IPB

Welcome Guest ( Log In | Register )

<% ANNOUNCEMENT %>
 
Reply to this topicStart new topic
பேச மறுத்த இதயம்.
sivanes
post Nov 16 2007, 12:08 PM
Post #1


Senior
**********

Group: Senior Members
Posts: 951
Joined: 17-December 03
Member No.: 3



கேட்காமல் தந்தாய்..
மறுக்காமல் ஏற்றேன்.

மறுபடியும் மௌனம்
மனதை குழப்புமா…?

காதல் என்பது
முன்றெழுத்து மந்திரமா…?

மூடி மறைத்து
இதயங்கள் தவிக்க…?

குழப்பமா உனக்குள்
கோபமா என்னோடு…?

வார்த்தைகளால் என்னை
வசமாக்கினாய் உனக்குள்.

நம்பினேன் நாளும்
தேங்கியது நினைவுகள்.

தேங்கிய நினைவுகளை
சேர்ந்தே சுவைத்தோம்.

அன்பை வளர்த்தோம்.
ஆனந்தம் அடைந்தோம்.

ஆசைகளை சேர்த்து
காதலுக்கு இறைத்தோம்.

என்ன சுகங்கள்
எத்தனை எதிர்பார்ப்பு.

இப்படியே இருக்க
எவ்வளவு போராட்டம்…!

இறைவனிடமும் கேட்டோம்
இணையவேண்டும் நாமென்று.

இத்தனையும் நொடிப்பொழுதில்
இடிந்துபோனது ஏன்…?

மௌனமாய் ஏனானாய்
மங்கையே சொல்லிவிடு..

பேசமறுக்கும் இதயத்தை
புரிந்திடவும் முடியவில்லை.

போவென்று சொன்னாலும்
பொய்யுரைக்க முடியவில்லை.

நல்ல மனங்களுக்கு
நாளும் தொல்லைதான்.

நீயன்று சொன்னது
பொருந்துதுபார் எனக்கு..

பொருந்தாத உள்ளங்கள்
புரியாது காதலை

இருந்தாலும் உன்னை
இன்றுவரை நேசிக்கிறேன்.


--------------------
வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும்
நினைவுகள் .....
என்றும் சுகமானவை..


..நட்புடன் சிவனேஸ்..


சிந்தனைப்பூக்கள்.

Go to the top of the page
 
+Quote Post
bavan
post Nov 16 2007, 04:46 PM
Post #2


நிர்வாகம்
**********

Group: Support
Posts: 4,369
Joined: 18-December 03
From: Scotland
Member No.: 7



வாழ்த்துக்கள் சிவனேஸ், கவிதை நன்றாக அமைந்திருக்கிறது, தொடர்ந்து எழுதுங்கள்.


--------------------
நிலா ஒன்லைன் - எங்கும் எப்போதும் உங்களோடு..!
அன்புடன் : பவன்.
Go to the top of the page
 
+Quote Post
Thanimathy
post Nov 16 2007, 05:03 PM
Post #3


Senior
**********

Group: Senior Members
Posts: 19,965
Joined: 3-December 05
From: Vancouver.( CANADA)
Member No.: 396



வாழ்த்துக்கள் சிவனேஸ்...... thumbs_up.gif

QUOTE
இறைவனிடமும் கேட்டோம்
இணையவேண்டும் நாமென்று.

இத்தனையும் நொடிப்பொழுதில்
இடிந்துபோனது ஏன்…?

மௌனமாய் ஏனானாய்
மங்கையே சொல்லிவிடு..

பேசமறுக்கும் இதயத்தை
புரிந்திடவும் முடியவில்லை.


கவலையை விடுங்க சிவனேஸ்..
உங்களின் பேசமறுக்கும் இதயம் வந்து
ஆசையாகப் பேசிப்பழகும் நாளும் வரும்
அதுவரை கவிதை எழுதி உங்கள் மெளனத்தைக் கலையுங்கள். smile.gif


--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"

Go to the top of the page
 
+Quote Post
சின்னா
post Nov 16 2007, 06:50 PM
Post #4


Senior
**********

Group: Senior Members
Posts: 2,927
Joined: 1-February 07
Member No.: 848



QUOTE (sivanes @ Nov 16 2007, 12:08 PM)
இத்தனையும் நொடிப்பொழுதில்
இடிந்துபோனது ஏன்…?

sad.gif sad.gif sad.gif
மிகவும் கவலையாக இருக்கு

கவிதைக்கு வாழ்த்துக்கள் சிவனேஸ்... smile.gif


--------------------
உன்னால் எல்லாம் முடியும். துளித்துளியாய்க் கொட்டித்தானே குடம் நிரம்புகிறது...

அன்புடன் சின்னா.....
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Nov 16 2007, 10:24 PM
Post #5


Senior
**********

Group: Moderators
Posts: 25,080
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53




அன்பை வளர்த்து
ஆனந்தத்தில் திளைத்து
இன்பத்தில் மூழ்கி...

இப்போ
துன்பத்தைச் சுமந்தாயோ...?

ம்ம்... சோகம் சுமந்த கவிதைக்கு வாழ்த்துக்கள் சிவனேஷ். smile.gif


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
Suganthe
post Nov 17 2007, 03:33 PM
Post #6


Senior
**********

Group: Senior Members
Posts: 4,937
Joined: 5-September 05
From: Markham (Toronto )canada
Member No.: 329



QUOTE
இறைவனிடமும் கேட்டோம்
இணையவேண்டும் நாமென்று.


