விதி வரைந்த கோலங்கள்!, அங்கம் - 6 |
![]() ![]() |
விதி வரைந்த கோலங்கள்!, அங்கம் - 6 |
Jun 27 2006, 05:36 PM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
விதி வரைந்த கோலங்கள் ! - அங்கம் - 6 தொடர்ந்து அழுகையும், சோகமுமாய் கரைந்த காலங் களிலிருந்து மீண்டுவிடும் எண்ணத்தோடு… மனதில் ஓர் திடத்தை வரவழைத்துக் கொண்டாள் சாந்தி. அண்ணனின் உதவியுடன் ஓர் வேலை ஒன்றையும் தேடிக் கொண்டாள். காலங்கள் காற்றாய் கரைய… மாதங்கள் சில கழிந்தன. தன் உழைப்போடு தனக்கான ஓர் றூமையும் தேடி எடுத்துக் கொண்டாள். ம்… இப்போது சாந்தி தன் சொந்தக் காலில் நிற்கத் தொடங்கினாள். இனிமேலும் தனக்கு நடந்த பிரச்சனைகளை தன் பெற்றோருக்குச் சொல்லாமல் மறைத்து வைத்திருப்பது நல்லதல்ல என நினைத்து… நடந்தவற்றை எல்லாம் விபரமாக மடலில் எழுதி அனுப்பி வைத்தாள். அங்கிருந்து வந்த பதில் கடிதம் அவள் நெஞ்சை நெரு ஞ்சி முள்ளாகக் குத்தி… அவளை மேலும் வேதனைக் கடலில் ஆழ்த்தியது. சாந்தியின் கடிதத்தை வாசித்ததிலிருந்து அவளின் அம்மா நாளும் அழுதழுது…”தமது பிள்ளையின் வாழ் வைத் தாமே பாழாக்கி விட்டோமே”… என வேதனை யில் மூழ்கி… ஓர் நாள் அம்மா மயங்கி விழுந்ததா கவும், பின் அம்மாவை மருத்துவமனையில் அனும தித்து இருந்ததாகவும், அதன் பின்னர் அம்மா பேச்சு மூச்சின்றி பித்துப் பிடித்தது போல் அப்படியே படுக்கை யில் விழுந்து விட்டதாகவும்… அவளின் தந்தையார் வேதனையோடு எழுதி இருந்தார். கடிதத்தை வாசித்து முடித்த போது அவளுக்கு நெஞ்சு அடைப்பது போலிருந்தது. குழறிக் குழறி அழுதாள்… போன ஜென்மத்தில் நான் ஏதோ பாவம் செய்திருக் கிறேன் போல் இருக்கிறது. அதுதான் எப்ப பார்த்தாலும் என்னைத் தொடர்ந்து வேதனைகள் விரட்டி வருகி றதே… துரத்தி வரும் கஷ்டத்தையும், சோகத்தையும் பார்த்தால் வாழ்க்கையே வெறுத்துப் போகிறதே. என்னால் எதையும் தாங்கிக் கொள்ள முடியவில் லையே… இனிமேலும் எதற்காக நான் உயிரோடு வாழ வேண்டும்?… என்று வெறுப்பும் ஏற்பட்டது. சாந்தி தனிமையில் இருந்து தேம்பித் தேம்பி அழுதாள். உடனடியாக தாயைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது அவளுக்கு… ஆனாலும் அதுவெல்லாம் நினைத்தவுடன் நடக்கக் கூடிய காரியமா என்ன? ஒரு கணம் தன் பெற்றோரையும், தன் தங்கைமா ரையும் நினைத்துப் பார்த்தாள். அவர்களுக்கு தன்னை விட்டால் இனி யார் இருக்கிறார்கள்?… அத்தோடு அவள் வரும் போது, அவர்களுக்கென இருந்த ஒரு வீட்டையும், தோட்டக் காணியையும் அடகு வைத்து அப்பா காசு கொடுத்ததும்…அவற்றை எல்லாம் மீட்டு எடுக்கும் பொறுப்பும் இப்போது தன்னிடமே உள்ளது எனவும் எண்ணிக் கொண்டவளும்… தன் மனதைக் கல்லாக்கிக் கொண்டு, தொடர்ந்து வாழ்க்கையோடு போராடத் தொடங்கினாள். போராட்டம்… போராட்டம்… நாளும் போராட்டம்… போராடிப் போராடி தன் பொறுப்புக்களை எல்லாம் முடித்த வேளையில்… ஓர் நாள் அவளின் தோழி… தனக்குத் தெரிந்த