IPB

Welcome Guest ( Log In | Register )

<% ANNOUNCEMENT %>
2 Pages V   1 2 >  
Reply to this topicStart new topic
விதி வரைந்த கோலங்கள்!, அங்கம் - 5
சத்தியா
post Jun 25 2006, 04:35 PM
Post #1


Senior
**********

Group: Moderators
Posts: 25,084
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53




விதி வரைந்த கோலங்கள் ! - (அங்கம் - 5)


அவன் கதவைத் திறந்த போது…

அங்கே அவளின் அண்ணனும், அவனின் நண்பன் ஒரு வனும் நின்றனர். தானே சாந்தியின் அண்ணன் எனவும், மற்றவன் தனது நண்பன் எனவும் அறிமு கப்படுத்திக் கொண்டு உள்ளே வந்ததும்…

ஓடிப் போய் அண்ணனின் காலைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழத் தொடங்கி விட்டாள் சாந்தி. அவளின் கதறல் கண்டு அந்த அண்ணனின் நெஞ்சம் கலங்கிய தோடு… அவன் கண்களில் கண்ணீரையும் வரவழைத் தது. உடன் பிறந்த இரத்தம் இல்லாவிடிலும்; உறவான உரிமையுடன் அவனுள்ளமும் ஊமையாய் அழுதது.

அவளை ஒருவாறு தேற்றி விட்டு, நடந்தவைகள் யாவற்றையுமே முற்றாக அறிந்து கொண்ட அவளின் அண்ணனும், அவனின் நண்பனும் சமாதானமாக அரவிந்தோடு கதைத்துப் பார்த்தார்கள். ஆனால் அவனோ இவர்கள் கூறுவது எதையுமே செவிமடுக்காது…

“வீட்டிற்கு ஒரு சீதேவியை எதிர்பார்த்தால் இங்கே ஒரு மூதேவி எல்லோ வந்திறங்கியிருக்கு… இந்த மூஞ்சி யைப் பார்த்தால் எப்படி குடும்பம் நடத்த மனம் வரும்?”… என்றான்.

அதுவரை பொறுமையோடு கதைத்துக் கொண்டிருந்த அவள் அண்ணன்… பொறுமையை இழந்தவனாய்…

“டேய் பொறுக்கி… நீ மட்டும் பெரிய மன்மதன் என்று நினைக்கிறியா?”…

என்றவாறே சடார் என விட்ட அடி, அரவிந்தின் கன்ன த்தைப் பதம் பார்த்தது. அங்கே வார்த்தைகள் முற்றி கடைசியில் கைகலப்பாய் மாறின.

அதைச் சற்றும் எதிர்பாராத அரவிந்…

“உடனடியா இவளையும் கூட்டிக் கொண்டு வெளியில் போங்கடா நாயளே “… என கொலை வெறி பிடித்தவன் போல் காட்டுக் கத்தலில் கத்தினான்.

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு… ஓர் ஓரமாய் ஒதுங்கி நின்று அழுது கொண்டு நின்றவளும்… திடுக் கிட்டுப் போய்… ஓடிச் சென்று தன் அண்ணனை மறித்தவாறு….

“அண்ணா!… வேண்டாம் அண்ணா… சண்டை எதுவும் வேண்டாம். எனக்கு இந்த வாழ்க்கையே வேண்டாம். ப்ளீஸ் அண்ணா… என்னையும் உங்களோட கூட்டிக் கொண்டு போயிருங்கோ”…

என தன் இரு கரங்களையும் கூப்பி… அழுது கெஞ்சிய படி நின்றாள்.

அவளின் அந்தக் கோலம்… அண்ணனின் அடி மனதை நோகச் செய்தது. இனி அவனுடன் கதைத்து எதுவுமே நடக்கப் போவதில்லை என்பதைப் புரிந்து கொண்ட தும்… சாந்தியையும் கூட்டிக் கொண்டு மூவருமாய் அங்கிருந்து வெளியேறினார்கள்.

சில மணி நேரப் பயணத்தில் பிரான்ஸ் வந்தடைந்த வளுக்கு அண்ணன் இருந்த வீட்டைப் பார்த்தபோது… கவலையாகவே இருந்தது. காரணம்… கோழிக்கூடு போன்ற ஒரு சிறிய றூம், ஒரு குட்டிக் குசினி, அதற்குள் 5 நண்பர்கள் தங்கி இருந்தார்கள்.

