விதி வரைந்த கோலங்கள்!, அங்கம் - 4 |
![]() ![]() |
விதி வரைந்த கோலங்கள்!, அங்கம் - 4 |
Jun 24 2006, 05:11 PM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,086 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
விதி வரைந்த கோலங்கள் ! - (அங்கம் - 4) அவள் கண்கள் சுழன்று சுழன்று சுற்றும் முற்றும் அவனைத் தேடிய வண்ணமே இருந்தன. புரியாத மொழி, தெரியாத இடம், எல்லாத் திசையும் வேற்று நாட்டவர்களின் நடமாட்டம்… அவள் நெஞ்சுக்குள் பயம் நிறைந்து கொள்ள அங்கும் இங்குமாய் அவனைத் தேடியவாறு திரும்பிய போது அங்கே… அவன் போட்டு வருவதாய்ச் சொன்ன கறுப்புக் கலர் ரீ சேட்டோடும், நீல ஜீன்சோடும் ஒருவர் தென்படவே… உற்றுப் பார்த்தாள்… இன்னும் சற்று உற்றுப் பார்த்தாள். “இது அரவிந்தா?” … பார்த்ததும் அப்படியே பேயறைந் தவள் போல் விறைத்து நின்றாள் சாந்தி. “என் மகாராணியைக் கண்டதும் ஓடி வந்து கட்டிப் பிடிச்சு தூக்கி முத்தம் தருவேன்”… என்று ஆசை வார்த்தைகளை அடிக்கடி அள்ளி எறிந்த அரவிந்தும்… கண்ணுக்கெட்டிய தூரத்தில்… அவளையே பார்த்தபடி அப்படியே சிலையாய் நின்றான்… சிறிது நேரம் பார்வைகள் மட்டும் மோதிக் கொண்டன. இருவரும் வினாடி நேரத்தில் ஊமையாகிப் போய் நின்றனர். அந்த நிமிடம் வரை மனதில் இருந்த அத்தனை எதிர்பார்ப்புக்களும் மொத்தமாய் வற்றிப் போனது. இருவரின் முகங்களிலும் அதிர்ச்சியின் ரேகைகள். சாந்திக்கு அவனைப் பார்த்ததுமே அவள் கண்களையே நம்ப முடியாமல் போனது. மொட்டைத் தலையும், பானை போல் பெரிய வண்டியும் தொந்தியுமாய்… ஒரு 40, 45 வயது மதிக்கத்தக்க கோலத்தில் அவன். ஆனாலும் மனதுக்குள் எழுந்த அந்த அதிர்ச்சியையும் காட்டிக் கொள்ளாமல்… அவன் நிற்கும் இடம் நோக்கி மெல்ல நகர்ந்து சென்றாள். இவள் அருகில் போனதும்… அவனின் கண்கள் கோவத்தில் சிவந்தன… “உன்ர மூஞ்சிக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை தேவைப் படுதோ?…ஏன்ரி… தெரியாமல்தான் கேக்கிறன்… உன்ர மூஞ்சிய நீ ஒருக்கா கூட கண்ணாடியில பார்த்ததே கிடையாதா?”… அரவிந் ஆத்திரத்தில் நிலை மறந்தான். அவனிடமிருந்து பாய்ந்து வந்த சொல்லம்புகள் அவளை நிலை குலையச் செய்ய… அப்படியே செய்வதறியாது திகைத்துப் போய் நின்றாள். “உன்ர சொந்தக்காரங்கள் யாரும் ஜேர்மனியில இருக் கினமே?”… கோவம் கொப்பளிக்க அவளைப் பார்த்துக் கேட்டான். இவற்றை எல்லாம் சற்றும் எதிர் பாராத சாந்திக்கு வார்த்தைகள் தடுமாறின… “இல்லை… எனக்கு இங்க யாருமே இல்லை”… “பின்ன எந்த நாட்டில இருக்கினம்?” “பிரான்சில ஒன்றுவிட்ட அண்ணன் ஒருவர் இருக்கிறார்” “அவன்ர நம்பர் வைச்சிருக்கிறியே?” “ஓம்… இருக்கு”… என்றவாறு தனது கான்பாக்கைக் கிண்டிக் கிண்டி ஒரு ஒற்றையைத் தேடி எடுத்து அவனிடம் நீட்டினாள். “உன்ர கொண்ணனுக்கு போன் அடிச்சு சொல்லுறன்… நீ அவனோட போயிடு என்ன?”… அவன் சொன்னதைக் கேட்டதும் சாந்திக்கு தலையே சுற்றியது… கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தோட… “ஏன்?