நிஜங்களின் தரிசனம் - 1 |
![]() ![]() |
நிஜங்களின் தரிசனம் - 1 |
Apr 22 2004, 04:41 PM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
![]() நிஜங்களின் தரிசனம்! -------------------------------------------- அது ஓர் தொழிற்கல்வி பயிலும் கல்விக் கூடம். பல நாட்டவரும் பல இன, மொழியினரும் அந்தக் கூடத்தில் ஒன்று சேர்ந்தோம். என்னவோ தெரியவில்லை. அங்கு போய்ச் சேர்ந்த முதல் நாளிலேயே அவளை எனக்குப் பிடித்துக் கொண்டது. ம்... சிலருடன் சில நாட்களாவது பழகிய பின்புதான் அவர்களை எமக்குப் பிடிக்கிறது. ஒரு சிலரை பார்த்த மாத்திரத்திலேயே பிடித்து விடுவதும் உண்டு... இல்லையா? ம்... அது போலவே அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே அவளுக்கும் எனக்கும் இடையில் இனம் புரியாத ஓர் ஈடுபாடு எனக்கு இருந்தது. நாட்கள் நகர்ந்து மாதங்கள் ஆகின. ப்ரியாவிற்கும் எனக்கும் இருந்த ஈடுபாடு மெல்ல மெல்ல நட்பாக மலர்ந்தது. அவளுக்குள் ஏதோ ஓர் சோகம் எப்போதும் நிழலாடுவதை என்னால் உணரக் கூடியதாக இருந்தது. ஆனாலும் நான் எதையும் அவளிடம் வாய் விட்டுக் கேட்கவில்லை. அவளாகச் சொன்னால் சரி. நானாக அவளின் சோகத்திற்குள் மூக்கு நுழைக்க விரும்பவில்லை. அவளாக என்றாவது ஓர் நாள் மனம் திறந்து சொன்னால் கேட்போம் என நானும் விட்டு விட்டேன். அதற்கான காலம் ஒன்று அன்று தானாகக் கனிந்தது. ம்... எனக்கும் அவளுக்கும் மிகவும் நீளமான தலை மயிர். அன்று வகுப்பில் இருந்த ஒருவர் குறும்புத்தனமாக எனது பின்னலையும், அவளது பின்னலையும் இணைத்து ஒன்றாக முடிந்து விட்டார். நாமிருவரும் அதைக் கவனிக்கவே இல்லை. எப்போதும் வகுப்பு முடிந்ததும், முதலாவது ஆளாக வகுப்பை விட்டு ப்ரியா சிட்டாகப் பறந்து சென்று விடுவாள். ஒரு நிமிடம் கூட அவள் தாமதிப்பதே கிடையாது. அது அவளது பழக்கம். அன்றும் வகுப்பு முடிந்ததும் வெளியே போய்விட சடுதியாக எழுந்தவள் முடியப்பட்டிருந்த பின்னலினால் இழுத்து நிறுத்தப்பட்டாள். அதன் பின்னர் தான் யாரோ செய்திருந்த அந்தக் குறும்பை நாம் இருவதும் கண்டோம். நான் கட்டப்பட்டிருந்த பின்னலை நிதானமாக அவிழ்த்தேன். ஆனால் அப்போது அவளின் கை நடுங்கியது, கண்ணீர் பெருக் கெடுத்தது. “சீக்கிரம் அவுளு சத்தியா” எனப் பட படத்தாள். எனக்கு அவளின் அவசரம் புரிந்தது. உடனடியாக எனது பாக்கில் இருந்த சிறிய கத்தரிக் கோலை எடுத்து எனது பின்னல் பக்கமாக கத்தரித்து அவளை விடுதலை செய்தேன். “நன்றி சத்தியா” என கூறியபடி விரைந்து சென்றாள் ப்ரியா. மறுநாள் காலை வகுப்பிற்குள் நுழைந்தவளும்… “மன்னித்துக் கொள் சத்தியா”… என்றாள். “எதற்கு இந்த மன்னிப்பு?”… என்றேன். “இல்லை... உன் முடியை வெட்டி நேற்று என்னை விடுவித்து விட்டாயே அதற்காக நன்றி”… என்றாள். “ஆ!… அதுவா? ப்ரியாவிற்காக முடி வெட்ட வேண்டும் என்ற நேத்திக்கடன் இருந்தது அதைத்தான் நேற்று நிறைவேற்றினேன்”… என்றேன். கலகலவெனச் சிரித்த அவள் முகத்தில் மறு கணம் ஓர் சோகம் மூடிக் கொண்டது. அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருக் கெடுத்தது. சிறிது நேர மௌனத்தின் பின் அவள் தன் சோகத்தை கொட்டத் தொடங்கினாள். ப்ரியாவின் குடும்பம் ஓர் வசதியான குடும்பம். இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவள். ப்ரியாவின் தந்தையார் ஓர் பிரபல்யமானவர். குடும்பத்தில் இவள் கடைக் குட்டி. படித்து பல்கலைக்கழகம் நுழைந்து பின் ஓர் ஆங்கிலப் பட்டதாரியாக கடமையாற்றியவள். பெண்கள் வயதுக்கு வந்ததும் தாயும், தந்தையும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொள்வது வழமையானதே. அதே போல் இவளின் பெற்றோரும் இவளுக்கு வரன் பார்க்கத் தொடங்கினார்கள். சிறிய வயதில் திருமணத்தை அவள் விரும்பாத போதும்... பெற்றோரின் மனதைப் புண்படுத்தாமல்... அவர்கள் விருப்பப்படி திருமணத்திற்கு சம்மதித்தாள். கை நிறைய சீதனம் கொடுத்து வெளிநாட்டு மாப்பிள்ளையைப் பார்த்து முடிச்சுப் போட்டு முடிந்தாகி விட்டது. இவ்வளவிற்கும் போட்டோவைப் பார்த்துத்தான் சம்மந்தம் முடிந்தது. பின்னர் திருமணத்திற்கு நாள் குறித்து மாப்பிள்ளை இந்தியாவிற்கு வந்து..; ப்ரியாவின் வீட்டிற்குச் சென்று ப்ரியாவைப் பார்த்ததும் மாப்பிள்ளை தனக்குப் பெண்ணைப் பிடிக்கவில்லை என கூறிவிட்டார். காரணம் பெண் நல்ல வெள்ளை இல்லையாம். ம்... அவள் வெள்ளை நிறம் இல்லைத்தான். பொது நிறமாக அவள் இருந்தாலும் நல்ல முக வெட்டு. சொல்லப் போனால் நடிகை சரிதாவின் இளமைத் தோற்றம் அப்படியே அவளுக்குள் குடி கொண்டிருந்தது. ஆனாலும் என்ன செய்வது அந்த மாப்பிள்ளைக்கு அவளைப் பிடிக்கவில்லை யாம். (ஆனால் சும்மா சொல்லக் கூடாது பொட்டு இல்லை என்றால் உரஞ்சி பொட்டு வைக்கும் கலரில்தான் மாப்பிள்ளை இருக்கிறார்.) திருமணத்திற்கு நாள் குறித்து ஊரெல்லாம் பத்திரிகை கொடுத்தும் ஆகிற்று. அதன்பின் பெண் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்ய முடியும்? ப்ரியாவின் தந்தையும் தாயும் தமது கௌரவம் போகப் போகிறதே என்ற