அதைப் பார்த்த போது… “இதுக்குள் எப்படி இருந்து சமாளிக்கப் போகிறேன்?”… என்றும்… அண்ணனுக்கு நானும் பாரத்தைக் கொடுத்து விட்டேனே… என்ற வேதனையும் எழுந்து நின்றது. ஆனாலும் அவை எல்லாவற்றையும் சமாளித்துப் போக வேண்டிய கால கட்டத்தில்தான் இன்று தான் இருப்பதை உணர்ந்து கொண்டாள்.

அண்ணன் பிரான்ஸ் வந்து 15 வருடங்களைத் தாண்டிய போதும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல், குடியும் கூத்துமாய் காலத்தைக் கழித்திருந்ததை அப்போதே அவளால் புரிந்து கொள்ளக் கூடியதாகவே இருந்தது.

வெளிநாடு வந்திறங்கிய அதே நாளிலேயே தன் வாழ்க் கையைத் தொலைத்து விட்டு தடுமாறி நிற்கும் அவளுக்கு அடைக்கலம் கொடுத்து நிற்கும் அந்த சின்னஞ் சிறிய றூம், ஒரு கோயிலாகவும்… அங்கே அவள் அண்ணன் ஒரு தெய்வமாகவே காணப்பட்டான்.

அதிகாலை வேளை… வேலைக் களைப்பில் வந்து படுத்திருந்தவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் அங்கே படுத் துக் கிடந்தார்கள். அவர்களைக் குழப்பாது, இப்போது சற்று ஓய்வெடுக்குமாறும்… நாளை கதைக்கலாம் என அவள் அண்ணன் கூறி, ஓர் மூலையில் ஒதுக்குப் புறமாய் படுக்கை விரித்து அதில் படுத்துக் கொள்ளு மாறு சொன்னான்.

போய் படுத்துக் கொண்ட அவளுக்கு அழுகை அழுகை யாக வந்தது. அவளால் அங்கே சத்தம் போட்டு அழ முடியவில்லை. தலையைப் போர்வையால் மூடிக் கொண்டு சத்தம் வராமல் வாயைப் பொத்திக் கொண்டு அழ… இன்னும் அதிகமாய் அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. தன் தலை விதியை நினைத்து, தலையணை யால் முகத்தை மூடிக் கொண்டு சத்தம் வராமல் குமுறினாள் சாந்தி.

பொழுதும் புலர்ந்தது. தன் பெற்றோர்கள் தனது ரெலி போனுக்காக காத்திருப்பார்கள். தன்னோடு கதைத்த பின்பே ஊருக்கு கிளம்புவார்கள் என்று அண்ணனிடம் சொன்ன போது… ரெலிபோனை எடுத்து… கதைக்குமாறு கொடுத்தான். அவளின் போனுக்காய் எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள் சாந்தியின் குரலைக் கேட்டதும்…

“சாந்தி!… எப்படிம்மா இருக்கிறாய்? ஒரு பிரச்சனையும் இல்லாமல் போய் சேந்திட்டியே மகள்? மாப்பிள்ளை எப்படியம்மா இருக்கிறார்?”… தாயின் அன்பான விசா ரிப்புகள் அடுக்கடுக்காய்த் தொடர்ந்தன. தன்னை ஒருவாறு சமாளித்துக் கொண்டு…

“ஓமம்மா ஒரு பிரச்சனையும் இல்லாமல் வந்து சேர்ந் திட்டன். அவரும் நல்லா இருக்கிறாரம்மா. அவர் ரெலி போனை எடுத்துத் தந்து போட்டு குளிக்கப் போட்டார். அதனால அவர் இப்பப உங்களோட கதைக்க ஏலாது. நீங்கள் கேட்டதாக நானே சொல்லி விடுறன்”… என்று சொல்லி ஒருவாறு தப்ப முயல… தாயிடமிருந்து போனை வாங்கிய அவளின் அப்பாவும்…

