நெஞ்சோடு ஒரு நினைவு! |
![]() ![]() |
நெஞ்சோடு ஒரு நினைவு! |
May 15 2008, 09:55 PM
Post
#1
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 34,511 Joined: 16-February 04 From: ஐரோப்பா Member No.: 53 |
![]() நெஞ்சோடு ஒரு நினைவு! பலமாய் அடித்து ஓய்ந்த மழைக்குப் பிறகு துளித் துளியாய் தூறல் போட்டுக் கொண்டிருந்தது வானம்! அடுத்த மழை அடிக்கத் தொடங்குமுன்பே விரைந்துவிடத் துடித்து விறுவிறுவென நடக்கிறேன் நான். அந்தச் சாலையோரத்து மரத்தின் கிளையினை யாரோ உலுப்பிய உலுப்பில் சிதறி விழுந்த தூறல்கள் என்னை நனைக்க... நானும் அண்ணாந்து பார்க்கின்றேன். அங்கே பலத்த மழையில் நனைந்து தோய்ந்து பறந்துவந்த புறாவொன்று சட்டென அந்த மரத்தில் அமர்கிறது! ஓ!... புறாவாரே! இப்படித்தான் முன்பெல்லாம் என் அண்ணன் கூட... மழை ஓய்ந்த பின் மரக்கிளையினை உலுப்பி எனைத் தெப்பமாய் நனைத்து... நான் மயிர்க் கூச்செறிந்து சிணுங்கி நிற்கும் அழகை ரசிப்பதில் அலாதிப் பிரியம் அவனுக்கு! ம்... அன்று அவன்! இன்று நீ! என... அங்கே வந்தமர்ந்த அந்தப் புறாவோடு... உறவிழந்த வலியோடு என் நினைவுக்குள் கண்ணாமூச்சி காட்டிச் சென்ற சுயமிழந்த சேதியினை நேசத்தோடு பேசிச் செல்கிறேன்! -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
May 16 2008, 05:49 AM
Post
#2
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 12,034 Joined: 26-January 08 Member No.: 2,683 |
ஆஹா! அற்புதம் உங்களின் கவிதை! அண்ணன் நினைவை தூண்டிவிட்ட புறாவே வாழ்க! அன்றாட நடக்கும் செய்திகளை கூட மிக அழகாக கவிதையாக தொடுத்துள்ளீர்கள் சத்தியா! உங்கள் கவிதைக்கு எனது பாராட்டுக்கள்!
-------------------- |
|
|
|
May 16 2008, 12:20 PM
Post
#3
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 23,105 Joined: 3-December 05 From: Vancouver.( CANADA) Member No.: 396 |
-------------------- கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி "மதியின் மனவானில்" ![]() |
|
|
|
May 16 2008, 01:56 PM
Post
#4
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,560 Joined: 10-December 07 From: Ramanathapuram Member No.: 2,655 |
நல்லது சத்தியா,
சில்லென்று பூக்கட்டும் சிறுவயது நினைவுகள் சிறகடித்துப் பறக்கட்டும் திரள்கின்ற கனவுகள் . . . இன்னும் இனிய நினைவுகள் தொடரட்டும் ! வாழி !! -------------------- ![]() கவிதை1000 ........ தமிழ்க்கவிதை எரிதழல்]....... ..... . சன்மார்க்கம் கவிஅரங்கம்........ சிதம்பரம் அபிராமி................ சேதுபூமி |
|
|
|
May 17 2008, 06:31 PM
Post
#5
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Advancing Members Posts: 312 Joined: 15-December 07 Member No.: 2,659 |
சின்னச் சின்ன வார்த்தைகளில் செதுக்கிய அருமையான கற்பனை. மழையின் விசிறல் அற்புதம்.