ஒருவர் இருப்பதாகவும்… அவரைத் திருமணம் செய்து கொள் ளும் படியும், சாந்தியிடம் கேட்டாள். ஆனால் சாந்தி அதனை மறுத்து… தனக்கு இனிமேல் திருமணமே வேண்டாம் என மறுத்தாள். “நான் ஒரு முறை பட்டது போதும்… இனிமேல் கல்யா ணம், காட்சி எதுவுமே எனக்கு வேண்டாம்… வாழ்க்கை பூராகவும் இப்படியே தனியே வாழ்ந்து விட்டுப் போகின் றேன்”… எனச் சொல்லி மறுத்த போதும்… அவள் தோழியும் விடவில்லை. அவள் அண்ணனும் விடவில்லை. “இப்படியே தனியே இருந்து என்ன செய்யப் போகிறாய்? வாழ்க்கையில் உனக் கென்றொரு துணை வேண் டாமா? இப்படியே எத்தனை காலத்துக்குத்தான் உன் னால் தனியே வாழ முடியும்? நாளை உனக்கு ஒரு வருத்தம் துன்பம் என்றாலும் சாய்ந்து கொள்ள ஓர் தோள் வேண்டாமா?”… எனத் தொடர்ந்து அவளுக்குப் புத்தி சொல்லி… ஒருவாறு சாந்தியை திருமணத்துக்கு சம்மதிக்க வைத்த போது… தானும் ஒரு தடவை தேவ னுடன் தனிமையில் கதைத்து முடிவைச் சொல்வ தாகச் சொன்னாள். பின் ஓர் நாள் சாந்தி தேவனைச் சந்தித்து நடந்த சம்பவங்கள் யாவற்றையும் நேரடியாகக் கூறினாள்… அதுவெல்லாம் தனக்குப் பிரச்சனை இல்லை என்றும்… தான் அமைதியான ஓர் பெண்ணை மட்டுமே எதிர்பார்ப் பதாகவும் தேவன் கூறி… தானும் ஏற்கனவே திரும ணம் முடித்து மனைவியை இழந்து இருப்பதாகவும் கூறினான். “நிதமும் மணிக்கணக்கில் வேலை பார்த்து விட்டு இரவு படுக்கைக்குப் போகும் போது… என்னத்துக்கு இந்த வாழ்க்கை என்று வெறுத்துப் போகிறது. எனக்காக அழவும், எனக்காகச் சிரிக்கவும் யாராது ஒரு ஜீவன் இருந்தால் நானும் உயிரோட இருக்கிறதுக்கு ஒரு அர்த்தம் கிடைக்குமில்லையா? அப்பிடி ஒரு ஜீவனா உங்களால இருக்க முடியுமா தேவன்?… என் மனம் திறந்து நானும் ஒரு நாலு வார்த்தை உங்களிடம் பேசி நிம்மதியா வாழ முடியுமா?”… “ம்… எனக்கு இதுதான் வேணும். உங்களுக்கும் இதில் உடன்பாடு இருந்தால் என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்”.. என தன் மனதைத் திறந்து எல்லாம் சொல்லி முடித்தாள் சாந்தி. தேவனுக்கும் சாந்தியைப் பிடித்துக் கொண்டது. பின் ஒரு நல்ல நாளில்… அமைதியான முறையில்… கோயி லில் வைத்து தாலியைக் கட்டி கொண்டு… குடும்ப வாழ்க்கைக்குள் இருவரும் காலடியை எடுத்து வைத்தார்கள். குடுப்பச் சக்கரம் எந்த வித சிக்கலும் இன்றி இனிதே தொடர்ந்தது. இருவரின் இனிய இல்லற வாழ்வின் அடையாளமாய் சாந்தி தாய்மையடைந்தாள். ஆசைக்கும், ஆஸ்திக்குமாய் முதலில் ஓர் மகனும், அதன் பின்னர் ஓர் மகளும் பிறந்து சந்தோசமாய் குடும்பம் வாழ்ந்த வேளை…. அன்றும் வழமை போலவே… காலையில் எழுந்து வேலைக்குப் போனான் தேவன். மதிய வேளை… தேவன் வேலை செய்யும் இடத்திலிருந்து சாந்திக்கு ஓர் தொலைபேசி அழைப்பு வந்தது. வேலை செய்து கொண்டு நிற்கும் போது… திடீரெனத் தேவன் மயங்கி விழுந்து விட்டதாகவும், மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. “கடவுளே!