… எதுக்கு என்னைப் போகச் சொல்லுறீங்கள்?”… என விம்மலுடன் கேட்டாள். “உன்ர மூஞ்சியைப் பார்க்கவே எனக்குச் சகிக்க முடியல்ல. உன்னோட எப்படி நான் குடும்பம் நடத்திறது? என் பக்கத்தில நிக்கவாவது உனக்குத் தகுதி இருக்காடி? மொத்தமா சொல்லப் போனால் உன்ன எனக்குப் பிடிக்கவே இல்ல”… அவள் கட்டி வந்த கற்பனைக் கோட்டைகள் யாவும் ஒரு நொடிப் பொழுதில் உடைந்து நொருங்கி விழ… “ஐயோ”… எனக் குழறி அழ வேண்டும் போல அவளுக்கு இருந்தது. பொங்கி வந்த அழுகையை கைக் குட்டையால் பொத்தி… வந்த அழுகையை அடக்கிக் கொண்டு நின்றாள் சாந்தி. அவளிடமிருந்து போன் நம்பரை வாங்கியவனும் உடன டியாக அந்த நம்பருக்கு போன் எடுத்தான். அங்கே போனை யாரும் எடுக்கவில்லை. கோவத்துடன் ஏதோ முணுமுணுத்தவாறு அங்கும் இங்குமாக நடந்தவ னும்… சிறிது நேரம் கழித்து…. “அங்க ஒரு நாயும் போனை எடுக்குதில்லை. இண்டைக்கு எப்படியாவது அடிச்சு பிடிச்சு நீ அண்ணனோட போயிடு… புரியுதே?…. அதட்டினான் அரவிந். அவள் அண்ணனை சின்ன வயதில் பார்த்தவள்தான். அதன் பின் அவள் கண்டதும் கிடையாது. கதைத்ததும் கிடையாது. வெளிநாட்டுக்கு இவள் புறப்பட ஆயத்த மான போது… அவளின் பெரியம்மா வீட்டுக்கு வந்த போது… அங்க போனால் அவனோடு கதை என்று சொல்லிக் கொடுத்த நம்பர்தான் அந்த நம்பர். இவனுக்கு அதை எப்படி சொல்ல முடியும்? விசர் நாய் போல் கடித்துக் குதற நிற்கும் அவனிடம் அதைச் சொன்னாலும் கேட்கவா போறான்?… என எண்ணிய வளாய்… வாய் திறந்து எதுவும் கதைக்காமல் “ஓம்”… என தலையை மட்டும் ஆட்டியவாறு நின்றவளை நோக்கி… “இந்தக் கோதாரிகளை இழுத்துக் கொண்டு வா”… எனக் கூறி விட்டு கட கடவென முன்னே நடந்தான். ஒரு கையில் ஒரு சூட்கேசை தூக்கியவாறு, மற்ற சூட்கேசை இழுத்தவாறு மூச்சு வாங்க வாங்க அவனுக்குப் பின்னாலேயே விரைந்தாள். வெளியே சென்று காரின் அருகில் சென்று சூட்கேசுகளைத் தூக்கி காரின் டிக்கியினுள் தூக்கி எறிந்தவனும்… “ஏறித் தொலை”… என காரின் பின் சீற் பக்கம் கையைக் காட்டினான். அவன் சொன்னதும் பயத்துடன் ஏறி அமர்ந்தாள் சாந்தி. கார் வேகமாக நகர்ந்தது. அவளுக்கு அடுத்து என்ன செய்வது?… என்ன நடக்கப் போகிறது?… என்று தெரியா மல் குழம்பிப் போய்… அழுத வண்ணமே பின்னால் அமர்ந்திருந்தாள். “ஏன்டி… உங்க வீட்டில திருவலையே வேண்டினது இல்லையா? பார் தேங்காய் திருவும் திருவலை மாதிரி பல்லும். நெருப்புக் கொள்ளியில தண்ணி ஊத்தின கலரும்… இந்த லட்சணத்தில உனக்கு வெளிநாட்டு மாப்பிளை வேற தேவைப்பட்டிருக்கு”… நெருப்பாய்க் கொட்டிய வார்த்தைகள் அவளைச் சுள் என்று சுட… அதுவரை அமைதியாக அழுது கொண்டி ருந்த அவள்… ஓவென அழத் தொடங்கினாள். “சனியன்… சனியன்… வாயை மூடு. இல்லையெண்டால் இப்படியே றோட்டில தள்ளிப் போட்டுப் போயிருவன்… பட்டிக்காட்டு நாயே!