நிலா முற்றம்: சாந்தமானவளே..! - நிலா முற்றம்

Jump to content

நிலா முற்றத்தில் நீங்களும் இணைந்து கொள்ளலாமே ? (Login l Register)
Page 1 of 1

சாந்தமானவளே..!

#1 User is offline   யாழ்_அகத்தியன் 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 1,048
  • Joined: 02-December 06
  • Current Mood: Current Mood: busy

   பணத்தின் மீது எனக்கு பொறாமை அதிகம்தான் அது யாருடன் அதிகம் சேர்கிறதோ அவர்களை அதிகமாய் உலகத்துக்கு பிடிக்கவைத்துவிடுகிறது -யாழ்_அகத்தியன்  பணத்தின் மீது எனக்கு பொறாமை அதிகம்தான் அது யாருடன் அதிகம் சேர்கிறதோ அவர்களை அதிகமாய் உலகத்துக்கு பிடிக்கவைத்துவிடுகிறது -யாழ்_அகத்தியன் Posted 15 November 2007 - 07:55 PM

என் காதலா உன் காதலா
பெரிதின்னு பார்பதற்காகவாவது
நாமிருவரும் காதலிக்க வேண்டும்
உன்னிடம் நான் தோற்றுப் போனாலும்
பரவாயில்லை

*

நீ என்னை இயக்க ஆரம்பித்தாய்
இதயம் தன் பொறுப்பு பறிபோனதே
தெரியாமல் துடிக்க மட்டுமே செய்கிறது

*

நீ எனக்கு கிடைத்தமைக்கு
அமைதியாய் நன்றி சொல்லி
வழிபடத் தொடங்கினேன்

எனக்கு மட்டும் கேக்கும்படியாய்
என் மனசு இறைவனை திட்ட
ஆரம்பித்தது

தாமதமாய் உன்னை எனக்கு
காட்டியமைக்காக

*

என் புகைப்படத்தை எதற்காக
எல்லாரிடமும் காட்டுகிறாய் என்று
கோவப்படுகிறாய்

அப்போதுதான் என் இதயம்
எனக்குள் இருப்பதற்காய்
கவலைப்பட்டேன்

*


"நான் உங்களை காதலிக்கிறேன்"
என்பதை மந்திரமாய் சொல்லிக்
கொண்டிருக்கிறாய்

உன் மேல் உள்ள பக்தியில்
எனக்கு சாமி வந்து ஆட
ஆரம்பிக்கிறேன்


-யாழ்_அகத்தியன்
0

#2 User is offline   anchu 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Disabled Members
  • Posts: 3,875
  • Joined: 13-September 05

Posted 15 November 2007 - 09:36 PM

நல்ல கவிதை வாழ்த்துக்கள் அகத்தியன் 41.gif 41.gif
http://tbn0.google.c...HikeSecrets.jpg
என்றும் மூழ்காத சிப் பிரெண்ட்ஸ் சிப்
0

#3 User is offline   sathiya 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Disabled Members
  • Posts: 35,118
  • Joined: 16-February 04

  Posted 15 November 2007 - 09:50 PM

QUOTE (யாழ்_ @ Nov 15 2007, 07:55 PM)
"நான் உங்களை காதலிக்கிறேன்"
என்பதை மந்திரமாய் சொல்லிக்
கொண்டிருக்கிறாய்

உன் மேல் உள்ள பக்தியில்
எனக்கு சாமி வந்து ஆட
ஆரம்பிக்கிறேன்


ஓஓ... இது வேற நடக்குதா? rolleyes.gif

வேப்பம் இலை எல்லாம் வைச்சா ஆடுறீங்க? biggrin.gif

ஓ...
சாந்தமானவளும்
உன் மனதை
காந்தமாய்க் கவர்ந்தாளோ...?

ம்ம்... நன்றாக இருக்கின்றது... வாழ்த்துக்கள் அகத்தியன். smile.gif

0

#4 User is online   Suganthe 

  • Senior
  • PipPipPipPipPipPipPipPipPipPip
  • Group: Senior Members
  • Posts: 5,204
  • Joined: 05-September 05
  • Current Mood: Current Mood: None Chosen

Posted 16 November 2007 - 02:12 AM

QUOTE
"நான் உங்களை காதலிக்கிறேன்"
என்பதை மந்திரமாய் சொல்லிக்
கொண்டிருக்கிறாய்

உன் மேல் உள்ள பக்தியில்
எனக்கு சாமி வந்து ஆட
ஆரம்பிக்கிறேன்


வாழ்த்துக்கள் அகத்தியன்
உன்னையே நீ உணர்
0

Share this topic:


Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

1 User(s) are reading this topic
0 members, 1 guests, 0 anonymous users