 21 2005, 11:16 AM
Post
#10
|
|
![]() நிர்வாகம் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Support Posts: 4,369 Joined: 18-December 03 From: Scotland Member No.: 7 |
வாழ்த்துக்கள் சிவனேஸ், கதை நன்றாக அமைந்துள்ளது, தொடரட்டும் உங்கள் பணி.
-------------------- |
|
|
|
Mar 21 2005, 12:29 PM
Post
#11
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 4,103 Joined: 29-December 03 From: Norway Member No.: 24 |
அருமையான கதைக்கு வாழ்த்துக்கள் சிவனேஸ்.
-------------------- <span style='font-size:8pt;line-height:100%'>
அன்புதான் உலக மகா சக்தி............. என்றும் அன்புடன்..கலை</span> ![]() |
|
|
|
Mar 5 2007, 02:09 PM
Post
#12
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 3,875 Joined: 13-September 05 Member No.: 335 |
QUOTE அன்புள்ள தாரணிக்கு.. பசுமரத்தாணிபோல் பதிந்துவிட்ட உன் நினைவுகள் என் நெஞ்சத்திரையில் இருந்து நீங்க மறுப்பதனால் இக்கடிதத்தை எழுதுகிறேன். உனது வாழ் வினில் வீசிய கொடிய சூறாவளிக்கு உன் எதிர்பார்ப்புக்களும் இரையாகிப்போனதையிட்டு மிகவும் வேதனைப்படுகிறேன். ஆனாலும்... தரிசனத்திற்கு உதவாத சாக்கடைப் பூ என்று கூறி உன்னை ஒதுக்கிவைத்து.. வேடிக்கை பார்க்கும் உனது சொந்த பந்தங்களுக்காகவாவது.. நீ மஞ்சள் குங்குமத்துடன்.. தீர்க்க சுமங்கலயாய் வாழவேண்டுமென்பது எனது ஆசை. உனது இதயத்தில் எனக்கொரு இடம் ஒதுக்கப்பட்டிருந்தால்...! அன்பே.... நீ என் உயிரோடு கலந்துவிடு. என்று எழுதப்பட்டிருந்தது உண்மையான காதல் என்றும் அழியாது .உனக்காகவே நான் என்றும் வாழ்கிறேன் என்று கூறும் அவன் வார்த்தைகள் மதிப்பிட முடியாதவை வாழ்த்துகள் சிவனேசன் உங்கள் கதைக்கு -------------------- [img]http://tbn0.google.com/images?q=tbn:pylxtTtP5fAJIM:http://bp3.blogger.com/_OmhqtV2VkQE/RsIvqO6HAWI/AAAAAAAAAvQ/zNgAfZYiPZA/s400/SSHikeSecrets.jpg[/img]
என்றும் மூழ்காத சிப் பிரெண்ட்ஸ் சிப் |
|
|
|
Mar 28 2007, 07:15 AM
Post
#13
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,676 Joined: 16-January 07 From: சிங்கபூர் Member No.: 819 |
வாழ்த்துக்கள் சிவனேஸ். நல்ல ஒரு கதயை தந்ததட்கு நன்றி
-------------------- ![]() அனு ..உங்கள் தோழி தவறுயிருந்தால் மன்னிக்கவும்.....என் நன்றி |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 06:56 AM |