… எல்லோருமாச் சேர்ந்து போட்டோவைக் காட்டி என்னை நல்லா ஏமாத்திப் போட்டீங்களேடி”… “நீ மட்டுமா ஏமாந்தாய்? … நானும் கூடத்தானே ஏமாந்து போனன்? தலை நிறைய முடியோட போட்டோ அனுப்பினியே? இப்ப பார்… திறந்த முத்த வெளி போல மொட்டை மண்டையும், கருவாட்டு மூஞ்சி போல ஓர் ஓரல் மூஞ்சியையும் வைச்சுக் கொண்டு என்னை மட்டும் இந்தக் கேள்வி கேக்கிறியே? முதல்ல நீ உன்ர மூஞ்சியை கண்ணாடியில பாத்தியா?”… எனக் கேட்கத் துடித்து… மனசுக்குள்ளிருந்த அக்கினிக் குழம்பு வெடித்துக் கொப்புளித்தது. ஆனாலும் எதையும் கேட்க முடியாது அடக்கிக் கொண்டு அழுதபடியே அமர்ந்திருந்தாள். கார் வேகமாக விரைந்து அவனின் வீட்டுக்குச் சென்ற டைந்தது. வீட்டுக்குள் சென்றவனும் உடனடியாக ரெலி போனை எடுத்து பிரான்ஸுக்கு டயல் பண்ணினான். அங்கே அவளின் அண்ணனின் பெயரைச் சொல்லிக் கேட்ட போது… தானே கணேஸ் என்று சொல்லி அவளின் அண்ணன் கதைத்தான். உடனே அவளிடம் ரெலிபோனை நீட்டியவாறு… “இந்தா உன்ர கொண்ணன் கதைக்கிறான். அவன உடன வரச்சொல்லி அவனோட போயிடு. இல்லை என்றால் நடக்கிறது வேற… விளங்கிச்சே?”… பயத்துடன் ரெலிபோனை வாங்கியவளும் அழுதழுது நடந்தவற்றை எல்லாம் அண்ணனிடம் சொல்லி… எப்படியாவது உடனே வந்து தன்னைக் கூட்டிச் செல்லு மாறு அழுதழுது கெஞ்சிக் கேட்டாள். அவனும் தான் அன்றே வருவதாக கூறினான். சரி என போனை அரவிந்திடம் நீட்டியவளும் … அண்ணா இண்டைக்கே வாறாராம்… என்றாள். அவன் பதில் எதுவுமே சொல்லாது ஒரு முறைப்புப் பார்வை யோடு அவளைப் பார்த்தான். நேரம் இரவு ஒன்பது மணியைத் தாண்டி இருந்தது. அப்போது அங்கே வந்தவனும்… “சாப்பிடிறியே”… என்றான். “இல்லை எனக்கு எதுவும் வேண்டாம்”… என்று அவள் கூற… அவன் சாப்பிட்டு விட்டு… அறையைப் பூட்டிக் கொண்டு படுத்து விட்டான். அவளுக்கோ என்ன செய்வதென்றே தெரியாமல் அங்கே இருந்த சோபாவில் அமர்ந்து… தன் தலை விதியை நினைத்து நினைத்து அழுத வண்ணமே இருந்தாள். இரவு 12.30 அளவில் வீட்டு வாசல் மணி அழுத்தப் பட… அறைக்குள் படுத்திருந்த அரவிந்… அறைக் கதவைத் திறந்து கொண்டு வந்து வாசல் கதவைத் திறந்தான். அங்கே…. தொடரும்......... -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jun 24 2006, 07:39 PM
Post
#2
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,044 Joined: 8-October 05 From: UK Member No.: 363 |
நன்றி சத்தியா...
பாவம் சாந்தி. சொந்தங்கள் பந்தங்களைப் பிரிந்து.. பல மைல் தூரம் கடந்து வந்துள்ளாள் என்றாவது இரக்கப் பட்டிருக்கலாம். ஏன் இப்படி மனிதாபிமானம் இல்லாமல் சிலர் நடந்துகொள்கிறார்கள்? இப்படித்தான் சிலர் மனிதாபிமானமற்று நடக்கின்றார்கள். தான் எப்படி இருந்தாலும் பரவாயில்லை.. தனக்கு வருபவள் மட்டும் திறமாக இருக்க வேண்டுமென்பார்கள். இக் கீழ்த்தரமான (பண்பற்ற)எண்ணங்கள்/நடத்தைகளையெல்லாம் கொண்டிருக்கும் எமது சமுதாயத்திலுள்ள சிலர் எப்போதுதான் திருந்துவார்களோ? This post has been edited by silent: Jun 24 2006, 07:50 PM -------------------- உங்கள் பொழுது இனிமையானதாக அமையட்டும்!