“பிள்ள சாந்தி!… நீயும் ஒரு பிரச்சனையும் இல்லாமல் அவரோட போய்ச் சேர்ந்தது சந்தோசமம்மா. மாப்பிள யும் உன்னோட சந்தோசமா இருக்கிறார் தானே?”… என்று கேட்கவும்… உடனே பதில் சொல்ல வாய் வராமல் வெகு நேரம் திணறி விட்டுத் திக்கித் திக்கி…

“ஓமப்பா… அவர் என் மேல ரொம்பப் பிரியமா இருக் கிறார்”… என்று அவள் கூற… அடங்கி இருந்த சோகம் வந்து தொண்டையை அடைத்துக் கொண்டது. ஆனா லும் அதைக் வெளிக்காட்டிக் கொள்ளாது …

“அப்பா… நீங்கள் எல்லாரும் சுகம் தானே? எப்ப ஊருக்கு போகப் போறீங்கள்?”… என்றாள்.

“ஏன் சாந்தி உன்ர குரல் ஒரு மாதிரி இருக்குமாப் போல இருக்கே?”… தன் பிள்ளையின் குரலை பெற்ற வருக்கு புரிந்து கொள்ள முடியாமலா போய் விடும்?

தன் தளர்ந்த குரலை வைத்து தந்தை கண்டு பிடித்து விட்டதை அவள் புரிந்து கொண்டாள். ஆனாலும் நடந்து முடிந்த விடயங்களை இப்போது அவளால் சொல்ல முடியவும் இல்லை. சொல்லவும் அவள் விரும்பவும் இல்லை. தான் வந்திறங்கிய அன்றே தனக்கு இடி விழு ந்த செய்தியைக் கேட்டால் அவர்களும் இடிந்து போய் விடுவார்கள். இப்போதைக்கு தன் சோகம் தன்னோடே இருக்கட்டும்…. இவற்றை எல்லாம் சொல்லி அவர்க ளையும் நோகடிக்க அவள் விரும்பாமல்…

“அப்படி ஒன்றும் இல்லையப்பா… பயணக் களைப்பு… இட வித்தியாசம், தண்ணி வித்தியாசம், அதைவிட இப்பதான் நித்திரையால வேற எழும்பினன்… அதுதான் குரல் அப்படி இருக்குப் போல”…. என்று ஒரு பெரிய பொய் மூட்டையைத் தூக்கிப் போட்டாள்.

“சரி பிள்ள.. உன்ர போனைத்தானம்மா பார்த்துக் கொண்டு நிண்டம். இனி என்ன? இன்றைக்குப் பின் னேரம் கிளம்ப வேண்டியதுதான்… உடம்ப கவனமாப் பாத்துக் கொள்ளு சாந்தி. மாப்பிள்ளையயும் கவனமா பார்த்துக் கொள்ளம்மா… நீ பக்குவமாய் வளர்ந்த பிள்ள, உனக்கு நான் புத்தி சொல் வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் சொல்லுறன்”… என்றார்.

“சரி அப்பா… நீங்கள் ஒண்டுக்கும் கவலைப் படாதீ ங்கோ. அம்மா, தங்கச்சிமாரைக் கூட்டிக் கொண்டு கவனமாகப் போய் வாங்கோ. நான் உங்களுக்கு கடிதம் போடுறன்”… என்று சொல்லி… போனை வைத்து விட்டு குலுங்கிக் குலுங்கி அழுதாள் சாந்தி.

அதுவரை ஓரளவு ஓய்ந்து போயிருந்த அழுகை பெற்ற வர்களோடு கதைத்து விட்டு ரெலிபோனை வைத்த தும்… ஒப்பாரியாக வெளி வந்தது.


தொடரும்........


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
வைதேகி
post Jun 25 2006, 04:48 PM
Post #2


Senior
**********

Group: Senior Members
Posts: 1,044
Joined: 8-October 05
From: UK
Member No.: 363



நன்றி சத்தியா... thumbs_up.gif

நல்ல காலம் அண்ணன் வந்து விட்டார்.
இப்படி அன்றாடம் பல சாந்திகள் அவலப் படுவதை நினைக்க மிகவும் கவலையாக உள்ளது.
ஏன் ஏன் ஏன் இப்படி சிலர் நடக்கின்றார்கள்? அவர்களுக்கு மனது உறுத்தாதா? ஒவ்வொரு நாளும் தூங்கும்போது... உணவு உண்ணும்போது... எப்படித் தான் நிம்மதியாக வாழ்க்கை போகும்???

