IPB

Welcome Guest ( Log In | Register )

<% ANNOUNCEMENT %>
4 Pages V   1 2 3 > »   
Reply to this topicStart new topic
முத்திரை பதித்த சித்திரைப் பிறப்பு!
சத்தியா
post Jun 18 2004, 07:47 PM
Post #1


Senior
**********

Group: Moderators
Posts: 25,080
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53




முத்திரை பதித்த சித்திரைப் பிறப்பு !
*******************************


நினைவோ ஒரு பறவை.....
விரிக்கும் அதன் சிறகை.....


பிஞ்சு வயதில் என் நெஞ்சில் பதிந்த ஓர் உண்மைச் சம்பவத்தை
உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைத்து... இந்தப் பதிவேட்டை பதியத் தொடங்குகின்றேன்.

எம் தாய் நாட்டில் வருடப் பிறப்பு, தீபாவளி, பொங்கல்... இவை போன்ற திருநாட்கள் வரும் போதெல்லாம் எமக்குள் அளவில்லாத கொண்டாட்டமும் மகிழ்ச்சியும்தான்... இல்லையா? ம்... அந்த வகையில் அப்போது வந்த ஓர் நல்ல நாள் பெரு நாளில் நடந்த ஓர் உண்மைச் சம்பவமே இந்தச் சம்பவம் ஆகும்.

அது ஒரு சித்திரை மாதம். சித்திரை வருடப் பிறப்பிற்காக எமது காத்திருப்பு. பலகாரங்கள், வெடிகள், பூந்திரிகள் இவற்றின் ஆவல் ஒரு பக்கம். மறு புறம் வாங்கி வைத்திருக்கும் அந்த புத்தம் புதிய அழகான பச்சைச் சட்டையை போட்டு எல்லோருக்கும் காட்டத் தவிக்கும் குழந்தைத்தனம் ஓர் புறம்.

ஓவ்வொரு நாளும் அம்மாவிடம் அந்தச் சட்டை போடுவது பற்றியே என் கதைகள் நீண்டு கொண்டு செல்லும். அப்போது என் அம்மா சொல்லுவா...

"இந்தச் சட்டையை வருடப் பிறப்பன்றுதான் போட வேணும். அதுவும் மருத்து நீர் வைத்து குளிச்சுப் போட்டுத்தான் புதிதாய் போட வேணும்"... என்று என் அம்மா சொன்னார்.

ஆனாலும்... அந்த வருடப் பிறப்பு பிறக்க இன்னும் சில நாட்கள் இருந்தன. அந்த நாலைந்து நாட்கள் வரை காத்திருக்க அந்தப் பிஞ்சு வயதில் எனக்குப் பொறுமை மிகவும் குறைவாகவே இருந்தது.

அப்படியானால் என் அப்பாவிடம் கேட்டு விட்டால்? ... ம்... அப்பா என் மீது வைத்திருக்கும் செல்லத்தால் விட்டுத் தருவார் என்று ஒரு நட்பாசை வேறு.

ம்... சரி என அப்பாவிடம் போய் அந்தச் சட்டையை போட ஐஸ் வைத்தேன். ம்கூம்... அங்கேயும் நல்ல பதில் கிடைக்கவில்லை. அப்பாவும் அம்மா கூறிய அதே பதிலைத்தான் சொன்னார்.

ம்... அப்படியானால் என்ன செய்ய முடியும்? இனி வருடப் பிறப்பு வரும் நாள் வரை பார்த்துப் பார்த்து காத்திருக்க வேண்டியதுதான்... என்ற நிலைக்குத் நான் தள்ளப்பட்டேன்.

இந்த நிலை எனக்கு மட்டுமல்ல... இதே நிலைதான் என் சகோதரர்களின் நிலையும்.

சரி... இனி என்ன செய்வது? வருடப் பிறப்பிற்கு இன்னும் எத்தனை நாள் இருக்கின்றது?... என்று தினசரி எண்ணிய படியே, ஒவ்வொரு நாளும் அந்தச் சட்டையை எடுத்துப் பார்ப்பதும் வைப்பதுமாக நாட்களைக் கழித்துக் கொள்கின்றேன்.