-------------------- ![]() -உரப்புளி நா.ஜெயராமன் |
|
|
|
May 19 2008, 03:47 PM
Post
#6
|
|
|
புதியவர் ![]() Group: Members Posts: 1 Joined: 19-May 08 Member No.: 2,789 |
kavithai arputham,
Puravai ammanaga ninaitha ninaivukku valthukal, Aanal malayai kandu yean ithanai veruppu....... ![]() நெஞ்சோடு ஒரு நினைவு! பலமாய் அடித்து ஓய்ந்த மழைக்குப் பிறகு துளித் துளியாய் தூறல் போட்டுக் கொண்டிருந்தது வானம்! அடுத்த மழை அடிக்கத் தொடங்குமுன்பே விரைந்துவிடத் துடித்து விறுவிறுவென நடக்கிறேன் நான். அந்தச் சாலையோரத்து மரத்தின் கிளையினை யாரோ உலுப்பிய உலுப்பில் சிதறி விழுந்த தூறல்கள் என்னை நனைக்க... நானும் அண்ணாந்து பார்க்கின்றேன். அங்கே பலத்த மழையில் நனைந்து தோய்ந்து பறந்துவந்த புறாவொன்று சட்டென அந்த மரத்தில் அமர்கிறது! ஓ!... புறாவாரே! இப்படித்தான் முன்பெல்லாம் என் அண்ணன் கூட... மழை ஓய்ந்த பின் மரக்கிளையினை உலுப்பி எனைத் தெப்பமாய் நனைத்து... நான் மயிர்க் கூச்செறிந்து சிணுங்கி நிற்கும் அழகை ரசிப்பதில் அலாதிப் பிரியம் அவனுக்கு! ம்... அன்று அவன்! இன்று நீ! என... அங்கே வந்தமர்ந்த அந்தப் புறாவோடு... உறவிழந்த வலியோடு என் நினைவுக்குள் கண்ணாமூச்சி காட்டிச் சென்ற சுயமிழந்த சேதியினை நேசத்தோடு பேசிச் செல்கிறேன்! |
|
|
|
May 19 2008, 09:41 PM
Post
#7
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 34,511 Joined: 16-February 04 From: ஐரோப்பா Member No.: 53 |
kavithai arputham, Puravai ammanaga ninaitha ninaivukku valthukal, Aanal malayai kandu yean ithanai veruppu....... ம்... வாருங்கள் jjjthegreat, புதிய உறவான உங்களை அன்போடு வரவேற்றுக் கொள்கிறேன். உங்கள் வாழ்த்திற்கு முதற்கண் என் மனமார்ந்த நன்றிகள். உங்களைப் பற்றிய சிறியதோர் அறிமுகத்தை... அறிமுகப் பகுதிக்குச் சென்று... அறிமுகம் தருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். அடுத்து... மழையைக் கண்டு எனக்கு எந்த வெறுப்பும் இல்லை. மழையில் நனைய ரொம்பப் பிடிக்கும். அதுக்காக எல்லா நேரமும் மழையில் நனைந்து விட முடியுமா என்ன...? உதாரணமாக... ஒரு முக்கிய அலுவலாக வெளியே போகவேண்டி இருக்கின்றது என்று வையுங்களேன். அந்தவேளை நனைந்து, தோய்ந்தபடி அந்த அலுவலுக்குப் போக முடியுமா...? இல்லைத்தானே...? ம்... சாதாரணமான நேரம் என்றால் நனையலாம். எப்போதும் அது சரிப்பட்டு வராது... இல்லையா...? ம்... அப்படித்தான் முன்பு பல தடவை... காலையில் வெள்ளை யூனிபோமோடு பாடசாலைக்கு வெளிக்கிட்டு... சயிக்கிலை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வரும் போது... வாசலில் உள்ள மல்லிகைப் பந்தலை உலுப்பி... அண்ணன் என்னை நனைத்து விடுவான். அப்போ எப்படி இருக்கும் சொல்லுங்கோ...? -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
May 20 2008, 05:52 AM
Post
#8
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 12,034 Joined: 26-January 08 Member No.: 2,683 |