… இது என்ன சோதனை?… என் கணவருக்கு எதுவுமே ஆகிவிடக் கூடாது”… என ஆண்டவனை மன்றாடியபடி மருத்துவமனையை நோக்கி ஓடினாள். சாந்தி. அங்கே சென்று மருத்துவமனை வாசலில் … அவசர அவசரமாய்… தேவனின் பெயரைச் சொல்லி விசாரித்த போது… அங்கே அவர்கள் கொடுத்த றூம் நம்பரைத் தேடி ஓடினாள் சாந்தி… ஓடிச் சென்று அந்த றூம் கதவைத் தட்டி உள்ளே சென்ற போது… உள்ளே நின்ற டாக்ரர்…. யார் என வினாவ… “நான்தான் தேவனின் மனைவி”… எனச் சொல்லி… தேவனுக்கு என்ன நடந்தது விசாரித்த போது… தேவனுக்கு வந்தது காட்டரைக் எனவும்… மருத்துவ மனைக்கு கொண்டு வரும் வழியிலேயே அவன் இறந்து விட்டதால்… அவனைக் காப்பாற்ற முடியாமல் போய் விட்டதாகவும் டாக்ரர் கூறியதைக் கேட்டதும் …. “ஐயோ… கடவுளே!…. என கதறியவாறு…. சுவரில் தன் தலையை மோதி மோதிக் கதறினாள் சாந்தி. முடியவில்லை… அவளால் அந்த இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கதறினாள்… கதறினாள்… தன்னால் ஆன மட்டும் கத்திக் கத்திக் கதறினாள். யாரின் தேற்றல்களும் அவள் காதில் விழவில்லை. அழுதாள்… அழுதாள்… அவளால் ஆனமட்டும் கத்திக் கத்தி அழுதாள். தொடர்ந்து இடிக்கு மேல் இடி என்றால் அவள் எப்படித்தான் தாங்கிக் கொள்வாள்? சாந்தி என்ற பெயரை அவள் வைத்திருந்த போதும்… இது வரை அவள் அமைதியாய் வாழ்ந்தாளா? தன் மனதின் சோகம் முடியும் மட்டும் கதறி அழுதழுது ஓரளவு ஓய்ந்த போது… அவளின் தோள்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுத அவளின் இரண்டு செல்வங் களின் அழுகையையும்… அவர்களின் கோலத்தையும கண்ட போது… பெற்ற அந்தத் தாயுள்ளம் ஓர் கணம் துடித்தது. தன் பிள்ளைகள் இரண்டையும் நெஞ்சோடு அணைத்தவாறு அமைதியானாள். தேவனின் தகனக்கிரியைகள் யாவும் முடிந்தன. மூன்று வருடம் அமைதியான வாழ்வைக் கொடுத்த அந்த அன்பு ஜீவனைக் கண்ணீரோடு வழியனுப்பி வைத்தாள். அழுதழுது… இனி அழுவதற்குக் கூட திராணியற்ற வளாய் துவண்டு போனவளின் மனதில் எண்ண அலைகள் உக்கிரம் கொண்டு திமிறின. சற்று நேரத்துக்கு முன் மனமொடிந்து வீழ்ந்து போயி ருந்த சாந்தி இப்போ திடம் கொண்டு எழுந்தாள். இனி யும் தான் உயிரோடு வாழ வேண்டும் என முடிவெடுத்தாள். ம்… வாழ்கிறாள் இப்போதும் சாந்தி உயிரோடு வாழ்கி றாள். அது அவளுக்காக அல்ல. அவள் பெற்றெடுத்த இரண்டு அன்புச் செல்வங்களுக்காக! முற்றும்! -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jun 27 2006, 06:04 PM
Post
#2
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,044 Joined: 8-October 05 From: UK Member No.: 363 |
நன்றி சத்தியா. நீங்கள் இதனைச் சொந்த அனுபவத்தின் மூலம் எழுதியிருக்கிறீர்கள் போலத் தெரிகிறது. எழுதும்போது மிகவும் கவலையாக இருந்திருக்கும்.
![]() சாந்தி இனியாவது சாந்திபெற வேண்டுகிறேன். -------------------- உங்கள் பொழுது இனிமையானதாக அமையட்டும்!
