காலம் கனியுமா...? |
![]() ![]() |
காலம் கனியுமா...? |
Apr 23 2008, 03:43 PM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 34,511 Joined: 16-February 04 From: ஐரோப்பா Member No.: 53 |
![]() காலம் கனியுமா...? எங்கேயோ கூடிக் குலாவி மகிழ்ந்தாடி கீச்சுக் கீச்செனெ குரலெழுப்பி சிறகடித்துப் பறக்கும் சிட்டுக் குருவிகளின் சிறகசைப்புக்களின் சத்தம் என் காதுக்குள் நிஜமாய் நுழையும் போதெல்லாம்... சத்தங்கள் எதுவுமின்றித் திறக்கும் கதவின் இடுக்கு வழியே அனுமதியின்றி நுழையும் வெளிச்சம் போல்... ஆழப் புதைந்த உன் நினைவுகள் எல்லாம் தொலைந்த புள்ளியில் மீண்டும் பிறப்பெடுத்து உயிர் கொண்டெழுந்து உனைத் தேடுகிறது! ம்... அன்பெனும் விதை விதைத்து நெஞ்சமெல்லாம் நேசம் வளர்த்து நேசக் கரம் நீட்டி வாவென்று அழைத்து... இன்றும் ஏதோ ஓர் நம்பிக்கையில் உன் நினைவில் நானும் அலைமோதும் எண்ணங்கள் சுமந்து... சில்லென வீசும் தென்றலின் சுகத்தோடு பார்வையை அகல விரித்து பாரெங்கும் பறந்து திரிந்து உயிர் உரசும் நிமிடங்களில் மனசின் பாரங்கள் இறக்கத் துடித்து... ம்ம்... அந்தக் காலக் கனிவுக்காய் இன்னமும் இன்னமும் உனைத் தேடித் தேடி பறந்து கொண்டிருக்கிறது என் நினைவுகளும் பொழுதுகளும்! -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Apr 24 2008, 02:47 AM
Post
#2
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,560 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
அக் காலக் கனிவுக்கு என்
ஆசிகளும், வாழ்த்துகளும் . . .! அது வரை பறந்து கொண்டே இருக்கட்டும் தங்கள் எண்ணச் சிட்டு ! -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
Apr 24 2008, 03:27 PM
Post
#3
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 12,034 Joined: 26-January 08 Member No.: 2,683 |
மிகவும் அற்புதமான கவிதை. உங்கள் மனசும் வானத்தில் பறந்துகொண்டே இருக்கட்டும். பாராட்டுக்கள் சத்தியா!
-------------------- |
|
|
|
Apr 24 2008, 08:39 PM
Post
#4
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 2,933 Joined: 1-February 07 Member No.: 848 |
நல்ல கவிதை
வாழ்த்துக்கள் சத்தியா... -------------------- உன்னால் எல்லாம் முடியும். துளித்துளியாய்க் கொட்டித்தானே குடம் நிரம்புகிறது...
அன்புடன் சின்னா..... |
|
|
|
Apr 24 2008, 11:04 PM
Post
#5
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 23,105 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
காலக் கனிவுக்காக..
காத்திருந்து பறந்துகொண்டிருக்க... காலம் கனிந்து வரும் இனிமைதேடி வரும். வாழ்த்துக்கள் சத்தியா... -------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
Apr 25 2008, 01:24 PM
Post
#6
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Advancing Members Posts: 340 Joined: 27-November 07 Member No.: 2,614 |
காலக் கனிவு நல்ல கவிதை தோழி
|
|
|
|
Apr 25 2008, 06:04 PM
Post
#7
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Advancing Members Posts: 383 Joined: 19-April 07 Member No.: 984 |
வாழ்த்துக்கள் உங்கள் அழகான கவிக்கு!
என்றோ ஒரு நாள் நிச்சயம் உங்கள் எதிர்பார்ப்புக்கள் நிறைவடையும்!, நம்பிக்கையுடன் காத்திருங்கள்! -------------------- |
|
|
|
May 22 2008, 09:48 PM
Post
#8
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 34,511 Joined: 16-February 04 From: ஐரோப்பா Member No.: 53 |
கவிதையோடு இணைந்த அத்தனை உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
May 29 2008, 03:01 PM
Post
#9
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,010 Joined: 6-May 06 Member No.: 507 |
வாழ்த்துக்கள் சத்தியா
நெஞ்சோடு நிற்கும் நீங்காத நினைவுகளால் தாங்காத மனமும் தூங்காத கண்களுமாய்.... ஏக்கங்கள் நிறைந்து கவிபாடுகின்றாய். பூ கண்டு புன்னகைகள் புரிவாய்... ரீங்காரம் பாடும் வண்டாக மாறி-- இனி சந்தோசக் கவிதைகளை வரைவாய். ஏக்கம் மிக்க சோகக் கவிதையாக இருந்தாலும் எண்ணங்களும் வார்த்தைகளும் பிரமாதம் -------------------- என்றென்றும் நன்றியுடன்
புதுயுகப் பிரியன் |
|
|
|
Jun 14 2008, 05:51 PM
Post
#10
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 355 Joined: 13-April 06 From: canada Member No.: 478 |
என்றோ ஒரு நாள் நிச்சயம் காலம் கனியும் நம்பிக்கையுடன் காத்திருங்கள்
வாழ்த்துக்கள் சத்தியா |
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 1st August 2010 - 07:19 AM |