பயத்தில் அழுது குழறி... மாப்பிள்ளையின் காலில் விழுந்து இன்னமும் பணம் கூடக் கொடுத்து ஒருவாறு திருமணம் முடிந்தும் ஆயிற்று. திருமணம் முடிந்து சில காலத்தில் ப்ரியாவும் வெளி நாடு வந்து சேர்ந்தாள். இங்கு வந்தவுடன் மாமியாரின் பிரச்சனைகள் அவளுக்காகக் காத்துக் கிடந்தன. தினமும் மாமியாரால் ஒரே பிரச்சனை. அவளால் அதனைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வெளிநாடு வந்ததும் ப்ரியாவின் தாய் தந்தை சகோதரங்க ளின் தொடர்புகள் யாவும் அறுக்கப்பட்டன. வெளி நாட்டில் ப்ரியாவின் சகோதரங்கள் இருந்தும் எவருடனும் கதைக்கவும் விடுவதில்லை. அது மட்டுமல்ல தன் கணவருடன் ப்ரியா சிரித்துக் கதைப்ப தையோ, அல்லது அவள் கணவனுக்கு உணவு பரிமாறுவதையோ, அல்லது கணவனுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதையோ அந்த மாமியார் அனுமதிப்பது இல்லை. அப்படி எதுவும் நடந்தால் அன்று முழுவதும் வீட்டில் ஒரே பிரச்சனைதான். இரண்டு மூன்று நாட்களுக்கு மாமியார் திட்டித் தீர்த்துக் கொண்டு சாப்பிடாமல் பட்டினி கிடப்பாராம். தாயாருக்குப் பயந்து ப்ரியாவை வெளியே எங்குமே கணவன் அழைத்துச் செல்வதும் இல்லை. வீட்டு வேலைகள் யாவற்றையும் செய்து கொண்டு... ஓர் சிறைக் கைதியைப் போல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாள் பிரியா. பெற்றோரின் அன்பும் இன்றி, சகோதரங்களின் பாசமும் இன்றி, கணவனின் பரிவும் இன்றி ஓர் ஜடமாக... உணர்ச்சிகள் எதுவும் இல்லாமல் பயந்து ஒடுங்கியபடி அவளின் வாழ்க்கைச் சக்கரம் உருள்கிறது. வெளிநாடு வந்து நான்கு, ஐந்து வருடங்கள் ஆகியும் ரெயினில் ரிக்கற் எடுத்து எங்கும் போகக் கூடத் தெரியாது என்றால் அவளின் நிலமையை என்னவென்று சொல்வது? தன் இதயத்தில் இருந்த சோகங்களை எல்லாம் கண்ணீரோடு கொட்டித் தீர்த்தாள் ப்ரியா. இதுவரை யாருக்கும் தெரியாத தன் இதய வலிகளை முதல் முதலில் மெல்ல இறக்கி வைத்ததனால் தன் மனதின் சுமை கொஞ்சம் குறைந்துள்ளதாக கூறி மெல்லப் புன்னகை செய்தாள். ம்... இதைப் போல் எத்தனை எத்தனை சோகங்கள் இந்தப் புலம் பெயர் வாழ்வில் குடி கொண்டுள்ளதோ யாருக்குத் தெரியும்? ம்… சரி... மீண்டும் மற்றுமொரு நிஜங்களின் தரிசனத்தில் சந்திப்போமா? -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Apr 22 2004, 08:25 PM
Post
#2
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 207 Joined: 22-January 04 Member No.: 47 |
QUOTE இதைப் போல் எத்தனை சோகங்கள் இந்த அகதி வாழ்வில் குடி கொண்டுள்ளதோ? வணக்கம் சத்தியா, நீங்கள் எழுதியிருக்கும் இப்படியான உண்மையான சம்பாவங்களை வாசித்துப் பார்த்தால் மனதுக்கு மிகவும் கஷ்ரமாகவும் கவலையாகவும் உள்ளது. இதே மாதிரியான சில சம்பவங்களை நான் தொழில் செய்யும் இடத்தில் எனது தொழில் ரீதியாக நேரடியாக பார்த்து அனுபவப்பட்டு இருக்கின்றேன். அதேவேளை 60,65 வயதுடைய இரண்டு தாய்மாரையும் சந்தித்தேன். அவர்களின் பிரச்சனை அவர்களின் மருமகள்மாராலும் மகன்மாராலும் தான் என்று முறையிட்டு தாம் தமது நாட்டிற்கே திரும்பி செல்வதற்கு உதவி செய்யும் படி வந்து கேட்டு நின்றார்கள். அதாவது அவர்கள் தமது நாட்டிற்கு திரும்பி செல்வதற்காக உதவி கேட்கும் போது நமது நாட்டில் மோசமாக போர் நடந்துகொண்டிருந்த நேரம். இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த தாய்மாரில் ஒரு தாய் தனது கஷ்ரத்திலும் சற்று நகைச்சுவையாக பேசுவார். நான் அந்த தாயிடம் சொன்னேன் நமது நாட்டில் மோசமாக போர் நடந்து கொண்டிருக்கின்றது இந்த நேரத்தில் நீங்கள் திரும்பி போனால் உங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லையே என்றேன். அதற்கு அந்த தாய் சொன்னா தம்பி நான் எமது நாட்டில் குண்டு போடுகின்றார்கள் என்றும் அந்த குண்டால் காயப்பட்டு எனது முதுகில் பெரிய காயமும் உள்ளது என்பதால் தான் எனது நாட்டை விட்டு இங்கு மருமகள்மார், மகன்மார் உடன் சந்தோஷமாக இருக்கலாம் என்றுதான் வந்தேன். ஆனால் இவர்கள் போடும் குண்டு எமது ராணுவம் போடுவதை விட மிகவும் கொடூரமாக உள்ளது. இவர்கள் போடும் குண்டுகளை விட எமது ராணுவத்தின் குண்டுகள் கொடூரம் குறைவானது என்று சிரித்துகொண்டே சொன்னார். அத்துடன் எனது மருமகள்மார், மகன்மார் சந்தோஷமாக வாழவேண்டும் என்னால் அவர்களுக்கிடையில் எவ்வித பிரச்சனைகளும் வந்துவிடக்கூடாது என்றும் சொன்னார். இந்த நேரத்தில் இவர்களுக்கு எந்தவிதத்தில் உதவமுடிவயும் என்று தீர்க்கமான ஒரு முடிவு எடுக்க முடியாமல் திண்டாட்டமான நிலையில் இருந்திருக்கின்றேன். இப்படியாக நடக்கும் சம்பவங்களை நேரில் பார்த்து உண்மையிலே மனவேதனையுடனும் இது என்ன உலகம் என்ற வேதனையுடனும் பலதடவை இருந்திருக்கின்றேன். ஒரு உண்மையாக நடக்கும் பிரச்சனையை இங்கு சமூக முற்றத்தில் எழுதியுள்ளீர்கள் சத்தியா. நிச்சயமாக எமது நிலா முற்றத்து நண்பர்கள் நிறைய கருத்துக்களை எழுதுவார்காள் என்று எதிர்பார்க்கின்றேன். நன்றி சத்தியா. அன்புடன் மக்ஸ். -------------------- அன்புடன் மக்ஸ்.....