I have learned to seek my happiness by limiting my desires, rather than attempting to satisfy them. - John Stuart Mills அன்புடன், #~வைதேகி~# |
|
|
|
Jun 27 2006, 06:17 PM
Post
#3
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
முற்றும் போட்டு விட்டேன். இப்போது உங்களிடமிருந்து நான் விடைபெறும் நேரமிது. விடைபெறு முன்னர் உங்களோடு சில வார்த்தைகள்... சிறுகதை ஒன்றை எழுதுமாறு நிலா கேட்ட போது... சிறுகதை எழுதுவதில் அவ்வளவு ஆர்வம் இல்லாத போதும்... நிலாவின் வார்த்தையைத் தட்ட முடியாமல் சிறுகதை ஒன்றை எழுதத் தொடங்கி... அது தொடர்கதையாய் தொங்கிக் கொண்டு போய் விட்டது. ம்... கதை கதையாக... சுவாரஸ்யமாக இருந்ததோ எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் சில இடர்களுக்கு மத்தியில் என்னால் முடிந்தவரை முயற்சி செய்து இந்தக் கதையை எழுதி முடித்தேன். நீண்ட இடைவெளியின் பின்னர் ஓர் கதையை எழுத வைத்த நிலாவிற்கு என் மனமார்ந்த நன்றிகள். அத்தோடு ஓடி ஓடி கதையை வாசித்து... உங்கள் மனதில் எழுந்த ஆதங்கங்களையும் உடனுக்குடன் எழுதிய அன்பு உறவுகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைக் கூறி உங்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்கின்றேன். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jun 27 2006, 07:09 PM
Post
#4
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,044 Joined: 8-October 05 From: UK Member No.: 363 |
QUOTE அத்தோடு ஓடி ஓடி கதையை வாசித்து... உங்கள் மனதில் எழுந்த ஆதங்கங் களையும் உடனுக்குடன் எழுதிய அன்பு உறவுகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைக் கூறி உங்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்கின்றேன். உங்கள் படைப்புக்கு நன்றி. எனக்குக் கொஞ்ச வேலை இருக்கிறபடியால் நிலாப் பக்கம் வருவது கொஞ்சம் தள்ளிப் போட்டேன். ஆனால் உங்கள் கதை ஆர்வம் தரக்கூடியதாக இருந்ததால் படிக்காமல் இருக்க முடியவில்லை. நன்றி This post has been edited by சத்தியா: Jun 28 2006, 11:22 AM -------------------- உங்கள் பொழுது இனிமையானதாக அமையட்டும்!
I have learned to seek my happiness by limiting my desires, rather than attempting to satisfy them. - John Stuart Mills அன்புடன், #~வைதேகி~# |
|
|
|
Jun 27 2006, 09:20 PM
Post
#5
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 3,875 Joined: 13-September 05 Member No.: 335 |
கனக்க கவலையா இருக்கு. பாவம் சாந்தி 2 குழந்தைகளையும் வைத்து எவ்வளவு கஸ்ரப்படப் போறா? பாவம்.
This post has been edited by சத்தியா: Jun 28 2006, 11:23 AM -------------------- [img]http://tbn0.google.com/images?q=tbn:pylxtTtP5fAJIM:http://bp3.blogger.com/_OmhqtV2VkQE/RsIvqO6HAWI/AAAAAAAAAvQ/zNgAfZYiPZA/s400/SSHikeSecrets.jpg[/img]
என்றும் மூழ்காத சிப் பிரெண்ட்ஸ் சிப் |
|
|
|
Jun 28 2006, 04:10 PM
Post
#6
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 4,887 Joined: 3-March 05 From: Norway Member No.: 229 |
நல்லதோர் கற்பனை ம்....................... மீண்டும் சிறுகதை சீ
-------------------- ![]() ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤நேசமுடன் சிந்து¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤ |
|
|
|
Jun 29 2006, 05:33 AM
Post
#7
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 19,965 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
நன்றி சத்தியா.....
