IPB

Welcome Guest ( Log In | Register )

<% ANNOUNCEMENT %>
 
Reply to this topicStart new topic
உள்ளக்குமுறல்.
sivanes
post Jan 18 2008, 12:25 PM
Post #1


Senior
**********

Group: Senior Members
Posts: 951
Joined: 17-December 03
Member No.: 3



வறுமையும் பஞ்சமும்
தலைவிரித்து ஆடுது.
பாலகர் வயிறோ
பாலுக்கு அழுகுது.

முன்னைய வாழ்வு
கண்ணுக்குள் தெரியுது.
முடிந்து போனதாவென்று
மனமோ ஏங்குது…!

சாவிலும் வாழ்ந்து
சந்தித்த அனுபவம்.
சங்கடங்கள் வந்தும்
சமாதானம் செய்யுது.

வாழ்ந்தது போதுமென்று.
செத்திட தோன்றினும்- மனம்
பொன்னான உயிரை
மாய்த்திட மறுக்குது.

தென்னோலை தோரணங்கள்
அவ்வப்போ பார்த்தது.
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
மங்கள வீடுகளில்..

கண் விழித்தபோதிப்போ
கண்ணுக்குத் தெரியுது.
குருத்தோலை தோரணமும்
மரண அழுகையும்.

ஆனாலும்….. எப்போ….
விடியுமென்ற ஏக்கம்.
விடிந்துவிட்டால் அழும்பிள்ளை
புட்டிப்பாலுக்கென்ற தவிப்பு.

சோதனைமேல் வேதனை..
அழ வேரூன்றியிருக்கிறது.
அழுவதற்கா பிறந்தார்கள்
அனாதைகளா இவர்கள்…?

பூமிப் பந்திலும்
நடக்குது சதிராட்டம்
பொறுத்திருந்து பார்ப்போம்
புலம்புது இவ்வுள்ளங்கள்.


--------------------
வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும்
நினைவுகள் .....
என்றும் சுகமானவை..


..நட்புடன் சிவனேஸ்..


சிந்தனைப்பூக்கள்.

Go to the top of the page
 
+Quote Post
மகுடதீபன்
post Jan 18 2008, 12:49 PM
Post #2


Senior
**********

Group: Senior Members
Posts: 1,557
Joined: 10-December 07
From: Ramanathapuram
Member No.: 2,655



இவ்வளவு சோதனை மேல் சோதனையா?

இதையும் அநுபவித்துக் கொண்டு
மக்கள் சீவிக்கிறார்கள் . . .

கண்டிப்பாக விடியும்
பொறுத்திருந்து பாருங்கள் . . .!


--------------------
Go to the top of the page
 
+Quote Post
Thanimathy
post Jan 18 2008, 12:51 PM
Post #3


Senior
**********

Group: Senior Members
Posts: 19,965
Joined: 3-December 05
From: Vancouver.( CANADA)
Member No.: 396



வாழ்த்துக்கள் சிவனேஸ்... thumbs_up.gif

QUOTE
வாழ்ந்தது போதுமென்று.
செத்திட தோன்றினும்- மனம்
பொன்னான உயிரை
மாய்த்திட மறுக்குது.


நாளுக்கு நாள் வேதனை...
யாருக்குத்தான் இல்லை சோதனை.. sad.gif
விடியல் ஒருநாள் காண்போம் அதில்...
அனாதைகளுக்கு வெளிச்சமாய் நாமிருப்போம். smile.gif


This post has been edited by Thanimathy: Jan 19 2008, 12:50 PM


--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

"மதியின் மனவானில்"

Go to the top of the page
 
+Quote Post
sooryakumar
post Jan 18 2008, 01:14 PM
Post #4


Senior
**********

Group: Disabled Members
Posts: 1,035
Joined: 16-November 06
From: டென்மார்க்
Member No.: 736



நல்ல கவிதை.
மிக எளிமையான சந்தத்துடன். உங்கள் உணர்வை வெளிப்படுத்துகிறது. thumbs_up.gif


--------------------
காலம் எனக்கொரு பாட்டெழுதும்.
Go to the top of the page
 
+Quote Post
sainthavi
post Jan 18 2008, 04:06 PM
Post #5


Senior
**********

Group: Advancing Members
Posts: 340
Joined: 27-November 07
Member No.: 2,614



புலம்பல் கவிதை அருமை சிவனேஸ் 41.gif என்ன செய்வது உலகமே இப்படித்தான் sad.gif

This post has been edited by சத்தியா: Jan 18 2008, 04:47 PM
Go to the top of the page
 
+Quote Post
PATCHI
post Jan 19 2008, 12:28 AM
Post #6


Senior
**********

Group: Senior Members
Posts: 647
Joined: 19-December 03
Member No.: 14



அடை மழையில்
அடைத்துப் போகும்
அடுக்குக் குப்பையானோம் பார்...

விடை வரட்டும்..
விதி.. ம் .. அது தொலைந்தே போகட்டும்
வினை தகர்ப்போம் வா !!

எண்ணம் சிறந்து மேன்மை பிறக்க
வாழ்த்துக்களுடன்...