வாழ்க நிலா முற்றம் ![]() |
|
|
|
Apr 22 2004, 09:56 PM
Post
#3
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 261 Joined: 26-February 04 Member No.: 62 |
நன்றி சத்தியா, உங்கள் ப்ரியாவிற்காக ஆண்டவனிடம் பிராத்திக்கிறேன்,
விரைவில் விடுதலை கிடைக்க வேண்டுமென்று. நன்றியுடன்:வரதன் -------------------- நெஞ்சில் நேர்மை உள்ளவனை
நெருப்புக்கூடத்தீண்டாது. நன்றியுடன்: வரதன். |
|
|
|
Apr 23 2004, 02:42 PM
Post
#4
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 291 Joined: 18-December 03 Member No.: 11 |
சமூகத்தின் திரைமறைவில் பல அன்றாட அனுபவங்கள் மறைந்து கிடக்கின்றன.அவற்றை சுவாரஸ்யமாக கதை வடிவில் இணைப்பதன் மூலம் சொல்லப்படும் விடயம் மருகூட்டப்பட்டிருக்கிறது.உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
|
|
|
|
Apr 24 2004, 03:02 PM
Post
#5
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 470 Joined: 18-December 03 Member No.: 6 |
நன்றி சத்தியா, நன்றி மக்ஸ்
|
|
|
|
Apr 24 2004, 07:42 PM
Post
#6
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 11,282 Joined: 25-February 04 Member No.: 61 |
நன்றி சத்தியா.
இருட்டிலே நடக்கும் நிழல்களை நிஜங்களின் தரிசனமாக தந்ததற்கு. வாழ்த்துக்கள். -------------------- பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம். ![]() |
|
|
|
May 11 2004, 11:43 AM
Post
#7
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 291 Joined: 18-December 03 Member No.: 11 |
சத்தியா அவர்கள் இந்தத் தொடரை தொடரவில்லையா?
|
|
|
|
May 21 2004, 11:58 AM
Post
#8
|
|
![]() நிர்வாகம் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Support Posts: 4,369 Joined: 18-December 03 From: Scotland Member No.: 7 |
நிஜங்களின் தரிசனம் நல்லதொரு முயற்சி, வாழ்த்துக்கள்.
நன்றி சத்தியா, கடந்த வாரம் லண்டனில் நடைபெற்ற ஒரு வித்தியாசமான அநுபவத்தினை இங்கு தருகிறேன். சாதாரணமாக ஐரோப்பிய வாழ்க்கை என்றாலே பணம் பணம் என்று ஓடி ஓடி உழைக்கிறார்கள் என்று வெளியில் இருந்து குறைகூறுவோரும் உண்டு,அதே நேரம் குறை கூறும் அளவுக்கு, எல்லை மீறும் உழைப்பாளிகளும் இருக்கிறார்கள். பணச்செலவின் வரையறை இங்கு அசாதாரணமான நிலையை உடையது,மற்றைய ஐரோப்பிய நாடுகள் பற்றி அறிந்திருந்தவை மட்டுமே தெரியும்,லண்டனைப் பொறுத்தவரை நாங்கள் அதனை அநுபவிக்கிறோம். எனவே எவ்வளவு கடினமாக உழைத்து எவ்வளவு கடினமாக சேமித்தாலும் அதற்கு மீறிய ஒரு செலவு உருவாகிவிடும் நிலை சாதாரணமானது.இதற்கான காரணம் இங்கு காணப்படும் ஆடம்பரத்தின் மீதான மோகமா அல்லது எங்கள் அத்தியாவசியத் தேவையே அதுவா என்பதும் சிந்திக்கக் கடினமான ஒரு விடயம். பல காலங்களாக லண்டன் நகரில் நடாத்தப்பட்டு வரும் பலவகை மோசடிச் சம்பவங்களில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று அண்மையில் நடைபெற்றது. இலகுவாக பணம் சம்பாதிப்பதில் நாட்டம் இல்லாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இந்த இலகு பணச் சம்பாதிப்பிற்காக யார் யாரோ எத்தனையோ இழந்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன், ஆனால் நேரில் கண்டது இதுவே முதற் தடவை. அண்மைக்காலமாக எங்களுக்குத் தெரிந்த ஒருவருக்கு இன்னுமொரு நாட்டவர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.இவர் செய்து கொண்டிருக்கும் ஒரு வியாபார ஸ்தலத்திற்கு சாதாரண வாடிக்கையாளராகவே அவர் வந்திருக்கிறார். பணம் பணம் என்று பார்க்காமல் அவர் கொள்வனவு செய்யும் விதத்தில் சற்று சந்தோசமடைந்த நமது மனிதர் அவர்களுடன் நெருங்கிப்பழக ஆரம்பித்தார்.சில கால நட்பின் பின்னர் அந்த மனிதர்களால் நம்மவருக்கு ஒரு யோசனை சொல்லப்பட்டிருக்கிறது. இந்த யோசனையை அவர் ஏற்றுக்கொள்வதற்கான நியாயமும் இருந்திருக்கிறது,ஏனெனில் அவர்கள் தாங்களும் பெரும் பணக்காரர்கள் என்பதை முதலிலேயே இவர் நம்புவதற்கு ஏற்ப அவர்கள் நடந்துகொண்டு விட்டார்கள், அதே நேரம் தாங்களும் முதலீடு செய்திருப்பதாகவும் தங்களோடு ஒரு பங்காளியாக வரும்படியான யோசனைதான். யோசனையில் தப்பில்லை, ஆனால் தொழில் என்ன? கறுப்புப் பணம் - இது முதலில் சொல்லப்பட்டது, நம்மவரும் அவரை முழுமையாக நம்பினார்.