I have learned to seek my happiness by limiting my desires, rather than attempting to satisfy them. - John Stuart Mills அன்புடன், #~வைதேகி~# |
|
|
|
Jun 24 2006, 08:58 PM
Post
#3
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 4,887 Joined: 3-March 05 From: Norway Member No.: 229 |
அடப்பாவமே இப்படிப்பட்டவனா அப்படி ஆசைகளை காட்டி அவளுடன் கதைத்தான்? இப்படிப்பட்டவர்களையெல்லாம் என்ன செய்ய வேண்டும்?? உயிரோடு விடுவதே மகா தப்பு.
அது சரி சத்தியா உண்மை கதையை தொடர்கதையாக தருகின்றீர்களா?? அல்லது உங்கள் கற்பனையா?? நான் நினைக்கின்றேன் உண்மை கதையாக இருக்கலாம் என்று அப்படியா சத்தியா?? உண்மையாக இருந்தால அவனை -------------------- ![]() ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤நேசமுடன் சிந்து¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤ |
|
|
|
Jun 24 2006, 09:47 PM
Post
#4
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,086 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (சிந் @ Jun 24 2006, 08:58 PM) அது சரி சத்தியா உண்மை கதையை தொடர் கதையாக தருகின்றீர்களா?? அல்லது உங்கள் கற்பனையா?? நான் நினைக்கின்றேன் உண்மை கதையாக இருக்கலாம் என்று அப்படியா சத்தியா?? உண்மையாக இருந்தால் அவனை இனி வரும் இரு அங்கத்தோடு இதற்கான விடையை நீங்களே கண்டுபிடித்து விடுவீர்கள். அதுவரை பொறுத்திருங்கள் சிந்து. -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jun 24 2006, 10:39 PM
Post
#5
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 647 Joined: 19-December 03 Member No.: 14 |
வாழ்க்கையெனும் கடலில் நீந்தித் தவித்து சில பொழுதுகளில் கரை சேர்ந்த பல பொழுதுகளில் மூழ்கிச் சிதறிய பல்லாயிரம் மீன்களில் இவளும் ஒருத்தியா ? சாந்தியெனும் இந்தப் பிறவி உயிர்வாழ்ந்துகொண்டிருக்கிறாள் இதுவரை ... இனி இவள் என்ன ஆவாள் என்ற எதிர்காலம் விதி வரையும் இன்னொரு கோலமாகும் கணம் காணக் காத்திருக்கும் உறவுகளோடு நாமும் கலந்துகொள்கிறோம்.
புள்ளிகள் வார்த்தைகளானது .. வார்த்தைகள் வரையப்பட்ட கோலங்களாகிவிட்டன.. இனி உங்கள் சிந்தனையையும் ஒருமுகப்படுத்தி சாந்தியை மற்றவர் மனங்களில் வாழச் செய்யுங்கள் ... தளராமல் தொடர்ந்து வெற்றி நடை போடுங்கள் .. !! -------------------- உலகெங்கும் தேடுகிறேன்..மனிதமதைக் காணலையே..,
வானமே எல்லை..........! |
|
|
|
Jun 25 2006, 03:29 AM
Post
#6
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 3,875 Joined: 13-September 05 Member No.: 335 |
ஏன் இப்படி நடந்த்து .2 பேரும் போட்டோ பார்த்தார்கள் . வேரு போட்டோ காட்டி பொய் சொல்லவும் முடியாது காரனம் அரவிந்தன் அப்பா அம்மா இலங்கையில் இருந்து சாந்தி போட்டோ பார்த்தார்கள் அதே போல் தன் மகன் அரவீந்தன் போட்டோ தான் சாந்த்திக்கும் காட்டி இருப்பார்கள் ஏதோ குழப்பிறாங்கள் பொருத்து இருந்து பார்ப்பம் . சாந்தி பாவம் தன் குடும்பத்தை விட்டு எவ்வள்வோ தூரம் வந்தும் சந்தோசமான வாழ்க்கை இல்லை .