ஷ்..பட்சி வந்திடுச்சு..பட்சியும் வந்திடுச்சு..ஷ்


--------------------
உலகெங்கும் தேடுகிறேன்..மனிதமதைக் காணலையே..,
வானமே எல்லை..........!
Go to the top of the page
 
+Quote Post
vishnu
post Jan 19 2008, 11:54 AM
Post #7


Senior
**********

Group: Advancing Members
Posts: 281
Joined: 28-November 07
Member No.: 2,633



QUOTE
ஆனாலும்….. எப்போ….
விடியுமென்ற ஏக்கம்.
விடிந்துவிட்டால் அழும்பிள்ளை
புட்டிப்பாலுக்கென்ற தவிப்பு.


இந்த வரிகள் எனை மிகவும் கவர்ந்தது

சிந்திக்க வைக்கும் கவிதை...
அருமை வாழ்த்துக்கள் சிவேநேஸ் ...


This post has been edited by vishnu: Jan 19 2008, 11:55 AM


--------------------
என்றும் இனிய தோழன் ,..
விஷ்ணு ...

www.vishnukavithai.blogspot.com

நீ மட்டும் நிஜமானால்... நான் என்றும் நிழலாவேன்...
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Jan 19 2008, 01:07 PM
Post #8


Senior
**********

Group: Moderators
Posts: 25,080
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53




சோதனைகள் பலவாறாய்
வேதனைகள் தினம் வாட்ட...

அழுதிடும் உள்ளங்களின்
அன்றாடக் கதை சொன்னாய்.

ஓ...
விடிவொன்று பிறந்திடாதோ...?
இவர்கள்
வேதனைகள் தீர்ந்திடாதோ...?

ம்ம்... நல் வாழ்த்துக்களோடு... smile.gif


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
பு...
post Jan 29 2008, 06:59 PM
Post #9


Senior
**********

Group: Senior Members
Posts: 1,010
Joined: 6-May 06
Member No.: 507



வாழ்த்துக்கள் சிவனேஸ் thumbs_up.gif
ஏழ்மையில் வாடும் இதயங்களை
சோகத்தின் சுமைகளையும் துன்பத்தின் வேதனைகளையும்
கவதையில் படம் பிடித்துப் பிரசுரித்தாயோ.


--------------------
என்றென்றும் நன்றியுடன்
புதுயுகப் பிரியன்
Go to the top of the page
 
+Quote Post
aathithathashan
post Feb 2 2008, 12:54 AM
Post #10


Senior
**********

Group: Senior Members
Posts: 890
Joined: 2-June 05
Member No.: 252



QUOTE (sivanes @ Jan 18 2008, 12:25 PM)
வறுமையும் பஞ்சமும்
தலைவிரித்து ஆடுது.
பாலகர் வயிறோ
பாலுக்கு அழுகுது.

முன்னைய வாழ்வு
கண்ணுக்குள் தெரியுது.
முடிந்து போனதாவென்று
மனமோ ஏங்குது…!

சாவிலும் வாழ்ந்து
சந்தித்த அனுபவம்.
சங்கடங்கள் வந்தும்
சமாதானம் செய்யுது.

வாழ்ந்தது போதுமென்று.
செத்திட தோன்றினும்- மனம்
பொன்னான உயிரை
மாய்த்திட மறுக்குது.


ஆதித்ததாஸன்
1-2-2008

கவிதைக்குள் விடியல்தேடும்
கவிமகனே சிவனேஸ்வரா!
புவித்தையும் பிறந்துவிட்டாள்!
புவியகமே குளிரவைப்பாள்! பொறுத்து இரு!

அநாதைகளின் ஏக்கங்கள்
அநாதையாகிப் போய்விடாது!

வாழ்த்துக்கள்! thumbs_up.gif thumbs_up.gif thumbs_up.gif
தொடரட்டும் இனிமைக்கவிதைகள்!

அன்புடன்
ஆதித்ததாஸன்


--------------------
அன்புடன்
ஆதித்ததாஸன்
Go to the top of the page
 
+Quote Post
நவன்
post Feb 2 2008, 05:26 AM
Post #11


Senior
**********

Group: Disabled Members
Posts: 284
Joined: 12-January 08
From: Malaysia
Member No.: 2,674



QUOTE
COLOR=orange]வாழ்ந்தது போதுமென்று.
செத்திட தோன்றினும்- மனம்
பொன்னான உயிரை
மாய்த்திட மறுக்குது.[/COLOR]


சதிராட்டங்களை ஒழித்த தலைவன் தயவினால் பூமிப்பந்து சரியாய்ச் சுழலும்.
மண்ணுக்குள் புதையுறும் பொன்னான உயிர்கள் காலச்சக்கரத்தில் தடம் பதிக்குது.
வேதனை நிழலை ஒழித்து ஒளி பெற்று எழுச்சியுறுவோம் வாரீர்..


emot-dance.gif


--------------------


பிரபஞ்சத்தின் விந்தைகளை மனிதா நீ அனுபவித்திடு!

என் கவிப்பூ - பனித்துளிகள்
என் சிந்தனைப் பூ - நவன் உலகம்
Go to the top of the page
 
+Quote Post

Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



RSS Lo-Fi Version Time is now: 9th February 2010 - 01:40 PM