தும்பி சொல்லும் கதை........... |
![]() ![]() |
தும்பி சொல்லும் கதை........... |
Jul 4 2004, 02:14 PM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
......................தும்பி சொல்லும் கதை....................
![]() சோதனை மேல் சோதனை போதுமடா சாமி வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி சோதனை மேல் சோதனை போதுமடா சாமி................................; இந்தப் பாடல் என் அப்பாவிற்கு மிகவும் பிடித்தமான பாடலாகும். அம்மா இறந்த பின், இந்தப் பாடல் எம் வீட்டில் ஒலிக்காத நாளே இல்லை என்று சொல்லலாம். சின்ன வயதில் அடிக்கடி கேட்ட இந்தப் பாடலை, இன்றும் கேட்கும் போதெல்லாம் இனம் புரியாத ஓர் சோகம் என்னை வாட்டும். சரி அதை விட்டு வந்த விடையத் திற்கு வருகின்றேனே. சாதாரணமாக எம் வீட்டில் ஒலிக்கும் இந்தப் பாடல் ஓர் நாள் பல தடவை ஒலித்தது. அந்தச் சம்பவத்தை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.................... இலங்கையைப் பொறுத்தமட்டில் சின்ன வயதில் தும்பி பிடித்து விளையாடுவது இயற்கை தானே? இதை நீங்களும் மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கின்றேன். உங்களுக்கும் தும்பி பிடித்து விளையாடிய ஞாபகங்கள் இப்போது நெஞ்சத் திரையில் நிழலாடும் என்பதில் சிறிதும் சந்தேகமே இல்லை. தும்பி பிடிப்பது மட்டுமல்லாமல், பிடித்த தும்பியின் வாலில் நூலால் கட்டி விட்டு, பின் அந்தத் தும்பியைப் பறக்க விட்டு துரத்திப் பிடிப்பதில் ஓர் சந்தோசம் தான். அன்று நானும் என் சகோதரர்களும் சேர்ந்து தும்பி பிடித்து விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது ......................... தொடரும்.......................... -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jul 4 2004, 02:41 PM
Post
#2
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 11,282 Joined: 25-February 04 Member No.: 61 |
என்ன தும்பி கதை சொல்கின்றது என்றார் சத்தியா.
கதையைக் காணவில்லை. ஓகோ....எனக்கு தும்பியில் பாசை தெரிந்து இருக்க வேண்டுமோ? எனக்கு தும்பி பாசை தெரியாதே என்ன செய்ய? -------------------- பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம். ![]() |
|
|
|
Jul 4 2004, 03:22 PM
Post
#3
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (rennynimal @ Jul 4 2004, 02:41 PM) என்ன தும்பி கதை சொல்கின்றது என்றார் சத்தியா. கதையைக் காணவில்லை. ஓகோ....எனக்கு தும்பியில் பாசை தெரிந்து இருக்க வேண்டுமோ? எனக்கு தும்பி பாசை தெரியாதே என்ன செய்ய? அடப் பாவிங்களா!!!!!!!!!!!!!!!!!!!!! எழுதி அனுப்பு முன் -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jul 4 2004, 03:32 PM
Post
#4
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 380 Joined: 21-December 03 Member No.: 18 |
நன்றி சத்தியா!
