IPB

Welcome Guest ( Log In | Register )

<% ANNOUNCEMENT %>
 
Reply to this topicStart new topic
நெஞ்சில் ஓர் ஓவியம்!
சத்தியா
post Jun 22 2005, 11:03 PM
Post #1


Senior
**********

Group: Moderators
Posts: 25,089
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53






நெஞ்சில் ஓர் ஓவியம்!
---------------------------


ஓர் அந்தி மாலைப் பொழுது… எங்கும் ஒரே நிசப்தம்… தென்றல் மெல்ல உடலை வருடி… தாலாட்டி மகிழ்விக்க… வானலையில் மிதந்து வந்த அந்தப் பாடலை ரசித்தவாறு சோபாவில் சாய்ந்து இருந்த சுருதிக்கு நேரம் போனதே தெரியவில்லை.


படம்—————-ஜானி
பாடல்—————காற்றில் எந்தன் கீதம்…..


பாடலில் லயித்து ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிப் போன அவளின் கண்களின் ஓரமாய் வடிந்திருந்த கண்ணீரைத் துடைத்தவாறு எழுந்த சுருதியும்… இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு அவளின் தனிமையைப் போக்கிக் கொள்ள… வழமைபோல் அந்த இணையத்துக்குள் புகுந்து கொண்டாள். அங்கே அவளுக்காய் ஓர் மின்னஞ்சல் காத்திருந்தது.

அதைக் கண்டதும் அவளுக்கு பெரியதோர் அதிர்ச்சி… என்ன ஆச்சரியம்!… எத்தனை தடவை?ஏன்?… அதை விட நேற்றும் கூட இந்தச் சிவாவிற்கு… நான்… அவரின் எழுத்து திறமையைப் பாராட்டி ஓர் மின்னஞ்சல் போட வேண்டும் என்று நினைத்தேனே? பின் அதைக் கூட மறந்து போனேனே. இன்று அதே சிவா விடம் இருந்து எனக்கு ஓர் மின்னஞ்சல் வந்திருக்கே… என்று நினைத்தவளாய்… அந்த மின்னஞ்சலை வாசித்தாள்.

அன்புள்ள சுருதிக்கு!

உங்கள் கவிதைகள் என்றால் எனக்கு நிறையவே பிடிக்கும். எத்தனையோ நாட்களாக அதற்காக உங்களைப் பாராட்ட வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனாலும் ஏனோ தவற விட்டு விட்டேன். நேற்றைய தினம் நீங்கள் புதிதாய் எழுதியிருந்த கவிதை என்னை மிகவும் கவர்ந்தது. இதைப் போல் இன்னமும் நல்ல கவிதைகளை என் போன்ற வாசகர்களுக்கு நீங்கள் தரவேண்டும்….

என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

அன்புடன்
“சிவா”…… என முடித்திருந்தான்.

அதை வாசித்ததும் அவள் மனதில் இனம் புரியாத ஓர் சந்தோசம். உடனடியாக அதற்கு அவளும் பதிலை எழுதினாள்.

வணக்கம் சிவா,

உங்கள் மின்னஞ்சல் கண்டு மிக்க மகிழ்ச்சி. உங்கள் பாராட்டுக்கு எனது மனம் நிறைந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன். உண்மையைச் சொல்லப் போனால்.. நான் சொல்வதை நீங்கள் நம்புவீர்களோ தெரியவில்லை. உங்கள் கவிதைகள் மட்டுமல்ல உங்கள் சிறுகதைகளின் பரம ரசிகை நான். எத்த னையோ தடவை உங்களை வாழ்த்த வேண்டும் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால்….. அதற்கு முன் உங்கள் வாழ்த்தைக் கண்டு மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது. உங்கள் இந்த வாழ்த்திற்கு என் நன்றிகள்.

அன்புடன்
“சுருதி”

எழுதி முடித்து அந்த மின்னஞ்சலை அனுப்பி விட்டு.. வழமையாக அவளுக்குப் பிடித்த அந்த இணையப் பகுதிக்குள் நுழைந்து கொண்டாள் சுருதி.

சிறிது நேரத்தில் சிவாவிடம் இருந்து….

நன்றி சுருதி… உங்கள் வாழ்த்துக்களுக்கு…. என் மெசஞ்சரில் உங்களை இணைத்துள்ளேன். உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் அங்கு வந்து இணைந்து கொள்ளுங்களேன்… என்று சிவா எழுதி இருந்தான்.

சரி என நினைத்தவளும்…. அங்கு போய் இணைந்து கொண்டாள்.

“வணக்கம் சுருதி.”

“வணக்கம் சிவா.”

“நலமாக இருக்கிறீங்களா சுருதி?”

“ஆமாம். சிவா நான் நலம். நன்றி. உங்கள் நலம் எப்படி?

“நான் நல்ல நலம். விசாரிப்புக்கு மிக்க நன்றி சுருதி.”

