IPB

Welcome Guest ( Log In | Register )

<% ANNOUNCEMENT %>
 
Reply to this topicStart new topic
சுகமான காதல்..!
sivanes
post Sep 16 2007, 04:33 PM
Post #1


Senior
**********

Group: Senior Members
Posts: 951
Joined: 17-December 03
Member No.: 3



ஒற்யையடிப் பாதையிலே
ஒருநாள் சந்தித்தோம்.
மறுமுறை சந்திக்க
விடுமுறையை தேடினேன்.

சிரித்தாய் உனக்குள்
கதைத்தேன் எனக்குள்.
மாதங்கள் ஓடின
மலருன்னை தேடின.

மறுபடியும் எப்போ
சந்தர்ப்பம் கிடைக்கும்
மயிலே உன்னோடு
மனம்விட்டு பழகிட..

வாடியது மனம்
தேடியது உன்னை
தேடாமல் வந்தாய்
தேவதை ஒருநாள்.

குவிந்தது சந்தோசம்
கூவியது மனது.
கேட்டதோ உனக்கும்
காதலையும் சொன்னாய்

ஈழத் தீவில்
எனக்காகாய் பூத்து
எத்தனை இன்பம்
எனக்குள் தந்தாய்.

கொஞ்சிப் பழகி
கெஞ்சித் திரிந்து
மிஞ்சும் வாலிப
சுகங்களை கண்டோம்.

பேராதனையில்….
நுழைவு கிடைக்க
காதலை வளர்க்க
கூடமும் அமைத்தோம்.

கொழும்பு நகரில்
சுற்றித் திரிந்து
பசுமை நினைவுகள்
பகிர்ந்தும் உண்டோம்.

காலித் திடலும்
மாலைப் பொழுதும்
மனதை கவர்ந்து
மங்கை மகிழ..

எட்டுத் திசையும்
என்னவள் முகமாய்
பட்டுத் தெறித்து
பலகதை சொல்ல..

நெஞ்சக் கூட்டில்
நினைவுகள் தாங்கி
விடியும் வரைக்கும்
கற்பனை சேர்க்க..

பொழுதும் விடிய
போய்விடும் நினைவை
கட்டி இழுத்து
எனக்குள் பூட்ட..

விடுவிடு என்றாய்
படபட என்று
பயந்த முகத்தை
பார்த்துச் சிரித்தேன்.

கடுகடுப்புடனே ….
காதில் சொன்னாய்
காதலைப் பற்றி
கொஞ்சும் தமிழில்..

புரிந்தது உனக்கு
புரியாமல் இருந்தது
புதிராக இருந்தது
எனக்குள் வெட்கம்.

போகட்டும் என்று
புறந்தள்ளி விட்டு
பூவே உன்னை
புரட்டிப் பார்க்க..

பொழுதும் விடிய
நினைவுகள் நகர..
கண்களும் சிவந்து
விழித்துக் கொள்ள..

காதலைப் பற்றி..
காதில் சொன்னது.
உண்மை என்று…
உள்ளமும் சொன்னது.

சிரிப்பும் வந்தது.
சிந்தனை சுழன்றது.
என்மனக் கட்டளை
உனக்கும் சொல்ல..

சொன்னேன் ஒருநாள்
சிரித்தாள் பலமுறை
இதுதான் காதல்
இப்படித்தான் இருக்குமென்று.

ஏக்கங்கள் தாக்கின
இரவுகள் நீண்டன..
ஏனோ எனக்குள்
புரியாத போராட்டம்.

இப்படி இருக்க..
ஒருநாள் சொன்னாள்.
தேவதை சொன்னது.
தேனாக இருந்தது.

காதலை வளர்த்தது
இனியும் போதும்.
கற்பனை வானில்
பறந்ததும் போதும்.

சேர்ந்து வாழ்வோம்
இருவரும் ஒன்றாய்
எமக்குள் இனியும்
இடைவெளி வேண்டாம்.

சொன்னதும் எனக்குள்
சுகமாக இருந்தது.
காதலில் வெற்றி
கண்ட மகிழ்ச்சி.


--------------------
வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும்
நினைவுகள் .....
என்றும் சுகமானவை..


..நட்புடன் சிவனேஸ்..


சிந்தனைப்பூக்கள்.

Go to the top of the page
 
+Quote Post
இனியவள்
post Sep 16 2007, 04:36 PM
Post #2


Senior
**********

Group: Disabled Members
Posts: 917
Joined: 1-January 07
Member No.: 808



QUOTE (sivanes @ Sep 16 2007, 04:33 PM)
காதலை வளர்த்தது
இனியும் போதும்.
கற்பனை வானில்
பறந்ததும் போதும்.

சேர்ந்து வாழ்வோம்
இருவரும் ஒன்றாய்
எமக்குள் இனியும்
இடைவெளி வேண்டாம்.