நாம் நமக்குள் இருக்கும் திறமைகளை மூட்டை கட்டி வைத்துவிடுகிறோம். அதனை தெரிந்து கொண்டு வெளிக்கொண்டு வரும் திறமை படைத்தவர் நிலா. அதனால இந்தக்கதை வருவதற்கு காரணமாக இருந்த நிலாவிற்கும் நன்றிகள். இப்போது நாம் காண்பதும் கேட்பதும், படிப்பதும்...கதையாக வருவதும் வாழ்பதும்....எல்லாமே உண்மைச்சம்பவங்களின் அடிப்படை தான். அந்த பிரதிபலிப்பே உங்கள் கதையிலும் வந்துள்ளது. ஆனாலும் அதனை எழுதும் திறமை எல்லோருக்கும் வருவதில்லை. உங்கள் கதையில் நீங்கள் எழுதியிருக்கும் விதம் எல்லோரையும் மிகவும் கவர்ந்திருக்கிறது. தொடருங்கள் சத்தியா. நேரம் கிடைக்கும் போது தொடருங்கள். சிறு கதைகள் மட்டுமே விரும்பி வாசிப்பேன். இதனாலத்தான் ஒரு நாடகமும் கூட பார்க்கமாட்டேன். ம்......நல்ல கதை . வெளிநாடுகளில் பல சாந்திகள்......மனச்சாந்தியில்லாமல். -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Jun 29 2006, 11:55 AM
Post
#8
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 3,875 Joined: 13-September 05 Member No.: 335 |
இது உண்மைக் கதை இல்லையா நான் நினைத்தேன் உண்மை கதை என்று
-------------------- [img]http://tbn0.google.com/images?q=tbn:pylxtTtP5fAJIM:http://bp3.blogger.com/_OmhqtV2VkQE/RsIvqO6HAWI/AAAAAAAAAvQ/zNgAfZYiPZA/s400/SSHikeSecrets.jpg[/img]
என்றும் மூழ்காத சிப் பிரெண்ட்ஸ் சிப் |
|
|
|
Jun 29 2006, 11:58 AM
Post
#9
|
|
|
Moving Fast ![]() ![]() ![]() ![]() ![]() Group: Members Posts: 68 Joined: 9-June 06 Member No.: 548 |
QUOTE (Thanimathy @ Jun 29 2006, 05:33 AM) நன்றி சத்தியா..... நாம் நமக்குள் இருக்கும் திறமைகளை மூட்டை கட்டி வைத்துவிடுகிறோம். அதனை தெரிந்து கொண்டு வெளிக்கொண்டு வரும் திறமை படைத்தவர் நிலா. அதனால இந்தக்கதை வருவதற்கு காரணமாக இருந்த நிலாவிற்கும் நன்றிகள். இப்போது நாம் காண்பதும் கேட்பதும், படிப்பதும்...கதையாக வருவதும் வாழ்பதும்....எல்லாமே உண்மைச்சம்பவங்களின் அடிப்படை தான். அந்த பிரதிபலிப்பே உங்கள் கதையிலும் வந்துள்ளது. ஆனாலும் அதனை எழுதும் திறமை எல்லோருக்கும் வருவதில்லை. உங்கள் கதையில் நீங்கள் எழுதியிருக்கும் விதம் எல்லோரையும் மிகவும் கவர்ந்திருக்கிறது. தொடருங்கள் சத்தியா. நேரம் கிடைக்கும் போது தொடருங்கள். சிறு கதைகள் மட்டுமே விரும்பி வாசிப்பேன். இதனாலத்தான் ஒரு நாடகமும் கூட பார்க்கமாட்டேன். ம்......நல்ல கதை . வெளிநாடுகளில் பல சாந்திகள்......மனச்சாந்தியில்லாமல். தனிமதி வெளி நாட்டில் வாழும் சாந்தி மட்டும் அல்ல உள் நாட்டிலேயும் நிறைய சாந்தி சாந்தர்கள் இப்படி இருக்கிறார்கள்........ இது அவர்களுக்கும் பொருந்தும்.... நன்றி சத்தியா........ |
|
|
|
Jun 29 2006, 01:10 PM
Post
#10
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 19,965 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
[quote=Balu,Jun 29 2006, 11:58 AM] ம்......நல்ல கதை . வெளிநாடுகளில் பல சாந்திகள்......மனச்சாந்தியில்லாமல்.
தனிமதி வெளி நாட்டில் வாழும் சாந்தி மட்டும் அல்ல உள் நாட்டிலேயும் நிறைய சாந்தி சாந்தர்கள் இப்படி இருக்கிறார்கள்........ இது அவர்களுக்கும் பொருந்தும்.... நன்றி சத்தியா........ [/quote] [B]பாலு இந்தக்கதைக்கு தான் நான் அப்படி எழுதினேன். உள் நாட்டிலும் அன்றாடம் நாம் காண்பது தானே.......... -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Jun 30 2006, 03:50 AM
Post
#11
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 4,937 Joined: 5-September 05 From: Markham (Toronto )canada Member No.: 329 |
நன்றி சத்தியா
இது உண்மைக் கதையா ஆனால் போட்டோ மட்டும் பார்த்து நிச்சயமான திருமணங்களில் இதுபோன்ற பிரச்சனைகள் நடந்திருக்கின்றன. சில பெண்கள் போட்டோஜனிக்காக இருப்பார்கள் அதுமட்டுமல்லாது fuji filmல் படம் எடுக்கும்போது இருப்பதை விட நல்ல நிறமாகவும் காட்டும். இதைப்பார்க்கும் ஆண்கள் அதேபோலவே எதிர்பார்த்திருப்பார்கள்.அதனால் பெண்களைப்போல ஆண்களால் உடனடியாகத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை.அதுமட்டுமல்லாது பெண்ணின் அழகு பற்றி மற்றவரிடம் விசாரிக்கும் போது அவர்கள் கொஞ்சம் கூடுதலாக புகழ்வதுண்டு.இது கூட அந்த ஆணுக்கு கூடுதலான எதிர்பார்ப்பை உருவாக்கிவிடுகிறது.நான் யாராவது போட்டோ பார்த்து திருமணம் செய்பவர்களிடம் கூறுவதுண்டு போட்டோவைப்பார்த்து கூடுதல் எதிர்பார்ப்பு வைக்கவேண்டாம் சிலர் போட்டோவில் நேரில் பார்ப்பதை விட அழகாக இருப்பார்கள்.சிலர் நேரில் போட்டோவைவிட அழகாக இருப்பார்கள் அதனால் எதையும் ஏற்கும் மனப்பக்குவத்துடன் பெண்ணைப் பாருங்கள் என்று This post has been edited by Suganthe: Jun 30 2006, 03:58 AM -------------------- உன்னையே நீ உணர்