“ஓர் நல்ல எழுத்தாளனுடன் கதைக்க தொடர்பு கிடைத்ததை நினைக்க நல்ல சந்தோசமாக இருக்கு சிவா.”…..

“எனக்கும்தான் சுருதி. நான் சுவிசில் இருக்கிறன். நீங்கள் எங்கு இருக்கிறீங்கள் என்று அறிந்து கொள்ளலாமா? ”

“இதில் என்ன சிவா இருக்கு? தாராளமாக அறிந்து கொள்ளலாமே. நான் லண்டனில் இருக்கிறன்.”

“ஓ… அப்படியா. சந்தோசம் சுருதி.”

“நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் சிவா?”

“ஓ……..நானா?… இப்போது உங்களுடன் கதைத்துக் கொண்டு இருக்கிறன் சுருதி.”

“ஓ!… இது எனக்கு தெரியாததாக்கும். நீங்கள் சொல்லித்தான் தெரியணும் போல….”

“சும்மா தமாசுக்கு சொன்னன் சுருதி. நான் ஓர் கொம்பனியில் மனேஜ்ஜராக வேலை பாக்கிறன்.

” ஓ!… அப்படியா? அப்படி எண்டால்…. உங்களிட்ட நிறையக் காசு இருக்குமே?

“ஏன் உங்களுக்கு காசு வேணுமா?”

“சீச்சீ….. எனக்குத் தேவை இல்லை சிவா. சுவிசில இருக்கிறவங்களிட்ட நல்ல காசு இருப்பதாக சொல்லக் கேட்டிருக்கின்றேன். அதுதான் அப்படிச் சொன்னன்.

“ஓ… சந்தோசம் சுருதி… இங்கு என்னோட அம்மா, அப்பா, இரண்டு தம்பிமார்கள் இருக்கினம்.”

“உண்மையில் நீங்கள் கொடுத்து வைச்சவர் சிவா. அம்மா, அப்பாவோடு சேர்ந்து வாழ்வதில் இருக்கும் சந்தோசம் வேறு எதிலும் கிடைக்காது… இல்லையா சிவா?… எனக்குத்தான் எந்தக் கொடுப்பனவும் இல்லை. நான் மட்டும் தனியாகத்தான் ஒரு றூம் எடுத்து இருக்கிறன் சிவா… என் தனிமையை போக்க இப்படி ஏதாவது கிறுக்கிக் கொண்டு இருக்கிறன்.”

“ஓ… அதுதான் எப்பவும் உங்கள் கவிதையில் ஒரு சோகம் இழையோடி இருக்கிறதோ?”

“இருக்கலாம் சிவா. மனதின் வெளிப்பாடுகள் சில வேளை எழுத்துக்களிலும் என்னை அறியாமல் விழுந்தும் விடுகிறது.”

“இதில் ஒரு தவறும் இல்லையே சுருதி. அதனால்தான் உங்கள் கவிதைகள் உணர்வு பூர்வமாக இருக்கிறது. அது என் போன்ற வாசகர் நெஞ்சினிலும் நிறைந்து விடுகிறது.”

“ஓ… அப்படியா? நன்றி சிவா. என்றாலும் உங்கள் எழுத்துக்களைப் போல் என் எழுத்துக்கள் வருமா என்ன?”

“என்ன சுருதி?… கிண்டலா?”

“சீச்சீ… இதில என்ன கிண்டல்? உண்மையைத்தான் சொன்னன்.”

“நன்றி சுருதி. அது சரி… அப்படி என்னதான் சோகம் உங்களுக்குள்? நானும் அதை அறிந்து கொள்ளலாமா?”

“இந்த உலகில் யாருக்குத்தான் கவலையில்லை? யாரின் மனதுக்குள்தான் சோகமில்லை சிவா?வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்… வாசல் தோறும் வேதனை இருக்கும்… இதற்கு நான் மட்டும் விதிவிலக்கா என்ன?

“எனக்கு இல்லையே சுருதி”

” ஆச்சரியம்தான். அப்படியெண்டால்… நீங்கள் கொடுத்து வைச்சவர்தான் சிவா.”

இப்படியே இருவரின் உரையாடல்களும் நேரம் போவது தெரியாமல் தொடர்ந்த வண்ணமிருந்தன.

“சரி சிவா… உங்களுடன் கதைத்ததில் மிக்க சந்தோசம். நான் போகப் போகிறேன்.”

“ஏன் சலிப்புத் தட்டுதா? அல்லது உங்கள் சோகத்தைச் கேட்டதால் சொல்லப் பிடிக்கவில்லையா?”

“அப்படி ஒன்றுமில்லை சிவா. காலை நேரத்தோடு எழும்ப வேண்டும். அதுதான்.”