என்ன நடந்தது என்று நீங்க சொல்லும் வரை காத்திருக்கிறேன். என்றும் அன்புடன்.. தாமரை |
|
|
|
Jul 4 2004, 03:55 PM
Post
#5
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 11,282 Joined: 25-February 04 Member No.: 61 |
QUOTE அடப் பாவிங்களா!!!!!!!!!!!!!!!!!!!!! எழுதி அனுப்பு முன் ??????????????????????????? ம்...எனக்கு எப்படி தெரியும்..... QUOTE தும்பி பிடிப்பது மட்டுமல்லாமல், பிடித்த தும்பியின் வாலில் நூலால் கட்டி விட்டு, பின் அந்தத் தும்பியைப் பறக்க விட்டு துரத்திப் பிடிப்பதில் ஓர் சந்தோசம் தான். சரி தும்பி கதைக்கு வருவோம். ஊரிலே தும்பிகள் குறைந்து விட்டது என்று படித்தேன். காரணம் இப்போ தானே தெரிகின்றது! -------------------- பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம். ![]() |
|
|
|
Jul 5 2004, 05:05 AM
Post
#6
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 2,267 Joined: 17-December 03 Member No.: 4 |
தெடருங்கள் sathiya
அன்போடு பிரியமானவள் -------------------- அன்பை நேசித்து இன்பமாக வாழ்
அன்போடு பிரியமானவள் |
|
|
|
Jul 5 2004, 09:44 AM
Post
#7
|
|
![]() நிர்வாகம் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Support Posts: 4,369 Joined: 18-December 03 From: Scotland Member No.: 7 |
சத்தியா, எங்கே உங்கள் தும்பிக் கதை?
-------------------- |
|
|
|
Jul 5 2004, 02:00 PM
Post
#8
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (bavan @ Jul 5 2004, 09:44 AM) சத்தியா, எங்கே உங்கள் தும்பிக் கதை? நான் என்ன செய்யட்டும்? இன்று இரண்டு முறை முழுமையாக கதையை எழுதி அனுப்பிய போதும் பதிவேட்டின் பக்கம் தகவல் வராது அப்படியே அவை யாவுமே அழிந்து போய் விட்டன. இதற்கு யாரை நொந்து கொள்வது ? என் கணனி பிரச்சனை கொடுக்கிறது. -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jul 5 2004, 03:04 PM
Post
#9
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 470 Joined: 18-December 03 Member No.: 6 |
பட்டாம்பூச்சிக்குப் பின்னால சோகம் இருக்குதோ இல்லையோ கதைய சொல்லுறவங்களுக்கு பெரிய சோகம்தான் போங்க
|
|
|
|
Jul 5 2004, 09:04 PM
Post
#10
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 11,282 Joined: 25-February 04 Member No.: 61 |
QUOTE பட்டாம்பூச்சிக்குப் பின்னால சோகம் இருக்குதோ இல்லையோ கதைய சொல்லுறவங்களுக்கு பெரிய சோகம்தான் போங்க அசுரன். அது பட்டாம்பூச்சி கிடையாது. தும்பி ( தட்டாண்) பட்டாம்பூச்சி என்பது வண்ணத்துப்பூச்சி சத்தியா இணைத்த படத்தை சரியாக பாருங்கள். -------------------- பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம். ![]() |
|
|
|
Jul 6 2004, 09:24 AM
Post
#11
|
|
![]() நிர்வாகம் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Support Posts: 4,369 Joined: 18-December 03 From: Scotland Member No.: 7 |