தொழிலிலே ஏகப்பட்ட நட்டங்கள்,கடன் தொல்லைகள்,வியாபாரத்திற்கான முதலீட்டுப்பிரச்சினைகள்,குடும்பப் பிரச்சினைகள் என்று ஏகப்பட்ட சிக்கல்கள் இவரைச் சுற்றியிருந்தாலும் இலகுவாக தான் சம்பாதிக்கப்போகும் பணத்திற்காக ஆவலோடு மூன்று வாரங்களாக முதலீட்டுப் பணத்தை சேர்த்தார். எத்தனையோ சிரமங்களின் பின்னர் தனது சக்திக்கும் மேலதிகமாகவும் முயற்சி செய்து சுமார்ஓரு லட்சம் பவுண்ட்ஸ் அளவில் சேர்த்துக்கொண்டார். தன்னிடம் பணம் தயாராக இருப்பதை தனது வேற்று நாட்டு பங்காளிக்கு தெரியப்படுத்தியபோது அந்தப்பணத்தை அவ்வளவும் 50 பவுண் நோட்டுக்களாக மாற்றிக்கொண்டு வரும்படி இவருக்கு அறிவிறுத்தப்பட்டது. இந்த ஒரு லட்சம் முதலீட்டால் அவருக்குக் கிடைக்கப்போவது என்ன? 3 லட்சம் பவுண்கள்.. நினைக்கவே பயமாக இருந்தது. எனினும்,இது ஒரு சிறிய முயற்சிதான்,அனைத்தும் சரியாக வரும் பட்சத்தில் எதிர்காலத்தில் பல லட்சம் பவுண்களுக்கான முயற்சியில் ஈடுபடுவது பங்காளிகளின் திட்டம். குறிப்பிட்ட நாளொன்றில் அனைவரும் ஒன்று கூடினர். இப்போது இவர்களுக்குப் பரீட்சார்த்தமான செய்முறை செய்து காட்டப்படுகிறது, இரண்டு நாட்களின் பின்னர் தான் செயல்திட்டம் என்று அனைவரும் ஏற்பாடு செய்து கொண்டனர். நம்மவரின் வீட்டில் மனைவி,பிள்ளைகளுக்குத் தெரியமலே ஒரு அறை இருட்டறையாக உரு மாறியது,சிவப்பு விளக்குகள், பெரிய பாத்திரங்கள், பேப்பர்கள் என்று கிட்டத்தட்ட ஒரு சோதனைக் கூடம் அளவில் அந்த அறையைத் தயார் செய்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் மூன்று 50 பவுண் நோட்டுக்களைப் பெற்றுக்கொண்டனர். அந்த நோட்டுக்களை ஒரு மெல்லிய இனந்தெரியாத காகித வகையில் மேல் வைத்துவிட்டு ஒரு பார்சலை இவரிடம் கொடுத்துள்ளனர், அந்தப் பார்சலில் இருந்து ஏதாவது இரண்டு மூன்று காகிதங்களை எடுக்கும் படி இவருக்குக் கூறப்பட்டது. அந்தக் காகிதங்கள் ? கறுப்பு நிறத்தில் சரியாக 50 பவுண் பணத்தாள் அளவில் இருந்திருக்கிறது.இவரும் கண்ணை மூடி சாமியைக் கும்ப்பிட்டு வெவ்வேறு இடங்களில் இருந்து மூன்று தாள்களை எடுத்துக்கொடுத்துள்ளார். அதன் பின்னர் அவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, சில மருந்து வகைகளையும் தெளித்து விட்டு பின்னர் வெளியிலெடுத்து ஒருவகை பவுடர் தெளித்து மீண்டும் காய வைத்துவிட்டு புகைப்பதற்காக வெளியே சென்று விட்டனர். ஒரு அரை மணி நேரத்தில் மீண்டும் அனைவரும் உள்ளே வந்து பார்த்தபோது, ஆச்சரியப்பட்டுவிடும் அளவுக்கு இவரால் எடுக்கப்பட்ட 3 காகிதத்தாள்களும் 50 பவுண் நோட்டுக்களாக வந்திருந்தன. 150 பவுண் நல்ல நோட்டில் 150 பவுண் கள்ள நோட்டு ! அதிர்ச்சியில் இருந்த நம்மவருக்கு காத்திருந்தது இன்னுமொரு பேரதிர்ச்சி, அதாவது இன்று நாங்கள் மற்ற பணங்களை செய்யத் தேவையில்லை, முதலில் இந்த 150 பவுண்களைக் கொண்டு சென்று வங்கியில் மாற்றிப் பாருங்கள் என்று கூறவே, அன்றைய செயல்திட்டங்கள் கைவிடப்பட்டது. மறுநாள் காலை தயங்கித் தயங்கி, வங்கியில் இந்தப் பணத்தை மாற்றினார் நம்மவர், ஒரு பிரச்சினையும் இல்லை.அதுவும் நல்ல நோட்டே.. 150 பவுண் புதிய நோட்டுக்களைக் கொடுத்து அவற்றை 10 பவுண் தாள்களாகப் பெற்றுக்கொண்ட இவருக்கும் நம்பிக்கையும்,சந்தோசமும் அதிகமாகவே வந்தது. இருந்தாலும் மனது கேட்கவில்லை, இரண்டாவது தடவையாக காசு அச்சடிப்பவர்களை அழைத்து ஒரு 1000 பவுண்களுக்கு முயற்சி செய்தார்.அதுவும் தங்கு தடையின்றி வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. இப்போது மூன்று லட்சம் பவுண்களுக்கான நாள் குறிக்கப்பட்டது,மீண்டும் சோதனைக் கூடம் தயாரானது. இப்போது நம்மவர் கூடவே ஒருவரையும் அழைத்துச்சென்றிருந்தார்,அவரும் ஆசையில் ஒரு 10000 பவுண்களோடு. வேலையும் ஆரம்பமானது. மிகவும் அவதானமாக பொறுமையோடு மருந்து கலப்புகள்,இரசாயனத் தெளிப்புகள் எல்லாம் நடந்து கொண்டிருந்தது, தற்போது இரசாயன மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கும் கறுப்புத்தாள்கள் பார்சல் செய்யப்பட முயற்சி செய்யப்பட்ட போது அதற்குத் தெளிப்பதற்கான பவுடர் குறைந்திருந்தது, மேலதிகமாக உடனடியாக பவுடர் கொண்டு வரப்பட வேண்டும், இல்லாவிட்டால் அனைத்தும் வீணாகிப் போகும் என்ற நிலை, உடனடியாக கையில் இருந்த மிகுதிப் பணங்களையும் சேர்த்து ஒரு ஆயிரம் பவுண் தயாரானது. தற்போது ஆழ்ந்த சிந்தனையில் இருந்த அச்டிப்பவர் புகைப்பதற்காக வெளியே சென்றார், அவருடைய உதவியாளர் மேலதிக பவுடர் வாங்குவதற்காக வெளியில் சென்று வரத் தயாரானர். வெளியில் புகைத்துக்கொண்டிருந்தவர் நானும் வருகிறேன் என்று அவருடன் சென்றார். அரைமணி நேரம், ஒரு மணி, மூன்று மணி நேரமும் ஆனது.. போனவர்கள் திரும்பி வரவில்லை. ஒரு தொலைபேசி மாத்திரம் வந்தது, நாங்கள் பொலிஸில் சிக்கிவிட்டோம். மீண்டும் தொடர்பு கொள்கிறோம். யோசனையில் ஆழ்ந்திருக்கும் நம்மவர் இருவருக்கும் ஒரு ஆறுதல், அதாவது அவர்கள் தயார் செய்த பணம் பார்சலாக அப்படியே நம்மிடம் இருக்கிறது. மறு நாள் மாலை நேரமும் வந்தது. இதற்கு மேல் பொறுமையிழந்த நம்மவர்கள் எங்கள் நண்பர் ஒருவருக்குத் தகவல் சொல்லவே நாங்கள் சென்று அந்தப் பார்சல்களைப் பார்த்தோம். ஒரே இரசாயன வாசனை நிறைந்திருந்தது.