|
|
|
|
Jun 30 2006, 04:29 AM
Post
#12
|
|
|
Moving Fast ![]() ![]() ![]() ![]() ![]() Group: Members Posts: 68 Joined: 9-June 06 Member No.: 548 |
QUOTE (Suganthe @ Jun 30 2006, 03:50 AM) நன்றி சத்தியா இது உண்மைக் கதையா ஆனால் போட்டோ மட்டும் பார்த்து நிச்சயமான திருமணங்களில் இதுபோன்ற பிரச்சனைகள் நடந்திருக்கின்றன. சில பெண்கள் போட்டோஜனிக்காக இருப்பார்கள் அதுமட்டுமல்லாது fuji filmல் படம் எடுக்கும்போது இருப்பதை விட நல்ல நிறமாகவும் காட்டும். இதைப்பார்க்கும் ஆண்கள் அதேபோலவே எதிர்பார்த்திருப்பார்கள்.அதனால் பெண்களைப்போல ஆண்களால் உடனடியாகத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை.அதுமட்டுமல்லாது பெண்ணின் அழகு பற்றி மற்றவரிடம் விசாரிக்கும் போது அவர்கள் கொஞ்சம் கூடுதலாக புகழ்வதுண்டு.இது கூட அந்த ஆணுக்கு கூடுதலான எதிர்பார்ப்பை உருவாக்கிவிடுகிறது.நான் யாராவது போட்டோ பார்த்து திருமணம் செய்பவர்களிடம் கூறுவதுண்டு போட்டோவைப்பார்த்து கூடுதல் எதிர்பார்ப்பு வைக்கவேண்டாம் சிலர் போட்டோவில் நேரில் பார்ப்பதை விட அழகாக இருப்பார்கள்.சிலர் நேரில் போட்டோவைவிட அழகாக இருப்பார்கள் அதனால் எதையும் ஏற்கும் மனப்பக்குவத்துடன் பெண்ணைப் பாருங்கள் என்று 100 % உண்மைய சொன்னீங்க சுகந்தி............. |
|
|
|
Jun 30 2006, 01:25 PM
Post
#13
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
கதையில் இடம்பெற்ற பெயர்கள் யாவும் கற்பனையாக இருந்தாலும் ... ம்... உங்களோடு வலம் வந்த " விதி வரைந்த கோலங்கள் ! "... இந்தக் கதையின் கரு ஓர் உண்மைச் சம்பவத்தினைச் சுமந்தே நிற்கிறது. -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jul 1 2006, 01:45 AM
Post
#14
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 19,965 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
நன்றி சத்தியா
-------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Jul 1 2006, 10:20 PM
Post
#15
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (Thanimathy @ Jul 1 2006, 01:45 AM) நன்றி சத்தியா நன்றி கிடக்கட்டும் தனிமதி... உங்கள் சிறுகதை எப்போது வரும்? -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jul 3 2006, 02:42 PM
Post
#16
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 19,965 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
QUOTE (சத்த @ Jul 1 2006, 10:20 PM) QUOTE (Thanimathy @ Jul 1 2006, 01:45 AM) நன்றி சத்தியா நன்றி கிடக்கட்டும் தனிமதி... உங்கள் சிறுகதை எப்போது வரும்? [B]ம்........இன்று இன்று என்று நானும் நினைக்கிறேன். ஆனால் என் கொம்பியுட்டர் நின்று நின்று வந்து என் உயிரை வாங்கிறது. -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Jul 4 2006, 09:57 PM
Post
#17
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (Thanimathy @ Jul 3 2006, 02:42 PM) [B]ம்........இன்று இன்று என்று நானும் நினைக்கிறேன். ஆனால் என் கொம்பியுட்டர் நின்று நின்று வந்து என் உயிரை வாங்கிறது. ம்... ம்... ஆகட்டும் தனிமதி! -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jul 6 2006, 10:04 AM
Post
#18
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Advancing Members Posts: 352 Joined: 10-May 06 Member No.: 513 |
உண்மைச் சம்பவம் என்று கேள்விப்படும் போது வேதனை அதிகரிக்கிறது! விதி வரைந்த கோலங்கள் கதையாக
|
|
|
|
Jul 20 2006, 09:48 PM
Post
#19
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,044 Joined: 8-October 05 From: UK Member No.: 363 |
உங்கள் கதைக்கு நன்றி சத்தியா.