அரவிந்தின் வலையில் அகப்பட்டது சாந்தியே முதலும் கடைசியுமாக இருக்க வேண்டும்.


அரவிந்த் இதற்குப் பிறகாவது நிம்மதியாக வாழ்ந்தால் சரி


--------------------
உங்கள் பொழுது இனிமையானதாக அமையட்டும்!

I have learned to seek my happiness by limiting my desires, rather than attempting to satisfy them.
- John Stuart Mills


அன்புடன்,
#~வைதேகி~#
Go to the top of the page
 
+Quote Post
Thanimathy
post Jun 25 2006, 06:16 PM
Post #3


Senior
**********

Group: Senior Members
Posts: 19,965
Joined: 3-December 05
From: Vancouver.( CANADA)
Member No.: 396



நன்றி சத்தியா.... thumbs_up.gif

பாவம் சாந்தி. நானாக இருந்தாலும் பெற்றவர்களிடம் என் சோகத்தை சொல்லமாட்டேன். சாந்தியின் அண்ணன் குடித்துக்கொண்டு காலத்தை செலவு செய்தாலும் மிகவும் நல்லவர். குடியைவைத்து மனிதரை எடை போடக்கூடாது என்றும் இந்தக்கதை மறைமுகமாக சொல்லுகிறது. ம்......யாராவது சாந்திக்கு வாழ்க்கை கொடுப்பார்கள் தானே........பொறுத்திருந்து தான் பார்ப்போமே. sad.gif sad.gif sad.gif rolleyes.gif


--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"

Go to the top of the page
 
+Quote Post
சிந்து
post Jun 25 2006, 08:28 PM
Post #4


Senior
**********

Group: Disabled Members
Posts: 4,887
Joined: 3-March 05
From: Norway
Member No.: 229



சாந்தியின் நிலை போல் தான் எனக்கு தெரிந்த ஒரு சம்பவம். மாப்பிள்ளையின் அப்பா அம்மா பெண்ணைப் பார்த்து மகனுக்கு திருமணப் பேச்செல்லாம் முடித்து மாப்பிள்ளையிடம் அனுப்பி வைத்தார்கள். மகனும் அவருக்கு பேசிய பெண்ணோடு தொலை பேசியில் உரையாடி. பின்பு பெண் அவரிடம் வந்தவுடன் விமான நிலையத்தில் பெண்ணைப் பார்த்துவிட்டு பெண் அழகில்லை என்று திரும்பி அனுப்பச் சொல்லி பின்பு அந்தப் பெண்ணை வேறு ஒருவர்கள் அவர்களின் வீட்டுக்கு அழைத்துச் சென்று அவரின் சொந்தக்காரர் வேறு நாட்டில் இருந்தார்கள் அந்த நாட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.

emot-fail.gif emot-fail.gif emot-fail.gif emot-fail.gif emot-fail.gif

This post has been edited by சத்தியா: Jun 25 2006, 09:58 PM


--------------------


¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤நேசமுடன் சிந்து¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
Go to the top of the page
 
+Quote Post
anchu
post Jun 26 2006, 03:12 AM
Post #5


Senior
**********

Group: Disabled Members
Posts: 3,875
Joined: 13-September 05
Member No.: 335



சாந்தி பாவம் தான் . அதுக்கு ஆக அழுது தற்கொலை செய்ய்யாமல் அரவிந் போறாமைப் படக் கூடியதாக வாழ்ந்து காட்டனும் . sad.gif sad.gif sad.gif


--------------------
[img]http://tbn0.google.com/images?q=tbn:pylxtTtP5fAJIM:http://bp3.blogger.com/_OmhqtV2VkQE/RsIvqO6HAWI/AAAAAAAAAvQ/zNgAfZYiPZA/s400/SSHikeSecrets.jpg[/img]
என்றும் மூழ்காத சிப் பிரெண்ட்ஸ் சிப்
Go to the top of the page
 