“இப்போது எனக்கும் கூட உறங்கும் நேரம்தான். அடுத்த முறை உங்களோடு இன்னும் நிறையப் பேச வேண்டும் போல் எனக்குள் ஓர் ஆசை. உங்களுக்கு சம்மதமா சுருதி?”

நிச்சயமாக!… தாராளமாக நீங்கள் உரையாடலாம் சிவா.

“சரி எனக் கூறியவாறு இருவரும் அன்று விடை பெற்றுக் கொண்டார்கள்.

மறு நாள் மாலையும் சுருதியின் வருகைக்காய் காத்திருந்தான் சிவா. ஒரு அரை மணி நேரம் காத்திருந்திருப்பான் சுருதி நுழைவதைக் கண்டான். சந்தோசப் பெருக்குடன்…

“ஹாய் சுருதி?… நலமா?”

“ம்… ம்… நலம். என்ன சிவா எனக்காகக் காத்துக் கொண்டிருந்தது போல இருக்கே….?

“ம்… நான் பொய் சொல்ல விரும்பல்ல சுருதி. உங்களுக்காகத்தான் காத்திருந்தன்.”

“ஓ… ஏனாம் அப்படி?”

“என்னமோ தெரியல்ல…. நேற்று உங்களோடு பேசி முடித்து படுக்கையில் போய் விழுந்தாலும்… என்னால் வெகுநேரம் தூங்கவே முடியல்லை சுருதி. மனம் முழுவதும் ஏதேதோ சிந்தனைகள்… உங்களுடன் கதைக்க வேணும் போல இருந்திச்சு அதுதான் இன்று நேரத்தோட வந்து உங்கள் வருகைக்காக காத்திருந்தன். இதில ஏதும் தவறு இருக்கா சுருதி?”

“நான் தவறு என்று சொன்னேனா? நான் சும்மா கேட்டன். அது சரியாகப் போச்சு… ஆனால் சிவா… நான் நேற்று நல்லா தூங்கினன்.

அவர்கள் உரையாடல் இப்படி பலதையும் பத்தையும் அலசிக் கொண்டிருக்கையில்….

சிவா!… உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா?”…

“இன்னும் இல்லையே.”

“என்ன?… சோகத்தோட சொல்லுமாப் போல இருக்கே? ம்… என்ன?… காதல், கீதல் என்று ஏதாவது இருக்கா சிவா? ஒரு வேளை காதலிக்காக காத்திருக்கிறீங்களோ?”

“சீச்சீ… அப்படி ஒன்றுமே இல்லை சுருதி. என்ன நீங்கள்? என்னைப் போய் காதல் கீதல் என்கிறீர்கள். நான் நல்ல பிள்ளை. ஒரு பெடியனை நல்ல பிள்ளையாய் இருக்க விட மாட்டீங்களே?”

“அப்ப காதலிக்கிறவங்கள் எல்லாம் நல்ல பிள்ளை இல்லை என்று சொல்லுறீங்களா சிவா?”

“இதென்னடா வம்மாப் போச்சு?… அப்படி நான் சொன்னனா என்ன?… எனக்கு காதல் வரல்ல. அதால காதலிக்கவில்லை. அவ்வளவுதான்.”

“அதுதான் ஏன்? …28 வயதாகியும் காதல் வரவில்லை என்றால்? … ஆச்சரியமா இருக்கே சிவா?

“உங்களுக்கு ஒரு உண்மையைச் சொல்லட்டுமா சுருதி… சொன்னால் நீங்கள் நம்புவீங்களோ தெரியாது. ஆனாலும் உங்களுக்கு சொல்லுறன். சுருதி… எனக்குள் ஓர் கற்பனை நாயகி என் நெஞ்சில் வேரூன்றி… காதலியாய் இருக்கிறாள். அவளைத்தான் நான் தேடிக் கொண்டு இருக்கிறன்.”

“அப்போ… இதுவரை நீங்கள் தேடிக் கொண்டிருக்கும் அந்தக் கற்பனை நாயகி உங்கள் கண்ணில படவே இல்லை என்கிறீங்களோ?”

“ஆமா சுருதி. இது வரை என் கண்ணில் படவே இல்லையே.”

“கஸ்ரம்தான்…. சரி.. உங்கள் கற்பனை நாயகி எப்படி இருப்பாள்?… அவளை எப்படி எதிர்பாக்கிறீங்கள்? ம்… அதுக்கு முதல் நீங்கள் எப்படி இருப்பீங்கள்? கமலஹாஸன் போல…?

“என்ன சுருதி கிண்டலா?”

“அப்போ அரவிந்தசாமி போல?”

“ஏன் சுருதி… தெரியாமல்தான் கேட்கிறன்… இந்தப் பெண்களுக்கு கமலஹாஸன், அரவிந்தசாமிதான் ஆம்பிளைகளாய் தெரிவாங்களா? வேறு ஒருவரும் ஆம்பிளைகளாக தெரிவதில்லையா? நான் அப்படிப் பெரிய அழகன் இல்லை. சாதாரண ஓர் ஆண்மகன்தான். இந்தா… நீங்களே பாருங்களேன் நான் எப்படி இருக்கின்றேன் என்று… என கூறியவாறு தன் போட்டோவை அனுப்பினான் சிவா.