எனது நண்பர் அங்கு காணப்பட்ட அனைத்து பொதிகளையும் திறந்து பார்க்க அனுமதி கேட்டார். முதலில் அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை, ஏனெனில் பவுடர் போட்டு காயவைத்ததும் அவை 50 பவுண் நோட்டுக்களாக வருபவை அல்லவா? பின்னர் ஓரளவு அரைகுறை மனதுடன் திறந்து பார்க்க அனுமதித்தனர். ஒவ்வொரு பார்சலாக திறந்து பார்த்தால்.. அத்தனையும் 50 பவுண் நோட்டுக்கள் அளவில் வெட்டப்பட்ட கறுப்பு நிற காகிதத்தாள்கள். இவை கழுவப்பட்டால் பணமாக மாறும் என்ற இவர்களது நம்பிக்கையை அச்சு வேலைகளில் அநுபவம் உள்ள எனது நண்பர் பல செய்முறைகள் மூலம் நிரூபித்தார், ஆனாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. சில காகிதங்களை நாங்கள் எடுத்துக்கொண்டு கிளம்பிவந்து விட்டோம். இவர்களுக்கு எப்படி விளங்கப்படுத்துவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் கண்களுக்கு முன்னால் ஏற்கனவே பணம் உருவாக்கப்பட்டிருப்பதனால், நாங்கள் என்ன சொன்னாலும் அவர்கள் நம்பப் போவதும் இல்லை.. ! ஒரு லட்சம் பவுண்கள் ????? எங்கே ? அவர்கள் கேள்விக்கு விடையளிக்க முடியாது. காத்திருப்பின் இறுதியில் நான்கு நாட்களுக்குப்பின்னர் அவை காகிதங்கள் தான் என்று ஒத்துக்கொண்ட நம்மவர்கள் அவற்றை குப்பையில் எறிந்து விட்டு பித்துப்பிடித்தவர்கள் போல் வாழ்வதாக எனது நண்பர் கூறினார். கஷ்டப்பட்டு உழைத்த பணம்.. நிமிட நேரத்தில் காணமல் போய்விட்டது. -------------------- |
|
|
|
May 21 2004, 02:40 PM
Post
#9
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,979 Joined: 19-February 04 Member No.: 57 |
பேராசை பெரும் நட்டம்
நன்றி பவன். -------------------- something is better than nothing
|
|
|
|
Jul 23 2004, 07:04 PM
Post
#10
|
|
![]() நிர்வாகம் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Support Posts: 4,369 Joined: 18-December 03 From: Scotland Member No.: 7 |
சீட்டுப்பணம் சிட்டாகப்பறந்த கதை
சீட்டுப்பணத்தைப் பெற்று வீடு வந்து கொண்டிருந்த நபர் சில இளைஞர்களால் தாக்கப்பட்டு பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் பின்ணனியில், குறிப்பிட்ட நபர் மாதாந்தச் சீட்டு ஒன்றில் இணைந்திருந்தார், இந்த சீட்டுத் தொடரில் நான்கு பேருக்குக் குறையாமல் இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட பலரும் இணைந்திருந்தார்கள். இப்படியாகப் பல சீட்டுக்களில் பங்கேற்று அதன் மூலம் தான் பெறும் தொகையை பிறருக்கு வட்டிக்குக் கொடுப்பது இவரது பகுதி நேர தொழில். இந்தத் தடவை 25,000 பவுண்கள் பெறுமதியான தனது சீட்டுப் பங்கினைப் பெற்றுக்கொண்டு பாதுகாப்பான ஒரு பையில் அடைத்து தனது வீட்டிற்கு சென்றடைந்த இந்த நபர், கதவைத்திறந்து தனது வீட்டினுள் நுழையும் போது, கதவு தட்டப்பட்டது, தான் எங்கோ கண்டிருந்த அந்த தமிழ் இளைஞனைக் கண்டு தனது வீட்டுக் கதவை திறந்த மறு கணமே பல இளைஞர்கள் திடீரெனப் பாய்ந்து இவரையும் தாக்கிவிட்டு பணத்தையும் அபகரித்து சென்றுள்ளனர். இதனை பொலிஸில் இவர் முறைப்பாடு செய்திருந்தார். லண்டன் பொலிஸார் பல தடயங்களைக் கொண்டு குற்றவாளியையும் கண்டு பிடித்தனர். இரண்டு தடவைகள் அடையாளங்காட்டும் அணி வகுப்பு இடம் பெற்று, அந்த இரண்டு தடவையும் குறிப்பிட்ட பாதிக்கப்பட்டவர் நேரம் தவறாமல் சமூகமளித்து அடையாளங் காட்டியிருக்கிறார். வேதனைக்குரிய விடயம் என்னவென்றால், இரு தடவைகளும் இரு வேறு நபர்களை இவர் அடையாளங்காட்டியதனால் குற்றவாளி தப்பித்துவிட்டார். இது குறித்து அவரிடம் கேட்ட போது... தற்கால இளைஞர்கள் ஒரு நேரத்தில் ஒரு விதமாகவும் இன்னொரு நேரத்தில் இன்னொரு விதமாகவும் சிகையலங்காரமும, முகத்தில் அலங்காரமும் செய்து கொண்டு மாறி மாறிக் காட்சியளிக்கிறார்கள் அதனால் நான் குழம்பிவிட்டேன் என்று அப்பாவியாய் கூறினார் பணத்தை இழந்த சுமார் 44 - 48 வயது மதிக்கத்தக்க பாதிக்கப்பட்டவர். -------------------- |
|
|
|