QUOTE (sathiya @ Jul 5 2004, 02:00 PM) இதற்கு யாரை நொந்து கொள்வது ? என் கணனி பிரச்சனை கொடுக்கிறது. எங்களுக்காக மீண்டும் எழுதி அதனை பதியுங்கள். அனைவரின் கவனத்திற்கும் : சற்று பெரிய ஆக்கங்களை நீங்கள் எழுதும் போது, நேரடியாக இங்கு எழுதினாலும் அல்லது எமது செயலிகளில் வைத்து எழுதினாலும், அவை பெரிய ஆக்கங்களாக இருப்பின் எதற்கும் அதனை அப்படியே Ctrl+A யினை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் செலக்ட் செய்துவிட்டு Copy (Ctrl+C) பண்ணி, உங்கள் கணணியில் இருக்கும் நோட்பேட்டில் ஒரு தடவை Paste (Ctrl+V) செய்து கொள்ளுங்கள். உங்கள் நோட்பேட்டில் தமிழ் எழுத்து காண்பிக்கப்படாமல் வெறும் பெட்டிகளாகத் தெரிந்தால் கூட அதற்காக கவலைப்படத் தேவையில்லை. பின்னர் இங்கு பதிவதில் ஏதும் சிக்கல் வந்தால் அங்கிருந்து (நோட்பேட்) மீண்டும் கொப்பி செய்து நீங்கள் இங்கு பேஸ்ட் செய்தால் மீண்டும் ஆக்கம் தமிழிலே பிரசுரிக்கப்படும். QUOTE அசுரன். அது பட்டாம்பூச்சி கிடையாது. தும்பி ( தட்டாண்) பட்டாம்பூச்சி என்பது வண்ணத்துப்பூச்சி ஆம் அசுரன், தட்டான் பூச்சியென்பது தான் தும்பி என்றழைக்கப்படுவது. -------------------- |
|
|
|
Jul 6 2004, 11:15 AM
Post
#12
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
நன்றி பவன்
-------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jul 6 2004, 04:53 PM
Post
#13
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 470 Joined: 18-December 03 Member No.: 6 |
றெனி,பவன் ரெண்டுபேருக்கும் நன்றிங்கோ
முன்னாடி நான் அந்தப்படத்தை பார்க்கல..இருந்தாக்கூட தப்புதான் |
|
|
|
Jul 6 2004, 06:51 PM
Post
#14
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
QUOTE (rennynimal @ Jul 5 2004, 09:04 PM) அசுரன். அது பட்டாம்பூச்சி கிடையாது. தும்பி ( தட்டாண்) பட்டாம்பூச்சி என்பது வண்ணத்துப்பூச்சி இந்தக் குழப்பங்கள் யாருக்கும் வந்து விடக் கூடாது என்பதற்காகத் தான் தும்பியின் படத்தையே இணைத்தேன். ஆனாலும் குழப்பம் வந்து விட்டதே. -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jul 6 2004, 07:16 PM
Post
#15
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 11,282 Joined: 25-February 04 Member No.: 61 |
என்ன சத்தியா இன்றும் தும்பி கதை சொல்லவில்லையே?
-------------------- பார்க்கும் திசையெங்கும் அவள் விம்பம். ![]() |
|
|
|
Jul 6 2004, 07:33 PM
Post
#16
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 102 Joined: 18-December 03 From: Germany Member No.: 5 |
editorல் எழுதி, கணனியில் பதிவு செய்யும்போது codierung --> UTF-8 தெரிவுசெய்து பதியுங்கள்.. அதாவது நிலாவுக்கு பாவிக்கும் யுனிக்கோட் முறையில் எழுதினால்!! விளங்கவில்லை என்றால் நம்ம பவன் மேலதிக விளக்கம் அளிப்பார்தானே?!
விரைவிலே தும்பி வராதா?! -------------------- <span style='font-size:8pt;line-height:100%'>பழையன அறிந்து புதியன புகுவோம்!</span>
|
|
|
|
Jul 7 2004, 09:28 PM
Post
#17
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,089 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