-------------------- [img]http://tbn0.google.com/images?q=tbn:pylxtTtP5fAJIM:http://bp3.blogger.com/_OmhqtV2VkQE/RsIvqO6HAWI/AAAAAAAAAvQ/zNgAfZYiPZA/s400/SSHikeSecrets.jpg[/img]
என்றும் மூழ்காத சிப் பிரெண்ட்ஸ் சிப் |
|
|
|
Jun 25 2006, 07:08 AM
Post
#7
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,044 Joined: 8-October 05 From: UK Member No.: 363 |
QUOTE (சிந் @ Jun 24 2006, 08:58 PM) தருகின்றீர்களா?? அல்லது உங்கள் கற்பனையா?? நான் நினைக்கின்றேன் உண்மை கதையாக இருக்கலாம் என்று அப்படியா சத்தியா?? உண்மையாக இருந்தால அவனை இது உண்மைச் சம்பவம் போலதான் இருக்கிறது. எனக்கு அவ்வளவு அனுபவமில்லாவிட்டாலும் இது போல சம்பவங்கள் பல எம்மவர் மத்தியில் நடப்பது என்பது அதிசயப் படக்க்கூடிய விடயமில்லை என நினைக்கின்றேன். ஏன் இப்படி நடந்த்து .2 பேரும் போட்டோ பார்த்தார்கள் பழைய புகைப்படம் பார்த்திருக்கலாம் அஞ்சு!!! இதெல்லாம் ஒரு சிறு காரணமாக இருக்கும். இப்படிப் பிரச்சினை பண்ணுபவர்கள் ஏதாவது காரணம் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டே இருப்பார்கள்!!! இதுதானே உலகம். எல்லாரும் அஞ்சு மாதிரி இருப்பார்களா?? -------------------- உங்கள் பொழுது இனிமையானதாக அமையட்டும்!
I have learned to seek my happiness by limiting my desires, rather than attempting to satisfy them. - John Stuart Mills அன்புடன், #~வைதேகி~# |
|
|
|
Jun 25 2006, 07:56 AM
Post
#8
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 4,887 Joined: 3-March 05 From: Norway Member No.: 229 |
QUOTE (silent @ Jun 25 2006, 07:08 AM) எல்லாரும் அஞ்சு மாதிரி இருப்பார்களா??[/color] -------------------- ![]() ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤நேசமுடன் சிந்து¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤ |
|
|
|
Jun 25 2006, 08:43 AM
Post
#9
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 19,965 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
படு பாவி.....அரவிந். அவர் இருக்கும் நிலையில சிம்ரன் கேட்குதோ. ம்......ம்...........நினைக்க ஆத்திரமாக இருக்கிறது.
இது உண்மைச்சம்பவம் தான் சத்தியா. நான் சொல்லக் கேட்டிருக்கிறேன். நீங்கள் எப்படி நினைத்து எழுதுகிறீங்களோ தெரியவில்லை. திக்கற்றவருக்கு தெய்வம் துணை. இங்கே சாந்தியின் அண்;ணன் இல்லை என்றால் அவள் நிலை.........???? கதையில் சந்தோசமான விசயம் சொல்லியிருக்கிறீங்கள். இன்னும் 2 அங்கத்துடன் முடிவு தெரிந்து விடும் என்று. நானும் அவற்றையே விரும்பி படிப்பதுண்டு. நன்றி சத்தியா. -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Jun 25 2006, 12:50 PM
Post
#10
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 3,875 Joined: 13-September 05 Member No.: 335 |
