IPB

Welcome Guest ( Log In | Register )

<% ANNOUNCEMENT %>
 
Reply to this topicStart new topic
தொலைக் காட்சி, tv fanatics
மகுடதீபன்
post Jan 26 2008, 10:31 AM
Post #1


Senior
**********

Group: Senior Members
Posts: 1,557
Joined: 10-December 07
From: Ramanathapuram
Member No.: 2,655



தொலைக் காட்சி



தொலைக் காட்சித் தொடரில்
கஸ்தூரியும், அபியும்
கவனிக்கப் படும் அளவுக்குப்
பாவம்
கணவன் மார்கள்
கவனிக்கப் படுவதில்லை.

வெள்ளைத்தோசை கூட
அவர்களுக்கு
விளம்பர
இடைவேளையின் போதுதான். . .

சாப்பாடு கூட
தொலைக் காட்சி பார்த்தபடி
தின்றால்தான்
தொண்டைக் குழிக்குள் இறங்குகிறது. . .

சாப்பாட்டுக்கு
சைடு டிஷ் எதுக்கு
கண்ணால் தொட்டுச் சாப்பிடத்
மெகா சீரியல்
இருக்கும் போது ?

இதற்கிடையில்
பிரம்மலோகத்தில்
அவசரக் கூட்டத்தில்
ஆலோசனை நடக்கிறது
வருங்காலப் பெண்களின்
கண்ணீர் கோளத்தைப் பெரிதாக
டி.வி. அழுகுணி சீரியலுக்குத் தக்கபடி
வடிவமைப்பது எப்படி என்று. . .

பார்த்துப் பார்த்துப் பழகிய
பையன்களின் தலைமுறைக்கு
பவுதீக ஆராய்ச்சியில் நோபல்
பரிசு பெறுவது அல்ல,
தொலைக் காட்சியின்
பேயாட பிசாசாட
நடன நிகழ்ச்சியில்
ஆடுவதே
ஏக்கமும் கனவுமாக
இருக்கிறது. . .!

கடலிலே உப்பின் அடர்த்தி
அதிகமான காரணம் என்ன என

அழுகுணி சீரியல் முன்
அமர்ந்துள்ள
நம் பெண்களின்
கண்ணீர் ந்திப் பிரவாகங்களைக்
கணக்கில் எடுக்காமல்
விஞ்ஞானிகள் ஒருபக்கம்
வெட்டியாய் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். . .

அப்பா பேருக்கு ஒண்ணு
மக பேருக்கு ஒண்ணு
தம்பி பேருக்கு ஒண்ணு என
மூணு ரேஸன் கார்டு வாங்கி வச்சது
நல்லதாப் போச்சு,

மூணு அரசு டி.வி வாங்கி
ஒவ்வொரு அறையிலும்
வச்சாச்சு !

அடுத்த அரசு அறிவிப்பு
என்று வரும் டி.வி.க்கு
கேபிள் கனெக் ஷன் இலவசம் என. . .?

டி.வி. நிகழ்ச்சியின் போது
விருந்தினர் வந்தால் . . .?

முகம் திரிந்து
நோக்க க் குழையும் விருந்து . . .
என்றது எல்லாம் வள்ளுவர் காலம் !
நோக்க எங்கே நேரம் ?

பேசாம்ல் கிட பெனாத்திக்கிட்டு . . .!
- என பெட்டில் கிடக்கும் பெத்த
அம்மாவை அதட்டி
அபியின் கவலையில்
துயரப் பங்கேற்பு !

வேறு ரிமோட் வாங்கணும்,
சேனல் சேஞ்ச் பட்டன் மட்டும்
தேஞ்சு போச்சு . . .!

அரைக் கரண்ட் வந்தாலோ
அன்று பவர் கட் என்றாலோ
எல்லாப் பெண்டிரின்
ஏகோபித்த அர்ச்சனை. . .

-கழிச்சல்ல போவானுக . . .!
கஸ்தாரி வார நேரம் பார்த்தா
கரண்ட் ஆப் பண்ணுவானுக . . .?
நிச்சயம் EB Line Man க்கு
அடுத்த நாள் வயிறு கடபுடா . . .!