ம்... நான் மட்டுமல்ல... நாம் காத்திருந்த அந்த வருடப்பிறப்பிற்கு இன்னமும் ஒரே ஒரு நாள்தான் இருந்தது. ஆனால் முதல் நாள் எம் வாழ்க்கையில் நாம் எதிர் பாராத அந்தப் பேரிடி வந்து விழுந்தது.


மிகுதி தொடரும்............


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
றெனிநிமல்
post Jun 18 2004, 08:09 PM
Post #2


Senior
**********

Group: Disabled Members
Posts: 11,282
Joined: 25-February 04
Member No.: 61



நன்றி சத்தியா.

இதோ பூனைக்கு மணியை கட்டி விட்டார் சத்தியா! ohmy.gif

தொடர்ந்து எழுதுங்கள் ஆர்வமாக இருக்கின்றது மற்ற பகுதியை கேட்பதற்கு. smile.gif


--------------------
பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம்.
Go to the top of the page
 
+Quote Post
கலை
post Jun 18 2004, 08:18 PM
Post #3


Senior
**********

Group: Disabled Members
Posts: 4,103
Joined: 29-December 03
From: Norway
Member No.: 24



என்ன சத்யா! இப்படி தொடரும் போட்டு எம்மை சோதிக்கிறீர்கள். விரைவில் சொல்லி விடுங்கள். பிறகு என் தலை வெடித்து விட்டால் நீங்கள்தான் அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.

பி.கு. அருமையான வசன நடையில் ஆரம்பித்து வைத்திருக்கிறீர்கள் இந்த பகுதியை. வாழ்த்துக்கள். மற்றவர்களும் தொடர்வார்கள் என்று நம்புகிறேன்.


--------------------
<span style='font-size:8pt;line-height:100%'>
அன்புதான் உலக மகா சக்தி.............
என்றும் அன்புடன்..கலை
</span>

Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Jun 19 2004, 06:43 AM
Post #4


Senior
**********

Group: Moderators
Posts: 25,080
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



QUOTE (Kalai @ Jun 18 2004, 08:18 PM)
என்ன சத்யா! இப்படி தொடரும் போட்டு எம்மை சோதிக்கிறீர்கள். விரைவில் சொல்லி விடுங்கள். பிறகு என் தலை வெடித்து விட்டால் நீங்கள்தான் அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.


நன்றி றெனி. இந்த ohmy.gif ஆச்சரியக் குறிக்கு என்ன அர்த்தம் என்று
விளங்கவில்லை. பொதுவாக எந்த ஒரு பக்கத்திலும் முதலில்
பிள்ளையார் சுழி போடுவது நீங்கள் தான். என்னடா நான் சுழி
போட முன் சத்தியா முந்தி விட்டாளே என்ற ஆச்சரியமா? tongue.gif


நன்றி கலை. எனக்கு நீண்ட காலமாக ஓர் ஆசை. இந்த வெடித்த
தலைக்குள் என்ன எல்லாம் இருக்கிறது என கண் கொண்டு பார்க்க
பார்க்க வேண்டும் என்று. அதற்கு இப்போது தான் சந்தர்ப்பம் வந்திருக்கிறது.
உங்கள் முகவரியைத் தாருங்கள் தலை வெடித்து விட்டது என
அறிந்ததும் முதலாவது ஆளாக வந்து பார்க்க வேண்டும். biggrin.gif tongue.gif

பி.கு... இந்த தொடர் வாரம் ஒரு முறை தான் மலரும். இது எப்படி?


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
கலை
post Jun 19 2004, 07:44 AM
Post #5


Senior
**********

Group: Disabled Members
Posts: 4,103
Joined: 29-December 03
From: Norway
Member No.: 24



sad.gif sad.gif sad.gif sad.gif sad.gif sad.gif sad.gif
ohmy.gif ohmy.gif ohmy.gif ohmy.gif சரி. விலாசம் அனுப்பி வைக்கிறேன்.


--------------------
<span style='font-size:8pt;line-height:100%'>
அன்புதான் உலக மகா சக்தி.............
என்றும் அன்புடன்..கலை
</span>

Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Jun 19 2004, 02:38 PM
Post #6


Senior
**********

Group: Moderators
Posts: 25,080
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



2 ஆம் பாகம் தொடர்கிறது..........