+Quote Post
anchu
post Jun 26 2006, 04:24 AM
Post #6


Senior
**********

Group: Disabled Members
Posts: 3,875
Joined: 13-September 05
Member No.: 335



இது என் அப்பம்மாவின் கருத்து . யாரை குறை சொல்லியும் பலன் இல்லை . யாருக்கு யார் என்று எழுதி வைத்திருப்பான் கடவுள். நாங்கள் என்ன தலையால் நடந்தாலும் எங்கள் விதிப்படி தான் நடக்குமாம் . அப்பம்மாவையும் யாரோ அரவிந்தன் போல ஏமாத்திட்டாங்கள் போல் இருக்கு tongue_smile.gif

This post has been edited by சத்தியா: Jun 26 2006, 08:57 AM


--------------------
[img]http://tbn0.google.com/images?q=tbn:pylxtTtP5fAJIM:http://bp3.blogger.com/_OmhqtV2VkQE/RsIvqO6HAWI/AAAAAAAAAvQ/zNgAfZYiPZA/s400/SSHikeSecrets.jpg[/img]
என்றும் மூழ்காத சிப் பிரெண்ட்ஸ் சிப்
Go to the top of the page
 
+Quote Post
Thanimathy
post Jun 26 2006, 05:58 AM
Post #7


Senior
**********

Group: Senior Members
Posts: 19,965
Joined: 3-December 05
From: Vancouver.( CANADA)
Member No.: 396



QUOTE (anchu @ Jun 26 2006, 04:24 AM)
இது என் அப்பம்மாவின் கருத்து . யாரை குறை சொல்லியும் பலன் இல்லை . யாருக்கு யார் என்று எழுதி வைத்திருப்பான் கடவுள். நாங்கள் என்ன தலையால் நடந்தாலும் எங்கள் விதிப்படி தான் நடக்குமாம் . அப்பம்மாவையும் யாரோ அரவிந்தன் போல ஏமாத்திட்டாஙகள் போல் இருக்கு tongue_smile.gif

laugh.gif laugh.gif laugh.gif laugh.gif laugh.gif laugh.gif


--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"

Go to the top of the page
 
+Quote Post
வைதேகி
post Jun 26 2006, 07:26 AM
Post #8


Senior
**********

Group: Senior Members
Posts: 1,044
Joined: 8-October 05
From: UK
Member No.: 363



QUOTE (anchu @ Jun 26 2006, 04:24 AM)
இது என் அப்பம்மாவின் கருத்து . யாரை குறை சொல்லியும் பலன் இல்லை . யாருக்கு யார் என்று எழுதி வைத்திருப்பான் கடவுள். நாங்கள் என்ன தலையால் நடந்தாலும் எங்கள் விதிப்படி தான் நடக்குமாம் . அப்பம்மாவையும் யாரோ அரவிந்தன் போல ஏமாத்திட்டாஙகள் போல் இருக்கு tongue_smile.gif

ம்ம் ம்ம் ... laugh.gif laugh.gif laugh.gif tongue_smile.gif

எல்லாம் நடந்துவிட்ட பிறகு என்ன செய்ய? நடந்ததை மாற்ற முடியாதுதானே.. அதுதான் எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்று மனதைச் சமாதானப் படுத்தி வாழ்க்கையைக் கொண்டு செல்ல எம்மவர் அப்படி ஒரு வழக்கத்தைக் வைத்திருக்கிறார்கள்.


--------------------
உங்கள் பொழுது இனிமையானதாக அமையட்டும்!

I have learned to seek my happiness by limiting my desires, rather than attempting to satisfy them.
- John Stuart Mills


அன்புடன்,
#~வைதேகி~#
Go to the top of the page
 
+Quote Post
சிந்து
post Jun 26 2006, 07:33 AM
Post #9


Senior
**********

Group: Disabled Members
Posts: 4,887
Joined: 3-March 05
From: Norway
Member No.: 229



QUOTE (Thanimathy @ Jun 26 2006, 05:58 AM)
QUOTE (anchu @ Jun 26 2006, 04:24 AM)
இது என் அப்பம்மாவின் கருத்து . யாரை குறை சொல்லியும் பலன் இல்லை . யாருக்கு யார் என்று எழுதி வைத்திருப்பான் கடவுள். நாங்கள் என்ன தலையால் நடந்தாலும் எங்கள் விதிப்படி தான் நடக்குமாம் .  அப்பம்மாவையும் யாரோ அரவிந்தன் போல ஏமாத்திட்டாஙகள் போல் இருக்கு   tongue_smile.gif

laugh.gif laugh.gif laugh.gif laugh.gif laugh.gif laugh.gif

ohmy.gif ohmy.gif ohmy.gif ohmy.gif ohmy.gif ohmy.gif

laugh.gif laugh.gif laugh.gif laugh.gif laugh.gif laugh.gif


--------------------


¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤நேசமுடன் சிந்து¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Jun 26 2006, 08:50 AM
Post #10


