வள்ளலாரின் புதிய வெளிப்பாடுகள் |
![]() ![]() |
வள்ளலாரின் புதிய வெளிப்பாடுகள் |
Mar 11 2008, 04:05 AM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,131 Joined: 9-March 08 Member No.: 2,724 |
நிலா முற்ற அன்பர்களே! திருஅருட்பிரகாச வள்ளலாரால் எனக்கு உபதேசிக்கப்பட்டு வழங்கப்பட்ட தியானம் இது. இம்மந்திரங்களை சிரத்தையுடன் தியானிப்பீராக! தலை முதல் கால் வரை உம்மில் அருட்பெருங்கடவுளின் இறக்கத்தை உணர்வீராக!
உங்களன்பன் திருஅருட்பிரகாச வள்ளலாரின் வாக்குறுதிகள் வடலூரென்னும் உன் சுத்த தேகமாகிய திருத்தலத்தில் திருஅருட்பிரகாச வள்ளலாராகிய நான் எழுந்தருளியிருக்கிறேன். எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் விளங்கும் நான், என் அன்பு மகனா(ளா)ன உனக்கு வழங்கும் உறுதிமொழிகள் இவை. “நானே நீ. நீயே நான்” என்ற இரண்டறக் கலந்த நம் ஒருமையை உறுதிப்படுத்தும் இவ் வாக்குறுதிகளை இருதய பூர்வமாக முழுமனதுடன் தியானித்து மகாயோகத்தில் நீ அமர்வாயாக! அத்வைத ஞானம் பெற்றுப் பேரின்பப் பெருவாழ்வில் நீ நிலை பெறுவாயாக! “நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற நற்சிந்தனையோடு என் வாக்குறுதிகளை உலகெங்கிலும் நீ போதிப்பாயாக! எனதெல்லா நலங்களும் வளங்களும் பெற்று நீ நீடூழி வாழ்வாயாக! நன்றி. 1. நானே பூரணராய் சஹஸ்ராரமாகிய உன் தலையுச்சித் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கிறேன். என்றென்றும் ஜீவித்திருக்கும் என் பூரணத்துவம் ஒவ்வொன்றிலும் எல்லா விதத்திலும் வெளிப்பட்டிருக்கிறது. 2. நானே சுயம்பிரகாசராய் ஆக்ஞாசக்ரமாகிய உன் நெற்றித் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கிறேன். என்றென்றும் சுடர்விடும் என் சுயம்பிரகாசம் ஒவ்வொன்றிலும் அதி அற்புதமாய் ஜொலிக்கிறது. 3. நானே பேருண்மையாளராய் நித்தியராய் விசுத்திசக்ரமாகிய உன் தொண்டைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கிறேன். என்றென்றும் உள்ளதாம் என் பேரிருப்பு ஒவ்வொன்றிலும் நித்திய ஜீவனாய் நிலை பெற்றிருக்கிறது. 4. நானே அமிர்தானந்தராய் அமிர்தகலசமாகிய உன் தொண்டையடித் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கிறேன். என்றென்றும் பெருக்கெடுத்தோடும் என் அமிர்தானந்தம் ஒவ்வொன்றிலும் எல்லா விதத்திலும் இன்புற்றிருக்கிறது. 5. நானே பேரன்பராய்ப் பேரருளாளராய் அனாகதமாகிய உன் இருதயத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கிறேன். என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு ஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது. 6. நானே பேரறிவாளராய் சூர்யசக்ரமாகிய உன் உதரவிதானத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கிறேன். என்றென்றும் என் நிறைவாய் விளங்கும் பேரறிவு ஒவ்வொன்றிலும் பூரணமாய்ப் பொருந்தியிருக்கிறது. 