தொடர்கிறது.......................... எங்கள் அம்மா நன்றாகத் தைப்பார். அதனால் எங்கள் வீட்டில் தையல் மெசின் இருந்தது. அம்மா இறந்ததும் அம்மாவின் உடமைகள் யாவற்றையும் ஓர் அறையில் வைத்து பத்திரமாக பூட்டி வைத்திருந்தார் எங்கள் அப்பா. நாம் எல்லோரும் தும்பி பிடித்து விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது எங்கள் குட்டித் தம்பியும் ஓர் தும்பியைப் பிடித்து விட்டான். அதன் வாலில் கட்டுவதற்கு நூல் தேவைப்பட்டதால் அவன் ஓடிச் சென்று மெசினில் கோர்க்கப்பட்டிருந்த நூலை இழுத்து எடுத்தான். தம்பி பலமாக இழுத்ததால் மெசினின் ஊசி உடைந்து விட்டது. நாமும் பத்திரமாக அப்படியே வடிவாக மூடி வைத்து விட்டோம். எமது கஸ்ர காலமோ என்னவோ தெரியவில்லை. அன்று மாலை அப்பா ஏதோ தைப்பதற்காக மெசினிற்குப் போனார். அங்கே ஊசி உடைந்திருந்ததால் ஊசியை யார் உடைத்தது? எனக் கேட்டார். நாங்கள் எல்லோரும் எமக்குத் தெரியாது என்று கூறி விட்டோம். நாம் எல்லோரும் சேர்ந்து பொய் கூறியதால் அப்பாவிற்கு கோபம் வந்து விட்டது. ஒவ்வொருவராக கூப்பிட்டு விசாரித்தார். அப்போதும் எவரும் தம்பியைக் காட்டிக் கொடுக்கவில்லை. சாதாரணமாக நாம் ஏதும் தப்புச் செய்யும் போதெல்லாம் அப்பா நல்ல பேச்சுத் தருவார். அப்பா பேசத் தொடங்கும் போதே நாம் ஏதோ அடி விழுந்தது போல் விம்மி விம்மி அழத் தொடங்கி விடுவோம். அவ்வளவு தான் ஓரளவோடு அப்பா பேச்சை நிறுத்தி விடுவார். பிஞ்சு வயதிலேயே அம்மாவை இழந்ததினால் அன்புக்காக ஏங்கிய எம் உள்ளங்கள் வேறு எவரின் பாசங்களும் கிடைக்காததால் சகோதரங்களுக்குள் அன்பையும், பாசத்தையும் நிறையவே வளர்த்திருந்தோம். ஒருவருக்கொருவர் சண்டை பிடிக்க மாட்டோம். அப்படி சண்டை தொடங்கினாலும் மற்றவர் அதை உடனடியாக தடுத்து சமாதானப் படுத்தி விடுவோம். இப்படி அன்பும், பாசமும், ஒற்றுமையும் பலத்த மதிலாக எமக்குள்ளே கட்டியிருந்தோம். என்ன குழப்படி செய்தாலும் எல்லோரும் சேர்ந்து செய்து பின் நன்றாக பேச்சு வாங்கிக் கட்டுவோம். அன்றும் அப்படி நடக்கும் என்று தான் எம் எண்ணம். ஆனால் அன்று அப்பாவிற்கு என்ன கோபம் வந்ததோ தெரியவில்லை. எம்மை அப்படியே விட்டு விடவில்லை. இன்று இந்த ஊசியை உடைத்தது யார் என்ற உண்மை தெரியாமல் விடமாட்டேன் என்று விட்டார். எல்லோரையும் முட்டுக் காலில் இருக்க விட்டு விட்டார். எல்லோரும் திரு திரு என முழித்தபடி நிற்கின்றோம். குளித்து விட்டு வருவதற்குள் உண்மை வெளி வரவேண்டும் என்று கூறி விட்டு அப்பா குளிக்கப் போய் விட்டார். நான் குட்டித் தம்பியைப் பார்க்கிறேன். பாவம் தம்பி. பயத்தினால் அழுதபடி நின்றான். பால் வடியும் அந்த முகத்தைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. நாமெல்லோரும் சேர்ந்து ஓர் முடிவிற்கு வந்தோம். தம்பியைக் காட்டிக் கொடுக்காது தெரியாது என்று கூறிவிடுவோம் என்று. அப்பா குளித்து விட்டு வந்து மீண்டும் எல்லோரையும் கேட்டார். நாம் யாருமே உண்மை சொல்லாததால் அப்பாவிற்கு கோபம் பிய்த்துக் கொண்டு வந்து விட்டது. அவ்வளவு தான் எல்லோருக்கும் அடிதான். கையாலும் அடித்து உண்மை வெளிவராததால் பின் தடியாலும் அடித்து அப்பா களைத்துப் போய் விட்டார். நாம் எவரும் தம்பிதான் உடைத்தான் என்று காட்டிக் கொடுக்கவே இல்லை. எல்லோரும் பலமாக அழுத படி