Senior
**********

Group: Moderators
Posts: 25,084
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



QUOTE (anchu @ Jun 26 2006, 04:24 AM)
இது என் அப்பம்மாவின் கருத்து . யாரை குறை சொல்லியும் பலன் இல்லை . யாருக்கு யார் என்று எழுதி வைத்திருப்பான் கடவுள். நாங்கள் என்ன தலையால் நடந்தாலும் எங்கள் விதிப்படி தான் நடக்குமாம் .  அப்பம்மாவையும் யாரோ அரவிந்தன் போல ஏமாத்திட்டாங்கள் போல் இருக்கு   tongue_smile.gif


tongue_smile.gif tongue_smile.gif tongue_smile.gif tongue_smile.gif tongue_smile.gif


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
roy
post Jun 26 2006, 02:35 PM
Post #11


Senior
**********

Group: Disabled Members
Posts: 1,979
Joined: 19-February 04
Member No.: 57



QUOTE (anchu @ Jun 26 2006, 04:24 AM)
இது என் அப்பம்மாவின் கருத்து . யாரை குறை சொல்லியும் பலன் இல்லை . யாருக்கு யார் என்று எழுதி வைத்திருப்பான் கடவுள். நாங்கள் என்ன தலையால் நடந்தாலும் எங்கள் விதிப்படி தான் நடக்குமாம் . அப்பம்மாவையும் யாரோ அரவிந்தன் போல ஏமாத்திட்டாங்கள் போல் இருக்கு tongue_smile.gif

ohmy.gif ohmy.gif laugh.gif


--------------------
something is better than nothing
Go to the top of the page
 
+Quote Post
roy
post Jun 26 2006, 02:37 PM
Post #12


Senior
**********

Group: Disabled Members
Posts: 1,979
Joined: 19-February 04
Member No.: 57



பாராட்டுக்கள் சத்தியா thumbs_up.gif 41.gif


--------------------
something is better than nothing
Go to the top of the page
 
+Quote Post
வைதேகி
post Jun 27 2006, 12:09 PM
Post #13


Senior
**********

Group: Senior Members
Posts: 1,044
Joined: 8-October 05
From: UK
Member No.: 363



சத்தியா எங்கே போனீர்கள்??? 72_72.gif 72_72.gif


--------------------
உங்கள் பொழுது இனிமையானதாக அமையட்டும்!

I have learned to seek my happiness by limiting my desires, rather than attempting to satisfy them.
- John Stuart Mills


அன்புடன்,
#~வைதேகி~#
Go to the top of the page
 
+Quote Post
anchu
post Jun 27 2006, 12:12 PM
Post #14


Senior
**********

Group: Disabled Members
Posts: 3,875
Joined: 13-September 05
Member No.: 335



QUOTE (silent @ Jun 27 2006, 12:09 PM)
சத்தியா எங்கே போனீர்கள்??? 72_72.gif  72_72.gif

ஏன் சையிலன்ற் ஏதோ எழுதப் போறீங்கள் திருத்தனுமா? tongue_smile.gif

This post has been edited by சத்தியா: Jun 27 2006, 01:19 PM


--------------------
[img]http://tbn0.google.com/images?q=tbn:pylxtTtP5fAJIM:http://bp3.blogger.com/_OmhqtV2VkQE/RsIvqO6HAWI/AAAAAAAAAvQ/zNgAfZYiPZA/s400/SSHikeSecrets.jpg[/img]
என்றும் மூழ்காத சிப் பிரெண்ட்ஸ் சிப்
Go to the top of the page
 
+Quote Post
வைதேகி
post Jun 27 2006, 12:23 PM
Post #15


Senior
**********

Group: Senior Members
Posts: 1,044
Joined: 8-October 05
From: UK
Member No.: 363



பக்கதில் இருந்தால் உங்களுக்கு நல்ல அடிதான்!!! tongue_smile.gif
சத்தியா நான் கேட்காமலே திருத்துகின்றா. biggrin.gif .. அதனாலே நான் கரைச்சல் பண்ணத் தேவையில்லை (உங்கள் மாதிரி- tongue_smile.gif சும்மாதான் அஞ்சு tongue_smile.gif !!!)