இதனைப் போல ஒரு சம்பவம் நானும் அண்மையில் அறிந்து கொண்டேன். ஆனால் சம்பவத்தில் சில நிகழ்ச்சிகள் வித்தியாசம். இங்கே பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கின்றேன். இங்கே இரு சகோதரிகள். இருவரில் மூத்தவள் இலட்சணமானவளாக இருந்தாலும், இளையவள் மூத்தவளை விட நிறமானவள். பெயர் [b]வாணி என்று வைத்துக் கொள்வோமே. வெளி நாட்டிலுள்ள இவர்களது உறவினர் ஒருவர் தங்கையை திருமணம் பேசுகின்றனர். பெற்றோரும் தற்போதைய நிலைமையில் ஒரு வரன் தேடுவது கடினமானதாகையால் மூத்தவள் இருந்தாலும் பரவாயில்லை; வயது சற்றுக் குறைவாயினும் ஒருவரையாவது கரை ஏற்றுவோம் என்று வரும் வரனைத் தட்டிக்களிக்காது ஒத்துக் கொள்கின்றனர். வாணிக்குப் பெரிதாகச் சம்மதம் இல்லையாகினும் பெற்றோர் எண்ணம், மற்றும் குடும்ப நிலை கருதி மனத்தைத் திடப்படுத்தி ஒத்துக் கொள்கிறாள். மணமகன் (குமார் என்று வைத்துக் கொள்வோம்) குறுகிய கால விடுமுறையில் ஐரோப்பாவிலிருந்து கடல் கடந்து செல்கின்றார். திருமணமும் நடக்கின்றது. வாணியும் எல்லாரையும் போல் பெற்றொர், மற்றைய உறவுகள், நண்பர் எல்லாரையும் விட்டு வெளிகிட்டாள் ஐரோப்பா நோக்கி. பல இன்னல்களுக்கு மத்தியில் வந்து சேர்கிறாள் ஐரோப்பா. மனம் நிறையக் கனவுகள் .. எதிர்பார்ப்புக்கள்... புது இடம்... கணவனையும் திருமணக் காலத்தில் மட்டும்தான் பழகியதால் பெரிதாகத் தெரிந்து கொள்ள ஞாயமில்லை! இது எல்லாம் சேர்ந்து ஒரு பக்கம் எதிர்கால வாழ்வை யெண்ணி மனமகிழ்ந்தாலும் மறு பக்கம் மனத்தில் சொல்லொணாப் பரிதவிப்பு.. பயம்.. எல்லாம் கலந்த விபரிக்க முடியாத நிலை. இங்கே வந்தால் வாணிக்கு அதிர்ச்சி!!! கடல் கடந்து வந்து பலருக்கு மத்தியில் திருமணம் நடந்து, மனைவியாக ஏற்றுக் கொண்டவனின் இன்னொரு பக்கம் வெளிக்கிறது! அவனுக்கும் இன்னொரு ஐரோப்பிய பெண்ணுக்கும் பல காலமாய்த் தொடர்பு இருப்பதாகவும், அந்தப் பெண்ணையே அவனும் திருமணம் செய்து குடும்பமாக வாழ ஏற்கனவே முடிவு செய்ததும் தெரிய வந்தது. இதனை ஏற்கனவே தெளிவாகத் தெரிந்து கொண்டே அவன் தாயாரும் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார். இறுதிவரை வாணியின் பெற்றோருக்கு ஒன்றும் சொல்லவில்லை. அவர் ஒரு பெண்ணாய் இருந்தும் எப்படித்தான் இன்னொரு பெண்ணின், அதுவும் ஒரு மிக இளம் பெண்ணினது வாழ்க்கையுடன் விளையாட மனம் வந்ததோ - என்னால் இன்னும் விளங்கிக் கொள்ள இயலாது உள்ளது! இவர் பணத்துக்காக இப்படிச் செய்தாரா? அல்லது தனது மகன் ஒரு இலங்கைப் பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டுமென்ற அவாவில் இப்படிச் செய்தாரா? திருமணம் செய்தபின் எல்லாம் சரி வந்துவிடும், மகன் மாறி விடுவான் என்று செய்தாரா? எப்படி ஆகினும் ஒரு பெண்ணின் வாழ்வில் இப்படிச் செய்தது ஏற்றுக் கொள்ள முடியாததே. இதற்கிடையில் குமார் திருமணம் நடக்க முதல் வாணியிடம் தனக்குள்ள தொடர்பைப் பற்றி ஏற்கனவே சொல்லியதாகவும், இத் திருமணம் தனது தாயாரின் வற்புறுத்தலால் மட்டுமே செய்வதாகவும் கூறியதாகவும் தெரிகிறது. வாணி பெற்றோரின் நிலை கருதித் தன் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்காமல் இதனைப் பெற்றோரிடம் சொல்லவில்லை! சரி