“ம்… நல்ல அமைதியான முகம்… உங்களது சினேகமான இந்த முகத்தில் களங்கமில்லா நட்பு மட்டுமல்ல ஏதோ ஒருவித கவர்ச்சியும் சேர்ந்து தெரிகிறது… அழகாக இருக்கிறீங்கள் சிவா”

” கண்ணூறு படுத்தி விடாதீங்க சுருதி”

” ஐயையோ… என் கண் படாதப்பா… அப்படி யெல்லாம் பயப்படாதீங்க சிவா.”

“நான் தமாசுக்கு சொன்னன் சுருதி… உங்களையும் பார்க்க எனக்கு ஆவலாய் இருக்காதா என்ன?”

“என்னைப் பார்க்கவா?…ஏன் சிவா… இரவைக்கு உங்களுக்குத் தூங்கப் பிடிக்கவில்லையா?…என்னைப் பார்த்து விட்டு விடிய விடிய நீங்கள் நித்திரையில பயந்து கத்தவா?”

“ஓ!… அப்படிப் பயங்கரமான உருவமா சுருதி நீங்கள்? ம்… பறவாயில்லை. ம்… இந்தச் சிவா ரொம்பத் தைரியசாலி சுருதி. நான் எதையும் பார்த்துப் பயப்பட மாட்டன் சுருதி. நீங்கள் தாராளமா அனுப்பலாம்.

“அடடா!… அப்படியா? அப்போ நல்லதாப் போச்சு. நீங்கள் நல்லவர் என்றுதான் என் உள்மனம் சொல்கிறது. அப்படி இருந்தும்… ஏன் சிவா நாளைக்கு அனுப்பட்டுமா?

“நாளைக்கு என்ன நல்ல நாளோ?…..”

“ம்… அப்படித்தான் வைச்சுக் கொள்ளுங்களன் சிவா. அது சரி சிவா… உங்களை இதுவரை யாருமே காதலிக்காமல் விட்டார்களா என்ன?”

“யாரும் என்னைக் காதலிக்கல்ல என்று சொல்ல மாட்டன். நான் அதை தவிர்த்துக் கொண்டன் என்று சொல்லலாமே. என் கற்பனைக் காதலியைத் தேடிக் கொண்டிருந்தன். அதால என் மனதில் எவருக்குமே இடம் கொடுக்காமல் இருந்தன். ஆனாலும் இது வரை அவள்தான் என் கண்ணில் சிக்கவே இல்லையே.

“உங்கள் கற்பனைக் காதலி எப்படி இருப்பாள் என்று எனக்கும் சொல்லுங்களன் சிவா. எங்காவது கண்டால் நானும் சொல்லலாம்… இல்லையா?”..

“ம்… கட்டாயம்… கட்டாயம்… இதோ பாருங்கள் சுருதி… என் கற்பனைக் காதலியை நான் ஓவியமாகவே வரைந்து வைத்திருக்கிறேன்… நீங்களும் ஓர் தடவை பாருங்களேன் ” …. என்று கூறிய சிவா… தான் வரைந்து வைத்திருந்த அந்த ஒவியத்தை அவளுக்கு அனுப்பினான்.

ஓவியத்தைப் பார்த்தவள் ஓர் கணம் திடுக்கிட்டு…. மெளனமானாள்.


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Jun 22 2005, 11:08 PM
Post #2


Senior
**********

Group: Moderators
Posts: 25,089
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



“என்ன சுருதி திடீரென்று மெளனமாகி விட்டீர்கள்? ”

சுருதி தன்னை ஒருவாறு சுதாகரித்துக் கொண்டு…

“இல்லை சிவா… எவ்வளவு அழகாக ஓவியம் வரைந்திருக்கின்றீர்களே?… அதைப் பார்த்ததும் ஓர் கணம் நான் அசந்தே போனன் சிவா … உங்களுக்குள்தான் எத்தனை திறமைகள் குடிகொண்டிருக்கின்றன?… இவ்வளவு அழகாக இந்த ஓவியத்தை வரைந்திருக்கிறீங்கள்…

“அதிகம் புகழாதீர்கள் சுருதி. இங்கு சரியான குளிரா இருக்கு”…

“உண்மையைத்தான் சொன்னன் சிவா. இதில் எந்தப் புழுகும் இல்லையே”…

“சரி… சரி… உங்கள் பாராட்டுக்கு நன்றி சுருதி. என் கற்பனைக் காதலியை எங்காவது நீங்கள் இதுவரை கண்டிருக்கிறீங்களோ?”