72_72.gif

கடவுள் கைவிடமாட்டார்
வாழ்த்துக்கள் சிவனேஸ்


--------------------
உன்னையே நீ உணர்
Go to the top of the page
 
+Quote Post
இனியவள்
post Nov 18 2007, 02:19 PM
Post #7


Senior
**********

Group: Disabled Members
Posts: 917
Joined: 1-January 07
Member No.: 808



பேசமறுக்கும் இதயத்தை
புரிந்திடவும் முடியவில்லை

இருந்தாலும் உன்னை
இன்றுவரை நேசிக்கிறேன்



நீ நேசித்த இதயம்
உன்னை நேசிக்க மறந்தாலும்,
உன் காதலை நீ என்றும் நேசித்து கவி வடி உறவே......


--------------------
-------உடைமையில் உரிமை கோருவது அல்ல, அன்பு,
உன்னையே காணிக்கையாகத் தருவதுதான் அன்பு ------



***** நம்பிக்கை தளம்******




***** என் கிறுக்கல்கள்******
Go to the top of the page
 
+Quote Post
kalaimarthandam
post Nov 20 2007, 02:15 AM
Post #8


Senior
**********

Group: Senior Members
Posts: 2,901
Joined: 19-September 06
From: Trichy, Tamil Nadu, India.
Member No.: 652



சிவனேஷின் நேசிப்பு தொடரட்டும்.
வாழ்த்துக்கள் சிவனேஷ்.


--------------------
வாழ்வோம் வாழவைப்போம்...

நட்புடன்,
மா. கலை அரசன்.


என் தளங்கள்: 1. தூறல். 2. காணி நிலம். 3. தாமிரபரணி.
Go to the top of the page
 
+Quote Post
Keerthisara
post Nov 20 2007, 01:43 PM
Post #9


Senior
**********

Group: Advancing Members
Posts: 377
Joined: 19-April 07
Member No.: 984



அனுபவபூர்வமான உண்மை! என்னால் உங்கள் கவைதையை தொட்டு உணரமுடிந்தது!

நன்றி! சிவனேஸ்! உலகின் பாதிக்காதல்கள் இப்படித்தானோ! sad.gif


--------------------
Go to the top of the page
 
+Quote Post
chandrathi
post Nov 21 2007, 02:32 PM
Post #10


Senior
**********

Group: Advancing Members
Posts: 399
Joined: 16-October 07
Member No.: 2,136



QUOTE
மௌனமாய் ஏனானாய்
மங்கையே சொல்லிவிடு..

பேசமறுக்கும் இதயத்தை
புரிந்திடவும் முடியவில்லை.

போவென்று சொன்னாலும்
பொய்யுரைக்க முடியவில்லை.

நல்ல மனங்களுக்கு
நாளும் தொல்லைதான்.

நீயன்று சொன்னது
பொருந்துதுபார் எனக்கு..

பொருந்தாத உள்ளங்கள்
புரியாது காதலை


இரண்டு இரண்டு வரிகளாக நச் நச்சென்று படைத்த வரிகள் அருமை.

வாழ்த்துக்கள்!


--------------------
அன்புடன் சந்திரதி
Go to the top of the page
 
+Quote Post
வெண்ணிலா
post Nov 21 2007, 03:57 PM
Post #11


Senior
**********

Group: Advancing Members
Posts: 174
Joined: 1-October 07
Member No.: 1,851



QUOTE (chandrathi @ Nov 21 2007, 02:32 PM)
மௌனமாய் ஏனானாய்
மங்கையே சொல்லிவிடு..

பேசமறுக்கும் இதயத்தை
புரிந்திடவும் முடியவில்லை

கவிதை நன்று வாழ்த்துக்கள் சிவனேஸ் .
சோகமான வரிகள் காதலை நேசிக்கும் நீங்கள் வாழ்க வளமுடன்.


-சயிலுயா


This post has been edited by சத்தியா: Nov 21 2007, 05:59 PM


--------------------
Go to the top of the page
 
+Quote Post
aathithathashan
post Nov 25 2007, 09:13 AM
Post #12


Senior
**********

Group: Senior Members
Posts: 890
Joined: 2-June 05
Member No.: 252



QUOTE (sivanes @ Nov 16 2007, 12:08 PM)
இப்படியே இருக்க
எவ்வளவு போராட்டம்…!

இறைவனிடமும் கேட்டோம்
இணையவேண்டும் நாமென்று.

இத்தனையும் நொடிப்பொழுதில்
இடிந்துபோனது ஏன்…?

மௌனமாய் ஏனானாய்
மங்கையே சொல்லிவிடு..


ஆதித்ததாஸன்
25-11-2007

மறுக்கின்ற மனமும்
வெறுக்கின்ற தினமும்
நறுக்கென்று பேசும் இதயமும்...உன்
பொறுக்கின்ற மனமும்
நிறுக்கின்ற அன்பின் ஆழமும்கண்டதும்....
வெறுப்பினை மாற்றும்!
மறுப்பின்றிப் பேசும்! பொறுத்து இரு!
மறுபிறப்பிலும் தொடரும்! காத்து இரு!

உன் கவிகண்டுமா வெறுக்கிறாள்!
பெண்கவி பிடிவாதம் ஜாஸ்திதான்!அவள்
தன்கவிகொண்டு பதில்கூட்டுவாள்!
தண்கவிகொண்டு தாலாட்டுவாள்!காத்திரு!

வாழ்த்துக்கள் சிவனேஸ்வரா! thumbs_up.gif thumbs_up.gif thumbs_up.gif
தொடரட்டும் இனிமைக்கவிதைகள்!

அன்புடன்
ஆதித்ததாஸன்


--------------------
அன்புடன்
ஆதித்ததாஸன்
Go to the top of the page
 
+Quote Post

Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



RSS Lo-Fi Version Time is now: 9th February 2010 - 01:39 PM