QUOTE (silent @ Jun 25 2006, 07:08 AM) ஏன் இப்படி நடந்த்து .2 பேரும் போட்டோ பார்த்தார்கள் பழைய புகைப்படம் பார்த்திருக்கலாம் அஞ்சு!!! இதெல்லாம் ஒரு சிறு காரணமாக இருக்கும். இப்படிப் பிரச்சினை பண்ணுபவர்கள் ஏதாவது காரணம் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டே இருப்பார்கள்!!! இதுதானே உலகம். எல்லாரும் அஞ்சு மாதிரி இருப்பார்களா?? சையிலன்ற் நீங்கள் அடி வேண்டப் போறீங்கள் .. சிந்து அதுக்கு நக்கல் சிரிப்பா ம் ம் சிரியுங்கோ சிரியுங்கோ தனிமதி அரவிந்தை மட்டும் ஏசாதேங்கோ. சாந்தியும் அரவிந்தைக் கண்ட உடனேயே மனம் குளம்பீட்டா தானே? மொட்டை தலை பானை போல் வண்டி என்று நினைக்கிறா தானே .அவா மட்டும் சிறீகாந், அஜித், விஜய் போல் தேட வில்லையா? தனிய அரவிந்தனில் மட்டும் பிழை இல்லை .கூட பிழை அவனில். காரணம் யாரும் இல்லாமல் உன்னை மட்டும் நம்பி வந்தாள். . கொஞ்சம் இவங்கள் லவ் பண்ணும் போதே வெப் காம் யூஸ் பண்ணி இருக்கலாம் . என்ன சயிலன்ற்? This post has been edited by சத்தியா: Jun 25 2006, 12:54 PM -------------------- [img]http://tbn0.google.com/images?q=tbn:pylxtTtP5fAJIM:http://bp3.blogger.com/_OmhqtV2VkQE/RsIvqO6HAWI/AAAAAAAAAvQ/zNgAfZYiPZA/s400/SSHikeSecrets.jpg[/img]
என்றும் மூழ்காத சிப் பிரெண்ட்ஸ் சிப் |
|
|
|
Jun 25 2006, 01:12 PM
Post
#11
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,044 Joined: 8-October 05 From: UK Member No.: 363 |
QUOTE சையிலன்ற் நீங்கள் அடி வேண்டப் போறீங்கள் .. சிந்து அதுக்கு நக்கல் சிரிப்பா ம் ம் சிரியுங்கோ சிரியுங்கோ தனிமதி அரவிந்தை மட்டும் ஏசாதேங்கோ. சாந்தியும் அரவிந்தைக் கண்ட உடனேயே மனம் குளம்பீட்டா தானே? மொட்டை தலை பானை போல் வண்டி என்று நினைக்கிறா தானே .அவா மட்டும் சிறீகாந், அஜித், விஜய் போல் தேட வில்லையா? தனிய அரவிந்தனில் மட்டும் பிழை இல்லை .கூட பிழை அவனில். காரணம் யாரும் இல்லாமல் உன்னை மட்டும் நம்பி வந்தாள். . கொஞ்சம் இவங்கள் லவ் பண்ணும் போதே வெப் காம் யூஸ் பண்ணி இருக்கலாம் . என்ன சயிலன்ற்? ஹா ஹா.... அஞ்சு நீங்கள் சொல்வது நியாயம் தான். இருவருக்கும் ஒரே நேரத்தில் முதற் தடவையாகப் பார்த்தபோது அதிர்ச்சிதான். ஆனால் அரவிந்த் தான் அப்படி இருந்து கொண்டு சாந்தியைக் கீழ்த்தரமாக வையாடியது (பேசியது) மிகவும் பிழை. அரவிந்த் அரவிந்த சாமி போலவே இருந்து, சாந்தி ஏமாற்றி இருந்திருந்தால் அரவிந்தினுடைய கோபம் நியாயமாக இருந்திருக்கும். சாந்தி விஜய் மாதிரி எதிர்பார்க்கவில்லையே? அவளது ஏமாற்றத்திற்குக் காரணம் அரவிந்த் படத்தில் வேறு மாதிரி இருந்தார். ஆனால் வந்த ஏமாற்றத்தினையும் மறைத்து விட்டு அரவிந்தைப் பார்க்கப் போகிறாள். ஆனால் அரவிந்தோ தன் நிலை மறந்து அப்படி நடந்து கொண்டதுதான் பிழை. அஞ்சு சாந்திக்கு என்னையோ உங்களையோ போல் webcam பாவிக்க முடியாதிருந்திருக்கும்.. அப்படி இருந்தாலும் அரவிந்த் சில நேரம் Bratt இன் படத்தினைப் போட்டிருந்தால் (போட்டிருந்தாலும் போட்டிருப்பார்) என்ன செய்ய? This post has been edited by சத்தியா: Jun 25 2006, 01:19 PM -------------------- உங்கள் பொழுது இனிமையானதாக அமையட்டும்!
I have learned to seek my happiness by limiting my desires, rather than attempting to satisfy them. - John Stuart Mills அன்புடன், #~வைதேகி~# |
|
|
|
Jun 25 2006, 03:14 PM
Post
#12
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 19,965 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
அஞ்சு...சாந்தி பார்த்தவுடன் யோசித்தாவொழிய அரவிந் போல கொட்டித்தீர்க்கவில்லை தானே. எதற்கும் உங்கள் விசயத்தில் ஸ்மார்ட்டாக இருங்கோ அஞ்சு. என்ன சரியா.....?