7. நானே அருட்பெருவல்லபராம் சத்தியராய்ச் சத்தராய் சித்தியராயச் சித்தராய்ப் பூரணானந்தராய் மணிபூரகமாகிய உன் நாபித் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கிறேன். என்றென்றும் என் இருப்பாய் விளங்கும் அருட்பேராற்றல் ஒவ்வொன்றிலும் சத்தியாயச் சத்தாய் சித்தியாய்ச் சித்தாய்ப் பூரணானந்தமாய்ப் பூரித்திருக்கிறது. 8, 9. நானே பெருங்குண தயாளராய் உள்ளொளi ஜோதியராய் சுவாதிட்டானமாகிய உன் நாபியடித் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கிறேன். என்றென்றும் என் பெருங்குணமாய் விளங்கும் தனிப்பெருங்கருணை ஒவ்வொன்றிலும் ஒருமை இறைநிலையாய் ஒன்றியிருக்கிறது. என்றென்றும் என் உள்ளொளியாய் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஒவ்வொன்றிலும் ஒருமை ஒளிநெறியாய் ஒன்றியிருக்கிறது. 10. நானே பெருநிலைக்கடவுளாய் மூலாதாரமாகிய உன் முதுகடித் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கிறேன். என்றென்றும் என் பெருநிலையாய் விளங்கும் கடவுட்தன்மை ஒவ்வொன்றிலும் ஒருமை உயிரியலாய் ஒன்றியிருக்கிறது. 11. நானே அருட்பேரரசராய் உன் முழங்காற் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கிறேன். என்றென்றும் ஆட்சியிலிருக்கும் என் அருட்பேரரசு ஒவ்வொன்றையும் உருவெடுத்திருக்கும் என் அவதாரமாய்ப் போற்றி மற்றெல்லாவற்றோடும் ஒருங்கிணைத்து வழிநடத்துகிறது. 12. நானே நானெனும் பூரணமாய் உன் பாதத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கிறேன். எங்கும் எதிலும் எப்போதும் நானே என விளங்கும் பூரணமாய் நான் இருக்கிறேன். 13. நானே மெய்வழிப்பிராண நாதராய் உன் உடம்பாகிய புனித தேவாலயத்தில் எழுந்தருளியிருக்கிறேன். நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன். -------------------- |
|
|
|
Apr 4 2008, 09:39 AM
Post
#2
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,676 Joined: 16-January 07 From: சிங்கபூர் Member No.: 819 |
நன்றி நாகரா..
மிக நல்ல வரிகள்.. என் நன்றியும்,வாழ்த்தும்.,,, அருமையான திருஅருட்பிரகாச வள்ளலாரின் வாக்குறுதிகள்.. நாமும் பின்பற்றுவோம்.. -------------------- ![]() அனு ..உங்கள் தோழி தவறுயிருந்தால் மன்னிக்கவும்.....என் நன்றி |
|
|
|
Apr 4 2008, 05:33 PM
Post
#3
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,131 Joined: 9-March 08 Member No.: 2,724 |
QUOTE (அனு @ Apr 4 2008, 09:39 AM) நன்றி நாகரா.. மிக நல்ல வரிகள்.. என் நன்றியும்,வாழ்த்தும்.,,, அருமையான திருஅருட்பிரகாச வள்ளலாரின் வாக்குறுதிகள்.. நாமும் பின்பற்றுவோம்.. ஆம் பின்பற்றுவோம், நன்றி அனு -------------------- |
|
|
|
Apr 4 2008, 05:44 PM
Post
#4
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,131 Joined: 9-March 08 Member No.: 2,724 |
நிலா முற்ற அன்பர்களே! திருஅருட்பிரகாச வள்ளலாரின் அமுதகானம் உம்மைத் தேடி வருகிறது. உம் ஒவ்வொருவரின் மூலமாக உயிர்கள் ஒவ்வொன்றுக்கும் தன் அமுத கானத்தைப் பாடித் தன் வாக்குறுதிகளை நிறைவேற்ற விரும்புகிறார் வள்ளலார். பாடி மகிழ்வீர்! பயன் பெறுவீர்!