ம்... வாருங்கள் jjjthegreat, புதிய உறவான உங்களை அன்போடு வரவேற்றுக் கொள்கிறேன். உங்கள் வாழ்த்திற்கு முதற்கண் என் மனமார்ந்த நன்றிகள். உங்களைப் பற்றிய சிறியதோர் அறிமுகத்தை... அறிமுகப் பகுதிக்குச் சென்று... அறிமுகம் தருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். அடுத்து... மழையைக் கண்டு எனக்கு எந்த வெறுப்பும் இல்லை. மழையில் நனைய ரொம்பப் பிடிக்கும். அதுக்காக எல்லா நேரமும் மழையில் நனைந்து விட முடியுமா என்ன...? உதாரணமாக... ஒரு முக்கிய அலுவலாக வெளியே போகவேண்டி இருக்கின்றது என்று வையுங்களேன். அந்தவேளை நனைந்து, தோய்ந்தபடி அந்த அலுவலுக்குப் போக முடியுமா...? இல்லைத்தானே...? ம்... சாதாரணமான நேரம் என்றால் நனையலாம். எப்போதும் அது சரிப்பட்டு வராது... இல்லையா...? ம்... அப்படித்தான் முன்பு பல தடவை... காலையில் வெள்ளை யூனிபோமோடு பாடசாலைக்கு வெளிக்கிட்டு... சயிக்கிலை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வரும் போது... வாசலில் உள்ள மல்லிகைப் பந்தலை உலுப்பி... அண்ணன் என்னை நனைத்து விடுவான். அப்போ எப்படி இருக்கும் சொல்லுங்கோ...? அப்போ ரொம்ப ரொம்ப சந்தோஷமாய் இருக்கும்! -------------------- |
|
|
|
May 23 2008, 01:48 PM
Post
#9
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 2,933 Joined: 1-February 07 Member No.: 848 |
நல்ல கவிதை வாழ்த்துக்கள் சத்தியா...
-------------------- உன்னால் எல்லாம் முடியும். துளித்துளியாய்க் கொட்டித்தானே குடம் நிரம்புகிறது...
அன்புடன் சின்னா..... |
|
|
|
May 29 2008, 02:36 PM
Post
#10
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Senior Members Posts: 1,010 Joined: 6-May 06 Member No.: 507 |
வாழ்த்துக்கள் சத்தியா
எண்ணப் பறவைகள் கிளை அமர்ந்து உன்னை நனைத்தனவோ... ஏகாந்தமாய் இருந்த போது..-உன் எண்ணங்கள் வான் அலையின் மீது எழுந்தோடிப் போனதோ பிறந்த நிலம் தேடி எழுதிவிட்டாய் கவிதை நயம் கூட்டி ஏக்கம் கொண்ட கவிதைதனைக் கண்டு என் நெஞ்சோரம் வரும் நினைவும்.. கோடி This post has been edited by புதுயுகப் பிரியன்: May 29 2008, 02:43 PM -------------------- என்றென்றும் நன்றியுடன்
புதுயுகப் பிரியன் |
|
|
|
Jun 17 2008, 10:52 PM
Post
#11
|
|
![]() Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Moderators Posts: 34,511 Joined: 16-February 04 From: ஐரோப்பா Member No.: 53 |
கவியோடு இணைந்து... கருத்துச்சொன்ன சொந்தங்களிற்கு... என் மனமார்ந்த நன்றிகள். -------------------- *** இவள் - சத்தியா ***
![]() -சத்தமின்றி யுத்தம் செய்யும்- ---என் மனதின் ஓசைகள்---! --------- '' நிசப்தம் '' --------- |
|
|
|
Jun 22 2008, 01:15 AM
Post
#12
|
|
|
Senior ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Group: Disabled Members Posts: 1,035 Joined: 16-November 06 From: டென்மார்க் Member No.: 736 |
நான் மயிர்க் கூச்செறிந்து
சிணுங்கி நிற்கும் அழகை ரசிப்பதில் அங்கே வந்தமர்ந்த அந்தப் புறாவோடு... உறவிழந்த வலியோடு என் நினைவுக்குள் கண்ணாமூச்சி காட்டிச் சென்ற சுயமிழந்த சேதியினை நேசத்தோடு பேசிச் செல்கிறேன் எனக்கு இவை எப்பவோ பிடித்திருந்தன காலந்தாழ்த்திய பின்னூட்டமிது. நான் எப்பவுமே லேற் தானே. ஹி ஹி ஹி -------------------- காலம் எனக்கொரு பாட்டெழுதும்.
|
|
|
|
![]() ![]() |
|
Lo-Fi Version | Time is now: 1st August 2010 - 07:27 AM |