“ம்… எங்கேயோ கண்ட ஞாபகம்தான் சிவா. ஆனால் அது எங்கே என்றுதான் என் ஞாபகத்துக்கு வர மாட்டேன் என்கிறது. இனி எங்காவது கண்டால் உடன சொல்லுறனே… ஓகே சிவா?

மீண்டும் ஓர் நாளில்… அன்றும் வழமை போல் இருவரும்…

“சுருதி!… உங்கள் போட்டோ அனுப்புறன் அனுப்பிறன் எண்டு எத்தனை தடவை சொன்னீங்கள்… இதுவரை அனுப்பவே இல்லையே?…. என்றான் சிவா.

மௌனமானாள் சுருதி. சுருதியின் மௌனம் சிவா விற்கு ஏதோ போல் இருந்தது. அவளின் அந்த மௌனம் அவனைக் கொல்லாமல் கொன்றது. அவளது மௌனத்தைக் கலைத்தவனாய்…

என்ன சுருதி பதிலையே காணோமே?… உங்கள் போட்டோவை வைத்து நான் என்னதான் செய்துவிடப் போறன்? வருடங்களைத் தாண்டி எம் நட்பு தொடர்கிறது. நீங்கள் எப்படி இருப்பீங்கள் என்று பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு மட்டும் இருக்காதா என்ன?… ம்… இனி ஓர் தடவை கூட… நானாக உங்களிடம் போட்டோ அனுப்பும்படி கேக்க மாட்டன். நீங்களாக எப்போது மனம் விரும்பி அனுப்புறீங்களோ அப்போ பார்ப்போம்…” என்றான் சிவா.

அவன் அப்படி வெளியில் சொல்லிக் கொண்டாலும் அவனின் உள் மனமோ அவளை ஓர் தடவையாவது பார்த்து விட வேண்டும் என்று தவியாய்த் தவித்து அவனை வதைக்க ஆரம்பித்தது…


படம்————அழகிய தீயே
பாடல்———-விழிகளின் அருகினில் வானம்…..



காலங்கள் காத்திருக்காமல் கரைந்து கொண்டே சென்றன. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் இருவரின் உறவும் தொடர்ந்த வண்ணம் இருந்தன.

அன்று ஓர் நாள்… சுருதி!… உங்களுக்கு ஓர் சந்தோசமான விடயம் சொல்லட்டுமா?… என்றான் சிவா.

“ம்… ம்… சொல்லுங்கோ சிவா… அப்படி என்ன சந்தோசம்?… எனக்கும் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கு…”

ம்… உங்களுக்கு இந்த விசயத்தை சொல்ல வேணும் என்று என் மனசு சொல்லுது…சுருதி!… வருகின்ற வாரம் நான் லண்டன் வருவதாக இருக்கிறன். வந்தால்… உங்களை நேரில் சந்திக்கலாம் தானே?….” என்றான் சிவா.

“இல்லை சிவா வேண்டாம். அப்படி எல்லாம் வந்து விடாதீங்க… எனக்கு இதில கொஞ்சம் கூட இஸ்ரமேயில்லை”… என சடுதியாய் சொல்லி முடித்தாள் சுருதி.

ஏன் சுருதி?…. உங்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லையே?… 2 வருடங்களா என்னோடு கதைக்கிறீங்கள்… ஏதோ பல காலப் பழக்கம் போல… நன்றாக உறவாடுகிறீங்கள்… ஆனால் போட்டோ அனுப்ப மாட்டேன் என்கிறீங்கள்…. சந்திக்க மாட்டேன் என்கிறீங்கள்… அப்போ என்னில் சிறிதும் நம்பிக்கை இல்லாமல்… ஓர் பொழுது போக்காகவா இதில் வந்து தினமும் கதைக்கிறீங்கள்?… ம்…எனக்கு ஒன்றுமே புரியவில்லை சுருதி. இந்தப் பெண்களின் மனதின் ஆழத்தை புரிந்து கொள்வது என்றாலே ரொம்பக் கஸ்ரம்தான். ஆறுமதும் ஆழமில்லை… அது சேரும் கடலும் ஆழமில்லை… ஆழம் எது ஐயா…அந்த பொம்புழ மனசு தாண்டா… என்று சும்மாவா கவிஞன் சொன்னான்… சரி… உங்களுக்கு விருப்பமில்லாத எதையுமே கட்டாயப்படுத்தி, திணித்து உங்களிடமிருந்து எதையும் பெற நான் விரும்ப மாட்டன்”… என்று கூறி விட்டு…

பாய் சுருதி… என்று சற்றிலிருந்து விலகிக் கொண்டான் சிவா.

மறுநாள்… அதற்கும் மறுநாள்… ஏன் அதற்கும் மறுநாள் கூட சிவாவைக் காணவில்லை. ஒவ்வொரு நாளும் வழமையான நேரங்களில் வந்து காத்திருந்த சுருதிக்கு தொடர்ந்து ஏமாற்றமாய் இருந்தது. சிவாவைக் காணாதது, அவனோடு கதைக்காதது… இவை எல்லாம் அவள் மனதில் பெரும் வேதனையைக் கொடுத்தது.

