பாசவலை அறுத்தாயோ...? |
![]() ![]() |
பாசவலை அறுத்தாயோ...? |
Mar 19 2008, 06:56 PM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 34,511 Joined: 16-February 04 From: ஐரோப்பா Member No.: 53 |
![]() பாசவலை அறுத்தாயோ...? கண் விழித்துப் பார்க்கின்றேன் கண் எதிரே நீ! கதை தொடுக்க முயன்றும் கடிவாளம் போட்டவளாய் மௌனித்து நிற்கின்றேன்! ஓ!... முட்டைகள் மீது பின்னங் கால்களால் மண் கிளறி மூடி விட்டு திரும்பிப் பாராது செல்லும் ஆமையைப் போலே... பணம் குணத்தை மாற்ற வசதிகளும் வாய்ப்புகளும் வளர்ந்த நிலை மறக்க... வந்த பாதை மறந்து வாழ்ந்த வீடு கடந்து விரைந்து செல்கிறாய் நீ! உனைப் பார்த்ததும் விக்கியழாக் குறையாக விம்மி விழும் மெல்லிய விசும்பல்கள் என் நெஞ்சில் ஒலிக்கிறது! இது பழகிய அடிதான் என்றாலும் மீண்டும் மீண்டும் வலிக்கத்தானே செய்கிறது! ம்... எனக்குள்ளும் உனக்குள்ளும் ஓடும் ஒரே இரத்தத்தினுள் எத்தனை முரண்பாடுகள் பார்த்தாயா...? போடா போ! இனி என்ன... நீ வாழ்ந்த இந்த இடத்தையும்... நீ நேசித்த இந்தப் பூக்களையும்... நீ அடிக்கடி பாடும் அந்தப் பாடலையும் பாடிக் கொண்டு... உன் நினைவுகளோடு வாழ்ந்து விட்டுப் போகின்றேன்! -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Mar 19 2008, 11:02 PM
Post
#2
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,035 Joined: 16-November 06 From: டென்மார்க் Member No.: 736 |
ம்...ம்...........
(ஏக்கப் பெருமூச்சு இது) நல்ல கவிதை. -------------------- காலம் எனக்கொரு பாட்டெழுதும்.
|
|
|
|
Mar 19 2008, 11:41 PM
Post
#3
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 23,105 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
யாரப்பா நம்ம சத்தியாவோட..
பாச வலை அறுத்தது.... நல்ல கவிதை... வாழ்த்துக்கள் சத்தியா.. -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Mar 20 2008, 07:12 AM
Post
#4
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,676 Joined: 16-January 07 From: சிங்கபூர் Member No.: 819 |
வாழ்த்துக்கள் சத்தியா..
அருமையான வரிகள்.. நல்ல சிந்தனைகள்.. தொடருங்கள் -------------------- ![]() அனு ..உங்கள் தோழி தவறுயிருந்தால் மன்னிக்கவும்.....என் நன்றி |
|
|
|
Mar 20 2008, 09:03 AM
Post
#5
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 12,034 Joined: 26-January 08 Member No.: 2,683 |
அருமையான கவிதை வரிகள். பாராட்டுக்கள் சத்தியா!
-------------------- |
|
|
|
Mar 20 2008, 11:27 AM
Post
#6
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,560 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
ஏனிந்த சோகம் ?
வாழ்வின் பிரதிபலிப்போ ? காலம் மாற்றட்டும் ! -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Mar 20 2008, 11:51 AM
Post
#7
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 951 Joined: 17-December 03 Member No.: 3 |
பாசம் வளர்த்து நேசமுடன் இருந்த நாட்களை நினைத்துப் பார்க்க வைத்த கவிதை. அருமை பாராட்டுக்கள் சத்தியா.
-------------------- வழியோரம் வந்து
விழியோரம் தேங்கும் நினைவுகள் ..... என்றும் சுகமானவை.. ..நட்புடன் சிவனேஸ்.. சிந்தனைப்பூக்கள். |
|
|
|
Mar 21 2008, 07:51 AM
Post
#8
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 187 Joined: 22-October 07 Member No.: 2,227 |
கவிதை சூப்பர்
|
|
|
|
Mar 27 2008, 02:30 PM
Post
#9
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 34,511 Joined: 16-February 04 From: ஐரோப்பா Member No.: 53 |
ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்து விட்டு... தொப்புள் கொடி உறவுகள் தொடர்புகளை அறுக்கும் போது... துடித்துப் போகிறது மனசு. ம்... கவிதையோடு இணைந்து கருத்துத் தந்த சொந்தங்களுக்கு... என் மனமார்ந்த நன்றிகள். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Mar 27 2008, 04:04 PM
Post
#10
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 284 Joined: 12-January 08 From: Malaysia Member No.: 2,674 |
QUOTE ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்து விட்டு... தொப்புள் கொடி உறவுகள் தொடர்புகளை அறுக்கும் போது... துடித்துப் போகிறது மனசு. ஆமாம் இப்படித்தான் ஏதோ நானும் பதிவிட்டதாக ஞாபகம்.. அது மறைந்து விட்டது. பரவாயில்லை. வழக்கம் போல் அழுத்தமாக உங்கள் ஏக்க உணர்வுகளைப் பிரதிபலிக்கிற நல்ல கவிதை. வாழ்த்துக்கள் -------------------- ![]() பிரபஞ்சத்தின் விந்தைகளை மனிதா நீ அனுபவித்திடு! என் கவிப்பூ - பனித்துளிகள் என் சிந்தனைப் பூ - நவன் உலகம் |
|
|
|
Mar 27 2008, 04:25 PM
Post
#11
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 2,933 Joined: 1-February 07 Member No.: 848 |
அறுபட்டு போனதுவோ.. உன் கவிதையில் என் வாழ்த்தும்...??
-------------------- உன்னால் எல்லாம் முடியும். துளித்துளியாய்க் கொட்டித்தானே குடம் நிரம்புகிறது...
அன்புடன் சின்னா..... |
|
|
|
Mar 27 2008, 06:49 PM
Post
#12
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Advancing Members Posts: 312 Joined: 15-December 07 Member No.: 2,659 |
பெண் ஏமாற்றிச் செல்வதாகத்தான் நிறையக் கவிதைகள் வந்துகொண்டிருக்கின்றன. (உ.ம்- மகுடதீபன் கவிதைகள்)
ஆண் ஏமாற்றுவதாய்ச் சொல்கிறார் சத்தியா. படமும் கவிதையும் நன்றாக உள்ளன. -------------------- ![]() -உரப்புளி நா.ஜெயராமன் |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 1st August 2010 - 07:20 AM |