எரிச்சல் தரும் வேதனைகள். |
![]() ![]() |
எரிச்சல் தரும் வேதனைகள். |
Feb 5 2008, 01:34 PM
Post
#1
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 951 Joined: 17-December 03 Member No.: 3 |
கவிதையொன்று நானெழுத
கனநாளாய் ஆசைப்பட்டு காகிதம் நானெடுத்து சிந்தனையில் வந்தவற்றை சிதைக்காமல் எழுதிப்பார்த்தேன். சினமாக இருந்தது சில வரிகள். சமூகத்தை சித்தரிக்க அழுக்கான மனங்கள்தான் அழகாக தெரிந்தது. சாதியும் மதங்களும் சங்கடங்கள் செய்வதுவும் வேடிக்கை பார்க்கின்ற விந்தை மனிதர்களும் மதிப்புயர்ந்த மனிதர்களாம். மனமோ படம்பிடித்து நெஞ்சத்தில் திரையிட.. கொஞ்சம் பார்ப்பதற்கே நெஞ்சம் மறுத்தது. நினைக்கவும் முடியவில்லை. புரைக்யோடி கிடக்கின்ற சகிக்க முடியாத சமுதாய பிரச்சினைகள் சகதிகளாய் தினமும் தெருவெங்கும் கிடக்கிறது. சீதனத்தை சிலரோ அருவருப்பதாய் பார்த்தாலும் அவரும் கேட்கிறார் சீதனத்தை அதிகம் இதைவிட விந்தையேது. அழுவதா சிரிப்பதா அழுக்கான மனங்களைப்பார்த்து. சொல்வதொன்று செய்வதொன்று. தெரியாமல் தானோ பூமியும் சுழல்கிறது. காதலைப் பார்த்தால் பாதிதான் வெற்றி. சாதியால் பிரிந்தது சமாதியில் சங்கமம் மனமோ தவிக்குது. ஊனப்பட்டது உள்ளம்தான் உண்மையைச் சொன்னால் சமுதாயம் சிரிக்கும் பொய்யை சொன்னால் பொறுமையாய் இருக்கும். உப்பில்லாத உணவும் உண்மையில்லாத பேச்சும் உருப்படி என்றால் உருப்படுமா சமுதாயம் உணர்வுகள் கேட்கிறது. எரிச்சல் தருகிறது இந்த வேதனைகள் என்ன செய்வது.. எழுதி பார்க்கவே ஏற்காத மனது. புரியுதா உனக்கென்று என்னையே கேட்க எழுதி பார்த்ததை கசக்கி எறிந்துவிட்டு கண்களை கசக்கினேன். This post has been edited by sivanes: Feb 5 2008, 01:42 PM -------------------- வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும் நினைவுகள் ..... என்றும் சுகமானவை.. ..நட்புடன் சிவனேஸ்.. சிந்தனைப்பூக்கள். |
|
|
|
Feb 5 2008, 01:40 PM
Post
#2
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,035 Joined: 16-November 06 From: டென்மார்க் Member No.: 736 |
இறுதிப் பந்தி மிக அருமை.
-------------------- காலம் எனக்கொரு பாட்டெழுதும்.
|
|
|
|
Feb 5 2008, 03:02 PM
Post
#3
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,560 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
கவிஞனால் குரல் கொடுப்பதைத் தவிர
என்ன செய்ய முடியும் சிவனேஸ் ? சமுதாயச் சீர்கேட்டைக் கசக்க நினைத்து, கண்ணைத்தான் கசக்க முடியும் நீங்கள் சொன்னது போல் . . ! நீங்கள் சொல்லும் பேர்களை எல்லாம் அகந்தே கறுத்துப் புறத்து வெளுத்து இருக்கும் உலகோர். . . - என்பார் எங்கள் வள்ளலார். ஒன்று செய்வீர்களா சிவனேஸ், நீங்கள் நிறையச் சொல்லி இருக்கிறீர்கள் அதைத் தனித் தனியாக க் கவிதை ஆக்குங்களேன், உத்வேகமாக இருக்கும் . . . வாழ்த்துக்கள் ! -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Feb 5 2008, 07:12 PM
Post
#4
|
|
![]() நிர்வாகம் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Support Posts: 4,369 Joined: 18-December 03 From: Scotland Member No.: 7 |
வாழ்த்துக்கள் சிவனேஸ், நல்ல கவிதை, தொடர்ந்து நல்ல கவிதைகளை எழுதுங்கள்.