எதுவும் அருகில் இருக்கும் போது அதன் அருமை ஒரு போதும் எவருக்கும் தெரிந்து விடுவதில்லை. அது இல்லாது போகும் போதே அதன் அருமை தெரிகிறது இல்லையா?

சுருதி சிவாவைக் காணாது தவித்தாள், துடித்தாள். பல மின்னஞ்சல்கள் அனுப்பினாள். எதற்கும் பதில் இல்லை. ஏதோ ஓர் வகையில் அவனின் பிரிவு அவளை வாட்டி வதைக்க… அவனின் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியாமல்… பல தடவை தனிமையில் இருந்து அழுதாள் சுருதி.

சில நாட்களின் பின்… அன்று திடீரென சற்றில் வந்தான் சிவா. அவனின் வருகை கண்டு சுருதியின் மனதில்… ஏதோ கடவுளை நேரில் கண்டது போல் ஓர் ஆனந்தம்.

“வணக்கம் சிவா… நலமா?… எங்கே ஆளையே காணோமே? எங்கே ஓடி ஒழிந்து கொண்டீங்கள்?… ஏன் சிவா உங்களுக்கு மனதில் இரக்கம் என்றதே இல்லையா?…

“ஓ… இது என்ன புதுக் கதை சுருதி? ….” என்றான்.

“எதற்காக இத்தனை நாட்களும் நீங்கள் வரவில்லை?… என்னோடு கதைக்கவில்லை? என்னில் கோவம்தானே உங்களுக்கு? நான் எவ்வளவு தவித்துப் போனேன் தெரியுமா சிவா?”

“தவிப்பா?… உங்களுக்கா?… அட!…. நம்பவே முடியவில்லையே?… சீண்டிப் பார்த்தான் சிவா.

“என்ன சிவா உங்கள் மனம் கல்லா என்ன?… எத்தனை மின்னஞ்சல் அனுப்பினன். ஒன்றுக்கும் பதிலும் இல்லை. நீங்களும் வரவில்லை…

“ஏனாம் இத்தனை தேடல்கள்?… போட்டோ கேட்டால் காட்ட மாட்டீங்கள். சந்திக்கக் கேட்டல் அதுக்கும் மாட்டீங்கள்… பிறகு எதற்காம் இதில மட்டும் தேட வேணும்?”…

“ஓ!….. அதுதான் உங்களுக்கு கோவமா? சிவா!… நாம் இன்றுவரை நேரடியாக முகம் காணாத நண்பர்கள்… போட்டோ பார்த்தோ அல்லது சந்தித்துத்தான் எம் நட்பு தொடரும் என்று நீங்கள் நினைக்கிறீங்களா சிவா?… அப்படி இல்லை சிவா. நீங்கள் எப்போதும் எனக்கு ஓர் உண்மையான நண்பனாய் இருக்க வேணும் என்பதுதான் என் ஆசை. என் கவலைகள், என் சோகங்கள்… ஏன்… அதையும் தாண்டி எதுவானாலும்… எந்தப் பொய் புரட்டுகளும் எமக்குள் இல்லாமல்… தயக்கமின்றி எதையும் பகிர்ந்து கொள்ளும் ஓர் உண்மையான நட்பாக எம் நட்பு இருக்க வேண்டும் என்றுதான் என் விருப்பம் சிவா. இதை நீங்களும் ஏற்றுக் கொள்ளுவீங்கள் என்று நினைக்கிறேன்… ஏற்றுக் கொள்ளுவீங்களா சிவா?….


படம்———-பாண்டவர் பூமி
பாடல்——–தோழா தோழா கனவுத் தோழா………….
( Yugendran , Sujatha)


“சுருதி!… உங்களிடம் ஒரு நல்ல சேதி ஒன்று சொல்ல வேணும். அதை இப்போ சொல்லட்டுமா?ம்… எனக்குப் பெண் பார்த்து விட்டார்கள். அதனால்தான் என்னால் வரமுடியவில்லை. வேறு ஓர் காரணமோ அல்லது கோவமோ எனக்கு இல்லை சுருதி….. என்றான்.

“அடடா… இது ரொம்ப நல்ல சேதி ஆச்சே சிவா. முன்கூட்டியே என் வாழ்த்துக்கள் சிவா. என்ன சிவா?… பெண் நீங்கள் தேடியது போல் அதே கற்பனை நாயகியாக அந்தப் பெண் இருக்கிறாளா என்ன?

“இல்லை சுருதி. என் கற்பனை நாயகியை தேடித் தேடி இத்தனை வருடங்களாய் நான் காத்திருந்து காத்திருந்து களைச்சுப் போனன். அவள் என் கண்ணில் படவே மாட்டேன் என்று விட்டாளே! இனி என்ன செய்ய?…. இப்போ என் பெற்றோரின் விருப்பப்படி… அவர்கள் பார்த்து முடிவு செய்த பெண்தான் இது.”…..