காதல் வரிகள் மிகவும் அருமை,
வாழ்த்துக்கள் smile.gif


--------------------
-------உடைமையில் உரிமை கோருவது அல்ல, அன்பு,
உன்னையே காணிக்கையாகத் தருவதுதான் அன்பு ------



***** நம்பிக்கை தளம்******




***** என் கிறுக்கல்கள்******
Go to the top of the page
 
+Quote Post
kalaimarthandam
post Sep 16 2007, 04:57 PM
Post #3


Senior
**********

Group: Senior Members
Posts: 2,901
Joined: 19-September 06
From: Trichy, Tamil Nadu, India.
Member No.: 652



சுகமான காதல் வரிகள் மனதில் சுகந்தம் கமழச்செய்கின்றது.
வாழ்த்துக்கள் சிவனேஷ்.


--------------------
வாழ்வோம் வாழவைப்போம்...

நட்புடன்,
மா. கலை அரசன்.


என் தளங்கள்: 1. தூறல். 2. காணி நிலம். 3. தாமிரபரணி.
Go to the top of the page
 
+Quote Post
Thanimathy
post Sep 16 2007, 05:18 PM
Post #4


Senior
**********

Group: Senior Members
Posts: 19,965
Joined: 3-December 05
From: Vancouver.( CANADA)
Member No.: 396



வாழ்த்துக்கள் சிவனேஸ்.... thumbs_up.gif

biggrin.gif biggrin.gif biggrin.gif

QUOTE
இப்படி இருக்க..
ஒருநாள் சொன்னாள்.
தேவதை சொன்னது.
தேனாக இருந்தது.

காதலை வளர்த்தது
இனியும் போதும்.
கற்பனை வானில்
பறந்ததும் போதும்.

சேர்ந்து வாழ்வோம்
இருவரும் ஒன்றாய்
எமக்குள் இனியும்
இடைவெளி வேண்டாம்.

சொன்னதும் எனக்குள்
சுகமாக இருந்தது.
காதலில் வெற்றி
கண்ட மகிழ்ச்சி.


சுகமான காதல் கவிதையில்
இதமாக மனம் மகிழ்வோடு நானும் ரசித்தேன்..
காலித்திடல் என்றதும், என் கற்பனையிலும் வந்தது
குடைக்குள் காதல் வளர்த்து கதைபேசும் காதலர்களை. smile.gif

கவிதை சுகமாகயிருந்தது. உங்கள் காதல் போல்..
ஆமா இது நிஜமா..? அல்லது கற்பனையா சிவனேஸ். rolleyes.gif


--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"

Go to the top of the page
 
+Quote Post
Thanimathy
post Sep 16 2007, 06:37 PM
Post #5


Senior
**********

Group: Senior Members
Posts: 19,965
Joined: 3-December 05
From: Vancouver.( CANADA)
Member No.: 396



அடேங்கப்பா...... 41.gif 41.gif 41.gif 41.gif 41.gif


மிகப்பிரமாதம்...எண்ணிப்பார்த்து

எண்ணிலடங்கா பரவசம்.. smile.gif

உன்னில் உள்ள திறமைகள் ஏராளம்

எழுது எழுது வரிகளில் அதிகமான கவிவரிகளாக

சாதனை ஒன்று நிலாமுற்றத்து பெருமையுடன் நிலை நாட்டுவோம். thumbs_up.gif

ஆஹா....அருமை சிவனேஸ்....104 வரிகளில் சிறந்ததொரு கவிதை.. 41.gif 41.gif 41.gif

சூப்பர்....வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். thumbs_up.gif thumbs_up.gif thumbs_up.gif thumbs_up.gif smile.gif


This post has been edited by Thanimathy: Sep 16 2007, 06:45 PM


--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"

Go to the top of the page
 
+Quote Post
sivanes
post Sep 16 2007, 08:33 PM
Post #6


Senior
**********

Group: Senior Members
Posts: 951
Joined: 17-December 03
Member No.: 3



நன்றிகள் இனியவள்.. கலைமார்த்தாண்டம்.. தனிமதி


--------------------
வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும்
நினைவுகள் .....
என்றும் சுகமானவை..


..நட்புடன் சிவனேஸ்..


சிந்தனைப்பூக்கள்.

Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Sep 16 2007, 09:02 PM
Post #7


Senior
**********

Group: Moderators
Posts: 25,089
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53




அழகான காதல்
அடி மனதில் பூத்து...

அன்பைப் பொழிந்து
இன்பத்துள் நுழைந்து...

இடைவெளி இன்றி
இருமனம் இணைந்தது
இது பெரும் சந்தோசமே! thumbs_up.gif

ம்ம்... அழகான காதல் கவிதை... வாழ்த்துக்கள் சிவனேஸ்.
smile.gif


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post

Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



RSS Lo-Fi Version Time is now: 9th February 2010 - 04:29 PM