-------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Jun 25 2006, 04:54 PM
Post
#13
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 3,875 Joined: 13-September 05 Member No.: 335 |
QUOTE (Thanimathy @ Jun 25 2006, 03:14 PM) அஞ்சு...சாந்தி பார்த்தவுடன் யோசித்தாவொழிய அரவிந் போல கொட்டித்தீர்க்கவில்லை தானே. எதற்கும் உங்கள் விசயத்தில் ஸ்மார்ட்டாக இருங்கோ அஞ்சு. என்ன சரியா.....? மனதில் வைத்து நடிப்பதை விட நேரே சொல்லித் தீர்ப்பது மேல். அழகுதான் முக்கியம் என்று இருவரும் நினைத்தால் பிரிந்து போவது தான் நல்லம் . நான் அரவிந் திறம் சொல்லவில்லை , அவனில்தான் 90 % பிழை. சாந்தி பாவம்தான். அதுக்கு ஆக அவா அரவிந்தை வண்டியன் மொட்டை என்று மனதில் கூட நினைக்க கூடாது. உதாரணத்துக்கு 2 பேரும் திருமணம் செய்யும் போது அழகா இருக்கிறார்கள் கொஞ்சக் காலத்தால் இருவரும் இப்போ இருப்பது போல் மாட்டார்கள். அப்ப என்ன செய்யப் போறார்கள்? ( சத்தியா கெதியா முடிவை தாங்கோ இல்லா விட்டால் நாங்கள் சண்டை போடப் போறம் ) . This post has been edited by சத்தியா: Jun 25 2006, 05:01 PM -------------------- [img]http://tbn0.google.com/images?q=tbn:pylxtTtP5fAJIM:http://bp3.blogger.com/_OmhqtV2VkQE/RsIvqO6HAWI/AAAAAAAAAvQ/zNgAfZYiPZA/s400/SSHikeSecrets.jpg[/img]
என்றும் மூழ்காத சிப் பிரெண்ட்ஸ் சிப் |
|
|
|
Jun 25 2006, 05:04 PM
Post
#14
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,086 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (anchu @ Jun 25 2006, 04:54 PM) மனதில் வைத்து நடிப்பதை விட நேரே சொல்லித் தீர்ப்பது மேல். அழகுதான் முக்கியம் என்று இருவரும் நினைத்தால் பிரிந்து போவது தான் நல்லம் . நான் அரவிந் திறம் சொல்லவில்லை , அவனில்தான் 90 % பிழை. சாந்தி பாவம்தான். அதுக்கு ஆக அவா அரவிந்தை வண்டியன் மொட்டை என்று மனதில் கூட நினைக்க கூடாது. உதாரணத்துக்கு 2 பேரும் திருமணம் செய்யும் போது அழகா இருக்கிறார்கள் கொஞ்சக் காலத்தால் இருவரும் இப்போ இருப்பது போல் மாட்டார்கள். அப்ப என்ன செய்யப் போறார்கள்? ( சத்தியா கெதியா முடிவை தாங்கோ இல்லா விட்டால் நாங்கள் சண்டை போடப் போறம் ) . ம்... அடுத்த அங்கத்தையும் போட்டு விட்டேன். போய்ப் பாருங்கள் அஞ்சு. -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jun 25 2006, 05:18 PM
Post
#15
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 3,875 Joined: 13-September 05 Member No.: 335 |
CODE [QUOTE] அஞ்சு சாந்திக்கு என்னையோ உங்களையோ போல் webcam பாவிக்க முடியாதிருந்திருக்கும்.. அப்படி இருந்தாலும் அரவிந்த் சில நேரம் Bratt இன் படத்தினைப் போட்டிருந்தால் (போட்டிருந்தாலும் போட்டிருப்பார்) என்ன செய்ய? சையிலன்ற் Brat போட்டோ போட்டு ஏமாத்த முடியா Girls என்ன லேசானவர்களா அப்படித் திரும்புங்கோ இப்படித் திரும்புங்கோ என்று கேட்டு எங்களுடன் கதைப்பவர் சேம் ஆளா என்று பார்ப்பார்கள் அது மட்டும் இல்லை Wig போட்டு இருக்கிறாங்களா என்று பார்ப்பதர்க்கு உங்கள் Hair Styling உது வடிவு இல்லை இப்படி மாத்தி காட்டுங்கோ வடிவா இருக்கா பாப்பம் என்று உடனே செய்யச் சொல்லிக் கேப்பார்கள் . -------------------- [img]http://tbn0.google.com/images?q=tbn:pylxtTtP5fAJIM:http://bp3.blogger.com/_OmhqtV2VkQE/RsIvqO6HAWI/AAAAAAAAAvQ/zNgAfZYiPZA/s400/SSHikeSecrets.jpg[/img]
என்றும் மூழ்காத சிப் பிரெண்ட்ஸ் சிப் |
|
|
|
Jun 25 2006, 05:32 PM
Post
#16
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,044 Joined: 8-October 05 From: UK Member No.: 363 |
சையிலன்ற் கவனம் ஈசி இல்லை
அஞ்சு எல்லாத்திலையும் நீங்கள் நல்ல விவரமாகத் (smart) தான் இருக்கின்றீர்கள் This post has been edited by silent: Jun 25 2006, 05:32 PM -------------------- உங்கள் பொழுது இனிமையானதாக அமையட்டும்!