உங்களன்பன திருவருட்பிரகாச வள்ளலாரின் அமுதகானம் 1. பூரணராய் உனக்குள் வந்தேன். தன்னிறைவுத்தன்மை உனக்குத் தந்தேன். 2. சுயம்பிரகாசராய் உனக்குள் வந்தேன். சத் தர்ஷனமென்னும் தூய நோக்கை உனக்குத் தந்தேன். 3. பேருண்மையாளராய் நித்தியராய் உனக்குள் வந்தேன். நித்திய ஜீவனை உனக்குத் தந்தேன். 4. அமிர்தானந்தராய் உனக்குள் வந்தேன். ஆன்மநேய ஒருமை உனக்குத் தந்தேன். 5. பேரன்பராய்ப் பேரருளாளராய் உனக்குள் வந்தேன். என் இயல்பையே உனக்குத் தந்தேன். 6. பேரறிஞராய்ப் பேரறிவாளராய் உனக்குள் வந்தேன். என் நிறைவையே உனக்குத் தந்தேன். 7. அருட்பெருவல்லபராம் சத்தியராய்ச் சத்தராய் சித்தியராயச் சித்தராய்ப் பூரணானந்தராய் உனக்குள் வந்தேன். என் இருப்பையே உனக்குத் தந்தேன். 8. பெருங்குண தயாளராய் உனக்குள் வந்தேன். ஒருமை இறைநிலையாம் தனிப்பெருங்கருணை உனக்குத் தந்தேன். 9. உள்ளொளி ஜோதியராய் உனக்குள் வந்தேன். ஒருமை ஒளிநெறியாம் அருட்பெருஞ்ஜோதியை உனக்குத் தந்தேன். 10. பெருநிலைக்கடவுளாய் உனக்குள் வந்தேன். ஒருமை உயிரியலாம் கடவுட்தன்மை உனக்குத் தந்தேன். 11. அருட்பேரரசராய் உனக்குள் வந்தேன். என் அவதார மகிமை உனக்குத் தந்தேன். 12. நானே நானெனும் பூரணமாய் உனக்குள் வந்தேன். எனதெல்லா நலங்களோடும் வளங்களோடும் என்னையே உனக்குத் தந்தேன். 13. மெய்வழிப்பிராண நாதராய் உனக்குள் வந்தேன். உன் வழியாக என் மெய் விளங்க என் ஜீவனையே உனக்குத் தந்தேன். திருஅருட்பிரகாச வள்ளலாராய் உனக்குள் வந்தேன். சாகாக் கல்வியை உனக்குத் தந்தேன். அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். நானே நீயாக நீயே நானாக ஒருமைப் பெருநிலையில் ஓங்கி நின்று எல்லா உயிர்களும் இன்புற்று வாழ என்னையே அன்னை பூமிக்குத் தந்தேன். This post has been edited by iamnaagaraa: Apr 4 2008, 05:47 PM -------------------- |
|
|
|
Apr 5 2008, 10:35 AM
Post
#5
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,084 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
ம்ம்... நன்றி நாகராஜன். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Apr 7 2008, 01:49 PM
Post
#6
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,131 Joined: 9-March 08 Member No.: 2,724 |
QUOTE (சத்த @ Apr 5 2008, 10:35 AM) ம்ம்... நன்றி நாகராஜன். உம் நன்றிக்கு நன்றி சத்தியா -------------------- |
|
|
|
Apr 8 2008, 08:38 AM
Post
#7
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 8,831 Joined: 26-January 08 From: Bangalore Member No.: 2,683 |
நன்றி நாகராஜன் சார்!
-------------------- |
|
|
|
Apr 8 2008, 10:41 AM
Post
#8
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,131 Joined: 9-March 08 Member No.: 2,724 |
QUOTE (rathiDevi_u @ Apr 8 2008, 08:38 AM) நன்றி நாகராஜன் சார்! நன்றி ரதி தேவி -------------------- |
|
|
|
Apr 10 2008, 04:02 AM
Post
#9
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,131 Joined: 9-March 08 Member No.: 2,724 |
நிலா முற்ற அன்பர்களே! வள்ளலாரின் அமுத கானத்தைத் தொடர்ந்து அவரது வருகையை உறுதிப்படுத்தும் பாட்டாக அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இவ்வரிகளை உம்மோடு பகிர்ந்து கொள்கிறேன். பாடி மகிழ்வீராக!