--------------------
உங்கள் பொழுது இனிமையானதாக அமையட்டும்!

I have learned to seek my happiness by limiting my desires, rather than attempting to satisfy them.
- John Stuart Mills


அன்புடன்,
#~வைதேகி~#
Go to the top of the page
 
+Quote Post
anchu
post Jun 27 2006, 12:41 PM
Post #16


Senior
**********

Group: Disabled Members
Posts: 3,875
Joined: 13-September 05
Member No.: 335



QUOTE (silent @ Jun 27 2006, 12:23 PM)
பக்கதில் இருந்தால் உங்களுக்கு நல்ல அடிதான்!!!  tongue_smile.gif
சத்தியா நான் கேட்காமலே திருத்துகின்றா. biggrin.gif .. அதனாலே நான் கரைச்சல் பண்ணத் தேவையில்லை (உங்கள் மாதிரி- tongue_smile.gif  சும்மாதான் அஞ்சு tongue_smile.gif !!!)

சையிலன்ற் ஒரு பெண்ணை பார்த்து அடிக்க போறான் என்று வாயால் சொன்னார் என்று சொன்னாலே குறைந்தது 3 நாட்கள் ஜெயில் .அதுகும் நீங்கள் இப்படி எழுதி இருக்கிறீங்கள் சொன்னால் ஆயுள் காலம் முழுக்க அங்கே தான் இருக்கனும் . எங்கே இருந்தாலும் உங்களுக்கு என்ன? போகும் போது ஒரு லாப் ரொப் கொண்டு போங்கோ சட் பண்ணணும் . tongue_smile.gif emot-dance.gif biggrin.gif

This post has been edited by சத்தியா: Jun 28 2006, 11:27 AM


--------------------
[img]http://tbn0.google.com/images?q=tbn:pylxtTtP5fAJIM:http://bp3.blogger.com/_OmhqtV2VkQE/RsIvqO6HAWI/AAAAAAAAAvQ/zNgAfZYiPZA/s400/SSHikeSecrets.jpg[/img]
என்றும் மூழ்காத சிப் பிரெண்ட்ஸ் சிப்
Go to the top of the page
 
+Quote Post
வைதேகி
post Jun 27 2006, 12:51 PM
Post #17


Senior
**********

Group: Senior Members
Posts: 1,044
Joined: 8-October 05
From: UK
Member No.: 363



QUOTE
சையிலன்ற் ஒரு பெண்ணை பார்த்து அடிக்க போறான் என்று வாயால் சொன்னார் என்று சொன்னாலே குறைந்தது 3 நாட்கள் ஜெயில் .அதுகும் நீங்கள் இப்படி எழுதி இருக்கிறீங்கள் சொன்னால் ஆயுல் காலம் முழுக்க அங்கே தான் இருக்கனும் . எங்கே இருந்தாலும் உங்களுக்கு என்ன போகும் போது ஒரு லாப் ரொப் கொண்டு போங்கோ சட் பண்னணும் .   tongue_smile.gif  emot-dance.gif  biggrin.gif

21.gif 21.gif 21.gif 21.gif

உங்கடை அம்மா எப்படி உங்களோட சமாளிக்கிறா அஞ்சு??? tongue_smile.gif tongue_smile.gif


--------------------
உங்கள் பொழுது இனிமையானதாக அமையட்டும்!

