வணக்கம் கென்
இலக்கியச் சர்ச்சை என்பது இன்று நேற்றா
நக்கீரன் காலத்துக்கு முன்பிருந்தே தொடர்வதுதானே . . .
உங்களோடு என்றைக்குமே எனக்குச் சண்டை
இருந்ததில்லை கென்,
கவிதை மக்கள் பார்வைக்கு வரும் போது
சர்ச்சைக்கு ஆளாவது இயல்பு
அதில் சினம் என்ன வேண்டிக் கிடக்கிறது ?
முன்பு ஒருமுறை இதே நிலா முற்றத்தில்
வேறு யாரோ ஒருவர் விமர்சிக்க,
' அப்படி என்றால் எழுதுவதைத்தான்
நிறுத்த வேண்டும் . . .'
என எழுதி இருந்தீர்கள் .
வேண்டாமே இது போன்ற கோபம்.
அப்புறம்
QUOTE
உங்கள் அளவிற்கு எனக்கு இலக்கியமோ , சிந்தனையோ இல்லையென்றே நினைக்கிறேன் மகுடதீபன்.
வருங்கால சந்ததிகளுக்கான உங்கள் இலக்கியங்கள் வான் புகழ் பெறட்டும்
நீங்கள் நெஞ்சப் புகழ்ச்சியாக எழுதி இருப்பினும் இல்லை
வஞ்சப் புகழ்ச்சியாக எழுதி இருப்பினும்
வாக்கு வன்மை கொண்ட கவிஞனின்
வாக்கு அல்லவா இது,
பலிக்கக் கடவதாகுக !
அது என்ன,
திருக்குறளைக் காமத்துப் பாலைக்கொளுத்த முடியுமா
என்கிறீர்கள் ?
வள்ளுவன் காலத்திலேயே சங்கப் பலகை தவிர
வேறு யாரும் அதை ஏற்கவில்லை,
இருந்த போதும் அது இரண்டாயிரம் வருடம்
தாண்டி நிற்கும் அதிசயம்
காரணம் எழுதியவனின் வாக்கு வன்மை !
இறைவனை நேரில் தரிசித்த தெய்வப் புலவனின்
மூன்றாம் பாலை
கேவலம் ஹோட்டலில் குடித்துவிட்டு
ரூம் போட்டு எழுதும் புதுக் கவிதை
எச்சங்களுடன் எப்படி ஒப்பிட முடியும் ?
இன்னும் மணிவாசகரின் திருக் கோவையார்,
ஆண்டாள் பாசுரம், ஜெயதேவரின் அஷ்டபதி
எனச் சொல்லிக் கொண்டே போகலாம்,
ஆயினும்
இவைகளில் உள்ளவை சிருங்கார ரஸமே தவிர
அருவருப்பில்லையே,
யானையின் மத்தகம் கண்ட வீரனுக்குத்
தலைவியின்
நகில்மேல் படாம்
ஞாபகம் வந்ததாக வள்ளுவர் சொல்வதைத் தானே
நீங்கள் எல்லாம் அதிகபட்சமாகச் சொல்லிக் காட்டமுடியும்,
இதில் அசிங்கம் ஒன்றுமே இல்லையே,
ஏன் கவிஞர் கண்ணதாசனின்
தூக்கணாங் குருவிக் கூட்
தூங்கக் கண்டான் மரத்திலே . . .
என்ற பாடலில் கூட அருவருப்பு வரவில்லையே !
காமம் இயல்புதானே அன்றி
அது தவறென்று எப்போது சொன்னேன் ?
சில புதுக் கவிதைகளைச் சுதந்திரம் என்ற பேரில்
பெண்ணியம் என்ற பேரில்
வரம்பு மீறும் வார்த்தைப் பிரயோகத்தால்
துச்சாதனத்தனம் செய்து
துகிலுரித்தலின் மேலாகவும் அசிங்கம் செய்வதைத்தானே
வேண்டாம் என்றேன்
இது இருவர் மட்டுமே வலம் வரும் ஏடன் அல்ல,
எல்லோரும் புழங்கும் நிலா முற்றம்
இந்த நிலா முற்றத்தில் கென்,
நானும் உங்களைப் போல் ஒரு உறுப்பினன்,
சொல்லப் போனால் வெகு சாதாரணன்
எனக்கு முன்பே
உங்களை இங்கு இணைத்துக் கொண்டவர் நீங்கள்
இதில் அனைவரும் சமமே தவிர
எனக்கென்று பூர்ஷ்வாத் தனம் எங்கிருந்து வந்தது ?
இதன் தரத்தைக் கட்டிக் காக்க
எம்போல் உமக்கும் பங்கிருக்கிறது
நம்புகிறேன் கென் உங்கள் வீட்டுப் பெண்களிடம்
கவிதை காட்டினீர்கள் என்பதை . . .
அதற்காக நிலாமுற்றப் பெண்களும் சரி
அதில் வழக்கமாகப் படிக்க வரும் பெண்களும் சரி
எல்லோரும் ஒரே அளவு மனப் பக்குவம்
கொண்டவர்கள் அல்லவே
வழக்கமாக உங்கள் கவிதையை வாசித்துச் சிலாகிக்கும்
யாரேனும் குறைந்த பட்சம் விமர்சிக்கவாவது
முடிந்ததா இங்கே என்றால்
இல்லை
காரணம் கூச்சம்
ஆகவேதான் இதை கொஞ்சம் இன்னும்
நாசூக்காகச் சொல்லலாமே எனக் குரல் கொடுத்தேன் அன்றி
நீங்கள் சொல்வது போல்
கொத்து புரோட்டா போட அல்ல,
என் குரல் எல்லாம்
அந்த பாச்சா விழுந்த புரோட்டா மாவு உருண்டை மட்டும்
வேண்டாம் எனச் சொல்லுமே தவிர
உங்கள் மற்ற சுவையான பதார்த்தங்களை அல்ல !
அப்புறம் நீங்கள் சொன்ன கோபுரச் சிலை விஷயம்
இடிக்கவா நான் சொன்னேன் ?
நானே என் கவிதைகளில் அப் படங்களை
இணைத்ததும் உண்டு
அதுவும் இதே நிலா முற்றத்தில். . .
போதும் கென்,
விமர்சனங்களை ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொண்டு
எழுதுங்கள்
முடியாது என்றால் தங்கள் சித்தம் !
This post has been edited by மகுடதீபன்: 03 July 2008 - 05:05 PM