உங்களன்பன் வள்ளலாரின் வருகையை உறுதிப்படுத்தும் பாட்டு பூரணராய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! தன்னிறைவுத்தன்மையை நீரெனக்குத் தந்தீரே நன்றியே! சுயம்பிரகாசராய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! சத் தர்ஷனமென்னும் தூய நோக்கை நீரெனக்குத் தந்தீரே நன்றியே! பேருண்மையாளராய் நித்தியராய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! நித்திய ஜீவனை நீரெனக்குத் தந்தீரே நன்றியே! அமிர்தானந்தராய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! ஆன்மநேய ஒருமையை நீரெனக்குத் தந்தீரே நன்றியே! பேரன்பராய்ப் பேரருளாளராய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! உம் இயல்பையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே! பேரறிஞராய்ப் பேரறிவாளராய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! உம் நிறைவையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே! அருட்பெருவல்லபராம் சத்தியராய்ச் சத்தராய் சித்தியராயச் சித்தராய்ப் பூரணானந்தராய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! உம் இருப்பையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே! பெருங்குண தயாளராய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! ஒருமை இறைநிலையாம் தனிப்பெருங்கருணையை நீரெனக்குத் தந்தீரே நன்றியே! உள்ளொளி ஜோதியராய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! ஒருமை ஒளிநெறியாம் அருட்பெருஞ்ஜோதியை நீரெனக்குத் தந்தீரே நன்றியே! பெருநிலைக்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! ஒருமை உயிரியலாம் கடவுட்தன்மையை நீரெனக்குத் தந்தீரே நன்றியே! அருட்பேரரசராய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! உம் அவதார மகிமையை நீரெனக்குத் தந்தீரே நன்றியே! நானே நானெனும் பூரணமாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! உமதெல்லா நலங்களோடும் வளங்களோடும் உம்fமையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே! மெய்வழிப்பிராண நாதராய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! என் வழியாக உம் மெய் விளங்க உம் ஜீவனையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே! திருவருட்பிரகாச வள்ளலாராய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! சாகாக் கல்வியை நீரெனக்குத் தந்தீரே நன்றியே! அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! நானே நீயாக நீயே நானாக ஒருமைப் பெருநிலையில் ஓங்கி நின்று எல்லா உயிர்களும் இன்புற்று வாழ உம்மையே அன்னை பூமிக்குத் தந்தீரே நன்றியே! கோடானு கோடி நன்றியே! நீரெனக்குள் வந்தீரே நன்றியே! கோடானு கோடி நன்றியே! உம்மையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே! -------------------- |
|
|
|
Apr 10 2008, 06:26 AM
Post
#10
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 8,831 Joined: 26-January 08 From: Bangalore Member No.: 2,683 |
நானும் வள்ளலாரின் வருகையை உறுதிப்படுத்தும் பாட்டை பாடி மகிழ்ந்தேன். நன்றி நாகராஜன் சார்!
This post has been edited by rathiDevi_u: Apr 10 2008, 06:29 AM -------------------- |
|
|
|
Apr 10 2008, 07:10 AM
Post
#11
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,131 Joined: 9-March 08 Member No.: 2,724 |
QUOTE (rathiDevi_u @ Apr 10 2008, 06:26 AM) நானும் வள்ளலாரின் வருகையை உறுதிப்படுத்தும் பாட்டை பாடி மகிழ்ந்தேன். நன்றி நாகராஜன் சார்! வள்ளலாரின் வருகையை உறுதிப்படுத்தும் பாட்டை பாடி மகிழ்ந்ததற்கு நன்றிகள் பல ரதிதேவி. This post has been edited by சத்தியா: Apr 10 2008, 11:00 AM -------------------- |
|
|
|
Apr 10 2008, 07:15 AM
Post
#12
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,131 Joined: 9-March 08 Member No.: 2,724 |