Jul 23 2004, 07:45 PM
Post
#11
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (bavan @ Jul 23 2004, 07:04 PM) தற்கால இளைஞர்கள் ஒரு நேரத்தில் ஒரு விதமாகவும் இன்னொரு நேரத்தில் இன்னொரு விதமாகவும் சிகையலங்காரமும, முகத்தில் அலங்காரமும் செய்து கொண்டு மாறி மாறிக் காட்சியளிக்கிறார்கள் அதனால் நான் குழம்பிவிட்டேன் என்று அப்பாவியாய் கூறினார் பணத்தை இழந்த சுமார் 44 - 48 வயது மதிக்கத்தக்க பாதிக்கப்பட்டவர். ஐயோ பாவம். இப்படியும் நடக்குதா? வாழ்க தமிழ் இனம். நன்றி பவன். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jul 29 2004, 06:24 PM
Post
#12
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 11,282 Joined: 25-February 04 Member No.: 61 |
QUOTE அவர்கள் கண்களுக்கு முன்னால் ஏற்கனவே பணம் உருவாக்கப்பட்டிருப்பதனால், நாங்கள் என்ன சொன்னாலும் அவர்கள் நம்பப் போவதும் இல்லை.. ! ஒரு லட்சம் பவுண்கள் ????? எங்கே ? அவர்கள் கேள்விக்கு விடையளிக்க முடியாது. அப்பாவிகள் என்பதை விட பேரசைக்காரர் என்று தான் சொல்லவேண்டும். அவருக்கு பதில் சங்கு தான்! QUOTE சீட்டுப்பணம் சிட்டாகப்பறந்த கதை நல்ல நேரம் சொன்னீர்கள் நான் சீட்டுகாசு வாங்கும்போது 5-7 அடியாட்களோடுதான் போக வேண்டும் போல கிடக்கு. அதிலும் ஓர் சிக்கல் நான் யாருடனும் சீட்டு போடவில்லையே! -------------------- பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம். ![]() |
|
|
|
Oct 6 2004, 07:44 PM
Post
#13
|
|
![]() நிர்வாகம் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Support Posts: 4,369 Joined: 18-December 03 From: Scotland Member No.: 7 |
தமிழர் பண்பாட்டில் குடும்ப வாழ்க்கை பிரதான இடம் வகிக்கிறது.
கணவன்,மனைவி,பிள்ளைகள்,உறவுகள் என்று வாழும் தமிழர் வாழ்க்கை முறையைப் பார்த்து வியப்படையும் வேற்றினத்தவர்களையும் கண்டிருப்பீர்கள். அந்த அளவுக்கு அழகான வாழ்க்கை முறையை மீறும் பல வகை சம்பவங்களை வாழ்க்கையில் கண்டிருப்போம், அதில் ஒரு வகையாக இருக்கப் போகிறது பின்வரும் சம்பவமும். ஐரோப்பிய கண்டத்தில் இருக்கும் பிற நாடுகள், அவற்றின் சட்ட திட்டங்கள் பற்றி எனக்கு முழுமையாகத் தெரியாது. எனினும் இங்கிலாந்தைப் பொறுத்தவரை ஒவ்வொருவரது பொருளாதார நிலைப் பாடும் தனித்தனியாக நோக்கப்படுகிறது. உதாரணமாக ஒரே வீட்டில் வசிக்கும் கணவனுக்கும்,மனைவிக்கும் வெவ்வேறு Financial or Credit தரவுகளை இவற்றுக்கான சேவையை வழங்கும் நிறுவனங்கள் பாதுகாத்து வரும். Equifax, Experian போன்ற நிறுவனங்கள் அமெரிக்காவிலும்,இங்கிலாந்திலும் புகழ் பெற்ற Credit Reference நிறுவனங்கள் ஆகும். ஒரு நிறுவனம் உங்கள் பெயரில் கடன் அல்லது நிதி சேவையை வழங்க முன்னர் மேற்குறிப்பிட்ட நிறுவனங்களில் உங்கள் பற்றிய தரவுகளை ஆராய்ந்த பின்னரே முடிவெடுக்கும். Equifax, Experian போன்ற நிறுவனங்கள் தனி மனிதரின் நிதி நிலைப்பாடு, அதாவது அவர் பெயரில் இருக்கும் கடன்கள், வங்கிச் சலுககைகள் மற்றும் அவர் வசிக்கும் முகவரி விபரங்களையும் வழங்கும். அதன் பின்னர் நிறுவனங்கள் தமது முடிவின் பிரகாரம் தனி நபரோடான நிதி வழங்கல் விவகாரத்தில் முடிவெடுக்கும். இப்படியாக கடன் வசதியைப் பெற்று ஒரு மனிதர் திரும்பச் செலுத்த தவறினால் அவரோடு முடிந்தளவு தொடர்பு கொண்டு அவருக்கு பல வகை சலுகைகளையும் வழங்கி இறுக்கங்களை தளர்த்தி, தாம் கொடுத்த கடனை மீளப்பெற குறிப்பிட்ட நிறுவனம் முயற்சி செய்யும். இவையனைத்திலும் ஏமாற்றப்படுமிடத்து அந்நிறுவனம் நீதி மன்றத் தீர்ப்பினை நாடுகிறது. ஒரு நபருக்கோ அல்லது நிறுவனத்துக்கோ நீதி மன்றத் தீர்ப்பு வழங்கப்படுமானால் County Court Judgement (CCJ) அது சகல தரப்பினரும் அறிந்து கொள்ளக்கூடிய பதிவேடுகளில் Register பதியப்படுகிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் இவர் அதற்கும் சரியான பதிலளிக்கவில்லை என்றால் அவர் பெயரில் Default அல்லது Credit Fault பதியப்படுகிறது. இப்படியாக பதியப்பட்டவர்கள் எதிர்வரும் ஆறு வருடங்களுக்கு எந்த கடன்,நிதி உதவியையும் பெறுவது மிகவும் கடினமானது. இவை நானறிந்த சில இங்கிலாந்து சட்டங்கள். இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் நபர் ஏற்கனவே இரு தடவை Credit Fault ஆனவராக இருக்கிறார். அப்படிப் பார்க்கப்போனால் ஆகக்குறைந்தது கடந்த 8 முதல் பத்து வருடங்களாக இவரது வாழ்க்கை முறை இப்படியாகத்தான் இருந்திருக்கிறது. இப்படிப்பட்ட இந்நபருக்கு