“ம்…. நல்லது நல்லது.”….

“சுருதி வருகிற மாதம் என் திருமணத்திற்கு நாள் குறித்துள்ளார்கள். என் திருமணத்திற்காவது நீங்கள் வருவீங்கள் தானே?….

“ம்… கட்டாயம். நான் இல்லாமல் உங்கள் திரும ணமா?… திருமணத்தன்று நான் நேரில் வந்து உங்கள் முன் குதிப்பன் சிவா.”

“இதிலும்… பிறகு எந்த மாற்றமும் வராது தானே சுருதி? பிறகு… இதுக்கும் ஏதும் சாட்டுப் போக்குச் சொல்லி நழுவி விட மாட்டீங்களே?… கட்டாமாக நீங்கள் வருவீங்கள் என்று நான் நம்பி இருக்கிறன்… அது சரி சுருதி… நீங்கள்தான் சுருதி என்று நான் எப்படித்தான் கண்டு பிடிப்பது?”…..

அவளும் தான் அணியும் சேலையின் நிறத்தைக் கூறி விட்டு… தானே வந்து நேரடியாக தன்னை அறிமுகப் படுத்துவதாகவும் கூறி இருந்தாள்.

அன்று சிவாவின் திருமணநாள்… அந்த மண்டபம் நிறைந்த சனக் கூட்டம். சிவாவும் அழகான மாப்பிள்ளையாக மணக் கோலத்தில்… அங்கு வந்திருப்பவர்களோடு அளவளாவிக் கொண்டிருந் தான்… அப்போது……

விண்ணிலிருந்து வந்திறங்கிய ஓர் அழகுத் தேவதையாய்… அங்கே ஓர் தேவதையின் வருகை.

“ஹாய் சிவா!… நான் சுருதி…” என தன் கையை நீட்டியபடி கை கொடுக்க… நிமிர்ந்து பார்த்தான் சிவா…

அங்கே… அந்த மண்டபத்துக்குள்… சேலை கட்டி… செதுக்கிய சிற்பமாய்… சிந்தும் புன்னகையோடு… நின்ற அவளைப் பார்த்த விநாடி… அப்படியே சிலையானான் சிவா.

ஓ!… இத்தனை வருடங்களாய் அவன் மனதில் ஓவியமாய் பதிந்து வைத்துத் தேடி அலைந்த அந்தக் கற்பனைக் காதலி… சுருதியாய் அவன் முன்னே….

ஓ!… அதே கண்கள்… உதட்டின் மேலே அதே மச்சம்… அதே அழகிய நீண்ட கூந்தல்… அவன் கண் முன்னே ஓர் அழகுத் தேவதையாய்… புன்னகை பூத்த படி நின்றிருந்தாள்.

அவனின் கையைக் குலுக்கியபடி…”வாழ்த்துக்கள் சிவா” … என்ற சுருதியின் வாழ்த்தினால் திடுக்கிட்ட சிவாவின் மனம் அந்த அதிர்ச்சியில் இருந்து முழுமையாக மீள முடியால் தவிக்க… ஆயிரம் கேள்விகள் அவனுள் எழுந்தது…

ஓ!… ஏன் சுருதி?… ஏன்?… உன்னையே நீ ஏன் மறைத்துக் கொண்டாய்? ஜென்ம ஜென்மமாய் நீயும் நானும் ஒன்றாயிருந்த ஓர் உணர்வு என்னுள் நிறைந்திருக்க… இந்த ஜென்மத்திலும் உன்னை என் நெஞ்சில் ஓவியமாய் வரைந்து தேடி அலைந்தேனே?… ஆனால்… நீ எதற்காக ஒழிந்து கொண்டாய்? சொல் சுருதி… சொல்…

என… அவளை ஓர் உலுப்பு உலுக்கிக் கேட்க வேண்டும் போல் அவன் மனம் துடித்த போதும்…

அவள் ஆரம்பத்தில் சொன்னது போல்… அந்த ஆழமான நட்பிலிருந்து வழுகிச் சென்று விடாமல்… இப்போதும் அதே ஆழமான நட்புடன்… கையை இறுகப் பற்றி… முகம் மலர்ந்த சிரிப்புடன் நிற்கும் அவளைப் பார்த்து எதுவுமே கேட்க முடியாமல் வாயடைத்து நின்றான் சிவா.

இவள் எதற்காக தன்னை மறைத்துக் கொண்டாள்?… இதனால் தானா போட்டோ அனுப்ப மறுத்தாளா?… என்னைச் சந்திக்க மறுத்தாளா?… ஏன்?… எதற்காக?… என்ற கேள்விகள் மட்டுமே அவன் மனதைத் துளைத் தன… ஆனாலும் எதற்குமே விடை கிடைக்காமல் விறைத்துப் போய் நின்றான் சிவா.