அன்று மாலை 3 மணியிருக்கும் நாமெல்லோரும் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தோம். திடீரென வீட்டில் ஒரே பரபரப்பு... அழுகைச் சத்தம் வேறு கேட்கிறது. என் வீட்டிற்கு அருகில்தான் எனது அம்மம்மா வீடும் இருந்தது. அங்கிருந்தும் அம்மம்மா, அம்மப்பா, அன்ரிமார் எல்லோரும் கதறி அழுதபடி எங்கள் வீட்டிற்கு ஓடி வருகிறார்கள். எனக்கு அது ஏன் என எதுவுமே புரியவில்லை. விளையாடிக் கொண்டிருந்த நாமெல்லோரும் உள்ளே ஓடிச் செல்கிறோம்.

அப்போது அன்ரி என்னைக் கட்டி அணைத்தவாறே கதறி அழுகிறார். அந்த அழுகைக்கு காரணம் என்ன என்று தெரியாமலேயே என் கண்களிலிருந்தும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நானும் அழுகிறேன்... அழுதவாறே...

"ஏன் அன்ரி எல்லோரும் அழுகின்றீங்கள்?" ... நான் அன்ரியின் முகத்தைப் பார்த்தவாறே கேட்கின்றேன். அன்ரி என்னை தூக்கி அணைத்தவாறே...

"உங்களை எல்லாம் தவிக்க விட்டு உங்கட அம்மா செத்துப் போயிற்றாவடி"... என்று சொன்னா. அன்ரி அப்படிச் சொன்னதும் அங்கே எல்லோரின் அழுகையும் இன்னமும் பலமாக ஓங்கி ஒலிக்கிறது.

அம்மா செத்துப் போனாவா?... அப்படி என்றால் என்ன?...

எனக்கு எதுவுமே விளங்கவில்லை. அருகில் நின்ற அக்காவிடம் கேட்கிறேன். அவளும் சிறியவள்தான். அவளும் தனக்குத் தெரியாது என்று சொன்னாள். சகோதரர்கள் எவருக்குமே அப்படி என்றால் என்ன என்று தெரியவில்லை. எல்லோரும் திரு திரு என முழித்தவாறே ஒதுங்கிக் கொள்கின்றோம்.

நேரம் கரைகின்றது. இடையிடையே அம்மாவின் அருகே சென்று நான் அம்மாவின் முகத்தை நோட்டம் விடுகின்றேன். சிரித்த முகத்துடனே பொட்டும் வைத்தபடி... மாலைகளுடன் அமைதியாக படுத்துக் கிடக்கின்றாள்.

அம்மாவை ஏன் இப்படி வைத்திருக்கிறார்கள்?... அம்மா ஏன் எழுந்திருக்கவில்லை? ஏன் கண் விழித்துப் பார்க்கவில்லை? ஏன் ஒரு வார்த்தை கூட கதைக்கவில்லை?...

என்று எனக்கு எதுவுமே புரியாமல் ஓடிப் போய் அப்பாவின் மடிக்குள் புதைந்து கொள்கின்றேன்.

அங்கே அப்பாவும் அழுகின்றார். அப்பா ஏன் அழுகின்றார்? அப்பா ஓர் நாள் கூட அழுவதில்லையே? ... அப்பா அழுவதை அன்றுதான் நான் முதன் முதலில் பார்க்கின்றேன். அப்பா அழுவதைப் பார்த்ததும் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அப்பாவின் தோள்களை கட்டிப் பிடித்தவாறே நானும் அழுகின்றேன்...


மிகுதி தொடரும்..........்


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
asuran
post Jun 19 2004, 03:09 PM
Post #7


Senior
**********

Group: Disabled Members
Posts: 470
Joined: 18-December 03
Member No.: 6



ஆஹா மறுபடியும் சஸ்பென்ஸா rolleyes.gif laugh.gif biggrin.gif அருமையாக நகர்கிறது biggrin.gif
Go to the top of the page
 
+Quote Post
thamarai
post Jun 19 2004, 05:37 PM
Post #8


Senior
**********

Group: Disabled Members
Posts: 380
Joined: 21-December 03
Member No.: 18



தொலைகாட்சி நாடகங்களில் தான் இப்படி என்றால் நீங்களுமா?(தொடரும் biggrin.gif )

mad.gif mad.gif mad.gif
அடுத்த அங்கத்தை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.