-------------------- |
|
|
|
Feb 5 2008, 09:22 PM
Post
#5
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 34,511 Joined: 16-February 04 From: ஐரோப்பா Member No.: 53 |
சமுதாயச் சீர்கேட்டை நினைத்து எழுதிய கவிதை நன்றாக இருக்கின்றது. ம்ம்... வாழ்த்துக்கள் சிவனேஸ். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Feb 6 2008, 11:15 PM
Post
#6
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 647 Joined: 19-December 03 Member No.: 14 |
சமு தாயம்
பூசுவெதெல்லாம் சாயம் தந்ததுவெல்லாம் காயம் விழித்தெழுந்தால் எல்லாம் மாயம் வேர்ப்பிடிப்பில் மரம் வேதனைப் பிடிப்பில் மனம் வேக வேகமாய் தினம் வேண்டாமல் வளரும் சினம் வா...கூவிப்பார்ப்போம்... குளறிப்பார்ப்போம்.. குழாவிப்பார்ப்போம்.. ஏதுண்டு தகர்த்தெறிய என்று...!! உன் உணர்வோடு கலந்து... ஷ்..பட்சியும் வந்திடுச்சு..பட்சியும் வந்திடுச்சு..ஷ் -------------------- உலகெங்கும் தேடுகிறேன்..மனிதமதைக் காணலையே..,
வானமே எல்லை..........! |
|
|
|
Feb 7 2008, 01:51 AM
Post
#7
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 5,164 Joined: 5-September 05 From: Markham (Toronto )canada Member No.: 329 |
வாழ்த்துக்கள் சிவனேஸ்
This post has been edited by Suganthe: Feb 7 2008, 01:52 AM -------------------- உன்னையே நீ உணர்
|
|
|
|
Feb 7 2008, 04:05 AM
Post
#8
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 890 Joined: 2-June 05 Member No.: 252 |
QUOTE (sivanes @ Feb 5 2008, 01:34 PM) சாதியும் மதங்களும் சங்கடங்கள் செய்வதுவும் வேடிக்கை பார்க்கின்ற விந்தை மனிதர்களும் மதிப்புயர்ந்த மனிதர்களாம். புரைக்யோடி கிடக்கின்ற சகிக்க முடியாத சமுதாய பிரச்சினைகள் சகதிகளாய் தினமும் தெருவெங்கும் கிடக்கிறது. ஆதித்ததாஸன் 6-2-2008 நல்ல மனங்களில் தினம் வல்ல சிந்தனை!கவி வெல்லும் மனங்களில் நிஜம் சொல்லும் வந்தனை! வாழ்த்துக்கள் சிவனேஸ்வரா! தொடரட்டும் இனிமைக்கவிதைகள்! அன்புடன் ஆதித்ததாஸன் -------------------- அன்புடன்
ஆதித்ததாஸன் |
|
|
|
Feb 7 2008, 05:43 AM
Post
#9
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 23,105 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
வாழ்த்துக்கள் சிவனேஸ்...
எமக்கும் எரிச்சல் தரும் வேதனைதான்... எல்லாமே ஒருகாலத்தில் எரிந்துவிடவேண்டும். -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Feb 7 2008, 10:57 AM
Post
#10
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 951 Joined: 17-December 03 Member No.: 3 |
QUOTE ஒன்று செய்வீர்களா சிவனேஸ், நீங்கள் நிறையச் சொல்லி இருக்கிறீர்கள் அதைத் தனித் தனியாக க் கவிதை ஆக்குங்களேன், நன்றி மகுடதீபன் அண்ணா தங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன். மற்றும் கருத்துகள் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள். -------------------- வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும் நினைவுகள் ..... என்றும் சுகமானவை.. ..நட்புடன் சிவனேஸ்.. சிந்தனைப்பூக்கள். |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 1st August 2010 - 07:18 AM |