ஆட்டம் பாட்டம் பார்த்து
ஆடும் LKG UKGகள்
பெற்றோர் மனம்
பெரிதாய் புளகாங்கிக்கும்.
பிறந்த பேறு அடையும். . .!

வீடும், குடித்தனமும்
தொலைக் காட்சி பெட்டி அளவு
சுருங்கி விடுமோ . . .?
அல்லது
அதற்றகு உள்ளேயே ஆகி விடுமோ,
மனசும் !

நேரமாச்சு,
இன்னைக்குக்
குடியரசு தினம் . . .
சும்மா இப்படி எழுதிக் கொண்டிருந்தால்
நம் தியாகிகள் கோபித்துக் கொள்வார்கள் . . .

விஷாலோடு கொண்டாடவேணும்,
அவர் நடிச்சு
திரைக்கு வந்து
சில நொடிகளே ஆன
ஒரு படம்
இன்னைக்குத்
தொலைக் காட்சியில். . .!

வரட்டா ?


--------------------
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Jan 26 2008, 02:59 PM
Post #2


Senior
**********

Group: Moderators
Posts: 25,089
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53




ம்... கவலைக்குரிய விடையம்தான்.

கவிதைக்கு வாழ்த்துக்கள் மகுடதீபன். smile.gif

தமிழ்நாட்டு தாய்க்குலங்கள் எல்லாம் அழுகுணி சீரியல்களைப் பார்த்துப்
பார்த்து எப்போதும் அழுது வடிச்சுகிட்டேதான் இருப்பாங்களாமே? biggrin.gif


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
Keerthisara
post Jan 26 2008, 03:26 PM
Post #3


Senior
**********

Group: Advancing Members
Posts: 377
Joined: 19-April 07
Member No.: 984



மிக! அருமை! நச்சுனு சொல்லியிருக்கீங்க! smile.gif இனியாவது கொஞ்சம் டீவி பார்க்கிறதை குறைத்துகொள்ளட்டும்!.....!


--------------------
Go to the top of the page
 
+Quote Post
Suganthe
post Jan 26 2008, 05:58 PM
Post #4


Senior
**********

Group: Senior Members
Posts: 4,937
Joined: 5-September 05
From: Markham (Toronto )canada
Member No.: 329



வாழ்த்துக்கள் மகுடதீபன்

என்ன நீங்களும் கோலங்கள் சீரியல் பார்க்கிறீர்களோ
இவை எங்கே குறையப் போகிறது கூடிக்கொண்டல்லவோ போகிறது
அதுவும் சில சின்னத்திரைகளில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைப் பார்த்தால் இப்படியும் நடக்குமா என்று எண்ணத் தோன்றுகிறது இவர்களெல்லாம் மனிதரா என்று( உ+ம் அயன் பாக்ஸ் ஆல் மனைவிக்கு சுடுவது)


--------------------
உன்னையே நீ உணர்
Go to the top of the page
 
+Quote Post
jeyaraman
post Jan 26 2008, 06:39 PM
Post #5


Senior
**********

Group: Advancing Members
Posts: 303
Joined: 15-December 07
Member No.: 2,659



சவ்வு மிட்டாய் விற்பவர்களையும் தோற்கடித்துவிட்டார்கள் மெகாசீரியல் தயாரிப்பவர்கள்.
கடமையுணர்ச்சியை சீரியல் பார்ப்பவர்கள் கொஞ்சம் இழந்துதான் வருகிறார்கள். மகுடதீபன்
வரிகள் அவர்களைக் கொஞ்சம் யோசிக்கவைக்கும்


--------------------


-உரப்புளி நா.ஜெயராமன்
Go to the top of the page
 
+Quote Post
மகுடதீபன்
post Jan 26 2008, 11:05 PM
Post #6


Senior
**********

Group: Senior Members
Posts: 1,557
Joined: 10-December 07
From: Ramanathapuram
Member No.: 2,655



ஆமாம் சத்தியா,
அழுகுணி சீரியல் பார்த்து
ஆற்றாது வும் கண்ணீர்
ஆற்று வெள்ளத்தில இரு மருங்கிலும

எங்கள் தமிழ்நாட்டுப் பெண்கள்
இலக்கிய சர்ச்சை புரிவது
கண் கொள்ளாக் காட்சி . . .!