என்றும் அன்புடன்....
தாமரை.
Go to the top of the page
 
+Quote Post
றெனிநிமல்
post Jun 20 2004, 07:36 AM
Post #9


Senior
**********

Group: Disabled Members
Posts: 11,282
Joined: 25-February 04
Member No.: 61



நன்றி சத்தியா.

உங்கள் அம்மாவின் ஆத்மா சாந்தியடையட்டும்.
உங்கள் நெஞ்சை விட்டு நீங்காத சோக நினைவுகளை எம்மோடு மீட்டிப் பார்க்கின்றீர்கள்.


--------------------
பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம்.
Go to the top of the page
 
+Quote Post
ramesh
post Jun 21 2004, 06:48 AM
Post #10


Senior
**********

Group: Disabled Members
Posts: 724
Joined: 18-December 03
Member No.: 9



நன்றி சத்தியா தொடருங்கள்
Go to the top of the page
 
+Quote Post
கலை
post Jun 21 2004, 08:17 AM
Post #11


Senior
**********

Group: Disabled Members
Posts: 4,103
Joined: 29-December 03
From: Norway
Member No.: 24



சத்யா! பதிவேட்டில் நீங்கள் பதிவு செய்துள்ள இந்த 'காயத்தின் வடு' மனதை உலுக்குகிறது. உண்மையில் மிகவும் கஷ்டமாக உள்ளது, இதை வாசிக்கும்போது. இந்த பதிவுகள்கூட ஒரு வகையில் ஆறுதலை தரும் என நம்புகிறேன். எங்களுடன் இந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்வதற்கு நன்றி சத்யா.


--------------------
<span style='font-size:8pt;line-height:100%'>
அன்புதான் உலக மகா சக்தி.............
என்றும் அன்புடன்..கலை
</span>

Go to the top of the page
 
+Quote Post
bavan
post Jun 21 2004, 09:10 AM
Post #12


நிர்வாகம்
**********

Group: Support
Posts: 4,369
Joined: 18-December 03
From: Scotland
Member No.: 7



உங்கள் மனதில் பதிந்திருந்த விடயத்தினை அப்படியே எழுதுகிறீர்கள், நினைத்துப்பார்க்கவே கஷ்டமான இழப்பு.

ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.


--------------------
நிலா ஒன்லைன் - எங்கும் எப்போதும் உங்களோடு..!
அன்புடன் : பவன்.
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Jun 21 2004, 02:33 PM
Post #13


Senior
**********

Group: Moderators
Posts: 25,080
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53




பாகம் 3 தொடர்கிறது.............


பொழுதாகிப் போனதே இன்னும் தூக்கமா...?
சொல்லாமல் போனது தாயே நியாயமா...?
கூட்டை விட்டுத் தாய்க் கிளி பறந்ததெங்கே...?


தனது 30 வயதிலேயே கட்டிய மனைவியை இழந்து... தன் வாழ்க்கையைத் தொலைத்து அழுது துடிக்கும் என் தந்தையின் அழுகை ஓரு புறம்...

காரணம் புரியாமல் கதறும் குழந்தைகளாய் எங்கள் அழுகை ஓர் புறம்...

அது மட்டுமல்ல... பிறந்து 15 நாள் நிறைந்த பச்சிளம் பாலகனாய் தாய்ப் பாலுக்காக தொட்டிலில் தேம்பி அழும் என் குட்டித் தம்பியின் அழுகை ஓர் புறம்...

தாம் ஆசையாய் ஆசையாய் பெற்றெடுத்த தங்கள் மூத்த மகளைப் பறி கொடுத்த தாய், தந்தையின் அழுகை ஓரு புறம்...

தமது உடன் பிறப்பை பறிகொடுத்துக் கதறும் சகோதரங்களின் அழுகை ஒருபுறம்...