நிலா முற்ற அன்பர்களே! வள்ளலார் எனக்கு வழங்கிய உபதேசங்களை "வள்ளலாரின் புதிய வெளிப்பாடுகள்" என்ற pdf புத்தகமாக வடிவமைத்துள்ளேன். இப்புத்தகத்தைப் பெற இங்கே சொடுக்கவும்
நன்றியுடன் உங்களன்பன் -------------------- |
|
|
|
Apr 10 2008, 11:04 AM
Post
#13
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 25,084 Joined: 16-February 04 From: FRANCE Member No.: 53 |
ம்ம்... நன்றி நாகராஜன். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Apr 10 2008, 03:46 PM
Post
#14
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 8,831 Joined: 26-January 08 From: Bangalore Member No.: 2,683 |
QUOTE (iamnaagaraa @ Apr 10 2008, 07:15 AM) நிலா முற்ற அன்பர்களே! வள்ளலார் எனக்கு வழங்கிய உபதேசங்களை "வள்ளலாரின் புதிய வெளிப்பாடுகள்" என்ற pdf புத்தகமாக வடிவமைத்துள்ளேன். இப்புத்தகத்தைப் பெற இங்கே சொடுக்கவும் நன்றியுடன் உங்களன்பன் நான் இந்த புத்தகத்தை வாசித்து பார்த்தேன். அனைத்தும் அருமையாக உள்ளது. பாராட்டுக்கள் நாகராஜன் சார்! This post has been edited by rathiDevi_u: Apr 10 2008, 03:47 PM -------------------- |
|
|
|
Apr 10 2008, 11:29 PM
Post
#15
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 19,965 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
QUOTE (iamnaagaraa @ Apr 10 2008, 07:15 AM) நிலா முற்ற அன்பர்களே! வள்ளலார் எனக்கு வழங்கிய உபதேசங்களை "வள்ளலாரின் புதிய வெளிப்பாடுகள்" என்ற pdf புத்தகமாக வடிவமைத்துள்ளேன். இப்புத்தகத்தைப் பெற இங்கே சொடுக்கவும் நன்றியுடன் உங்களன்பன் அமைதியின் சொரூபமாக காட்சிதரும் வள்ளலாரையும் பார்த்தேன்.அதில் பதியப்பட்ட கூறப்பட்ட வெளிப்பாடுகளையும் வாசித்தறிந்துகொண்டேன்.. நன்றிகள் நாகராஜன்... -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Apr 11 2008, 09:55 AM
Post
#16
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,131 Joined: 9-March 08 Member No.: 2,724 |
அன்பர்கள் சத்தியா, ரதிதேவி, தனிமதி, உமக்கு என் இதயங்கனிந்த நன்றிகள், திருஅருட்பிரகாச வள்ளலார் நம்மை வழிநடத்தட்டும்.
-------------------- |
|
|
|
Aug 25 2008, 03:04 AM
Post
#17
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,131 Joined: 9-March 08 Member No.: 2,724 |
"திருஅருட்பிரகாச வள்ளலாரின் வாக்குறுதிகள்" mp3 ஒலிப்பதிவைக் கேட்க இச்சுட்டியைச் சொடுக்கவும். நன்றி
-------------------- |
|
|
|
Aug 25 2008, 07:16 AM
Post
#18
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,131 Joined: 9-March 08 Member No.: 2,724 |
"திருவருட்பிரகாச வள்ளலாரின் அமுதகானம்" mp3 ஒலிப்பதிவைக் கேட்க இச்சுட்டியைச் சொடுக்கவும். நன்றி
-------------------- |
|
|
|
Aug 26 2008, 03:09 AM
Post
#19
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,131 Joined: 9-March 08 Member No.: 2,724 |
வள்ளலாரின் வருகையை உறுதிப்படுத்தும் நன்றிப் பாட்டின் mp3 ஒலிப்பதிவைக் கேட்க இச்சுட்டியைச் சொடுக்கவும், நன்றி
-------------------- |
|
|
|
Aug 26 2008, 06:46 AM
Post
#20
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 8,831 Joined: 26-January 08 From: Bangalore Member No.: 2,683 |
"திருஅருட்பிரகாச வள்ளலாரின் வாக்குறுதிகள்" mp3 ஒலிப்பதிவைக் கேட்க இச்சுட்டியைச் சொடுக்கவும். நன்றி "திருவருட்பிரகாச வள்ளலாரின் அமுதகானம்" mp3 ஒலிப்பதிவைக் கேட்க இச்சுட்டியைச் சொடுக்கவும். நன்றி வள்ளலாரின் வருகையை உறுதிப்படுத்தும் நன்றிப் பாட்டின் mp3 ஒலிப்பதிவைக் கேட்க இச்சுட்டியைச் சொடுக்கவும், நன்றி மூன்று ஒலிப்பதிவையும் சுட்டினேன்! கேட்டேன்! ரசித்தேன்! நன்றி நாகராஜன் சார்! -------------------- |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 9th February 2010 - 02:39 PM |