இரண்டுக்கும் அதிகமான குழந்தைகளும் உண்டு. பத்து வருடங்களுக்கு முன்னர் ஐரோப்பிய நாடுகளுக்கு பெருந்தொகைப் பணம் செலுத்தி வந்திறங்கிய ஆணோ பெண்ணோ கடின உழைப்பாளியாகவே காணப்பட்டனர். அந்த வகையில் இவரால் அழைத்து வரப்பட்ட இவரது காதலித்து கரம் பிடித்த மனைவியாரும் அனைவரும் போல் இங்கிலாந்தில் மிகவும் கஷ்டங்களுக்கு மத்தியில் உழைக்க ஆரம்பித்திருந்தார். குறிப்பிட்ட சில காலப்பகுதியில் ஒரு கணிசமான தொகைப் பணத்தை சேகரித்திருந்த இவரின் உழைப்பும் Credit Fault ஆவதற்கு முன்னர் ஏதோ வகையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தையும் கொண்டு இவர்கள் ஒரு சொந்தத் தொழிலை ஆரம்பித்தனர். அந்தத்தொழில் முயற்சியைப் பொறுத்தவரை உதாரணமாக 1500 நாட்கள் அந்நிறுவனம் இயங்கியிருந்தால் 1490 நாட்கள் மனைவியின் கடின உழைப்பில் கண்காணிப்பில் முன்னேறியிருந்ததாக அவர்கள் பற்றி அறிந்த குடும்ப நண்பர் இச் சம்பவத்தை கூறும் போது சொல்லியிருந்தார். இப்படியாக கடின உழைப்பில் உருவான தொழிலில் ஏராளமான இலாபத்தினைப் பெறக்கூடியதாகவும் இருந்துள்ளது. அதன் மூலம் ஒரு வீடும் வாங்கப்பட்டுள்ளது. ஏகபோக இலாபத்தில் நீந்தித்தவித்த இந்த மனிதருக்கு இப்போது குடியும் கும்மாளமுமான வாழ்க்கை பழக்கப்பட்டுள்ளது. எனினும், ஓரளவு புத்திசாலித்தனமாக பிறிதொரு நாட்டிலும், மனைவியின் கட்டாயத்தால் ஒரு தொகைப் பணத்திற்கு ஒரு நிலம் வாங்கப்பட்டுள்ளது. அசையாத சொத்துக்கள் தனக்கிருக்கிறது என்ற நம்பிக்கையில் தன்னால் முடிந்தளவு தலைகீழாக இவர் நடந்துகொள்வதை தான் உட்பட நண்பர்கள் கவலையுடன் அவதானித்து வந்ததாக தகவல் சொன்ன நண்பர் கூறினார். தங்களுக்கு இலாபம் ஈட்டித்தந்த வியாபாரத்தை ஒரு கட்டாய சூழ்நிலையில் விற்க வேண்டிய தேவை இவர்களுக்கு வந்துள்ளது, விரும்பியோ விரும்பாமலோ வியாபாரம் கைமாற்றப்பட்டுள்ளது. இது பற்றி மனைவியின் அதிருப்தியை இந்நபர் கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லை. எனினும் இவ்வியாபாரத்தின் பெயரில் இந்நபர் வட்டிக்குப் பணம் எடுத்ததே இதற்கான காரணம் என்றும் பின்னர் தாம் அறிந்ததாகவும் அறியத்தருகிறார் தகவல் தந்தவர். அதன் பிறகு தனது ஊதாரித்தனத்தால் தறி கெட்டு அலைந்து, உள்ள பணத்தையெல்லாம் ஒன்றரை வருடங்களுக்குள்ளே கசினோ,பெண்கள் சல்லாபம் என்று பல காரணங்கள் மூலம் இழந்து தவித்துள்ளார். இதே வேளை மனைவியின் அதீத முயற்சியால் இன்னும் ஒரு தொழில் முயற்சியில் பேரளவில் இறங்கிய இந்நபர் அறிந்த,அறியாத தன்னால் வாய்ப்பேச்சில் வளைய வைக்கக்கூடிய அனைவரிடமும் கடன்,வட்டிக்குக் கடன் என்று ஊர் முழுக்க கடனை வளர்த்து வைத்துள்ளார். இப்படியாகவும் ஒரு வருடம் அளவில் வாழ்க்கையை ஓட்டிய இந்நபர் பற்றிய விபரங்களை ஒருவொருக்கொருவர் கதைத்துக்கொண்டதன் விளைவாக இனியும் எவரும் இவரை நம்பப் போவதில்லை என்ற உண்மையையும் இவர் உணர்ந்துள்ளார். எனினும்,தனது வறட்டு கெளரவத்தை விட்டுக்கொடுக்காத இந்நபர் தனது மனைவி, பிள்ளைகளின் சாதாரண வாழ்க்கைச் செலவைக் கூட உதாசீனப் படுத்தியுள்ளார். இதன் விளைவில் வீட்டின் பெயரிலும் பெரியளவு தனியார் கடன்கள் பதியப்பட்டுள்ளது. பிள்ளைகளுக்கான உதவிப் பணம் பெற்று வருவதன் விளைவாக மூன்றில் ஒரு பங்கு தேவையையாவது நிறைவேற்றிக்கொண்டு வாழும் மனைவிக்கு ஒரு நல்ல கணவனாக இவர் கடந்த பத்து வருடங்களில் ஒரு நாள் கூட வாழ்ந்திருக்க முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில், தன்னிடம் எஞ்சியுள்ள வெளிநாட்டு நிலத்தை ஏதாவது செய்யும் நோக்கில் மீண்டும் அறிந்த சிலரிடம் விபரத்தைக் கூறி நிலம் விற்று பணம் தருவதாகக் கூறி நிலத்தின் பெறுமதியை விட அதிகமாக கடன் பெற்றுள்ளார் குறிப்பிட்ட நபர். நிலம் விற்கச் சென்ற போர்வையில் மீண்டும் தனது லீலைகளில் இறங்கிவிட்ட இந்நபரின் கொடுமையான விடயம் என்னவென்றால், சில காலங்களுக்கு முன்னர் தொழில் தேவைகளுக்காக தனது தாலிக் கொடியுடன் சில நகைகளை அடகு வைத்துக் கொடுத்துள்ளார் மனைவி. இவை அருதியாகும் காலம் நெருங்கிவிட்டதனால் அடகு வைக்கப்பட்டிருந்த நிறுவனத்தில் இருந்து ஒரு கடிதம் வந்திருக்கிறது. மூன்று நாட்களுக்குள் நகைகளை மீளப்பெறாவிடின் அவற்றை திரும்பப் பெற முடியாது என்ற எச்சரிக்கை. பதறிப்பான மனைவி எவ்வளவோ கஷ்டப்பட்டும் இறுதி நாள் வரை அவரை தொடர்பு கொள்ள முடியாமல் போயுள்ளது. ஒரு வகையில் மூன்றாவது நாள் இத்தகவலைக் கூறியவரின் நண்பர் ஒருவரும் குறிப்பிட்ட நபரும் அருகில் இருந்த போது அவரின் தொலைபேசியில் இவரைத் தொடர்பு