உற்றார், உறவினர்களின் ஒப்பாரி ஒரு புறமுமாய் அன்றிரவு முழுவதும் கண்ணீரில் கரைகின்றது.

பொழுதும் விடிகின்றது. நாம் ஆசை ஆசையாய் காத்திருந்த அந்த வருடப் பிறப்பும் பிறக்கின்றது. அம்மாவின் இறுதிச் சடங்குகள் யாவும் நடைபெறுகின்றன.

பந்தம் பிடித்ததுவும்... அரிசி போட்டதுவும்... பூப்போட்டு அம்மாவை தொட்டுக் கும்பிட்டதும்... எல்லாம் முடிந்து அம்மாவை வைத்து பெட்டி மூடும் போது யாவரும் கதறி அழுத காட்சிகளும், பின் என் அம்மாவை ஊர்வலமாய் எடுத்துச் சென்ற காட்சிகளும்... எல்லாமே என் மனத்திரையில் தழும்பாய் பதிந்து... இப்போதும் அவை யாவும் கண்முன்னே நிழலாடுகின்றன.

நாம் காத்திருந்த அந்த வருடப் பிறப்பு கண்ணீரைத் தந்து என் நெஞ்சில் அழியாத ஓரு இடத்தைப் பிடித்து விடுகின்றது.

நாட்கள் மெல்ல நகர்கின்றன. அடிக்கடி மாறி மாறி நாம் அம்மாவைத் தேடி அழுகின்றோம்.

"அம்மா சாமியிடம் போயிற்றா நாளை வருவா"... என்று அப்பா எம்மைத் தேற்றிக் கொள்கின்றார். பகலெல்லாம் ஒருமாதிரி எம்மைத் தேற்றினாலும், மாலை நேரம் ஆனதும் அம்மாவைத் தேடி அழும் எம் விழிகள் சமாதானத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து... தினசரி அழுகையிலேயே எம் இரவுகள் கரையும்.

அப்பா எமக்கெல்லாம் சமாதானம் சொல்லியவாறு செய்வதறியாமல் தவித்துப் போய் நிற்பார்.


தொடரும்..................


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
roy
post Jun 21 2004, 02:55 PM
Post #14


Senior
**********

Group: Disabled Members
Posts: 1,979
Joined: 19-February 04
Member No.: 57



உங்கள் வேதனைகளில் நாங்களும் இணைந்து கொள்கிறோம். நன்றி சத்தியா.


--------------------
something is better than nothing
Go to the top of the page
 
+Quote Post
maxwell
post Jun 21 2004, 03:13 PM
Post #15


Senior
**********

Group: Disabled Members
Posts: 207
Joined: 22-January 04
Member No.: 47



வணக்கம் சத்தியா

பதிவேட்டில் நீங்கள் பதிவு செய்துள்ள விடயத்தை நினைத்துப்பார்க்க உண்மையில் மிகவும் கஷ்டமாக உள்ளது. உங்கள் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றேன். அடுத்த அங்கத்தை ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றேன் என்று என்னால் சொல்லமுடியவில்லை...

அன்புடன் மக்ஸ்.


--------------------
அன்புடன் மக்ஸ்.....
வாழ்க நிலா முற்றம்

Go to the top of the page
 
+Quote Post
றெனிநிமல்
post Jun 21 2004, 04:45 PM
Post #16


Senior
**********

Group: Disabled Members
Posts: 11,282
Joined: 25-February 04
Member No.: 61



நன்றி சத்தியா.
மனதில் இருக்கும் கவலையை யாரிடமாவது சொன்னால் சோகம் குறையும் என்று சொல்வார்கள்.
நீங்கள் ஒருவரிடம் இல்லை இந்த நிலா மூலம் உலகத்திற்கே சொல்கின்றீர்கள்
உங்கம் மனம் சாந்தியும் சமாதானமும் பெறட்டும். sad.gif


--------------------
பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம்.
Go to the top of the page
 
+Quote Post
thamarai
post Jun 22 2004, 01:15 PM
Post #17


Senior
**********

Group: Disabled Members
Posts: 380
Joined: 21-December 03
Member No.: 18



நன்றி சத்தியா!