I have learned to seek my happiness by limiting my desires, rather than attempting to satisfy them. - John Stuart Mills அன்புடன், #~வைதேகி~# |
|
|
|
Jun 25 2006, 06:59 PM
Post
#17
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 3,875 Joined: 13-September 05 Member No.: 335 |
QUOTE (silent @ Jun 25 2006, 05:32 PM) சையிலன்ற் கவனம் ஈசி இல்லை அஞ்சு எல்லாத்திலையும் நீங்கள் நல்ல விவரமாகத் (smart) தான் இருக்கின்றீர்கள் அதுதான் அஞ்சு -------------------- [img]http://tbn0.google.com/images?q=tbn:pylxtTtP5fAJIM:http://bp3.blogger.com/_OmhqtV2VkQE/RsIvqO6HAWI/AAAAAAAAAvQ/zNgAfZYiPZA/s400/SSHikeSecrets.jpg[/img]
என்றும் மூழ்காத சிப் பிரெண்ட்ஸ் சிப் |
|
|
|
Jun 26 2006, 07:32 AM
Post
#18
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,044 Joined: 8-October 05 From: UK Member No.: 363 |
QUOTE (anchu @ Jun 25 2006, 06:59 PM) QUOTE (silent @ Jun 25 2006, 05:32 PM) சையிலன்ற் கவனம் ஈசி இல்லை அஞ்சு எல்லாத்திலையும் நீங்கள் நல்ல விவரமாகத் (smart) தான் இருக்கின்றீர்கள் அதுதான் அஞ்சு ம்ம் ம்ம்ம் தெரியுது அஞ்சு நல்லாத் தெரியுது... இருந்தாலும் கொஞ்சம் கவனமாகவே (alert) இருங்கோ. நீங்கள் இப்படி கில்லாடி என்று தெரிந்து உங்களை மடக்கவும் சிலர் வித்தியாசமாகத் திட்டம் போடலாம். எதுக்கும் கவனமாக இருங்கோ.. பொல்லாத உலகம் இது!!! This post has been edited by சத்தியா: Jun 26 2006, 08:54 AM -------------------- உங்கள் பொழுது இனிமையானதாக அமையட்டும்!
I have learned to seek my happiness by limiting my desires, rather than attempting to satisfy them. - John Stuart Mills அன்புடன், #~வைதேகி~# |
|
|
|
Jun 26 2006, 12:36 PM
Post
#19
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 3,875 Joined: 13-September 05 Member No.: 335 |
QUOTE (silent @ Jun 26 2006, 07:32 AM) QUOTE (anchu @ Jun 25 2006, 06:59 PM) QUOTE (silent @ Jun 25 2006, 05:32 PM) சையிலன்ற் கவனம் ஈசி இல்லை அஞ்சு எல்லாத்திலையும் நீங்கள் நல்ல விவரமாகத் (smart) தான் இருக்கின்றீர்கள் அதுதான் அஞ்சு ம்ம் ம்ம்ம் தெரியுது அஞ்சு நல்லாத் தெரியுது... இருந்தாலும் கொஞ்சம் கவனமாகவே (alert) இருங்கோ. நீங்கள் இப்படி கில்லாடி என்று தெரிந்து உங்களை மடக்கவும் சிலர் வித்தியாசமாகத் திட்டம் போடலாம். எதுக்கும் கவனமாக இருங்கோ.. பொல்லாத உலகம் இது!!! சையிலன்ற் அஞ்சு மேல ரொம்ப ரொம்ப அக்கறையா இருக்கிறீங்கள் அதற்கு நன்றி. This post has been edited by சத்தியா: Jun 26 2006, 08:17 PM -------------------- [img]http://tbn0.google.com/images?q=tbn:pylxtTtP5fAJIM:http://bp3.blogger.com/_OmhqtV2VkQE/RsIvqO6HAWI/AAAAAAAAAvQ/zNgAfZYiPZA/s400/SSHikeSecrets.jpg[/img]
என்றும் மூழ்காத சிப் பிரெண்ட்ஸ் சிப் |
|
|
|
Jun 26 2006, 04:34 PM
Post
#20
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,044 Joined: 8-October 05 From: UK Member No.: 363 |
QUOTE ( எனக்கே தெரியவில்லை ஏதோ எழுதி விட்டேன் வாசிப்பம் ) அஞ்சு எப்படி இருந்தாலும் உங்கள் திறமையைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. சத்தியாவிற்கு நிறைய வேலை (திருத்துவதற்கு) கொடுக்காமல் திறமையாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள் -------------------- உங்கள் பொழுது இனிமையானதாக அமையட்டும்!
I have learned to seek my happiness by limiting my desires, rather than attempting to satisfy them. - John Stuart Mills அன்புடன், #~வைதேகி~# |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 03:45 PM |