நீங்கள் எல்லாம் இதைப்
பார்த்துப் புளகாங்கிதம் அடையக்
கொடுத்து வைக்கவில்லை !


--------------------
Go to the top of the page
 
+Quote Post
மகுடதீபன்
post Jan 26 2008, 11:09 PM
Post #7


Senior
**********

Group: Senior Members
Posts: 1,557
Joined: 10-December 07
From: Ramanathapuram
Member No.: 2,655



டி.வி. பார்ப்பதைக்
குறைப்பதா கீர்த்தி சாரா,

ம்ஹூம் பேச்சுக்கே இடம் இல்லை
இலவச த் தொலைக் காட்சி எதற்காம்,
அடுத்து இலவசக் கேபிள் கனக் ஷன்
எதிர் பார்த்துக்கிட்டு இருக்கிறோம்
அப்புறம் எங்கே குறைக்க?
போட்டிக்கு ஒவ்வொரு சேனலும் பிளஸ் என்றும்
மேக்ஸ் என்றும் ஆரம்பிப்பது
வேறு எதுக்காம் ?

This post has been edited by magudadheeban: Jan 27 2008, 10:19 AM


--------------------
Go to the top of the page
 
+Quote Post
மகுடதீபன்
post Jan 26 2008, 11:12 PM
Post #8


Senior
**********

Group: Senior Members
Posts: 1,557
Joined: 10-December 07
From: Ramanathapuram
Member No.: 2,655



சுகந்தீமா
ஒன்று கவனித்தீர்களா நீங்கள்

இப்போது எல்லாம்
தொலைக் காட்சித் தொடரில்
பெண்களுக்கு ஆண்கள் இழைக்கும்
கொடூரக் காட்சிகள் கம்மி !

லேடஸ்ட் பேஸன் எது தெரியுமா,
பெண்களே வில்லிகள்
அதுவும் திமிர் பிடித்த இளம் வில்லிகள் !


--------------------
Go to the top of the page
 
+Quote Post
மகுடதீபன்
post Jan 26 2008, 11:14 PM
Post #9


Senior
**********

Group: Senior Members
Posts: 1,557
Joined: 10-December 07
From: Ramanathapuram
Member No.: 2,655



சவ்வுமிட்டாய்க்குக் கூட
எலாஸ்டிக் லிமிட் உண்டு ஜெயராமன் !

அன்றியும் அது இனிக்கவாவது செய்யும் . .!

இது . . ?

நன்றிகள்
தங்கள் பாராட்டுக்கு !


--------------------
Go to the top of the page
 
+Quote Post
vishnu
post Jan 27 2008, 09:27 AM
Post #10


Senior
**********

Group: Advancing Members
Posts: 281
Joined: 28-November 07
Member No.: 2,633



சிந்திக்க வேண்டிய விஷயம் ...
நன்றாகவே சொல்லி இருக்கிறீர்கள் மகுட தீபன் அவர்களே ...

கடைசியில் உங்கள் நக்கல் சூப்பர் ....வாழ்த்துக்கள் தொடரட்டும் ...


41.gif 41.gif 41.gif


--------------------
என்றும் இனிய தோழன் ,..
விஷ்ணு ...

www.vishnukavithai.blogspot.com

நீ மட்டும் நிஜமானால்... நான் என்றும் நிழலாவேன்...
Go to the top of the page
 
+Quote Post
மகுடதீபன்
post Jan 27 2008, 10:21 AM
Post #11


Senior
**********

Group: Senior Members
Posts: 1,557
Joined: 10-December 07
From: Ramanathapuram
Member No.: 2,655



தங்கள் டபடப
கைதட்டலுக்கும்
பாரட்டுதல்களுக்கும்
நன்றிகள் விஷணு !