கதைக்கு வருவோம் இப்போ... கதை அத்துடன் முடியவில்லை... குமார் தன் முடிவிலிருந்து இம்மியளவும் மாறவில்லை. வாணியின் நிலை சந்தேகமில்லாமல் கவலைக் குரியதாகி விட்டது. இதன் பிறகு எப்படி அவனுடனும் மாமியுடனும் வாழ்வது??? கடவுள் கருணயால் அவளுக்குத் தெரிந்த உறவினர் யாரோ இன்னொரு இடத்தில் இருந்ததால் அங்கே போய்த் தங்கக் கூடியதாக இருந்தது. இவர்கள் ஒரு தம்பதிகள். வாணியும் இனியென்ன செய்வது என்று மனத்தைத் திடப்படுத்தி எப்படியாவது சமாளித்துக் கொண்டு நாட்களை யுகங்களாக்கி நகர்ந்தாள் மெல்ல... ஆனால் அங்கேயும் பாருங்கள் விதி சீண்டிப் பார்க்கிறது... சில மனிதாபம் இல்லாத மனித ஜென்மங்கள் இதுதான் தருணம் என்று சந்தர்ப்பம் பார்த்துக் கழுத்தறுப்பார்கள். வாணி இங்கே தனியாய்த் தானே இருக்கிறாள். அதுவும் திருமணம் முறிந்து போய் இருக்கிறாள். அங்கே அவள் தங்கியிருந்த வீட்டு மாமனிதர் அவளுடன் தகாமல் நடந்து கொள்கிறார். அங்கிருந்தும் வாணி விலகி ஓட வேண்டிய நிலை!!! பிறகு அங்கிருந்து வெளியேறி இன்னோர் இடத்தில் சென்று தங்குகிறாள். அங்கும் விதி விட்டபாடில்லை. இதைத்தான் "பட்ட காலில் படும் கெட்ட குடியே கெடும்" என்று சொல்வார்களோ? சரி சரி கதைக்கு வருவோம்... எங்கள் சமுதாயத்தில் சிலர் இருக்கிறார்கள் மற்றவர் துன்பத்தில் இன்பம் காணும் அரிய குணம். வாணி இப்போதும் ஒரு தம்பதியருடன் தங்குகிறாள். இச் சமயம் இவர்கள் நல்லவர்கள். அவளின் நிலை புரிந்து கவனிக்கிறார்கள். உதவியும் செய்கிறார்கள். ஆனால் பக்கத்திலுள்ள சில பிறவிகள்.. இவர்களும் வாணிக்கு ஒரு வகையில் உறவுக்காரர்தான். ஆனால் உதவி செய்யாது உபத்திரவம் அளிக்கும் உறவுக்காரர். விதியின் புதிய வடிவு என்னவென்றால் இந்தப் பக்கத்தில் உள்ளவர்கள் வாணியையும் அந்த வீட்டுக் காரரையும் தவறாகக் கதைக்கிறார்கள். என்னதான் வாணி தங்கியிருக்கும் உறவுக்காரத் தம்பதிகள் நல்லவர்கள் ஆயினும் இவ் அவதூறுகளால் அவர்களுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. அவளை மேலும் தங்களுடன் தங்க வைத்துக் கொள்வதா அல்லது இல்லையா என்று தெரியவில்லை. பி.கு. சத்தியா எழுத்துப் பிழைகளைத் திருத்தி விடுங்கள். நன்றி. This post has been edited by சத்தியா: Jul 23 2006, 11:27 AM -------------------- உங்கள் பொழுது இனிமையானதாக அமையட்டும்!
I have learned to seek my happiness by limiting my desires, rather than attempting to satisfy them. - John Stuart Mills அன்புடன், #~வைதேகி~# |
|
|
|
Jul 21 2006, 05:23 AM
Post
#20
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 19,965 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
நன்றி சைலன்ட். மிகவும் பரிதாபமான நிலையில் வாணி. எனக்கு நிறைய எழுத வேண்டும் என்று விருப்பமாக இருக்கிறது. ஆனால் முடியவில்லை. வார்த்தைகள் கேள்விகளை மட்டுமே எழுப்புகின்றது. வாணியின் நிலை பாவம் இதனை வாசிக்கும் போது கவலையாகவுள்ளது.
நன்றி சைலன்ட். -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 04:29 PM |