படம்———–ஆனந்த மழை
பாடல்———-ஒரு நாள் உனை விழிகள் பார்க்க…


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
கலை
post Jun 23 2005, 05:00 AM
Post #3


Senior
**********

Group: Disabled Members
Posts: 4,103
Joined: 29-December 03
From: Norway
Member No.: 24



நல்லதொரு இசையும் கதையும். வாழ்த்துக்கள் சத்யா. 41.gif 41.gif


--------------------
<span style='font-size:8pt;line-height:100%'>
அன்புதான் உலக மகா சக்தி.............
என்றும் அன்புடன்..கலை
</span>

Go to the top of the page
 
+Quote Post
bavan
post Jun 23 2005, 10:28 AM
Post #4


நிர்வாகம்
**********

Group: Support
Posts: 4,369
Joined: 18-December 03
From: Scotland
Member No.: 7



வாழ்த்துக்கள் சத்தியா, கதை நன்றாக அமைந்திருக்கிறது, தொடரட்டும் உங்கள் பணி.


--------------------
நிலா ஒன்லைன் - எங்கும் எப்போதும் உங்களோடு..!
அன்புடன் : பவன்.
Go to the top of the page
 
+Quote Post
றெனிநிமல்
post Jun 23 2005, 05:55 PM
Post #5


Senior
**********

Group: Disabled Members
Posts: 11,282
Joined: 25-February 04
Member No.: 61



வாழ்த்துக்கள் சத்தியா.
நன்றாக இருக்கின்றது.


--------------------
பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம்.
Go to the top of the page
 
+Quote Post
thanuja
post Jun 23 2005, 06:07 PM
Post #6


Senior
**********

Group: Disabled Members
Posts: 1,457
Joined: 14-July 04
Member No.: 137



வாழ்த்துக்கள் சத்தியா நன்றாக இருக்கின்றது.


--------------------
அன்பு வைப்பவரின் அன்பை நேசி ; துன்பம் வரும் போதும் இன்பமாய் தெரியும்
Go to the top of the page
 
+Quote Post
சிந்து
post Jun 23 2005, 06:12 PM
Post #7


Senior
**********

Group: Disabled Members
Posts: 4,887
Joined: 3-March 05
From: Norway
Member No.: 229



நல்ல ஒரு இசையும் கதையும் ம்.................. வாழ்த்துக்கள் சத்தியா.


--------------------


¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤நேசமுடன் சிந்து¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
Go to the top of the page
 
+Quote Post
roy
post Jun 24 2005, 03:17 PM
Post #8


Senior
**********

Group: Disabled Members
Posts: 1,979
Joined: 19-February 04
Member No.: 57



41.gif 41.gif 41.gif


--------------------
something is better than nothing
Go to the top of the page
 
+Quote Post
பிரியமானவள்
post Jun 26 2005, 05:10 PM
Post #9


Senior
**********

Group: Senior Members
Posts: 2,267
Joined: 17-December 03
Member No.: 4



வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் thumbs_up.gif


--------------------
அன்பை நேசித்து இன்பமாக வாழ்

அன்போடு
பிரியமானவள்
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Jun 26 2005, 09:22 PM
Post #10


Senior
**********

Group: Moderators
Posts: 25,089
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53




நெஞ்சில் வரைந்த ஓவியத்திற்கு அற்புதமாய் குரல் கொடுத்து உயிரூட்டிய நிலாவிற்கும், அத்துடன் மனதைத் திறந்து வாழ்த்துக்கள் தெரிவித்த:-- கலை, பவன், றெனி, தனுஜா, சிந்து, றோய், பிரியமானவள் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


smile.gif smile.gif smile.gif smile.gif smile.gif


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
jay_jay
post Jul 20 2005, 01:04 PM
Post #11


Senior
**********

Group: Disabled Members
Posts: 1,461
Joined: 28-July 04
Member No.: 141



வாழ்த்துக்கள் சத்த்தியா.. இசையும் கதையும் நன்றாக உள்ளது..நெஞ்சில் வரைந்த ஓவியம்..மோடன் ஆர்ட்டோ!


--------------------
தமிழன் இல்லாத நாடில்லை - தமிழனுக்கென்று ஓரு நாடில்லை
Go to the top of the page
 
+Quote Post
றெனிநிமல்
post Jul 20 2005, 05:29 PM
Post #12


Senior
**********

Group: Disabled Members
Posts: 11,282
Joined: 25-February 04
Member No.: 61



QUOTE
மோடன் ஆர்ட்டோ!

smile.gif smile.gif smile.gif smile.gif


--------------------
பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம்.
Go to the top of the page
 
+Quote Post

Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



RSS Lo-Fi Version Time is now: 9th February 2010 - 04:29 PM