--------------------
Go to the top of the page
 
+Quote Post
kalaimarthandam
post Jan 27 2008, 05:41 PM
Post #12


Senior
**********

Group: Senior Members
Posts: 2,901
Joined: 19-September 06
From: Trichy, Tamil Nadu, India.
Member No.: 652



கவிதையின் கடைசியில் வந்த நக்கல்கள் நன்று.

தொடர்கள் பார்க்கும் பழக்கம்
நம்மவர்களுக்கு இன்று நேற்று வந்ததல்ல.
அது புராண காலங்களிலிருந்தே தொடர்கின்றது.

நல்ல உதாரணம் விக்கிரமாதித்தன் வேதாளம் கதைகள்.

நானும் சிறுவயதில்
பாட்டிகளிடம் ஆவலாக கதை கேட்டு இருக்கின்றேன்.
நல்ல கட்டத்தில்
கதை நாளை தொடரும் என சொல்லிவிடுவார்கள்...
இப்படியே சில கதைகள்
மாதக்கணக்கில் தொடர்வது வழக்கம்.

என்ன கதைகள் கேட்கும் வடிவம் தான் மாறியிருக்கின்றது.
அன்று ஒலிவடிவில் மட்டும் நேரடியாக கேட்டு வந்தோம்...
இன்று விஞ்ஞான வளர்ச்சியால்
ஒளி ஒலி வடிவில் பார்த்து கேட்கின்றோம், அவ்வளவே.

ஃஃஃ


--------------------
வாழ்வோம் வாழவைப்போம்...

நட்புடன்,
மா. கலை அரசன்.


என் தளங்கள்: 1. தூறல். 2. காணி நிலம். 3. தாமிரபரணி.
Go to the top of the page
 
+Quote Post
மகுடதீபன்
post Jan 27 2008, 11:27 PM
Post #13


Senior
**********

Group: Senior Members
Posts: 1,557
Joined: 10-December 07
From: Ramanathapuram
Member No.: 2,655



உண்மைதான் கலைஅரசன்
கதை கேட்கும் வடிவம் மாறித்தான் விட்டது !

ஆனால் கற்பனைத் திறன் போய்விட்டதே !
மண்டை மண் ஆகிவிட்டதே
என்பதுதான் என் வருத்தம்.

பையன்களைச் சுற்றி உட்கார வைத்துக் கொண்டு
சின்னஞ்சிறு வயதில்
கதை சொன்னபொதும் சரி,
பாட்டியிடம் மாபாரதம், இராமாயணம்
கேட்டபோதும் சரி,
இந்த மனம் என்ன செய்தது,
கொஞ்சம் நினைத்துப் பாருங்களேன். . .!

வந்தியத் தேவன் வரும்போது
முதலில் அவனை,
அவன் குதிரையை
அப்பறம் காட்டை
அந்த மரத்தை
எல்லாமே கற்பனை செய்த்து இல்லையா,
அந்தச் சிறு வேலை மனசுக்கு
இப்போது இல்லாது போய் விட்டது.

காரணம் இப்போது விஷுவலாகக் கிடைக்கிறது!
இது விஞ்ஞானத்தின் வளர்ச்சி.
ஆனால் மனம் ஜடமானது போல் தெரியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் மாறி இருக்கிறது,
இலக்கிய வட்டம் விரிந்திருக்கிறது.
லோடுமேன் முதல்
பக்கத்துவீட்டுப் படிக்கத் தெரியாத பாட்டிவரை
எல்லோரும் தொலைக் காட்சி
முன் அமர்ந்து
இலக்கிய சர்ச்சை செய்யும் அளவுக்கு. . .

நம் டி.வி.யில் வரும்
அத்தனை நிகழ்ச்சிகளும்
இலக்கியம் என ஒத்துக் கொண்டால் !


m a g u d a d h e e b a n


--------------------
Go to the top of the page
 
+Quote Post
சின்னா
post Jan 31 2008, 08:56 PM
Post #14


Senior
**********

Group: Senior Members
Posts: 2,927
Joined: 1-February 07
Member No.: 848



என்னோடு வேலைபார்க்கும் நண்பர் ஒருவர் நம்ம ஊர் நேரப்படி 8 மணிக்குத்தான் சாட்டிங் போவார் என்ன விஷயம்னு கேட்டா அவங்க வீட்டம்மா அப்போதான் ப்றீயா இருப்பாங்களாம்... மற்ற நேரத்தில் போனா சீரியல் போகுதுங்க நியூஸ்போர(8 மணிபோல) நேரத்துல வாங்க பேசுவம் னு சொன்னாங்க அதான் அதே நேரத்தில் போய்க்கிட்டு இருக்கிறேனு சொன்னார்... இப்படியும் நடக்குது...