நின்றோம். சிறிது நேரம் கழித்து அப்பாவின் கோபம் தணிந்தது பிறகு என்ன? பெத்த மனம் அல்லவா? அதுவும் தாயில்லாப் பிள்ளை களுக்கு இப்படி அடித்து விட்டேனே என கலங்கியபடி எல்லோரையும் அணைத்து காயத்திற்கு எண்ணை பூசி விட்டு, எல்லோருக்கும் உணவையும் ஊட்டி விட்டார். ஆனால் பாவம் அப்பா. அன்று சாப்பிடவும் இல்லை. இரவு படுக்கவும் இல்லை. எம்மையெல்லாம் படுக்க வைத்து விட்டு தனிமையில் இருந்து இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் ஒலிக்க விட்டபடி, கலங்கிய கண்களோடு விழித்து இருந்தார். அன்று இரவு முழுவதும் நானும் புரண்டு புரண்டு படுக்கிறேன். எனக்கும் நித்திரையே வரவில்லை. அடி வாங்கி அழுத விம்மல் ஒரு பக்கம். தம்பிக்கு அடி விழாது தடுக்கப் போய் அப்பாவை நோகடித்தோமே என்ற கவலை மறு புறம். அதன் பின் தும்பியைக் காணும் போதெல்லாம் அடி வாங்கிய ஞாபகம் தான் எனக்கு வரும். ஆனாலும் என்ன? இன்று வரை அந்த ஊசியை தம்பி தான் உடைத்தான் என்பது அப்பாவிற்குத் தெரியாது. இதைக் கெட்டித் தனம் என்று இங்கு நான் கூற வரவில்லை. ஆனால் அந்த வயதில் நாம் செய்தது பிழை என அப்போது தெரியவில்லை. ஆனால் இன்று யோசிக்கும் போது மிகவும் மனம் வருந்துகின்றேன். இப்போது அன்று அடி வாங்க வைத்த இந்த தும்பியையும் நினைத்துக் கொண்டு, அன்று விடிய விடிய ஒலித்த இந்தப் பாடல் வரிகளை என் நெஞ்சில் சுமந்து கொண்டு இப்போது உங்களிடம் இருந்து விடைபெறுகின்றேன். சோதனை மேல் சோதனை போதுமடா சாமி வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி சோதனை மேல் சோதனை போதுமடா சாமி................................; மீண்டும் அடுத்த பதிவேட்டில் சந்திப்போம்................................... -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jul 8 2004, 09:22 AM
Post
#18
|
|
![]() நிர்வாகம் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Support Posts: 4,369 Joined: 18-December 03 From: Scotland Member No.: 7 |
QUOTE (sOliyAn/ சோ&# @ Jul 6 2004, 07:33 PM) விரைவிலே தும்பி வராதா?! ஒருவாறு தும்பி வந்துவிட்டது. நன்றி சத்தியா, உங்கள் தும்பி பிடித்த அநுபவம் கூட ஒரு பாடமாக அமைந்திருக்கிறது. -------------------- |
|
|
|
Jul 8 2004, 08:24 PM
Post
#19
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 380 Joined: 21-December 03 Member No.: 18 |
நன்றி சத்தியா.
QUOTE அதன் பின் தும்பியைக் காணும் போதெல்லாம் அடி வாங்கிய ஞாபகம் தான் எனக்கு வரும். ஆனாலும் என்ன? இன்று வரை அந்த ஊசியை தம்பி தான் உடைத்தான் என்பது அப்பாவிற்குத் தெரியாது. சத்தியா அப்பா நிலாமுற்றத்தைப் பார்த்தால் திரும்பவும் உங்களுக்கு டும்.. டும்... தானுங்கோ... என்றும் அன்புடன்... தாமரை. |
|
|
|
Jul 11 2004, 09:54 AM
Post
#20
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 470 Joined: 18-December 03 Member No.: 6 |
QUOTE (thamarai @ Jul 8 2004, 08:24 PM) சத்தியா அப்பா நிலாமுற்றத்தைப் பார்த்தால் திரும்பவும் உங்களுக்கு டும்.. டும்... தானுங்கோ... . |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 04:30 PM |