கொள்ளக் கூடிய வசதி கிடைத்துள்ளது. மனைவி விடயத்தைக் கூறியுள்ளார், அது பரவாயில்லை வந்து பார்த்துக்கொள்கிறேன் என்று சாதாரணமாக கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார் அந்த நபர். இதில் கொடுமையான விடயம் என்னவென்றால், மனைவியின் தாலிக்கொடியை இழந்த அந்த நேரத்தில் அவசரமாக அவர் தொலைபேசியைத் துண்டித்து விட்டு கைம்பெண் ஒருவரோடு சல்லாபித்துக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் விடயத்தினை அறிந்திருந்தாத நண்பர்கள் இருவரும் பின்னர் இது தொடர்பில் கதைத்துக்கொண்டதனால் இவ்விபரங்கள் வெளியே தெரிந்துள்ளது. எனினும், தனது தாலிக்கொடியை கைவிட்டுவிட்டு, விபச்சாரியுடன் தனது கணவர் சுற்றித்தரிகிறார் என்பது அந்த மனைவிக்குத் தெரியாது. இச்சம்பவமானது இணையத்தில் பிரசுரமாகிறது என்பதை அறிந்து, சமூக அக்கறையுடன் தகவல்களை வழங்கியவருக்கு முற்றம் சார்பான நன்றியைத் தெரிவிக்கிறேன். -------------------- |
|
|
|
Oct 6 2004, 08:04 PM
Post
#14
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 11,282 Joined: 25-February 04 Member No.: 61 |
நன்றி பவன்.
செய்தியைத் தந்தவருக்கும். "ஒன்னுமே தெரியல்ல உலகத்திலே, என்னமோ நடக்குது மர்மமா இருக்குது" -------------------- பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம். ![]() |
|
|
|
Oct 6 2004, 09:32 PM
Post
#15
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (bavan @ Oct 6 2004, 07:44 PM) இதில் கொடுமையான விடயம் என்னவென்றால், மனைவியின் தாலிக்கொடியை இழந்த அந்த நேரத்தில் அவசரமாக அவர் தொலைபேசியைத் துண்டித்து விட்டு கைம்பெண் ஒருவரோடு சல்லாபித்துக் கொண்டிருந்தார். QUOTE எனினும், தனது தாலிக்கொடியை கைவிட்டுவிட்டு, விபச்சாரியுடன் தனது கணவர் சுற்றித்தரிகிறார் என்பது அந்த மனைவிக்குத் தெரியாது. பாவம் மனைவி. இப்படியான ஒருவனுக்கு வாழ்க்கைப் பட்டதனால் எத்தனை துன்பச் சுமைகளை சுமந்துள்ளாள்? சுமக்கின்றாள்? சுமக்கப் போகின்றாள்? நாளை அந்தப் பிள்ளைகளின் நிலை என்ன? நன்றி பவன். QUOTE திருப்தி தான் உலகின் மிகப்பெரிய செல்வம்.உலகின் மிகப்பெரிய தரித்திரனாக இருந்தாலும் மனதில் திருப்தி உள்ளவனாக இருந்தால்
அவன் தான் செல்வந்தன். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Oct 7 2004, 11:18 AM
Post
#16
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,457 Joined: 14-July 04 Member No.: 137 |
நன்றி பவன்
(sathiya) பாவம் மனைவி. இப்படியான ஒருவனுக்கு வாழ்க்கைப் பட்டதனால் எத்தனை துன்பச் சுமைகளை சுமந்துள்ளாள்? சுமக்கின்றாள்? சுமக்கப் போகின்றாள்? நாளை அந்தப் பிள்ளைகளின் நிலை என்ன? This post has been edited by thanuja: Oct 7 2004, 11:18 AM -------------------- அன்பு வைப்பவரின் அன்பை நேசி ; துன்பம் வரும் போதும் இன்பமாய் தெரியும்
|
|
|
|
Oct 7 2004, 11:37 AM
Post
#17
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 4,103 Joined: 29-December 03 From: Norway Member No.: 24 |
நன்றி பவன்.
எப்படியெல்லாமோ மனிதர்கள், ம் ம் ம். -------------------- <span style='font-size:8pt;line-height:100%'>
அன்புதான் உலக மகா சக்தி............. என்றும் அன்புடன்..கலை</span> ![]() |
|
|
|
Oct 7 2004, 01:28 PM
Post
#18
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,461 Joined: 28-July 04 Member No.: 141 |
தகவலுக்கு நன்றி பவன்
-------------------- தமிழன் இல்லாத நாடில்லை - தமிழனுக்கென்று ஓரு நாடில்லை
|
|
|
|
Oct 15 2004, 10:56 AM
Post
#19
|
|
![]() நிர்வாகம் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Support Posts: 4,369 Joined: 18-December 03 From: Scotland Member No.: 7 |
QUOTE (jay_jay @ Oct 7 2004, 01:28 PM) தகவலுக்கு நன்றி பவன் எங்கே ஜேஜே உங்கள் வரவு குறைவாக இருக்கிறதே? -------------------- |
|
|
|
Oct 15 2004, 11:07 AM
Post
#20
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (bavan @ Oct 15 2004, 10:56 AM) QUOTE (jay_jay @ Oct 7 2004, 01:28 PM) தகவலுக்கு நன்றி பவன் எங்கே ஜேஜே உங்கள் வரவு குறைவாக இருக்கிறதே? குறைவா? இல்லையே பவன். ஜே ஜே கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக முற்றத்திற்கு வரவே இல்லையே. -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 04:29 PM |