இந்த வேதனையெல்லாம் நானும் அனுபவித்தவள் தான். என் செய்ய நாம கொடுத்து வைத்தது அவ்வளவுதான். இழப்பு என்பது யாருக்கு வந்தால் என்ன? வேதனைகள் ஒரே மாதிரித்தானே.

உங்கள் அம்மாவின் ஆத்மா சாந்தியடையட்டும்.

என்றும் அன்புடன்....
தாமரை.
Go to the top of the page
 
+Quote Post
கலை
post Jun 22 2004, 01:36 PM
Post #18


Senior
**********

Group: Disabled Members
Posts: 4,103
Joined: 29-December 03
From: Norway
Member No.: 24



சத்யா, உங்கள் பதிவுகள் கண்ணில் நீரை வரவழைக்கிறது. இழப்புக்கள்தான் எத்தனை பாரமானவை, வலி தருபவை. அவற்றில் இருந்து மீண்டு வருவதற்குத்தான் எத்தனை மன திடமும், தைரியமும் தேவை.


--------------------
<span style='font-size:8pt;line-height:100%'>
அன்புதான் உலக மகா சக்தி.............
என்றும் அன்புடன்..கலை
</span>

Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Jun 22 2004, 02:38 PM
Post #19


Senior
**********

Group: Moderators
Posts: 25,080
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



4 ஆம் பாகம் தொடர்கிறது....................்

இறைவா உனக்கொரு கோயில் உண்டு
இரவும் பகலும் தீபம் உண்டு
எமக்கென இருந்தது ஓர் விளக்கு
அதனுடன் தானா உன் வழக்கு
அதனுடன் தானா உன் வழக்கு...?


நாட்கள் மாதங்கள் ஆகி, மாதங்கள் வருடங்கள் ஆகி வருடங்கள் சில உருண்டோடின. பாடசாலைக்குள் என் கால்கள் பதித்த காலப் பகுதியில்...

என்னுடன் படித்த சக மாணவி ஒருத்தி நல்ல அருமையாக கதை சொல்வாள். அதிலும் பேய்க் கதை சொல்வதில் நல்ல விண்ணி. கடவுள் பேய்க் கதை சொல்
வதற்கென்றே சிலரை இந்த உலகத்தில் படைத்துள்ளார். அதில் ஒருத்திதான் இவள் என்றும் சொல்லிக் கொள்ளலாம். சாதாரணமாகவே அவளுக்குப் பெரிய கண். அந்தக் கண்ணை பேய் மாதிரி உருட்டி உருட்டி கையால் செய்கையும் காட்டி நல்ல அருமையாக பேய்க் கதை சொல்லுவாள். அவளின் பேய்க் கதை ரசிப்பதற்கென்றே வகுப்பில் ஓர் கூட்டம் இருந்தது. அதில் நானும் ஒருத்திதான். கதை கூறி முடிய கூறுவாள்...

"சத்தியா கவனம் இரவில் உன் அம்மா பேயாக வந்து உன் கழுத்தை திருகி விடுவா"... என்றெல்லாம் பயப்படுத்தி விடுவாள். அப்போது இல்லை அப்படி இல்லை... என அவளுடன் வாதாடினாலும் கூட... உள்ளே ஓர் பயம் எனக்குள் வந்து தொற்றிக் கொள்ளும்.

நானும் வீட்டுக்கு வந்ததும் வராததுமாக அவள் சொன்ன பேய்க் கதையை என் சகோதர்களுக்கு கூறி விடுவேன். பிறகு என்ன? மாலை நேரம் ஆனதும் எல்லோருக்கும் பயம் பிடித்து விடும். வெளியில் காலடி வைக்க ஒரே நடுக்கம். நானோ இரவில் பயங்கரக் கனவு கண்டு கதறி அழுவேன். அப்படி ஓர் தடவைபயங்கரக் கனவு கண்டு பயந்து வாய் புலம்பத் தொடங்கி விட்டேன். அத்தோடு பயங்கரக் காச்சலும் பிடித்து விட்டது.