I have learned to seek my happiness by limiting my desires, rather than attempting to satisfy them.
- John Stuart Mills


அன்புடன்,
#~வைதேகி~#
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Jun 27 2006, 01:30 PM
Post #18


Senior
**********

Group: Moderators
Posts: 25,084
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



QUOTE (silent @ Jun 27 2006, 12:09 PM)
சத்தியா எங்கே போனீர்கள்??? 72_72.gif  72_72.gif


நான் எங்கேயும் போகவில்லை சைலன்ஸ். இங்கேதான் இருக்கின்றேன்.
எனது கொம்பியூட்டரில் கொஞ்சம் பிரச்சனை. அதனால்தான் தாமதம்.
இன்று அல்லது நாளை எப்படியும் அடுத்த அங்கத்தைத் தந்து விடுவேன்.
அதுவரை கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்.


sad.gif sad.gif sad.gif sad.gif sad.gif


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
anchu
post Jun 27 2006, 04:02 PM
Post #19


Senior
**********

Group: Disabled Members
Posts: 3,875
Joined: 13-September 05
Member No.: 335



QUOTE (சத்த @ Jun 27 2006, 01:30 PM)
QUOTE (silent @ Jun 27 2006, 12:09 PM)
சத்தியா எங்கே போனீர்கள்??? 72_72.gif  72_72.gif


நான் எங்கேயும் போகவில்லை சைலன்ஸ். இங்கேதான் இருக்கின்றேன்.
எனது கொம்பியூட்டரில் கொஞ்சம் பிரச்சனை. அதனால்தான் தாமதம்.
இன்று அல்லது நாளை எப்படியும் அடுத்த அங்கத்தைத் தந்து விடுவேன்.
அதுவரை கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்.


sad.gif sad.gif sad.gif sad.gif sad.gif

சத்தியா இதுக்கு போய் கவலைப் படக் கூடா நாங்கள் பொறுமையாக இருக்கிறம் . நீங்கள் வாங்கோ . ( சைலன்ஸ் நேற்று சொன்னீங்கள் ஏதோ ஒரு பகுதியில் அஞ்சு நீங்கள் இப்போ சத்தியாக்கு வேலை கொடுக்காமல் சரியா எழுதுகிறீங்கள் என்று. இப்போ பதில் வந்திருக்கும் தானே ) tongue_smile.gif அவா நான் எழுதியதை பார்த்து திருத்த கொம்பியூற்றர் வேலை செய்யவில்லை biggrin.gif சரி என்ன சத்தியா அஞ்சு சொல்லுறது?

This post has been edited by சத்தியா: Jun 27 2006, 04:07 PM


--------------------
[img]http://tbn0.google.com/images?q=tbn:pylxtTtP5fAJIM:http://bp3.blogger.com/_OmhqtV2VkQE/RsIvqO6HAWI/AAAAAAAAAvQ/zNgAfZYiPZA/s400/SSHikeSecrets.jpg[/img]
என்றும் மூழ்காத சிப் பிரெண்ட்ஸ் சிப்
Go to the top of the page
 
+Quote Post
வைதேகி
post Jun 27 2006, 05:10 PM
Post #20


Senior
**********

Group: Senior Members
Posts: 1,044
Joined: 8-October 05
From: UK
Member No.: 363



QUOTE (சத்த @ Jun 27 2006, 01:30 PM)
QUOTE (silent @ Jun 27 2006, 12:09 PM)
சத்தியா எங்கே போனீர்கள்??? 72_72.gif  72_72.gif


நான் எங்கேயும் போகவில்லை சைலன்ஸ். இங்கேதான் இருக்கின்றேன்.
எனது கொம்பியூட்டரில் கொஞ்சம் பிரச்சனை. அதனால்தான் தாமதம்.
இன்று அல்லது நாளை எப்படியும் அடுத்த அங்கத்தைத் தந்து விடுவேன்.
அதுவரை கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்.


sad.gif sad.gif sad.gif sad.gif sad.gif

சத்தியா பரவாயில்லை... பொறுமையாகவே வாங்கோ. நீங்கள் ஒவ்வொரு நாளும் வந்து ஏதாவது கொமென்ட் எழுதுவீர்கள் திருத்துவீர்கள் ஆனால் நேற்று இன்று அப்படி நடக்கவில்லை அதுதான் என்ன நடந்தது என்று கேட்டேன். குறை நினைக்க வேண்டாம். sad.gif sad.gif 72_72.gif


--------------------
உங்கள் பொழுது இனிமையானதாக அமையட்டும்!

I have learned to seek my happiness by limiting my desires, rather than attempting to satisfy them.
- John Stuart Mills


அன்புடன்,
#~வைதேகி~#
Go to the top of the page
 
+Quote Post

2 Pages V   1 2 >
Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



RSS Lo-Fi Version Time is now: 9th February 2010 - 02:38 PM