வாழ்த்துக்கள் மகுடதீபன்....


This post has been edited by சின்னா: Jan 31 2008, 08:58 PM


--------------------
உன்னால் எல்லாம் முடியும். துளித்துளியாய்க் கொட்டித்தானே குடம் நிரம்புகிறது...

அன்புடன் சின்னா.....
Go to the top of the page
 
+Quote Post
சத்தியா
post Jan 31 2008, 09:55 PM
Post #15


Senior
**********

Group: Moderators
Posts: 25,089
Joined: 16-February 04
From: FRANCE
Member No.: 53



QUOTE (சின் @ Jan 31 2008, 08:56 PM)
என்னோடு வேலைபார்க்கும் நண்பர் ஒருவர் நம்ம ஊர் நேரப்படி 8 மணிக்குத்தான் சாட்டிங் போவார் என்ன விஷயம்னு கேட்டா அவங்க வீட்டம்மா அப்போதான் ப்றீயா இருப்பாங்களாம்... மற்ற நேரத்தில் போனா சீரியல் போகுதுங்க நியூஸ்போர(8 மணிபோல) நேரத்துல வாங்க பேசுவம் னு சொன்னாங்க அதான் அதே நேரத்தில் போய்க்கிட்டு இருக்கிறேனு சொன்னார்... இப்படியும் நடக்குது...

வாழ்த்துக்கள் மகுடதீபன்....


ஓஓ... இப்படி எல்லாம் நடக்குதா? பேஷ் பேஷ். biggrin.gif


--------------------
*** இவள் - சத்தியா ***


-சத்தமின்றி யுத்தம் செய்யும்-
---என் மனதின் ஓசைகள்---!

--------- '' நிசப்தம் '' ---------
Go to the top of the page
 
+Quote Post
அனு
post Feb 1 2008, 12:00 AM
Post #16


Senior
**********

Group: Senior Members
Posts: 1,676
Joined: 16-January 07
From: சிங்கபூர்
Member No.: 819



வாழ்த்துக்கள் மகுடதீபன்.... thumbs_up.gif


--------------------
user posted image


அனு ..உங்கள் தோழி
தவறுயிருந்தால் மன்னிக்கவும்.....என் நன்றி
Go to the top of the page
 
+Quote Post
மகுடதீபன்
post Feb 1 2008, 03:07 PM
Post #17


Senior
**********

Group: Senior Members
Posts: 1,557
Joined: 10-December 07
From: Ramanathapuram
Member No.: 2,655



இப்படியும் நடக்குதாவா,

சத்தியா உங்களுக்குத் தெரியாதா ?

அந்தக் காலம். . .
தமிழில் இத்தனை சேனல்கள் கிடையாது.

1981-ல்
சென்னை தூர்தர்ஷன் மட்டும் இருந்த காலம். . .
அப்போது நான் எழுதிய புதுக் கவிதை. . .

---------------------------------------------------

முருகன் கோவிலில்
ஏழரை மணிக்கெலாம்
விளக்கு பூஜை. .

அவசரம் அவசரமாக முடித்துவிட்டு
விரைந்தனர் பெண்கள்
ஒளியும், ஒலியும் பாரக்க . . .

--------------------------------------------------

சின்னா, நீங்கள் சொன்னது
முக்காலும் எக்காலும் நிசம் !

சந்தேகமே வேண்டாம் !

-m a g u d a d h e e b a n

This post has been edited by magudadheeban: Feb 1 2008, 03:08 PM


--------------------
Go to the top of the page
 
+Quote Post

Reply to this topicStart new topic
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

 



RSS Lo-Fi Version Time is now: 9th February 2010 - 04:29 PM