ஏன் என அப்பா விசாரித்த போது நான் அவள் சொன்ன பேய்க் கதை பற்றி அப்பாவிற்கு சொன்னேன். அப்பாவிற்கு கோவம் வந்து விட்டது. அப்பா எனக்கு தைரியம் சொல்லி விட்டு நேரடியாக பாடசாலைக்கு போய் ஆசிரியரிடம் இது பற்றிக் கூறி விட்டார். பேய்க் கதை சொல்பவளுக்கு தண்டணை கொடுத்த ஆசிரியர் இனிமேல் சொல்லக் கூடாது என்றும் கூறி விட்டார். இப்படி எத்தனை துன்பங்களை என் அப்பா சுமந்தார் என இப்போது நினைக்கும் போது என் மனம் பாரமாகின்றது.

காலம் செல்லச் செல்ல... இந்தப் பாடசாலைப் பருவத்தில் சொல்ல முடியாத பல சோகங்களையும், எண்ணற்ற ஏக்கங்களையும் என் நெஞ்சம் சுமக்கத் தொடங்கியது. இதை எல்லாம் யாரிடமும் சொல்ல முடியாது என் நெஞ்சுக் குழிக்குள் புதைக்கத் தொடங்கினேன்.

அம்மாவின் இழப்பு அதிகமாய் என்னை வாட்டியது. பாடசாலையில் மற்றவர்கள் அம்மா பற்றிக் கதைக்கும் போதும், உணவு ஊட்டி விடுவது,உடை
கள் மாற்றி விடுவது, தலை இழுத்து விடுவது, இவை பற்றிக் கூறும் போதெல்லாம் பல தடவைகள் நான் அழுதிருக்கின்றேன்.

நாம் அந்தப் பிஞ்சு வயதில் என்ன பாவம் செய்தோம்? எதற்காக கடவுள் இப்படி ஒரு பெரிய தண்டணையை எமக்குத் தந்தார்? என்று நினைக்கும் போது என்னை அறியாமலேயே கடவுளில் ஓர் வெறுப்பு வந்ததும் உண்டு.

பருவங்கள் மாற மாற புரிந்துணர்வுகள் வளர்ந்தமையால் அப்பாவின் நிலையும் புரிந்தது. அப்பா அடிக்கடி சோகத்தில் துவண்டு தனிமையில் கண்ணீர் சிந்துவதையும் நான் கண்டிருக்கிறேன். அதனால் என் மனச் சோகத்தை எனக்குள் புதைத்து தனிமையில் அழுது என் மனப்பாரத்தைக் குறைக்கத் தொடங்கினேன்.

இப்படி ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு வகையான சோகம் வாட்டி
வதைத்தது.

மூன்று வருடங்கள் கழிந்து மீண்டும் ஓர் சித்திரை வருடப் பிறப்பு பிறந்தது. அந்த நாளில் அம்மாவிற்கான திதி கொடுக்கப்பட்டது. உற்றார், உறவினர், நண்பர்கள் எல்லோரும் வந்து கலந்து சிறப்பித்து விட்டு... மாலை வேளை எல்லோரும் வீடு திரும்பி விட்டார்கள். அந்த வேளையில்...

தன் சோகங்களையும், குடும்பச் சுமைகளையும் சுமக்க முடியாமலோ
என்னவோ தெரியவில்லை... அப்பா நஞ்சருந்தி விட்டார். அதிக நேரமாக அப்பாவைக் காணாது தேடிய போது... பூட்டப்பட்ட அறைக்குள் அப்பா மயங்கிய நிலையில் கிடந்தார்...

மீண்டும் ஒரு சித்திரை வருடப் பிறப்பில் எம் வாழ்வில் மீண்டும் ஒரு
பேரிடி விழுகின்றது.


தொடரும்......................


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
asuran
post Jun 22 2004, 03:41 PM
Post #20


Senior
**********

Group: Disabled Members
Posts: 470
Joined: 18-December 03
Member No.: 6



எனது ஆழ்ந்த அதிர்ச்சிகள்.. sad.gif huh.gif
Go to the top of the page
 
+Quote Post

4 Pages V   1 2 3 > » 
Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



RSS Lo-Fi Version Time is now: 9th February 2010 - 01:39 PM